Re: [தமிழ் மன்றம்] இடங்கர்

76 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jan 29, 2015, 5:22:15 PM1/29/15
to தமிழ் மன்றம், Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, thamizayam, ara...@gmail.com, mintamil, வல்லமை, Banukumar Rajendran
அய்யன் மீர் 
இடங்கர் ஒர்  உயிரினம்

உ ம்மை பற்பல உயிரினங்கள் நிரல் பட வைக்கும் போதுதானே 
அ வற்றை தனித்தனியாக பிரித்துக்காட்ட தேவையும் படுகின்றது பயனாகின்றது
அல்லாவிடில் இப்போதுள்ள குழப்பங்கள் விளைவிக்கும் அலாவா? 

இடங்கர் என்பது ஒர்  உயிரினம்  எனும் நோக்கோடு பார்க்க  மறுக்க நினைக்கும் போதுதான் குழப்பமே 
நான்  பேசும் மூன்று மட்டுமல்ல முன் பின் வரிகளைப்பாருங்கள் எத்தனை 
உயிரினங்கள். எல்லாவற்றிர்க்கும் உம்மை  உள்ளது காண்க

ஆசிரியர் கபிலர் 99 பூக்களின் நிரல் படியவர்தானே .  இங்குபல  உயிரினம் பேசுகிறார் 

அதான்று  புறம் 37 ன் வரிகள்  
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி

  "உ டன் தொக்கு ஓடி"  என்பதால் கராமும்  இடங்கரும் தனி உயிரினமாகும் என்ராகிறது  அல்லவா?? 
அளைச்செறி உ ழுவையும்                             உ ழுவை= புலி - திவா. 412 // மலை 505 / அகம் 45, 72, 147,  277( வாள் வரி), 308, 332,
                                                                                                                      புறம் 33, 78, 152, கலி 1, 43, 46, பரி 14, நற். 47, 105, 144, 154, 205, 255,
ஆளியும்                                              ஆளி = சிங்கம்- திவா. 411 // பொரு . 139, அகம் 78, 252, 381, புறம் 207,
                                                                                                                      பரி 8, நற்.118, 205, 
உளியமும்                                                            உளியம் = கரடி - திவா. 451 // திருமுரு. 313, அகம் 81, 88, புறம் 319, 323, 57, 65. 
புகல்கோட்டு  ஆமான் புகல்வியும்          ஆமான் = காட்டு ஆ / திவா. 434 // மலை. 500,  சிறுபா . 177, அகம் 238 -(6,7) ,                                                                                                                                                                                                                 புறம் 319, 323, பதி ற்று 30, நற். 57, 165,  ஐந்திணை 70-33

உருமும்                                                                   உரும் = மடங்கல்     / திவா 2092   மலை 550, சிறுபா.266,  அகம் 68,  புறம் 197, பரி  26
                                                                                                                                          மடங்கல் = சிங்கம்  திவா-411  கலி 2, நற் 57
 ளிறும்                                              களிறு = ஆ ண் யானை

வலியில் தப்பும் வன்கண் வெஞ்சினத்(து) உருமும்/    உரும் = மடங்கல் (சிங்கம்) திவா= 2092,  சிறுபா 266, அகம் 61, 68, 197, 

சூரும்                                                  சூர் = ஓர் வகை மா  பரி. 5 , 9, 14, 18, 19, 3 பதிற் 67, நற். 249

 இரைதேர அரவமும்                            அரவம் = பாம்பு  திவா 534, 2071 புறம் 309   பரி.18, நற், 144,  ஆசார  98
ஒடுங்கிரும்  குட்டத் (து ) அருஞ்சுழி வழங்கும்  கொடுந்தாள் முதலையும் =  மலை 90, ,அகம் 3,  72, 80, 301, புறம் 37, 283, குறு 324, பரி 53,                                                                                                                                                     ஐங்குறு 5, 24, 41, நற் 287,  குறள் 495,                                                            
இடங்கரும்                                                        நிரல் வைத்தாகிவிட்டது 
கராமும்                                                              கராம் (ஆண்) முதலை  தமிழ்நெறி 12 தொ ல் 17, 37, பட்டி 242, அகம் 18, புறம் 37, 104                                                                                                                                                      கலி 103, நற்றி 282
நூழிலும்                                                நூழில் -யானை  சூடாமணி 978  நூழிலாட்டு =  மலை 87,  மதுரை 257,   சிலம்பு 25-218                                                                                                                                                   புறப் . வெண், மாலை 141, 321,  தொல் புறத் 14
                              
 இழுக்கும்                                               இழுக்கு = ???

 ஊ ழடி முட்டமும்                                    முட்டம் = காகம் 

பழுவும்                                                 பழு = ???                  சிலம்பு -21- 23, பழுமணி , மணிமேகலை பழு மரம்  16-26                                                                                                                                                       வளையா 65    பழு ஊர் - தேவாரம் பழு =தக்கயாக பரணி 129

பாந்தளும்                                             பாந்தள் = பெரும்பாம்பு (மலைப்பாம்பு ) தேவாரம் 1.90.6, 6.83.1, 7.64.6                                                                                                                                                                   கோவையார் 283 324, //   9.163, 173, //  11.491, 523, // 12-1812, 2225, 4136
 உளப்படப் பிறவும்                                                                                                                                     

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 







   
--------------------------------------------------------------------------------------------------
2015-01-28 17:06 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>இடங்கரும்  கராமும் 

ஆடியல் யானை
துளங்கியல் மகளிர் என்று சங்கபபடல்களில் வரும்

எனில் இடங்கியல் கராமும் என்றுதான் வரணும். உம்மை எதுக்கு?

28 ஜனவரி, 2015 ’அன்று’ 2:00 முற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:

நான் எழுதும் போதே மடல் பறந்தது விட்டது மன்னிக்க இப்படி  முடிக்க வேண்டும் 


ஆமெனில் குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்  கபிலர் பிழைபட பாடினார் எனவாகுமல்லவா. 
 
தொல்காப்பியர் வைக்கும் 10 வகை குற்றங்க ளாவன  

குன்றக்கூறல் மிகைபடக்கூறல்
கூறியதுகூறல் மாறுகொளக்கூறல்
வழூஉச்சொற்புணர்த்தல் மயங்கவைத்தல்
வெற்றெனத்தொடுத்தல் மற்றொன்றுவிரித்தல்
சென்றுதேய்ந்திறுதல் நின்றுபயனின்மை
என்றிவை யீரைங்குற்றம் நூற்கே12

அனுவற்றி ல்
வழூஉச்சொற்புணர்த்தல் மயங்கவைத்தல்
என்பதன் பாற் படுமன்றோ  இஃது ஏலாது எனவே இடங்கர் தனி உயிரனமே
 நம் நாசா கணேசனார் குறித்தபடி முத லை இனத்தில் விகர்ப்பம் ஆகும் 
ஆங்கிலத்தில்CROCODILE  ALIGATOR GARIAL CAIMAN எனவெல்ல காட்டுகின்ற னரே 


அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 


2015-01-28 11:55 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
இல்லையே. ‘விடங்க'ரும் ‘இடங்க'ரும் ஒன்றே என்பதில் எனக்கு உடன்பாடில்லையே.
---------------
நன்னூல் 
உயிறீற்றுச்சிறப்புப்புணர்ச்சி

உயிர்முன் உயிர் புணர்தல்

இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர் வழி வவ்வும் ஏ முன் இ வ்விருமையும்
உயிர் வரின் உடம்படுமெய் யென்றாகும்               162
------------------------------------------------------------------------------

இரு சொற்கள் சேருமி டத்து உயிர் முன் உயிர் வருமிடத்து தோன்றுவது  உடம்படு மெய் என்பதன் வழி 
முன் யாதோ ஒரு நூலின் வரிகளில் உடம்பாடு மெய் வந்து இடங்கர் மாற்றம் அடைந்து வைக்கப்பட்ட
சொல் விடங்கர்   அதனையே தனித்த இடத்தும் வழங்கு சொல்லாக மாற்றம் பெற்று நிலைத்துள்ளது  

மேலும் 

10 11 நூற்றாண்டு கல்லாடனா ரின்  வரிகள் தான்  ஐயம் ஏதுமின்றி 
இடங் கர் முதலை என்கின்றதே அதைத்தானே நிகண்டுகளும் ஆவணப்படுத்தியுள்ளன 

எனவே பின் வந்தோர பலரின் 'நோக்கு\  பிழை அற்றது எனும் கொள்கையில்
குறிஞ்சிப்பாட்டு 
வரிகளைப் பாருங்கள்  முதலையும் இடங்கரும்  கராமும் 
எனவருமவற்றில் மூன்று ம் உம்மைகளே அன்றி வேரு  எப்படிப்பார்கின்ரீர் கள் ??

மூன்றில் நடுவண் காணும் இடங்கரில் வரும் உம்மை மட்டும் பெயரெ ச்சமாகுமா.?

ஆமெனில் குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்  
 
தொல்காப்பியர் வைக்கும் 10 வகை குற்றங்க ளாகும் 

2015-01-28 2:20 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அன்புடை நூ த லோ சு ஐயா, வணக்கம். என் கருத்தை இடைசெருகலாகக் கீழே காணலாம். 


On Jan 27, 2015, at 11:33 AM, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:

நூ த லோ சு 
மயிலை 
------------

உயர்திரு இராமகி, இராஜம்  அவர்களுக்கு,

மகர விடங்கர் = பழங்காலத்து வணங்கப்பட்ட இறை (கடவுள்
எனும் கருத்தை  நண்பர் நாசாசா கணே சனா ர் தான் "சிந்து சமவெளி நாகரீகம் முதலே " 
என  தன்  மடல்களில் தான்  கடைபிடிக்கும் மற்றொரு   பிடிவாத கொள்கையாம்  கிரந்தம் போன்று
 தொடர்ந்து மடல் விடாமல் குறித்து குறித்து மாயையை  ஒன்றினை ஆவணமாக ஆக் க முற்படுகிறார்
அது அவருடைய தனிக்கருத்து எனக் கொண் டு புறம் தள்ளுவோம்
 
நிற்க 
இடங்கர் பற்றி 
---------------------
                                                                          கங்குல் 
அ ளைச்செறி உ ழுவையும் ஆளியும் உளியமும்
புகல்கோட்டு  ஆமான் புகல்வியும்  களிறு ம் 
வலியில் த ப்பும் வன்கண் வெஞ்சினத்(து )
உ ருமும் சூரும்  இ ரைதேர அ ரவமும்             255
ஒ டுங்கிரும்  குட்டத் (த) அருஞ்சுழி வழங்கும் 
கொடுந்தாள் முதலையும் இடங்கரும்  கராமும் 
நூழிலும்  இழுக்கும்  ஊ ழடி முட்டமும்
பழுவும் பாந்தளும்  உ ளப்படப் பிறவும்                     குறிஞ்சிப்பாட்டு 

இதனில் மூன்று வித உயிர்களும் பேசப்படுகின்றன 


ஒர்ந்தேன், ஐயா. இங்கே "கொடுந்தாள் முதலை," "இடங்கரும் கராம்" என்று இரண்டு உயிரினங்கள் குறிக்கப்படுவதாக மட்டுமே உணர்கிறேன். 


விடங்கர் இரண்டிற்கும்  நடுவண் குறிக்கப்படுதல் ஓர்க 

விடங்கர் = இடங்கர் இரண்டும் ஒன்றுதான் என்பதனை நன்கே அறிவீர்கள் 


இல்லையே. ‘விடங்க'ரும் ‘இடங்க'ரும் ஒன்றே என்பதில் எனக்கு உடன்பாடில்லையே. 



இடங்கர் எனும் சொல் சங்கநூல் மற்றும் சில ல நூல்களிலும் பயன்பாடு உள்ளது
தொக்குப்பின்  நிரல் காண்க
இராஜம் அவர்கள் மலைபடுகடாம் வரிதனையும்  இடங்கர்  ஆய்ந்து வருகிறார் 
  
--------------
இடங்கர் 
வரும்விசை தவிராது மரமறையாக் கழிமின் 210
உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி மலைபடுகடாம்

இடங்கர் எனும் சொல்லிற்கு நீர்ச்சால், குடம் எனும் பொருள்களும் சில நிகண்டுகளில் காட்டப்படுகின்றன 

எனினும் கீழ் வருவனவற்றி லிருந்து 
இடங்கர் எனும் சொல்லிற்கு கராம் முதலை எனப்பொருள் படும் என்பதில் ஓர் ஐயமும் இல்லை 
கராம் முதலையின் ஆண்  என்பது தொல்காப்பியம் மரபியல்  நன்கறிவீர் 

எழிலிவான் சுழலப் பிளிறுகுரற் பகட்டினம்
துறைநீர் ஆடப் பரந்தகார் மதமும்
பொய்கையும் கிடங்கும் செய்யினும் புகுந்து                                          
.இடங்கரை பைஞ்சிலைச் சேலை                                              
உடற்புலவு மாற்றும் படத்திரை வையை 25 கல்லாடம் 27 

     (வி-ம்.) (18-27) கன்னியர் நீராடுதலால் சுண்ணமும் குங்குமக் குழம்பும், பகட்டினம் நீராடுதலால் மதமும் விரவப்பெற்றுப் பொய்கை முதலியவற்றிற் சென்று இடங்கர் முதலியவற்றின் புலால் நாற்றத்தை மாற்றும் நீரையுடைய வையை என்க. பொய்கை-இயற்கை நீர்நிலை. கிடங்கு-அகழி. செய்-கழனி. சிஞ்சை-முழக்கம். இடங்கர்-முதலை. பைஞ்சில், சேல் இரண்டும் மீன்கள். புலவு-புலால் நாற்றம். படம்-படாம். புகழ்நீர் என்புழி நீர் தன்மை. வெள்ளியம் பொது-வெள்ளியம்பலம்.  TVA நூலகம் / பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் உரை 


நடைமலை பிடித்த சொரிஎயிற்று இடங்கரை                                     
ஆழி வலவன் அடர்த்தன போல 2 கல்லாடம் 59
நடைமலை - யானைக்கு வெளிப்படை. புபச் சொரிகின்ற எயிறு என்க. இடங்கர் - முதலை. ஆழிவலவன் - திருமால். திருமால் வரால் மீனுக்குவமை. எருமைக்கு முதலை உவமை. வரி-கோடு. வரால்-ஒருவகை மீன். உரம்-விசை. ஊரல்- மருதநிலத்தலைவன்.    TVA நூலகம் / பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் உரை 

எழுசிறை தீயும் எருவையும் பருந்தும்
குவளையம் காட்டுக் குருகொடு புதாவே
வலியழி பகடு வாய்நீர்ச் செந்நாய்
தழைமடி மேதியும் பிணர்இடங்கருமே                                                       திணைக் கருப்பொருல் நிர லி ல்  இடங்கர் ஒர்  உயிரினம் பிணையகக் காண்கின்ற து 
பட்டுலர் கள்ளி நெற்றுடை வாகை 20 கல்லாடம் 61

கொள்ளம் புகுந்து வள்ளுறை வானத்து
எழில்மதி காட்டி நிறைவளை சூல்உளைந்து 
இடங்கரும் ஆமையும் எழுவெயில் கொளுவும்                                         இடங்கரும் ஆ மையும் தம் தம் முட்டையிலிருந்து வெளியே றுவது பேசுகிறது 
மலைமுது கன்ன குலைமுக டேறி 20 கல்லாடம் 77

இடங்கரே முதலை தூர்த்தர் குடங்கரின் முப்பேர் என்ப                   சூடாமணி நிகண்டு 45
முதலை செங்கிடை இடங்கர் முருந்து எனமெழியலாகும் சூடாமணி நிகண்டு 121 

இடங்கர் = முதலை என்கிறது                                                                       பிங்கல நிகண்டு நூற்பாக்கள் 2628 & 3163 

இடங்கர் = முதலை என்கிறது                                                                         திவாகர நிகண்டு நூற்பாக்கள் 596 & 1893 

பின் வரும் பிற் கால நிக ண்டுகளும் அவ்வழியே தன பொருள் தருகின்றன  

இடங்கர் = முதலை என்கிறது                                                                        பொதிகை  நிகண்டு நூற்பா 272

இடங்கர் = முதலை என்கிறது                                                                        அகராதி  நிகண்டு நூற்பா 440

இடங்கர் = முதலை என்கிறது                                                                        அரும் பொருள் விளக்க நிகண்டு நூற்பா 137

இடங்கர் = முதலை என்கிறது                                                                        வடமலை  நிகண்டு நூற்பா234

இடங்கர் = முதலை என்கிறது                                                                        வேதகிரி சூடாமணி  நிகண்டு நூற்பா 89 

------------------
இடங்கர் எனும் சொல்
தொல்காப் பியத்தில் எட்டுத்தொகையில் 18 கீழ் கணக்கில் சிலம்பில் மணிமேகலையில் காணவில்லை 


2015-01-21 23:44 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
அன்புள்ள இராம.கி ஐயா,

வணக்கம்.

தங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், தாங்கள் தேடும்போது கீழ்க்காணும் குறிப்புகளையும் ஒர்ந்துகொள்ளவும்.

1. தொல்காப்பிய மரபியலில் 'கராம்' என்ற ஒன்றே குறிக்கப்படுகிறது; 'முதலை'யோ 'இடங்க'ரோ இல்லை. "கடல்வாழ் சுறவு" குறிக்கப்படுகிறது.

2. குறிஞ்சிப்பாட்டு வரி 257-க்கு ("கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்") நச்சினார்க்கினியர் தரும் உரை: "இவை மூன்றும் சாதி விசேடம்." இந்த மூன்றும் "ஒடுங்கிருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும்" என்று குறிஞ்சிப்பாட்டின் 256-ஆம் வரி தெரிவிக்கிறது.

3. மலைபடுகடாம் வரி 211-க்கு ("உரவுக்களிறு கரக்கும் இடங்கர்") நச்சினார்க்கினியர் தரும் உரையிலும் 'இடங்கர்' என்பது முதலையைக் குறிப்பதாகவே தெரிகிறது.

ஆனால் ...

3a. இந்த வரியில் உள்ள "கரக்கும்" என்ற சொல்லுக்கு 'விழுங்கும்' என்று பொருள் கொள்கிறார் உரையாசிரியர். அதோடு, இங்கே 'களிறு' எழுவாயா, 'இடங்கர்' எழுவாயா என்று நோக்கினால், 'இடங்கர்' என்பதையே எழுவாயாகக் கொண்டிருக்கிறார் உரையாசிரியர் என்பது தெளிவு. அப்படியிருக்கத் தேவையில்லை.

3b. தொல்காப்பியத்தில் "தடுமாறு தொழிற்பெயர்" என்ற கோட்பாட்டுக்கு விளக்கம் தரும் உரையாசிரியர்கள் "புலி கொல் யானை" என்ற எடுத்துக்காட்டைத் தருவார்கள். "புலிகொல்யானை" என்ற தொடரின் பொருளை அறிந்துகொள்ள அதை முடிக்கும் வினைச்சொல் வேண்டும். அந்த வகையில் பார்த்தால் மலைபடுகடாம் வரி 211-க்கு நச்சினார்க்கினியர் சொல்லும் பொருளை ஏற்றுக்கொள்ளத் தயக்கம்.

3c. பிற மலைபடுகடாம் வரிகளை, குறைந்தது 210-218 எண்கொண்ட வரிகளை மட்டுமாவது, படித்தால் அங்கே 'இடங்கர்' என்பதுக்கு 'முதலையின் ஒரு வகை' என்று பொருள்கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 'இடுக்கான வழி' என்ற பொருள் அங்கே பொருந்தும் என்று நினைக்கிறேன்.

4. 'இட...' என்ற அடியில் கிளைக்கும் பிற சொற்களையும் பார்த்தல் நல்லது.

பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம்




-----Original Message-----
>From: iraamaki <iraa...@bsnl.in>
>Sent: Jan 21, 2015 12:56 AM
>To: tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thamizayam <thami...@googlegroups.com>
>Subject: [தமிழ் மன்றம்] இடங்கர்
>
>இடங்கர் என்ற சொல் முதலையைக் குறிப்பதாகச் சிலர் சொல்கின்றனர்.  தமிழில் இதன் தோற்றம் நெடுநாட்பட்டது போற் தெரியவில்லை.   (ஆனாலும் ஒருவர் இணையத்திற் ”சண்டப் பிரசண்டம்” பண்ணிக்கொண்டிருக்கிறார்.) இதன் சொற்பிறப்பைத் தேடிப்  பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதையொட்டினாற் போல் வேறு திராவிட மொழிகளிற் சொற்களுண்டா? தெரிந்தவர் சொல்லுங்கள்.
>
>அன்புடன்,
>இராம.கி.
>--
>STOP Virus, STOP SPAM, SAVE Bandwidth!
>http://www.safentrix.com/adlink?cid=0
>--
>
>--
>You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
>To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
>To post to this group, send email to tamil...@googlegroups.com.
>Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
>For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jan 31, 2015, 7:06:02 AM1/31/15
to vall...@googlegroups.com, abans...@gmail.com, tami...@gmail.com, podh...@gmail.com, thami...@googlegroups.com, ara...@gmail.com, minT...@googlegroups.com, banuk...@gmail.com, மு இளங்கோவன், pandiya raja


On Thursday, January 29, 2015 at 2:22:13 PM UTC-8, N D Logasundaram wrote:
அய்யன் மீர் 
இடங்கர் ஒர்  உயிரினம்

உ ம்மை பற்பல உயிரினங்கள் நிரல் பட வைக்கும் போதுதானே 
அ வற்றை தனித்தனியாக பிரித்துக்காட்ட தேவையும் படுகின்றது பயனாகின்றது
அல்லாவிடில் இப்போதுள்ள குழப்பங்கள் விளைவிக்கும் அலாவா? 

இடங்கர் என்பது ஒர்  உயிரினம்  எனும் நோக்கோடு பார்க்க  மறுக்க நினைக்கும் போதுதான் குழப்பமே 
நான்  பேசும் மூன்று மட்டுமல்ல முன் பின் வரிகளைப்பாருங்கள் எத்தனை 
உயிரினங்கள். எல்லாவற்றிர்க்கும் உம்மை  உள்ளது காண்க

ஆசிரியர் கபிலர் 99 பூக்களின் நிரல் படியவர்தானே .  இங்குபல  உயிரினம் பேசுகிறார் 

அதான்று  புறம் 37 ன் வரிகள்  
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி

அன்பின் திரு. லோகசுந்தரமுதலியார் அவர்களுக்கு,

புறம் 37 பற்றியும் அதில் உள்ள இந்தியாவின்
மூவகை முதலை வகுப்புகள் பற்றியும் விரிவாக
இணையத்தில் சிந்துசமவெளி விடங்கர்/இடங்கர் பற்றிய
ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளேன். பல ஆண்டுகளாய்
ஆராய்ச்சி செய்ததில் மகரவிடங்கர் வழிபாடு (ஆங்கிலத்தில் cult என்ப) தான்
சிந்து சமவெளி நாகரீகத்துடன் தமிழர்களும், சங்ககாலத் தமிழகமும்
பிணைப்பது என்பதும் தெரிகிறது. விரிவான கட்டுரை இங்கே:
(ஓம்சக்தி கோவை 2013 தீபாவளி மலரில் அச்சானது. தவத்திரு. ஊரன் அடிகள்
போன் போட்டுப் பாராட்டினார்கள்.)

குறிப்பு: புறநானூற்றுச் சுவடிகளில் இடம்கரும் என்று இல்லை.
புறநானூற்றில் உள்ளது “இடங்கரும்” என்றுதான். 

புறம் 37 ன் வரிகள்  
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடங்கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி

என்பதுதான்.

பேரா. பாண்டியராசா சங்கம் கன்கார்டன்ஸில் “இடங்கர்” என்னும்
முதலைக்கான பெயரையும், சங்கம் கன்கார்டன்ஸ் முதன்முதலாக
வெளியிட்ட தமிழறிஞர்கள் (புதுவை பிரெஞ்சு நிறுவன வெளியீடு)
போலவே சேர்த்திட வேண்டுகிறேன்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Jan 31, 2015, 7:09:38 AM1/31/15
to தமிழாயம், vallamai, M.A.Siva Kumar, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, ara...@gmail.com, மின்தமிழ், Banukumar Rajendran, மு இளங்கோவன், pandiya raja


31 ஜனவரி, 2015 ’அன்று’ 7:05 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:




அன்பின் திரு. லோகசுந்தரமுதலியார் அவர்களுக்கு,


சாதி பேரை குறிப்பிட,  என்ன பயத்ததோ சால்பு

 

தேமொழி

unread,
Jan 31, 2015, 7:03:20 PM1/31/15
to mint...@googlegroups.com
திரு. கணேசன்,  

உயர்திரு. நூ த லோ சு  ஐயா அவர்களை நீங்கள் சாதிப்பெயர் கொண்டு அழைத்தது மின்தமிழின் கொள்கைக்குப் புறம்பாக இருப்பதால் தக்க விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மட்டுறுத்தர் சார்பில்
..... தேமொழி

N. Ganesan

unread,
Jan 31, 2015, 7:55:34 PM1/31/15
to mint...@googlegroups.com


On Saturday, January 31, 2015 at 4:03:20 PM UTC-8, தேமொழி wrote:
திரு. கணேசன்,  

உயர்திரு. நூ த லோ சு  ஐயா அவர்களை நீங்கள் சாதிப்பெயர் கொண்டு அழைத்தது மின்தமிழின் கொள்கைக்குப் புறம்பாக இருப்பதால் தக்க விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஐயா அவர்கள் தம் பெயரை அவ்வாறு எழுதுவது வழக்கம். ஒருவர் பெயரை அவர் எழுதுவது போல்
மரபுக்கு மரியாதை என்பதால்.

தேமொழி

unread,
Jan 31, 2015, 8:10:54 PM1/31/15
to mint...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி....உங்கள் நோக்கம் அறிவேன் திரு. கணேசன்.

நூ த லோ சு  ஐயா  தன்னை முனைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளாத பொழுதும் அவரை அவ்வாறு நீங்கள் அழைப்பதும் இப்பொழுது நினைவிற்கு வருகிறது. 

மடலெழுதியவர் எவ்வாறு கையொப்பமிட்டுள்ளாரோ அது போலவே அவரை அழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் சாதிப்பெயரை மடலாடர்கள் முன்னர் எப்பொழுதேனும்  அறிவித்திருந்தாலும்,  அவ்வாறு அவர்களை அழைக்காமல் இருப்பது சாதிப்பெயர்  வழக்கம் தொடராது தவிர்க்க உதவும்.

இம்மடலில் அன்புடன் ...நூ த லோ சு ....மயிலை என்றுதான் குறிப்பிட்டுள்ளார். 

N. Ganesan

unread,
Jan 31, 2015, 8:29:15 PM1/31/15
to mint...@googlegroups.com


On Saturday, January 31, 2015 at 5:10:54 PM UTC-8, தேமொழி wrote:
விளக்கத்திற்கு நன்றி....உங்கள் நோக்கம் அறிவேன் திரு. கணேசன்.

நூ த லோ சு  ஐயா  தன்னை முனைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளாத பொழுதும் அவரை அவ்வாறு நீங்கள் அழைப்பதும் இப்பொழுது நினைவிற்கு வருகிறது. 

மடலெழுதியவர் எவ்வாறு கையொப்பமிட்டுள்ளாரோ அது போலவே அவரை அழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் சாதிப்பெயரை மடலாடர்கள் முன்னர் எப்பொழுதேனும்  அறிவித்திருந்தாலும்,  அவ்வாறு அவர்களை அழைக்காமல் இருப்பது சாதிப்பெயர்  வழக்கம் தொடராது தவிர்க்க உதவும்.

இம்மடலில் அன்புடன் ...நூ த லோ சு ....மயிலை என்றுதான் குறிப்பிட்டுள்ளார். 

இம்மடலில் என்ன இருந்தது என்று பார்க்கவில்லை. ஐயா அவர்கள் சாதிப்பெயருடன்
பல மடல்கள் கையொப்பமிட்டுள்ளார்கள். அதைக் குறிப்பிட்டேன். சாதிப்பெயர்
போட்டுக்கொள்வதற்கு ஐயாவுக்கு சுதந்திரம் உண்டு என்றே கருதுகிறேன்.

Geetha Sambasivam

unread,
Jan 31, 2015, 8:47:34 PM1/31/15
to மின்தமிழ்
எந்த மடலிலும் திரு நூ.த.லோ.சு. அவர்கள் தன் ஜாதிப்பெயரைக் குறிப்பிட்டதில்லை.  இப்போது நீங்கள் குறிப்பிட்டதன் மூலமே அவர் ஜாதி தெரிய வந்திருக்கிறது திரு கணேசன்.  இது தேவையே இல்லை. இனியாவது எவரையும் ஜாதிப்பெயரைச் சொல்லி அழைக்கவோ, எழுதவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! :(  மின் தமிழில் ஜாதி பார்த்து உறுப்பினர்களைச் சேர்ப்பதில்லை.  ஜாதி பார்த்து ஆதரவு கொடுப்பதும் இல்லை.  

N. Ganesan

unread,
Jan 31, 2015, 8:56:06 PM1/31/15
to mint...@googlegroups.com


On Saturday, January 31, 2015 at 5:47:34 PM UTC-8, myself wrote:
எந்த மடலிலும் திரு நூ.த.லோ.சு. அவர்கள் தன் ஜாதிப்பெயரைக் குறிப்பிட்டதில்லை.  இப்போது நீங்கள் குறிப்பிட்டதன் மூலமே அவர் ஜாதி தெரிய வந்திருக்கிறது திரு கணேசன்.  இது தேவையே இல்லை. இனியாவது எவரையும் ஜாதிப்பெயரைச் சொல்லி அழைக்கவோ, எழுதவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்! :(  மின் தமிழில் ஜாதி பார்த்து உறுப்பினர்களைச் சேர்ப்பதில்லை.  ஜாதி பார்த்து ஆதரவு கொடுப்பதும் இல்லை.  


நன்றி, திருமதி. கீதா. நூதலோசு ஐயா அனுப்பிய மடல்களை நீங்கள் படித்ததில்லை போலும். பல மடல்களில்
பார்த்த அனுபவம். 

நா. கணேசன்

மின் தமிழ் குழும மடல்:
“அன்புள்ள மின்தமிழ் அன்பர்களுக்கு,
 
'வல்லமை' மின்யிதழில் வைத்த ஓர்
கருத்துரையை இங்குள் ளோரும் கண்டு
 தங்கள் கருத்துக்களை வைக்கக் கேட்டுக்
கொள்கிறேன்
 
நூ த லோ சு
மயிலை 
---------------------------------------------------------------------
 
                                                           தமிழின் முச்சங்க காலம் – ஓர் கருத்து

                                                                                             நூ த லோகசுந்தரமுதலி, மயிலை

இந்நாள், செம்மொழி என போற்றப்படும் தமிழ் மொழியின், மாண்பும் வரலாறும் பற்றி, தமிழைப் படிக்க முனைவோருக்கு,

நன்கே அறியும் வகையில் நல்லதொரு முன்னுரை தரப்படுகின்றது. இவற்றிற்கான தரவுகள், சான்றுகள், பல்கால் பல்வகை

அறிஞர்களால் நன்கு ஆய்ந்து, கொழித்தெடுத்த பிறகே, தொகுக்கப்பட்டுள்ளன.”

Nagarajan Vadivel

unread,
Jan 31, 2015, 9:04:49 PM1/31/15
to மின்தமிழ்
அது அங்கே.  இங்கே இல்லை என்றுரைப்பது மட்டுறுத்தல்.  ஆணுக்கு மட்டும் பின்னொட்டாய் சாதிப்பேர்.  பெண்ணுக்கு இல்லையாக்கும்.  அப்பட்டமான ஆணாதிக்கம் என்றும் புகை கிளம்புகிறதே

எலியோன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Feb 3, 2015, 11:36:07 AM2/3/15
to mintamil, தமிழ் மன்றம், Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai
லோகசுந்தரம் 

அன்பு நிறை தேமொழி மற்றும் கணேசன் முதல் அனவருக்கும்,

நான் முதலி எனும் சொல்லை என் பேனாப் பெயாராகத்தான் குறிப்பிடுகிறேன் 
அதனா ல்தன் உத்தமம் மானாட்டு கருத்துறைகளிலும் மடலடல் குழு கருத்துரை
களிலும்  மதுரைப்பக்க உள்ளீடுகளிலும் அவ்வாறே ஓர் ஆசியரின் பேனா ப்
பெயரா கத்தா ன்வைத்துள்ளென்  நான் பயன் கொள்ளும் நிலை முதல்வன் எனும்
சொல்,தமிழ் மொழியில் காணக்கூடிய அகரதி சொல் தனில் காணும்  பண்பு
மட்டும் காட்டுவது ஆகும் இங்கு ஜாதிப்பெயராகக் கொள்ள  வேண்டாம்

மேலும் முதலி என்பது தனித்த நிலையில்  ஜாதிப்பெயரே  இல்லை

முன்பு ஜாதி என்பது அவரவர் செய்யும் தொழில் வழி அமைவது

எப்படியோ இப்பொது அவ்வாறு  காட்டப்படுகின்ற நிலை உருவாகி உள்ளது 

வேளாள முதலி , கைகோளமுதலி அகம்படி முதலி சேனை முதலி எனும் ஜாதிப் பெயர் சேர்ந்தவை 
முதல் சொல் நீக்கி முதலி மட்டும் பயனில் நிற்கின்றன இவை சரியக உணர வேண்டுமனா ல் வேளாளரில்
கொங்கு வேளாளர்  தொண்டை வேளாளர் பாண்டியா  வேளாளர் சோழிய வேளாளர் கார்காத்த,வேளாளர்
என திருமண விளம்பரங்களில் காணலாம் ஆனால் காவுண்டர் நாயக்கர் உடையார் சேர்வை மூப்பனார்
படையாச்சி நாடார் நாட்டார் என்பவைதன் தொழில் வழி பெயர்கள் ஜாதிகளாகக் கொள்ளலாம் இவற்றில்
பல க்ஷத்திர்ய ஜாதிகளகக் வகுக்கப்பட்டவை 

காலமறுதலில் ஒருகால் ஓர் தொழில் செய்தவர் அதெ தொழில் செய்யாமல் வேறு  தொழில் வழி
சென்றலும்அதே  ஜாதிப்பெய்ரைத் தாங்கி நிற்கின்றனர் 

பிள்ளை என்பதும் முதலி போன்ற பட்டம் தான் ஜாதி அல்ல இதனில் வேளாண் பிள்ளைகள் கோனார்ப்
பிள்ளை  தளவாய்ப் பிள்ளை உண்டு
 
பயிர்த் தொழில் மட்டும்தான் ஒர் பெருந்தொழில் என்னும் காலத்தில் ஓர் ஊரில் பெரிய அளவில்
பயிர்த் தொழில் செய்வோரை  முதலி என்பதும் அவர்கள் ஊருக்கு முதன்மையான குடிகள் =அந்தஊரினைக் 
காக்கும் குறு சிற்றசனுக்கு ஈடானதுதான் அதனல் தான் வேள் ஆள் வேளா ண் எனும் கருத்தில் வேளாளர் எனும்
சொல்  ஆளுமை வழி உருவகி உள்ளது உழுதுண்போரும் உழுவித்துண்போரும் எனபார் நச்சினார்க்கு இனியர்
 நிலக் கிழார்கள் எனவும் (சேக்கிழார் ) இவர்கள் அரசருக்கு பெண் கொடுக்கும் தகுதி படைத்தவர் எனவும் குறிப்பார் 
 
அவ்வகையிலேயே சில ஊர்களில் `நடைபெறும் பொருளாதார  முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நெசவுத்தொழில்
என்றால் அவ்வூரில் கைக்கோளர்கள் முதலி எனும் பாட்டத்துடன்  இருப்பர் (கைகோள ர் தங்கள் தொழிலை மாற் றிக்
கொண்டனர் )

முற்கால அரசர் சிற்றசர்களுடன்  அணுக்கமான இருந்து கொண்டு தகவல் கொடுப்போர் அவர் இடும் கட்டளைகளை
நிறை வேற்றுவோர் அகம்பாடி முதலிகள் என்பார்கள்  (முதல் ஆரம்பநிளையிளிருந்து பணியாற்றுவோர் (home dept )

தேவாரம் பாடிய நாயன்மர்களை மூவர் முதலிகள் என்பதும் மரபு (முதல் முதல் சமைய  மாற்ற த்திற்கு வித்திட்டவர்கள் 

சில ஊர்களி ல் காவுண்டர் எனும் பெயர் தாங்கு வோர்  ஊரின் முதலி (காவுண்டன்) எனும் சொல் பயன் கொள்ளமல்
முதல்/ மூத்த குடிகளாக இருப்பர் 

ஆக முதலி என்பது ஜாதிப்பெயரில்லை முதல்மைக் குடிமகனாக கொள்ளப்படும் பட்டப் பெயர்தானாகும் 

ஓர் காலத்தில் கிழார் எனும் பட்டமும் இருந்துள்ளது 
எனினும் முதலி  மரியாதை நிமித்தமாக ஆர் எனும் சொற்கடை செர்க்கப்பட்டு பயனில் உள்ளது 

இன்நாளில் ஓர் ஜாதி பெயரகத் தான் காட்டப் படுகின்றதும் கொள்ளப், படுகின்றதும் உண்மையே 

மேலும் வடநாட்டில் வெளி நா ட்டில் குடும்பப் பெயர் தனையே பெரும்பாலும் பயன்கொள்வர்
மிகச் சரியாக சொல்ல வேண்டும் எதற் காவது ஆவணமகும் படிவம் எழுத வேண்டும் எனும்
போதுதான் தா ன் முழு பெயரை  எழுதுவர் 

காந்தி                                    மோகன்லால்
நேரு                                     ஜவஹர்லால்
பாஜ்பாய்                              அடுல்பிஹாரி             
அத்வானி                            லால் கிருஷ்ணன்
படேல்                                  வல்லபாய் 
மூப்பனார்                            கருப்பையா
கென்னடி                             ஜான் (பிரிஜெரால்டு )

போசு                                     சுபாஷ்சந்திர (ஆனால் நேதாஜி என்பது பொதுவாக  மக்கள் வழங்கும் பட்டம்)
சாஸ்த்ரி  (பட்டம்)              லால்பஹதூர்

குடும்பப் பெயரே ஜாதி ஆகாது ஆ னால் குடும்பப் பெயர் எல்லாவற்றிற்கும் ஜாதிகள் உண்டு 
காந்தி ஒரு பணியா (வைசியர்) இதே பணியாவில் குப்தா, சேகல் சிங்கல் எனபலப்பல உண்டு 
பிரா மணரில் மிஸ்ரா, ஷர்மா சரஸ்வத் எனவரும் நிரல் உண்டு 
எ ன்னவேன்றல் ஓரே குடும்பப பெயரில் மணக்க மாட்டார்கள் பங்காளி ஆகிவிடும் அதாவது
நம்மூரில் கோத்திரம் என்பார்கள் அதற்கு இணையானது ஓரே கோத்திரத்தில் மணக்க மாட்டார்கள் 

ஆனால் ஜகஜீவன்ராம் எனபதில் ராம் எனும் சொல் தலித் தனைக் குறி க்கும் என்பார்கள் 

நான் வடநா ட்டில் (டில்லியில் ) பணி புரிந்த போது என்பெயரை இந் நாள் மரபில் லோக சுந்தரம் என எழுதினால் 
 அதனில் உள்ள SUNDA RAM என்பது  ஜகஜீவன் ராமில் உள்ள ராம் என நினைத்தனர் ஆனால் தேவாரம்
முதலியவை பயன் கொள்ளும் போது  கேட்டு நீங்கள் பிராமணனா அல்லது உங்கள் TITLE (குடும்பப் பெயர் என்ன
எனக் கேட்டார்கள் பிறகு நான் தமிழ் நாட்டில் நடைமுறை மரபு பற்றி விளக்கினேன்  

பெரியவர்கள் நன்கு மதிப்பவர்கள் பெயரைச் சொல்லக்காடாது எனும் (மறை முகமாக வற்புறுத்தவும் படும்) எழுதாத
மரபும் உள்ளது 

காஞ்சி பெரியவர் / சீனியர்   சந்திரா சேகரர் ர்(சரசசுவதி)
கலைஞர்                                   கருணாநிதி
அம்மா                                       ஜெய லலிதா
அம்மா                                       பங்காரு 
எம்  ஜி ஆர்                                ராமசந்திரன் 
என வழங்கப்படுகின்றது  அறிவீர் 
இவ்வழிதான்
குடுபங்களில் தந்தை தாய்  பாட்டன் பாட்டி கணவன் மனைவி  மாமனார் மாமியார் அண்ணன் அண்ணி அத்தை மாமா
முதலிய உறவுப் பெயர் களை மட்டும்  பயன் கொள்கின்றனர் பெயர சொல்லி அழைப்பதில்லை அப்படி அழைத்தபோதும்
உறவுப்பெயர் கொண்டுதான் முடியும் XXXX மாமா என 

இப்பொது சிறிவர்கள் பெரியவர்களை அங்க்கிள், ஆண்டி, மாஅ, பாஅ, கிராண்ட்பாஅ, கிராண்ட்மாஅ என்கின்றனர் 

செல்வன்

unread,
Feb 3, 2015, 11:51:04 AM2/3/15
to mintamil
அங்கிள், ஆண்டி என சம்பந்தமில்லாதோரை அழைக்கும் மரபு தவறானது.

ஆங்கில மரபு அப்படி இல்லை. நான் சிறூவனாக இருந்த காலத்திலும் உறவல்லாத பெரியவர்களை அத்தை, மாமா, அங்கிள், ஆண்டி என அழைத்தது கிடையாது. ஆண் என்றால் அய்யா, பெண் என்றால் அம்மா. அது மூன்றுவயது குழந்தையாக இருந்தாலும் அம்மா எனத்தான் அழைப்போம்.

இந்த அங்கிள், ஆண்டி விளிப்பு எங்கேஇருந்து தமிழ்நாட்டுக்கு வந்த மரபு என்பதுதான் புரியாத புதிராக உள்ளது

தேமொழி

unread,
Feb 3, 2015, 2:21:42 PM2/3/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
நன்றி ஐயா,

///
On Tuesday, February 3, 2015 at 8:36:07 AM UTC-8, selvi...@gmail.com wrote:
முதலி என்பது தனித்த நிலையில்  ஜாதிப்பெயரே  இல்லை
/// 

நானும் இதைப் பற்றி கொஞ்சம் தேடிக் கொண்டிருந்தேன் ஐயா.  அதன் வழி நான் தெரிந்து கொண்டது கீழே....  இத்தகவல் இங்கு குழுமத்திலேயே முன்னர் பகிரப்பட்டுள்ளதாகத்  தெரிகிறது.....

கிருஷ்ணதேவராயர் தனது  தளபதி அரியனாதருக்கு கொடுத்த பட்டப்பெயரை பின்னர் அவரது வழிவந்தோரும்  வைத்துக் கொண்டதாகத் தெரிகறது.  
அரியநாத முதலி என்பவர்தான் வரலாற்றில் முதல் முதலியோ...இன்னமும் கொஞ்சம் தேட வேண்டும்...

///காஞ்சி அருகில் மெய்ப்பேடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த தொண்டை மண்டல வேளாளர் மரபைச் சார்ந்த அரியநாதர் என்பவர் விஜயநகரப் பேரரசில் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். பீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூட பேருதவியாக விளங்கினார்.

அரியநாதரின் இத்தீரச் செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு "படைமுதலி" என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் "தளவாய் அரியநாத முதலியார்" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு "முதலியார்" என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த "விருதுப்பெயர்" காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது.///

..... தேமொழி



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 3, 2015, 2:36:44 PM2/3/15
to mint...@googlegroups.com
////
அங்கிள், ஆண்டி என சம்பந்தமில்லாதோரை அழைக்கும் மரபு தவறானது.
///

????

ஏன் தவறு? என்ன தவறு? எப்படி தவறு? புரியவில்லையே?  

இதனால் யாருக்கு என்ன பாதிப்பு?

என்ன மரியாதை குறைவு?

விவேகானந்தர் அனைவரையும் சகோதர சகோதரி எனக் கூப்பிடவில்லையா?

யாதும் ஊரே...யாவரும் கேளிர் ...

அதெல்லாம் அப்படி கூப்பிடலாம்....  அவர்களே எனக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம்.

நானெல்லாம் சிறுவயதில் நண்பர்களின் பெயருடன் அம்மா சேர்த்துவிடுவேன்.  உங்கள் அம்மாவை "செல்வன் அம்மா" "செல்வன் அம்மா"  என்று கூப்பிடுவது போல.

..... தேமொழி

செல்வன்

unread,
Feb 3, 2015, 2:36:49 PM2/3/15
to mintamil
ஜாதிபெயர்கள் எல்லாமே உயர்ந்த, முதல் எனும் பெயர் வகையிலேயே அமைந்தன. 

பிள்ளை என்றால் உசந்த, உயர்ந்த எனப்பொருள்.
முதலி என்றாலும் முதல்வர் எனப்பொருள்
ச்ரேஷ்ட- உசந்த, உயர்ந்த தான் செட்டியார் ஆனது

கவுண்டர், காமிண்டர் என்பதன் திரிபு, ஊர் முதல்வன் எனப்பொருள். இவர்கள் கேரளாவில் மேனோன் (மேலானவன்) என அழைக்கப்பட்டார்கள்.

நாயகன் தான் நாயக்கர் ஆனது.

ஜாதிப்பெயர்களில் பலவும் விருதுகளாக தான் இருந்தன. சாஸ்திரங்களை கரைத்துகுடித்தவர் சாஸ்திரி. இந்திய முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிராமணர் அல்ல. ஆனால் அவர் முன்னோர் யாரோ விருதாக சாஸ்திரி எனும் பட்டம் பெற்றார். அதுவே பின் அவர் குலப்பெயராகவும் ஆகிவிட்டது.

இன்று திவிவேதி, திரிவேதி, சதுர்வேதி என எல்லாம் பெயர்கள் வைத்துகொண்டு இருக்கிறார்கள். இரு வேதங்களை கற்றவர் திவேதி, மூன்று வேதங்களைகற்றவர் திரிவேதி, நாலுவேதங்களைகற்றவர் சதுர்வேதி. பண்டிதர், பண்டிட் என்பதும் இவ்வாறான விருதே. இவை எல்லாம் பின்னாளில் ஜாதிசார்ந்த சர்நேம் ஆகிவிட்டன

செல்வன்

unread,
Feb 3, 2015, 2:42:17 PM2/3/15
to mintamil
வயதான அமெரிக்கர் யாரையாவது அங்கிள் என அழைத்துபாருங்கள் :-) சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

அறுபது வயது அமெரிக்கர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். என் நாலு வயது மகள் இந்தியர்கள் வந்தால் பெயரைசொல்லி "சேகர் மாமா, அனு ஆண்டி" என அழைப்பாள் (அது அவர்களாக சொல்லிகொடுத்தது. பெயரைச்சொல்லி அழைத்தால் தவறாக நினைக்கிறார்கள்) அமெரிக்கரைகண்டதும் அவர் பெயரைச்சொல்லி ஜாக் என அழைத்தாள். 

அங்கிள், ஆண்டி என அழைப்பது தமிழ் மரபும் கிடையாது, ஆங்கில மரபும் கிடையாது. அது என்ன மரபு என தான் எனக்கு புரியவில்லை.

செல்வன்

unread,
Feb 3, 2015, 2:50:09 PM2/3/15
to mintamil
எத்தனை வயதானவரையும் பெயர் சொல்லி அழைக்கலாம். அது அந்தஸ்து குறைவானதாக கருதபடுவதில்லை.

அறிமுகம் ஆகாதவர், பெயர் தெரியாதவர் என்றால் சார் என முதல் முறை அழைக்கலாம். அப்படி அழைத்தால் அவர் உங்களுக்கு அன்னியமானவர் எனப்பொருள்

எந்த பதவியில் இருப்பவரையும் முதல் பெயரில் அழைக்கலாம். ஆசிரியரை தவிர்த்து. அவரை மட்டும் புரபசர் என அழைப்பார்கள். முதல் பெயரில் விளிக்க மாட்டார்கள்.

யார் வந்தாலும் எழுந்து நின்று வணக்கம் சொல்லவேண்டியது இல்லை. உயர்பதவியில் இருப்போருக்கு எழுந்து நிற்கவேண்டியது இல்லை.

இந்த அங்கிள் ஆண்டி என்பது பெயர் சொல்லி அழைப்பது தவறு எனும் தமிழ் மரபின் வெளிப்பாடு என கருதுகிறேன். ஆங்கிலத்தில் அய்யா எனவும் சொல்லமுடியாதே? அதனால் அங்கிள், ஆண்டி வழக்கில் வந்திருக்க்லாம்

தேமொழி

unread,
Feb 3, 2015, 3:19:09 PM2/3/15
to mint...@googlegroups.com
இருக்கலாம்... ஆனால் நாம் இங்கிருந்து ஓடிவிடுவோம்..

இல்லையென்றால் ...

அவருடைய  இடங்கர் இழை கடத்தப்படுவதாக  திரு. கணேசன் வருத்தப்படகூடும்.....

:- |

.... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages