எல்லாருக்கும் வணக்கம்!

221 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Oct 24, 2013, 12:41:09 AM10/24/13
to மின்தமிழ்

எல்லாருக்கும் வணக்கம்!

முதல்லே எல்லார் கிட்டே இருந்தும் மன்னிப்பு வேண்டுகிறேன்.  அதுவும் என் உடன் பிறவாச் சகோதரி ரேவதியை மிகவும் தவிக்க வைத்ததுக்கு, மீண்டும், மீண்டும் மன்னிப்பு.  இந்தப் பிரயாணத் திட்டம் போடும்போதே இணையத்துக்கு வர முடியாது என்பது தெரியும்.  அதே போல இணைய நண்பர்கள் கிட்டேயும் சொல்லாமல் போயிட்டு வந்ததும் ஒரு ஆச்சரியமாகக் கொடுக்க நினைச்சேன்.  ஆரம்பத்திலேயே ஒரு முடிவு (யோசிச்சுத் தான்) எடுத்துட்டா அதிலிருந்து மாறாமல் இருப்பது நமக்கு வழக்கமாச்சே.  அதனால் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போயிட்டும் வந்தாச்சு.

காட்டு வாழ்க்கை.  அதிக நடை.  போற இடத்திலே எல்லாம் செல்ஃபோன் சிக்னல் கிடைப்பதும் கஷ்டம். :))) கிடைச்சாலும் விட்டு விட்டு வரும். சாப்பாடும் முன்னைப் பின்னே தான்.  கூடிய வரை காட்டு வாழ்க்கைக்கு ஏற்றாற்போல பால், பழம், மோர் என்றே சாப்பாடு.   ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டுமே ஏதேனும் சிற்றுண்டி என இருந்து எல்லாம் வல்ல ஶ்ரீராமன் கிருபையில் அனைத்தையும் பூரணமாக முடித்துவிட்டு இன்று காலை வந்து சேர்ந்தோம்.

என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அஷ்வின் ஜிக்கும்
ரேவதிக்கும் மிகவும்  நன்றி.  அவரின் மன உளைச்சலுக்கு நான் பொறுப்பானது குறித்து வருத்தமா இருக்கு.  மேலும் மெயில்கள் மூலம் விசாரித்த ஶ்ரீராம், ஜீவி சார் மற்றும் யார்னு இனி தான் பார்க்கணும்.  நிறைய இருக்கிறதாலே இன்னும் பார்த்து முடியலை. எல்லாருக்கும் முன் கூட்டிய நன்றி.  ஓரளவுக்குத் தெரிஞ்சிருக்கும் எங்கே போனேன்னு.  அப்படித் தெரியாதவங்க நாளை வரை பொறுத்திருக்கவும்.

நாங்கள் சென்ற பாதைகள் அனைத்துமே!!!!!!!!!!!!

Innamburan S.Soundararajan

unread,
Oct 24, 2013, 1:20:27 AM10/24/13
to thamizhvaasal, Geetha Sambasivam, மின்தமிழ்
சஸ்பென்ஸ் ரொம்ப அதிகமாக இருக்கே. வாஸ்தவம் தான். நானும் மிகவும் கவலைப்பட்டுப்போனேன். நானும் ஒரே அலைசலில்,  இருந்தாலும் எல்லாம் நலமே என்ற தகரியமும் இருந்தது. 
அன்புடன், இன்னம்பூரான்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Nagarajan Vadivel

unread,
Oct 24, 2013, 1:35:16 AM10/24/13
to மின்தமிழ்

2013/10/24 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

காட்டு வாழ்க்கை.

​கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

காட்டிலயா

சொல்லவே இல்லையே

வம்பு

revathi narasimhan

unread,
Oct 24, 2013, 3:06:15 AM10/24/13
to maza...@googlegroups.com, மின்தமிழ்
இதை இதைத் தான் எதிர்பார்த்தேன்.
ஆஹா  அந்த சாத்வீக் நிலைக்கு வந்தாச்சா.
குருவருள் கிடைத்து விட்டதா. சந்தோஷம் அம்மா. இத்தனை மன்னாப்பு எல்லாம் வேண்டாம்பா.
காணலியேன்னு பழக்கதோஷம் தவிக்கவிட்டது.

பெருமைப்ப்படுகிறேன் இணைய நட்பு இத்தனை இறுக்கத்தைக் கொடுக்கிறது கீதா.
அன்புடன்,
ரேவதி.

2013/10/24 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>
நாடுக் காட்டுலெ என்னெத் தவிக்க உடுறீங்களே  நாளெ வரைக்கும் காத்திருக்கணுமா?

2013/10/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mazalais+u...@googlegroups.com.
To post to this group, send an email to maza...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/mazalais.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே

--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mazalais+u...@googlegroups.com.
To post to this group, send an email to maza...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/mazalais.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

Subashini Tremmel

unread,
Oct 24, 2013, 3:16:36 AM10/24/13
to மின்தமிழ்
அன்பு கீதா,

பயணம் நன்கு முடிந்து தங்களை மனம் நிறைவோடு மீண்டும் இங்கு காண்பதில் மகிழ்ச்சி. அதிலும் இன்று வந்ததில் கூடுதல் மகிழ்ச்சி. :-))

சுபா

2013/10/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
கி.காளைராசன்

unread,
Oct 24, 2013, 6:02:21 AM10/24/13
to mintamil
பேரன்பு கொண்ட தலைவியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

வேந்தன் அரசு

unread,
Oct 24, 2013, 8:27:43 PM10/24/13
to தமிழ் சிறகுகள், மின்தமிழ்
கலக்கப்போறீங்க

24 அக்டோபர், 2013 12:41 AM அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 25, 2013, 1:24:16 AM10/25/13
to mintamil
கீதாம்மா வைத்த தொடரும் நண்பர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2013/10/25 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

coral shree

unread,
Oct 25, 2013, 2:46:43 AM10/25/13
to மின்தமிழ்
வாங்க கீதாஜி... சீக்கிரமா எடுத்துவிடுங்க... எவ்ளோ நேரம்தான் பொறுமையா இருப்பது?

அன்புடன்
பவளா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Geetha Sambasivam

unread,
Oct 25, 2013, 5:29:16 AM10/25/13
to மின்தமிழ்

எங்கே போனேன்? தெரிஞ்சுக்க வாங்க!

பல வருடங்களாக இந்த இடம் செல்ல ஆசை.  98 ஆம் ஆண்டில் காசிக்கு யாத்திரை சென்ற சமயம் அங்கே எங்கள் பயண ஏற்பாடுகளைக் கவனித்த புரோகிதர் அயோத்திக்கு அனுப்பி வைப்பதாகச் சொன்னார்.  ஆனால் அப்போ என் கணவரோட விடுமுறை தினங்கள் முடியும் நேரம் ஆகிவிட்டதாலும் திரும்பிச் சென்னைக்குச் செல்ல முன்பதிவு செய்த நாள் நெருங்கியதாலும் அப்போப் போக முடியவில்லை.  அதன் பின்னர் பலமுறை முயற்சித்தும் செல்ல முடியவில்லை. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து ட்ராவல் டைம்ஸ் ஏற்பாட்டின் மூலம்  நாசிக், பஞ்சவடி, போன்ற இடங்கள் சென்ற போதும் இதே பாரத் தர்ஷன் மூலம் அயோத்யாவுக்கும் ஏற்பாடு செய்யுங்கள் என நாங்களே அவர்களைக் கேட்டிருந்தோம்.  அது போல் ஒரு திட்டமும் ஏற்பாடு செய்திருந்தனர்.  ஆனால் அதிலேயும் கலந்து கொள்ள முடியவில்லை. ஏதேதோ பிரச்னைகள்.  இடையில் இரண்டு முறைகள் யு.எஸ். பயணம்.  கோயிலில் கும்பாபிஷேஹ ஏற்பாடுகள் என இருந்ததோடு வீட்டிலும் சொந்தப் பிரச்னைகள். அப்படி நாங்கள் செல்ல நினைத்த இடம்

ஶ்ரீராம ஜன்மபூமி.

பொதுவாக இது போன்ற இடங்களுக்குச் செல்வது குழுவாகச் செல்வதே வசதி.  முக்கியமாய்ச் சாப்பாடு கிடைக்கும். செல்லுமிடத்துக்கு வேண்டிய வாகன வசதிகள் அவர்கள் பொறுப்பில் இருக்கும்.  செலவு குறையும்.  ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் தங்குமிடம்.  அவங்க பொதுவாக எல்லாருக்கும் சேர்த்து ஒரு கல்யாணச் சத்திரமோ, டார்மிட்டரி எனப்படும் படுக்கும் வசதி கொண்ட கூடங்களோ ஏற்பாடு செய்வார்கள்.  கேட்டுக் கொண்டால் அறை வசதி செய்து கொடுக்கலாம்.  ஆனால் அதிலும் ஒரு அறைக்கு மூன்றிலிருந்து நான்கு பேர் இருப்பார்கள்.  இது ரொம்பவே நுணுக்கமான விஷயம்.  சரியாக வருமா என்றெல்லாம் யோசித்து ஒன்றிரண்டு குழுவோடு போக முடிவு செய்து பணம் கட்டும் நேரம் ஏதேனும் ஒரு காரணத்தினால் அதை ஒதுக்கும்படி ஆகி விட்டது.

இப்போ இதைக் குறித்துப் பலரிடமும் பேசிப் பார்த்ததிலும், மற்ற பல காரணங்களினாலும் தனியாகவே போகலாம் என முடிவு செய்து அதற்கான தகவல்களைச் சேகரித்துக் கொண்டோம்.  வேளுக்குடி அவர்களின் ஶ்ரீராமனின் பாதையில் தொடரை நன்கு கவனித்துச் செல்ல வேண்டிய இடங்களை உறுதி செய்து கொண்டோம்.  ஆனால் எப்படிச் சென்றாலும் சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடியாக ரயில் பயண வசதி இல்லை.  லக்னோவிற்கு ரயில் இருப்பதாகச் சொல்கின்றனர்.  மூன்று நாட்கள் பயணம்.  முன்னெல்லாம் போயிருக்கோம் தான்.  ஆனால் இப்போ முடியுமா?  அப்போது தான் எங்கள் நெருங்கிய நண்பரும், நாங்கள் மானசிகமாய் குருவாக நினைப்பவருமான திரு காழியூரர் விமானப் பயணத்தை சிபாரிசு செய்தார்.  கட்டணம்???  ஏ.சி.க்கும் இதுக்கும் அப்படி ஒண்ணும் பெரிய அளவு வித்தியாசம் இல்லை.  ஆனால் விமானப் பயணக் கட்டணம் பேரம் செய்து குறைச்சலாக வரும்போது பதிவு செய்யணும்.

விமானப் பயணக் கட்டணம் குறைவாக வரும் நாளாகப் பார்த்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் செல்ல வேண்டிய தினத்தை முடிவு செய்தோம்.  விமானப் பயணக் கட்டணம் ஓரளவு குறைச்சலாய்க் கிடைக்கிறது என்பது தெரிந்ததும், இங்குள்ள  ஏஜென்ட் மூலம் இருப்பதிலேயே குறைவான விமானக் கட்டணம் உள்ள இன்டிகோவைத் தேர்ந்தெடுத்து டிக்கெட்டெல்லாம் வாங்கிட்டோம்.  விஜயதசமி கழிந்த அக்டோபர் பதினாறாம் நாள் சென்னையிலிருந்து லக்னோ செல்ல விமான டிக்கெட் தயார். சென்னைக்குச் செல்லத் திருச்சியிலிருந்து பல்லவனில் விஜயதசமி அன்று செல்லவும் டிக்கெட் வாங்கியாச்சு. சென்னை சென்று உறவினர் வீட்டில் தங்கி அங்கிருந்து விமான நிலையம் சென்று லக்னோ செல்லத் திட்டம்.  சென்னையில்  இரு தினங்கள் நல்லபடியாக முடிந்து லக்னோ செல்லவும் சென்னை விமான நிலையம் கிளம்பிவிட்டோம்.  இந்த விமானம் நேரடியாக லக்னோ செல்லாதாம்.  டெல்லி சென்று அங்கிருந்து வேறு விமானம் மாற வேண்டுமாம்.  அது வேறேயா!  கடவுளே!

இதிலே என்ன வேடிக்கைன்னா, ஹைதராபாத், பெண்களூருக்கு நேரடி விமான சேவை இருக்கிறது.  சென்னைக்கு மட்டும் கிடையாதாம்.  என்ன அநியாயம்! 

Geetha Sambasivam

unread,
Oct 25, 2013, 5:30:32 AM10/25/13
to மின்தமிழ்
ஆவலுடன் எதிர்பார்த்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அதிகக் களைப்புக் காரணமாக தாமதம் ஆகிறது.  இன்னமும் பயணக் களைப்புத் தீரவில்லை. :)))

2013/10/25 coral shree <cor...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Oct 25, 2013, 5:39:14 AM10/25/13
to mintamil
ராம், ராம்.

2013/10/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Innamburan S.Soundararajan

unread,
Oct 25, 2013, 5:50:34 AM10/25/13
to mintamil
கெட்டிக்கார திட்டங்கள். 
2013/10/25 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 26, 2013, 6:21:46 AM10/26/13
to மின்தமிழ்
அயோத்தியை நோக்கி!

இப்போதெல்லாம் உள்நாட்டு விமான சேவையில் உணவு கொடுப்பதில்லை.  உணவு வண்டி வரும்.  ஆனால் அதுக்கு நாம் தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும்.  ஒரு டீ 75 ரூக்குக் கொடுக்கிறாங்க.  காஃபி என்றால் 90 ரூ,  டிபன், காபி சேர்த்து வாங்கினால் ஒருத்தருக்குக் குறைந்தது 250 ரூ ஆகிறது.  ஆகையால் நாங்க தங்கி இருந்த உறவினர் வீட்டிலேயே சொல்லிக் கையில் இட்லி,, புளியோதரை, காஃபி போன்றவை வாங்கிக் கொண்டோம். விமான நிலையம் வந்து செக்யூரிடி செக்கப் எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறி உட்கார்ந்து காலை ஆகாரம் மட்டும் காஃபியோடு சாப்பிட்டோம்.  டெல்லி வந்ததும், லக்னோ போக விமானம் அடுத்த கட்டிடத்தில் உள்ள டெர்மினலில் இருந்து கிளம்பும் என்ற செய்தியைப் பெற்றுக் கொண்டு, அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து பக்கத்துக் கட்டிடம் விரைந்தோம்.  அங்கே செக்யூரிடி செக்கிங் முடித்துக் கொண்டுவிமானம் கிளம்பும் வாயிலுக்குச் செல்ல நேரம் இருந்தமையால் சற்று உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு பின்னர் விமானத்துக்குக் கிளம்பினோம்.  விமானத்தில் ஏறி உட்கார்ந்து விமானம் கிளம்பியது தான் தெரியும்.  சரியாக உட்கார்ந்து கொள்வதற்குள்ளாக விமானம் தரை இறங்க ஆரம்பித்துவிட்டது.  லக்னோவுக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகப் பயண நேரம்.  விமானத்திலிருந்து வெளியே வந்து சாமான்களைப் பெற்றுக் கொண்டு விமான நிலைய வாயிலுக்கு வந்தால் எங்கே போவது, எங்கே தங்குவது என ஒண்ணும் புரியவில்லை.

சற்று நேரம் முழி, முழினு முழிச்சோம்.  அங்கே இருந்த உ.பி. சுற்றுலா மையம் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தோம்.   யாரையும் காணோம்.  அக்கம்பக்கம் விசாரிக்கலாம்னால் கூட யாருமே இல்லை.  அந்தப் பக்கமாக வந்த செக்யூரிடியை விசாரித்தோம்.  அலுவலர் எப்போவானும் வருவார்னு தெரிஞ்சது. என்ன செய்யலாம்னு யோசித்துவிட்டு லக்னோவில் முதல்லே தங்கி இடம் பார்த்துக் கொண்டு பின்னர் முடிவு செய்யலாம்னு நினைச்சுக் கொண்டு போன புளி சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, ப்ரி-பெய்ட் ஆட்டோ(நல்லவேளையா விமான நிலையத்தின் உள்ளேயே இருக்கு) கேட்டு, அவங்களே ஆலம்பாக் என்னும் இடம் சென்றால் தங்க நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும்னு சொல்லி ஒரு காரை புக் செய்து கொடுத்து அனுப்பி வைச்சாங்க.  அந்தக் காரும் வந்து எங்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.  அங்கே போனால் தங்க அறை இருக்கு.  ஆனால் வாடகை!!!  அம்மாடியோவ்!  விமானக் கட்டணத்தை விடவும் அதிகம்.  ஏ.சி. அறை வேண்டாம்னு சொல்லிப் பார்த்தோம். ஏ.சி. தான் கொடுப்போம்னு பிடிவாதம். சரினு அங்கேருந்து கிளம்பி வேறே ஹோட்டல் பார்த்துக் கொண்டு போகையில் நம்மவருக்குத் திடீர்னு ஒரு யோசனை!

நேரே அயோத்யா போயிட்டால் என்ன?  

எப்படி?

இந்தக் காரிலேயே!

கட்டுப்படி ஆகுமா?

இப்போக் கும்பகோணம் எல்லாம் போகலையா?  இந்த ஊரிலே எல்லாம் பஸ்ஸிலே ஏறிப் போக முடியாது! தமிழ்நாடா? இல்லை கர்நாடகாவா?

கேட்டுப் பாருங்க.

கேட்டோம். அந்த டிரைவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்  அவரோட முதலாளி கிட்டே ஃபோனில் பேசினார்.  அவர் சரினு சொல்லி ரேட்டையும் ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டோம்.  அங்கிருந்து அயோத்யா கிளம்பிட்டோம். லக்னோ உ.பி.யின் தலைநகரம்.  என்றாலும் சாலைப் பராமரிப்பு என்பதே இல்லை.  அந்தச் சாலையில் மேடு, பள்ளங்களில் காரில் பயணிக்கையிலேயே சிறிது நேரத்திலேயே முதுகு வலி ஆரம்பம். தகர டப்பாவைப் போன்ற ஒரு பேருந்து அயோத்யாவுக்குச் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் போனால் இரவு பத்து மணிக்கு அயோத்யா போய்ச் சேரலாம் என டிரைவர் சொன்னார். அயோத்யாவிலே தங்குமிடம் கிடைக்குமா?  சாப்பாடு வசதி எல்லாம் எப்படியோ தெரியலையே!  பெரிய ஊரா, சின்ன ஊரா?  எதுவுமே புரியலை.  மணி மாலை நான்காகிக் கொண்டிருந்தது. கிழக்குப் பகுதி என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது.  சுற்று வட்டாரங்களிலோ, ஹைவேஸ் எனப்பட்ட அந்தச் சாலையிலோ விளக்கு என்றால் என்ன என்று கேட்கும் வண்ணம் ஒரு மெழுகு வர்த்தி விளக்குக் கூடக் கிடையாது.  எந்தக் கிராமங்களிலும் மின் வசதி என்பதே இல்லை.  

ஆனால் எல்லாக் கிராமங்களிலும் உள்ள சின்ன மண் குடிசைகளில் கூடக் குறைந்தது ஒரு பசுவும், எருமையுமாவது இருந்தது.  கால்நடைச் செல்வங்களை அங்கே கண்டாற்போல் இங்கே தமிழ்நாட்டில் காணமுடிவதில்லை.  அதோடு அங்கே இன்னமும் பச்சைப் பசும்புற்களையே மாடுகள் சாப்பிடுவதோடு வயல்களிலும் இயற்கை உரமே ஆங்காங்கே மலை போல் குவித்து வைத்துப் போட்டு வருகிறார்கள். பல இடங்களில் மாடுகள் உழுவதையும் பார்த்தேன்.  படம் எடுக்கலாமேனு கேட்பீங்க.  அப்போ இருந்த டென்ஷன் மட்டுமில்லாமல், வண்டி குதித்துக் குதித்துப் போனதால் காமிரா நழுவிவிடுமோனும் பயம்.  இவ்வளவு வசதிக் குறைவு இருந்தும் மக்கள் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.அ

Nagarajan Vadivel

unread,
Oct 26, 2013, 6:29:02 AM10/26/13
to மின்தமிழ்
இவ்வளவு வீர தீர பராக்கிரமம் ச்ய்யறதுக்கு முன்னால் லக்னோ போறோம்னு ஒரு தகவல் சொல்லியிருக்கலாமே.  நாங்க எதுக்கு இருக்கோம்  ஆறு ஆண்டுகள் அடிக்கடி அந்தப்பகுதியெல்லாம் சுத்திச் சுத்தி ஆடி ஆடிப் படம் எடுத்தவய்ங்கள் இருந்க்குறதப் பத்தி நினக்கக்கூட இல்லையே

வம்பாண்டி

2013/10/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 26, 2013, 7:30:13 AM10/26/13
to மின்தமிழ்
ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க! :))) சொல்லாதது தப்புத் தான்.  ஆனால் இந்தப் பயணத்திட்டம் போடும்போதே இணைய நண்பர்களுக்குச் சொல்லாமல் போகணும்னு என் மனதிலே திட்டம் தீட்டிட்டேன்.  அதை லேசில் மாத்த முடியலை! :)))))

2013/10/26 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Oct 26, 2013, 7:58:48 AM10/26/13
to தமிழ் சிறகுகள், மின்தமிழ்
>>இந்த ஊரிலே எல்லாம் பஸ்ஸிலே ஏறிப் போக முடியாது! தமிழ்நாடா? இல்லை கர்நாடகாவா?

இப்ப புரியுமே ஐயாவும் அம்மாவும் மச் பெட்டர் என.

26 அக்டோபர், 2013 6:21 AM அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Oct 26, 2013, 8:03:49 AM10/26/13
to தமிழ் சிறகுகள், மின்தமிழ்
ஹாஹா, வேந்தரே, இந்தப் போக்குவரத்து விஷயத்தில் தமிழ்நாட்டை அடிச்சுக்க மற்ற எந்த மாநிலத்தாலும் முடியாது. எங்களுக்கு எப்போவுமே புரியும்.  சொல்லப் போனால் உங்க யு.எஸ். கூட இதிலே போட்டி போட முடியாது.  :))))))  மும்பை பெஸ்ட் பேருந்துப் போக்குவரத்தைத் தவிர. அதுவும் மும்பையில் மட்டுமே.  ஆனால் தமிழ்நாட்டிலோ ஒவ்வொரு மூலையும் இணைக்கப் பட்டுள்ளது.  இதை ரொம்ப வருடங்களாகச் சொல்லி வருகிறேன்.  அடுத்தது கர்நாடகம்.  மலைகளில் எல்லாம் மக்கள் போக்குவரத்துக்காக மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  உடுப்பி செல்கையில், மூகாம்பிகை கோயில் செல்லக் கொல்லூர் போகும்போது, சிருங்கேரி செல்கையில், ஹொரநாடு அன்னபூரணியைப் பார்க்கப் போகையில் இத்தகைய மினி பேருந்துகளிலேயே பயணித்தோம்.  என்ன ஒரு வித்தியாசம் என்றால் அங்கே எல்லாம் வெளி மாநிலத்தவருக்கு மரியாதை கொடுப்பாங்க.  எங்களைப் பார்த்ததுமே அவங்க நின்று கொண்டு எங்களைப் பேருந்தில் ஏற்றிய பின்னரே ஏறுவார்கள். இறங்கும்போதும் அப்படியே.  கண்டக்டருக்கு யாரானும் எச்சரிக்கையும் கொடுப்பாங்க.  அனைத்து கிராமத்து மக்களுக்கும் ஓரளவாவது ஹிந்தி தெரிகிறது.  எதனால் தெரியுமா? நவோதயா பள்ளிகள் இல்லாத கிராமமே கிடையாது அங்கெல்லாம்.

2013/10/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 26, 2013, 8:05:42 AM10/26/13
to தமிழ் சிறகுகள், mintamil
ஹாஹா, ரகசியப் பயணம் என்பதாலேயே யார் கிட்டேயும் சொல்லலை. :))))

2013/10/26 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
இணையத்துக்கும் மேற்பட்ட வம்பையும், தும்பாகிய என்னையும் கேட்றுக்கலாம். லக்னோ நம்ம பேட்டையாச்சே.
2013/10/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
>>இந்த ஊரிலே எல்லாம் பஸ்ஸிலே ஏறிப் போக முடியாது! தமிழ்நாடா? இல்லை கர்நாடகாவா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Innamburan S.Soundararajan

unread,
Oct 26, 2013, 8:04:29 AM10/26/13
to mintamil, தமிழ் சிறகுகள்

Oct 26, 2013, 8:06:40 AM10/26/13
to mintamil, தமிழ் சிறகுகள்
என்ன? அப்டி சொல்லிப்ட்டேள். குஜராத்துக்கு என்ன குறைச்சல். மஹராஜா காலத்திலேயே அஹ்மதாபாத்துக்கும் ராஜ்கோட்டுக்கும் இரட்டை பாட்டை.

Oct 26, 2013, 8:07:59 AM10/26/13
to தமிழ் சிறகுகள், மின்தமிழ்

26 அக்டோபர், 2013 8:03 AM அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:

ம்.  என்ன ஒரு வித்தியாசம் என்றால் அங்கே எல்லாம் வெளி மாநிலத்தவருக்கு மரியாதை கொடுப்பாங்க.  எங்களைப் பார்த்ததுமே அவங்க நின்று கொண்டு எங்களைப் பேருந்தில் ஏற்றிய பின்னரே ஏறுவார்கள். 

நம் ஊர்ப்புறங்களிலும் இதை காணலாம்/ நகரங்கள் நரர்களை அசுரர்கள் ஆக்கி விட்டன.
 
Innamburan S.Soundararajan

unread,
Oct 26, 2013, 8:07:37 AM10/26/13
to mintamil, தமிழ் சிறகுகள்
அதானால் என்ன? சிஐடி கிட்ட சொல்லிருப்போமே.
2013/10/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Oct 26, 2013, 8:10:24 AM10/26/13
to தமிழ் சிறகுகள், mintamil

26 அக்டோபர், 2013 8:06 AM அன்று, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> எழுதியது:

என்ன? அப்டி சொல்லிப்ட்டேள். குஜராத்துக்கு என்ன குறைச்சல். மஹராஜா காலத்திலேயே அஹ்மதாபாத்துக்கும் ராஜ்கோட்டுக்கும் இரட்டை பாட்டை.

ராஜாக்களுக்கு ராஜ பாட்டை இருக்கலாம். சந்து பொந்து வாசிகளுக்கு இருக்கா.
  நகர் பேருந்துகளில் மட்டும் பயணித்து தமிழ்நாட்டை முற்றிலும் பார்க்கலாமே.

துரை.ந.உ

unread,
Oct 26, 2013, 8:11:20 AM10/26/13
to தமிழ் சிறகுகள், மின்தமிழ்

Inline image 1
​சாப்பாடு...சாப்பாடு ..எல்லா போட்டோவும் போடணும் 

2013/10/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
fde.gif

Innamburan S.Soundararajan

unread,
Oct 26, 2013, 8:11:21 AM10/26/13
to mintamil, தமிழ் சிறகுகள்
ஐயோ! தஞ்சாவூர் ~ கும்பகோணம் நிமிஷத்துக்கு ஒரு பஸ். எக்கித்தள்ளிக்கிட்டுத்தான் ஏறுவாக. பசங்க, பொண்டுகள், கிழங்கள் டாக்ஸிலெ தான் போகணும்.
2013/10/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Oct 26, 2013, 8:12:28 AM10/26/13
to mintamil, தமிழ் சிறகுகள்
இல்லிங்க போட்டது ராசா. மக்களுக்கு ஆக. அந்த ஊர் ராசாக்கள் முற்போக்கு வாதிகள்.
2013/10/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--

Jana Iyengar

unread,
Oct 26, 2013, 8:21:40 AM10/26/13
to mintamil
லக்னோவின் நடுவில் கோமதி நதி ஓடுகிறாள். நமது கூவம் எவ்வளவோ மேல். கழிவுகளெல்லாம் சேர்ந்து பச்சை பச்சையாக திட்டு திட்டாக தெரிகிறது. அப்போது மாயவதி ஆட்சி. 
அடியேன் ஜனா ராமானுஜ தாசன் 

2013/10/26 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

--
Jana

Geetha Sambasivam

unread,
Oct 26, 2013, 8:31:37 AM10/26/13
to தமிழ் சிறகுகள், mintamil
நீங்கள் சொல்வது உண்மையே.  நம்ம ஊரில் இந்த மாதிரி எல்லாம் பேருந்துகளில் ஏற கிராமத்து மக்களும் விடுவதில்லை.  அநுசரித்தல் என்பது குறைந்தே வருகிறது.  சமீபத்தில் செப்டெம்பரில்  பெண்களூர் சென்றபோது கூட மக்கள் மிகவும் பெருந்தன்மையாக எங்களை நடத்தியதைக் காண நேர்ந்தது.  இதுவே சென்னை என்றால்,
"ஏ, பெரிசு, உனக்கெல்லாம் இது என்னாத்துக்கு?" என்ற கேள்வி தான் வந்திருக்கும்.  மனம் நொறுங்கிப்போகும்.

2013/10/26 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 26, 2013, 8:32:34 AM10/26/13
to தமிழ் சிறகுகள், மின்தமிழ்
அட, நம்ம துரையை மறந்தே போனேனே! சாப்பாடு படமே எடுக்கலை. :( மற்றப் படங்கள் இருக்கின்றன. சாப்பாடு படங்கள் மட்டும் இல்லை.

2013/10/26 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
fde.gif

வேந்தன் அரசு

unread,
Oct 26, 2013, 8:44:41 AM10/26/13
to தமிழ் சிறகுகள், mintamil

26 அக்டோபர், 2013 8:11 AM அன்று, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> எழுதியது:

ஐயோ! தஞ்சாவூர் ~ கும்பகோணம் நிமிஷத்துக்கு ஒரு பஸ். எக்கித்தள்ளிக்கிட்டுத்தான் ஏறுவாக. பசங்க, பொண்டுகள், கிழங்கள் டாக்ஸிலெ தான் போகணும்.

டேட்டிங்க கலாச்சார சீரழிவு என கவிதை எழுதறாங்க. அது யாருக்கும் தீங்க செய்யலை.
 ஆனால் இந்த தள்ளுமுள்ளு தான் ஒரு நாகரிக மனிதனா என அடையாளம் காட்டும்.  இதை பற்றி கவிதை எழுதுங்க மக்களே.

சீமையில் இரண்டு பேர் மட்டுமே பேருந்து நிலையத்தில் நின்றாலும் வரிசையில்தான் நிற்பார்கள்.

கோவை நீதி மன்ற வளாகத்தில் ஒரு தட்டச்சுககரியிடம் ஒரு பணிக்கக சென்றபோது அவர் தட்டச்சிக்கொண்டு இருந்தார். எனக்கு பின் இன்னொருவரும் வந்தார் அந்த தட்டச்சுநர் முடித்த போது எனக்கு பின்னால் வந்தவன் தான் கொணர்ந்தை நீட்டினான். நான் கேட்டேன் “ ஏனுங்க நீங்க வரும்போது நான் காத்திட்டு இருந்ததை பார்த்துட்டே நீங்க இபப்டி முந்துறீங்களே”
தன் பல் 32 தெரிய இளீத்தான்.

Nagarajan Vadivel

unread,
Oct 26, 2013, 8:58:36 AM10/26/13
to மின்தமிழ்
உ.பி க்கும் தமிழ் நாட்டுக்கும் அரசியல் அடிப்படையே வேறு வேறு

உ.பிக் காரன் பாக்காததை நம்புவான்

தமிழ்நாட்டுக்காரன் இல்லாததை நம்புவான்

இந்தியாவின் பல் பிரதமர்களின் மாநிலம் ஏன் இப்படிச் சாலை வசதி இல்லாமல் என்று கேட்டால் சாலை போட்டுக்கொடுத்து அவன் நகருக்கு வந்து பொது அறிவு மூலம் அரசியல் விழிப்புணர்வு பெற்றால் கதை கந்தலாகிவிடும் என்ற அச்சம் அங்கே

இங்கே அழகான ரோசாக்கலரும் மனங்கவரும் அடுக்கு மொழியையும் கேக்காம வாக்குப்போடாத சனம் தமிழ் நாட்டில் அவய்ங்களை எல்லாம் நேரில் சந்திக்க உடலைக் குலுக்காமல் அரசியல் தலைவர்கள் பயணம் செய்ய சாலைகள் வேண்டியிருப்பது இங்கே.

ஏதோ மக்கள்மேல் அன்பு கொண்டு போட்டதல்ல இந்தச் சாலைகள்

வம்பாண்டி

2013/10/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ஹாஹா, வேந்தரே, இந்தப் போக்குவரத்து விஷயத்தில் தமிழ்நாட்டை அடிச்சுக்க மற்ற எந்த மாநிலத்தாலும் முடியாது. எங்களுக்கு எப்போவுமே புரியும்.  சொல்லப் போனால் உங்க யு.எஸ். கூட இதிலே போட்டி போட முடியாது.  :))))))  மும்பை பெஸ்ட் பேருந்துப் போக்குவரத்தைத் தவிர. அதுவும் மும்பையில் மட்டுமே.  ஆனால் தமிழ்நாட்டிலோ ஒவ்வொரு மூலையும் இணைக்கப் பட்டுள்ளது.  இதை ரொம்ப வருடங்களாகச் சொல்லி வருகிறேன்.  அடுத்தது கர்நாடகம்.  மலைகளில் எல்லாம் மக்கள் போக்குவரத்துக்காக மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  உடுப்பி செல்கையில், மூகாம்பிகை கோயில் செல்லக் கொல்லூர் போகும்போது, சிருங்கேரி செல்கையில், ஹொரநாடு அன்னபூரணியைப் பார்க்கப் போகையில் இத்தகைய மினி பேருந்துகளிலேயே பயணித்தோம்.  என்ன ஒரு வித்தியாசம் என்றால் அங்கே எல்லாம் வெளி மாநிலத்தவருக்கு மரியாதை கொடுப்பாங்க.  எங்களைப் பார்த்ததுமே அவங்க நின்று கொண்டு எங்களைப் பேருந்தில் ஏற்றிய பின்னரே ஏறுவார்கள். இறங்கும்போதும் அப்படியே.  கண்டக்டருக்கு யாரானும் எச்சரிக்கையும் கொடுப்பாங்க.  அனைத்து கிராமத்து மக்களுக்கும் ஓரளவாவது ஹிந்தி தெரிகிறது.  எதனால் தெரியுமா? நவோதயா பள்ளிகள் இல்லாத கிராமமே கிடையாது அங்கெல்லாம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Oct 26, 2013, 9:18:12 AM10/26/13
to mintamil
குஜராத்தில் அப்படி இல்லை. கோண்டால் மஹராஜாவின் உயிலே மக்கள் நலம் பேசுது. அதற்கு பணம் போடுது. ஜூனகட் நவாப் பாகிஸ்தானுக்கு ஓடினார். ஆனால், பழங்குடிகளுக்கும் சிங்கங்களுக்கும் அவர் தான் பாதுகாப்பு. ஜாம் சாகிப் மிகவும் மக்கள் நல்ம் நாடியவர். ஏன் பரோடா மஹராஜா படிக்காத மேதை. வெள்ளைக்கரனை தட்டி வைத்தவர்.
2013/10/26 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Subashini Tremmel

unread,
Oct 26, 2013, 10:53:55 AM10/26/13
to மின்தமிழ், Subashini Tremmel
பதிவும் விரிவான விவரணையும் அருமையாக உள்ளது.

சுபா

2013/10/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 26, 2013, 10:55:54 AM10/26/13
to மின்தமிழ்

எல்லாம் இறைவன் செயல்.. கிட்டத்தட்ட பேராசிரியர் சொல்வது போல் அட்வெஞ்சரஸ் ட்ரிப்பாக இருக்கும் போலிருக்கே...

2013/10/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
                                     
Nagarajan Vadivel

unread,
Oct 26, 2013, 12:18:18 PM10/26/13
to மின்தமிழ்
உ.பி க்கும் தமிழ் நாட்டுக்கும் அரசியல் அடிப்படையே வேறு வேறு

உ.பிக் காரன் பாக்காததை நம்புவான்

தமிழ்நாட்டுக்காரன் இல்லாததை நம்புவான்

இந்தியாவின் பல் பிரத்மர்களின் மாநிலம் ஏன் இப்படிச் சாலை வசதி இல்லாமல் என்று கேட்டால் சாலை போட்டுக்கொடுத்து அவன் நகருக்கு வந்து பொது அறிவு மூலம் அரசியல் விழிப்புணர்வு பெற்றால் கதை கந்தலாகிவிடும் என்ற அச்சம் அங்க்ர்ர்

இங்கே அழகான ரோசாக்கலரும் மனங்கவரும் அடுக்கு மொழியையும் கேக்காம வாக்குப்போடாத சனம் தமிழ் நாட்டில் அவய்ங்களை எல்லாம் நேரில் சந்திக்க உடலைக் குலுக்காமல் அரசியல் தலைவர்கள் பய்

2013/10/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

கி.காளைராசன்

unread,
Oct 26, 2013, 9:04:59 PM10/26/13
to mintamil
அம்மையார் அவர்களுக்கு வணக்கம்.

ஆயோத்திக்கான ஆன்மிகச் செலவு அருமை.
பேசாமக் கொள்ளலாம தொடர்வண்டியிலேயே பயணம் செய்திருக்கலாமோ? இரண்டுநாள் கூடுதலா ஆனாலும் நிம்மதியாகப் போய் வரலாம்.

அன்பன்
கி.காளைராசன்

2013/10/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

vishalam raman

unread,
Oct 27, 2013, 2:25:08 AM10/27/13
to mint...@googlegroups.com
அன்பு கீதா நேரில் நானும் வந்து அனுபவிப்பது போன்ற பிரமை .நல்ல வர்ணனை .கண்னனைப்பற்றி எழுதி முடிந்தவுடன்  ஸ்ரீ ராமன் உங்களை அயோத்திக்கு அழைத்திருக்கிறான் மேலும் படிக்க ஆவலாக இருக்கிறேன் 

2013/10/27 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Rathinam Chandramohan

unread,
Oct 27, 2013, 4:13:13 AM10/27/13
to mint...@googlegroups.com
பதிவும் விரிவான விவரணையும் அருமையாக உள்ளது.

2013/10/27 vishalam raman <rvis...@gmail.com>

--
Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Geetha Sambasivam

unread,
Oct 29, 2013, 12:11:21 AM10/29/13
to மின்தமிழ்

அயோத்தியை நோக்கி! சரயு நதிக்கரையில்!

சாலைகள் எல்லாம் நம்ம தமிழ்நாட்டின் பிரபலமான மவுன்ட்ரோடையும், நூறடிச் சாலையையும் விட அகலமானது.  அப்படி இருக்கையிலேயே பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலைமை.  அதுவும் சுங்கச் சாவடி அருகே மிக மட்டமான சர்வீஸ் ரோடு.  நாங்க அந்த சர்வீஸ் ரோடில் போயிருக்கணும்.  ஆனால் ஓட்டுநர் பாலத்தின் மீது போனார்.  சரி, வடக்கே போய்த் திரும்பணுமோனு நினைச்சோம்.  சற்று நேரத்தில் ஒரு பெரிய ஆற்றுப் பாலம்.  கங்கை என்றார் ஓட்டுநர்.  அங்கே எப்படி கங்கை வந்தது?  பூகோள ரீதியாக வாய்ப்பே இல்லையே எனத் தோன்றினாலும் திக்குத் திசை புரியாமல் என்னத்தை சொல்வது? பாலம் தாண்டியும் அயோத்தி வந்தபாடில்லை.  லக்னோவில் இருந்து இரண்டரை மணி நேரம் என்றார்கள். இப்போ மூன்று மணி நேரம் ஆகிவிட்டது.  ஓட்டுநரை வண்டியை நிறுத்திவிட்டு அக்கம்பக்கம் விசாரிக்கச் சொன்னோம்.  அரை மனதாக அவர் இறங்கிப் போய் விசாரித்து வந்தார்.  பின்னர் சற்றுத் தூரம் சென்று வலப்பக்கமாகத் திரும்பினார். வண்டி தென் கிழக்கே சென்றது.  சரியான பாதையில் செல்லவில்லை என்பதையும் ஓட்டுநர் தவறாகச் சென்று விட்டதையும் புரிந்து கொண்டாலும் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை.  அரைமணியில் ஊர் வந்துவிட்டது.  ஆனாலும் இருட்டு அப்பி இருந்தது.  எங்கேயும் தெரு விளக்குகளே இல்லை.  இதுவே நம்ம தமிழ்நாடு என்றால் இம்மாதிரி பிரசித்தி பெற்ற ஒரு முக்கியமான இடத்தை இருளில் மூழ்க அடிப்பார்களா என்றும் தோன்றியது. அந்த இருட்டிலும் எங்கள் வண்டியைப் பார்த்த சிலர், "ஜெய் சியாராம்!" என கோஷமிட்டனர்.  நாங்களும் "ஜெய் சீதா ராம்" என பதிலுக்கு கோஷமிட்டோம்.  அங்கிருந்த ஒருவரிடம் நல்ல தங்குமிடம் பற்றி விசாரித்ததில் அவர் தானே வந்து வழிகாட்டுவதாகச் சொல்லித் தன்னுடன் வந்த ஒரு சிறுவரை வண்டியில் ஏற்றினார்.  ஓட்டுநருக்குச் சம்மதமில்லை. அவர் தன் வண்டி முதலாளி மூலம் யாரோ வழிகாட்டியின் பெயரை வாங்கி வைத்திருந்ததால் அவரிடம் தான் செல்வேன் எனப் பிடிவாதம் பிடித்தார். 

எங்கள் வண்டியைத் தொடர்ந்து வந்த அந்த ஆள் கடைத்தெருவுக்கு ஓட்டச் சொல்லி அங்கிருந்த ஒரு ஆளைக் காட்டினார்.  இவர் தான் நீங்கள் தேடி வந்த வழிகாட்டி என்றார்.  ஓட்டுநருக்கு அப்போதும் நம்பிக்கை இல்லை.  ஆனால் அந்த வழிகாட்டி அந்தச் சிறுவனை இறக்கிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்து வரும் வழியெல்லாம் விளம்பரம் செய்திருந்த ராம்ப்ரஸ்த் என்னும் ஹோட்டலுக்கு ஓட்டும்படி கூறினார்.  வண்டியும் அங்கே சென்றது.  பாதையெல்லாம் குண்டும், குழியும்.  மழை வேறு விட்டு விட்டுப் பெய்ததால் சேறு, சகதி. எங்கெங்கு காணினும் குடிசைகள், மண் குடிசைகள். மேலே தார்பாலின் மட்டும் போடப்பட்ட தாற்காலிக வீடுகள்.  அங்கேயும் ஆடு, மாடுகள். எல்லாவற்றையும் தாண்டி சரயு நதியின் தென் கரையில் அமைந்திருந்த ராம்ப்ரஸ்த் ஓட்டலுக்குச் சென்றது.  சாமான்களை இறக்காமல் உள்ளே சென்று அங்கே ரிசப்ஷனில் இருந்த நபரிடம் பேசினோம்.  முதலில் அறையைக் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு அறையைக் காட்டினார். அறை வசதியாக இருந்தது.  வாடகை அவர் அதிகம் சொல்ல, நாங்கள் மறுக்க, பேரம் நடந்து கடைசியில் ஏ.சி. வேண்டாம்னு சொன்னதாலே ஏ.சி. இல்லா அறை வாடகைக்கு ஒத்துக் கொண்டார்.  அப்போத் தான் கண்டிப்புக் காட்டினாரே ஒழிய மிகவும் பணிவாகவும், அன்பாகவும், மரியாதையாகவும் கடைசி வரை இருந்தார்.

வட மாநிலங்களில் ஹோட்டலில் அறை எடுத்தால் நாம் மாலை ஆறு மணி, இரவு பத்து மணி, நள்ளிரவு பனிரண்டு மணி, காலை இரண்டு மணி, மூன்று மணி என்று போய் அறை எடுத்தாலே அன்று மதியம் பனிரண்டு மணியோடு ஒரு நாள் கணக்குப் பண்ணி முடிந்து விடும்.  நண்பகல் பனிரண்டுக்குப் பின்னர் மறுநாள் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.  அதோடு அறை வாடகையை முன்னாலேயே கொடுத்துவிட வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம் போல இன்று மதியம் மூன்று மணிக்கு வந்தால் நாளை மதியம் மூன்று மணி வரை என்ற கணக்குக் கிடையாது.  அதோடு இங்கே அட்வான்ஸ் என நூறு ரூபாய் கொடுத்தால் கூட வாங்கிக் கொண்டு கடைசியில் பில் செட்டில் செய்தால் போதும்.  ஆனால் வட மாநிலங்களில் இன்றைய தினம் மதியம் பனிரண்டு மணிக்கு நாம் கொடுத்த அட்வான்ஸ் முடிந்து நாம் ஒரு மணி நேரம் கூடத் தங்கினாலும் அடுத்த ஒரு நாள் கட்டணத்தைக் கொடுக்க வேண்டும். நாம் அந்த நாள் தங்குவதெனில் அந்த நாளுக்குரிய கட்டணத்தையும் அன்றே மாலைக்குள் வாங்கிக் கொண்டு விடுவார்கள்.  ஆகவே நாங்கள் இரண்டு நாட்கள் தங்கப் போவதாக முன் கூட்டியே சொல்லிவிட்டு இரண்டு நாள் வாடகையில் கொஞ்சம் போல் நிறுத்திக் கொண்டு மற்றதை முன்பணமாகச் செலுத்தினோம்.  கீழேயே உணவகம் இருப்பதால் அங்கே போய் ஆர்டர் செய்தால் சூடாக உணவும் கிடைக்கும்.  மற்றபடி பால், காபி, டீ என எல்லாமும் கிடைக்கும்.  ரூம் செர்விசும் உண்டு என்றனர். 

சரயு நதிக்கரையில். இங்கே அவ்வளவு ஆழமோ, வேகமோ இல்லை.  அயோத்தி நகர் இதன் கரையில் அமைந்துள்ளது.

படகில் ஏறும் மக்கள். ஓரளவுக்கு சுத்தமாக இருந்தாலும் ஹரித்வார் கங்கையின் படித்துறையைப் போல் அவ்வளவு சுத்தம் என்று சொல்ல முடியவில்லை.  நம் மக்கள் எங்கே சென்றாலும் துணி, ப்ளாஸ்டிக் பைகள், வளையல்கள், மாலைகள், சாப்பாட்டுப் பொட்டலங்கள் எனப் போட்டுவிடுவார்களே! :(

நாங்கள் டிரைவரை செட்டில் செய்து அனுப்பிவிட்டு அறைக்கு வந்து சாமான்களை வைத்து விட்டுக் கை, கால் கழுவிக் கொண்டு மணி ஏழேகால் ஆகிவிட்டபடியால் கீழே போய் ஒரேயடியாக இரவு உணவை முடித்துக்கொள்ள நினைத்தோம்.  அதுக்குள்ளே வழிகாட்டி நபர் ஒரு ஆட்டோக்காரரையும் அழைத்து வந்து மறுநாள் செல்லவேண்டிய பயணத்திட்டத்தைக் கேட்டார்.  அவரைக் காலை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டு நாங்கள் கீழே சென்று உணவருந்தினோம்.  அருமையான உணவு.  தந்தூர் ரொட்டியும் ஆலு மட்டரும் சொல்லி இருந்தோம். தந்தூர் ரொட்டி நல்ல பெரிதாக, மிருதுவாக மிக அருமையாக இருந்தது.  சப்ஜியில் காரமும் அதிகம் இல்லை.  மசாலாப் பொருட்களோ, வெங்காயம், பூண்டோ இல்லாமலேயே அருமையாக இருந்தது.  அதற்குப் பின்னர் பாலோ, லஸ்ஸியோ சாப்பிட்டிருக்கலாம்.  மதியம் முழுவதும் காஃபி, டீ சாப்பிடவில்லையே என காஃபி ஆர்டர் செய்தோம்.  அதுதான் நாங்க செய்த தப்பு.  நம்ம ரங்க்ஸ் மு.ஜா. மு. அண்ணாவாகத் தனக்குக் காஃபி வேண்டாம் என அறிவிப்புச் செய்துவிட்டார்.  கொண்டு வந்த காஃபியில் இருவரும் பாதிப்பாதி என முடிவு செய்து இரண்டு கப் கொண்டு வரச் சொல்லி அவருக்குப் பாதி கொடுத்தேன்.  அதுவே இன்ஸ்டன்ட் காஃபி.  அதையும் சரியாகப் போடவில்லை.  பால் காயவில்லை. அதோடு காபியில் இன்ஸ்டன்ட் போட்டுக் கலந்ததும் மறுபடி மேலே மோரில் சாட் மசாலா தூவுவது போல இன்ஸ்டன்ட் பவுடரைப் போட்டுக் கொடுக்கிறார்கள். நல்ல உணவு சாப்பிட்டதுக்கு திருஷ்டியாக அமைந்தது என நினைத்துக் கொண்டே சாப்பிட்டுவிட்டு பில்லைக்கொடுத்துவிட்டுக் காலை ஆறு மணிக்கு அறைக்குத் தேநீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பி வந்து உடனடியாகப் படுத்து விட்டோம்.  உறவினர், பையர், பெண் எல்லாரிடமிருந்தும் அலைபேசி அழைப்புக்கள் வரப் பேசிவிட்டு ஒன்பது மணிக்கு மேல் தூங்கி விட்டோம். மறுநாள் காலை எழுந்து நான் மட்டும் அறையிலேயே குளித்துவிட்டேன்.  அதுக்குள்ளே வழிகாட்டி வந்து பார்த்துவிட்டு நாங்கள் எழுந்திருக்கவில்லை எனச் சென்றுவிட்டதாக ரிசப்ஷனில் சொல்லவே அவரை அலைபேசியில் ஆட்டோவுடன் வரும்படி அழைத்தோம்.  சரயு நதியில் குளித்து அன்று பித்ரு த்ர்ப்பணம் செய்ய நினைத்திருந்தார் ரங்க்ஸ்.  அதற்கேற்றாற்போல் அன்று துலாமாசப் பிறப்பும் கூட.  ஆகவே சரயு நதிக்குச் செல்லத் தயாரானோம்.

Geetha Sambasivam

unread,
Oct 29, 2013, 12:14:12 AM10/29/13
to மின்தமிழ்
பாராட்டுத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

@காளைராஜன்,

ரயிலில் சென்றிருக்கலாம் தான்.  ஆனால் முக்கியப் பிரச்னை உணவு.  ரயிலில் கொண்டு வந்து தரும் உணவோ, ஸ்டேஷன்களில் கிடைக்கும் உணவோ முன்போல் தரமானவையாக இல்லை.  மூன்று நாட்களுக்குச் சேர்ந்தாற்போல் உணவு எடுத்துச் சென்று உண்ணும் அளவுக்கு இப்போது உடல்நிலை இல்லை.  அதோடு கழிவறைப் பிரச்னையும் கூட.  மூன்று நாட்கள் தொடர்ந்து ரயிலில் சென்றால் இன்ஃபெக்‌ஷன் ஆகலாம் என மருத்துவரும் கூறியதால் ரயிலில் ஏ.சி. கட்டணத்தைவிடக் கொஞ்சம் தான் விமானக் கட்டணத்தில் அதிகம் செலுத்தி வாங்கினோம்.  உடல்நிலையைக் கருதியே இந்த முடிவு எடுத்தோம்.

நியாண்டர் செல்வன்

unread,
Oct 29, 2013, 2:14:19 AM10/29/13
to செல்வன் நியாண்டர்

இவ்ளோ பெரிய அட்வென்ச்சர் செய்துட்டு வந்திருக்கீங்களா? குட். படித்துவிட்டு எனக்கும் இங்கெல்லாம் போகணும்னு ஆசையா இருக்கு. ஆனால் எங்கே போகபோகிறேன்? படிச்சுபார்த்தாவது ஆசையை தீர்த்துக்கவேண்டியதுதான்

Geetha Sambasivam

unread,
Oct 30, 2013, 5:32:15 AM10/30/13
to மின்தமிழ்

Wednesday, October 30, 2013

அயோத்தியை நோக்கி!

சரயு நதிக்கரையில் துலாமாசத் தர்ப்பணம் முடித்துக் கொண்டு அங்கிருந்த ஒரு பண்டிட் மூலம் கோதான சங்கல்பம் செய்து கொண்டு அவருக்கு தக்ஷிணையும் கொடுத்தோம்.  பின்னர் அங்கிருந்து கிளம்பி அயோத்தி நகரில் ஶ்ரீராமன் சம்பந்தப்பட்ட முக்கிய இடங்களைப் பார்க்கச் சென்றோம்.  மேலே காணப்படுவது ஶ்ரீராம் தர்பார் என்னும் சின்னஞ்சிறு கோயிலின் நுழைவாயில்.  நாம் சந்நிதி என்பதை அங்கே தர்பார் என்கின்றனர்.

ஶ்ரீராமர், தன் குடும்பத்தோடு.  வெளிச்சமும் அதிகம் அதோடு விளக்குகள் வேறே என்பதால் படம் தெளிவாக வரவில்லை. அடுத்துக் காண்பது சீதா கி ரசோயி என்னும் சீதையின் அந்தப் புரச் சமையலறை.  அங்கே ஒரு சந்நியாசி இருந்தார்.  அவருக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை;  அல்லது பேச மாட்டார் என எண்ணுகிறோம்.  ஆனால் இங்கெல்லாம் நாங்க இரண்டு பேரும் கோயிலை நிர்வகிப்பவர்களும் தான் இருந்தார்கள்.

மஞ்சள் உடை உடுத்தி இருப்பவர் தான் சந்நியாசி.

சமையல் பாத்திரங்கள்.  இப்போ இதிலே சமைக்கிறாங்களானு தெரிஞ்சுக்க ஆவல்.  ஆனால் சொல்ல யாரும் இல்லை.  வழிகாட்டிக்கும் இது பத்தித் தெரியலை. :(

வரவங்க சாப்பிடறதுக்கு அடுக்கி வைச்சிருந்த இலைக்கட்டுகள்.  இங்கே கொஞ்சம் வெளிச்சம் கம்மி என்பதால் ஓரளவுக்குப் படம் வந்திருக்குனு நினைக்கிறேன்.  அடுத்து கனக பவனம் போகலாம்.  ஆஞ்சநேயரைப் பார்க்கலாம்.  நாளைக்கு.  சரியா?

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 30, 2013, 5:54:45 AM10/30/13
to மின்தமிழ்
அருமையான படங்கள் அம்மா!!. பகிர்வுக்கு மிக்க நன்றி..சந்நியாசியின் அருகில் பாத்திரங்கள் மிகப் பெரியதாக இருக்கின்றன (அல்லது தெரிகின்றன). இதை எப்படி அடுப்பில் ஏற்றுகிறார்கள்???...

2013/10/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Oct 30, 2013, 5:57:55 AM10/30/13
to thamizhvaasal, மின்தமிழ்
1. ஓட்டுநர் தவறாகச் சென்று விட்டதையும் புரிந்து கொண்டாலும் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை.
~ என்னே ராணி தந்திரம்!
2.அந்த இருட்டிலும் எங்கள் வண்டியைப் பார்த்த சிலர், "ஜெய் சியாராம்!" என கோஷமிட்டனர்.  நாங்களும் "ஜெய் சீதா ராம்" என பதிலுக்கு கோஷமிட்டோம்.
~ உத்தரப்பிரதேசத்தை நான் குறை கூறினாலும், அவர்களின் 'போலா பாலா' என்னை கவர்ந்தது. சரியான பத்தாம் பசலி மாநிலம். இராமபக்தி அயோத்தியில் தொத்திக்கொள்ளும். அகஸ்மாத்தாக பிரதாப்கஞ்ச் கலைக்டர் எங்களை அயோத்திக்கு அழைத்துச்சென்றார். சரயூ ஒரு மோஹினி.
3. நம்ம கீதாச்சரியன் டாக்டர் வெங்கடகிருஷ்ணன் குடும்பம் நிர்வஹிக்கும் ராமர் கோயிலுக்குப் போனீர்களோ?

4.  நம்ம ரங்க்ஸ் மு.ஜா. மு. அண்ணாவாகத் தனக்குக் காஃபி வேண்டாம் என அறிவிப்புச் செய்துவிட்டார். 
~ நல்ல மனுஷன். ஸ்வபாவம் அப்டி. எல்லாம் பொம்மனாட்டிகள் சொல்லிக்கொடுக்கிறது தான்.
பிற பின்னர்.

2013/10/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

Innamburan S.Soundararajan

unread,
Oct 30, 2013, 5:58:42 AM10/30/13
to mintamil
இறக்கி ஏற்றுவார்கள்.
இ ஹி ஹி
2013/10/30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 30, 2013, 6:02:26 AM10/30/13
to மின்தமிழ்
:-)))))))))))))!!!!!!

2013/10/30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 31, 2013, 4:57:49 AM10/31/13
to மின்தமிழ்

அயோத்தியை நோக்கி! தொடர்ச்சி

சீதா கி ரசோயியில் பார்த்த குருமார்களின் படத்துக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த கதை மனதைக் கவர்ந்தது.

ஒரு விஷயம் முக்கியமாச் சொல்லணும். இங்கெல்லாம் செல்வதற்கு எல்லா இடங்களுக்கும் ஆட்டோ வராது. ஆட்டோ ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று அங்கேயே நிறுத்தப்படும்.  அதுக்கப்புறமாக் குறைந்தது அரைகிலோ மீட்டரிலிருந்து ஒரு கிலோமீட்டர் வரை நடந்தே செல்ல வேண்டி இருக்கும்.  நிறைய நடை.  ஆட்டோவோ!  அதை ஆட்டோனு எல்லாம் சொல்ல முடியாது. டில்லியில் இருக்கிறவங்களுக்கு பட்பட்டினு ஒண்ணு பழக்கமாகி இருக்கும்.  இந்த ஆட்டோவுக்கும், பட்பட்டிக்கும் இடைப்பட்டது இது. ஒரே சத்தம்.  இதிலே ஆட்டோ ஓட்டுநர்கள் பாட்டு வேறே போட்டுடுவாங்க.  தெருவில் பின்னால் வண்டி வந்தாலோ, எதிரே வண்டி வந்தாலோ கண்கள் தான் கவனம் வைச்சுக்கணும்.  ஆனால் இந்த ஆட்டோக்கள் போடும் சப்தத்தில் முன்னாலும் பின்னாலும் வர வண்டிங்க தானாவே ஒதுங்கிடும்னு வைச்சுக்குங்க. :P  இந்த அழகிலே டிரைவருக்கு இருபக்கமும் இரண்டு பேர் உட்கார, உள்ளே மெயின் சீட்டில் எதிரும்புதிருமாக நாலும், நாலும் எட்டுப்பேர் உட்கார்ந்துக்கறாங்க.  இதைத் தவிரப் பின் சீட்டில் எதிரும் புதிருமாக ஆறுபேர் உட்கார்ந்துக்கறாங்க. கிட்டத்தட்டச் சென்னையில் டாடா டாக்சி என்ற பெயரில் ஓடும் வண்டியைப் போல் இருக்கை வசதி.  ஆனால் ஆட்டோ போல் அமைப்பு. ஆட்டோக்சினு சொல்லலாமோ!

இது முழுதும் நமக்கு மட்டும் வேண்டும்னா வண்டி ஓட்டுநரிடம் இதுக்காக சம்பிரதாயமான பேச்சு வார்த்தையில் பேசி முடிக்கணும்.  ஹிஹிஹி, இந்த ட்ரிப்பில் நாங்க ரொம்ப ரசிச்சது இது.  ஆட்டோக்காரரைக் கூப்பிட்டு நீங்க வரீங்களானு நாம கேட்டதுமே, அவங்க நம்ம கிட்டே உங்களுக்கு மட்டும் தனியா வர முடியாது. மத்த சவாரிங்களும் வருவாங்கனு சொல்லுவாங்க. அதுக்கு நாம் "இதை நாங்க ரிசர்வ்" செய்துக்கறோம்னு சொல்லணும்.  ரிசர்வ் கூடக் கிடையாது.  ரிஜர்வ்! :))) அப்போ ஓட்டுநர், தோ போலியே ந பாபு னு சொல்லுவார்.  மறுபடி நாம ரிஜர்வ் என்பதை உறுதி செய்யணும். அதுக்கப்புறமா இந்த வண்டியிலே நாம் ஏறிக்கலாம்னும், வேறே யாரையும் ஓட்டுநர் ஏத்த மாட்டார்னும் தெரிஞ்சுக்கலாம். :)) இதை வந்த அன்னிக்குக் காரிலே வந்ததாலே கவனிச்சு வைச்சுக்கலை.  அப்புறமாத் தான் புரிஞ்சது.

ஏற்கெனவே சாலைகள் மோசம்.  இதிலே இந்த வண்டிப் பிரயாணம் வேறே. வண்டி குலுக்கின குலுக்கல்லே என்னோட வயிறு உதரவிதானத்துக்கு மேலே வந்திருக்குமோனு சந்தேகம்.  இன்னும் போகலை! சாப்பாடெல்லாம் சாப்பிட்டுட்டுப் போனா அவ்வளவு தான். நல்ல வேளையா நாங்க காலம்பர குடிச்ச ஒரே ஒரு டீயோட கிளம்பி இருந்தோம்.  சரயு நதிக்கரையிலிருந்து ராம் தர்பார், சீதாகி ரசோயி பார்த்துட்டு, கோசலை, சுமித்திரை ஆகியோரின் அந்தப்புரங்களையும் பார்த்தோம். பின்னர்  தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடத்தை தரிசித்தோம்.  படங்கள் கீழே.  அதன் பின்னர் ஶ்ரீராம ஜென்ம பூமி பார்க்க வேண்டி ஆட்டோவில் கிளம்பினோம்.  ஶ்ரீராம ஜென்ம பூமியைக் காலை பதினோரு மணிக்குள் தான் பார்க்க முடியும்.  அதன் பின்னர் பகல் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள்.  நாங்கள் சென்ற சமயம் பதினெட்டாம் தேதி அங்கே ஏதோ கிளர்ச்சி என்பதால் அன்று காலை பதினோரு மணிக்கே ராமஜென்மபூமி செல்லும் சாலைகளை மூடப்போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  ஆகவே ஆட்டோ ஓட்டுநரும், வழிகாட்டியும் எங்களை தாக சாந்தி செய்து கொள்ளக் கூட விடவில்லை.  இதை முடிச்சுட்டு அப்புறமா எங்கே வேணாலும் போய்க்குங்க என்று சொல்லிவிட்டார்கள். ஆட்டோ ராம ஜென்ம பூமி நோக்கிச் சென்றது.

அதோடு இல்லாமல் ஶ்ரீராமன் பட்டாபிஷேஹம் செய்து கொண்டப்போ அவருடன் வந்த வாநர சேனைகள் எல்லாம் அயோத்தி சுற்று வட்டாரங்களிலேயே தங்கிட்டாங்க போல!  எங்கெங்கு காணினும் வாநரங்களடா! கையிலே எதுவும் கொண்டு போக முடியாது.  நாம் கொண்டு போகும் எந்தப் பொருளையும் ஆட்டோவில் (செருப்பைக் கூட) விட்டுட்டுப் பார்த்துக்கோப்பானு சொல்லிட்டுப் போக முடியாது.  அவங்களே மறுத்துடறாங்க.  வாநரங்கள் சர்வ சகஜமா உலவிட்டு இருக்குங்க. யாரையும் ஒண்ணும் பண்ணலைனாக் கூடக் கையிலே எதையும் எடுத்துட்டுப்போக யோசிக்க வேண்டி இருக்கு.

அங்குள்ள பிரபலமான ஆஞ்சநேயர் கோயிலின் ஆஞ்சநேயர்.

ராமர், சீதை, லக்ஷ்மணனோடும் ஆஞ்சநேயனோடும்

எல்லா இடங்களிலும் ஶ்ரீராமர் இப்படியே காணப்படுவதால் எது எங்கே எடுத்ததுனு கொஞ்சம் புரியாமல் போகிறது. :))))

இது சகல பரிவாரஃங்களோடு இருப்பதாகச் சொல்கின்றனர்.  கீழே சின்னச் சின்னதாக மற்ற மூர்த்தங்கள்.

புத்ர காமேஷ்டி யாகம் நடந்த இடத்தில் உள்ள சந்நிதி.  இங்கே குழந்தை இல்லாதவர்கள் வந்து வேண்டிக் கொண்டு ஆண்டு முழுவதுக்கும் பாயசம் நிவேதனம் செய்ய 200 ரூ வசூலிக்கின்றனர்.  குழந்தை பிறந்ததும், இங்கே கொண்டு வந்து பிரார்த்தனையை மணி கட்டி நிறைவேற்றுகின்றனர். மணிகள் கட்டியது படம் சரியாக வரலை.  பிரதிபலிப்பு அதிகமாப் போயிருக்கு. டெலீட் செய்துட்டேன். :(
அரசக் கோலத்தில் தசரதன் அமர்ந்திருக்க, ரிஷ்ய சிருங்கர், வசிஷ்டர், கெளதமர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்கள் சூழ நடத்தப்பட்ட புத்ர காமேஷ்டி யாகத்தில் பாயசக் கிண்ணத்தோடு வரும் புருஷன் படத்துக்கு நடுவே சிவப்பு உடையில். 

Innamburan S.Soundararajan

unread,
Oct 31, 2013, 5:07:38 AM10/31/13
to thamizhvaasal, மின்தமிழ்
ஆஹா! ஆட்டோக்சினு சொல்லலாமே! உதரவிதானத்தைப் பிடிச்சுக்கலாமே. எங்களுக்கெல்லாம் இதெல்லாம் அத்துபடி. ஆனாலும் கலைக்டர் பாண்டே என்ற பிராமண கலைக்டர் கைடு ஆக  கூட வரவே, ஜமாய்ச்சுட்டோம், ஜமாய்ச்சு.
2013/10/31 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

Sk Natarajan

unread,
Oct 31, 2013, 2:29:49 PM10/31/13
to தமிழ் வாசல், தமிழ்ச் சிறகுகள், மின்தமிழ்
மிகவும் அருமையான பயணம்
உங்களது ஒவ்வொரு வரிகளும், நாங்களும் உடன் பயணிப்பது போன்ற உணர்வினைத் தருகின்றது .
தொடர்கின்றேன் ........

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2013/10/31 Geetha Sambasivam <geetha...@gmail.com>

meenavan2

unread,
Nov 1, 2013, 12:29:02 AM11/1/13
to mint...@googlegroups.com, மின்தமிழ்

அன்பிற்கினிய சகோதரி சுபா அவரகளே- வணக்கமும் தாங்கள் குழும உறுப்பினர்களுக்கு ஆச்சரியம் தரும் வண்ணம் மேற்
கொண்ட பயண அனுபவங்களைத் தெரிவித்தமைக்கு நன்றியும்.
108 வைணவத் திருத்தலங்கள் பற்றி நான் எழுதி வரும் கவிதைத் தொடருக்குத் தங்களின் கருத்து ஒருமுறை வந்ததோடு
பின்னர் என் இழைக்குள் தங்களைக் காண்வில்லை.அதன் காரணம் இப்பொழ்துதான் அறிந்தேன்.தங்களின் பயணம் காரணம்
என்று அறிந்தேன்.இனித் தங்கள் பகிரவுகளை இழையில் காண்லாக் அல்லவா?

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

On Thursday, October 24, 2013 10:11:09 AM UTC+5:30, myself wrote:

எல்லாருக்கும் வணக்கம்!

முதல்லே எல்லார் கிட்டே இருந்தும் மன்னிப்பு வேண்டுகிறேன்.  அதுவும் என் உடன் பிறவாச் சகோதரி ரேவதியை மிகவும் தவிக்க வைத்ததுக்கு, மீண்டும், மீண்டும் மன்னிப்பு.  இந்தப் பிரயாணத் திட்டம் போடும்போதே இணையத்துக்கு வர முடியாது என்பது தெரியும்.  அதே போல இணைய நண்பர்கள் கிட்டேயும் சொல்லாமல் போயிட்டு வந்ததும் ஒரு ஆச்சரியமாகக் கொடுக்க நினைச்சேன்.  ஆரம்பத்திலேயே ஒரு முடிவு (யோசிச்சுத் தான்) எடுத்துட்டா அதிலிருந்து மாறாமல் இருப்பது நமக்கு வழக்கமாச்சே.  அதனால் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போயிட்டும் வந்தாச்சு.

காட்டு வாழ்க்கை.  அதிக நடை.  போற இடத்திலே எல்லாம் செல்ஃபோன் சிக்னல் கிடைப்பதும் கஷ்டம். :))) கிடைச்சாலும் விட்டு விட்டு வரும். சாப்பாடும் முன்னைப் பின்னே தான்.  கூடிய வரை காட்டு வாழ்க்கைக்கு ஏற்றாற்போல பால், பழம், மோர் என்றே சாப்பாடு.   ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டுமே ஏதேனும் சிற்றுண்டி என இருந்து எல்லாம் வல்ல ஶ்ரீராமன் கிருபையில் அனைத்தையும் பூரணமாக முடித்துவிட்டு இன்று காலை வந்து சேர்ந்தோம்.

என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அஷ்வின் ஜிக்கும்
ரேவதிக்கும் மிகவும்  நன்றி.  அவரின் மன உளைச்சலுக்கு நான் பொறுப்பானது குறித்து வருத்தமா இருக்கு.  மேலும் மெயில்கள் மூலம் விசாரித்த ஶ்ரீராம், ஜீவி சார் மற்றும் யார்னு இனி தான் பார்க்கணும்.  நிறைய இருக்கிறதாலே இன்னும் பார்த்து முடியலை. எல்லாருக்கும் முன் கூட்டிய நன்றி.  ஓரளவுக்குத் தெரிஞ்சிருக்கும் எங்கே போனேன்னு.  அப்படித் தெரியாதவங்க நாளை வரை பொறுத்திருக்கவும்.

நாங்கள் சென்ற பாதைகள் அனைத்துமே!!!!!!!!!!!!

Geetha Sambasivam

unread,
Nov 3, 2013, 8:18:33 PM11/3/13
to மின்தமிழ்

அயோத்தியை நோக்கி! பணமூட்டையுடன் நாங்கள்! :))))

ராம ஜன்மபூமி செல்லும் வழியில் கட்டவிருக்கும் ராமர் கோயிலின் மாதிரியையும் கட்டிக் கொண்டிருக்கும் இடத்தையும் காணலாம்.  அதைப் படம் எடுக்க முடியவில்லை.  அங்கிருந்து ஆட்டோவில் கொஞ்சம் பயணித்து ஶ்ரீராமஜன்ம பூமிக்குச் செல்லும் பாதையை அடைந்தோம். ஆட்டோ நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு  கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்று வரிசையில் நிற்பதற்கான வாயிலை அடைய வேண்டும். அதற்கு முன்னர் நாம் கையில் கொண்டு போகும் சாமான்களை வைக்கும் லாக்கர்  உள்ளது.  அங்கே சென்றோம்.  ஶ்ரீராம ஜன்மபூமியைப் படம் எடுக்கக் கூடாது.  மொபைல்களும் அங்கே பயன்படுத்தக் கூடாது.  கைப்பைகளோ, அல்லது ப்ளாஸ்டிக் பைகளோ, துணிப்பைகளோ எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது.  வெறும் கையோடு தான் செல்ல வேண்டும்.

ஆகவே என்னோட கைப்பையை லாக்கர் வைத்திருக்கும் இளைஞரிடம் கொடுத்தேன்.  அதிலுள்ள பணங்கள், நகைகள் இருந்தால் எடுக்கச் சொன்னார். நகைகளே ஏதும் கிடையாது.  பணத்தை எடுத்தால் எங்கே வைச்சுக்கறது!  அங்கே பணமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தங்குமிடத்துக்கு அன்றைய வாடகையை அன்றே கொடுத்தாக வேண்டும். இன்று மதியம் பனிரண்டு மணி மேல் அரை மணி நேரம் தங்கினாலும் ஒரு நாள் வாடகையைக் கொடுத்தாக வேண்டும்.  மேலும் ஏடிஎம் எங்கே இருக்குனு தேட வேண்டி இருக்கும். அதெல்லாம் யோசித்துப் பணமாகவும் இருந்தது.  சரி சின்ன பர்ஸில் வைக்கலாம் என சின்ன பர்ஸை எடுத்தேன்.  அருகிலிருந்த பாதுகாப்புக் காவலர் அதையும் மறுத்தார்.  அதுவும் எடுத்துச் செல்லக் கூடாது என்றார். நம்ம ரங்ஸோ வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கார்.  பான்ட் போட்டிருந்தால் பான்ட் பாக்கெட்டில் வைக்கலாம். என்ன செய்வது? அதுக்குள்ளாகப் பையைத் திரும்பக் கொடுத்த லாக்கர் இளைஞன், "நிறையச் சில்லறை இருக்கு,  அதையும் எடுங்க", னு சொன்னார். கைப்பையே கனம் தாங்காத அளவுக்கு கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய்க்குச் சில்லறை வைத்திருந்தோம்.  ஆங்காங்கே தேநீருக்கு, காபி, பழங்கள் வாங்கினால் சில்லறை இல்லாமல் சிரமப் படும் எனப் பத்து ரூபாய்க் காசிலிருந்து எட்டணா வரை சில்லறை இருந்தது.

எல்லாவற்றையும் காலி செய்தேன்.  அதுக்குள்ளே மேல்துண்டை எடுத்தார் நம்மவர்.  அதிலே கொண்டு போன ரூபாய்களையும் போட்டுச் சில்லறையையும் போட்டோம். ஒரு மூட்டையாகக் கட்டினோம்.  கொஞ்ச நேரம் ரங்க்ஸ் தூக்கிக் கொண்டு வந்தார்.  வழியெல்லாம் கிட்டத்தட்டப்பத்து இடங்களில் பாதுகாப்புச் சோதனை. அவங்களைப் போல் ஐந்து மடங்கு நம் வாநரர்களின் பாதுகாப்பு.  பாதுகாப்புக் காவலர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரளமாகப் பதில் சொல்ல முடிந்தது.  ஆகையால் பண மூட்டையோடு செல்ல எங்களை அநுமதித்ததோடு அவங்களோட கவலையையும் தெரிவிச்சு, என் புடைவைத் தலைப்பில் வைத்து மறைத்துக் கொண்டு குரங்குகளிடமிருந்து பாதுகாப்பாகச் செல்லும்படியும் கூறினார்கள். சுற்றிச் சுற்றிச் சுற்றி வழி சென்று கொண்டே இருந்தது.  ஆங்காங்கே பாதுகாப்புச் சோதனை!  அதே கேள்விகள், அதே பதில்கள்!

கிட்டத்தட்ட மீண்டும் ஒரு இரண்டு கிலோ மீட்டர் அந்த வரிசைக்கான சுற்றுவழியில் சுற்றிச் சுற்றிச் சென்றதும் திடீர்னு  "இதோ ராமஜென்மபூமி" என்று காட்டி வணங்கச் சொல்கின்றனர். ஶ்ரீராமர் குழந்தை வடிவில் மிகச் சிறிய உருவத்தில் காணப்படுகிறார். சுற்றிலும் ராணுவப்பாதுகாப்பு.  ராஜா அல்லவா?  மெய்க்காவலர்கள் புடைசூழக் காவலில் இருக்கக் காண முடிகிறது.  ஒரு பண்டிட் அங்கே சுற்றிலும் காவலர்கள் புடை சூழ அமர்ந்திருக்கிறார்.  "போலோ,  ஶ்ரீராம்லாலா கி ஜெய் !" என்ற கோஷம் எங்கும் எழுந்தது. ஆம் இங்குள்ள ஶ்ரீராமரைக் குழந்தை என்பதால் "ராம்லாலா" என அழைக்கின்றனர்.  பளிங்கினால் செய்த சிலையில் தங்கத்தால் கோட்டிங் செய்திருப்பதாகச் சொல்கின்றனர்.  ஶ்ரீராமர் விக்ரஹம் இருக்கும் இடத்துக்கும் நாம் தரிசனம் செய்யும் இடத்துக்கும் குறைந்த பக்ஷமாக ஐம்பது அல்லது அறுபது அடிக்கு மேலேயே இருக்கும்.  ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட பல்லக்கில் வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர். 

சற்று நின்று தரிசிக்கலாம்.  ஒண்ணும் சொல்வதில்லை என்றாலும் அடுத்தடுத்து மக்கள் வந்து கொண்டிருப்பதால் இரண்டு நிமிடத்துக்கு மேல் நிற்க முடிவதில்லை. விநயமாகவே நகரச் சொல்லி வேண்டுகோள் விடுக்கின்றனர்.  மீண்டும் அதே நாலு கிலோ மீட்டர் தூர நடை.  அதன் பின்னர் ஶ்ரீராமரின் உலோக விக்ரஹங்கள் சில வாங்கிக் கொண்டு அங்கே காத்திருந்த வழிகாட்டியுடன் அறையை நோக்கித் திரும்பினோம்.  அதற்குள்ளாக மணி பதினொன்றுக்கும் மேல்  ஆகிவிட்டதால் ஶ்ரீராமஜென்ம பூமியையும் மூடி விட்டார்கள்.  இனி மதியம் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள்.  அதோடு அங்கே மறுநாள் ஏதோ கிளர்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஏற்கெனவே தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருந்தோம்.  அதை உறுதிப் படுத்துவதைப் போல் அயோத்திக்குள் வரும் வழிகளை மூடிக் கொண்டிருந்தனர்.  அதனால் தான் எங்கள் வழிகாட்டியும் எங்களை அவசரப் படுத்திக் காலைத் தேநீருக்குப் பின்னர் எதுவும் உண்ணக் கூட அநுமதிக்காமல் எல்லாவற்றையும் காட்டிவிட்டார். :))))

அறைக்கு வந்து நேரே உணவு எடுத்துக் கொண்டு சற்று ஓய்வு எடுத்துக்கலாம் என்று போனோம்.  ஆட்டோக்காரர் மதியம் பார்க்க வேண்டியவைக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசினார்.  அவை எல்லாம் அயோத்தியிலிருந்து 25, 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவை.  ஒன்று ஶ்ரீராமன் சரயு நதியில் மறைந்த இடம் குப்தார் காட் என்னும் இடம்.  இன்னொன்று நந்திகிராமம்,  27 தீர்த்தங்களைக் கொண்டு வந்த இடம் ஒன்று , மணி பர்வதம் என்றொரு இடம்.  எங்களால் மணி பர்வதம் ஏற முடியாது என்று சொல்லிக் குறைச்சுக்கச் சொன்னோம். அவர் கூட்டித் தான் போவேன் என்றும் அங்கே போனப்புறம் ஏறுவதோ, ஏறாமல் இருப்பதோ எங்கள் இஷ்டம் என்றும் கறாராகச் சொல்லிவிட்டார். ஆட்டோக்காரரையும் அனுப்பிட்டுச் சாப்பிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மதியம் கிளம்பத் தயாரானோம். 

Geetha Sambasivam

unread,
Nov 6, 2013, 3:41:38 AM11/6/13
to மின்தமிழ்

ஊர்லே கல்யாணம், மார்பிலே சந்தனம்!

இங்கே எங்க குடியிருப்பு வளாகத்துக்கு எதிரிலுள்ள கல்யாணமண்டபத்தில் நெருங்கிய உறவினர் திருமணம்.  அதுக்காக ஏற்கெனவே ஞாயிறன்று என் தம்பி குடும்பத்தோடு வந்திருக்கிறார்.  இன்னிக்குக் காலம்பர திடீர்னு ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸின் தாமதத்தினால் கல்யாணப் பிள்ளையே அவர் அப்பா, அம்மாவோடு இங்கே  நம்ம வீட்டில் வந்து இறங்கும்படி ஆயிற்று. எதிரிலே கல்யாணம்; இங்கே அமர்க்களம்! :)))) அண்ணா குடும்பம் வேறு வந்திருக்காங்க.  ஆகவே இரண்டு, மூன்று நாட்களுக்கு இணையத்தில் அமர நேரம் இருக்காது.  வீடு நிறைய மனிதர்கள்.  சென்ட்ரல் ஸ்டேஷன் மாதிரி சாமான்கள். :)))

வெள்ளிக்கிழமை வரையும் வலைச்சர வேலையைக் கவனிக்க மட்டுமே கொஞ்சம் நேரம் ஒதுக்கி இருக்கேன்.  சனிக்கிழமைக்கான வலைச்சரப் பதிவை வெள்ளிக்கிழமைக்குத் தான் எழுத முடியும். :))) வலைச்சர வேலையும் திடீர்னு வந்த ஒன்று. ஆகவே அயோத்தித் தொடருக்குக் கொஞ்சம் தாமதம் ஆகும்.  டிடியை வேறே காணோமா!  வலைச்சரத்துக்கு வரவும் யாரும் இல்லை.  எனக்கும் போய்ச் சொல்ல முடியலை.  எல்லாரும் வலைச்சரத்துக்கு ஆதரவு கொடுத்து உங்கள் ஓட்டை வலைச்சரத்துக்கே அளித்து என்னை வெற்றியடையும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

சே, தேர்தல் நினைப்பு வந்துடுச்சு! :P

Geetha Sambasivam

unread,
Nov 6, 2013, 4:20:33 AM11/6/13
to Mazalais
http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_4.html

தொடர்ந்து ஒருவாரத்துக்குத் தமிழ் வலைப்பூக்களைத் தொடுக்கணும்.  இப்போ இங்கே இடி, மின்னல் கணினியை மூடணும், மற்றது பின்னர்.

On Wed, Nov 6, 2013 at 2:42 PM, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
வலைச்சரம்?

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mazalais+u...@googlegroups.com.
To post to this group, send an email to maza...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/mazalais.

Subashini Tremmel

unread,
Nov 6, 2013, 4:40:39 AM11/6/13
to மின்தமிழ்
இன்று தான் சற்று வாசிக்க நேரம் கிடைக்க இதுவரை வந்த பதிவுகளை வாசித்து முடித்தேன். எனக்கும் இங்கு செல்ல ஆர்வம் தொற்றிக் கொண்டு விட்டது. :-)

தொடருங்கள்.

சுபா

2013/11/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Nov 6, 2013, 4:44:23 AM11/6/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/11/1 meenavan2 <meen...@gmail.com>

அன்பிற்கினிய சகோதரி சுபா அவரகளே- வணக்கமும் தாங்கள் குழும உறுப்பினர்களுக்கு ஆச்சரியம் தரும் வண்ணம் மேற்
கொண்ட பயண அனுபவங்களைத் தெரிவித்தமைக்கு நன்றியும்.
108 வைணவத் திருத்தலங்கள் பற்றி நான் எழுதி வரும் கவிதைத் தொடருக்குத் தங்களின் கருத்து ஒருமுறை வந்ததோடு
பின்னர் என் இழைக்குள் தங்களைக் காண்வில்லை.அதன் காரணம் இப்பொழ்துதான் அறிந்தேன்.தங்களின் பயணம் காரணம்
என்று அறிந்தேன்.இனித் தங்கள் பகிரவுகளை இழையில் காண்லாக் அல்லவா?ஊரில் இருந்ததை விட
கோலாலம்பூரில் இருந்ததை விட பினாங்கில் கணினி பக்கம் வர வாய்ப்பு அமைவதே சிரமமாக இருக்கின்றது. இது சொந்த ஊர் என்பதாலும் பல தனிப்பட்ட கடமைகளினாலும் நேரம் பறந்து விடுகின்றது. வார இறுதியில் நான் ஜெர்மனி திரும்பிய பின்னர் அடுத்த வாரம் தொடங்கி மடல்களைப் பார்த்து கருத்து பகிர்ந்து கொள்ள நேரம் அமையும்.  தங்கள் கவிதைத் தொகுப்பை மீண்டும் பார்த்து கருத்து பகிர்ந்து கொள்கின்றேன்.

அன்புடன்
சுபா 

காப்பியக் கவிஞர்.நா.மீனவன்.

On Thursday, October 24, 2013 10:11:09 AM UTC+5:30, myself wrote:

எல்லாருக்கும் வணக்கம்!

முதல்லே எல்லார் கிட்டே இருந்தும் மன்னிப்பு வேண்டுகிறேன்.  அதுவும் என் உடன் பிறவாச் சகோதரி ரேவதியை மிகவும் தவிக்க வைத்ததுக்கு, மீண்டும், மீண்டும் மன்னிப்பு.  இந்தப் பிரயாணத் திட்டம் போடும்போதே இணையத்துக்கு வர முடியாது என்பது தெரியும்.  அதே போல இணைய நண்பர்கள் கிட்டேயும் சொல்லாமல் போயிட்டு வந்ததும் ஒரு ஆச்சரியமாகக் கொடுக்க நினைச்சேன்.  ஆரம்பத்திலேயே ஒரு முடிவு (யோசிச்சுத் தான்) எடுத்துட்டா அதிலிருந்து மாறாமல் இருப்பது நமக்கு வழக்கமாச்சே.  அதனால் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போயிட்டும் வந்தாச்சு.

காட்டு வாழ்க்கை.  அதிக நடை.  போற இடத்திலே எல்லாம் செல்ஃபோன் சிக்னல் கிடைப்பதும் கஷ்டம். :))) கிடைச்சாலும் விட்டு விட்டு வரும். சாப்பாடும் முன்னைப் பின்னே தான்.  கூடிய வரை காட்டு வாழ்க்கைக்கு ஏற்றாற்போல பால், பழம், மோர் என்றே சாப்பாடு.   ஒரு நாளைக்கு ஒரு தரம் மட்டுமே ஏதேனும் சிற்றுண்டி என இருந்து எல்லாம் வல்ல ஶ்ரீராமன் கிருபையில் அனைத்தையும் பூரணமாக முடித்துவிட்டு இன்று காலை வந்து சேர்ந்தோம்.

என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அஷ்வின் ஜிக்கும்
ரேவதிக்கும் மிகவும்  நன்றி.  அவரின் மன உளைச்சலுக்கு நான் பொறுப்பானது குறித்து வருத்தமா இருக்கு.  மேலும் மெயில்கள் மூலம் விசாரித்த ஶ்ரீராம், ஜீவி சார் மற்றும் யார்னு இனி தான் பார்க்கணும்.  நிறைய இருக்கிறதாலே இன்னும் பார்த்து முடியலை. எல்லாருக்கும் முன் கூட்டிய நன்றி.  ஓரளவுக்குத் தெரிஞ்சிருக்கும் எங்கே போனேன்னு.  அப்படித் தெரியாதவங்க நாளை வரை பொறுத்திருக்கவும்.

நாங்கள் சென்ற பாதைகள் அனைத்துமே!!!!!!!!!!!!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Nov 6, 2013, 10:02:44 AM11/6/13
to மின்தமிழ்
குறைந்தது ஐந்து தமிழ் வலைப்பூக்களை ஒவ்வொரு தினமும் ஆசிரியப் பொறுப்பேற்பவர் அறிமுகம் செய்யும் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட தளம் அது.  அதில் திங்கட்கிழமை காலை ஆறு மணியிலிருந்து அந்த வாரம் முடிந்து ஞாயிறன்று மாலை ஆறு வரை யாரேனும் ஒரு பதிவரைத் தேர்ந்தெடுத்து ஆசிரியப் பொறுப்பேற்கச் சொல்லுவார்கள்.  நான் ஏற்கெனவே 2007 அல்லது 2008 ஆம் வருடம் ஆசிரியராக இருந்துள்ளேன்.  என்றாலும் இந்த வாரத்துக்கு ஒத்துக்கொண்டவருக்கு அவசர வேலை இருந்ததால் வேறு யாரும் கிடைக்காமல், என்னை அணுகினார்கள்.  நாளைய பதிவைக் கட்டாயமாய்ப் பாருங்கள். நாளைக்காலை வெளிவந்ததும் சுட்டியைத் தர முயல்கிறேன்.

Geetha Sambasivam

unread,
Nov 6, 2013, 10:03:45 AM11/6/13
to மின்தமிழ்
நன்றி சுபா.

2013/11/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 7, 2013, 12:27:16 AM11/7/13
to மின்தமிழ்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2013, 4:47:38 AM11/7/13
to மின்தமிழ்
ரொம்ப ரொம்ப நன்றிம்மா!!. அழகழகான மலர்ச்சரங்களைத் தொடுத்திருக்கிறீர்கள்!!.அருமையாக இருக்கிறது.  என்னையும் ஒரு மலராக இணைத்தமைக்கும் மனமார்ந்த நன்றி!!!...

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
Nov 10, 2013, 5:26:56 AM11/10/13
to மின்தமிழ்
test comment

2013/11/7 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 10, 2013, 5:27:03 AM11/10/13
to மின்தமிழ்

2013/11/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 10, 2013, 5:28:06 AM11/10/13
to மின்தமிழ்
 
அயோத்தியை நோக்கி! குப்தார்காட்டிலும், நந்திகிராமத்திலும்!

சிறிது நேரம் ஓய்வெடுக்கும் போதே ஆட்டோக்காரர் வந்து கூப்பிடுவதாக ரிசப்ஷனிலிருந்து தொலைபேசி அழைப்பு வர, உடனடியாகக் கிளம்பினோம்.  சாலை சரியாக இல்லாததாலும், விரைவில் இருட்டி விடுவதாலும் செல்ல வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்கிலே சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாலும் சீக்கிரம் சென்றால் தான் மாலை ஏழுக்குள் வர இயலும் என ஆட்டோ ஓட்டுநர் கூறக் கிளம்பிவிட்டோம்.  முதலில் சென்றது குப்தார்காட் என்னும் சரயு நதி தீரம்.

http://sivamgss.blogspot.in/2008/08/85.html

http://sivamgss.blogspot.in/2008/08/86.html

http://sivamgss.blogspot.in/2008/08/87.html

 அயோத்திக்கு மேற்கே உள்ள சரயு தீரத்தில் ஶ்ரீராமர் சரயுவில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது.  அது குறித்த விளக்கங்களை ஏற்கெனவே எழுதி விட்டதால் சுட்டிகளை மட்டுமே அளித்துள்ளேன். ஹிந்தியில் "குப்த்" என்றால் மறைவாக, ரகசியமாக என்றெல்லாம் பொருள்படும்.  இங்கே தான் ராமர் மறைந்தார் என்பதால் குப்தார்காட் என இதை அழைக்கின்றனர்.  இங்கே நதிக்கரையில் ஒரு கோயிலும் இருக்கிறது.  இது தான் மதராசி மந்திர், அம்பாஜி மந்திர் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயில் என அறிந்தேன்.  ஆனால் நாங்கள் சென்ற நேரம் மணி மூன்று.  கோயிலை நான்கு மணிக்கு மேல் தான் திறப்பார்களாம். வெளியில் இருந்தே சில சந்நிதிகளை மட்டும் தரிசித்தோம். அவை கீழே.  சிவன் சந்நிதி மட்டும் பார்க்க முடிந்தது. 

அதற்குள்ளாக ஆட்டோக்காரர் அழைப்பு மேல் அழைப்பு விடுத்துவிட்டார். அயோத்தியின் நிலைமை அப்படி உள்ளது.  எந்த நேரம் எந்த வழியை மூடுவாங்க, அல்லது திறப்பாங்கனு சொல்ல முடியாது. அதோடு இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் வேறே உள்ளன.  அவற்றுக்கு வெவ்வேறு திக்கில் செல்ல வேண்டும். இதுக்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தோம்.

வழியெங்கும் நெல் வயல்கள்.  கரும்புத் தோட்டங்கள்.  செழுமை பொங்கின. இவ்வளவு நீர், நில வசதி இருந்தும் நாடு ஏன் முன்னேறவே இல்லை என்ற கேள்வியும் மனதைத் துளைத்தது.  ஆங்காங்கே வயல்களில் வரப்போரமாகவோ அல்லது சாலைகளின் ஓரமாக வயல் கரையிலோ இயற்கை உரங்கள் மலை போல் குவிந்து கிடந்தன.  எங்கேயும் செயற்கையான உரத்தையே பார்க்க முடியவில்லை.  ஒவ்வொரு வீட்டிலும் அது குடிசையாக இருந்தாலும் குறைந்தது நான்கு பசுக்கள் இருந்தன.

குப்தார்காட்டின் படகுத் துறை.  காலை பார்த்த இடத்திலும் படகுத்துறை இருந்தது.  அங்கே ஆழம், வேகம் குறைவு. இங்கே ஆழம் நாற்பது அடிக்கும் மேல் என்றார்கள்.  வேகமோ வேகம்.  அதான் ராமர் இதைத் தேர்ந்தெடுத்தாரோனு நினைத்தேன்.

 கால்நடைப் பராமரிப்பும் சரி, வளர்ப்பும் சரி அமோகமாக இருப்பதும் தெரிந்தது.  பசுக்கள் மேயப் புல்வெளியும் ஏராளம்.  ஆகவே எந்தப் பசுவும் சினிமா போஸ்டரையோ, ப்ளாஸ்டிக் பைகளையோ சாப்பிட்டும் பார்க்கலை.  இதை இங்கே ஶ்ரீரங்கத்திலும் பார்க்கலாம்.  பசுக்களுக்கு மாட்டுச் சொந்தக்காரர் அறியாமல் நாமாக ஏதேனும் உணவைக் கொடுத்துவிட முடியாது. கொடுத்தால் அகத்திக்கீரை மட்டும் கொடுக்கலாம். பாழாய்ப் போனதெல்லாம் பசுவன் வயித்திலே என்ற பழமொழி இங்கே எடுபடாது.  ஏன் நீ சாப்பிடேன், என்று திருப்புவார்கள். இது மாட்டின் நன்மைக்கே என்றாலும் முதலில் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  பின்னர் பழகி விட்டது. 

குப்தார் காட்டிலிருந்து நாங்கள் சென்றது நந்திகிராமம். இங்கே தான் ஶ்ரீராமன் வருவதற்கு நேரம் ஆகிறது என்பதால் இனி அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகத்தில் பரதன் தீக்குளிக்க இருந்ததும், அப்போது அநுமன் தூதுவனாக வந்து பரதனைக் காத்ததும் நடந்தது.  இங்கே அநுமனும், பரதனும் ஆலிங்கனம் செய்து கொள்ளும் சிற்பம் ஒன்றும், அநுமன் சந்நிதியும் உண்டு. பரதன் தவம் இருந்த குகையில் இப்போது ஶ்ரீராமன், பரிவாரங்களோடு கோயில் கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் அருகேயே இன்னொரு பழமையான கோயில் அது தான் உண்மையான பரதன் குகை என்று சொல்கிறது.  இதைக் கண்டறிந்ததும் விக்கிரமாதித்த அரசன் என்றும் சொல்கிறது. இரண்டையுமே சென்று பார்த்தோம்.  இரண்டாவது கோயிலில் கீழுள்ள குகைக்குச் செல்ல முடியவில்லை.  அநுமதி கொடுப்பதில்லை என்றனர்.  சிலர் அநுமதி கொடுப்பவர் வரவில்லை என்றனர்.  ஆக மொத்தம் பார்க்க முடியவில்லை. 

Geetha Sambasivam

unread,
Nov 10, 2013, 5:39:17 AM11/10/13
to மின்தமிழ்
என் பதிவின் சுட்டிகளுக்குள் இடம்பெற வேண்டிய இந்த வரிகள் விட்டுப் போயிருக்கின்றன.  காப்பி, பேஸ்ட் செய்கையில் சரியாகச் செய்யவில்லை.  மன்னிக்கவும்.

ஶ்ரீராமர் எந்தச் சூழ்நிலையில் சரயுவில் மூழ்கி மறைய நேர்ந்தது என்பதை என் "கதை கதையாம் காரணமாம்--ராமாயணம்" தொடரின் மேற்கண்ட சுட்டிகளில் காணலாம். (ஶ்ரீராம் கேட்டதினால் இந்த வரிகள் விட்டிருப்பதைத் தெரிந்து கொண்டேன், மன்னிக்கவும்.)

2013/11/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>
 
இங்கே இடம் பெற வேண்டியவை இவை.
 
பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 10, 2013, 7:54:56 AM11/10/13
to மின்தமிழ்
அருமையான புகைப்படங்கள் அம்மா!!!.. சுட்டிகளுக்கும் நன்றி!!..ஆவலுடன் தொடரக் காத்திருக்கிறேன்..

2013/11/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Nov 10, 2013, 8:04:23 AM11/10/13
to மின்தமிழ்

2013/11/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>
 
..வெளியில் இருந்தே சில சந்நிதிகளை மட்டும் தரிசித்தோம். அவை கீழே.  சிவன் சந்நிதி மட்டும் பார்க்க முடிந்தது. 

கீழுள்ள படத்தைப் பார்க்கும் போது சிவலிங்கமும் நந்தியும் இருப்பது போல தெரிகிறது. சிவாலயமா இது?

 கால்நடைப் பராமரிப்பும் சரி, வளர்ப்பும் சரி அமோகமாக இருப்பதும் தெரிந்தது.  பசுக்கள் மேயப் புல்வெளியும் ஏராளம்.  ஆகவே எந்தப் பசுவும் சினிமா போஸ்டரையோ, ப்ளாஸ்டிக் பைகளையோ சாப்பிட்டும் பார்க்கலை.  இதை இங்கே ஶ்ரீரங்கத்திலும் பார்க்கலாம்.  பசுக்களுக்கு மாட்டுச் சொந்தக்காரர் அறியாமல் நாமாக ஏதேனும் உணவைக் கொடுத்துவிட முடியாது. கொடுத்தால் அகத்திக்கீரை மட்டும் கொடுக்கலாம். பாழாய்ப் போனதெல்லாம் பசுவன் வயித்திலே என்ற பழமொழி இங்கே எடுபடாது.  ஏன் நீ சாப்பிடேன், என்று திருப்புவார்கள். இது மாட்டின் நன்மைக்கே என்றாலும் முதலில் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  பின்னர் பழகி விட்டது. 
நல்ல முறை தான் இது.

குப்தார் காட்டிலிருந்து நாங்கள் சென்றது நந்திகிராமம். இங்கே தான் ஶ்ரீராமன் வருவதற்கு நேரம் ஆகிறது என்பதால் இனி அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகத்தில் பரதன் தீக்குளிக்க இருந்ததும், அப்போது அநுமன் தூதுவனாக வந்து பரதனைக் காத்ததும் நடந்தது.  இங்கே அநுமனும், பரதனும் ஆலிங்கனம் செய்து கொள்ளும் சிற்பம் ஒன்றும், அநுமன் சந்நிதியும் உண்டு. பரதன் தவம் இருந்த குகையில் இப்போது ஶ்ரீராமன், பரிவாரங்களோடு கோயில் கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் அருகேயே இன்னொரு பழமையான கோயில் அது தான் உண்மையான பரதன் குகை என்று சொல்கிறது.  இதைக் கண்டறிந்ததும் விக்கிரமாதித்த அரசன் என்றும் சொல்கிறது. இரண்டையுமே சென்று பார்த்தோம்.  இரண்டாவது கோயிலில் கீழுள்ள குகைக்குச் செல்ல முடியவில்லை.  அநுமதி கொடுப்பதில்லை என்றனர்.  சிலர் அநுமதி கொடுப்பவர் வரவில்லை என்றனர்.  ஆக மொத்தம் பார்க்க முடியவில்லை. 

அருமையாகச் செல்கிறது தொடர்.

சுபா 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

coral shree

unread,
Nov 10, 2013, 8:24:04 AM11/10/13
to மின்தமிழ், Geetha Sambasivam
அன்பின் கீதாஜி,

அறியாத பல செய்திகளை உங்கள் தொடர் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மிக வித்தியாசமான நடை. ரசித்துப் படிக்கிறேன். நன்றி.

//// தாழம்பூவைப் பாவாடையாகவும், பவளமல்லியை அர்ச்சனைக்கும் பயன்படுத்தி மற்றவற்றை இணைய தேவதைக்கு மாலையாக்கிவிட்டு//

அருமையாகச் சொல்லி முடித்திருக்கிறீர்கள். என் வலைப்பூவையும், ஜாதி மல்லியாக உங்கள் வலைச்சரத்தில் கோர்த்து, மணம் வீசச்செய்த தங்கள் அன்புக்கு என் மனம் கனிந்த நன்றிங்க கீதாஜி. உங்கள் வலைச்சரத்தை இன்றுதான் காண முடிந்தது. தாமதமான நன்றிக்கு வருந்துகிறேன். 

அன்புடன்
பவளா. 

2013/11/10 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

--

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Geetha Sambasivam

unread,
Nov 13, 2013, 5:55:57 AM11/13/13
to மின்தமிழ்

நந்திகிராமத்தின் காட்சிகளைக் காண வேண்டாமா?

நந்திகிராமத்தில் முதலில் சென்ற பரத்குண்ட் என்னும் இடம்.  இந்தக் குளத்து நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ மற்ற எதற்கும் பயன்படுத்துவதில்லை. மேலும் இங்கே பித்ரு காரியங்கள் செய்ய உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. நாங்கள் சென்றபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டபடியால் எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் சென்னை, திருவல்லிக்கேணியிலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரை இங்கே சந்தித்தோம். கிட்டத்தட்டப் பதினைந்து, இருபது ஆண், பெண்கள் வந்திருந்தனர்.

பரதனை ஆஞ்சநேயர் சந்தித்து ஶ்ரீராமர் வருகிறார் என்ற தகவலை அளித்த இந்த இடம் பரத்-அநுமன் மிலன் மந்திர் என அழைக்கப்படுகிறது.  முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது.  உள்ளே ஶ்ரீராமர் சந்நிதிக்கு இடப்பக்கமாகக் கீழே சென்றால் பரதன் இருந்த குகையும், பரதனும் ஆஞ்சநேயனும் சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு மகிழ்ந்ததைக் காட்டும் சிற்பத்தையும், ராமர் பாதுகையையும் காணலாம்.

பரதனும் ஆஞ்சநேயனும் ஒருவரை கட்டி அணைத்த வண்ணம் காட்சி அளிக்கின்றனர்.

காட்டில் ஶ்ரீராமன் தவம் இருந்தான் எனில் நாட்டிலேயே தவம் இருந்த பரதன்.

ஆஞ்சநேயர் தனி சந்நிதியில்

ஆஞ்சநேயருக்கு மேலே சுவத்திலே நம்மாளு இருந்தாரா, கொஞ்சம் தூரக்க இருந்தாலும் விடலை!  பிடிச்சுட்டேன்.

லவ, குசர்களின் பாணத்தால் காயமடைந்த ஹநுமான் இங்கே வந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

விக்கிரமாதித்தனைக் குறித்த விளக்கத்தைக் கொடுக்கும் அறிவிப்புப் பலகை. 

Innamburan S.Soundararajan

unread,
Nov 13, 2013, 8:10:56 AM11/13/13
to thamizhvaasal, mintamil, தமிழ் சிறகுகள், Geetha Sambasivam
இன்று காலை தான் வால்மீகி ராமாயணத்தில் நந்தி கிராமத்தை பற்றி படித்தேன். அது பற்றி எழுத நினைத்தேன். அதாவது பரதாழ்வாரை பற்றி.
அதை விட மேலான இந்த பதிவு வந்து விட்டது. நன்றி.
2013/11/13 DEV RAJ <rde...@gmail.com>
ஜய் ஸியாராம்

யாத்ராநுபவம் அருமை !
படங்களோடு படிக்கச் சுவையாக
இருக்கிறது.
ஸ்ரீராம ராம ராம....

தேவ்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

கி.காளைராசன்

unread,
Nov 13, 2013, 12:13:18 PM11/13/13
to mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள், Geetha Sambasivam
ராம் ராம்

2013/11/13 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

amaithi cchaaral

unread,
Nov 13, 2013, 1:01:11 PM11/13/13
to Groups, தமிழ் சிறகுகள்
ராம் ராம் கீத்தாம்மா..

படங்களும் பகிர்வுமாய் ஆன்மீகப்பயணம் நிறைவாயிருக்கு..

2013/11/13 கி.காளைராசன் <kalair...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Nov 13, 2013, 3:08:36 PM11/13/13
to mintamil, தமிழ் சிறகுகள்
स काममनवाप्यैव रामपादावुपस्पृशन् ।।1.1.38।। 
नन्दिग्रामेऽकरोद्राज्यं रामागमनकाङ्क्षया । 
2013/11/13 amaithi cchaaral <amaithi...@gmail.com>

coral shree

unread,
Nov 13, 2013, 6:58:24 PM11/13/13
to மின்தமிழ்
அன்பின் கீதாஜி,

நல்லதொரு பகிர்வு. வாசிக்க இனிமையானதொரு அனுபவம். வாழ்த்துகள்.

அன்புடன்
பவளா

2013/11/13 amaithi cchaaral <amaithi...@gmail.com>

--

Take life as it comes.

Thirumoorthy Kasi

unread,
Nov 13, 2013, 10:28:35 PM11/13/13
to mint...@googlegroups.com
வணக்கம் 

2013/11/14 coral shree <cor...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 15, 2013, 11:44:44 PM11/15/13
to மின்தமிழ்

அயோத்தி முடிவு! நந்திகிராமம்--தொடர்ச்சி!

பரதன் இருந்த குகையே இன்னொன்று விக்கிரமாதித்தனால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற அறிவிப்பைச் சென்ற பதிவில் பார்த்தோம். அதுவும் தற்போதைய "பரத் -ஹநுமான் மிலன் மந்திருக்கு அருகேயே உள்ளது.  அங்கே  சுமார் 27 தீர்த்தங்கள் உள்ளதொரு தீர்த்தஸ்தானம் இருக்கிறது.  தற்சமயம் அதைச் சுற்றிக் கிணறு போல் கட்டியுள்ளனர். பரதனின் குகைக்கான அறிவிப்புப் பார்க்கலாம்.  ஆனால் உள்ளே செல்ல விடுவதில்லை.

தவக்கோலத்தில் பரதன்.  இங்கே தன் மனைவியுடன் காணப்படுகிறான்.

பரதன் மனைவி மாண்டவி

மன்னனுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் வண்ணம் நந்திகிராமத்திலேயே தங்கிய குலகுருவான வசிஷ்டர்

பரதன் தவமிருந்த குகை குறித்தும் 27 தீர்த்தங்களைக் குறித்துமான அறிவிப்பு

பரதன் பூஜித்ததாய்ச் சொல்லப்படும் ராமர் பாதுகை.  எழுத்தால் எழுதி இருக்கேன்.  ஆனால் மங்கலாகத் தெரிகிறது. :(

இக்ஷ்வாகு குலத்தவர் வழிபட்ட சிவன் சந்நிதி.  இது புதுசாய்த் தான் இருக்கு. ஆனால் முன்னர் லிங்கம் இருந்ததாய்ச் சொல்லப்படுகிறது.

தீர்த்தக் கிணறு.  இங்கே கோயிலை நிர்வகிக்கும் சந்நியாசி(பெரும்பாலான கோயில்களை சந்நியாசிகளே நிர்வகிக்கின்றனர்.) அன்று பலருக்கு அன்னதானம் செய்து  கொண்டிருந்தார்.  அதைப் படம் எடுக்கவில்லை. ஆனாலும் அன்னதானத்துக்கு எங்களால் ஆன தொகையைக் கொடுத்தோம். இம்மாதிரி நிறைய சந்நியாசிகளால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் அயோத்தியில் நிறைய இருக்கிறது.  வசூலும் நிறையவே கேட்கின்றனர். இதில் நிறையவே கவனம் தேவை.  இதற்கடுத்துத் தான் மணிபர்பத் போனோம்.  அங்கே பழைய பெளத்த ஸ்தூபம் மேலே இருக்கிறதாய்ச் சொன்னார்கள்.  செல்லும்போதே மணி ஐந்து ஆகிவிட்டது.  அதோடு மேலே ஏறவும் கூடாது என மருத்துவர்கள் கட்டளை.  முன்னோர்கள் வேறே மலை ஏறும் வழியில் கூட்டம் கூட்டமாய்க் காத்திருந்தனர்.  ஆட்டோவிலோ எதையும் வைத்துவிட்டுப்போகக் கூடாது என்று அன்புக் கட்டளை. காமிராவை வெளியே எடுக்க விடாமல் முன்னோர்கள் படுத்தல்.  தேநீர் குடிக்கக் கடைக்கு வெளியே அமர்ந்தால் கூடவே அவங்களும்!  அயோத்தி நகரை மேலிருந்து பார்க்கலாம் என்றும் சொன்னார்கள்.  எனினும் ஆவலை அடக்கிக் கொண்டோம். இதுவும் முற்றிலும் ராணுவப் பாதுகாப்போடு காணப்பட்டது.

சற்று நேரம் அந்த இயற்கையான சூழலில் அமர்ந்திருந்து தேநீர் அருந்திவிட்டுப் பின்னர் அங்கிருந்து கிளம்பி, நாங்கள் தங்கி இருந்த விடுதிக்குக் கிளம்பினோம்.  அங்கிருந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆயிற்று.  அதுவும் வழியை அடைத்திருந்ததால் சுற்றிச் சுற்றி நகருக்குள் வரவே அரை மணிக்கும் மேலாயிற்று.  அங்கிருந்து விடுதிக்கு வந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு விடுதிக் காப்பாளரிடம் மறுநாள் கான்பூர் செல்ல வண்டி கிடைக்குமா என்று கேட்டோம்.  அவரும் கேட்டுவிட்டுக் கான்பூர் செல்ல வண்டியின் விலையைக் கிட்டத்தட்டக் கூறினார்.  எங்கள் பிரயாணத்திட்டத்தில் அயோத்தியிலிருந்து கான்பூர் சென்று அங்கே இருந்து அருகிலுள்ள பிட்டூர் என்னும் ஊரிலுள்ள வால்மீகி ஆசிரமத்தைக் காண்பது.  பின்னர் கான்பூரிலிருந்து கிளம்பும் சித்ரகூட் எக்ஸ்ப்ரஸில் சித்திரகூடம் செல்வது என இருந்தது.

ஆனால் கான்பூர் செல்ல லக்நோவைத் தாண்டித் தான் செல்லவேண்டும் என்றும் பணம் அதிகம் ஆகும் என்றும் சொல்ல பயணத்திட்டம் மாறியது. அயோத்தியிலிருந்து மீண்டும் லக்நோவே சென்று அங்கிருந்து கிளம்பும் சித்திரகூட் எக்ஸ்பிரசில் சித்திரகூடம் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.  விளைவுகள் எப்படி இருக்கும் என அப்போது தெரியாது. விடுதிக் காப்பாளரிடம் மறுநாள் லக்னோ செல்ல வண்டிக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு அன்றைய தினம் நன்றாய்க் கழிந்த திருப்தியுடன் மறுநாளைக் குறித்த கவலை ஏதுமில்லாமல் படுத்துத் தூங்கினோம். மறுநாள் விடிந்தது.

Subashini Tremmel

unread,
Nov 16, 2013, 1:36:25 PM11/16/13
to மின்தமிழ், Subashini Tremmel
படங்களுடன் விளக்கம் என்று மிக நன்றாக அமைத்திருக்கின்றீர்கள். வாசித்து மிக ரசித்தேன்.
இப்பயணக்கட்டுரையை மரபு விக்கியில் இணைத்து விடுங்கள் கீதா.

சுபா

2013/11/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--

Innamburan S.Soundararajan

unread,
Nov 16, 2013, 2:01:39 PM11/16/13
to mintamil, Subashini Tremmel
அயோத்தியை பிரதக்ஷிணம் செய்த எனக்கு இந்த அருமையான செய்திகள் புதியவை. நன்ரி.

2013/11/16 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 17, 2013, 8:20:47 AM11/17/13
to மின்தமிழ்

ஶ்ரீராமனின் பாதையில்! அவரைக் காணோமே!

காலை எழுந்ததும் குளித்து முடித்துத் தயாராகிக் காலை உணவு எடுக்காமல் நேரே ப்ரஞ்ச் சாப்பிடலாம்னு முடிவெடுத்து விடுதிக் காப்பாளரிடம் வண்டி பற்றிக் கேட்டோம்.  அவரும் லக்னோ செல்ல நாங்க சொன்ன தொகைக்கு ஒத்துக் கொண்டு ஒருத்தர் வரேன்னு சொல்லி இருப்பதாய்ச் சொன்னார். சரினு நாங்களும் அக்கம்பக்கம் கொஞ்சம் பார்த்து வரலாம்னு போயிட்டு வந்தோம். திரும்பி வந்தால் பசிக்கிறாப்போல் இருக்கவே கீழே போய் வெறும் ப்ரெட் டோஸ்டும், தேநீரும் சாப்பிட்டுவிட்டு சாப்பாடு எப்போத் தயாராகும்னு கேட்டுக் கொண்டு திரும்பினோம்.  கிளம்பத் தயாராக பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தோம்.  துணி துவைக்க நிறைய இருந்தது. சித்ரகூடம் போய்த் தான் தோய்க்கணும்.

பதினொன்றரைக்கு மீண்டும் கீழே போய் உணவு எடுத்துக் கொண்டோம். சரியாய்ப் பனிரண்டுக்கு வண்டியும் வர, விடுதி ஆட்கள் உதவி செய்ய லக்னோ நோக்கிக் கிளம்பினோம். விடுதியின் கவனிப்புக்கும், உதவிகளுக்கும் நன்றி சொல்லி ஆட்களுக்கும் தாராளாமாய் டிப்பி விட்டு சந்தோஷமாய்க் கிளம்பினோம்.  டிரைவர் இளைஞன்.  இன்னும் சொன்னால் சிறுவன் என்றே சொல்லலாம்.  ஆனாலும் அபாரமாக வண்டி ஓட்டினார். அவர் வீட்டில் ஆயிரம் வருஷத்துப் பழைய ஶ்ரீராமர் சிற்பங்கள் இருப்பதாகச் சொல்லி அங்கே அழைத்துச் சென்றார்.  வீடு தான் என்றாலும் கோயில் போன்ற அமைப்பில் இருந்தது.  அங்கிருந்தவர் அன்றைய வழிபாடு முடிந்து கதவு சார்த்திவிட்டதால் இனி மாலை மூன்று மணிக்கு மேல் தான் பார்க்கலாம்னு சொல்லிட்டார். கொஞ்சம் ஏமாற்றமே. லக்னோவுக்கு இரண்டரையிலிருந்து மூன்றுக்குள் வந்துவிட்டோம்.  நேரே முன் பதிவு செய்யும் இடம் போய் அன்றைய சித்ரகூட் எக்ஸ்பிரஸில் முன் பதிவுக்குக் கேட்டால் இங்கே டிக்கெட் மட்டும் தான்.  ரயிலில் டிடி யிடம் கேட்டு முன்பதிவு செய்து கொள்ளவும்னு சொல்லிட்டாங்க.  சரினு டிக்கெட்டை வாங்கிண்டு  உள்ளே போனால் ரயில் எங்கே வரும்னு தெரியலை.

அங்கே இங்கே அலைந்து விசாரித்தால்,"அது சோட்டி லைன்! அந்த ஸ்டேஷனுக்குப் போங்க!" னு சொல்லிட்டாங்க.  அப்போ மீட்டர் கார்டிலா வண்டி ஓடுது? சந்தேகம்.  சோட்டி லைன் ஸ்டேஷன் எங்கேனு கேட்டுண்டு போனோமா! வந்தது வினை!  எல்லா ஆட்டோக்காரங்க, ரிக்‌ஷாகாரங்க எல்லாம் சூழ்ந்து கொண்டு, 'எந்த வண்டி'னு கேட்கவே சரி, விபரமானும் தெரிஞ்சுக்கலாம்னு சொன்னோம்.  உடனே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ரயிலுக்கு நேரமாச்சாக்கும்.  உங்களால் போய்ப் பிடிக்க முடியாது;  நாங்க கொண்டு விடறோம்னு கையிலே இருந்து பெட்டிகளைப் பிடுங்காத குறை.

சமாளித்துக் கொண்டு நடந்தோம்.  ஒரு போர்ட்டரிடம் கேட்கலாம் என்றால் ஒருத்தருமே கண்ணில் படலை.  எல்லாரும் ஒளிஞ்சுண்டாங்க போல! அதற்குள்ளாகக் கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு ஆட்டோ ஓட்டி மெதுவாக எங்களிடம் வந்து எதிரே இருக்கும் கட்டிடத்தைக் காட்டி, அங்கே இருந்து தான் சித்ரகூட் எக்ஸ்பிரஸ் கிளம்பும், ரயிலுக்கு நேரமிருக்கு, மெதுவாகவே போங்கனு சொன்னார்.  அடக் கடவுளே! எப்படி எல்லாம் ஏமாத்த நினைக்கிறாங்கனு நினைச்சு அவருக்கு நன்றி சொல்லிட்டுக் கொஞ்சம் மெதுவாவே போக ஆரம்பிச்சோம். 

ரங்க்ஸ் முன்னாலே போக நான் பின்னால் போய்க் கொண்டிருந்தேனா!  ஒரு இடத்தில் நடைமேடை ஒன்றைக் கடக்கணும்.  அப்போ அவர் இறங்கிட்டார். கையில் பெட்டியை வைத்துக் கொண்டு என்னால் இறங்க முடியலை.  ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு இறங்கினேன்.  அதுக்குள்ளாக அவர் இன்னும் தூரமாகப் போயாச்சு.  என்னை ஒரு ஆள் தொடர்ந்து வந்தான்!  "மேடம், மேடம்," என்றான்.  திரும்பிப் பார்த்தேன்.  "உங்க பர்ஸ் அங்கே விழுந்துடுச்சு. எடுத்து வைச்சிருக்காங்க. வாங்க, வாங்கித் தரேன்!"  என்றான். எல்லாம் ஹிந்தியிலே தான்.

நான் எப்போவுமே கையிலே பர்செல்லாம் வைச்சுக்க மாட்டேன்.  கைப்பை தான்.  அதிலேயே குடித்தனமெல்லாம் பண்ணிடுவேன். சின்ன பர்ஸ் அவர் தான் வைச்சுப்பார்.  அதையும் அவர் மறந்து வைச்சுடறார் என்றே இம்மாதிரியான நேரங்களில் நான் வாங்கி என் கைப்பையின் உள்ள்ள்ள்ள்ள்ளே போட்டுடுவேன்.  ஆகவே நிச்சயமாய்ப் பர்ஸ் விழவில்லை. என்றாலும் நான் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்தவாறே, "நீயே எடுத்துக்கோ!" என்று சொல்லிவிட்டேன்.  அதுக்குள்ளாக ரங்க்ஸுக்கு நான் வரேனானு சந்தேகம் வந்து திரும்பிப் பார்த்து அங்கிருந்தே என்னனு கேட்க, நானும் ஒண்ணும் இல்லைனு சொன்னேன்.

வந்த ஆளும் தன்னோட வேலை இங்கே ஆகாதுனு புரிஞ்சுண்டு திரும்பினான்.  அந்த ஸ்டேஷனுக்குப் போய் எந்த நடைமேடைனு பார்த்துட்டு அங்கே போகிறதுக்குள்ளே எனக்கு அவசரமாக இயற்கையின் அழைப்பு வர ரங்க்ஸிடம் கைப்பையைக் கொடுத்து பத்திரமா வைச்சுக்கச் சொல்லிட்டு பயணிகள் தங்கும் அறைக்குப் போய்ப் பார்த்தா சுத்தம்! ஒண்ணுமே இல்லை.  அங்கே இருந்தவங்க கிட்டேக் கேட்டால் தெரியாதுனு சொல்றாங்க.  ஆஹா, கொடுத்து வைச்சவங்கப்பா!  இயற்கை அழைப்புக் கூட இல்லாதவங்களா இருக்காங்களேனு நினைச்சு வெளியே வந்து அங்கே இங்கே மோதி ஒரு வழியாக் கண்டுபிடிச்சுப் போனால்!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  பணம் கொடுக்கணும்.  வெறும் கையை வீசிண்டு போனால்?? திரும்ப ரங்க்ஸை விட்ட இடத்திலே தேடி அவர் கிட்டே பணத்தோடு அர்ச்சனையும் வாங்கிக் கட்டிண்டு மறுபடி கழிவறை போய்ட்டுத் திரும்பி வரேன். சாமான் எல்லாம் பப்பரப்பேனு கீழே வைச்சிருக்கு.  சாமான் மட்டும் இருந்தால் பரவாயில்லையே!  எடுத்துட்டுப் போக வசதியா என்னோட கைப்பையும் அங்கே வைச்சிருக்கு. ஆனால் ரங்க்ஸைக் காணோம்! கடவுளே! இந்தக் கைப்பையில் தானே  திரும்பிப் போக டிக்கெட்டிலே இருந்து எல்லா கஜானாவும் இருக்கு.  இதை இங்கே இப்படி அநாதையா விட்டுட்டு அவர் எங்கே போனார்?

Geetha Sambasivam

unread,
Nov 18, 2013, 11:02:18 PM11/18/13
to மின்தமிழ்

ஶ்ரீராமனின் பாதையில் --சித்திரவதையுடன் சித்திரகூடப் பயணம்!

என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா? சந்தேகமே! "தங்க மங்கை" பிடி. உஷா கூட தோத்திருப்பார்.  அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.  எல்லாரும் அவரவர் வேலையிலே கவனமாக இருந்தார்கள்.  ஆனால் ரங்க்ஸ்? கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தப்போ எதிரே இருந்த கான்டீனில் தெரிஞ்ச முகமாத் தெரியவே, சாமானை விட்டுத் தள்ளியும் போகாமல் அங்கே இருந்தே உற்றுப் பார்த்தேன்.  அதுக்குள்ளாக அந்த முகமும் என்னைப் பார்த்து, "இரு, வரேன்!" என்று ஜாடை காட்டியது. சீ, எனக்கிருந்த குழப்பத்தில் அந்த முகம் ரங்க்ஸுக்குச் சொந்தம் என்று புத்தியில் உறைக்கவே ஒரு நிமிடம் ஆயிற்று.  உடனே வந்தது பாருங்க ஒரு கோபம்.  சாமான் எங்கே இருக்கு?  அப்படியே போட்டுட்டு அங்கே போய் என்ன செய்யறார்?  வரட்டும், இரண்டு கையாலேயும் பார்த்துடுவோம்.

சற்று நேரத்தில் கையில் தண்ணீர் பாட்டிலுடன் ரங்க்ஸ் வந்து சேர்ந்தார்.  "எங்கே போனீங்க?"  "தண்ணியே இல்லை! வாங்கப் போனேன்!" "அது சரி, என்னோட ஹான்ட் பாக் எங்கே?"  "ஹான்ட் பாகா?" திரு திரு திரு திரு!

நான், "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களை நம்பிப் பையைக் கொடுத்துட்டுப் போனா வீசி எறிஞ்சுட்டுப் போயிருக்கீங்க!" குற்றம் சாட்டியாச்சு.  அவருக்குத் தன்னிடம் ஹான்ட் பாக் இருந்ததோ, அதைக் கீழே இறக்கியதோ எதுவுமே மனதில் படவில்லை. ஹான்ட் பாகும் வெயிட்டாக இருந்ததால் எல்லா சாமான்களையும் இறக்கி வைச்சாப்போல் வைச்சுட்டேன் என்றார். முறைச்ச நான் "இனி ஹான்ட்பாகை உங்க கையிலே கொடுக்கவே போறதில்லை.  நானே வைச்சுக்கறேன்."என்று அவசரச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டு, "எந்த நடைமேடை?" என்று கேட்டேன்.  ஆறாவது நடைமேடையாம்.  அங்கே போனோம்.  இந்த மாதிரி ஒரு கூட்டத்தை என் ஜன்மத்தில் பார்த்தது இல்லை.  அதோடு  நடைமேடை அந்தக் கால எழும்பூர் நடைமேடையை ஒத்திருந்தது.  அருகே கார், வண்டிகள் வந்து நிற்கும் பாதை.  அங்கே நடை மேடையின் ஒரு ஆரம்பத்திலிருந்து இன்னொரு பக்க முடிவையும் தாண்டி பெட்டி, படுக்கையோடு வரிசையாக ஆட்கள் அமர்ந்திருந்தனர்.  படம் எடுக்க முடியவில்லை.  காமிராவை உள்ளே வைச்சுட்டேன்.  செல்லைக் "கு" ரங்கார் கேட்டுட்டு இருந்தார். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே வயிற்றைக் கலக்கியது.  முன் பதிவும் இல்லாமல் எப்படி ஏறப் போறோம்?

சிறிது நேரத்தில் பின்னால் வரிசை கட்டி நின்றவர்கள் இரவு ஒன்பது மணிக்கு லக்னோவிலிருந்து மும்பை செல்லும் வண்டிக்குக் காத்திருந்தவர்கள்(முன் பதிவில்லாமல் ஏறுவதற்கு) என்பது புரிந்தாலும் இந்த நடைமேடையில் எக்கச் சக்கக் கூட்டம்.  அதோடு உட்கார எங்கேயும் பெஞ்சோ, உட்காரும் மேடைகளோ இல்லை.  நிற்க வேண்டி வந்தது.  சும்மாவே வீங்கிக்கும் என்னோட கால் நிற்க ஆரம்பிச்சதும் தள்ளாட ஆரம்பிச்சது.  ஏற்கெனவே முதல் நாள் அலைச்சல் வேறே.  போர்ட்டர் ஒருத்தர் வண்டியில் சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு அந்த வண்டியிலேயே உட்கார அவரிடம் கேட்டுக் கொண்டு நானும் போய் உட்கார்ந்தேன்.  ஐந்தரைக்கு வண்டி வந்தது.  லக்னோவிலிருந்து தான் கிளம்புகிறது.  ஆனால் சித்ரகூடம் வரை மட்டும் சென்று கொண்டிருந்த வண்டியை ஜபல்பூர் வரைக்கும் நீட்டித்திருப்பதால் கூட்டம் தாங்கவில்லை.

பொதுப்பெட்டியில் ஏறக் கும்பல்.  அந்தக் கும்பலில் என்னால் ஏறவே முடியவில்லை.  ரங்க்ஸ் மட்டும் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு எப்படியோ ஏறிவிட்டார்.  அங்கே எனக்கும், அவருக்கும் அந்தப் பையை வைத்து உட்கார இடம் போட்டுவிட்டு, என்னை அழைக்க வந்தார்.  சரினு நானும் சாமான்களை ஏற்றிவிட்டு, ஏறப் பார்த்தால் ஏற விடாமல் தள்ளு, முள்ளு.  கீழே விழ இருந்தேன்.  தள்ளிவிட்டு எல்லாரும் அவரவர் காரியத்தில் கண்ணாக ஏற ஆரம்பிக்கின்றனர்.  ரங்க்ஸ் எப்படியோ முண்டி அடிச்சுண்டு வந்து என்னிடம் இருந்து சாமானை வாங்கிக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு என்னையும் அழைத்துச் சென்றார்.  ஒடுங்கிய வண்ணம் உட்கார இடம் கிடைச்சது.  உட்கார்ந்தோம்.  சாதாரணமாக ஸ்லீப்பர் க்ளாஸ் எனில் மூன்று பேர் உட்காரும் இடம்.  ஆறு பேர் அமர்ந்திருந்தோம்.  மேலும், மேலும் ஜனங்கள் வந்து கொண்டிருந்தனர்.  ஒரே குட்கா வாசனை, சிகரெட், பீடி வாசனை.

சொகுசாய்ப் பயணம் செய்து பழக்கப்பட்டுப் போன உடம்பும், மனமும் பலமாக ஆக்ஷேபிக்க, அதை அடக்கத் தெரியாமல் அழுகையும், கோபமும் முட்டிக் கொண்டு வந்தது.  இத்தனைக்கும் நடுவில் யார் ஏறினாங்க, யார் ஏறலைனு கவலையே இல்லாமல் வண்டி கிளம்பி வேகம் எடுத்தது.  ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்று நின்று போச்சு.  ஒவ்வொன்றிலும் பதினைந்து பேர் இறங்கினால் முப்பது பேர் ஏறினார்கள். மேலும் நெரிசல். பாத்ரூம் போகக் கூட வழியில்லை. கான்பூரில் சாப்பிட ஏதேனும் வாங்கலாம் என்றால் தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியலை.  வண்டிக்குள்ளேயே சமோசா கொண்டு வந்ததை ரங்க்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டார்.  அவருக்கு மாத்திரை சாப்பிட ஏதேனும் உணவு எடுத்துக் கொண்டாகணுமே!  வேறே வழியில்லை.

மதியம் பனிரண்டு மணிக்குச் சாப்பிட்ட தவா ரொட்டியெல்லாம் ஜீரணம் ஆகிவிட்டது.  வயிறு கூவியது.  தேநீர் வாங்கிக் கொடுத்தார். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு.  தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர்.  என்ன இருந்தாலும், என்ன அவசரம்னாலும் ராஜஸ்தான், குஜராத்தில் இந்தத் தேநீர் விஷயத்தில் ஏமாத்தவே மாட்டாங்க. வண்டியோட ஓடி வந்து கொடுப்பாங்க என்பதோடு நல்ல தேநீராகவும் கிடைக்கும். அடுத்து மஹாராஷ்ட்ரா!  இந்த மூணு மாநிலத்தையும் விட்டால் மற்ற எங்கேயும் நல்ல தேநீரே கிடைக்காது(தமிழ்நாடு உட்பட). வாங்கியதை அப்படியே கொட்டினேன்.  தண்ணீர் குடிக்கவும் பயம்.  நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை.  மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க.  கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும்.  அவ்வளவு ஏன்? இறங்கணும்னாக் கூடக் கஷ்டம்.  ஒரு ஸ்டேஷன் முன்னாடியே போய் வாசல் கிட்டே நின்னுக்கணும்.  கீழே காலை எல்லாம் வைச்சுக்கவே முடியலை.  காலடியில் மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.  மேலே சாமான்கள் வைக்கும் இடத்திலும் காலைத் தொங்கப் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர்.  இத்தனைக்கும் மேல் ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த சாமான்கள் வேறே!

இரவு பத்தேகாலுக்குச் சித்ரகூடம் போகும் னு சொன்ன வண்டி ஒரு மணி ஆகியும் போகலை.  அதுக்குள்ளே வண்டியில் வந்த இரண்டு பண்டிட்கள் எங்களுக்குச் சிநேகமாக அவங்க சித்ரகூடத்தில் இறங்குவதால் எங்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னார்கள்.  அதே போல் நட்ட நடு இரவில் இரண்டரை மணிக்கு வண்டி சித்ரகூடத்தை அடைந்ததும், எங்களையும் இறக்கி சாமான்களையும் இறக்கி ஒரு ஆட்டோ பார்த்து அமர்த்தி, போக வேண்டிய ஹோட்டலையும் சொல்லி அனுப்பி வைத்தார்கள்.  இது வரை எல்லாம் நல்லாவே நடந்தது.  ஆனால் போன இடத்தில் அந்த ஹோட்டலில் இடம் கிடைச்சதா?  ம்ஹ்ஹும், ஹோட்டலில் அழைப்பு மணியை அழுத்த, அழுத்த யாருமே வந்து திறக்கவே இல்லை.  ஆட்டோக்காரருக்கு அந்த இரவில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் செல்ல அழைப்பு மேல் அழைப்பு வருது.  ஆனால் நாங்களோ சாமான்களோடு வண்டியில்.  அவருக்கோ போயாகணும்! 

மறுபடி வேறே ஹோட்டலைத் தேடி ஆட்டோ சென்றது! நல்ல ஹோட்டலாகக் கிடைத்திருக்கக் கூடாதோ!

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 18, 2013, 11:21:53 PM11/18/13
to மின்தமிழ்
கடவுளே!!!.. எத்தனை எத்தனை விதமான அனுபவங்கள்.. அத்தனையும், தங்களைப் பின்பற்றி, ஸ்ரீராமரின் பாத தரிசனம் செய்ய விழைவோருக்குக் கட்டாயம் உதவும். நாங்கள் சித்ரகூடம், வண்டியில் சென்றதால், இது எல்லாம் கண்ணில் படலை...எத்தனை சிரமங்களோடு யாத்திரை செய்திருக்கிறீர்கள்!!!!...பகிர்வு, மனதை நெகிழச் செய்கிறது..

மிக அருமையாக வழிகாட்டும் தொடர்!!!!!!....

2013/11/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 19, 2013, 12:59:09 AM11/19/13
to mintamil

2013/11/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ஶ்ரீராமனின் பாதையில் --சித்திரவதையுடன் சித்திரகூடப் பயணம்!

 கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தப்போ எதிரே இருந்த கான்டீனில் தெரிஞ்ச முகமாத் தெரியவே, சாமானை விட்டுத் தள்ளியும் போகாமல் அங்கே இருந்தே உற்றுப் பார்த்தேன்.  அதுக்குள்ளாக அந்த முகமும் என்னைப் பார்த்து, "இரு, வரேன்!" என்று ஜாடை காட்டியது. சீ, எனக்கிருந்த குழப்பத்தில் அந்த முகம் ரங்க்ஸுக்குச் சொந்தம் என்று புத்தியில் உறைக்கவே ஒரு நிமிடம் ஆயிற்று.

ஓ! இது தான் ஆசை முகம் மறந்து போச்சேயா?

சொ,வி 

Geetha Sambasivam

unread,
Nov 19, 2013, 4:06:32 AM11/19/13
to மின்தமிழ்
அட?? நீங்க சித்ரகூடம் போயிருக்கீங்களா?  சொல்லவே இல்லையே?  முன்னாலேயே உங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமே!

2013/11/19 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 19, 2013, 4:07:00 AM11/19/13
to மின்தமிழ்
ஹாஹாஹா, அதே, அதே, சபாபதே! :))))

2013/11/19 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 19, 2013, 4:25:45 AM11/19/13
to மின்தமிழ்
ஆமாம் அம்மா!!!. மாமனார் மாமியாருடன் காசியாத்திரை செய்த போது சித்ரகூடம், நைமிசாரண்யம் எல்லாம் போனேன்..... 

2013/11/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Innamburan S.Soundararajan

unread,
Nov 19, 2013, 7:49:46 AM11/19/13
to mintamil
சரி.சரி. அப்டியென்ன பெரிய விஷயம்னா கேட்கிறீர்கள். நேற்றிரவு டின்னருக்கு வந்தார். அவர் கிட்ட பிரஸ்தாபித்தேன். கவனமாகக் கேட்டுக்கொண்ட அவர் சொன்னார்,
'அப்பனே! இது மாபெரும் சாதனை. அதுவும் ரங்க்ஸ்ஸை வச்சுக்கிணு. என் கூட டென்சிங்க் தான் இருந்தான். ஆனால் கீதா சாதனைக்கு முன்னால் நாங்கள் செய்ததெல்லாம் ஈடா? என்று. யார் தெரியுமோ? எவெரெஸ்ட் ஏறிய சாகச வீரர் சர் எட்மண்ட் ஹில்லாரி.

எல்லாம் ஹிலேரியஸ் தான், ஆசுப்போச்சுன்னு முடிஞ்சப்றம்.

2013/11/19 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
ஆமாம் அம்மா!!!. மாமனார் மாமியாருடன் காசியாத்திரை செய்த போது சித்ரகூடம், நைமிசாரண்யம் எல்லாம் போனேன்..... 

2013/11/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>
அட?? நீங்க சித்ரகூடம் போயிருக்கீங்களா?  சொல்லவே இல்லையே?  முன்னாலேயே உங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமே!

--

கி.காளைராசன்

unread,
Nov 19, 2013, 8:03:24 AM11/19/13
to mintamil, பார்வதி இராமச்சந்திரன்.
வணக்கம்.

2013/11/19 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
ஆமாம் அம்மா!!!. மாமனார் மாமியாருடன் காசியாத்திரை செய்த போது சித்ரகூடம், நைமிசாரண்யம் எல்லாம் போனேன்..... 
மதுரை அல்லது திருச்சியிலிருந்து நைமிசாரண்யத்திற்கு எப்படிச் செல்வது?
என்று கூறி உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்பன்

Geetha Sambasivam

unread,
Nov 19, 2013, 10:45:56 PM11/19/13
to மின்தமிழ், பார்வதி இராமச்சந்திரன்.
வணக்கம் சகோதரர் காளைராஜன்,

நாங்க நைமிசாரண்யமும் போனோம்.  எழுதுவேன்.  கொஞ்சம் பொறுங்க.  ஆனால் நீங்க லக்னோவைத் தலைமையிடமாய்க் கொண்டு செல்வது சிறப்பு.  ரயிலில் சென்றீர்களானால் சென்னை-லக்னோ நேரடி ரயில் உள்ளது.  லக்னோ சென்று அங்கே ஏதேனும் ஹோட்டலில் தங்கலாம்.  அல்லது முதலில் அங்கிருந்து அயோத்தி சென்று, அங்கே இரு நாட்கள் தங்கிப் பார்த்துவிட்டு மீண்டும் லக்னோ அல்லது கான்பூர் வந்தால்  அங்கிருந்து சித்திரகூடம் செல்லலாம்.  லக்னோவிலிருந்து சித்திரகூடம் செல்வது எனில் கட்டாயம் முன் பதிவு வேண்டும்.  கான்பூரிலிருந்து செல்லத் தேவையில்லை.  அந்த ரயில் முழுவதுமே பொதுப் பெட்டிகள் தான். அவ்வளவு கூட்டமும் இருக்காது.  உட்கார்ந்து போகலாம்.  சித்திரகூடத்தில் இரு நாட்கள்.  பின்னர் அங்கிருந்து மீண்டும் கான்பூருக்கு வந்து இரவு தங்கி மறுநாள் காலை பிட்டூர் வால்மீகி ஆசிரமம் பார்த்த பின்னர், அங்கிருந்தே நேரே லக்னோ வந்து அங்கே அன்று மதியம் தங்கி மறுநாள் காலை எட்டு மணிக்கு நைமிசாரண்யம் கிளம்பினால் எல்லாம் பார்த்துவிட்டு வர மாலை ஆறு மணி ஆகிவிடும். 

ஆகவே பயணம் திட்டமிட்டு அதற்கேற்றாற்போல் லக்னோவிலிருந்து சென்னை திரும்ப டிக்கெட் எடுக்க வேண்டும்.  விமானத்தில் சென்றதுக்கே எங்களுக்குப் பத்து நாட்கள் ஆயின.  பயணம் சிறக்க வாழ்த்துகள்.

அன்புடன்,

கீதா சாம்பசிவம்.

2013/11/19 கி.காளைராசன் <kalair...@gmail.com>
--

Geetha Sambasivam

unread,
Nov 19, 2013, 10:51:44 PM11/19/13
to மின்தமிழ்
ஹாஹாஹாஹா!

2013/11/19 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 22, 2013, 6:34:36 AM11/22/13
to மின்தமிழ்

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில்! தொடர்ச்சி!

மடிக்கணினிக்கு என்னமோ உடம்பு. நேத்திக்குப் பூராவும் ஓய்வு எடுத்துண்டதும், இன்னிக்கு டாக்டரைப் பார்த்ததும், தானே சரியாயிடுத்து. அது கிட்டே ரொம்பக் கோபமா வந்தது.  ஆனால் கடந்த இரு நாட்களும் எதுவுமே சரியில்லை.  ஒரே பிரச்னை மேல் பிரச்னை.  நேத்திக்குக் கோவிலுக்குப் போய்ப் பெருமாளைப் பார்த்து "ஹெலோ" சொன்னதும் கொஞ்சம் மனம் லேசாச்சு. இம்முறை ஒரு நிமிஷம் நிக்க முடிஞ்சது. நம்பெருமாளும் எப்போவும் போல நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சிண்டார். இப்போ நம்ம சித்ரகூடப் பயணத்தைத் தொடருவோமா? 
*******************************************************************************

சித்ரகூடம் பாதி நகரம் உத்தரப் பிரதேசத்திலும், பாதி நகரம் மத்தியப் பிரதேசத்திலும் உள்ளது.  உத்தரப் பிரதேசப் பகுதி தாண்டினதுமே நல்ல வெளிச்சம் இருக்கு.  அதாவது மின் விநியோகம் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது.  ஆனாலும் எங்களால் ஹோட்டல்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  முதலில் சொன்ன ஹோட்டலில் இருந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் போயிருப்போமோ என்னமோ!  ஒரே ஒரு ஹோட்டல் திறந்திருந்தது.  படிகள் ஏறிப் போகணும். ஆனால் நானும் வந்து அறையைப்பார்க்கணும்னு எங்க இரண்டு பேருக்குமிடையே பேசப்படாத ஒரு ஒப்பந்தம்.  ஆகவே வேறே வழியில்லாமல் இறங்கினேன்.  இந்த ஆட்டோக்களே தனிப்பட்ட முறையில் இருக்கின்றன.  உயரக் காலைத் தூக்கி வைச்சு ஏறணும். மடிக்க முடியாத முழங்காலோடு ஏறவும், இறங்கவும் கஷ்டம்.  ஹோட்டலுக்கு வேறே பத்துப் படிகள் ஏறணும்.  ஏறி அங்கே போனால் அங்கே இருந்தவரை எழுப்பினோம்.

முதலில் அறை இல்லைனு சொன்னவர், என்னைப் பார்த்ததும் இரவு தங்கிப் படுத்துக்க இடம் வேணும்னா தரேன்னு சொன்னார்.  அது ஏதானும் அறையிலிருக்கும்னு நினைச்சால், கடவுளே, அங்கேயே ஒரு ஒதுக்குப்புறமான ஹாலில் கிட்டத்தட்டப் பத்துப் பேர் படுத்து உறங்கினார்கள்.  அவங்களைக் கொஞ்சம் ஒதுங்கச் சொல்லிட்டு நமக்கு இடம் கொடுப்பாங்களாம்.  இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு திரும்ப நினைச்சோம்.  அதுக்குள்ளே எங்க முகத்தைப் பார்த்த அந்த நபர், "இதெல்லாம் ராயல் குடும்பம் போலிருக்கு"னு நினைச்சிருப்பார் போல!  உங்களுக்கெல்லாம் சரியா வராதும்மானு சொல்லிட்டு, தேவி பகவதி ஹோட்டல் என்னும் பெயரை ஆட்டோக்காரரிடம் சொல்லி, வழியையும் சொல்லி அங்கே கட்டாயம் அறை கிடைக்கும் என்றும், ரொம்ப ரொம்ப வசதியாய் இருக்கும்னு சொன்னார்.

ஆஹானு மகிழ்ந்து போய் ஆட்டோவில் மறுபடி ஏறினோம்.  கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கும் மேலே போனதும் அந்த தேவி பகவதி ஹோட்டல் வந்தது.  ஆட்டோ அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் நின்றது.  நின்றது ஒரு மேடான இடம்.  அங்கிருந்து இறங்கிப் பள்ளத்தில் போய் மலைச்சாரலில் இன்னும் பள்ளத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.  அது தான் தேவி பகவதி ஹோட்டல்.  பகவானே!  இப்போத் தானே கட்டிட்டு இருக்காங்க.  அதோடு போற பாதையே சரியில்லையே!  இங்கே எப்படிப் போறது? நான் வரமாட்டேன்னு அடம் பிடிக்க, அந்த ஹோட்டல் கதவு திறந்து விளக்குப் போடப்பட்டது.  ஆட்டோக்காரரும் அவருடைய உதவியாளும் போய்ப் பேசினாங்க.  அறை இருப்பதாகச் சொல்லி இருக்காங்க.  ஆகவே ஆட்டோக்காரர், பிரச்னை தீர்ந்ததுனு நிம்மதியா சாமானைத் தூக்க ஆரம்பிச்சார். நான் ஆக்ஷேபிக்க, ரங்க்ஸோ இந்த நேரத்தில் வேறே எங்கே போய்த் தேடுவோம், பேசாமல் வா, என்று அதட்ட அரை மனசாப் போனேன்.

அங்கே மாடியில் (லிஃப்டெல்லாம் இல்லை) படிகள்.  ஒவ்வொன்றுக்கும் குறைந்தது முக்காலடி இருக்கும். :( படி ஏறிப் போனதும் கடைசியில் இருந்த அறை ஒன்றைக் காட்டினார். பத்துக்குப் பத்து அறைக்குள்ளேயே குளியல், கழிவறை போக மீதம் இருந்த இடத்தில் கட்டிலைப் போட்டு அழுக்கான படுக்கை.  அதிலே எப்படிப் படுக்கிறது? அதுக்குள்ளே ஆட்டோக்காரங்க சாமானைக் கொண்டு அங்கே வைச்சாச்சு.  அந்த விடுதிக் காப்பாளர்னு சொல்லக் கூடிய ஒரு நபர் (இளைஞன்) அங்கே வந்தார். வாடகை 450 ரூ என்றார்.  இந்த அறைக்கா? என நான் கேட்க, இப்போ இந்த வாடகை, நவம்பரில் ஆயிரம் ரூபாய் வாங்குவோம்னு சொன்னார்.  அந்த ஹோட்டலில் கீழ்த்தளம் மிகப் பெரிய ஒரு கூடம் (கிட்டத்தட்ட நூறு பேர் சாப்பிடலாம்) ஒன்றோடும், அதைத் தாண்டி சமையலறை, வெளியே கழிவறை, தண்ணீர்க் குழாய்கள் என்றும் ஹாலில் நுழையும் இடத்துக்கு அருகிருந்து மாடிப்படிகளோடும் காணப்பட்டது.  மாடியில் ஒரு தளம் தான் கட்டி முடிஞ்சிருந்தது.  இரண்டாம் தளம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முழுதும் கட்டி முடிச்சதும், கீழே சாப்பாடும், மேலே தங்குமிடமாகவும் இருக்குமாம். 

அதெல்லாம் சரி, இப்போ சாப்பாடுக்கு என்ன செய்யறது?  முக்கியமாக் காலைத் தேநீர் கிடைக்குமானு கேட்டதுக்கு அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டார் அந்த வாலிபர்.  கடவுளே!  எங்கே போய்க் குடிக்கிறதுனா?  நீங்க போய்ப் பாருங்க ஏதேனும் டீக்கடை இருந்தால் குடிச்சுக்கலாம்னு பதில் வருது.  சாப்பாடும் அப்படியேனு சொல்லிட்டார். இங்கே இன்னும் இரண்டு நாள் தங்கணுமா?  மாடி ஏறி, ஏறி இறங்கி ரோடுக்குப் போய், அங்கிருந்து ஆட்டோ ஏதும் கிடைச்சால் கடைத்தெருக்குப் போய் அப்புறமாத் தான் சாப்பிட ஏதானும் கிடைக்கும்.  இங்கே நீங்க போட்டுத் தர மாட்டீங்களா, குறைந்த பக்ஷம் தேநீர் மட்டும் என்று கேட்டதுக்குப் பிடிவாதமாக அந்த இளைஞர் மறுத்துவிட்டார்.

விதியேனு ஒருத்தரை பார்த்து விழித்த வண்ணம் விளக்கை அணைச்சுட்டுப் படுத்தோம்.  இதுக்குள்ளாக மணி நாலு ஆகி இருந்தது.  எங்கே இருந்து தூங்க?  ஶ்ரீராமர் சித்திரகூடம் வந்து கஷ்டப்பட்டாரோ இல்லையோ, தெரியலை, நாம் கஷ்டப்படறோம்.  இங்கேருந்து எப்போத் திரும்பிப் போறது? திடீர்னு எனக்குக் கவலை வர, நாளைக்கு மதியம் ரயிலிலேயே திரும்பிடலாம்னு சொல்ல, லக்னோவோ, கான்பூரோ போய் இருந்தாலும் அங்கே எல்லாம் பார்க்க இரண்டு நாளைக்குள் தான் ஆகும்.  நம்ம டிக்கெட் புதன் கிழமைக்குத் தான் அதுவரை அங்கே சும்மா உட்கார முடியுமானு அவர் திரும்பக் கேட்க இரண்டு பேருக்கும் விடியும் வரை விவாதம். விடிஞ்சதும், பல் தேய்த்து விட்டுக் கீழே இறங்கினோம்.  அருகில் டீக்கடை இருக்கானு கேட்டுக் கொண்டே போய்க் கொஞ்ச தூரத்தில் தென்பட்ட ஒரு டீக்கடையில் தேநீர் குடிச்சோம். சகிக்கவில்லை.  திரும்பி ஹோட்டலுக்கு வந்து துணி துவைக்க முடியுமானு கேட்டதுக்கு! அப்பாடா, அந்த இளைஞன் தோய்த்து உலர்த்தக் கொடி கூடக் கட்டி இருக்கோம்.  உங்க அறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில் பாருங்கனு உதவியாக ஒரு வார்த்தை சொல்ல, நான் என் துணி, அவர் துணினு எல்லாத்தையும் தோய்த்து உலர்த்திப் பின் குளித்தேன். 

நல்லவேளையா( என்னனு எங்களுக்கே தெரியலை) வெந்நீர் ஒரு பக்கெட் கொடுத்தான்.  ஆனால் அது வெந்நீர்னு சத்தியம் பண்ணணும். பரவாயில்லைனு அதிலே நான் மட்டும் குளிச்சேன்.  இரண்டு பேரும் டிபன் எங்கேயானும் சாப்பிட்டுட்டுச் சுத்திப் பார்க்கக் கிளம்பினோம்.  வெளியே வந்து ரோடில் நின்று ஒவ்வொரு ஆட்டோவாகக் கூப்பிட்டோம்.

Geetha Sambasivam

unread,
Nov 28, 2013, 6:34:19 AM11/28/13
to மின்தமிழ்

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் --தொடர்ச்சி!

முன் பதிவு

அந்த ஆட்டோக்கள் எல்லாமே ஷேர் ஆட்டோக்கள் தான். நாங்க அதிலே போய்க் கடைத்தெருவிலே இறங்கிக்கலாம்னு தெரியாம ஒவ்வொருத்தரையாக் கூப்பிட்டோம்.  கடைசியிலே ஒருத்தர் கடைத்தெருப்பக்கம் போன ஒரு ஆட்டோவை நிறுத்தி எங்களுக்கு ஏற்பாடு பண்ணிப் பேசிக்கொள்ளச் சொன்னார்.   ரங்க்ஸ் சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடணும்ங்கறதாலே முதல்லே நாங்க ஒரு ஹோட்டலுக்குக்கூட்டிப் போகச் சொன்னோம்.  அங்கிருந்து சித்திரகூடத்தின் சார் தாம் என அழைக்கப்படும் நான்கு இடங்களுக்கும் கூட்டிச் செல்லச் சொன்னோம்.

சித்திரகூடத்து மலையடிவாரத்தையே கிரி வலமும் வருகின்றனர்.  அதைப் பரிக்ரமா என்று சொல்கிறார்கள்.  நாங்கள் இருந்த பகுதியும் சித்திரகூடத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களும் மத்தியப் பிரதேசப் பகுதியில் இருந்தன. சார்தாமில் முதலில் அனுமான் தாரா என்னும் மலை.  600 படிகளுக்கு மேல் ஏறிப் போய் அனுமனைப் பார்க்கணும்.  துளசி இங்கே தான் ராம் சரித மானஸ் எழுதினதாகவும் சொல்கிறார்கள்.  ஆனால் எங்களைப் பார்த்ததுமே அனைவரும் அனுமான் தாராவுக்கு நீங்க போக முடியாது.  மலைப்படிகள். ஏறுவதும் கஷ்டம்;  இறங்குவதும் கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.  சரினு மத்த மூணு இடங்களுக்கு ஆட்டோக்காரரிடம் பேசினோம்.  வழக்கம் போல் "ரிஜர்வ்ட்" என்று கேட்டு ஆட்டோவை அவங்க சட்டப்படி எங்களுக்கு மட்டுமே பேசிக் கொண்டோம். ஆட்டோக்காரப் பையருக்கு 20 வயதுக்குள் தான் இருக்கும். எல்லா இடமும் கூட்டிப் போய் விட்டு மதியம் சாப்பாட்டுக்கும் ஹோட்டலுக்குப் போய்ப் பின்னர் அங்கிருந்து மறுநாள் கிளம்புவதற்கு ரயிலில் முன்பதிவு செய்யணும்னு அதையும் கேட்டுக் கொண்டோம். எல்லாவற்றுக்கும் அழைத்துச் செல்வதாய்ச் சொன்னார் அந்தப் பையர்.  நாங்களும் நம்பியதால் வேறு யாரிடமும் இதைப் பத்திக் கேட்கவே இல்லை.

அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் காலை ஆகாரம் எடுத்துக் கொண்டோம்.  நான் வழக்கம் போல் சாப்பிடப் படுத்த, ரங்க்ஸோ, சாப்பிட்டால் தான் எல்லாத்தையும் பார்க்கத் தெம்பு வரும்.  ஒழுங்கா சாப்பிடுனு மிரட்ட, நாஷ்டா தட்டில் சூடான ஜிலேபிகளோடு பூரி, சப்ஜி, தயிர், ஊறுகாய் இத்தனையும் வர, ஜிலேபிகளைப் பார்த்த பரவசத்தில் நானும் நாஷ்டானு கூவ. நாஷ்டாவும் வந்தது.  சாப்பிட்டுவிட்டுக் காஃபி இங்கே சாப்பிட்டுப் பார்க்கலாம்னு (கொழுப்புத் தானே னு என் ம.சா. கேட்குது) காஃபி ஆர்டர் பண்ணினோம்.  சகிக்காத காஃபி வர, அவர் எனக்கு உபசாரம் பண்ண, நான் அவருக்கு  உபசாரம் பண்ண கொடுத்த காசுக்குக் காஃபியைக் கொட்டாமல் (பின்னே?  காலம்பர காஃபி, டீ கிடைக்காமல் தவிச்ச தவிப்பு பாடம் கத்துக் கொடுத்துடுச்சே) குடிச்சு வைச்சுட்டு ஆட்டோவில் ஏறினோம்.  அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும்.  என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு.  இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு.  ஆட்டோவில் ஏறிக் கொண்டு டிக்கெட் பார்க்கப்போனால் திறக்கவே இல்லை.

முதலில் அனுமான் தாரா தான் இல்லையே;  அடுத்து என்னனு பார்த்தால் சதி அநசூயா ஆசிரமம்.  அங்கே செல்லும் வழியில் ஒரு கோயிலையும், ஒரு பாறையையும் காட்டினார்கள்.  அங்கே தான் ஶ்ரீராமரும், சீதையும் தனித்திருந்தபோது காகாசுரன் வந்து சீதையைத் தொந்திரவு செய்த இடமாம். அங்கே ஒரு கோயிலும் இருக்கிறது இப்போது.  பாறையில் சிந்தூரப் பொடிகளைத் தூவி  ஒரு பண்டிட் உட்கார்ந்து காசு பண்ணிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் மேலே ஏறிப் போகணும். போனோம்.

இந்தப் பாறை தான், ஶ்ரீராமர், சீதை அமர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.  சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருப்பவர் தான் பண்டிட்.  பின்னால் தெரிவது மந்தாகினி நதி.

அதே காட்சி  

 மந்தாகினி நதிக்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு தொழிலாளி. 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 29, 2013, 2:10:11 AM11/29/13
to மின்தமிழ்
புனித தலங்களில் ஆட்டோக்காரர்கள் ஜாக்கிரதைன்னு போர்டு மாட்டலாம் போல.. என்னென்ன பிரச்னை வந்துதோன்னு சங்கடமா இருக்கு...

சமீபத்துல சென்னை வந்தப்ப, நங்கநல்லூர்ல  ஒரு ஆட்டோக்காரர் எங்ககிட்ட முன்கூட்டியே எச்சரிச்சுட்டார். மீட்டர் போடமாட்டேன். அவர் கேட்ட பைசா தரணும், போற வழில போலீஸ்கிட்ட சொல்லக்கூடாது இப்படி..அவர் மட்டுமில்லாம அத்தனை ஆட்டோக்காரர்களும் சொல்லி வச்ச மாதிரி இதையே சொன்னாங்க..

2013/11/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 29, 2013, 4:10:10 AM11/29/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/11/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில்! தொடர்ச்சி!

மடிக்கணினிக்கு என்னமோ உடம்பு. நேத்திக்குப் பூராவும் ஓய்வு எடுத்துண்டதும், இன்னிக்கு டாக்டரைப் பார்த்ததும், தானே சரியாயிடுத்து. அது கிட்டே ரொம்பக் கோபமா வந்தது.  ஆனால் கடந்த இரு நாட்களும் எதுவுமே சரியில்லை.  ஒரே பிரச்னை மேல் பிரச்னை.  நேத்திக்குக் கோவிலுக்குப் போய்ப் பெருமாளைப் பார்த்து "ஹெலோ" சொன்னதும் கொஞ்சம் மனம் லேசாச்சு. இம்முறை ஒரு நிமிஷம் நிக்க முடிஞ்சது. நம்பெருமாளும் எப்போவும் போல நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சிண்டார். இப்போ நம்ம சித்ரகூடப் பயணத்தைத் தொடருவோமா? 
*******************************************************************************

சித்ரகூடம் பாதி நகரம் உத்தரப் பிரதேசத்திலும், பாதி நகரம் மத்தியப் பிரதேசத்திலும் உள்ளது.  உத்தரப் பிரதேசப் பகுதி தாண்டினதுமே நல்ல வெளிச்சம் இருக்கு.  அதாவது மின் விநியோகம் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது.  ஆனாலும் எங்களால் ஹோட்டல்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  முதலில் சொன்ன ஹோட்டலில் இருந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் போயிருப்போமோ என்னமோ!  ஒரே ஒரு ஹோட்டல் திறந்திருந்தது.  படிகள் ஏறிப் போகணும். ஆனால் நானும் வந்து அறையைப்பார்க்கணும்னு எங்க இரண்டு பேருக்குமிடையே பேசப்படாத ஒரு ஒப்பந்தம்.  ஆகவே வேறே வழியில்லாமல் இறங்கினேன்.  இந்த ஆட்டோக்களே தனிப்பட்ட முறையில் இருக்கின்றன.  உயரக் காலைத் தூக்கி வைச்சு ஏறணும். மடிக்க முடியாத முழங்காலோடு ஏறவும், இறங்கவும் கஷ்டம்.  ஹோட்டலுக்கு வேறே பத்துப் படிகள் ஏறணும்.  ஏறி அங்கே போனால் அங்கே இருந்தவரை எழுப்பினோம்.

முதலில் அறை இல்லைனு சொன்னவர், என்னைப் பார்த்ததும் இரவு தங்கிப் படுத்துக்க இடம் வேணும்னா தரேன்னு சொன்னார்.  அது ஏதானும் அறையிலிருக்கும்னு நினைச்சால், கடவுளே, அங்கேயே ஒரு ஒதுக்குப்புறமான ஹாலில் கிட்டத்தட்டப் பத்துப் பேர் படுத்து உறங்கினார்கள்.  அவங்களைக் கொஞ்சம் ஒதுங்கச் சொல்லிட்டு நமக்கு இடம் கொடுப்பாங்களாம்.  இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு திரும்ப நினைச்சோம்.  அதுக்குள்ளே எங்க முகத்தைப் பார்த்த அந்த நபர், "இதெல்லாம் ராயல் குடும்பம் போலிருக்கு"னு நினைச்சிருப்பார் போல!  உங்களுக்கெல்லாம் சரியா வராதும்மானு சொல்லிட்டு, தேவி பகவதி ஹோட்டல் என்னும் பெயரை ஆட்டோக்காரரிடம் சொல்லி, வழியையும் சொல்லி அங்கே கட்டாயம் அறை கிடைக்கும் என்றும், ரொம்ப ரொம்ப வசதியாய் இருக்கும்னு சொன்னார்.

ஆஹானு மகிழ்ந்து போய் ஆட்டோவில் மறுபடி ஏறினோம்.  கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கும் மேலே போனதும் அந்த தேவி பகவதி ஹோட்டல் வந்தது.  ஆட்டோ அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் நின்றது.  நின்றது ஒரு மேடான இடம்.  அங்கிருந்து இறங்கிப் பள்ளத்தில் போய் மலைச்சாரலில் இன்னும் பள்ளத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.  அது தான் தேவி பகவதி ஹோட்டல்.  பகவானே!  இப்போத் தானே கட்டிட்டு இருக்காங்க.  அதோடு போற பாதையே சரியில்லையே!  இங்கே எப்படிப் போறது? நான் வரமாட்டேன்னு அடம் பிடிக்க, அந்த ஹோட்டல் கதவு திறந்து விளக்குப் போடப்பட்டது.  ஆட்டோக்காரரும் அவருடைய உதவியாளும் போய்ப் பேசினாங்க.  அறை இருப்பதாகச் சொல்லி இருக்காங்க.  ஆகவே ஆட்டோக்காரர், பிரச்னை தீர்ந்ததுனு நிம்மதியா சாமானைத் தூக்க ஆரம்பிச்சார். நான் ஆக்ஷேபிக்க, ரங்க்ஸோ இந்த நேரத்தில் வேறே எங்கே போய்த் தேடுவோம், பேசாமல் வா, என்று அதட்ட அரை மனசாப் போனேன்.

அங்கே மாடியில் (லிஃப்டெல்லாம் இல்லை) படிகள்.  ஒவ்வொன்றுக்கும் குறைந்தது முக்காலடி இருக்கும். :( படி ஏறிப் போனதும் கடைசியில் இருந்த அறை ஒன்றைக் காட்டினார். பத்துக்குப் பத்து அறைக்குள்ளேயே குளியல், கழிவறை போக மீதம் இருந்த இடத்தில் கட்டிலைப் போட்டு அழுக்கான படுக்கை.  அதிலே எப்படிப் படுக்கிறது? அதுக்குள்ளே ஆட்டோக்காரங்க சாமானைக் கொண்டு அங்கே வைச்சாச்சு.  அந்த விடுதிக் காப்பாளர்னு சொல்லக் கூடிய ஒரு நபர் (இளைஞன்) அங்கே வந்தார். வாடகை 450 ரூ என்றார்.  இந்த அறைக்கா? என நான் கேட்க, இப்போ இந்த வாடகை, நவம்பரில் ஆயிரம் ரூபாய் வாங்குவோம்னு சொன்னார்.  

கொடுமையான அனுபவம். 

தரத்தைப் பற்றிய சிந்தனை இவ்வகை ஹோட்டல் நிர்வாகிகளுக்கு இல்லை என்ரே நினைக்கின்றேன். 

சுபா

அந்த ஹோட்டலில் கீழ்த்தளம் மிகப் பெரிய ஒரு கூடம் (கிட்டத்தட்ட நூறு பேர் சாப்பிடலாம்) ஒன்றோடும், அதைத் தாண்டி சமையலறை, வெளியே கழிவறை, தண்ணீர்க் குழாய்கள் என்றும் ஹாலில் நுழையும் இடத்துக்கு அருகிருந்து மாடிப்படிகளோடும் காணப்பட்டது.  மாடியில் ஒரு தளம் தான் கட்டி முடிஞ்சிருந்தது.  இரண்டாம் தளம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முழுதும் கட்டி முடிச்சதும், கீழே சாப்பாடும், மேலே தங்குமிடமாகவும் இருக்குமாம். 

அதெல்லாம் சரி, இப்போ சாப்பாடுக்கு என்ன செய்யறது?  முக்கியமாக் காலைத் தேநீர் கிடைக்குமானு கேட்டதுக்கு அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டார் அந்த வாலிபர்.  கடவுளே!  எங்கே போய்க் குடிக்கிறதுனா?  நீங்க போய்ப் பாருங்க ஏதேனும் டீக்கடை இருந்தால் குடிச்சுக்கலாம்னு பதில் வருது.  சாப்பாடும் அப்படியேனு சொல்லிட்டார். இங்கே இன்னும் இரண்டு நாள் தங்கணுமா?  மாடி ஏறி, ஏறி இறங்கி ரோடுக்குப் போய், அங்கிருந்து ஆட்டோ ஏதும் கிடைச்சால் கடைத்தெருக்குப் போய் அப்புறமாத் தான் சாப்பிட ஏதானும் கிடைக்கும்.  இங்கே நீங்க போட்டுத் தர மாட்டீங்களா, குறைந்த பக்ஷம் தேநீர் மட்டும் என்று கேட்டதுக்குப் பிடிவாதமாக அந்த இளைஞர் மறுத்துவிட்டார்.

விதியேனு ஒருத்தரை பார்த்து விழித்த வண்ணம் விளக்கை அணைச்சுட்டுப் படுத்தோம்.  இதுக்குள்ளாக மணி நாலு ஆகி இருந்தது.  எங்கே இருந்து தூங்க?  ஶ்ரீராமர் சித்திரகூடம் வந்து கஷ்டப்பட்டாரோ இல்லையோ, தெரியலை, நாம் கஷ்டப்படறோம்.  இங்கேருந்து எப்போத் திரும்பிப் போறது? திடீர்னு எனக்குக் கவலை வர, நாளைக்கு மதியம் ரயிலிலேயே திரும்பிடலாம்னு சொல்ல, லக்னோவோ, கான்பூரோ போய் இருந்தாலும் அங்கே எல்லாம் பார்க்க இரண்டு நாளைக்குள் தான் ஆகும்.  நம்ம டிக்கெட் புதன் கிழமைக்குத் தான் அதுவரை அங்கே சும்மா உட்கார முடியுமானு அவர் திரும்பக் கேட்க இரண்டு பேருக்கும் விடியும் வரை விவாதம். விடிஞ்சதும், பல் தேய்த்து விட்டுக் கீழே இறங்கினோம்.  அருகில் டீக்கடை இருக்கானு கேட்டுக் கொண்டே போய்க் கொஞ்ச தூரத்தில் தென்பட்ட ஒரு டீக்கடையில் தேநீர் குடிச்சோம். சகிக்கவில்லை.  திரும்பி ஹோட்டலுக்கு வந்து துணி துவைக்க முடியுமானு கேட்டதுக்கு! அப்பாடா, அந்த இளைஞன் தோய்த்து உலர்த்தக் கொடி கூடக் கட்டி இருக்கோம்.  உங்க அறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில் பாருங்கனு உதவியாக ஒரு வார்த்தை சொல்ல, நான் என் துணி, அவர் துணினு எல்லாத்தையும் தோய்த்து உலர்த்திப் பின் குளித்தேன். 

நல்லவேளையா( என்னனு எங்களுக்கே தெரியலை) வெந்நீர் ஒரு பக்கெட் கொடுத்தான்.  ஆனால் அது வெந்நீர்னு சத்தியம் பண்ணணும். பரவாயில்லைனு அதிலே நான் மட்டும் குளிச்சேன்.  இரண்டு பேரும் டிபன் எங்கேயானும் சாப்பிட்டுட்டுச் சுத்திப் பார்க்கக் கிளம்பினோம்.  வெளியே வந்து ரோடில் நின்று ஒவ்வொரு ஆட்டோவாகக் கூப்பிட்டோம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Nov 29, 2013, 4:13:06 AM11/29/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/11/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் --தொடர்ச்சி!

முன் பதிவு

அந்த ஆட்டோக்கள் எல்லாமே ஷேர் ஆட்டோக்கள் தான். நாங்க அதிலே போய்க் கடைத்தெருவிலே இறங்கிக்கலாம்னு தெரியாம ஒவ்வொருத்தரையாக் கூப்பிட்டோம்.  கடைசியிலே ஒருத்தர் கடைத்தெருப்பக்கம் போன ஒரு ஆட்டோவை நிறுத்தி எங்களுக்கு ஏற்பாடு பண்ணிப் பேசிக்கொள்ளச் சொன்னார்.   ரங்க்ஸ் சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடணும்ங்கறதாலே முதல்லே நாங்க ஒரு ஹோட்டலுக்குக்கூட்டிப் போகச் சொன்னோம்.  அங்கிருந்து சித்திரகூடத்தின் சார் தாம் என அழைக்கப்படும் நான்கு இடங்களுக்கும் கூட்டிச் செல்லச் சொன்னோம்.

சித்திரகூடத்து மலையடிவாரத்தையே கிரி வலமும் வருகின்றனர்.  அதைப் பரிக்ரமா என்று சொல்கிறார்கள்.  நாங்கள் இருந்த பகுதியும் சித்திரகூடத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களும் மத்தியப் பிரதேசப் பகுதியில் இருந்தன. சார்தாமில் முதலில் அனுமான் தாரா என்னும் மலை.  600 படிகளுக்கு மேல் ஏறிப் போய் அனுமனைப் பார்க்கணும்.  துளசி இங்கே தான் ராம் சரித மானஸ் எழுதினதாகவும் சொல்கிறார்கள்.  ஆனால் எங்களைப் பார்த்ததுமே அனைவரும் அனுமான் தாராவுக்கு நீங்க போக முடியாது.  மலைப்படிகள். ஏறுவதும் கஷ்டம்;  இறங்குவதும் கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள்.  சரினு மத்த மூணு இடங்களுக்கு ஆட்டோக்காரரிடம் பேசினோம்.  வழக்கம் போல் "ரிஜர்வ்ட்" என்று கேட்டு ஆட்டோவை அவங்க சட்டப்படி எங்களுக்கு மட்டுமே பேசிக் கொண்டோம். ஆட்டோக்காரப் பையருக்கு 20 வயதுக்குள் தான் இருக்கும். எல்லா இடமும் கூட்டிப் போய் விட்டு மதியம் சாப்பாட்டுக்கும் ஹோட்டலுக்குப் போய்ப் பின்னர் அங்கிருந்து மறுநாள் கிளம்புவதற்கு ரயிலில் முன்பதிவு செய்யணும்னு அதையும் கேட்டுக் கொண்டோம். எல்லாவற்றுக்கும் அழைத்துச் செல்வதாய்ச் சொன்னார் அந்தப் பையர்.  நாங்களும் நம்பியதால் வேறு யாரிடமும் இதைப் பத்திக் கேட்கவே இல்லை.

அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் காலை ஆகாரம் எடுத்துக் கொண்டோம்.  நான் வழக்கம் போல் சாப்பிடப் படுத்த, ரங்க்ஸோ, சாப்பிட்டால் தான் எல்லாத்தையும் பார்க்கத் தெம்பு வரும்.  ஒழுங்கா சாப்பிடுனு மிரட்ட, நாஷ்டா தட்டில் சூடான ஜிலேபிகளோடு பூரி, சப்ஜி, தயிர், ஊறுகாய் இத்தனையும் வர, ஜிலேபிகளைப் பார்த்த பரவசத்தில் நானும் நாஷ்டானு கூவ. நாஷ்டாவும் வந்தது.  

நாஷ்டா என்றால் என்ன?

சாப்பிட்டுவிட்டுக் காஃபி இங்கே சாப்பிட்டுப் பார்க்கலாம்னு (கொழுப்புத் தானே னு என் ம.சா. கேட்குது) காஃபி ஆர்டர் பண்ணினோம்.  சகிக்காத காஃபி வர, அவர் எனக்கு உபசாரம் பண்ண, நான் அவருக்கு  உபசாரம் பண்ண கொடுத்த காசுக்குக் காஃபியைக் கொட்டாமல் (பின்னே?  காலம்பர காஃபி, டீ கிடைக்காமல் தவிச்ச தவிப்பு பாடம் கத்துக் கொடுத்துடுச்சே) குடிச்சு வைச்சுட்டு ஆட்டோவில் ஏறினோம்.  அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும்.  என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு.  இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு.  ஆட்டோவில் ஏறிக் கொண்டு டிக்கெட் பார்க்கப்போனால் திறக்கவே இல்லை.

:-))

படங்களும் நன்றாக இருக்கின்றன.

சுபா
 
முதலில் அனுமான் தாரா தான் இல்லையே;  அடுத்து என்னனு பார்த்தால் சதி அநசூயா ஆசிரமம்.  அங்கே செல்லும் வழியில் ஒரு கோயிலையும், ஒரு பாறையையும் காட்டினார்கள்.  அங்கே தான் ஶ்ரீராமரும், சீதையும் தனித்திருந்தபோது காகாசுரன் வந்து சீதையைத் தொந்திரவு செய்த இடமாம். அங்கே ஒரு கோயிலும் இருக்கிறது இப்போது.  பாறையில் சிந்தூரப் பொடிகளைத் தூவி  ஒரு பண்டிட் உட்கார்ந்து காசு பண்ணிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் மேலே ஏறிப் போகணும். போனோம்.

இந்தப் பாறை தான், ஶ்ரீராமர், சீதை அமர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.  சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருப்பவர் தான் பண்டிட்.  பின்னால் தெரிவது மந்தாகினி நதி.

அதே காட்சி  

 மந்தாகினி நதிக்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு தொழிலாளி. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Nov 29, 2013, 4:31:13 AM11/29/13
to மின்தமிழ், Subashini Tremmel
नाश्ता = காலை ஆகாரம். :)

2013/11/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 29, 2013, 4:53:34 AM11/29/13
to மின்தமிழ்

சதி அநுசுயா ஆசிரமம்--சித்திரகூடம் தொடர்ச்சி!

அநசூயா ஆசிரமம் குறித்த அறிவிப்புப் பலகை

ஜெய் பஜ்ரங்க் பலி, செல்லும் வழியில் காணப்பட்ட ஆஞ்சநேயர் வடிவம்.  தரையோடு தரையாக புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறார்.

அநசூயா, அத்ரிக்கு மகனாய்ப் பிறந்த தத்தாத்ரேயர் பிறந்த இடம். மற்றப் படங்கள் சரியாக வரலை. ஆகையால் பகிரவில்லை. :(

Geetha Sambasivam

unread,
Nov 30, 2013, 5:02:03 AM11/30/13
to மின்தமிழ்

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில்-- தொடர்ச்சி குப்தகோதாவரி

சார்தாமில் பார்க்கவேண்டிய முதல் இடமான ஹநுமான் தாரா தான் போகாதீங்கனு சொல்லிட்டாங்க. அடுத்து சதி அநுசுயா ஆசிரமம் பார்த்தாச்சு.  அங்கேயும் மலை ஏற்றம் உண்டு.  தவிர்த்தோம். வேறே வழியே இல்லை. அடுத்தடுத்து அலைச்சல்கள்.  கோயில்கள் படியே நிறைய ஏறணும், இறங்கணும்.  அவையே பூமியிலிருந்து உயரமாக ஐம்பது, அறுபது படிகளோடு இருந்தன.  இதிலே மலையும் ஏறினால் நேரமும் ஆகும்.  உடம்பும் முடியாமல் போயிடும்.  அஹோபிலம் நவ நரசிம்மர் பார்த்தப்போக் கூட (2010 ஆம் ஆண்டு ஜனவரியில் ) கஷ்டப்படலை.  அதிலே மலைகளும் ஏறியாகணும்.  பிடிக்க ஒண்ணும் இருக்காது.  மலைப்பாறையிலே ஏறித் தாண்டி மேலே ஏறினு எல்லாம் போகணும்.  ஒரு பக்கம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும். பாறையிலிருந்து தொங்கும் சங்கிலிகளைப் பிடித்த வண்ணம்  தாண்டிப் போகணும். எல்லா வித்தைகளும் பண்ணியாச்சு.  இப்போ வேண்டாம்னு அரை மனசோடத் தான் முடிவு செய்தோம்.  

சதி அநசூயா ஆசிரமத்துக்கு அடுத்து குப்த கோதாவரி.  இங்கே இரண்டு குகைகள் இருக்கின்றன.  இங்கே ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர் ஆகிய மூவரும் பதினோரு ஆண்டுகள் வசித்ததாய்ச் சொல்கின்றனர்.  குகைக்குள் போகும் முன்னர் செருப்பை எல்லாம் கழட்டி வைச்சுட்டுப் போகணும்.    நுழைவுச் சீட்டு உண்டு.  இரண்டு குகைக்கும் சேர்த்து எடுக்கணும்.  முதல் குகைக்குள் போகப் படிகள் சில ஏறணும்.

இந்தப்  படிகளில் ஏறி மேலே சென்று மறுபடி மலைப்பாதையில் சரிவில் இறங்கி முதல் குகைக்குப் போகணும்.  மேலே ஏறியதுமே அங்கே சில பண்டாக்கள் அமர்ந்து கொண்டு ஒரு இலைத் தட்டில் குங்குமம், மஞ்சள், ஒரு செம்பருத்திப் பூ போன்றவற்றை வைத்து அம்மாதிரிப் பல தட்டுக்களை வைத்து ஒரு தட்டு இருபது ரூபாய் என விற்பனை செய்தனர்.   அதை வாங்கிக் கொண்டு தான் போக வேண்டும் என்றும், இல்லைனால் ஶ்ரீராமர், சீதையின் அருள், கருணை, ஆசிகள் கிடைக்காது என வற்புறுத்திக் கொண்டிருந்தனர்.  நாங்க பொதுவாகவே இம்மாதிரியான பிரபலக் கோயில்களுக்குச் செல்கையில் எதுவுமே வாங்காமல் தான் போவோம்.  வாங்கிப் போனால் அதை சுவாமிக்குச் சார்த்துவதில்லை என்பதோடு தூக்கி ஒரு பக்கமாகப் போட்டு விடுகிறார்கள்.  வாங்காமல் சென்றோம்.  உடனே என்னைக் கன்னாபின்னாவெனத் திட்டினார் அந்த ஆசாமி.  கையில் ஒரு சின்னக் கோலை வைத்துக் கொண்டு எல்லாருடைய உச்சந்தலையிலும் தட்டி அதை வலுக்கட்டாயமாகக் கைகளில் திணித்துக் கொண்டிருந்தனர்.  அதைப் படம் எடுக்க முடியாமல் கூட்டம் வேறு நெரிசல்.

இந்தக் கூட்டத்தின் நெரிசலின் மகத்துவம் உள்ளே இறங்குகையில் தான் புரிந்தது.   வரவும், போகவும் ஒரே வழி.  மிகக் குறுகல்.  ஒருவர் தான் உள்ளே நுழையலாம்.  அதுவும் கஷ்டப்பட்டு.  அந்த வழியிலேயே எல்லாருக்கும் உள்ளே செல்லவும் அவசரம், வெளியே வரவும் அவசரம். 

கொஞ்சம் கஷ்டப்பட்டே படம் எடுத்தேன்.  இங்கே யாரும் இல்லாததால் எடுக்க முடிந்தது.  ஆனால் படம் எடுக்க நின்று ஃபோகஸ் செய்யல்லாம் அவகாசம் இல்லை. எடுக்கையிலேயே ஒரு தன்னார்வலர் கத்த ஆரம்பிச்சுட்டார்.  ஃபோட்டோ எடுக்கக் கூடாதுனு.  முன் அனுமதி வாங்கி இருக்கணும் போல.  டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஒண்ணும் சொல்லலை.  இன்னொரு படம் அவசரமாக எடுத்தேன்.  அங்கே உள்ளே பாறைகளின் வடிவங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தன.  அதைப் படம் எடுத்தேன்.  அதுக்குள்ளே மீண்டும் கத்தவே பிடுங்கி எல்லாத்தையும் அழிச்சுடப் போறாங்கனு ரங்க்ஸ் பயந்தார்.  ஆகவே நிறுத்திட்டேன். அரை மனசாக.

உள்ளே நுழைந்ததும் பாறைகளின் விசித்திரமயமான அமைப்பு மேலுள்ள படத்தில்.  உள்ளே நுழைந்ததும் கொஞ்சம் விசாலமான மண்டபமும், அதிலே ஒரு சந்நிதியும் இருக்கிறது.  எல்லா சந்நிதிகளிலும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன், அநுமன் ஆகியோர் தான்.  அங்கே படம் எடுக்க அநுமதி கிடைக்கலை என்பதோடு கூட்டமும் அதிகமாக இருந்தது.  அங்கே தரிசனம் முடிச்சு வெளியேறும் வழியில் வெளிவந்தோம்.  இந்த குகையில் தளம் கொஞ்சம் சுமாராக இருந்தது.  ஆகவே செருப்பில்லாமல் நடக்கையில் அதிகம் கஷ்டம் தெரியலை.  மறுபடி அடுத்த குகைக்குச் செல்லணும். 

வெளியே வந்து மறுபடி வேறு வாசல் வழியாகப் படிகள் கீழே இறங்கி அடுத்த குகைக்குச் சென்றோம். இது நீளமாகவும் வளைந்து வளைந்தும் சென்றதோடு நீரும் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தது.  அனுமான் தாராவின் உற்பத்தியாகும் தண்ணீர்னு சொல்றாங்க.  கோதாவரி மறைந்திருப்பதாயும் சொல்கின்றனர்.  முதல் குகையிலும் இந்த குகையிலும் கோதாவரி அம்மனுக்கு சந்நிதி இருக்கிறது.  இங்கே ராமனும், சீதையும் சிம்மாசனம் போன்றதொரு பாறையில் அமர்ந்திருப்பார்களாம்.  எதிரே இன்னொரு சிறிய பாறை.  அதில் லக்ஷ்மணன் அமர்ந்திருப்பானாம்.  இந்தப் பாறைகளில் இப்போது மிகச் சிறிய அரை அடியே இருக்கும் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன் அனுமனோடு இருக்கும் சிலைகள் வைக்கப்பட்டு பாறைகளுக்கு இரு பக்கமும் இரு பண்டிட்கள் அமர்ந்து வழிபாடு நடத்துகின்றனர்.

விளக்குகள் எல்லாம் போட்டு வெளிச்சம் கொடுத்திருந்தாலும் அடர்ந்த காட்டின் உள்ளே இருக்கும் பாறைக்குகை.  உயரம் அதிகம் இல்லை.  அவற்றைக் குனிந்து கடக்கும்போது ரங்க்ஸ் ரொம்ப சிரமப் பட்டார். கீழே சலசலத்து ஓடும் தண்ணீர் வேறே. இம்மாதிரிப் பல இடங்களில் கடக்கணும்.  அதோடு கீழே பாறைகள் வேறே ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக நீட்டிக் கொண்டும், உருண்டையாகவும், சில இடங்களில் உயரமாகவும் இருக்கின்றன.  முன்னும், பின்னும் ஆட்கள் வேறே.  ஒவ்வொருத்தராய்த் தான் போக முடியும்.  உடம்பை வளைக்க முடிந்தால் தான் நல்லது.  அவ்வளவு குறுகலான வழி.  எங்கே மேடு, எங்கே பள்ளம்னு புரியறதில்லை.  காலில் கூர்மையான கற்கள் குத்துகின்றன.  சரினு கொஞ்சம் நகர்ந்தால் அங்கே உயரமான பாறையாக இருக்கும்; இல்லைனா பள்ளமாக இருக்கும். 

சில இடங்களில் தண்ணீரின் ஆழம் ரங்க்ஸுக்கே முழங்காலுக்கு வந்துவிட்டது.  அப்போ எனக்கு இடுப்புக்கும் மேல்னு புரிஞ்சுக்கோங்க.  இதைக் குறித்து ஏற்கெனவே அறிந்து வைத்திருந்ததால் அவர் கிளம்புகையிலேயே பெர்முடாஸ் போட்டுக் கொண்டு வந்துவிட்டார்.  புடைவை எல்லாம் நனைந்து போய் நடக்க சிரமப்பட்டதோடு இல்லாமல் பாறைகளும் குத்தின.  இங்கே பார்த்து நம் மக்கள் குனிந்து குளிக்க ஆரம்பிப்பதும், தண்ணீரைக் குடித்துத் துப்புவதுமாக அமர்க்களம் பண்ண ஆரம்பிக்கிறாங்க.  உதவிக்குத் தன்னார்வலர்கள் தான்னு நினைக்கிறேன்.  அவங்க ஒண்ணும் சொல்றதில்லை.  படம் எடுக்கிறதை மட்டும் ஏன் தடுக்கறாங்கனு புரியலை.  இதை முழுசும் பார்த்து முடிக்க எங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆச்சு.  நாங்க வெளியே வரச்சே எங்கே எங்களைக் காணோமேனு நினைச்சார் போல ஆட்டோ பையர்.  தேடிட்டு வந்திருந்தார்.

அடுத்து என்னனு கேட்டதுக்கு, பரத் கூப்(பரதன் குகை) என்று என்னிடம் சொன்னார். அப்போ ரங்க்ஸ் ஒரு இடத்தைத் தாண்ட சிரமப் படவே அவரிடம் சென்று உதவி செய்தார்.  ரங்க்ஸ் அவரிடம் சாப்பிட்டுவிட்டு பரதன் குகை பார்க்கலாம் என்றும், அதோடு டிக்கெட் முன்பதிவுக்கு வேறே போகணும்னும் சொல்லி இருக்கார்.  என்னிடம் பரதன் குகை பார்க்கணும்னு சொன்ன அந்த ஆட்டோக்காரருக்கு என்ன தோணித்தோ அவரிடம் பரதன் குகை பார்க்கிறதுன்னா தனியாப் பணம் நானூறு ரூபாய் கொடுக்கணும்.  இதோட சேர்ந்தது இல்லை.  அது ரொம்ப தூரம்னு சொல்லி இருக்கார்.  உண்மையில் ஒவ்வொண்ணும் தூரம் தான் இல்லைனு சொல்லலை.

ஒவ்வொண்ணும் போறதுக்கே ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகிடுது.  நாங்க காலை பத்து மணிக்கே கிளம்பியதில் அப்போ கிட்டத்தட்ட மதியம் மூணு மணி ஆகி இருந்தது.  ஆகவே சர்க்கரை நோயாளியான ரங்க்ஸுக்குப் பசி வந்திருக்கு.  சாப்பிட்டுட்டுப் போகலாம்னு சொல்லி இருக்கார்.  மீண்டும் நகருக்குள் வந்தால் மறுபடி காட்டுப் பகுதிக்குப் போகணுமேனு அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தோணித்தோ என்னமோ. இம்மாதிரி சொல்லி இருக்கார்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 30, 2013, 8:14:21 PM11/30/13
to மின்தமிழ்
குப்த கோதாவரி பார்ப்பது கொஞ்சம் சிரமம் தான் அம்மா!!.. அடுத்து வரும் பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன்.

2013/11/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Nov 30, 2013, 8:43:07 PM11/30/13
to mintamil
வணக்கம் பல.

குப்தகோதவரியை நாங்களும் உங்களுடன் நேரில் வந்து பார்ப்பது போன்று வர்ணனை அருமையாக அமைந்துள்ளது.
மிக்க நன்றியுடையேன்.

உள்ளன்போடு பயணம் செய்ததால் உடல் அசதியில்லாமல் தரிசனம் செய்து வந்துள்ளீர்கள்.

நைமிசாரண்யப் பயண அனுபங்களைப் படிப்பதற்காகக் காத்திருக்கிறேன்.

Gowri Vimalendran

unread,
Dec 2, 2013, 7:00:16 AM12/2/13
to mint...@googlegroups.com
அம்மா, உங்கள் பயண அனுபவங்களைப்படித்தேன்.அற்புதம். அழகாக எழுதி வருகிறீர்கள். தொடரட்டும். உங்கள் அனுபவங்கள். படிக்கும்போதாவது பார்க்கும் அனுபவம் எமக்கு கிடைக்கட்டுமே.! 

2013/12/1 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
அன்புடன்
கெளரி விமலேந்திரன்

Geetha Sambasivam

unread,
Dec 2, 2013, 11:25:16 PM12/2/13
to மின்தமிழ்

சித்திரவதையுடன் சித்திர கூடத்தில் --தொடர்ச்சி!

ஆனால் நான்கும் சேர்ந்து தான் ஒரு டிரிப் என்பதை என்னமோ நானும் வற்புறுத்தவில்லை. சாதாரணமாக நான் எங்கே போனாலும் இம்மாதிரி விஷயங்களில் முன்னெச்சரிக்கையா இருக்கிறதோடு கூடியவரை சண்டையும் நான் தான் போடுவேன்.  எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன். அன்னிக்கு என்னமோ எனக்கும் ஆகிவிட்டது.  சாப்பிட அழைத்துச் செல்லும் முன்னர் அந்தப் பையரிடம் சாப்பாடு ஆன பின்னால் பரதன் குகை பார்க்கலாமானு கேட்டதுக்கு அதுக்குத் தனியாப் பணம் கொடுக்கணும்னு என்னிடமும் சொன்னார். திரும்பும் வழியில் ஆட்டோவை எங்களுக்கு மட்டும்னு பேசி இருப்பதை லக்ஷியம் செய்யாமல் எல்லாரையும் ஏற்றிக் கொள்ளவும் ஆரம்பித்து விட்ட்டார்.  என்னால் முடிந்தவரை ஆக்ஷேபங்களைத் தெரிவித்தேன்.  என்றாலும் அது நிற்கவில்லை.

அதோடு நாங்க டிக்கெட் முன்பதிவுக்குப் போனோம்.  மறுநாள் கான்பூர் செல்லும் சித்ரகூட் எக்ஸ்ப்ரஸில் முன்பதிவு செய்யச் சென்றோம்.  அங்கே நான் லக்னோ செல்லணும்னு சொல்ல, கான்பூர் தான் செல்லணும்னு ரங்க்ஸ் சொல்ல முன்பதிவு செய்யும் ஏஜென்ட் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார, சிறிது நேரம் ஒரே குழப்பம்.  லக்னோ செல்வதானால் நாங்க வந்த அதே ரயில் ஜபல்பூரிலிருந்து திரும்பி சித்ரகூடத்துக்கு நடு இரவு இரண்டு மணிக்கு வருது. அதைப் பிடிக்கணும்.  கான்பூர் போறதானால் மதியம் இரண்டு மணிக்கு இங்கிருந்தே கிளம்புது.  கான்பூருக்கு எட்டு மணிக்கெல்லாம் போயிடும். அதிலே போகலாம். என்று அவர் சொல்ல,   நான் நடு இரவில் லக்னோ செல்லும் சித்ரகூட் எக்ஸ்பிரஸில்  ஏ.சி. முன் பதிவு செய்துட்டுப் போகலாம்னு சொன்னேன்.  ஆனால் ரங்க்ஸோ இங்கிருந்து கிளம்பும் வண்டி எல்லாமே பொதுப்பெட்டி தான்.  சுலபமா இடம் கிடைக்கும்.  கஷ்டப்பட வேண்டாம். வரச்சே இருக்கும் கஷ்டம் இருக்காதுனு எல்லாம் சொல்லி என்னை ஒரு மாதிரி சம்மதிக்க வைத்தார்.  கடைசியில் முன் பதிவே செய்யலை. பின்னர் சாப்பிட அழைத்துச் செல்லச் சொன்னோம்.

போகும்போது அந்த ஆட்டோக்காரரிடம்  மறுநாள் இரண்டு மணிக்கு வண்டி என்றும் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு விட வருவாயா என்றும் கேட்டதற்கு உருப்படியாக ஒரு விஷயத்தை அந்த ஆட்டோப் பையர் கூறினார்.  அவர் மத்தியப் பிரதேச வாசி என்றும் அவர் ஆட்டோ மத்தியப் பிரதேச எல்லையில் மட்டுமே ஓட்டணும்னும், ரயில்வே ஸ்டேஷன் உத்திரப் பிரதேசப் பகுதியில் இருப்பதால் அங்கிருக்கும் ஆட்டோக்காரங்க தான் அழைத்துச் செல்ல முடியும்னு சொன்னார்.  அவங்க இங்கே வரலாமானு கேட்டதுக்கு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டான்டுனு அவங்க அழைத்துச் செல்லவும், அங்கிருந்து இங்கே கொண்டு விடவும் செய்வார்கள்.  மற்றபடி இங்கே உள்ளே செல்ல நாங்க மட்டும்.  அவங்க வர முடியாது என்றார். விசித்திரமான இந்தச் செய்தியைக் கேட்டு உள்ளூரக்கொஞ்சம் பயமும் வந்தது.  உ.பி. ஆட்டோ நாம கிளம்பும் நேரம் தங்கி இருக்கும் ஹோட்டல் பக்கமா வரணும்.  வந்தால் தான் கிடைக்கும். இல்லைனா என்ன செய்யறது? வயித்தை இப்போவே கலக்க ஆரம்பிக்க ரங்க்ஸிடம் என் கவலையைப் பகிர, அவரோ இந்த ஆட்டோ ஒண்ணையே பிடிச்சு உ.பி. எல்லை வரை போயிட்டு அங்கிருந்து  உபி ஆட்டோ பிடிச்சுக்கலாம், ஒண்ணும் கஷ்டமில்லைனு சொன்னார்.

ஹோட்டலில் நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டேன்.  வெளியே போனாலே மதியச் சாப்பாடைக் கூடுமானவரை தவிர்ப்பேன்.  கல்யாணங்கள்னு போனாலும் ஒரு வேளை காலை ஆகாரம் சாப்பிட்டுடுவேன்.  மதியம் சாப்பிட மாட்டேன்.  இரவு ரொம்ப லேசான உணவு மட்டும் எடுத்துப்பேன்.  ஹோட்டல் ஊழியரிடம் லஸ்ஸி கேட்டதுக்கு தயிர் இல்லைனும் கொஞ்சம் போல் மோர் இருக்கிறதாகவும் சொல்லிட்டு அதைக் கொண்டு வந்து கொடுத்தார்.  காலாநமக், ஜீரகத் தூள், பெருங்காயம், உப்பு எல்லாம் போட்டு வாய்க்கு ருசியான மோர்.  அந்த ஹோட்டலிலேயே மேலே தங்குமிடம்.  நல்ல அறைகளாகவே தெரிந்தன.  முதல்நாள் இரவு இந்த வழியாவே போயிருந்தும் நமக்குத் தெரியலையேனு நினைச்சுண்டேன். அப்போக் கூட அந்த ஹோட்டல்காரங்க கிட்டே சார்தாம் பார்க்க எவ்வளவு பணம்.  ஆட்டோக்காரர் பரதன் குகைக்குத் தனியாக் கேட்கிறாரே னு கேட்டுத் தெரிஞ்சுக்கத் தோணலை. சாப்பிட்டு முடிஞ்சதும் ஆட்டோக்காரர் ஹோட்டல் அறைக்கு முன்னால் கொண்டு விட்டு விட்டார்.  மீண்டும் பரதன் குகை பார்க்கணும்னு நாங்க சொல்ல, அதுக்கு நானூறு ரூபாய்னு சொல்லிட்டு போகறதா இருந்தாக் கூப்பிடுங்க வரேன்னு சொல்லிட்டுப் போயே போய்விட்டார். ( பேசின முழுத் தொகையையும் வாங்கிக் கொண்டுதான்) . உடல் களைப்பா, மன அலுப்பா, என்னனு சொல்ல முடியாமல், முதல்நாள் இரவு முழுதும் விழித்திருந்தது வேறே, எல்லாம் சேர்ந்து உடல் தள்ளாட , துணிகள் துவைத்தது வேறே எனக்கு அலுப்பு! ஹோட்டல் அறைக்கு மெதுவா மேலே ஏறி (கிட்டத்தட்ட ஒன்றரை அடி உயரத்தில் முப்பது/நாற்பது படிகள்) வந்து சேர்ந்தோம்.  ஓய்வு எடுத்துக் கொண்டோம். 

மாலை தேநீர் குடிக்கணும்னா கூட அந்த முப்பது, நாற்பது படிகள்  இறங்கி வெளியே வந்து மலைச்சரிவிலிருந்து மேலே ஏறி சாலைக்குச் சென்று ஆட்டோ பிடிச்சுப் போகணும்.  ஒண்ணுமே வேண்டாம் சாமி! னு உட்கார்ந்து விட்டோம்.  உடம்பெல்லாம் ஜுரம் வரும் போல் வலி. அப்போது அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.  கதவைத் திறந்தால் இந்த அருமையான, அழகான ஹோட்டலை எங்களுக்கு அறிமுகம் செய்த நபர் அங்கே நின்றிருந்தார்.  கூடவே அந்த அழகான ஹோட்டலின் காப்பாளர் பையரும் நின்றிருந்தார்.  வந்தவர், "நீங்க ஏன் இன்னும் இங்கே தங்கி இருக்கீங்க?  அறை வாடகை கொடுக்கலையாமே?" எனக் கடுமையாகக் கேட்டார்.  எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அறைக்குள் நுழைந்ததுமே 450 ரூ அறை வாடகைனு சொன்னதுக்கு 500 ரூ கொடுத்திருக்கோமே. மிச்சம் கூட இன்னும் வாங்கிக்கலைனு சொல்ல, அது மதியம் பனிரண்டு மணியோடு முடிஞ்சுடுத்து.  இப்போ மாலை மணி ஐந்து ஆகிவிட்டது.  இந்த நாளுக்கான வாடகையைக் கொடுக்காமல் நீங்க தங்க முடியாதுனு சொல்ல, இவ்வளவு தானா விஷயம்னு இன்னொரு ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து நாளை மதியம் பனிரண்டு மணிக்குக் கிளம்புகிறோம். அது வரை இருக்கலாமானு உறுதி செய்து கொண்டோம்.  கடைசியில் அந்த ஹோட்டலும் நாங்க இரண்டாவதாய்ப் பார்த்த ஹோட்டலும் ஒரே நபரால் நடத்தப்படுகிறதாம்.  படுக்க மட்டுமே இடம்னு சொன்ன ஹோட்டலில் காப்பாளாராக இருப்பவர் தான் தன் முதலாளியின் இந்த ஹோட்டலுக்கு எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.  இதை எல்லாம் தெரிந்து கொண்டு நாங்க இங்கே தேநீருக்குப் படும் கஷ்டத்தையும், சாப்பாட்டுக்கு இறங்கிப் போக வேண்டியதன் சிரமத்தையும் ஒரு பாட்டம் சொல்லி அழுதோம்.

அந்த மனிதர் உண்மையாகவே நல்ல மனிதர்.  உபகார சிந்தையுள்ளவர். ஆகவே அந்த ஹோட்டலில் காப்பாளப் பையரைக் கோவித்தார். முடியாதவங்க, அதிலும் வயசானவங்க இவங்களை இப்படி நினைக்க விடலாமா?  னு கேட்டுட்டு, எங்களிடம் எது வேணும்னாலும் இந்தப் பையரிடம் சொல்லுங்க, செய்து கொடுப்பார்னு சொல்ல, நாங்க யோசித்தோம். ஆனால் அவர் விடலை. அந்தப் பையரிடம், எனக்கு இவங்க கிட்டே இருந்து இனி எந்தவிதமான புகாரும் வரக்கூடாது.   அவங்க இருவரும் நாளை மதியம் பனிரண்டு மணிக்குக் கிளம்பும் வரை கூட இருந்து ஆட்டோ பிடிச்சு அனுப்பும் வரை உன் பொறுப்புனு கண்டிப்பாய்ச் சொல்ல அவரும் தலையை ஆட்டினார்.  எங்களிடமும் எந்தக் கவலையும் படாதீங்க.  இவன் எல்லாம் செய்து கொடுப்பான். என்று சொன்னார்.  அவ்வளவில் எங்களுக்கும் மனம் கொஞ்சம் சாந்தி அடைந்து, அன்றிரவுக்கு உணவு வாங்கிக் கொடுப்பாரா என்றும் கேட்டோம்.

உணவுப் பார்சல் வாங்கி வந்து கொடுப்பார்னு சொல்ல நாங்க ஆறு தவா ரொட்டியும் ஒரு மிக்சட் வெஜெடபிளும் வாங்கித் தரச் சொன்னோம்.  சரினு தலையை ஆட்டிட்டுப் போனாங்க.  எங்க பணமே அவங்ககிட்டே இருந்ததாலே உணவுக்குனு பணம் கொடுக்கலை.  அவங்களும் கேட்கலை.  

It is loading more messages.
0 new messages