மொய்வலை (ப்லெக்)

14 views
Skip to first unread message

naa.g...@gmail.com

unread,
Nov 23, 2008, 11:27:27 AM11/23/08
to மின்தமிழ்

அன்பின் நாக. இளங்கோ,

bleg = begging blog என்பதன் தமிழாக,

ஈவலை:
"பிச்சை எடுக்கும் வலைப்பதிவுகள் என்பதனை விட ஈயப்படும்
பதிவுகள் என்று சொல்வது மேல். சிலர் பிச்சை எடுக்கும் வலை
என்பதை விட பலர் சென்று ஈயும் பதிவுகள் என்பது மேல்."
என்று சொல்லியிருப்பதைத் தமிழுலகில் பார்த்தேன்.

begging blog = இரவலை என்றும் வினைத்தொகை ஆக்கலாந்தானே.
ஈதல் = கொடுத்தல், இரத்தல் = கேட்டல் என்பதன் வினையடியாக
இரவலை.

bleg = மொய்வலை, கலியாணத்தில் நாம் போய் மொய் எழுதுகிறோமே.
அதுபோல், கடனட்டை என்ணைக் கொடுத்து மொய் எழுதும் இடம்
ப்லெக் வலைத்தளம்.

மேலும், தமிழ், கணிமை, குமுக நலன், ... என்றெல்லாம்
பணம் ப்லெக்குகள் மூலம் நாம் வலைப்பிச்சை கேட்கும்போது
பணம் நிறைய வரும். நிறைய மொய் எழுதுவார்கள் அல்லவா :-)

என் பரிந்துரை:
bleg (begging blog) = மொய்வலை

நா. கணேசன்

Elangovan N

unread,
Nov 23, 2008, 3:39:24 PM11/23/08
to minT...@googlegroups.com
அன்பின் முனைவர் கணேசன்,
 
இரவலை என்று எனக்கும் தோன்றியது. உச்சரிப்பிற்கு உறுத்துமோ என்று ஐயுற்றேன்.
இரவு+அலை என்று குழப்பிவிடவும் வாய்ப்பிருக்கிறது. அதனாலேயே ஈவலை என்று எழுதினேன்.
 
ஆனால் நீங்கள் சொல்லும் "மொய்வலை" எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
 
"மொய்" என்பது பற்றி முன்னொரு காலத்தில் உலகத்தில் பேசியிருக்கிறோம்.
 
திருமணம், இல்ல விழாக்களில் வைக்கும் உறவு முறை மொய்க்கும் இந்த மொய்க்கும்
வேறுபாடு இருக்கிறது.  
 
இந்த மொய் சின்ன கவுண்டர் படத்தில் வரும் மொய்விருந்தை நினனவுக்குக் கொண்டு வருகிறது.
இரக்கும்போதும் ஏதாவது சிறு பணியைச் செய்து விட்டு இரப்பது உலகில் பரவலாக இருக்கிறது.
 
அந்த வகையில் "மொய்வலை" பொருத்தமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
 
அன்புடன்
நாக.இளங்கோவன்

naa.g...@gmail.com

unread,
Nov 23, 2008, 3:54:00 PM11/23/08
to மின்தமிழ்

On Nov 23, 2:39 pm, "Elangovan N" <nelan...@gmail.com> wrote:
> அன்பின் முனைவர் கணேசன்,
>
> இரவலை என்று எனக்கும் தோன்றியது. உச்சரிப்பிற்கு உறுத்துமோ என்று ஐயுற்றேன்.
> இரவு+அலை என்று குழப்பிவிடவும் வாய்ப்பிருக்கிறது. அதனாலேயே ஈவலை என்று
> எழுதினேன்.
>
> ஆனால் நீங்கள் சொல்லும் "மொய்வலை" எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
>
> "மொய்" என்பது பற்றி முன்னொரு காலத்தில் உலகத்தில் பேசியிருக்கிறோம்.
>
> திருமணம், இல்ல விழாக்களில் வைக்கும் உறவு முறை மொய்க்கும் இந்த மொய்க்கும்
> வேறுபாடு இருக்கிறது.
>
> இந்த மொய் சின்ன கவுண்டர் படத்தில் வரும் மொய்விருந்தை நினனவுக்குக் கொண்டு
> வருகிறது.
> இரக்கும்போதும் ஏதாவது சிறு பணியைச் செய்து விட்டு இரப்பது உலகில் பரவலாக
> இருக்கிறது.
>

எனக்கு சினிமா, கதை ஒன்றும் தெரியாது.
அப்படக் காட்சியை வர்ணிக்கமுடியுமா? எனக்கு ஏதாவது தெரிந்தால் சொல்வேன்.

அன்புடன்,
நா. கணேசன்

> அந்த வகையில் "மொய்வலை" பொருத்தமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
>
> அன்புடன்
> நாக.இளங்கோவன்
>

> 2008/11/23 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
> > அன்பின் நாக. இளங்கோ,
>
> > bleg = begging blog என்பதன் தமிழாக,
>
> > ஈவலை:
> > "பிச்சை எடுக்கும் வலைப்பதிவுகள் என்பதனை விட ஈயப்படும்
> > பதிவுகள் என்று சொல்வது மேல். சிலர் பிச்சை எடுக்கும் வலை
> > என்பதை விட பலர் சென்று ஈயும் பதிவுகள் என்பது மேல்."
> > என்று சொல்லியிருப்பதைத் தமிழுலகில் பார்த்தேன்.
>
> > begging blog = இரவலை என்றும் வினைத்தொகை ஆக்கலாந்தானே.
> > ஈதல் = கொடுத்தல், இரத்தல் = கேட்டல் என்பதன் வினையடியாக
> > இரவலை.
>
> > bleg = மொய்வலை, கலியாணத்தில் நாம் போய் மொய் எழுதுகிறோமே.
> > அதுபோல், கடனட்டை என்ணைக் கொடுத்து மொய் எழுதும் இடம்
> > ப்லெக் வலைத்தளம்.
>
> > மேலும், தமிழ், கணிமை, குமுக நலன், ... என்றெல்லாம்
> > பணம் ப்லெக்குகள் மூலம் நாம் வலைப்பிச்சை கேட்கும்போது
> > பணம் நிறைய வரும். நிறைய மொய் எழுதுவார்கள் அல்லவா :-)
>
> > என் பரிந்துரை:
> > bleg (begging blog) = மொய்வலை
>

> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

Elangovan N

unread,
Nov 24, 2008, 11:51:31 PM11/24/08
to minT...@googlegroups.com
2008/11/23 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>:

>
> எனக்கு சினிமா, கதை ஒன்றும் தெரியாது.
> அப்படக் காட்சியை வர்ணிக்கமுடியுமா? எனக்கு ஏதாவது தெரிந்தால் ல்வேன்.
>

நினைவில் இருப்பதை எழுதுகிறேன்;

மணம் இன்னும் ஆகாத நாயகி - ஏழைக் குடும்பம்.
குடுமபத்தின் தலைவியும் கூட; குடும்பத்தின் பொருட்சுமை இவர்மேல்.
இந்நிலையில் ஏழை தலையில் இடியென தாங்கொணா வறுமை
.சேர்கிறது. சோற்றுக்கே அல்லல் என்ற நிலை, கடன்,,,போன்றவை.

இந்நிலையில் ஒரு முக்கிய பொருள் தேவை கருதி,
கையறு நிலையில், *அவ்வூர் வழக்கப்படி" அவள் வீட்டில்
ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்வாள். விருந்துக்கு வருபவர்கள்,
பந்தியில் சாப்பிட்டுவிட்டு அவர்கள் பிச்சை போட அல்லது உதவ முடிந்த
பணத்தை இலைக்கு அடியில் வைத்துச் செல்வார்கள்.

குரவப் பிச்சை என்று சொல்லலாம். தகுதியிருந்து பின்னர் தாழ்ந்தமை
இச்சூழலில் உணரப்படும். இவ்விருந்தில் மகிழ்ச்சியும் இருக்காது - பெரிய
துயரும் இருக்காது.

இப்படிச் சேர்த்த பணத்தில் நாயகி இக்கட்டில் இருந்து கரையேறுவார்.

இவ்விருந்து மொய்விருந்து என்று சொல்லப்படும்.

அன்புடன்
நாக.இலங்கோவன்
.

Geetha Sambasivam

unread,
Nov 25, 2008, 3:04:53 AM11/25/08
to minT...@googlegroups.com
சின்னக் கவுண்டர்????? நாயகியாக சுகன்யா, நாயகன் விஜய்காந்த்.

2008/11/25 Elangovan N <nela...@gmail.com>

Elangovan N

unread,
Nov 25, 2008, 2:49:10 PM11/25/08
to minT...@googlegroups.com
ஆம். அதே படம்தான்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

2008/11/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

naa.g...@gmail.com

unread,
Nov 27, 2008, 11:00:39 AM11/27/08
to மின்தமிழ்

"சின்னக் கவுண்டர்" படம், மொய்விருந்து பற்றிய தகவல்களுக்கு நன்றி.
எஸ். ராமகிருஷ்ணனின் 'மொய்விருந்து' கட்டுரையும் வலையில் கிடைக்கிறது,
பாருங்கள்.

சின்னக்கவுண்டர் படத்தின் "மொய்விருந்து" பற்றிய பகுதியை எடுத்து,
ஒளித்துண்டம் ஆக்கி யாராவது வலைஞர்கள் யுட்யூப் தளத்தில் போட்டால் மிக
நல்லது.
எல்லோருக்கும் பயனாகும். குழுக்களிலும், பதிவிலும் கேட்டுவைப்போம்.

ப்லெக் - மொய்வலை சரியான பொருத்தந்தான்.

---------------

உபரிச் செய்திகள்:
(1) பொள்ளாச்சி அருகே சமத்தூர் என்ற ஊர். அங்கே பழங்குடும்பம்
வாணவராயர்கள் வசிக்கிறார்கள். எஜமான் என்னும் ரஜினி படத்தில்
வருவது சமத்தூர் அரண்மனை. வாணன்கள் பெருமையை
தனிப்பாடலில் கம்பர் பாடல்களில் காணலாம். பிற்காலப் பாண்டிய
ஆட்சியை முடித்து மதுரையில் வாழ்ந்தனர். ஆண்டாள்
திருவரங்கனுக்கு எழுதியதாக 1454-ல் ஒரு காதல்கடிதம்
கல்வெட்டாக சீவில்லிபுத்தூரில் இருக்கிறது. (பார்த்ததுண்டா?)
கோவைகிழார் கோ. ம. ரா. கண்டுபிடித்தது. மிக அழகான கல்வெட்டு.
பின்னர் சேலம் ஆத்தூர் (மகதைவாணர்கள்), ஆட்சி மாறி
பின்னர் ஒதுக்குப்புறமாக சமத்தூர் அடைந்தனர்.

வாணவராயர்களின் கொடைமடம் பற்றி கொங்குமண்டலச் சதகம் பேசும்.
கொ.ம.ச. கார்மேகக்கவிஞர் என்னும் சமணக் கவிஞர் செய்தது,
அவர் கொங்குவேளிர் வாழ்ந்த விசயமங்கலத்தில் பூசாரியாகப் 17-18-ஆம்
நூற்றாண்டில் இருந்தவர்,

வாணவராயர்கள் தனியாக ஒரு மண்டபம் கட்டி ஒரு சாளர அறையும்
வைத்திருந்ததாக வரலாறு. வைகறையிலோ, மாலை, இரவிலோ
வறுமை கண்ட புலவர்கள் தத்தம் விண்ணப்பத்தை அந்தச் சாளரத்தில்
வைத்துவிடுவார்கள். அடுத்தநாள் பகலில் வாணர்கள் கொடுக்கும்
கொடையை எடுத்த்துக்கலாம்.

இதனால் நன்மை: கேட்கக் கூச்சப்படும் வறிஞர் நேரில் முகம்பார்க்காமல்
கேட்கலாம்.

இதையெல்லாம் விரிவாக, கிவாஜ 'நல்ல சேனாபதி' என்னும் நூலில்
கதையாகச் சொல்லியுள்ளார்கள்.

கவுண்டமணி அந்த ஊர்க்காரர்தான்.

(2) மம்மூட்டியின் மலையாளப் படம் துருவம் படம்பார்த்தாலும் தெரியும்.
சத்திரிய நாயர்கள் பற்றிய படம், அவர்களின் மூதாதையர் பழையகோட்டை,
காங்கயத்தில்
இருந்து போனவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். அதில் ஒருவர்தான்
எம்ஜியார்.

துருவம் படத்துக்குத் தொடர்புடைய கொங்கன்படைத் திருவிழா
த்மிழ்மரபு அறக்கட்டளையில் உள்ளது.
http://bharani.dli.ernet.in/thf/text/ebook/nganesan/kp_covr.html
-> கிளிக்கி அடுத்தடுத்த பக்கம் போகலாம்.

பிற பின்.

அன்புடன்,
நா. கணேசன்

On Nov 24, 10:51 pm, "Elangovan N" <nelan...@gmail.com> wrote:
> 2008/11/23 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>:

devoo

unread,
Nov 27, 2008, 12:09:54 PM11/27/08
to மின்தமிழ்
// Nov 27, 9:00 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

// வாணவராயர்களின் கொடைமடம் பற்றி கொங்குமண்டலச் சதகம் பேசும்.


கொ.ம.ச. கார்மேகக்கவிஞர் என்னும் சமணக் கவிஞர் செய்தது,
அவர் கொங்குவேளிர் வாழ்ந்த விசயமங்கலத்தில் பூசாரியாகப் 17-18-ஆம்

நூற்றாண்டில் இருந்தவர் //

மிக அரிய தகவல்.
திரு. கிருஷ்ணராஜ் வாணவராயரும் இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்
என்று நினைக்கிறேன்.விஜயமங்கலத்தில் பௌத்தமதக் கோயில்கள்
உள்ளனவா ?

தேவ்

Reply all
Reply to author
Forward
0 new messages