ஐ தமிழி ⵣ

295 views
Skip to first unread message

நரசிங்கபுரத்தான்

unread,
Mar 12, 2018, 10:33:37 PM3/12/18
to mintamil, N D Logasundaram
     ஐ  தமிழி 

பண்டைய தமிழ் எழுத்து வரி வடிவமான தமிழி 

இவற்றில் " ஐ " என்ற எழுத்துக்கு இணையான வடிவம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை .

தொல்காப்பிய விதிப்படி 

"அகர இகர ஐகாரம் ஆகும்" -- தொல்காப்பியம், மொழிமரபு-21
"அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்"
---தொல்காப்பியம் மொழிமரபு - 23. 

  இவற்றை கருத்தில் கொள்ளும் பொழுது " ஐ " என்பதன் வரி வடிவம் அ , இ , ய்  என்ற எழுத்துக்களின் கூட்டாக அமைந்து இருக்க வேண்டும் . அல்லது ஐ என்ற வடிவத்தில் இருந்து பிரிந்து இந்த மூன்று எழுத்து வடிவம் பெற்று இருக்க வேண்டும் .

என்னுடைய அனுமானத்தின் படி "ஐ " என்ற தமிழி  பின்வருமாறு இருந்திருக்க வேண்டும் 

= ஐ 

இருபுற முத்தரைக்கோள் ,ராக்காச்சி ,வஜ்ஜிரம்  என்று வழங்கி வரும் பண்டைய மனிதனின் முதல் குறியீடு இதுவாகும் .

பொதுவாக  உயர்ந்த மனிதனைக் குறிக்கப் பட்ட"ஐ " குறியீட்டிலிருந்து பிற வரி வடிவங்கள் தோன்றி இருக்க வேண்டும் .

இன்றும் நம் வீடுகளில் பொங்கல் பண்டிகையின் பொது வரையப்படும்  இந்தக் குறியீடு தமிழின் முதல் எழுத்து வடிவாக இருக்கலாம் .

மேலும் வட ஆப்பிரிக்காவின் பார்பரா எனும் மொழியில் இந்த எழுத்து வடிவம் யாழ் என வழங்கப்படுகின்றது 

இதற்கான யுனிகோடு 

Unicode Character “ⵣ” (U+2D63)

இந்த மடல் என் அனுமானத்திலும் நான் பார்த்த தகவல்களாலும் எழுதப்பட்டது . சான்றுகள் ஏதும் இல்லை என்றாலும் .
மின் தமிழ் நண்பர்களின் கருத்துக்களை அறியும் போக்கில் வைக்கின்றேன் 

சுரேஷ்குமார் 

Message has been deleted

நரசிங்கபுரத்தான்

unread,
Mar 13, 2018, 12:02:17 AM3/13/18
to mintamil

Message has been deleted

நரசிங்கபுரத்தான்

unread,
Mar 14, 2018, 2:37:30 AM3/14/18
to mintamil
நன்றி  காளைராசன் ஐயா 

On Tue, Mar 13, 2018 at 1:02 PM, நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:

தேமொழி

unread,
Mar 15, 2018, 4:11:20 PM3/15/18
to mint...@googlegroups.com
நீங்கள் குறிப்பிடும் "ஐ " குறியீடு போன்ற ஒன்றை தமிழ் எழுத்துக்கள் வளர்ச்சியைக் காட்டும் படம் ஒன்றிலும் காணலாம்.

தமிழ் இணையக் கல்விக்கழகம் 

தமிழ் எழுத்துக்கள்
முனைவர் மா.பவானி, உதவிப் பேராசிரியர் , கல்வெட்டியல் துறை

அதிலும் "ஐ" தலைமையைக் குறிக்கும் குறியாக இருந்தது எழுத்துருவில் எடுத்தாளப்பட்டது என்ற கோணம் மிக முக்கியமான கோணம்.

உங்கள் கருத்தை நீங்கள் ஒரு கட்டுரை வடிவில் எழுதி வெளியிட வேண்டும். 

நாள்மாதம்வருடம்செலவுவரவுமேலேயுள்ளபடிரூபாய்இலக்கம்

போன்ற முறையில் எழுதுவது சென்ற நூற்றாண்டில் கூட இருந்த வழக்கம்தானே.

கையால் எழுதுவது கடின வேலையாக இருந்த பொழுது மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து வரும் எழுத்துகள், வார்த்தைகள் சுருக்கமான குறியீட்டில் எழுதப்படுவது ஒரு பரிணாம வளர்ச்சிதானே.

(ஆங்கிலத்திலும் கூட இருந்த சுருக்கெழுத்து முறை இக்காலத்தில் தேவையின்றிப் போகும்பொழுது காணாமல் போய்விட்டது.)

.....தேமொழி
Message has been deleted

தேமொழி

unread,
Mar 15, 2018, 10:19:28 PM3/15/18
to மின்தமிழ்

On Thursday, March 15, 2018 at 7:03:05 PM UTC-7, கி. காளைராசன் wrote:

வணக்கம்.

On 16-Mar-2018 1:41 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> நீங்கள் குறிப்பிடும் "ஐ " குறியீடு போன்ற ஒன்றை தமிழ் எழுத்துக்கள் வளர்ச்சியைக் காட்டும் படம் ஒன்றிலும் காணலாம்.
>
>

> ref: http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-inscription-html-tamil-chara-280429
> தமிழ் இணையக் கல்விக்கழகம் 
>
> தமிழ் எழுத்துக்கள்
> முனைவர் மா.பவானி, உதவிப் பேராசிரியர் , கல்வெட்டியல் துறை
> http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/image/tamil_chara2.jpg
>
>
> அதிலும் "ஐ" தலைமையைக் குறிக்கும் குறியாக இருந்தது எழுத்துருவில் எடுத்தாளப்பட்டது என்ற கோணம் மிக முக்கியமான கோணம்.
>
> உங்கள் கருத்தை நீங்கள் ஒரு கட்டுரை வடிவில் எழுதி வெளியிட வேண்டும். 
>
> நாள்
> மாதம்
> வருடம்
> செலவு
> வரவு
> மேலேயுள்ளபடி
> ரூபாய்
> இலக்கம்
> ௳
> ௴
> ௵
> ௶
> ௷
> ௸
> ௹
> ௺
>
> போன்ற முறையில் எழுதுவது சென்ற நூற்றாண்டில் கூட இருந்த வழக்கம்தானே.
>

தட்டச்சு இயந்திரத்தின் அமைப்பு முறையால்  எழுத்துகளின் வரிவடிங்களைக் குறைத்தே ஆக வேண்டும் என்ற (நிர்பந்தம்) தேவை.  அதனால் இந்தக் குறியீடுகளைத் தட்டச்சு இயந்திரத்தில் பொருத்த இடமில்லாமல் கை விட்டுவிட்டனர் :(

"தேவை"  என்பதுதான் எழுத்தின் வரிவடிவ மாற்றங்களுக்குக் காரணம் என்பதைத்தான் இது காட்டுகிறது, இல்லையா?

முதலில் எழுதுபவர் வேலையை சுலபமாக்கத் தேவை.

பிறகு தட்டச்சு இயந்திரம் காலம் - பொறியின் அமைப்பினால் இடப்பற்றாக்குறை எந்த எழுத்துக்களை வைக்கலாம் என்பதை வரையறுத்துள்ளது.

பெரியார் பத்திரிகை அச்சுக்கோர்ப்பில் பல வகை எழுத்துக்களின் தேவை செலவை உயர்த்தியபொழுது அடுத்து ஒரு மாற்றம் பரிந்துரைக்கப்பட்டது.

தேவை மாற்றத்தை நிர்ணயிக்கிறது,  ஆனால் தேவை என்ன  என்பதோ காலத்திற்கேற்ப மாறுகிறது. 

Necessity is the mother of invention -  சரியாகத்தான் கூறியுள்ளார்கள் !!!

..... தேமொழி

> https://ta.wikipedia.org/s/2e74
>
>
> கையால் எழுதுவது கடின வேலையாக இருந்த பொழுது மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து வரும் எழுத்துகள், வார்த்தைகள் சுருக்கமான குறியீட்டில் எழுதப்படுவது ஒரு பரிணாம வளர்ச்சிதானே.
>
> (ஆங்கிலத்திலும் கூட இருந்த சுருக்கெழுத்து முறை இக்காலத்தில் தேவையின்றிப் போகும்பொழுது காணாமல் போய்விட்டது.)
>
> .....தேமொழி
>
>
> On Monday, March 12, 2018 at 7:33:37 PM UTC-7, நரசிங்கபுரத்தான் wrote:
>>
>>      ஐ  தமிழி 
>>
>>
>> பண்டைய தமிழ் எழுத்து வரி வடிவமான தமிழி 
>>
>>
>>

>> இவற்றில் " ஐ " என்ற எழுத்துக்கு இணையான வடிவம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை .
>>
>> தொல்காப்பிய விதிப்படி 
>>
>> "அகர இகர ஐகாரம் ஆகும்" -- தொல்காப்பியம், மொழிமரபு-21
>> "அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்"
>> ---தொல்காப்பியம் மொழிமரபு - 23. 
>>
>>   இவற்றை கருத்தில் கொள்ளும் பொழுது " ஐ " என்பதன் வரி வடிவம் அ , இ , ய்  என்ற எழுத்துக்களின் கூட்டாக அமைந்து இருக்க வேண்டும் . அல்லது ஐ என்ற வடிவத்தில் இருந்து பிரிந்து இந்த மூன்று எழுத்து வடிவம் பெற்று இருக்க வேண்டும் .
>>
>>
>>

>> என்னுடைய அனுமானத்தின் படி "ஐ " என்ற தமிழி  பின்வருமாறு இருந்திருக்க வேண்டும் 
>>
>>
>>

>> = ஐ 
>>
>> இருபுற முத்தரைக்கோள் ,ராக்காச்சி ,வஜ்ஜிரம்  என்று வழங்கி வரும் பண்டைய மனிதனின் முதல் குறியீடு இதுவாகும் .
>>
>> பொதுவாக  உயர்ந்த மனிதனைக் குறிக்கப் பட்ட"ஐ " குறியீட்டிலிருந்து பிற வரி வடிவங்கள் தோன்றி இருக்க வேண்டும் .
>>
>> இன்றும் நம் வீடுகளில் பொங்கல் பண்டிகையின் பொது வரையப்படும்  இந்தக் குறியீடு தமிழின் முதல் எழுத்து வடிவாக இருக்கலாம் .
>>
>>
>>
>>
>>
>>

>> மேலும் வட ஆப்பிரிக்காவின் பார்பரா எனும் மொழியில் இந்த எழுத்து வடிவம் யாழ் என வழங்கப்படுகின்றது 
>>
>>
>>

>> இதற்கான யுனிகோடு 
>> Unicode Character “ⵣ” (U+2D63)
>> இந்த மடல் என் அனுமானத்திலும் நான் பார்த்த தகவல்களாலும் எழுதப்பட்டது . சான்றுகள் ஏதும் இல்லை என்றாலும் .
>> மின் தமிழ் நண்பர்களின் கருத்துக்களை அறியும் போக்கில் வைக்கின்றேன் 
>>
>>
>> சுரேஷ்குமார் 
>>
>>
>>
>>
>>
>>
>>
>>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 15, 2018, 11:00:32 PM3/15/18
to மின்தமிழ்
யாரையாவது கேட்கும்பொழுது உனக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்பது கூட  
நீ என்ன தனிச் சிறப்பு பெற்ற ஆளா ? அதாவது தலைமை அதிகாரம் உள்ளவரா என்ற பொருளில் கேட்பது வழக்கம் என்று கூறுவார்கள்... இவ்வாறு  நான் எங்கோ படித்துள்ளேன்.

தலைவர்களாக இருந்தவரை அடையாளம் காட்ட அவரது தலையணியும் பண்டைய நாட்களில் அவ்வாறு கொம்பு வைத்தது போலிருப்பதாகவும் கூறப்படும். 

1.

2.

Ψ ஆரம்பக்கால ஐ 

Ψ   sometimes used instead of  for Neptune.

ref: https://en.wiktionary.org/wiki/%CE%A8

..... தேமொழி

N. Ganesan

unread,
Mar 15, 2018, 11:18:21 PM3/15/18
to மின்தமிழ்

On Thursday, March 15, 2018 at 1:11:20 PM UTC-7, தேமொழி wrote:
நீங்கள் குறிப்பிடும் "ஐ " குறியீடு போன்ற ஒன்றை தமிழ் எழுத்துக்கள் வளர்ச்சியைக் காட்டும் படம் ஒன்றிலும் காணலாம்.

முதலில் உள்ள ஐ வடிவம் சுரேஷ்குமார் காட்டிய வடிவத்தினும் வேறானது.

நா. கணேசன்

தேமொழி

unread,
Mar 15, 2018, 11:31:31 PM3/15/18
to மின்தமிழ்
ⵣ சுரேஷ்குமார் காட்டியது 

Ψ  அதன் மேற்பாகம் போன்று தமிழில் முன் இருந்த ஐ 

Ψ இது போன்ற எழுத்தை அந்த எழுத்துக்கள் பரிணாம வளர்ச்சியில் உள்ளதைக் காட்டி என் கருத்தைப் பகிர்ந்தேன். 
 
..... தேமொழி

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 15, 2018, 11:33:19 PM3/15/18
to மின்தமிழ்

On Tuesday, March 13, 2018 at 9:50:38 PM UTC-7, கி. காளைராசன் wrote:
வணக்கம்.

அருமையானதொரு பதிவு.

இதுபோன்றதொரு குறியீட்டை மணவூர் (கீழடி) அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மண்பானை ஓட்டிலும் பார்த்துள்ளேன்.  
அவைகள் தொல்லியல்துறையினரால் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? எனத் தெரியவில்லை.

போட்டோ இருக்கிறதா?

நா. கணேசன்
 
அன்பன்
கி.காளைராசன்

N. Ganesan

unread,
Mar 15, 2018, 11:43:19 PM3/15/18
to மின்தமிழ்

On Monday, March 12, 2018 at 7:33:37 PM UTC-7, நரசிங்கபுரத்தான் wrote:
   
இருபுற முத்தரைக்கோள் ,ராக்காச்சி ,வஜ்ஜிரம்  என்று வழங்கி வரும் பண்டைய மனிதனின் முதல் குறியீடு இதுவாகும் .

பொதுவாக  உயர்ந்த மனிதனைக் குறிக்கப் பட்ட"ஐ " குறியீட்டிலிருந்து பிற வரி வடிவங்கள் தோன்றி இருக்க வேண்டும் .

இன்றும் நம் வீடுகளில் பொங்கல் பண்டிகையின் பொது வரையப்படும்  இந்தக் குறியீடு தமிழின் முதல் எழுத்து வடிவாக இருக்கலாம் .

பொங்கல் பண்டிகையின் போது (போகி என்பது இந்திரனுக்கான விழா) வரையப்படும் இந்த வச்சிரக் குறியீட்டின் வரையப்படும்
படங்கள் கிடைக்குமா? நன்றி.

இந்த வஜ்ரம் = thunderbolt.  Zeus, the Greek god holds this thunderbolt.

முருகன் (உ-ம்: திருச்செந்தூர்) வலக்கையில் இருக்கும் சக்தி ஆயுதம் என்பது வஜ்ரமே.

முதல் ஐ எழுத்து திரிசூலம் போல் உள்ளது. வஜ்ஜிரமாக இல்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 16, 2018, 12:26:59 AM3/16/18
to மின்தமிழ்
At Sikkal, Vajra shape on Vel weapon: http://murugan.org/temples/sikkal.htm

தேமொழி

unread,
Mar 16, 2018, 1:03:15 AM3/16/18
to மின்தமிழ்

On Thursday, March 15, 2018 at 8:33:19 PM UTC-7, N. Ganesan wrote:

On Tuesday, March 13, 2018 at 9:50:38 PM UTC-7, கி. காளைராசன் wrote:
வணக்கம்.

அருமையானதொரு பதிவு.

இதுபோன்றதொரு குறியீட்டை மணவூர் (கீழடி) அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மண்பானை ஓட்டிலும் பார்த்துள்ளேன்.  
அவைகள் தொல்லியல்துறையினரால் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? எனத் தெரியவில்லை.

போட்டோ இருக்கிறதா?

அவருடைய படத்தொகுப்பில் எனக்கு அத்தகைய படம்  கிடைக்கவில்லை >>> https://drive.google.com/drive/folders/0B02g7RFB0HureWF6S1o5S2xWRk0

..... தேமொழி  

N. Ganesan

unread,
Mar 16, 2018, 1:13:38 AM3/16/18
to மின்தமிழ்
2018-03-15 22:03 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Thursday, March 15, 2018 at 8:33:19 PM UTC-7, N. Ganesan wrote:

On Tuesday, March 13, 2018 at 9:50:38 PM UTC-7, கி. காளைராசன் wrote:
வணக்கம்.

அருமையானதொரு பதிவு.

இதுபோன்றதொரு குறியீட்டை மணவூர் (கீழடி) அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மண்பானை ஓட்டிலும் பார்த்துள்ளேன்.  
அவைகள் தொல்லியல்துறையினரால் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா? எனத் தெரியவில்லை.

போட்டோ இருக்கிறதா?

அவருடைய படத்தொகுப்பில் எனக்கு அத்தகைய படம்  கிடைக்கவில்லை >>> https://drive.google.com/drive/folders/0B02g7RFB0HureWF6S1o5S2xWRk0

நினைவில் இருந்து சொல்பவை நேரில் பார்க்கும்போது பலசந்தர்ப்பங்களில் சரியாக இருக்காது. 
 
..... தேமொழி  

நா. கணேசன்
 
அன்பன்
கி.காளைராசன்

Message has been deleted

தேமொழி

unread,
Mar 16, 2018, 6:26:07 PM3/16/18
to மின்தமிழ்

On Friday, March 16, 2018 at 5:03:20 AM UTC-7, கி. காளைராசன் wrote:

தேவை என்பது சரி.

> ௳
> ௴
> ௵
> ௶
> ௷
> ௸
> ௹
> ௺
>
தமிழ்த் தட்டச்சு இயந்திரத்தில் இல்லாமல் போனதற்குக் காரணம் அந்த இயந்திரத்தின் வடிவமைப்பு.  தன் கஞ்சத்தனத்திற்காகத் தமிழ் மொழியைச் சிதைக்கும் எண்ணம் இல்லை.

ஆனால்,
பெரியாருக்குத் தேவை சில ரூபாய்கள், அதைச் செலவு செய்யமாட்டாமல் தனது கருமித்தனத்தால், தமிழ் எழுத்துக்களை மாற்றினார்.  அவருக்குக் காசுமேல் இருந்த ஒரு பற்று தமிழ்மேல் இல்லை.

கடவுள் மேல்  உள்ள பற்றால் தமிழை  வாயிலுக்கு வெளியே நிறுத்தும் தமிழகத்தில் 
காசுமேல் உள்ள பற்றால் அதன்  எழுத்தில்  மாற்றம் சில  செய்வது குறித்து  குற்றம் காண என்ன தேவை இருக்கிறது?

..... தேமொழி

அன்பன்
கி.காளைராசன்
 
nkantan r

unread,
Mar 17, 2018, 2:31:43 AM3/17/18
to மின்தமிழ்
கருமித்தனமோ, வளர்ச்சி நோக்கமோ- பெரியார் காட்டி, எம்ஜியார் உறுதி செய்த மாற்றம் ஏற்புடையதே. இதை வித்தாகக் கொண்டு மேலும் மாற்றம் செய்யும் அறிவும், துணிவும் வேண்டும்.

தமிழ்க் கடவுள் முருகனும், தென்னாடுடைய சிவனும், தமிழ் இலக்கியங்களில் பேச ப்பட்ட மாலும் ஆத்திக conservatives-க்கு அந்த சிந்தனையும், அறிவும், துணிவும் தரட்டும்!!

rnk

kanmani tamil

unread,
Mar 17, 2018, 2:44:47 AM3/17/18
to mintamil
///கருமித்தனமோ, வளர்ச்சி நோக்கமோ- பெரியார் காட்டி, எம்ஜியார் உறுதி செய்த மாற்றம் ஏற்புடையதே. இதை வித்தாகக் கொண்டு மேலும் மாற்றம் செய்யும் அறிவும், துணிவும் வேண்டும். ///

தட்டச்சுக்கு வசதியாக வேண்டும் என்று காரணம் காட்டி சில எழுத்துக்களுக்கு சீர்திருத்தம் கொண்டு வந்தனர்.
அதற்காக நீங்கள் கேட்பது போல் 4க் ,4ச் ,4ட் ,4த் ,4ப் கொண்டு வருவதற்கு தேவை இல்லையே !!!

கண்மணி 

nkantan r

unread,
Mar 17, 2018, 2:46:39 AM3/17/18
to மின்தமிழ்
Naan appadik ketkavillaiye??

rnk

kanmani tamil

unread,
Mar 17, 2018, 5:25:04 AM3/17/18
to mintamil
ஓ ! அவசரப்பட்டு பயந்து விட்டேன் .
கண்மணி 

On 17 March 2018 at 12:16, nkantan r <rnka...@gmail.com> wrote:
Naan appadik ketkavillaiye??
Message has been deleted
Message has been deleted

தேமொழி

unread,
Mar 17, 2018, 1:50:39 PM3/17/18
to மின்தமிழ்

On Saturday, March 17, 2018 at 4:48:14 AM UTC-7, கி. காளைராசன் wrote:

“கடவுள் மேல்  உள்ள பற்றால் தமிழை  வாயிலுக்கு வெளியே நிறுத்தும் தமிழகம்”
இதுகுறித்து மின்தமிழிலில் நிறையவே விவாதிக்கப்பட்டுள்ளது.
இங்கே பேசப்படும் தலைப்பிற்கு இந்த வாதம் பொருந்தாது.  எனவே, தனியொரு இழையாகத் துவக்கினால் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

“கடவுள் மேல்  உள்ள பற்றால் தமிழை  வாயிலுக்கு வெளியே நிறுத்தும் தமிழகம்” என்று கூறியதுதான்  கொடுக்கப்பட்ட மறுமொழியில் மையக்கருத்து எனப் பொருள் கொள்வதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. 

..... தேமொழி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 17, 2018, 2:01:01 PM3/17/18
to மின்தமிழ்

On Saturday, March 17, 2018 at 4:54:13 AM UTC-7, கி. காளைராசன் wrote:
2018-03-17 12:01 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
கருமித்தனமோ, வளர்ச்சி நோக்கமோ- பெரியார் காட்டி, எம்ஜியார் உறுதி செய்த மாற்றம் ஏற்புடையதே. இதை வித்தாகக் கொண்டு மேலும் மாற்றம் செய்யும் அறிவும், துணிவும் வேண்டும்.

மாற்றம் செய்யும் அறிவும், துணிவும் அவசியம் வேண்டும்.
அனைவருக்கும் பொதுவான மொழியைத் அவரவரர் தம் மனம்போன போக்கில் மாற்ற முற்படக் கூடாது.
சங்கம் கூடி ஆராய்ந்து வளர்த்த தமிழ் என்பதால், தேவையான மாற்றங்களைச் செய்யும் அறிவும் துணிவும் தமிழ்ச்சங்கத்திற்கே உரித்தானது.  

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் என்பதைத் தமிழறிஞர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வைத்து அவர்கள் பரிந்துரையின் பேரில் தேவையானவற்றை மட்டுமே  ஏற்றுக் கொண்டது தமிழக அரசு.  தமிழறிஞர்  குழு என்பது சங்கம் போன்றொதொரு அமைப்புதான்.

அவரவர் விருப்பப்படி அவரவர் தமிழ்  எழுதுவதும் அவர்கள் விருப்பம்.  

அவ்வாறு அவர்கள் தமிழ் எழுதுவதை ஏற்றுக் கொள்வதும்  ஏற்றுக் கொள்ளாததும் மற்ற தமிழர்களின்  தனிப்பட்ட விருப்பமே.  

மாற்றம் என்பது அரசு அறிவிக்காமல் மக்கள் பயன்பாட்டில் தானே வந்துவிடுவதும் உண்டு.  அது போல வந்தது ஃ இணைத்து எழுதும் முறை என நினைக்கிறேன். 

..... தேமொழி 

தமிழ்க் கடவுள் முருகனும், தென்னாடுடைய சிவனும், தமிழ் இலக்கியங்களில் பேச ப்பட்ட மாலும் ஆத்திக conservatives-க்கு அந்த சிந்தனையும், அறிவும், துணிவும் தரட்டும்!!

rnk
ஆமாம்,  ஆனால் முருகனே நேரில் வந்து சொன்னாலும், பெரியாரின் கஞ்சதனத்தையே நாங்கள் தூக்கிப் பிடிப்போம், மொழியின் சிறப்பைப் பற்றிக் கவலை கொள்ள மாட்டோம்.

அன்பன்
கி.காளைரசான்

Mar 17, 2018, 3:20:21 PM3/17/18
to மின்தமிழ்
மொழியின் சிறப்பு என்ன?

மொழியைப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் சிறப்பே மொழியின் சிறப்பு.

அப்படி முருகன் எனும் கடவுள் நேரில் வந்த்தால்....? பெரியார், எம்ஜியார் நேரில் வந்தவர். கற்பனை அல்ல.

rnk

Message has been deleted

nkantan r

unread,
Mar 18, 2018, 3:58:04 AM3/18/18
to மின்தமிழ்
இதில் ஹிந்தி, ஆங்கிலம் எங்கே, ஏன் நுழைந்தன?

கால், வால், தும்பிக்கை, உச்சியில் பொட்டு, சிண்டு, கொம்பு, அடுப்பு (ஆயுதம்) புரிந்தன. கூட்டெழுத்து??

rnk

PS:
நீங்களோ, நானோ, விரும்பினாலும் விரும்பாமல் வீணே விவாதம் செய்தாலும், மொழியும், எழுத்து வரிவடிவமும் மாறும்.

மாற்றம் ஒன்றே நிச்ச்யம். அப்படி மாறுவதால்தான் தமிழ் வாழும்.

Message has been deleted

தேமொழி

unread,
Mar 18, 2018, 10:30:12 AM3/18/18
to mint...@googlegroups.com

On Sunday, March 18, 2018 at 5:26:42 AM UTC-7, கி. காளைராசன் wrote:

2018-03-17 23:31 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Saturday, March 17, 2018 at 4:54:13 AM UTC-7, கி. காளைராசன் wrote:

2018-03-17 12:01 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
கருமித்தனமோ, வளர்ச்சி நோக்கமோ- பெரியார் காட்டி, எம்ஜியார் உறுதி செய்த மாற்றம் ஏற்புடையதே. இதை வித்தாகக் கொண்டு மேலும் மாற்றம் செய்யும் அறிவும், துணிவும் வேண்டும்.

மாற்றம் செய்யும் அறிவும், துணிவும் அவசியம் வேண்டும்.
அனைவருக்கும் பொதுவான மொழியைத் அவரவரர் தம் மனம்போன போக்கில் மாற்ற முற்படக் கூடாது.
சங்கம் கூடி ஆராய்ந்து வளர்த்த தமிழ் என்பதால், தேவையான மாற்றங்களைச் செய்யும் அறிவும் துணிவும் தமிழ்ச்சங்கத்திற்கே உரித்தானது.  

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் என்பதைத் தமிழறிஞர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வைத்து அவர்கள் பரிந்துரையின் பேரில் தேவையானவற்றை மட்டுமே  ஏற்றுக் கொண்டது தமிழக அரசு.  தமிழறிஞர்  குழு என்பது சங்கம் போன்றொதொரு அமைப்புதான்.

ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ 
என்ற எழுத்துக்களைத் தட்டச்சு செய்வதற்கு அதே உழைப்பும் காலநேரமும்தான் ஆகிறது.  அப்படியிருக்க, இந்த எழுத்துக்களின் வாலை வெட்டியதாலும், தும்பிக்கையை வெட்டியதாலும்  உண்டான நன்மை என்ன ?

யாருக்கும் எந்தவொரு நன்மையும் துளியும் பயக்காத இதைச் சீர்திருத்தம் என எங்ஙனம் எடுத்துக் கொள்வது?
“பயனில சொல் பாராட்டியுள்ள“ குழவினரைத் தமிழறிஞர்  குழு என்றும் சங்கம் போன்றொதொரு அமைப்பு  என்றும் சொல்ல முடியாது.

ஒரு குழு அமைத்து அவர்கள் பரிந்துரையில் செய்யப்பட்டது என்பது உண்மை ... அதை மாற்ற வழியில்லை

அந்தக் குழு தகுதியற்ற குழு என்ற உங்கள் எண்ணமோ ... “பயனில சொல் பாராட்டியுள்ள“ குழவினரைத் தமிழறிஞர்  குழு என்றும் சங்கம் போன்றொதொரு அமைப்பு  என்றும் சொல்ல முடியாது என்பதோ உங்கள் தனிப்பட்ட கருத்து.

உங்கள் கருத்து உங்கள் உரிமை.  அவரவர் கருத்தும் அவரவர் உரிமை.   

..... தேமொழி 
 
அன்பன்
கி.காளைராசன்
Message has been deleted

நரசிங்கபுரத்தான்

unread,
Mar 19, 2018, 7:51:29 PM3/19/18
to mintamil
நன்றி  தேமொழி  , கணேசன் ஐயா  

மேலும்  தகவல்களை இணைத்து கட்டுரை யாக்க முயற்சி செய்கின்றேன் .

சுரேஷ்குமார் 

2018-03-14 15:37 GMT+09:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:
நன்றி  காளைராசன் ஐயா 

On Tue, Mar 13, 2018 at 1:02 PM, நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Mar 19, 2018, 7:56:19 PM3/19/18
to மின்தமிழ்

On Monday, March 19, 2018 at 4:51:29 PM UTC-7, நரசிங்கபுரத்தான் wrote:
நன்றி  தேமொழி  , கணேசன் ஐயா  

மேலும்  தகவல்களை இணைத்து கட்டுரை யாக்க முயற்சி செய்கின்றேன் .

சுரேஷ்குமார் 

வச்சிரம் சின்னம் எந்த மாவட்டங்களில் (போகி) பொங்கலின் போது வரையப்படுகிறது? உங்கள் ஊரில் உண்டா?

இன்னும் சில ஃபோட்டோ கிட்டுமா?

நா. கணேசன் 

நரசிங்கபுரத்தான்

unread,
Mar 19, 2018, 8:14:58 PM3/19/18
to mintamil
கணேசன் ஐயா 

எங்கள் வீட்டில்  வச்சிரம் சின்னம் வரையப்படுகின்றது .

மாட்டுப்பொங்கல் அன்று  மாடுகளை அலங்கரித்து . 
ஊரின் நடுவில் உள்ள ஆலமரத்தின் அடியில் உள்ள நடுகல் போன்ற கல் உள்ள இடத்திற்கு அனைவரும் செல்வோம் .
பிறகு மேல தளம் முழங்க மாடுகளை  ஊர் முழுவதும் சுற்றி வருவோம் .
அவ்வாறு வரும் பொழுது மாடுகள் இடும் சாணத்தினைக் கொண்டு இந்தக்  குறிகளை இடுவோம் 

இன்றைய நாளில் சிலர் பெயிண்ட் கொண்டு வரைந்து விடுகின்றனர் .

மேலும் செம்மண் கொண்டு இடும் இத்தகைய குறியீடுகளுக்கு  " ராகச்சி " எனக் கூறுவர் .

படங்கள் : பழவிறல் மூதூர்  (Facebook) 

நன்றி 

சுரேஷ்குமார் 

நரசிங்கபுரத்தான்

unread,
Mar 19, 2018, 8:22:11 PM3/19/18
to mintamil

இணைய தேடலில் 

https://www.aaseevagam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/

https://www.aaseevagam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%90%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AE%BE/

4. இருபுற முத்தலைக் கோல்

ஆசீவக மரபினர்தம் இல்லங்களிற் காணக் கிடக்கும் மேலும் ஒரு முதன்மைச் சின்னம் இருபுற முத்தலைக்கோல் ஆகும். வீட்டு வாயிலின் இருபுறமும் படத்தில் உள்ளது போல் வரையப்படும் இந்தச் சின்னம் ஒவ்வொரு ஆண்டும் வடசெலவு துவங்கும் சுறவத் திங்களின் முதல் நாளில் புதுப்பிக்கப்படும். அவ்வழக்கமே இன்றும் போகிப் பண்டிகையன்று வெள்ளையடிக்கப் பட்ட சுவரில் இந்தக் குறியீட்டுச் சின்னத்தினை தமிழக மக்கள் வரை கின்றனர். இதில் வருந்தத் தக்க செய்தி என்னவெனில் பேரில்லங்களில் இந்த நிலை அருகி சிறு குடிசைகளிலும் ஊர்ப்புற வீடுகளிலும் மட்டுமே இதனை இன்றைய மக்கள் வரைகின்றனர்.
இக்குறியீட்டின் மேல் முனையிலுள்ள ‘ய’கர வடிவம் உயிர் ஓம்பலைக் குறிக்கிறது. இச்சின்னத்தின் கீழ் முனையில் தலைகீழாக உள்ள ‘ய’கரம் தக்க காரணத்திற்காகத் தண்டிக்கும் கொலைக் கருவியாக அறியப்படுகிறது. முல்லை நில மக்கள் தமது பசுக் கூட்டங்களைக் காப்பதற்காக இந்த முத்தலைக் கோலைக் காவல் சின்னமாகவும், வன விலங்குகளையும், கள்வரையும் கொல்லுமிடத்து இதனைக் கொலைக் கருவியாகவும் மதிக்கின்றனர். இம் முத்தலைக் கோலில் நடுவ முனை பகைஞர் குருதியைச் சுவைக்கும் அடையாளமாகவே செந்நிறந் தீட்டப்பட்டுக் காட்டப் பெற்றது.
இதுவே மாலவன் வழிபாட்டின் அடையாளமாக (நாமமாக)க் கருதப்படுகிறது. உயிர்களைக் காக்கும் மேல்நோக்கிய முனை சிவன் வழிபாட்டில் சிவசின்னமாகவும், பகைஞரைக் கொல்லும் கீழ் நோக்கிய முனை கொற்றவை வழிபாட்டில் கொற்றவையின் கீழ் நோக்கிய முத்தலைக் கோலாகவும் அறியப்படுகின்றது. வெண்கலத்தாலான கைச்சிலம்பிலும் இக்குறியைக் காணலாம். ஆசீவக மரபினரின் இல்லத்திற்கு வருகை தரும் பல்தரத்தோர்க்கும் இது ஒரு எச்சரிக்கைச் சின்னமாகவும், துறவிகளுக்கான ஓம்புதல் நிகழ்த்தப்படும் ஒழுக்கம் கொண்டவர்களின் வாழிடம் எனவும் அறிவிக்கும் அறிவிப்புச் சின்னமாகவும் இது பயன்பட்டது. கோவில் சுவர்களில் பல்லியின் வடிவம் போன்று உள்ள அமைப்பும் இச்சின்னமே.பண்டைத் தமிழகத்தின் ஐவகை நிலத்திலும் யாண்டுங் காணப்பெறாத சிவன் வழிபாடு ஒரு ஓக நிலைத் தத்துவமே. இதில் ‘வளிமுதலா எண்ணிய மூன்று’ என மாதாநுபங்கியார் சுட்டிய மூலநாடி மூன்றையும் அவை கூடி நின்று மெய்ஞ்ஞானம் பெறும் நிலையினையும் குறிக்கும் ஒரு அடையாள வரைவே சிவ வழிபாடு. இதனை நச்சி ஓம்பியோர் ஆசீவக சின்னங்களைக் குலைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் வெளிப்பாடே ஆசீவகத்தின், ‘துதிக்கையை உயர்த்திய யானை’யினைச் சிவன் தோலுரித்ததாகக் கதைக்கப்பட்டது. ஆனால் பண்டைத் தமிழகத்தின் முல்லை நில மக்களிடம் வழிபாட்டிலிருந்த மாலோன் வணக்கத்தினர் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் யானையினைத் திருமால் தமது படைக்கலத்தால் (கந்தழியால்) காத்ததாகக் காப்பியம் கூறினர். இதுவே மரபுகள் மாறி மதம் தோன்றிப் பிணக்குகளை உருவாக்கியதற்குச் சான்று.

ஓக நெறியினை நாடிய பல துறவிகள் தமது கையில் ‘தண்டு’ எனும் கருவியை வைத்திருந்ததாக அறிகிறோம். இதுவும் நடுத்தலையில்லாத முத்தலைக்கோலின் எச்சமே என்பது காண்டற்றகும்.

இருபுற முத்தலைக்கோலின் மேற்புறம் சிவனுக்கும், கீழ்ப்புறம் கொற்றவை வழிபாட்டின் காலமுறை வளர்ச்சி பெற்றிட்ட காளி, சக்தி, என்று வழங்கப்பட்ட பெண் கடவுளர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இக்காரணம் பற்றியே சக்தியும் சிவனும் இருபாதி ஒன்றாக இணைந்த வடிவினர் என வழங்கப்படுகிறது. ஓக நெறியில் கதிர், மதி எனும் இரு மூச்சுக்களும் வெவ்வேறாகப் பிரிந்து செயல்பட்டாலும் சுழுமுனை எனும் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.ஆக ‘சாக்தம்’ ‘சைவம்’ எனும் இரு வழிபாடுகளும் ஆசீவகத்தின் சின்னத்தையே அடையாளமாகக் கொண்டு எழுந்தன. வைணவமும் முத்தலைக் கோலையும் கந்தழியையும் கொண்டே எழுந்ததாகப் புலனாகின்றது

சுரேஷ்குமார் 

N. Ganesan

unread,
Mar 28, 2018, 9:14:29 AM3/28/18
to மின்தமிழ், vallamai
அருமையான தகவல்கள்.

நன்றி, சுரேஷ் குமார். 

வாழ்க.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 28, 2018, 9:29:10 AM3/28/18
to மின்தமிழ், vallamai

2018-03-18 5:26 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

2018-03-17 23:31 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Saturday, March 17, 2018 at 4:54:13 AM UTC-7, கி. காளைராசன் wrote:

2018-03-17 12:01 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
கருமித்தனமோ, வளர்ச்சி நோக்கமோ- பெரியார் காட்டி, எம்ஜியார் உறுதி செய்த மாற்றம் ஏற்புடையதே. இதை வித்தாகக் கொண்டு மேலும் மாற்றம் செய்யும் அறிவும், துணிவும் வேண்டும்.

மாற்றம் செய்யும் அறிவும், துணிவும் அவசியம் வேண்டும்.
அனைவருக்கும் பொதுவான மொழியைத் அவரவரர் தம் மனம்போன போக்கில் மாற்ற முற்படக் கூடாது.
சங்கம் கூடி ஆராய்ந்து வளர்த்த தமிழ் என்பதால், தேவையான மாற்றங்களைச் செய்யும் அறிவும் துணிவும் தமிழ்ச்சங்கத்திற்கே உரித்தானது.  

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் என்பதைத் தமிழறிஞர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வைத்து அவர்கள் பரிந்துரையின் பேரில் தேவையானவற்றை மட்டுமே  ஏற்றுக் கொண்டது தமிழக அரசு.  தமிழறிஞர்  குழு என்பது சங்கம் போன்றொதொரு அமைப்புதான்.

ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ 
என்ற எழுத்துக்களைத் தட்டச்சு செய்வதற்கு அதே உழைப்பும் காலநேரமும்தான் ஆகிறது.  அப்படியிருக்க, இந்த எழுத்துக்களின் வாலை வெட்டியதாலும், தும்பிக்கையை வெட்டியதாலும்  உண்டான நன்மை என்ன ?

யாருக்கும் எந்தவொரு நன்மையும் துளியும் பயக்காத இதைச் சீர்திருத்தம் என எங்ஙனம் எடுத்துக் கொள்வது?
“பயனில சொல் பாராட்டியுள்ள“ குழவினரைத் தமிழறிஞர்  குழு என்றும் சங்கம் போன்றொதொரு அமைப்பு  என்றும் சொல்ல முடியாது.

கொடுமுடி சண்முகம், வா.செ.குழந்தைசாமி, வ.ஐ.சுப்பிரமணியம், கொண்டல் சு. மகாதேவன், ... போன்றோர் 
ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ   இந்த வடிவம் இன்று கணினி, மொபைல்ஸ்-ல் நிலைக்க
உழைத்தனர். தமிழ் உயிர்மெய்கள் சார்பு எழுத்துகள் என்று காட்டவும், அதன் உறவெழுத்துகளுடன் வரிவடிவம் பொருந்தவும்
இந்த மற்றம் உதவியது. எளிமையாக்கல் அந்தச் சீரமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

அதே போல, இன்னொன்றையும் பெரியார், மபொசி, கிவாஜ பரிந்துரைத்துள்ளனர். இன்றைய மொபைல் போன்களுக்கு
எளிதில் குழந்தைகள், மற்ற மானிலத்தவர் தமிழ் கற்று நினைவில் இருத்த மலையாள தேசத்தார் செய்துள்ளது போல
உ/ஊ உயிர்மெய்கள் பிரித்து எழுதப்படலும் வழங்கவேண்டும். தமிழறிஞர் குழு சங்கம் அமைத்துப் பரிதுரைத்ததுவே இதுவும்.

On Tuesday, March 27, 2018 at 9:53:44 PM UTC-7, kanmanitamilskc wrote:
அப்படி எல்லாம் எழுத்துக்களை மாற்றுவது அவசியம் தானா ?!!
என்னதான் ளை ,லை ,நை, னை, ணை ,னா , ணா  என்றெல்லாம் எழுதினாலும் எழுதப் படித்த நாளிலிருந்து பழகிய பழைய எழுத்துக்களை பயன்படுத்தும் போது கைகளுக்கு இன்றும் இலகுவாக ,இதமாக இருக்கிறதே.
இளைய தலைமுறைக்காக எது எதில் எல்லாம் மாற்றங்கள் செய்வது ?
இப்படிச் செய்து செய்து தான் அவர்களைச் சோம்பேறி ஆக்குகிறோமோ என்பது என் எண்ணம்.  
கண்மணி 

what you say is a good point. But we all see millions of ethnic Tamil children do not use Tamil script at all.
Please  see Prof. VCK's speech at Madras University,

தமிழ் புத்தாண்டு இரண்டு - வள்ளுவர்;  ஜோஸ்யம்/கோயில்கள்
தமிழ் எழுத்து நடை - தனித்தமிழ்; தமிழ் 18 மெய் + 5 வடமொழி மெய்
தமிழ் கூட்டெழுத்துகள் - ஐ-; அய்- (ஐயன், அய்யன்)

அதுபோல, உ/ஊ உயிர்மெய் சேர்ந்தும், பிரிந்தும் இருக்கலாம் - மொபைல்ஸ், கணினிகளில்.

நன்மை: நன்னூலின் நூற்பா உயிர்மெய்கள் சார்பெழுத்துக்கள் என்பது சட்டெனப் புரியும்.
தட்டச்சு முறை தானாக மாறிவிட்டது - ஆப்பிள் ஐபோன் போன்றவற்றில்.

மொபைல்ஸில் விருப்பப்பட்டோர் உ/ஊ உயிர்மெய் பிரித்தெழுதலாமே. மலையாளத்தில்
இரு முறைகளும் இருக்கின்றன. பள்ளி, பத்திரிகைகளில் பிரித்துத்தான் எழுதுகின்றனர்.
எளிமையாக்கம்.

-----------------

ஒரு மாற்றுக் கோணத்தில் பார்த்தால், ஆஎன்கே கேட்டது போல வல்லினத்துக்கு வர்க்க
அட்சரங்கள் சேர்த்தலாமா என்றால் கூடாது என்பவன் நான். ஏனெனில் எழுத்து எண்ணிக்கை
மிகும். தமிழின் வேர்ச்சொல்கள் அழிந்து தமிழ் சம்ஸ்கிருத, ஆங்கில வார்த்தைகளால் நிரம்பிவிடும்.
தெலுங்கு, கன்னடம் போல.  

ஆனால், க, சு (கள்ளி, சுள்ளி - எழுத்து மாறாட்டத்தில் சூர்ணீ நதிப் பெயரே மாறுகிறது) குழப்பம்
போன்றவை தவிர்க்க உ/ஊ உயிர்மெய் சார்பு எழுத்துகள் பிரித்து எழுதவும் செய்யலாம்.
இவை எந்த எழுத்தையும் தமிழில் புதிதாய்ச் சேர்த்துவதல்ல. எளிமையாக்கம். சங்க கால
நதிப் பெயர் போன்றவை மாறாமல் இருக்க அம்முறை உதவும். 

பெரியார் பற்றி காளைராசன் கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வர வேண்டுகிறேன்.

அன்பன்,
நா. கணேசன்

அன்பன்
கி.காளைராசன்

அவரவர் விருப்பப்படி அவரவர் தமிழ்  எழுதுவதும் அவர்கள் விருப்பம்.  

அவ்வாறு அவர்கள் தமிழ் எழுதுவதை ஏற்றுக் கொள்வதும்  ஏற்றுக் கொள்ளாததும் மற்ற தமிழர்களின்  தனிப்பட்ட விருப்பமே.  

மாற்றம் என்பது அரசு அறிவிக்காமல் மக்கள் பயன்பாட்டில் தானே வந்துவிடுவதும் உண்டு.  அது போல வந்தது ஃ இணைத்து எழுதும் முறை என நினைக்கிறேன். 

..... தேமொழி 

தமிழ்க் கடவுள் முருகனும், தென்னாடுடைய சிவனும், தமிழ் இலக்கியங்களில் பேச ப்பட்ட மாலும் ஆத்திக conservatives-க்கு அந்த சிந்தனையும், அறிவும், துணிவும் தரட்டும்!!

rnk
ஆமாம்,  ஆனால் முருகனே நேரில் வந்து சொன்னாலும், பெரியாரின் கஞ்சதனத்தையே நாங்கள் தூக்கிப் பிடிப்போம், மொழியின் சிறப்பைப் பற்றிக் கவலை கொள்ள மாட்டோம்.

அன்பன்
கி.காளைரசான்

N. Ganesan

unread,
Mar 28, 2018, 10:28:55 AM3/28/18
to மின்தமிழ், vallamai
நண்பர் காளைராசன் மின்தமிழ் குழுவைப் பயன்படுத்தி விஞ்ஞானத் தாக்கம் செய்துவருகிறார். இன்னும் பல அரங்கங்களில் - ஜியாலஜிஸ்ட்ஸ் கான்பெரன்சஸ், பிற குழுமங்கள், ... - இது போன்ற த்யரிகளை வெளியிட்டால் தமிழின் ஆய்வுத்தரம் வெளிப்படும். சிங்கநெஞ்சன், ஜெயபாரதன் கூற்றுகளால் முனைவர் காளைராஜன் த்யரிகள் பற்றி அறிய முடிகிறது. ராக்கெட் ஸயன்ஸ் எங்கள் ஆய்வுத்துறை. அதனால் இமயமலை 2000 கிமீ விட்டம் கொண்ட விண்கல் தாக்கினால் உலகம் இருக்குமா என்று கேட்டேன்.

பெரியார் ஈவேரா பற்றி நிறைய காளைராசன் எழுதியுள்ளார். அவற்றை எல்லாம் தொகுத்து வெளியிடலாம். மின்தமிழ், பிற குழுமங்கள், .... பெரியார் பக்தர்கள், எதிர்ப்பாளர்கள் ஆராய உதவும்.
தொடர்ந்து பெரியார் பற்றி காளைராஜன் மிந்தமிழ் மற்ற குழுக்களில் எழுத வேண்டுகிறேன். தேமொழி, இன்னம்பூரான், ... இன்னும் பலரும் காளைராசனின் கருத்துகளை ஆராய்ந்து சொல்வர். நானும் கலந்து கொள்கிறேன். மொழி எளிமையாக்கம், விஞ்ஞான நோக்கில் நம் இலக்கியங்கள் ஆய்தல், ... இவற்றில் எனக்கும் ஆர்வமுண்டு.

வாழ்க வளமுடன்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages