உன்னிப்பாக கவனித்துப்பார்த்தேன். அசை போட்ட மனதுடன் பார்த்தேன். உணர்வுகளை மதிக்கும் குறும்படம். தாத்தாவின் நடந்த கதை என்பதால் 17/18/19 நிமிட நிகழ்வுகளை கவனித்துப்பார்த்தேன். கடந்த 50/60 வருடங்களில் நடக்க இயலாதவை, அவை. சில உண்மை குறிப்புக்கள், அன்புடன், ஆதரவுடன்:
1. பார்ப்பனர்களில் ஏழ்மை காரணமாக 18 வயது வரை காலணி அணியாதவர்களை அறிவேன்.
2. மேல்குடியினர் பெண்கள் காலணி அணிவது 60 வருடங்களுக்கும் முன் கிடையாது.
3. 1940 களில் இனபேதமில்லாத இந்த மிலிடரி பூட்ஸ் தமிழ்நாட்டின் முன்னேற்றமில்லாத பகுதிகளில் நான் கண்டிருக்கிறேன்.
என் கருத்து: பழைய அசட்டு/அநாகரீகங்களை மறந்து கீழ்மட்டத்தில் இருப்போர் முன்னுக்கு வர உதவுவோம்.