உலகம் போற்றும் வானியல் விஞ்ஞானி மேக்நாட்சாகா இந்தியாவில் வாழ்ந்து மறைந்தார். என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
‘அயனியாக்கக் கோட்பாடு சமன்பாடு’ எனற அவரது கண்டுபிடிப்புதான் பேரண்டம் தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது.
1893இல் வங்கதேசத்தில் உள்ள டாக்கா எனும் கிராமத்தில் பிறந்து 60 ஆண்டு காலம் வாழ்ந்தவர். ‘சாகா’ எனும் தீண்டப்படாத சமூகத்தில் பிறந்த குற்றத்துக்காக இருட்டடிக்கப்பட்டவர்.
பிரதமர் நேரு - இவரின் அறிவியல் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். வங்காள மொழியில் இந்துக் கடவுளைக் குறிக்கும் மேக்நாத் என்ற பெயரைத்தான் அவரது தாயார் சூட்டினார்.
அதை விரும்பாமல் இராமர்-இலட்சுமணர்களை எதிர்த்து தீரமுடன் போரிட்ட இந்திரஜித் (மேகநாதன்) என்பதன் குறியீடாக தனது பெயரை மேக்நாட் என்று மாற்றிக் கொண்டார்.
மேக்நாட் சாகா-பார்ப்பன-இந்துமத எதிர்ப்பாளர்; பகுத்தறிவாளர்; 1951ம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் - புரட்சிகர சோசலிச கட்சியின் சார்பில் சுயேச்சை வேட்பாளராக கல்கத்தாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்து காலண்டரான பஞ்சாங்கம் - நாட் கணிப்புகள் அறிவியலுக்கு எதிரானது என்பதால் நேருவின் ஆலோசனைப்படி-மேக்நாட்சாகா தலைமையில் நாட்காட்டி சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது.
பஞ்சாங்கக் கணக்கீடுகள் அறிவியலுக்கு எதிரானவை என்பதை குழு விரிவாக விளக்கியது அறிவியல் அடிப்படையில் புதிய நாட் காட்டியையும் உருவாக்கி அறிக்கையை -1955ம் ஆண்டு நேரு அரசிடம் குழு சமர்ப்பித்தது.
தேவிகாபுரம் சிவா எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மேக்நாட் சாகா: ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, சாகாவின் விரிவான வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறது. அந்நூலில் சாகா குழு நாட்காட்டி குறித்துத் தந்த பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அதிலிருந்து சில பகுதிகள்:
நாள்காட்டி சீர்திருத்தம்
‘நவீன நாகரிக வாழ்வின் இன்றியமையாத ஒரு தேவை நாள்காட்டி’என்பது சாகாவின் முடிவு. சாகா நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றிய காலத்தின் குறிப்பிடத்தக்க சாதனை அவர் செய்த நாள்காட்டி சீர்திருத்தம் ஆகும். பண்டைய இந்திய வரலாற்றில் சாகாவுக்கு இருந்த பேரார்வம், வானியல் மீதான அவரது காதல் ஆகியவற்றின் ஒத்திசைவான இசைவை இந்திய நாள்காட்டி சீர்திருத்தத்தில் காணமுடியும்.
‘நாள்காட்டிகள், அவற்றின் வரலாறு. பயன்பாடு மற்றும் சமூகத்துடனான அவற்றின் பிணைப்புகள் ஆகியவற்றைக் குறித்த ஆய்வுகள், ஒரு நாட்டின் முக்கியப் பண்புக்கூறுகளையும் கலாச்சாரத்தையும் பற்றிய பயனுள்ள புரிதல்களை வழங்கக் கூடியவை. எனவே சாகாவின் அறிவுஜீவி ஆளுமைக்கு வேலை கொடுத்த பணிகளில் நாள் காட்டி சீர்திருத்தம் முக்கியமான ஒன்று. சாகா 1939 முதலே இந்திய அளவிலும் உலக அளவிலும் நாள்காட்டி முறை குறித்த ஆய்வு செய்து சயின்ஸ் அண்ட் கல்ச்சர் இதழில் கட்டுரைகள் எழுதிவந்தார். ‘சக சகாப்தத்தின் தோற்றம்’ (The origin of the Saka Era) என்ற தலைப்பில் கல்கத்தா ஆசிய சங்கத்தில் சாகா ஆற்றிய உரை அற்புதமான ஒன்று. அந்தவகையில்1952ஆம் ஆண்டு சி.எஸ்.ஐ.ஆர் அமைத்த நாள்காட்டி சீர்திருத்தக் குழுவிற்கு சாகா தலைவராக நியமிக்கப்பட்டது தற்செயல் நிகழ்வு அல்ல.
இக்குழுவில் ஏ.சி.பானர்ஜி, கே.கே. தப்தாரி, ஜே.எஸ். கரந்திகார், கோரக் பிரசாத், ஆர்.வி.வைத்யா, என்.சி.லஹிரி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை நாள்காட்டியை விட பஞ்சாங்கம் மக்களின் சமயம் சார்ந்த வாழ்வில் முக்கியத்துவம்வகிப்பதைநாம்அறிவோம்.சமயம் சார்பான பண்டிகைகள், நிகழ்வுகள், பிறப்பு, இறப்பு, திருமணம், பத்திரப்பதிவுகள் போன்ற பலவற்றில்பஞ்சாங்கம் மட்டும் இன்றும் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. நாள்காட்டிகள் எல்லாக் காலத்திலும் இந்தியாவில் பஞ் சாங்கக் குறிப்புகளோடுதான் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
நாள்காட்டி என்பது அறிவியல் பூர்வமாகவே இருக்க வேண்டும். சாகா காலத்தில் பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட பகுதிகளில் நடைமுறையில் இருந்த நாள்காட்டிகளும் பல்வேறாகவே இருந்தன. இந்நாள்காட்டிகள் எதிலுமே அறிவியல்பூர்வ அணுகுமுறை இருக்க வில்லை. குறிப்பாக கி.பி.500இல் இருந்தே ஓர் ஆண்டுக்கான நாள்கணக்கு பெரும்பிழையோடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்திய வானியல் மற்றும் ஜோதிடக் கணக்கீடுகளில் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்த பண்டைய நூல்ஆரிய சித்தாந்தம் என்பதாகும். இதன்படி ஓர் ஆண்டு என்பது 365.25756 நாள்கள் கொண்டதாகும். இது உண்மையான ஆண்டுக்கணக்கை விட 0.01656 நாள்கள் நீண்டதாகும். இந்தியாவில்பஞ்சாங்கம் தயார் செய்வோர் கி.பி. 500 முதல் கொண்டே இந்தப் பிழையோடே தயார் செய்து வந்தனர்.
திதிக்கான நாள் நாடு முழுவதும் ஒன்றாக இருக்காது.
தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட திதி கடைப்பிடிக்கப்பட்டால், உத்திரப்பிரதேசத்தில் அதே நாளில் அதே திதி இருக்காது.
இந்த வகையில் கி.பி.500இல் இருந்து ஆண்டுக்கு 0.01656 நாள்கள் அதிகரித்துக் கொண்டே வந்து 1952இல் 23.2 நாள்கள் அதிகரித்துவிட்டது. அதாவது 23.2 நாள்கள் முன்கூட்டி இருந்தது. சூரிய நகர்வின் அடிப்படையிலான சூரிய ஆண்டின் தொடக்க நாள் அதாவது, வேனில் காலத்தில் (கோடையில்) சூரியனின் கதிர்கள் நிலநடுக்கோட்டின் மீது மிகச்சரியாக விழும் நாள் உத்தராயனம் எனப்படும் இது உண்மையில் மார்ச் 22இல் அமைய வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக ஏப்ரல் 13 அல்லது 14தேதிகளில் அமைந்திருந்தது.
மேற்கண்ட சூழ்நிலை ஐரோப்பாவிலும் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவில் ஜூலியஸ் சீசர் காலத்தில் இருந்து ஓர் ஆண்டு என்பது 365.25 நாள்கள் எனக் கணக்கிடப்பட்டு வந்தது. இது ஒரு பிழையான கணக்கு. இதனால் கி.பி. 1582 இல் ஆண்டு கணக்கில் 10 நாள்கள் குறைவு காட்டியது. இதை அறிந்த போப் 13 ஆம் கிரிகோரி அக்டோபர் 5ஆம் தேதியை அக்டோபர் 15ஆகக் கடைப்பிடிக்கும்படி அறிவித்ததோடு லீப் ஆண்டையும் அறிமுகப் படுத்தினார்.
ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் பெரும்பான்மை நாடுகளில் செல்வாக்கு செலுத்திவந்ததால்கத்தோலிக்கபோப்கூறியதை அனைவரும் மதித்துக் கடைபிடித்தனர். வட்டார வேறுபாடுகளும் கலாச்சார வேறுபாடுகளும் அதிகம் உள்ள இந்தியாவில் பஞ்சாங்கம் பலவிதமாக இருந்தன. பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் அவை எதுவும் கட்டுப்படவுமில்லை.
இந்தியாவில் சமயவிழாக்கள் நிலவின் நகர்வை அடிப்படையாகக் கொண்ட நாள்காட்டி மூலமே இன்னும் கணக்கிடப்படுகின்றன. திதி, நட்சத்திரம் போன்றவை சந்திர நாள்காட்டியின் அடிப்படையிலானதே. இந்தத் திதிக்கான நாள் நாடு முழுவதும் ஒன்றாக இருக்காது. தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட திதி கடைப்பிடிக்கப்பட்டால், உத்திரப்பிரதேசத்தில் அதே நாளில் அதே திதி இருக்காது. தகவல் தொடர்பு சாதனங்களில் வளர்ச்சியில் உலகம் சுருங்கிவிட்ட நிலையில் இத்தகு வேறுபாடுகள் அறிவியல்பூர்வமாகச் சரி செய்யப்பட வேண்டியவை என்று சாகா குழு பல்வேறு பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட வெவ்வேறு வகையான 30 நாள்காட்டிகளைச் சேகரித்து பரிசீலனைக்கு உட்படுத்தியது.
இந்தியா முழுமைக்கும் கடைப்பிடிக்கத்தக்க ஒரு பிழையற்ற நாள்காட்டியை உருவாக்குவது இந்தக் குழுவுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலை. இதில் உள்ளூர் மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளை நடைமுறையில் உதாசீனப்படுத்திவிட முடியாத சூழலையும் நாள்காட்டி சீரமைப்புக்குழு எதிர்கொண்டது. இறுதியில் இறுதி அறிக்கை அறிவியல்பூர்வமாக சாகாவால் தொகுக்கப்பட்டது.
‘நமது குடிமை வாழ்வு சார்ந்த நோக்கங்கள், சமூக நோக்கங்கள், இன்னபிற நோக்கங் களுக்கான நாள்காட்டி முறையில் ஓர் ஓர்மை இருக்கவேண்டும்’ என்பதை வலியுறுத்தி இருந்தார். அவர் அந்தப் பிரச்சினையை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். நமது அறிவியலாளர்கள் தங்கள் அறிவார்ந்த தலைமையை இப்பணிக்கு நல்குவார்கள் என்று நேரு நம்பிக்கையும் தெரிவித்திருந்தார். இறுதியாக 1955ஆம் ஆண்டு நாள்காட்டி சீரமைப்புக் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் குடிமையியல் நோக்கத்திற்கான நாள்காடடிக்குக் கீழ்கண்ட சீர்திருத்தங்கள் பரிந்துரை செய்யப் பட்டிருந்தன.
1. ஒருங்கிணைந்த தேசிய நாள்காட்டிக்கு சக சகாப்தம் பயன்படுத்தப்பட வேண்டும். (சக சகாப்தத்தின் தொடக்கம் கி.பி.78-79 ஆகும். இந்த வகையில் 2014 ஆம் ஆண்டில் இருந்து இதைக் கழிக்க 2015 ஆம் ஆண்டுக்கான சக ஆண்டு 1936-37 ஆகும்.)
2. நிலநடுக்கோட்டின் மீது வேனில்காலத்தில் (கோடையில்) சூரியக் கதிர்கள் விழும் உத்தரயான நாளில் (சித்திரை விசு) இருந்து ஆண்டு தொடங்க வேண்டும்.
3. சாதாரண ஆண்டு 365 நாள்கள் கொண்டிருக்கும். லீப் ஆண்டு 366 நாள்களைக் கொண்டிருக்கும். சக ஆண்டோடு 78யைக் கூட்டி வரும் எண் 4ல் வகுபட்டால் அது லீப் ஆண்டு. கூட்டுத்தொகை 100இன் மடங்காக அமையும் பட்சத்தில் 400 இல் வகுபட்டால் அது லீப் ஆண்டு. வகுபடாவிட்டால் அது சாதாரண ஆண்டு.
4. ஆண்டின் முதல் மாதம் சைத்ரா ஆகும். சைத்ரா, வைசாகா, ஜ்யேஷ்டா, ஆஷாதா, சிராவணா பத்ரபாதா ஆகிய 6 மாதங்கள் 31 நாள்கள் கொண்டவை. மற்ற அஸ்வினா, கார்த்திகா, அக்ரஹாயானா, பௌஷா, மாகா, பல்குனா ஆகிய 6 மாதங்களும் 30 நாள்கள் கொண்டவை.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் வெப்பக் கதிரும் வெப்பம் குறைந்த கதிரும் புவியின் ஈர்ப்பு விசையில் பாதிக்கப்பட்டு முன்கூட்டியே சூரியக் கதிர் நிலநடுக்கோட்டின் மீது விழுவதைப் பூர்வாயனம் அல்லதுஅயணமைய முந்துநிகழ்வு என்பர்.
இந்த முந்து நிகழ்வை 1400 ஆண்டுகளாகப் பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் கணக்கில் கொள்ளாததால் இந்து பண்டிகை நாள்கள் உரிய பருவங்களை விட்டு ஏற்கனவே 23 நாள்கள் தள்ளி அமைந்துள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. ஆனால் பலநூறு ஆண்டு களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தத் தவறை ஒரே அடியாக மாற்றுவது குறித்து இந்த அறிக்கை தயக்கம் காட்டியது. எனவே இந்த 23 நாள் வேறுபாட நிலையான வேறுபாடாக வைத்துக் கொண்டு கணக்கீடுகளைச் செய்து கொள்ளவும்.
மேலும் எதிர்காலத்தில் வேறு பாடுகள் உருவாகாமல் சீர்திருத்தப்பட்ட நாள் காட்டி முறையைக் கைக்கொள்ளவும் இந்த அறிக்கை பரிந் துரை செய்தது. அதாவது சமயம் சார்பான பண்டிகைநாள்களைஉள்ளதுஉள்ளபடியேயும் குடிமையியல் நாள்களைச் சீர்திருத்த நாள் காட்டி முறையிலும் வைத்துக் கொள்ள இது பரிந்துரைத்தது.
அரசு கோப்புகள், ஆவணங்கள், நடவடிக் கைகள்,சட்ட செயல்பாடுகள் போன்ற வற்றைப் பஞ்சாங்கங்களில் இருந்து விடுவிக்க இந்தப் பரிந்துரைகள் வழிவகுத்த வகையில் முற்போக்கான நடவடிக்கையே என்பதில் சந்தேகமில்லை. எனினும் பழம் பஞ்சாங்கங் களைத் திருத்தமுடியாமல் போனது வருத்தமான ஒன்றே.
//மேக்நாட் சாகா-பார்ப்பன-இந்துமத எதிர்ப்பாளர்; //
தேவிகாபுரம் சிவாநிமிர்வோம் - ஏப்ரல் 2017கீற்று - 07 ஏப்ரல் 2017
வங்காள மொழியில் இந்துக் கடவுளைக் குறிக்கும் மேக்நாத் என்ற பெயரைத்தான் அவரது தாயார் சூட்டினார்.
அதை விரும்பாமல் இராமர்-இலட்சுமணர்களை எதிர்த்து தீரமுடன் போரிட்ட இந்திரஜித் (மேகநாதன்) என்பதன் குறியீடாக தனது பெயரை மேக்நாட் என்று மாற்றிக் கொண்டார்.
என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
..... தேமொழி
வங்காள மொழியில் இந்துக் கடவுளைக் குறிக்கும் மேக்நாத் என்ற பெயரைத்தான் அவரது தாயார் சூட்டினார்.
அதை விரும்பாமல் இராமர்-இலட்சுமணர்களை எதிர்த்து தீரமுடன் போரிட்ட இந்திரஜித் (மேகநாதன்) என்பதன் குறியீடாக தனது பெயரை மேக்நாட் என்று மாற்றிக் கொண்டார்.
என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
..... தேமொழி
On Sunday, May 7, 2017 at 9:11:14 PM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, May 7, 2017 at 4:24:29 PM UTC-7, தேமொழி wrote:தேவிகாபுரம் சிவாநிமிர்வோம் - ஏப்ரல் 2017கீற்று - 07 ஏப்ரல் 2017மேக்நாட் இல்லை. மோதி மோடி ஆவதுபோல் ஆகிவிட்டது நூல்தலைப்பில்.மேகநாத் சாகா.மேகநாதன் இராவணன் மகன் இந்திரஜித்தின் பெயர். அவனைக் கொன்றது பற்றிய காவியம்வங்காள மொழியில் புகழ் பெற்றது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
| மேகநாத சாஃகா | |
|---|---|
மேகநாத சாஃகா, 1921 பெர்லினில் | |
| பிறப்பு | அக்டோபர் 6, 1893 சியோரடலி, டாக்கா (இன்றைய வங்கதேசம்) |
| இறப்பு | 16 பெப்ரவரி 1956 (அகவை 62) |
| வாழிடம் | இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| துறை | வானியற்பியல் |
| பணியிடங்கள் | அலகாபாது பல்கலைக்கழகம் கொல்கத்தா பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | தாக்கா கல்லூரி பிரசிடென்சி கல்லூரி, கொல்கத்தா |
| அறியப்படுவது | சாஃகா அயனியாக்க சமன்பாடு |
மேகநாத சாஃகா (Megh Nad Saha, மேக்நாத் சாஹா, வங்காளம்:মেঘনাদ সাহা, தேவநாகரி: मेघनाद साहा, அக்டோபர் 6, 1893 – பெப்ரவரி 16, 1956) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர் இவரே. இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது.
இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இவர் அமைத்த அடித்தளம் முக்கியமானது. [1][2]
மேகநாத சாஃகா அக்டோபர் 6, 1893 ஆம் ஆண்டு இன்றைய வங்கதேசத்திலுள்ள சியோரடலி எனும் ஊரில் சகன்னாத் சாஃகா என்ற சிறு மளிகை வியாபாரியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். வறுமை காரணமாக சாஃகாவை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்ப நினைத்தார் அவர் தந்தை. சாஃகாவின் பள்ளி ஆசிரியர்கள் அவரைத் தடுத்து சாஃகாவை பள்ளியில் தொடரச் செய்தனர்.
புகழ்பெற்ற இயற்பியலாளராக அறியப்பட்டாலும் சாஃகா தீவிர சமுதாய நல நோக்குடைய சமூக ஆர்வலராகவே சிறு வயது முதல் இருந்துள்ளார்.
1905 ஆம் ஆண்டு வங்கத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது ஆங்கில அரசு. மக்கள் வெகுண்டெழுந்தனர். சாகாவுக்கு வயது பன்னிரண்டு. தன்னால் போராட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லையே என்று வருந்தினார் சாஃகா. வங்கத்தின் கவர்னர் பள்ளிக்கு வந்த அன்று தன் நண்பர்களை அழைத்துப்பேசி, வகுப்புகளைப் புறக்கணித்தார் சாகா. பள்ளி நிருவாகம் இச்செயலை வன்மையாக கண்டித்தது. சாகாவுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது.
வேறு வழியின்றி சிறிய பள்ளி ஒன்றுக்கு மாற்றப்பட்டார் சாகா. இருப்பினும் மனந்தளராத சாகா, பள்ளி இறுதித்தேர்வில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். உதவித்தொகையை மீண்டும் பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
பிரசிடென்சி கல்லூரியில் சாஃகா வுடன் சத்தியேந்திர நாத் போசு மற்றும் மகலனோபிசு ஆகியோர் இணைந்தனர்; இவர்களும் பின்னாளில் முக்கியமான இயற்பியலாளர்களாக வளர்ந்தெழுந்தனர். கல்லூரியில் பிரபுல்ல சந்திர ரே, சகதீசு சந்திர போசு ஆகிய மகத்தான இயற்பியலாளர்கள் சாஃகாவின் ஆசிரியர்களாக இருந்தனர்.
இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பில் பல்கலையிலேயே இரண்டாவதாக வந்த சாஃகா (முதலிடம் சத்தியேந்திர நாத் போசுக்கு!) இந்திய நிதிப்பணியில் சேர்ந்து வறுமையிலிருக்கும் தன் குடும்பத்தைக் கரையேற்ற நினைத்தார். ஆனால் அவர் பள்ளியில் செய்த வகுப்புப் புறக்கணிப்பு, சுபாசு சந்திர போசு, இராசேந்திர பிரசாத் ஆகிய விடுதலை வீரர்களுடனான தொடர்பு ஆகிய காரணங்களால் அவருக்கு I.F.S. வேலை நிராகரிக்கப்பட்டது. அதுவே இயற்பியலுக்கு நன்மை ஆகிப்போனது -- அவரது முதல் காதலான இயற்பியலின் பக்கம் சாஃகாவின் நாட்டம் சென்றது.
அது ஆசிரியர் தரும் குறிப்பு...... தேமொழி
On Sunday, May 7, 2017 at 9:23:11 PM UTC-7, N. Ganesan wrote:
2017-05-07 21:20 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:வங்காள மொழியில் இந்துக் கடவுளைக் குறிக்கும் மேக்நாத் என்ற பெயரைத்தான் அவரது தாயார் சூட்டினார்.
அதை விரும்பாமல் இராமர்-இலட்சுமணர்களை எதிர்த்து தீரமுடன் போரிட்ட இந்திரஜித் (மேகநாதன்) என்பதன் குறியீடாக தனது பெயரை மேக்நாட் என்று மாற்றிக் கொண்டார்.
என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இந்திரஜித் பெயரும் மேக்நாத் தானே.
..... தேமொழி
On Sunday, May 7, 2017 at 9:11:14 PM UTC-7, N. Ganesan wrote:
On Sunday, May 7, 2017 at 4:24:29 PM UTC-7, தேமொழி wrote:தேவிகாபுரம் சிவாநிமிர்வோம் - ஏப்ரல் 2017கீற்று - 07 ஏப்ரல் 2017மேக்நாட் இல்லை. மோதி மோடி ஆவதுபோல் ஆகிவிட்டது நூல்தலைப்பில்.மேகநாத் சாகா.மேகநாதன் இராவணன் மகன் இந்திரஜித்தின் பெயர். அவனைக் கொன்றது பற்றிய காவியம்வங்காள மொழியில் புகழ் பெற்றது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
தற்போதைய வங்காள நாட்டின டாக்கா மாவட்டத்தில் சியோரதாலி எனும் கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் நாள், ஜகநாத சாஹ – புவனேசுவரிதேவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.
தமது கிராமத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். ஆனந்த குமாரதாஸ் என்ற மருத்துவரின் உதவியால் நடுநிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்று முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அரசு உதவித் தொகை அளித்தது.
டாக்கா கல்லூரிப் பள்ளியில் 1905 ஆம் ஆண்டு சேர்ந்து கல்வி பயின்று கொண்டிருந்தார். அப்போது வங்கப் பிரிவினை ஏற்பட்ட காலம். நாடு முழுவதும் வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. மேகநாத் சாஹா பயின்ற பள்ளிக்கு வங்கப் பிரிவினைக்குக் காரணமான ஆளுநர் கர்சன் பிரபு வருகை புரிந்தார். அவரது வருகையை பள்ளி மாணவர்கள் புறக்கணித்தனர். மேகநாத் சாஹாவும் மாணவர்களும் இணைந்து நின்று ஆளுநரை புறக்கணித்ததால், அவருக்கு அரசு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்திவிட்டது. பள்ளியை விட்டு வெளியேறினார். அவரிடம் தாய் நாட்டுப் பற்று மேலோங்கி நின்றது.
கிஷோரிலால் ஜீப்ளி கல்விக்கூடத்தில் சேர்ந்தார். கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வில் 1909 ஆம் ஆண்டு கிழக்கு வங்க மாணவர்களில் முதல் மாணவராகத் தேறினார். டாக்கா கல்லூரியில் இடைநிலை அறிவியல் தேர்வில் வேதியியலிலும், கணிதவியலிலும் முதல் தகுதி பெற்றுத் தேர்ச்சியடைந்தார். மேலும், ஜெர்மன் மொழியிலும் தேர்ச்சி பெற்றார்.
பின்னர், கல்கத்தா பிரசிடென்சிக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். பி.சி.ரே, ஜே.சி.போஸ், டி.என்.மல்லிக், சி.இ.குல்லிஸ் முதலிய புகழ்பெற்ற பேராசிரியர்களிடம் கல்வி கற்கும் நல்வாய்ப்பைப் பெற்றார்.
கணிதவியலில் இளங்கலைச் சிறப்புப் பட்டம், பயன்பாட்டுக் கணிதவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியப் பொருளாதாரப் பணித் தேர்வு எழுத விழைந்தார் சாஹா. அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை.
கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 1916 ஆம் ஆண்டு புதிதாகப் பல்கலைக் கழக அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில் கணிதவியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். பின்னர் இயற்பியல் துறைக்கு மாற்றப்பட்டார்.
சாஹா, நீர்நிலைப்பு இயல், நிறமாலை அளவியல், வெப்ப இயங்கியல் முதலிய தலைப்புகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினார்.
செல்வி ஏக்னஸ் கிளார் என்பவர் எழுதிய, சூரியன் மற்றும் விண்மீன்கள் குறித்து இரண்டு நூல்கள் சாஹாவின் கவனத்தை ஈர்த்தன. மேலும் பிளாங்க் நெர்னஸ்ட் எழுதிய அறிவியல் நூல்களும் இவரது சிந்தனையைக் கூராக்கின. ஜன்ஸ்டின் பொது சார்பியல் கோட்பாட்டின் நிரூபனத்தை, ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் சாஹா.
மின்காந்த கோட்பாடுகள் மீதான ஆய்வு முடிவுகள், ‘மேக்ஸ்வெல் தகைவுகள்’ எனும் கட்டுரையை 1917 ஆம் ஆண்டு ஃபிலாசிபிகல் மேகசின்’ என்ற அறிவியல் இதழில் வெளியிட்டார்.
விண் இயற்பியலில், “தனிப் பாங்கான கதிர்வீச்சு அழுத்தம்” குறித்த இவரது ஆராய்ச்சியைப் பாராட்டி கல்கத்தா பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
சாதாரண நெருப்பில் சோடியம் பொலிவுடனும், சூரிய ஒளியில் இருண்டும் வெளிப்படுவதேன்? “உண்மையில், எரியும் நெருப்பில் சோடியம் தன் கிளர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்த ஆற்றல் தளத்திற்குக் கீழே விழும்போது தனக்கே உரிய ஆற்றலை உமிழ்கின்றது. அதனால் கோடு பொலிந்து காணப்படுகிறது. அதே வேளையில் சூரியனில் இந்த சோடியம் அவை தனக்கே உரித்தான சூரிய ஆற்றலை உறிஞ்சி புறச் சுற்று வட்டாரத்தில் உள் எலக்ட்ரானை உதறிவிட்டு அயனியாக நிலைத்திருப்பதாயின் நிறமாலையில் இருண்ட கருப்புக் கோடு அல்லது வெற்றிடம் தான் பதிவாகும்.” - இதுதான் ‘சாஹா சமன்பாடு’ ஆகும். இவர் வெளியிட்ட, ‘கோட்பாட்டியல் நோக்கில் விண் இயற்பியல்’ எனும் நூலின் முன்னுரையில், “இத்துறை முன்னோடியாக போர் (Bohr) கருதப்பட்டாலும், அணுக்கோட்பாட்டியல் அடிப்படையில் விண்மீன் நிறமாலையினை விளக்க முற்பட்ட ‘மேகநாத் சாஹா’ எனும் இந்திய இயற்பியலாலர் குறிப்பிடத்தக்கவர்” என்று எஸ்.ரோஸ்லாண்ட் எனும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
சாஹா, கல்கத்தா பல்கலைக் கழகம் 1919 ஆம் ஆண்டு வழங்கிய ‘பிரேசந்த்’ ராய்சந்தி உதவித் தொகை’ மூலம் அய்ரோப்பா சென்றார். லண்டனில் இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தாயகத்திற்கு 1921 ஆம் ஆண்டு திரும்பினார். கல்கத்தா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறையில் ‘கெய்ரா’ பேராசிரியராகச் சேர்ந்தார். (கெய்ராவைச் சேர்ந்த குமார் குருப்பிரசாத் சிங் பெயரிலான சிறப்பு இருக்கை அது)
தமது முப்பதாவது வயதில் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் 1923 ஆம் ஆண்டு, இயற்பியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். பதினைந்து ஆண்டுகள் இப்பணியில் நீடித்தார்.
கல்கத்தா, இந்திய அறிவியல் பேரவைச் சங்கத்தின் இயற்பியல் கணிதத்துறைக் கருத்தரங்கம் 1926 ஆம் ஆண்டு நடைபெற்றது. அக்கருத்தரங்கிற்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தார்.
சாஹா இலண்டன் அரசவைக் கழகச் சான்றோனாக (F.R.S.) வும் 1927 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசும் இவரது ஆராய்ச்சிப் பணிக்கு உதவித் தொகை வழங்கியது.
சாஹா, ஜெர்மனி, இங்கிலாந்து, லாகூர் போன்ற பல இடங்களுக்கு அறிவியல் பயணம் புரிந்தார்.
கல்கத்தா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை ‘பாலிட்‘ பேராசிரியராக 1938 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். கல்கத்தா நகரில் இயங்கிவந்தார். ‘இந்திய அறிவியல் வளர்ச்சி சங்கத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சாஹா பெரும்பாடுபட்டார். இச்சங்கத்தின் இயக்குநராகவும் செயல்பட்டார்.
அலகாபாத் ‘தேசிய அறிவியல் கழகத்தின்’ முதல் தலைவராகவும், ‘தேசிய அறிவியல் நிறுவனத்தின்’ இரண்டாவது தலைவராகவும் விளங்கினார் சாஹா’
மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் 1948 ஆம்ஆண்டு நியமித்த, இந்திய அரசின் பல்கலைக் கழகக் கல்விக் குழு உறுப்பினராகவும், ‘இந்திய அறிவியல் செய்திச் சங்கத்தின் வெளியீடான, ‘அறிவியலும் கலாச்சாரமும்’ எனும் திங்களிதழின் கட்டுரையாளராகவும், தேசியத் திட்டக்குழு உறுப்பினராகவும் மேகநாத் சாஹா விளங்கினார்.
சோவியத் அறிவியல் கழகத்தின் 220-வது ஆண்டு விழாவில் இந்திய பிரதிநிதியாக ரஷ்யாவிற்குச் சென்று கலந்துகொண்டார்.
கல்கத்தா வடமேற்குத் தொகுதியிலிருந்து 1951 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய விண்இயற்பியல் அறிவியலாளரான மேகநாத் சாஹா 16.02.1956 ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவரது பெயர் இந்திய அறிவியல் வரலாற்றில் நிலைத்து நிற்கும்!
On Sunday, May 7, 2017 at 4:24:29 PM UTC-7, தேமொழி wrote:
https://en.wikipedia.org/wiki/Saha_(surname)
https://www.facebook.com/Saha-Community-612409838819369/
1. Jump up ^ "Saha, and Bangladesh.Saha people are economically, socially influential among hindus in Bangladesh. Saha people are mostly rich in Bangladesh. They focus on business and education mostly and hold high paying in jobs in Government and private sectors . surname". Retrieved 25 January 2016.
--
https://en.wikipedia.org/wiki/Saha_(surname)
https://www.facebook.com/Saha-Community-612409838819369/
இதில் சாஹா சமூக்கத்தினர் வியாபாரிகள் என குறிப்பிடப்பட்டுள்ளதே. விக்கிபீடியாவின் - References[edit]
1. Jump up ^ "Saha, and Bangladesh.Saha people are economically, socially influential among hindus in Bangladesh. Saha people are mostly rich in Bangladesh. They focus on business and education mostly and hold high paying in jobs in Government and private sectors . surname". Retrieved 25 January 2016.
//‘சாகா’ எனும் தீண்டப்படாத சமூகத்தில் பிறந்த குற்றத்துக்காக இருட்டடிக்கப்பட்டவர் என்று ஆசிரியர் எழுதியிருப்பது குறித்தும் உங்கள் கருத்தைக் கூற இயலுமா திரு. அரிசோனன் //
2017-05-07 21:53 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>://‘சாகா’ எனும் தீண்டப்படாத சமூகத்தில் பிறந்த குற்றத்துக்காக இருட்டடிக்கப்பட்டவர் என்று ஆசிரியர் எழுதியிருப்பது குறித்தும் உங்கள் கருத்தைக் கூற இயலுமா திரு. அரிசோனன் //நான் கருத்துக்கூறாததால், நான் அதறகு உடன்படுகிறேன் என்பதுதானே பொருள்?நான் பதிந்த கருத்துக்குப் பதிலளிக்காததால் அதற்கு நீங்களும் உடன்படுகிறீர்கள் என்றே எடுத்துக்கொள்கிறேன்.
ஒருவரைச் சிறப்பிக்க மற்றவரைத் தாழ்த்தவேண்டிய அவசியமோ, அவரின் சிறப்பிற்குத் தொடர்பில்லாத விஷயங்களைப்பதிவதுமோ தேவையற்றது. அது கட்டுரையாளர் மற்றும் பதிபவரின் உள்ளப்பாங்கையும் காட்டுகிறது.
அவரைப்போல் பல அறிவாளிகளின் அளிப்புகள் பின்தள்ளப்பட்டுள்ளன. அவர் தலித் என்பதால் பின்தள்ளப்பட்டுள்ளது என்றால் அரசியல் அமைப்பை எழுதிய அம்பேத்கார் புறந்தள்ளப்பட்டாரா?இப்படிப்பட்ட விவாதங்களில் இறங்கி சாதிசமய நல்லிணக்கத்திற்கு உருவிளைவிப்பதைவிட, புறந்தள்ளப்பட்டவரின் பங்களிப்பு முன்கொண்டுவரப்பட்டதைப் போற்றிச் சிறப்பிப்பதே முறைமையாகும்.
தங்களது பதிவு எப்படியிருந்ததென்றால், தலைவாழை இலைவிரித்து, விருந்து பரிமாறி, ஓரத்தில் சிறிது சாணியையும் வைத்தாற்போலிந்தது.இப்படிச்செய்தால் யாரும் விருந்தை இரசியார். அதைப்புகழார். சாணியே அவர்கள் கருத்தில் தோன்றி அருவருப்பை உண்டாக்கும். ஏன் சாணியை வைத்தீர்கள் என்று கடியவே செய்வார்கள்.அரும்பாடுபட்டு விருந்து படைத்தது வீணாகிவிடும். விருந்திட்டவரின் உள்ளப்பாங்கையே விமர்சிக்க நேரிடும்.
இப்படிப்பட்ட விவாதங்களில் இறங்கி சாதிசமய நல்லிணக்கத்திற்கு உருவிளைவிப்பதைவிட, புறந்தள்ளப்பட்டவரின் பங்களிப்பு முன்கொண்டுவரப்பட்டதைப் போற்றிச் சிறப்பிப்பதே முறைமையாகும்.