~ முதல் வாக்கியத்திற்கும், அடுத்ததிற்கும் தொடர்பில்லை. ‘யூகம்’ ! யுகம் யுகமாக யூகம் செய்தே காலத்தைக் கழிக்கிறோம்.
~~~~நாம் கையில் வெண்ணைய் வைத்துக்கொண்டு நெய்க்கு அழும் ரகம்.
‘அன்றொரு நாள் ஜூன் 3’ பதிவின் கதாநாயகர் ஜார்ஜ் கார்டோனா அவர்கள் பாணினியின் ஸமஸ்கிருத இலக்கணத்தைக் கரைத்துக் குடித்த பேராசிரியர். (‘...பாணினி, பதஞ்சலி, ... என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள் ... இவரிடமிருந்து மிகச் சரியான விடை கிடைக்கும்...’ -ராஜம்:ஜூன் 3, 2012) அவரிடம் சிஷ்யையாக இருந்த ராஜம் என்ற அந்த வீரவநல்லூர் பொண்ணு தமிழ் இலக்கண/இலக்கிய/உரை நுட்பங்களை, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக முன்னிறுத்தி, அவருடம் வாதாடவே. ஒரு ஆய்வு நூல் பிறந்தது: A COMPARATIVE STUDY OF TWO ANCIENT INDIAN GRAMMATICAL TRADITIONS: THE TAMIL TOLKAPPIYAM COMPARED WITH THE SANSKRIT RK-PRATISAAKYA, TAITTRIYA-PRA
ராஜமும் முனைவர் ராஜம் ஆனாளே- 1981.
'மொத மொதல்லெ நான் கார்டோனாவெ அட்வைசராத் தேர்ந்து எடுத்தப்போ (இந்த நாட்டுலெ அப்பிடித்தான்; படிக்கிறவங்கதான் ஆசான்களத் தேர்ந்து எடுப்பொம்!) ... நெறயப்பேர் சொன்னாங்க ... அவரு (கார்டொனா) யாரெயும் Dr அல்லது Professor அடைமொழி இல்லாமச் சொல்றதெயோ கூப்புடறதையோ விரும்ப மாட்டாரு. Dissertation எழுதி முடிச்சி ... ஒரு தகுதி வந்த அப்றம்தான் - George-ன்னு சொன்னாலோ கூப்ட்டாலோ அவருக்குப் பிரியம். அது நல்லா மனசுலெ பதிஞ்சு போச்சு! சரி, Dissertation எழுதி முடிச்சி, பட்டம் வாங்கி, வேலையும் பாத்து, அதுக்கப்புறம் ஒரு தடவெ அவரெப் பாத்தப்பொ ... வழக்கப்படி ... Dr. கார்டோனா-ன்னு மதிப்பா சொன்னப்பொ ... எனக்கு அனுமதி கெடச்சுது அமோகமா, "இனிமே நீ என்னெ George-னெ சொல்லலாம்-னு." ராஜம் 12 11 10)
சரி. விஷயத்துக்கு வருகிறேன். ராஜத்தின் படைப்பாற்றலை, ஆய்வுத்திறனை, சொல்லாட்சியை, கவின் ஆளுமையை அன்றாடம் கண்டு நான் வியக்காத நாள் கிடையாது. அவரது படைப்புகளை பொக்கிஷமாக போற்றிக்காக்க வேண்டும்.
சரி. பாயிண்டுக்கு வருகிறேன். ஆய்வு நூல்களுக்கு ஒரு ரத்ன சுருக்கம் உண்டு. DISSERTATION ABSTRACTS INTERNATIONAL: Volume 42, Number 3, 1981l அவர் கூறுகிறார்:
'...தொல்காப்பியத்துக்கும் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களுக்கும் உள்ள உறவு பற்றிய தெளிவு இல்லை...அந்த இலக்கை நோக்கிய விவரமான, பாரபக்ஷமற்ற ஒரு இடத்து ஆய்வுகள் இது வரை வர இல்லை. இது அந்த இலக்கை நோக்கிய ஆய்வு முயற்சி... ஆய்வு சொல்வது யாதெனில்: தொல்காப்பியத்துக்கும்,ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட சம்ஸ்க்ருத இலக்கண நூல்களுக்கும் ஒற்றுமை பல; வேற்றுமை பல. வடமொழி நூல்களுக்குள்ளே பல வேற்றுமைகள் தென்படுகின்றன... இந்த பின்னணியில், இந்த ஆய்வு நக்ஷத்ர மண்டல அணுகுமுறையை பின்பற்றுகிறது. புகழ்பெற்ற இலக்கணாசிரியர்கள் பெரிய சொன்னப்பொ ... எனக்கு அனுமதி கெடச்சுது அமோகமா, "இனிமே நீ என்னெ George-னெ சொல்லலாம்-னு." ராஜம் 12 11 10.
இந்த மாதிரியான ஆய்வுகளுக்கு ரத்ன சுருக்கம் ஒன்று இருக்கும். அதில் (DISSERTATION ABSTRACTS INTERNATIONAL: VOLUME 42, NUMBER 3, 1981) ல் முனைவர் ராஜம் கூறியிருப்பதின் சாராம்சம்:
என் துணிபு:
1. நோம் சோம்ஸ்கி, இந்த ஆய்வு நூலை படித்திருக்கலாம். நம்மவர்கள் எட்டிக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
2. 1981க்கு பின் இதற்கு ஈடான ஆய்வு ஒன்று கூட வெளி வரவில்லை.
நீண்ட பதில். எனவே, திசை மாறாமல் இருக்க, இதை வைத்து ஒரு புதிய இழையை தொடங்கி இருக்கிறேன். தமிழ் மரபு அறக்கட்டளை ரக்ஷது.
இன்னம்பூரான்
25 07 2012
இவ்விழையை பலமுறை படித்தும், மூவரும் சொல்ல வருவது யாது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. அதுவும், இதுவுமாக கலந்துரைத்தால் எதுவும் விளங்கவில்லை. தற்பொழுது, இரு வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டால்...
நீண்ட பதில். எனவே, திசை மாறாமல் இருக்க, இதை வைத்து ஒரு புதிய இழையை தொடங்கி இருக்கிறேன். தமிழ் மரபு அறக்கட்டளை ரக்ஷது.
இன்னம்பூரான்
25 07 2012
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
நான் எழுத்துப் பிழைகளை பற்றி சொல்லவில்லை. ஒருவர் “சிந்தனை” என்பது
ஒருவர் மணையில் நடக்கிறது; அது என்ன , எப்படி நடக்கிரது என நாம் அறிய
முடியாது. ultimately, நாம் ஒருவர் சிந்தனையை பார்ப்பது எழுத்தில், உரை
நடையில்தான். For practical purposes சிந்தனை = உரைநடை.
துல்லியமாக சிந்தித்து, ஏற்புடைய உரைநடையை பயிலுவது,
> இரண்டுமே எளிது.
> இன்னம்பூரான்
இந்த நற்செய்தியை கொடுத்ததற்க்கு நன்றி. தமிழ் கூரும் நல்லுலகில்
இச்செய்தி பரவவில்லை.
வகொவி
மேலே மணையில் என்பதை மண்டையில் என படிக்கவும்
வகொவி