இன்று என் கொல்லைப்புறம்

337 views
Skip to first unread message

N. Kannan

unread,
Aug 11, 2010, 3:40:00 AM8/11/10
to மின்தமிழ்
பொழுது போகவில்லையெனில் என் ‘மூன்றாம் கண்’ வலைப்பதிவிற்கு சென்று வாருங்கள்.

என் கொல்லை இன்று எப்படி காட்சியளிக்கிறது என்று தெரியும்.

http://photo-view.blogspot.com/

கவிதை எழுத வரவில்லையெனில் காமிரா சில நேரம் துணை கொடுக்கும்.

க.>

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Innamburan Innamburan

unread,
Aug 11, 2010, 4:29:24 AM8/11/10
to mint...@googlegroups.com
கவிதை எழுத வரவில்லையெனில் காமிரா சில நேரம் துணை கொடுக்கும். காமிராக்கவிதையாகவும் பரிமளிக்கும். ஸ்டீவி வொண்டரை நினைத்துக்கொண்டேன். நன்ரி.
இன்னம்பூரான்

2010/8/11 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Aug 11, 2010, 4:40:30 AM8/11/10
to mint...@googlegroups.com
நன்றி.
அது ஏன் ஸ்டிவி.வொண்டர்? (எனக்குப் பிடித்த பாடகர் - Part time lover)

K.>

2010/8/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Innamburan Innamburan

unread,
Aug 11, 2010, 4:55:33 AM8/11/10
to mint...@googlegroups.com
பார்வையில்லாத கண்களை மூடிக்கொண்டு பாடும் அவர் முகத்தில் ஒரு நிறைவு தழுவும் என்பதால், ஸ்டீவி வொண்டெர்.
இன்னம்பூரான்

2010/8/11 N. Kannan <navan...@gmail.com>

Madhurabharathi

unread,
Aug 12, 2010, 12:32:15 AM8/12/10
to mint...@googlegroups.com
ஸ்டீவி வொண்டர் பாடி எனக்கு மிகவும் பிடித்தது: I just called to say I love you!
 
பாடிக்கொண்டே இருக்கையில் திடீரென்று ஒரு தேவதைக்கனவுச் சிரிப்பு சிரிப்பார் பாருங்கள்... அடடா...! கோடிபெறும்!
 
அன்புடன்
மதுரபாரதி
2010/8/11 N. Kannan <navan...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 12, 2010, 2:09:55 AM8/12/10
to mint...@googlegroups.com
ஸ்டீவி வொண்டர் பாடி எனக்கு மிகவும் பிடித்தது: I just called to say I love you//

அதே எனக்கும் பிடிக்கும் ரொம்பவே உருக்கம் I just called to say how much I care for you nu பாடும்போது கண்ணீரே வரும் ! நன்றி. நினைவு கொள்ள வைத்ததுக்கு ,

2010/8/12 Madhurabharathi <madhura...@gmail.com>

N. Kannan

unread,
Aug 12, 2010, 2:39:37 AM8/12/10
to mint...@googlegroups.com
ம்...எனக்கும்..!

க.>

2010/8/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

நா.கண்ணன்

unread,
Aug 15, 2010, 6:44:05 AM8/15/10
to மின்தமிழ்
இன்று மாலை லேசாகத் தூறல். ஆயினும் கவிதை தேடி காலாற நடந்தேன். இன்று
கிடைத்த கவிதைகள்!

http://photo-view.blogspot.com/

க.>

srirangammohanarangan v

unread,
Aug 15, 2010, 6:49:43 AM8/15/10
to mint...@googlegroups.com
மலர்தான் மாலையாக வேண்டுமோ மலருக்கும் மாலையுண்டு  --
 
அழகான வார்த்தை.
ஆனால் மலர் தரிக்கும்
மாலை அது எதுவோ?
:--)

 

Tthamizth Tthenee

unread,
Aug 15, 2010, 7:26:41 AM8/15/10
to mint...@googlegroups.com
சாக்கடையில் கால் வைத்தேன்
சாலையோரப் பூக்கடை வாசம்
பூக்கடையில் கால்வைத்தேன்
சாக்கடை வாசம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

N. Kannan

unread,
Aug 15, 2010, 7:29:50 AM8/15/10
to mint...@googlegroups.com
நன்றி ரங்கன்.

இப்போதெல்லாம் மாலை நடையில் ‘கண்டுகொள்ளப்படாத ஜீவன்களை’ படமெடுக்க
முடிவெடுத்தேன். எத்தனை அழகு, தினம், தினம் - நம் கண்ணில் படாமல்!!

அது என்ன கொடி என்று தெரியவில்லை. அந்தப் பூங்கொத்திற்கு மாலை போட்டு
நிற்கிறது! என் கண்ணில் பட்டது, என் பாக்யம் என்று எண்ணிக்கொண்டேன்.

க.>

2010/8/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 15, 2010, 10:38:48 PM8/15/10
to mint...@googlegroups.com
தோற்றப்பிழை

யாக்கை ஒன்றையொன்று சார்ந்தே உள்ளது. தெருவோரக் களையென்றாலும் அதற்கும்
நோயுண்டு, நொடியுண்டு. இங்கு நீர்த்துளி போல் தென்படும் திட்டுக்கள்
நோய்க்கட்டிகள். பாவம்தான்!

http://photo-view.blogspot.com/2010/08/blog-post_16.html

க.>

srirangammohanarangan v

unread,
Aug 15, 2010, 11:03:42 PM8/15/10
to mint...@googlegroups.com
ஐயா! நீர் இந்த மின் தமிழ், செந்தமிழ் மாநாடு என்று பலதிலும் தலையை விட்டுக்கொண்டு உம்முள் இருக்கும் கவிதைக்குத் துரோகம் பண்ணிக் கொண்டிருப்பதாய் படுகிறது.
முறைக்காதீரு......நான் ஜூட்...
:--)

 

Innamburan Innamburan

unread,
Aug 15, 2010, 11:24:03 PM8/15/10
to mint...@googlegroups.com
1. அப்டித்தான், 'நான் ஆணையிட்டால்...' என்று முடுக்கிவிட்டு, விவேக சம்பந்தத்தை 'அம்போ' என்று விட்டு விட்டார்.

2. தாவர இயலிலே, ஏன்? உயிரின வாழ்வியலிலே, பிழையாத்மா உண்டு என்பதும் யாக்கையைச் சார்ந்ததே.

இன்னம்பூரான்

2010/8/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Aug 15, 2010, 11:32:08 PM8/15/10
to mint...@googlegroups.com
On 8/16/10, Innamburan Innamburan <innam...@googlemail.com> wrote:
1. அப்டித்தான், 'நான் ஆணையிட்டால்...' என்று முடுக்கிவிட்டு, விவேக சம்பந்தத்தை 'அம்போ' என்று விட்டு விட்டார்.
 
ஸ்வாமி! இது அப்பட்டமான அபவாதம். உம் இழையை ஸ்டார் போட்டு வைத்துக்கொண்டு உண்மை மாணாக்கன் இலக்கணத்துக்கு ஏற்ப காத்துக்கொண்டு இருக்கிறேன்.
என்னைப் பார்த்து இப்படி ஒரு சொல்லா?
 
எங்கே அடுத்த விவேக போதினி?
:--))

2. தாவர இயலிலே, ஏன்? உயிரின வாழ்வியலிலே, பிழையாத்மா உண்டு என்பதும் யாக்கையைச் சார்ந்ததே.

 
இன்னம்பூரான்

2010/8/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ஐயா! நீர் இந்த மின் தமிழ், செந்தமிழ் மாநாடு என்று பலதிலும் தலையை விட்டுக்கொண்டு உம்முள் இருக்கும் கவிதைக்குத் துரோகம் பண்ணிக் கொண்டிருப்பதாய் படுகிறது.
முறைக்காதீரு......நான் ஜூட்...

 

--

Innamburan Innamburan

unread,
Aug 15, 2010, 11:36:26 PM8/15/10
to mint...@googlegroups.com
தட்டுங்கள். திறக்கப்படும். Seriously speaking, I was pining for your evaluation.

N. Kannan

unread,
Aug 16, 2010, 12:16:49 AM8/16/10
to mint...@googlegroups.com
வாழ்த்துச் சொல்வதிலும் எத்தனை விதம், திறம்!!

நன்றி.

க.>

2010/8/16 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 16, 2010, 7:06:10 PM8/16/10
to mint...@googlegroups.com
காற்று வாங்கப் போனேன்!
ஒரு கவிதை வாங்கி வந்தேன்!!

அதிசயமாக இருக்கிறது. இந்த புராஜெக்ட் எடுத்த போது என் கொல்லைப்
புறத்தில் தினம், தினம் படமெடுக்க என்னவிருக்குமென்று? என்று நினைத்தேன்.
ஆனால் தினமொரு சப்ஜெக்ட் வந்து கொண்டே இருக்கிறது. தி.ஜாவிடம் சிறுகதை
எழுத கதைக்கரு எங்கு கிடைக்கும்? என்று கேட்டார்களாம். அவர் சும்மாக்
காலற கடைத்தெருவிற்குப் போய் வந்தால் கரு கிடைக்கும் என்றாராம். அது
போல்தான் இருக்கிறது!

இன்றைய சப்ஜெக்ட் 3.

1. பூத்துக்குலுங்கும் இளமை, அழகு.
2. இளம் கர்ப்பவதி
3. இளம் தாய்

http://photo-view.blogspot.com/

மூன்றாம் கண்!

மொழி மேவிய பார்வை....

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Aug 17, 2010, 3:03:18 AM8/17/10
to mint...@googlegroups.com
 பூத்துக்குலுங்கும் இளமை, அழகு.
2. இளம் கர்ப்பவதி
3. இளம் தாய்
 
 
மூன்றும் மிக அருமை
 
கவிஞனின் பார்வையில் கள்தேங்கும் பூக்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Aug 17, 2010, 4:48:24 AM8/17/10
to mint...@googlegroups.com
நன்றி !

க.>

2010/8/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 17, 2010, 7:55:29 PM8/17/10
to மின்தமிழ்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

http://photo-view.blogspot.com/2010/08/blog-post_18.html

க.>

Swaminathan Venkat

unread,
Aug 17, 2010, 8:25:23 PM8/17/10
to mint...@googlegroups.com
சிப்பிகள் வெறும் ஓடு போன்றன என்று நினைத்திருந்தேன். சிப்பிகளும்
உயிரனத்தைச் சேர்ந்தனவா என்ன? எனக்கு இது புதுச் செய்தி. நாம்
தெரிந்தனவாக நினைக்கும் எத்தனை விஷயங்கள் உண்மையில் தெரியாதனவோ!

Innamburan Innamburan

unread,
Aug 17, 2010, 10:26:00 PM8/17/10
to mint...@googlegroups.com
சிப்பிகள் இயல்பாகக் கற்றுக்கொடுக்கும் வாழ்வஇயல் நமக்கு புரிவதில்லை. நண்பர் வெங்கட் ஸ்வாமினாதனின் பின்னூட்டம் எனக்கு வியப்பைத் தரவில்லை. அன்றாடாம், நமக்கு தெரியாதவை, புலப்படாதவை தான் அதிகம் என்று தெரிகிறது. எனக்கென்னமோ கல்லுக்கும், பாறைக்கும், மண்ணுக்கும், மணலுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞானம் நிரூபிக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
இன்னம்பூரான்

2010/8/18 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Aug 17, 2010, 10:29:25 PM8/17/10
to mint...@googlegroups.com
On 8/18/10, Innamburan Innamburan <innam...@googlemail.com> wrote:
சிப்பிகள் இயல்பாகக் கற்றுக்கொடுக்கும் வாழ்வஇயல் நமக்கு புரிவதில்லை. நண்பர் வெங்கட் ஸ்வாமினாதனின் பின்னூட்டம் எனக்கு வியப்பைத் தரவில்லை. அன்றாடாம், நமக்கு தெரியாதவை, புலப்படாதவை தான் அதிகம் என்று தெரிகிறது. எனக்கென்னமோ கல்லுக்கும், பாறைக்கும், மண்ணுக்கும், மணலுக்கும் உயிர் உண்டு என்று விஞ்ஞானம் நிரூபிக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
 
 
ஏற்கனவே நிரூபித்ததுதானே!  டாக்டர் ஜே ஸி போஸ்:-)))

Innamburan Innamburan

unread,
Aug 17, 2010, 10:38:08 PM8/17/10
to mint...@googlegroups.com
அவர் தாவர இனங்களின் உணர்ச்சியை நிரூபித்ததாக ஞாபகம். அவருடைய நூல்
இருக்கிறது. ஏதாவது ரெஃபெரன்ஸ் தந்தால் பார்க்கிறேன். எனக்கு எது
தெரியாது என்பது புலப்படுகிறது, பாருங்கள்.

இன்னம்பூரான்

2010/8/18 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Aug 17, 2010, 10:54:47 PM8/17/10
to mint...@googlegroups.com
 
ஆனால் விஞ்ஞான உலகம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளதா?
டாக்டர் ஜே ஸி போஸின் ‘ஜடப்பொருள்களில் எதிர்வினைகள்’ என்ற ஆய்வைப் பற்றிய இன்றைய மதிப்பீடு என்ன? -- இவை மேலும் அறிய வேண்டியன.

 
On 8/18/10, Innamburan Innamburan <innam...@googlemail.com> wrote:

N. Kannan

unread,
Aug 17, 2010, 11:48:30 PM8/17/10
to mint...@googlegroups.com
அன்பின் வெ.சா:

சிப்பிகள் சிறுவயதில் ஓடியாடும் உயிரினங்கள். இக்கூட்டத்திற்கு
ஜூபிளாங்கட்டான் என்று பெயர். பின்னர் ஒரு நிலையில் ஏதாவதொரு இடத்தில்
அவை நிலையுறுகின்றன. நிலைபெற்றபின் அவை சிப்பிகளை (மேலோடு) உருவாக்கி
உள்ளிருக்கும் உடலைப் பாதுகாத்துக் கொள்கின்றன. சிப்பி வேளாண்மை (Oyster
farming) என்பது கொரியாவின் முக்கியத் தொழில். சிப்பியை உடைத்து உள்ளே
இருக்கும் சிறு உடலை மக்கள் உண்பர். பிரெஞ்சுக்காரர்களுக்கு மிகவும்
பிடித்த உணவு கடற்சிப்பி.

எங்கள் கொல்லைப்புற வளைகுடா உயிர்த்துடிப்புள்ள வளைகுடா. ரொம்ப நேரம்
சும்மா கடலில் நின்றிருந்தால் போதும் நம் காலில் சிப்பிகள்
வளரத்தொடங்கிவிடும்! ;-)

க.>

2010/8/18 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:

Swarna Lakshmi

unread,
Aug 18, 2010, 1:59:34 AM8/18/10
to mint...@googlegroups.com
பற்றுற்றதைப் பற்றறுத்து பற்றற்றதைப் பற்றினால்
பற்றற்றது பற்றாகு மே.
 
இது எப்படி இருக்கு :)) பிரித்து எழுத எல்லாம் தெரியாது.


From: N. Kannan <navan...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Wed, 18 August, 2010 5:25:29 AM
Subject: [MinTamil] Re: இன்று என் கொல்லைப்புறம்

srirangammohanarangan v

unread,
Aug 18, 2010, 2:02:57 AM8/18/10
to mint...@googlegroups.com
சபாசு! வாங்கோ வாங்கோ!
தனிப் பிசாசா சுத்திக்கிட்டு இருக்கேன்.
வெண்பாவில கம்பெனி குடுங்கோ
:--))

 

Swarna Lakshmi

unread,
Aug 18, 2010, 2:28:10 AM8/18/10
to mint...@googlegroups.com
ரங்கன் சார், முதலிலே இதுக்கு வெண்பாங்கற தகுதி இருக்கான்னு சொல்லுங்க... நான் சில நேரங்களில் ரொம்ப அமைதியா இருக்கும் போதோ உணர்ச்சி வசப்படும் போதோ இது மாதிரி எல்லாம் தோணும் - இலக்கண அடிப்படை எல்லாம் தெரியாது என்பதால் கேட்கிறேன்.
இதை வேற எப்படி பிரிச்சு எழுதணும்?? சொற்சுவை பிழை, இலக்கண பிழை, (பொருட்சுவை பிழை இல்லைன்னு தெரியும்) எல்லாம் சொல்லுங்க. :))


From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 18 August, 2010 11:32:57 AM
Subject: Re: [MinTamil] Re: இன்று என் கொல்லைப்புறம்

kalairajan krishnan

unread,
Aug 18, 2010, 2:28:00 AM8/18/10
to mint...@googlegroups.com
On 8/17/10, Swarna Lakshmi <lakshm...@yahoo.com> wrote:
பற்றுற்றதைப் பற்றறுத்து பற்றற்றதைப் பற்றினால்
பற்றற்றது பற்றாகு மே.
 
யம்மாடி​யோவ்!
தங்களது புதுக்குறள்  மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது,
இது​போன்று இன்னும் எழுதுங்களேன்
 
அன்பன்
கி, காளைராசன்,
 

Swarna Lakshmi

unread,
Aug 18, 2010, 2:50:55 AM8/18/10
to mint...@googlegroups.com
 நன்றி திரு. காளைராசன். நானும் என்னைக்காவது ரங்கன் சார் மாதிரி நினைத்த நேரத்தில் கவி எழுதும் திறன் வரும் என்றெல்லாம் ஆசைப்படுவதுண்டு - காளிதாசனுக்கு எழுதிய மாதிரி அம்பாளே வந்து நாக்கில் எழுதினால் தான் உண்டு. இந்தக் கலிகாலத்தில் அதுக்கும் chance இல்லையே...


From: kalairajan krishnan <kalair...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 18 August, 2010 11:58:00 AM
Subject: Re: [MinTamil] Re: இன்று என் கொல்லைப்புறம்
--

Madhurabharathi

unread,
Aug 18, 2010, 3:07:40 AM8/18/10
to mint...@googlegroups.com


2010/8/18 N. Kannan <navan...@gmail.com>
சிப்பி பிடித்தது கப்பல் கயிறினை
எப்படி யங்கே குறளது - செப்பிய
பற்றறு தன்மை புலப்பட லானதென்
றிற்றைக்குச் சொல்வார் எவர்?              
 
:-)
 
அன்புடன்
மதுரபாரதி

srirangammohanarangan v

unread,
Aug 18, 2010, 4:13:13 AM8/18/10
to mint...@googlegroups.com
ஸ்வர்ணலக்ஷ்மி, கவனமா கேளுங்க!
 
 
பற்றுற்றதைப் பற்றறுத்து பற்றற்றதைப் பற்றினால்
பற்றற்றது பற்றாகு மே.
 
1) பற்   றுற்   றதைப் --> நேர் நேர் நிரை -->   தே மாங் கனி
 
2) பற்    றறுத் து ------>    நேர்  நிரை  நேர் --->  கூ  விளங்  காய்
 
3) பற்    றற்   றதைப்  ---> நேர்  நேர்  நிரை --->  தே  மாங்  கனி
 
4) பற்   றினால்   ---->         நேர்  நிரை  ------>        கூ  விளம் 
 
5) பற்    றற்   றது  ---------> நேர்  நேர் நிரை --->  தே   மாங்  கனி
 
6) பற்   றா   கு ------->       நேர்  நேர்  நேர் ----->   தே மாங் காய்
 
7) மே            ------------->      நேர்             ----------->    நாள்
 
 
முதல்  காலம்(column)  உங்கள் சொற்கள்.  இரண்டாவது காலம்  அசை பிரித்து என்னென்ன அசை என்று பெயர் எழுதிக் காட்டியிருக்கிறேன்.  மூன்றாவது காலம் அந்தந்த சீர்களின்  வாய்ப்பாடுகளை எழுதிக் காட்டியிருக்கிறேன்.
 
 
 
முதல் சீர் --- பற்றுற்றதைப் -- சீரின் பெயர் தேமாங்கனி
 
நீங்கள் எழுத முயன்றிருப்பது குறள். வெண்பாவில் கனிச் சீர் வராது.
 
பின் என்னென்ன சீர் வரலாம்? 
 
காய்ச்சீர்,  விளச்சீர், மாச்சீர் இவையே வரும்.
 
அ) காய்ச்சீரைத் தொடர்ந்து வரும் சீரின் முதல் அசை நேரசையாக இருக்க வேண்டும். காய்ச்சீர் என்றாலே மூன்று அசைகள் கொண்ட சீர் என்பது தானாகவே விளங்கவில்லையா?
 
ஆ) விளச்சீர் என்பது நிரைநிரை என்னும் கருவிளம், நேர்நிரை என்னும் கூவிளம் ஆகிய இரண்டு விளச்சீர்கள். விளச்சீரைத் தொடர்ந்து வரும் சீரின் முதல் அசை நேரசையாக இருத்தல் வேண்டும். விளச்சீர் என்றாலே ஈரசைச் சீர்தான்.
 
இ) மாச்சீர் என்பதும் நிரைநேர் என்னும் புளிமா,  நேர்நேர் என்னும் தேமா ஆகிய இரண்டு. இவையும் ஈரசைச் சீர்களே என்பது விளங்குகின்றது அல்லவா? 
 
இந்த மாச்சீரைத் தொடர்ந்து வரும் சீரின் முதல் அசை நிரையசையாக இருத்தல் வேண்டும்.
 
ஆக எவ்வளவு விதிகள் தேருகின்றன?  3
 
என்னென்ன?
 
அ)  காய்  முன் நேர்
 
ஆ)  விளம் முன் நிரை
 
இ)  மா முன்  நேர்
 
இந்த முன் முன் என்று வருவதை,  தொடர்ந்துவரும் என்று பொருள்படுத்திக் கொள்ளுங்கள்.
 
இப்பொழுது பொறுமையாக உங்கள் குறளை எடுத்துக்கொள்ளுங்கள்.
 
முதல் சீர் கனிச்சீர். எனவே வெண்பாவிற்கு வராது.
கனி என்று முடிவதைக் காய்ச்சீராக மாற்ற நீங்கள் முயல வேண்டும். 
எனவே  கனியை உண்டுவிட்டுக் காய்சீரைப் போடுங்கள்.:--))
 
2 ஆவது சீர் காய்ச்சீர். அதைத் தொடர்ந்து வரும் 3ஆவது சீரின் முதல் அசை  நேர்.
 
விதி என்ன?  காய் முன் நேர் வரலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த சொல் சரி.
 
இப்பொழுது 3ஆவது சீர் என்ன? 
கனிச்சீர்.
வரலாமா?
அப்ப என்ன செய்யணும்?
கனியைச் சாப்பிடுங்க !:--))
காய்ச்சீராகப் போடுங்க.
 
அடுத்து 4ஆவது சீர் என்ன?
பற் + றினால் -- இரண்டு அசைகள்தான். கூவிளம்
விளச்சீர். என்ன விதி? 
விளம் முன் ...?   நேர். 
அடுத்த சீரோட முதல் அசை நேர் வருதா? பாருங்க. 
‘பற்’  நேர். அப்ப சரி.
ஆனா மூன்றாவது அசை என்ன ஆச்சு? நிரை
அப்ப ,.....
 
5 ஆவது சீர் கனிச்சீர். 
கனியைச் சாப்பிடுங்க....
காய்ச்சீராக மாத்துங்க.
 
6ஆவது சீர்  --பற்  றா  கு
-- தே மாங்  காய் -- மூன்று அசைகள் -- காய்ச்சீர் -- வரலாம்.
காய்ச்சீர் வந்துருக்கு. 
அப்ப தொடர்ந்து என்ன அசை வரணும்? 
நேர் அசை.
 
7ஆவது சீரைப் பாருங்க.   ’மே’
பரவாயில்லை. நேரசை.
 
இப்ப மே என்பதற்குப் பதிலாக ’மது’ அப்படீன்னு போடலாமா?
 
போடக்கூடாது.
 
ஏன்?
 
6ஆவது சீர் காய்ச்சீர். 
காய்முன் நேர் வரணும்.
‘மது’ என்று போட்டா
அது நிரையசை.
அதுனால....வராது.
 
இந்தக் கடைசி 7ஆவது சீர் பார்த்தீங்கன்னா
ஓரசைச் சீராக இருக்கிறது.
இப்படி ஓரசைச் சீராக நேரசையாக வந்தால்
அதுக்கு ஒரு வாய்ப்பாடு உண்டு.
 
அது என்ன? 
 
நாள்.
 
சரி அதே கடைசி 7ஆவது  ஓரசைச்சீராகவும்,
அதுவே நிரையசையாகவும் வந்தா
அப்ப வாய்ப்பாடு?
 
மலர். 
 
புரியுதா?
 
இப்ப இதை வைத்து நீங்களே மாற்றப் பாருங்கள்.
அப்பவும் கஷ்டமா இருந்தா மாற்றி என்ன சொல் போடலாம்னு
அப்ப சொல்றேன்.
 
(பாருங்க இலக்கணம் கற்றுக் கொள்வதற்குள் எவ்வளவு
கனி உண்ணத் தந்திருக்கிறேன் !!!
இப்ப சொல்லுங்க இலக்கணம் விளக்கெண்ணெயா? )
:--))
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
***

Swarna Lakshmi

unread,
Aug 18, 2010, 8:49:38 AM8/18/10
to mint...@googlegroups.com
ரங்கன் சார், இலக்கணம்  நிச்சயமாக கனி தான் - நீங்களும் மிக அழகாக விளக்குகிறீர்கள், நான் தான் விளக்கெண்ணெய் குடித்த மாதிரி முழித்துக்கொண்டிருக்கிறேன். என் மண்டையில் இவ்வளவு சீக்கிரம் இது நுழைந்து விடுமா என்ன??!! பார்க்கலாம் - இன்றைக்கு வேலை எல்லாம் முடித்த பிறகு கொஞ்சம் தலையைப் பிய்த்துகொண்டு பார்க்கிறேன்.
 
ஹ்ம்ம்ம்
ஸ்வர்ணா


From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wed, 18 August, 2010 1:43:13 PM

N. Kannan

unread,
Aug 18, 2010, 7:14:11 PM8/18/10
to mint...@googlegroups.com
இன்று என் கொல்லைப் புறத்தில் எடுக்கமுடியவில்லை. மேலும் இது இன்று இல்லை, நேற்று! (காலையில் வெளியிடுவதால் இன்று).
 
திடீரென்று என் சகாக்கள் கடலுக்கு குளிக்கப் போகலாம் என்று சொல்லிவிட்டனர்! நல்ல வெய்யில், நீல வானம் என்று போனால் போகும் வழியெல்லாம் ஒரே நீர்ப்புகை (மேகத்தில் ஒருவகை). கடல் ஏதோ இட்லிப்பானை போல் ஆவிவிட்டுக்கொண்டு இருந்தது. மிகவும் ரம்மியமாக இருந்தது.
 
 
 fog.jpg
 
போகும் வழியில் நீர்ப்புகை
 
 
floats.jpg
 
கடல் குளியல் என்றால் மிதவை இல்லாமலா? கடலில் மிதந்து கொண்டு விண்ணைப் பார்ப்பதில் ஓர் அலாதி ஆனந்தம்!
 
onWater.jpg 
 
கொரியர்கள் குளித்தால் இந்தியர்கள் போல் முழு உடையுடன்தான் குளிக்கின்றனர். வெட்கம் காரணமில்லை. உடல் கருத்துவிடக்கூடாது என்ற அக்கறை. சீனக்கலாச்சாரம் முழுவதிலும் வெள்ளை முகம், வெள்ளை உடல் என்பதற்கு அலாதி மதிப்பு (this is nothing to with 'white' western complex).
 
மீதியை வெள்ளித்திரையில் காண்க: http://photo-view.blogspot.com/
 
க.>
onWater.jpg
fog.jpg
floats.jpg

Innamburan Innamburan

unread,
Aug 18, 2010, 7:22:06 PM8/18/10
to mint...@googlegroups.com
திரையோ வெள்ளி! நீர்ப்புகையோ வெளிர்நீலம்!

2010/8/19 N. Kannan <navan...@gmail.com>
இன்று என் கொல்லைப் புறத்தில் எடுக்கமுடியவில்லை. மேலும் இது இன்று இல்லை, நேற்று! (காலையில் வெளியிடுவதால் இன்று).
நல்லவேளை! என்னாடாது!இத்தனை சீக்ரம் சமுத்ரஸ்நானமா? என்று நினைத்தேன்! 

N. Kannan

unread,
Aug 18, 2010, 8:00:10 PM8/18/10
to mint...@googlegroups.com
2010/8/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>

திரையோ வெள்ளி! நீர்ப்புகையோ வெளிர்நீலம்!
 
கருந்திரையில் காண்க! என்று போட்டிரிக்க வேண்டுமோ? ;-)

நல்லவேளை! என்னாடாது!இத்தனை சீக்ரம் சமுத்ரஸ்நானமா? என்று நினைத்தேன்! 
 
உண்மையில் செய்யலாம்! என் பெண் இங்கு வந்திருந்த போது ஆகஸ்ட்மாதம் முழுதும் கடற்குளியல். கொல்லைப்புறத்திலேயே புழை (கடல்) இருக்கிறது :-)
 
கோடையில் மட்டும்தாம் குளிக்கமுடியும். மற்ற காலங்களில் நீர் குளிர். அதுவும் தனியாகக் குளிப்பதில் சுகமில்லை!
 
game.jpg
 
மாணவர்களின் நீர்விளையாட்டு!
 
க.>
game.jpg

Innamburan Innamburan

unread,
Aug 18, 2010, 8:05:30 PM8/18/10
to mint...@googlegroups.com


2010/8/19 N. Kannan <navan...@gmail.com>

2010/8/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>

திரையோ வெள்ளி! நீர்ப்புகையோ வெளிர்நீலம்!
 
கருந்திரையில் காண்க! என்று போட்டிரிக்க வேண்டுமோ? ;-)

வேண்டாம். சும்மா அடிச்சு விட்டேன். சமுத்ரஸ்நான சுகம் 

நல்லவேளை! என்னாடாது!இத்தனை சீக்ரம் சமுத்ரஸ்நானமா? என்று நினைத்தேன்! 
 
உண்மையில் செய்யலாம்! என் பெண் இங்கு வந்திருந்த போது ஆகஸ்ட்மாதம் முழுதும் கடற்குளியல். கொல்லைப்புறத்திலேயே புழை (கடல்) இருக்கிறது :-)
 
கோடையில் மட்டும்தாம் குளிக்கமுடியும். மற்ற காலங்களில் நீர் குளிர். அதுவும் தனியாகக் குளிப்பதில் சுகமில்லை!
 
game.jpg
 
மாணவர்களின் நீர்விளையாட்டு!
 
க.>

--
game.jpg
360.gif

Tthamizth Tthenee

unread,
Aug 19, 2010, 12:11:31 AM8/19/10
to mint...@googlegroups.com
சமுத்திரத்திலேயே  வாழும்  கண்ணன் அவர்களுக்கும்  சமுத்திர ஸ்னானம்    சுகமா?
 
சமுத்திர  ஸ்னானம் என்றது நினைவு வருகிறது  சித்ரா பௌர்ணமி அன்று கடற்கரைக்கு சென்று
சமுத்திரத்தில் நீராடிவிட்டு    ஈரமணலில் கால்தடம் பதிய நடந்து  வந்து
 
உடலெங்கும் உப்புத்தண்ணீரினால்   ஏற்பட்ட ஒரு நச  நசப்புடன் (எவ்வளவு துடைத்தாலும் போகாது )
 
இருந்தாலும் அதையும் பொறுத்துக்கொண்டு  , கும்பலாக உட்கார்ந்து  சித்ரான்னங்களை  சுற்றத்தார்,நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது  அதன் சுவையே  அலாதிதான்
 
அன்புடன்
\தமிழ்த்தேனீ


 
On 8/19/10, Innamburan Innamburan <innam...@googlemail.com> wrote:
2010/8/19 N. Kannan <navan...@gmail.com>
2010/8/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>

திரையோ வெள்ளி! நீர்ப்புகையோ வெளிர்நீலம்!
 
கருந்திரையில் காண்க! என்று போட்டிரிக்க வேண்டுமோ? ;-)

 
வேண்டாம். சும்மா அடிச்சு விட்டேன். சமுத்ுத்திரஸ்நான சுகம் 

 
நல்லவேளை! என்னாடாது!இத்தனை சீக்ரம் சமுத்ரஸ்நானமா? என்று நினைத்தேன்! 
 
உண்மையில் செய்யலாம்! என் பெண் இங்கு வந்திருந்த போது ஆகஸ்ட்மாதம் முழுதும் கடற்குளியல். கொல்லைப்புறத்திலேயே புழை (கடல்) இருக்கிறது :-)
 
கோடையில் மட்டும்தாம் குளிக்கமுடியும். மற்ற காலங்களில் நீர் குளிர். அதுவும் தனியாகக் குளிப்பதில் சுகமில்லை!
 
game.jpg
 
மாணவர்களின் நீர்விளையாட்டு!
 
க.>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
game.jpg
360.gif

Geetha Sambasivam

unread,
Aug 19, 2010, 12:26:57 AM8/19/10
to mint...@googlegroups.com
நல்லா இருக்கு கண்ணனின் நவீனக் குளியலும், தேனீ அவர்களின் பாரம்பரியக் கடல் ஸ்நானமும். கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து.

2010/8/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
game.jpg
360.gif

N. Kannan

unread,
Aug 19, 2010, 8:31:19 AM8/19/10
to mint...@googlegroups.com
2010/8/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

நல்லா இருக்கு கண்ணனின் நவீனக் குளியலும், தேனீ அவர்களின் பாரம்பரியக் கடல் ஸ்நானமும். கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து.
 
சமுத்திரக் குளியல் முடிந்தவுடன் நன்னீரில் உடனே குளிக்க வேண்டும். இல்லையெனில் பிசு, பிசுப்பும், மெல்லிய மண்ணும் உடலை விட்டுப் போகாது! இங்கெல்லாம் எல்லக் கடற்கரையிலும் அவ்வசதியுண்டு.
 
நாளை சூப்பர் இரவுக்காட்சிகள் கண்ணிற்கு விருந்தாக வருகின்றன.
 
க.>

N. Kannan

unread,
Aug 19, 2010, 6:36:41 PM8/19/10
to mint...@googlegroups.com
பொதுவாக, அந்துப்பூச்சி ஓர் இரவு ஜீவி. பகலில் எங்காவது மூலையில் போய் தூங்கும். ஆனால் என் ஆய்வகப்படியில் இந்த வெள்ளைப்பூச்சி காலை வேளையில், சூரிய வெளிச்சத்தில்! தற்காப்பிற்கு வெள்ளைப்படியில் மறைந்து நிற்கிறது. எப்படித்தான் அது வெள்ளைக்கல் என்று அதற்குத் தெரியுமோ?
 
காற்று வாங்கப்போகும் பாதை ஒன்றுதான். அதே மலை, அதே கடல். ஆனால் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருக்கிறது. நேற்று இரவு அவற்றைப் பிடிக்க முயன்றேன். இரவுக்காட்சி எடுப்பது சிரமம். ஏனெனில் மெல்லிய ஒளியை அதிக நேரம் ஊடு பாயச் செய்ய வேண்டும். அப்போதுதான் காட்சி படியும். சின்னக் கேமிராவின் ஒளிப்பாய்ச்சல் (பிளாஸ்) வைத்து மலையைப் படம் பிடித்துவிட முடியாது, அதற்கு ‘செய்ய கதிரோன்’ எனும் விளக்குத்தான் தேவை. எனவே கை நடுங்கக்கூடாது, எதாவது நிலையான இடத்தில் வைத்து எடுக்க வேண்டும்.
 
மேலும் அப்படி எடுக்கும் போது நகரும் வாகனம் வந்தால் அதன் ஒளி ஒரு கீறல் போடும். ஒரு விமானம் பறந்து கொண்டு இருந்தது.
 
இரவில் சந்திரனின் கீற்று கடல் அலையில் அசைவது மனதிற்கு இதமாக இருக்கும். ஒரே காட்சி, இரவில் மந்திர சக்தி பெற்றுவிடுகிறது.
 
 
மூன்றாம் கண்.
மொழி மேவிய பார்வை.
 
க.>

Innamburan Innamburan

unread,
Aug 19, 2010, 7:53:31 PM8/19/10
to mint...@googlegroups.com
கண்ணன் சித்திரக்கூடம் என்றால் போதாது. கண்னனின் பேசும் சித்திரக்கூடம்
என்று சொல்லவேண்டும்.
இன்னம்பபூரான்

2010/8/20 N. Kannan <navan...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Aug 19, 2010, 9:54:22 PM8/19/10
to mint...@googlegroups.com
அந்துப் பூச்சியைப் படம் பிடித்திருக்கும் நேர்த்தி மிக அழகு!
அதன் இறக்கைகளின் பிரிகள் அனைத்தும் துல்லியமாக.
நன்றி கண்ணன்.

 
--

N. Kannan

unread,
Aug 19, 2010, 11:25:54 PM8/19/10
to mint...@googlegroups.com
நன்றி சார்!

2010/8/20 Innamburan Innamburan <innam...@googlemail.com>

N. Kannan

unread,
Aug 19, 2010, 11:29:16 PM8/19/10
to mint...@googlegroups.com
நன்றி ரங்கன்!
கால் வைக்கும் படியின் கீழ் யாரும் அறியாமல், ஆடாமல், அசையாமல், கிட்ட வந்து (சில மி.மீ தூரத்தில்) போட்டோ எடுக்கும் போதும் மூச்சுக் காட்டாமல் உட்கார்ந்திருந்தது. எப்போது பறந்து போனது என்று தெரியவில்லை. ஏதோ எனக்குக்கிடைத்த புண்ணியத்தைப் பகிர்ந்து கொண்டேன் ;-)
 
க.>

2010/8/20 srirangammohanarangan v <ranga...@gmail.com>

N. Kannan

unread,
Aug 20, 2010, 8:07:59 PM8/20/10
to mint...@googlegroups.com
எந்த நேரத்தில் இந்தப் புதியக் கையடக்கக் கேமிரா வாங்கினேனோ
அப்போதிலிருந்து படமெடுப்பது தியானமாகிப் போனது. காணாத காட்சிகளெல்லாம்
கண்ணில் படுகின்றன. புலனாகாத கோணங்களெல்லாம் புலப்படுகின்றன! இன்னும்
கோடையின் தாக்கம் இருப்பதால் 7 மணிக்குப் பிறகு காலாற நடந்தால்தான் இதமாக
உள்ளது. எனவே இன்றும் இரவுக் காட்சிகளே.

Photography என்பதை நிழற்படம், புகைப்படம் என்கிறோம். இதில் நிழல்
முக்கியப்படுகிறது. நிழல் இல்லையெனில் படமெடுப்பது கடினம். இன்றுள்ள
புகைப்படத்தில் இந்த நிழல் இரட்டைக் காட்சிகள் தருவதைக் காணலாம். முழு
இரவும் கூடாது. நிழலே இருக்காது. அந்தி சாயும் நேரம், சாய்ந்த பின்னும்
சரிப்படும்.

காட்சி 1. (கீழிருந்து மேல்) ஒரு ஊசியிலை மரம். இது கடலுக்குக் கட்டிய
கல் கரையில் எப்படியோ வளர்ந்து இன்று காய் காய்க்கும் பருவத்திற்கு
வந்துவிட்டது (அன்று இட்ட கூம்புக்காய் (cone) இதனுடையதுதான்). அது
கொஞ்சம் முன் படிவத்தில் வருமாறு வைத்து எடுத்திருக்கிறேன். பின்னால்
இருப்பது ஜங்மோக் கிராமம்.

காட்சி 2. ஓடத்துறையில் கயிற்றைப் பிரதானப்படுத்தி எடுத்துள்ளேன். யசோதை
சிறு கயிற்றால் கிருஷ்ணனைக் கட்டினாளாம். எங்கே கட்டினாள் என்கிறார்
என்கிறார் மதுரகவி? ‘கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்” என்கிறார். எல்லாம்
கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். இதனால்தான் ‘கால்கட்டு’
என்கின்றனர் போலும். கால்கட்டு இல்லாதவர்கள் புத்தகத்தைக் கட்டிக்கொண்டு
அழுகிறார்கள் :-)))

காட்சி 3. தரையில் நிற்கும் நீர்மூழ்கி!

காட்சி 4. ஒளி கூடும் போது, அதுவும் இரவு நேரத்தில், ஒரு ஒளிர்தல் (
haze) கிடைக்கிறது. அதுவே படத்திற்கு அழகைக்கூட்டுகிறது.

இன்றைய பேசும் சித்திரங்களை (நன்றி: இன்னம்புரான்)க் காண:

http://photo-view.blogspot.com/

மூன்றாம் கண்

மொழி கடந்த பார்வை.

ஆராதி

unread,
Aug 20, 2010, 8:37:28 PM8/20/10
to mintamil
திரு கண்ணன்
படங்கள் அருமையிலும் அருமை.
மலருக்கு மாலை, கவித்துவமான தலைப்பு.

மலருக்கு மாலை 
பூத்திருக்கும்
மங்கையைச்
சூழ்ந்திருக்கும் தோழிகள்

தளிர்
 பகீரதன்
மறுபடியும் பயில்கிறான்
தவம்

விதை கண்டபின் வீழும் மலர்
நாயகன்(கண்ணன்)
கண் ஒளியில்
நாணித்
தலைகவிழும்
நங்கை

இரவில் படகுத் துறை
ஆள்அரவம் இல்லாத
அழகான படகுத் துறை.
காரிருளின் போர்வைக்குள்
காதல் கொள்ளும்
காரும் படகும்.
செயற்கை விளக்கொளிகள்
கண்சிமிட்டிப் பார்த்திருக்கும்

இப்படி,
இந்தக் காமிராக் கவிதைகள்
வார்த்தைகளை
உடுத்திவிடுங்கள் என்று
உங்களிடம்
கெஞ்சவில்லையா?

அன்புடன்
ஆராதி


2010/8/21 N. Kannan <navan...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 20, 2010, 8:46:13 PM8/20/10
to mint...@googlegroups.com
மனம் போன போக்கில், கண்களும் நோக்கினால், புலப்படுவது எல்லாம், கண்டும் காணாதவையே. படமும் பிடித்து, அனுப்பி விட்டால், எமது கண்களும் நோக்கி, மகிழ்ந்தனவையே.
இன்னம்பூரான்

2010/8/21 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Aug 20, 2010, 9:11:31 PM8/20/10
to mint...@googlegroups.com
அடடா!! அருமை! அருமை!

மலர்கள் மலர்வது தன் இனப்பெருக்கத்திற்காக என்பது அறிவியலார் துணிபு.
ஆனால் ஒரு காதலனுக்கு அது தன் காதலிக்காக என்று தோன்றுகிறது. ஸ்வர்ணா
போன்றவர்களுக்கு தன் அம்பாளுக்காக என்று தோன்றுகிறது. படக்காரர்களுக்கு
அது கேமிராக்குள் வாழ வேண்டிய வஸ்து என்று தோன்றுகிறது. ரசனை அடிப்படை!
பாருங்கள் ஒரு கவிஞராகிய உங்களுக்கு அது கவிக்கரு என்று தோன்றுகிறது!
ஈடுபாடும், ரசனையும் சேரும் போது வாழ்வு சுவைக்கிறது.

நன்றி!

கண்ணன்

2010/8/21 ஆராதி <aara...@gmail.com>:


> திரு கண்ணன்
> படங்கள் அருமையிலும் அருமை.

> இப்படி,

srirangammohanarangan v

unread,
Aug 20, 2010, 9:18:46 PM8/20/10
to mint...@googlegroups.com
ஐயய்யோ! என்ன அழகு அந்த ஒற்றை மரம்!
திருமால் குப்ஜா மரமாக அவதாரம் எடுத்தார்
என்னும் புராணம் எவ்வளவு சத்யம் ! 
 
ஐயா கண்ணன் இப்படிக் காமிரா விருந்து படைக்கும்
நீவிர் வாழ்க!

 

srirangammohanarangan v

unread,
Aug 20, 2010, 9:21:19 PM8/20/10
to mint...@googlegroups.com
திரு ஆராதி சார், இது போன்ற தேன் துளிகள்
எவ்வளவு சேமித்து வைத்திருக்கிறீர்! 
இவற்றை நூற்க வேண்டும் என்று உமக்குத் தோன்றவே இல்லையா? 
:---) 

 

N. Kannan

unread,
Aug 20, 2010, 9:23:17 PM8/20/10
to mint...@googlegroups.com
நன்றி இன்னம்புரான் சார்!

தாங்கள் தொடர்ந்து இதை அனுபவித்து வருகிறீர்கள். படகாட்சி என்று
இருந்தால் நாலு பேர் பார்த்தால் அல்லவோ கலைஞனுக்கு மகிழ்ச்சி ;-) கொஞ்சம்
பயம் கூட வருவதுண்டு. இரவில் குடா என்ற படத்திற்கு ‘a piece of crap'
என்று ஒரு அநாமத்து பின்னூட்டம் போட்டது! அதற்கென்ன தெரியும் அழகின்
ரகசியம். படங்களுக்குப் பின்னால் விரியும் ஒரு பிரபஞ்சம் அவன்
கண்ணுக்குத் தெரியுமோ? தூரத்து மணியோசையும், தூரத்து ஒளிக்கணமும்
எழுப்பும் சிலிர்ப்பு என்னவென்று அனுபவித்து இருந்தால் அல்லவோ புரியும்.
இப்படக்கவிதைகள் எல்லாமே நம்மாழ்வார் ‘மல்லிகை கமழ்தென்றல் ஈரும் ஆலோ!’
எனும் பத்தில் சொல்லும் ஒரு தனிமையை, சந்திப்பிரிவில் நிற்கும் ஓர்
ஆன்மாவின் கீதங்கள் என்றல்லவோ தோன்ற வேண்டும்!

இப்படக்கவிதைகள் ஓர் தூண்டு கோலாக செயல்பட வேண்டும் என்பது என் ஆசை.
நம்மவருக்கு ஒரு பெரிய காவிய, கவிப்பாரம்பரியும் உள்ளது. தமிழன்
எழுதத்தொடங்குவதே கவிதையில்! ஆனால் மற்ற கலாச்சாரங்களில் கவிதை என்பது
கற்றோர் மொழி! அக்கவிதை உணர்வை காமராவிற்குள் புகுத்தி தாம் வாழும்
இடங்களை புகைப்படம் எடுத்தால்? என் மனம் தமிழக ஊர்களையும், வயல்களையும்
சுற்றி வட்டமிடுகிறது. அடுத்து நான் தமிழகத்தில் எடுத்த சில படங்களைப்
போடுகிறேன்.

மரபு என்பதைப் படங்களை விட எளிதாகச் சொல்லும் வேறு வழியுண்டோ! தமிழர்கள்
எல்லோரும் காமிராவும் கையுமாக அலையக்கடவது!

கண்ணன்

2010/8/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

N. Kannan

unread,
Aug 20, 2010, 9:26:18 PM8/20/10
to mint...@googlegroups.com
2010/8/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> ஐயய்யோ! என்ன அழகு அந்த ஒற்றை மரம்!
> திருமால் குப்ஜா மரமாக அவதாரம் எடுத்தார்
> என்னும் புராணம் எவ்வளவு சத்யம் !
>


ஆகா! அந்தக் கதையை முதலில் சொல்லும்! :-)

நேற்று தாவரங்கள் பற்றிய நேஷனல் ஜியாகிரபிஃக் ஆவணம் மீண்டும் பார்த்தேன்.
தாவரங்களின் உணர்வுகளை, முக்குணமும் அமையப் பெற்ற அவைகளின் தன்மை அறிய
ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

அது என்ன குப்ஜா மரம்?

ஆராதி சார் கவிதை வரணும்ன்னா இப்படிப் படம் காட்டணும் போல :-)))

க.>

srirangammohanarangan v

unread,
Aug 20, 2010, 9:31:29 PM8/20/10
to mint...@googlegroups.com
ஆராதி சார் கவிதை வரணும்ன்னா இப்படிப் படம் காட்டணும் போல :-)))

க.>

மொத்தத்துல நன்னா ஃப்லிம் காட்டுறீர்!!  :--))

On 8/21/10, N. Kannan <navan...@gmail.com> wrote:

N. Kannan

unread,
Aug 20, 2010, 9:37:46 PM8/20/10
to mint...@googlegroups.com
2010/8/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> ஆராதி சார் கவிதை வரணும்ன்னா இப்படிப் படம் காட்டணும் போல :-)))
> மொத்தத்துல நன்னா ஃப்லிம் காட்டுறீர்!!  :--))
>

இல்லை! இல்லை! பிலிம்மே இல்லாமல் பிலிம் காட்டறதுதான் வித்தை :-))) (இது
டிஜிட்டல் கேமிரா)

க.>

ஆராதி

unread,
Aug 20, 2010, 10:18:26 PM8/20/10
to mintamil
திரு ஸ்ரீரங்கரே
செடிகொடிகளும் மரங்களும்
மலர்களைப்
பூக்க மட்டுமே
அறிந்திருக்கின்றன.
மாலையாகக் கோப்பதற்கு
மனம் உள்ளவர்தாம்
வரவேண்டும்.


அன்புடன்
ஆராதி

2010/8/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>

N. Kannan

unread,
Aug 20, 2010, 10:23:45 PM8/20/10
to mint...@googlegroups.com
அடியேனும் காத்திருக்கிறேன்
தாங்கள் சொல்லிய வண்ணமே!

க.>

2010/8/21 ஆராதி <aara...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 21, 2010, 7:15:59 PM8/21/10
to mint...@googlegroups.com
இன்று நான்கு படங்கள்.

படம் 1. களை வெட்டு (எட்டிப்பார்க்கும் களை)

எங்கள் ஆய்வகத்தில் பல்வேறு வகையான மரங்கள், பல்வேறு வகையாக வெட்டப்பட்டு
அழகாக வைக்கப்பட்டிருக்கும். நம்ம குழந்தைக்கு கிராப்பு வெட்டுவது போல்
தோட்டக்காரன் வந்து எல்லாவற்றிற்கும் முடி வெட்டி (சாரி, இலை வெட்டி)
விட்டுப் போவான். அவனை இரண்டு வாரமாகக் காணோம், நல்ல வெய்யில்,
வெளிச்சம், மட, மடவென உள்ளே வளரும் புல்லும், கொடியும் வளர்ந்து தலை
தூக்கி நிற்கின்றன. பார்த்தவுடன் அவற்றின் பரவசம் கண்டு எனக்குப் பரவசம்.
‘மரணத்துள் வாழ்வு’ எனும் விதிக்கேட்ப நாளை தலை வெட்டப்படும் என்றாலும்
(அறியாமல் இருத்தலில் ஒரு சுகமுண்டு) இன்று தலை தூக்கி நிறபதுதான்
வாழ்வு!

படம்.2 மீண்டுமோர் அந்து!

இன்னொரு அந்துப் பூச்சி. இப்பூச்சிகளின் மீது யார்தான் தூரிகை கொண்டு
இப்படி வண்ணம் தீட்டினரோ?

படம். 3. கொரியக் குழந்தைகள் ஆடை

இப்போதெல்லாம் சம்பிரதாய உடைகள் அணிந்து கொரியக் குழந்தைகளையும்,
பெரியோர்களையும் காணுதல் அரிதாகிவிட்டது. சீனக்கலாச்சாரத்தின் வெற்றிக்கு
ஒரு காரணம் தமது பாரம்பரியத்திலிருந்து விடுதலை பெற்றது. இது அவர்களுக்கு
பொருளாதார முன்னேற்றத்தை விரைவில் அளித்தது. ஒரே அலையில் இவர்கள் மேலை
உடை கலாச்சாரத்திற்குப் போய்விட்டனர். இதன் சாதக, பாதங்களை அலசுவது
தனிக்கட்டுரையாகப் போய்விடும். கடை பொம்மையாவது அணிந்து இருக்கிறதே என
எடுத்தேன். எவ்வளவு அழகு பாருங்கள்.

படம் 4. திருவடியா? வெறும் அடியா?

பஸ்ஸுக்கு உட்கார்ந்திருக்கும் போதுதான் புலப்பட்டது இப்படியொரு கேமிராக்
கோணம். ச்ரவணபெலகோலா தீர்த்தங்கரர் கோயிலுக்குப் போன பிரம்மாண்டம்
மனதிலோடியது. தொடுப்பு கொடுத்துள்ளேன். மலர்கள் தம்மைத்தாமே
அர்ச்சித்துக் கொள்வது போல் என் திருவடி தரிசனம் எனக்கே ;-)

ஆராதி

unread,
Aug 21, 2010, 8:36:47 PM8/21/10
to mintamil
திருவடியா? வெறும் அடியா?
ஆளை மட்டும் தாங்குவது
வெறும் அடி.
அண்டங்களைத் தாங்குவது
திருவடி


கொரியக் குழந்தைகள் ஆடை
அலங்காரம் இங்கிருக்க
அழகு எங்கே போனது?

மீண்டுமோர் அத்து
அது அத்து
இல்லை.
பச்சைத் தரை விரிப்பில்
 கொட்டிவைத்த
அழகின்
வித்து


முதல் படம் (களைவெட்டு)
காட்சிக்கு வர மறுக்கும்
அம்மாவாசை நிலா.
(படம் தெரியவில்லை)


அன்புடன்
ஆராதி

N. Kannan

unread,
Aug 21, 2010, 8:53:01 PM8/21/10
to mint...@googlegroups.com
2010/8/22 ஆராதி <aara...@gmail.com>:
>
> கொரியக் குழந்தைகள் ஆடை
> அலங்காரம் இங்கிருக்க
> அழகு எங்கே போனது?
>
 
உண்மை! இந்தக் குழந்தைகள் குண்டும், குழியுமாக பார்க்கவே அள்ளிக்கொண்டு போகச் சொல்லும் அழகு! நானும் சொல்லிப்பார்த்துவிட்டேன். பாரம்பரிய உடை என்பது ஒரு சூழலில் வளரும் மக்களை எடுப்பாகக் காட்ட இயற்கையாக உருவான சௌகர்யமென்று. யார் கேட்கிறார்கள்? இவர்கள் அடிப்படையில் குட்டை இந்த உடை அவர்களை உயரமாகக் காட்டும். இதே போல் நம்மவர்களுக்கு தொடை பெரிது. அதற்கு புடவைதான் சரியான உடை. ஜீன்ஸ் ஒத்துவராது!
 
> முதல் படம் (களைவெட்டு)
> காட்சிக்கு வர மறுக்கும்
> அம்மாவாசை நிலா.
> (படம் தெரியவில்லை)
>
 
ஆம்! அது பெரிய அளவில் இடப்பட்டுவிட்டது. அகலப்பாட்டை தடை இருக்கும். இதோ சின்னப்படம்:
 
 outcrop.jpg
 
க.>
outcrop.jpg

N. Kannan

unread,
Aug 22, 2010, 6:41:53 PM8/22/10
to mint...@googlegroups.com
இப்போதெல்லாம் ஆராதி சார் கவிதைக்காகவே படம் பிடிக்கலாம் போல!!
 
இன்று நிறைய வேட்டை. அவற்றில் சிலவற்றை இங்கு போட்டு மீதத்தை முகமண்டலத்தில் (பேஸ்புக்) போட்டுவிடுகிறேன்.
 
 
கூடுதல் மழை நீரை வழிய வைக்க சிறு குழாய்த்துவாரங்களுண்டு. அது ஏதோ நர்சரி போல் ஆகிவிடும் போது படமெடுக்காமல் இருக்கமுடியவில்லை. உயிர்ப்பிற்கு என்னதான் வேண்டும்? சுடு நெருப்பிலும், குளிர் பனியிலும் வாழ் முற்படும் உயிர் நீர்த்துவாரத்தை விடுமா? வாழ்விற்கு வாழ்த்துக்கள்.
 
 
முத்துக் கோர்த்தாற்போன்றதொரு அழகு!
 
 
நடந்து போகும் போது கண்ணிலேயே படாது. இத்துணூண்டுச் செடி. அதற்குள் குட்டி பல்பு போல் ஒரு அழகு!
 
காட்சி 4. மண்டலம்
 
யந்திரம், மண்டலம் என்பவை உளவியல் பொறிகள் என்கிறார் கார்ல் யுங். அவை இயற்கையில் கிடப்பவை, ஏன் தெருவோரத்தில் கூட!
 
காட்சி 5. பொசு, பொசு
 
செடி, கொடிகள் எங்கும் வளர்ந்து விடுகின்றன. புல்லின் கனியொரு பொசு, பொசு. அது நெல்லாக, இருந்தாலும், மக்காச் சோளமாக இருந்தாலும், இந்தப் புல்லாக இருந்தாலும்!!
 
 
பௌர்ணமி 24ம் தேதிதான். அன்று மேகம் மூடாமல் இருக்க வேண்டும். எதற்கு வம்பு, இன்றே எடுத்துவிடுவோம்!!

srirangammohanarangan v

unread,
Aug 22, 2010, 9:58:27 PM8/22/10
to mint...@googlegroups.com
See!  What's happening !!
 
எங்கோ இண்டு இடுக்கில் எல்லாம், குப்பை மேட்டில் எல்லாம் ஸ்டூடியோ, எந்த ஓவியக்காரனுடையது!!!
 
உயிர் கொண்டு ஊதி உடற்சிற்பம் வனைந்தெடுக்கும்
அந்த உன்னத sculptor இங்கேதான் எங்கோ இருக்கின்றான்.
 
அவன் வருகின்ற தேரின் ஒலி இன்றும் என் இதயத்தில்
கேட்கிறதே அதுதானோ?
 
கண்ணன் ! என்ன கவன ஈர்ப்பைத் தருகிறீர்கள் காலை நேரத்தில்! யந்திரம், மண்டிலம் - நீங்கள் சொல்வதற்காகவே வளர்ந்ததுபோல் சாட்சி சொல்ல ஒரு புன்செடி.
 
அந்தக் கலைஞனுக்குப் போட்டியாய் சொல்லில் குழைத்தடிக்கும் ஆராதியின் வரிகள்!
 
ஏன் இப்படியே தொடர்ந்து போனால் என்ன? ஆராதி தயவில்.
 
வையம் தகளியா வார்கடலே நெய்யாக செய்ய கதிரில்
நீர் ஏந்திப் பிடியும்!
 
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக எங்கள் இன்புருகு சிந்தை இடுதிரியா ஆராதி வரிகளில் எழும் சுடரில்
 
இணையத்து இடைகழியில் நானும் வந்து நிற்க
 
நாலாவதாய் ஒரு மிதுனம் நெருக்காதோ!!!
ஒருவேளை அந்த மிதுனத்துள்தான் நம் இருப்போ!!!

 
--

N. Kannan

unread,
Aug 22, 2010, 10:06:08 PM8/22/10
to mint...@googlegroups.com
ஆகா! ஆகா! ஆனந்தம்!
இப்பகிர்தலுக்காகத்தான் இத்தனையும்!
நம்மை நெருக்கி அணைத்துக்கொள்ளும் அந்த மூன்றாவது மனிதனைக் காண
முயல்வதுதான் மூன்றாம் கண்!
என்ன இன்னும் ஆராதியாரைக் காணவில்லை?

க.>

2010/8/23 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

ஆராதி

unread,
Aug 23, 2010, 1:13:47 AM8/23/10
to mintamil

தாய் மண்ணை இழந்த

தாவரப்

படைவீரர்கள்

 
விலை போக

வழியின்றி

வீதிக்கு வந்தவர்கள்

 

திரு கண்ணன், நீங்கள் என்னுடையதைக் கவிதை என்கிறீர்கள். எனக்கு அவைகள்

 

கடவுளுக்கும் ஆகாத

கார்குழலில் சூடாத

கண்ணாடிக் குப்பிக்குள்

காட்சிக்கு நிற்காத

கயிற்றில் தொங்காத

காட்டு மலர்கள்

 

கண்ணைப் பறிக்கும்

கார்கால மின்னல்

 

தவமாய்த் தவமிருந்தும்

தர மறுக்கும்

வரம்

 

கட்டிக்கொண்டவள்/ன் என்றாலும் கட்டாயப்படுத்தவா முடியும்?


அன்புடன்
ஆராதி

2010/8/23 N. Kannan <navan...@gmail.com>
--

ஆராதி

unread,
Aug 23, 2010, 1:31:07 AM8/23/10
to mintamil
இதைக் காலையில் 5,20க்கு எழுதினேன். மின் தடை என்பதால் அலுவலகம் வந்ததும் draftஐ மின்னஞ்சலில் இப்பொழுது பதிவு செய்தேன். அதனால்தான் இவ்வளவு தாமதம்.
 
அன்புடன்
ஆராதி

2010/8/23 ஆராதி <aara...@gmail.com>

N. Kannan

unread,
Aug 23, 2010, 2:31:48 AM8/23/10
to mint...@googlegroups.com
அதானே பார்த்தேன்! நான் அனுப்பும் போது உங்களுக்கு விடியற்காலையாக இருக்கும்!
இன்னம்புரான் எங்கிருக்கிறார். இங்கிலாந்து என்றால் நடு இரவு!

உங்கள் கவிதைக்கு பின்னால் வருகிறது பின்னூட்டம்.

என் படங்கள் ரங்கன்+ஆராதி+இன்னம்புரான் பின்னூட்டங்களால் புத்துயிர் பெருகின்றன!

க.>

2010/8/23 ஆராதி <aara...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Madhurabharathi

unread,
Aug 23, 2010, 2:44:42 AM8/23/10
to mint...@googlegroups.com


2010/8/23 N. Kannan navan...@gmail.com

 
என் படங்கள் ரங்கன்+ஆராதி+இன்னம்புரான் பின்னூட்டங்களால் புத்துயிர் பெருகின்றன!

க.>

பின்னூட்டத்தால் புத்துயிர் பெறுவது படைப்பாளிதான், படைப்பு அல்ல :-)
 
உங்கள் படங்கள் தம்மளவிலேயே உயிரோட்டம் உள்ளவைதாம். குறிப்பாக, அந்த ஒளிரும் மரத்தை மிகவும் ரசித்தேன். பிரமித்தேன்.
 
மற்றொன்றும் இங்கே சொல்லிவைக்கிறேன்:
 
Blissful Comedian என்று ஆனந்த விகடனை ஆங்கிலத்தில் எழுதினால் ஒப்புக்கொள்வீர்களா? அது ஒரு பத்திரிகையின் பெயர், அதை மொழிபெயர்த்தால் அது அந்தப் பத்திரிகையைக் குறிக்காது.  
 
அதே போலத்தான் உன் குழலும், முகமண்டலமும். FaceBook, YouTube போன்றவற்றை அப்படியேதான் எழுதவேண்டும். பிறமொழி ஒலிகள் பிடிக்காதவர்கள் வேண்டுமானால் பேசுபுக்கு, யூடியூபு என்று எழுதிக்கொள்ளலாம். :-)
 
அன்புடன்
மதுரபாரதி

N. Kannan

unread,
Aug 23, 2010, 3:09:40 AM8/23/10
to mint...@googlegroups.com
2010/8/23 Madhurabharathi <madhura...@gmail.com>:

> அதே போலத்தான் உன் குழலும், முகமண்டலமும். FaceBook, YouTube போன்றவற்றை
> அப்படியேதான் எழுதவேண்டும். பிறமொழி ஒலிகள் பிடிக்காதவர்கள் வேண்டுமானால்
> பேசுபுக்கு, யூடியூபு என்று எழுதிக்கொள்ளலாம். :-)
>


உண்மைதான். நன்கு அறிவேன். ஆயினும் தமிழில் சொல்வதில் ஓர் ஆனந்தம். தமிழை
முதன் மொழியாகக் கொண்டு பள்ளி இறுதிவரை படித்ததாலோ என்னவோ ஆங்கிலத்தை
தமிழ் வரிவிடில் காணச் சகிப்பதில்லை. பேஸ்புக் என்று எழுதுவது
பெரிதில்லைதான். புரிகிறது! இது என் தனிமனித பிரச்சனையோ? அதனால்தான்
அருகிலேயே அதன் ஆங்கிலப்பெயரையும் கொடுக்கிறேன். அதையொரு பரிந்துரையாகச்
சொல்ல வரவில்லை. என் இயலாமையைக் குறிப்பதற்கு மட்டுமே!

அடுத்தது, படங்கள் அதனளவில் உயிரோட்டம் உள்ளவைதான். படமெடுக்கும் தாங்கள்
அறிவீர்கள். ஆயினும் இவர்கள் அதற்கொரு புதிய பரிமாணம் தருகிறார்கள்.
பெருமாள் மரமாக வந்தார் என்பதை அறிந்ததிலிருந்து அப்படத்தைப் பார்க்கும்
போது மரம் போய் விட்டது. பெருமாள்தான் நிற்கிறார் (மரத்தை மறைத்த மாமத
யானை காணாமல் போய்விட்டது அல்லது பரத்தை மறைந்த பார்முதல் பூதமில்லை!).
அது போல்தான் ஆராதியார் வழங்கும் கவிதைகள். இவையெல்லாம் இவ்விழையை ஒரு
கூட்டுப்பிரார்த்தனை ஆக்கிவிடுகிறது (குறிப்பாக இன்று ரங்கன் சொன்னது
என்னை உலுக்கிவிட்டது).

க.>

Geetha Sambasivam

unread,
Aug 23, 2010, 3:17:24 AM8/23/10
to mint...@googlegroups.com
அற்புதமான பேசும் பொற்சித்திரங்களுக்கும், அவை பேசிய கவிதைகளுக்கும் மனமார்ந்த நன்றி.

2010/8/23 N. Kannan <navan...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 23, 2010, 4:58:32 AM8/23/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
  1. 'உயிர் வெல்லம்' என்பது உருவகமாயினும், அது உணர்த்தும் வாழ்வியலை, சித்திரம் பேசுதடி! கட்டிடம் கோயில் இல்லையே? அதுவாயின், சந்திர படையெடுத்து... இன்னம்பூராரின் உறக்கம் சென்னையிலே.
  2. தொடுக்கவும் வேண்டாம். கோர்க்கவும் வேண்டாம். பி.கு. பறிக்கவும் வேண்டாம்.
  3.  மயிலுக்கு ஏதுக்கடி, கூறை? குயிலுக்கு ஏதுக்கடி, பறை?
  4. மந்திரமாவது, தழை,யந்திரமோ, மழை!
  5. கவின் தேடும் வேளையிலே, பொசுவும், பிசி போலாகுமே, அங்கதம் பேசுகையில்!
  6. நிலா! நிலாவே! வா! வா!/நில்லாமல் ஓடி வா.
  7. மயிலும், வான்கோழியும் தோகை விரிக்க, அந்துவும் விரித்ததோர் தோகை.
  8.  அணிந்த ஆடையும் அழகு. அணியா ஆடையும் அழகு.
  9.  "...நடை மெலிந்து அசைஇய நன்மென் சீறடி/ கல்லா இளைஞர் மெல்லத் தைவர"(சிறுபாணாற்றுப்படை -32,33)
இன்னம்பூரான்
   

2010/8/23 Geetha Sambasivam <geetha...@gmail.com>

N. Kannan

unread,
Aug 23, 2010, 9:22:16 AM8/23/10
to mint...@googlegroups.com
2010/8/23 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> மந்திரமாவது, தழை,யந்திரமோ, மழை!
>

அப்படித்தான் இருக்க வேண்டும்!

க.>

Kamala Devi

unread,
Aug 23, 2010, 9:46:01 AM8/23/10
to mint...@googlegroups.com
 அற்புதம்,
இப்பொழுதுதான் பொறுமையாய் பார்க்கமுடிந்தது.
க.
 
http://www.kamalagaanam.blogspot.com



From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Monday, 23 August 2010 06:41:53
Subject: Re: [MinTamil] Re: இன்று என் கொல்லைப்புறம்
--

N. Kannan

unread,
Aug 23, 2010, 5:49:33 PM8/23/10
to mint...@googlegroups.com
இன்று என் கொல்லையிலிருந்து அதிக தூரம் மேலேயும், வெளியேயும்
போய்விடுகிறேன். ஒருவகையில் உலகம் என்பது என் கொல்லையிலிருந்து
ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம் ;-)

காட்சி 1.கூட்டமர்வு

கொரியர்கள் மிக இயல்பாக தரையில் சப்ளாங்கொட்டி உட்கார்ந்து விடுகின்றனர்.
அதே போல் தரை மண் தரையாக இருந்தால் காலை மடக்கி உட்கார்ந்துவிடுகின்றனர்.
பள்ளிச் சிறுவனாய் இருந்த காலத்தில் இதே போல் நான் தரையில் அமர்ந்த
காலங்கள் நினைவிற்கு வருகின்றன. இக்காலக் குழந்தைகளை அமரச் சொன்னால்
செய்வார்களா? என்று தெரியவில்லை!

காட்சி 2. தலை அலங்காரம்

ராஜா வீட்டுக்கலயாணம் எப்படி நடக்கும் என்று செய்து காட்டினார்கள்.
எங்கே? இன்ச்சோன் விமான நிலையத்தில். எனக்கு அந்தப் பெண்ணின் அபரிதமான
முடியலங்காரம் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் இவளவு முடி யாரும்
வைத்துக் கொள்வதில்லை. இதுவும் விக்தான். இருந்தாலும் ஒரு காலத்தில்
இப்படியொரு அலங்காரம் இருந்திருக்கிறது!

காட்சி 3. கைதாங்கும் உணவுக்கூடம்!

தைவான் பல்கலைக்கழக உயிரியல்துறைக்கு முன்னால் இப்படியொரு மரம், வசதியாக.
துப்புரவு வேலை செய்யும் மூதாட்டி காலை உணவை முடித்துக்கொண்டிருக்கிறாள்.

காட்சி 4. மேகத்தூண்

மேகங்கள் கீழிருந்து நாம் மேலே பார்க்கும் போது இருப்பதை விட மேலிருந்து
அவைகளைக் கீழே பார்த்தாலோ அல்லது சம உயரத்தில் இருந்து பார்த்தாலோ
வித்தியாசமாக இருக்கும். பெரும் பாலான நேரங்களில் இந்த அற்புதக்
காட்சிகளை படமெடுக்கக் கையில் காமிரா இருப்பதில்லை. அன்று இருந்தது!

http://photo-view.blogspot.com/

மூன்றாம் கண்

1 படம் = ஆயிரம் சொற்கள் (ஒரு பழைய கணக்கு)

ஆராதி

unread,
Aug 23, 2010, 8:16:30 PM8/23/10
to mintamil
கைதாங்கும் உணவுக்கூடம்!
உள்ளங்கை போல்
உருக்காட்டும்,
உணவருந்த
இடம் காட்டும்,
நிழலுக்கு
இரு கிளை நீட்டும்,
மரத் தாயின்
மனிதத்தை
மக்கள் இனம்
மறந்ததுவே


அன்புடன்
ஆராதி


2010/8/24 N. Kannan <navan...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 23, 2010, 8:52:09 PM8/23/10
to mint...@googlegroups.com
1.சுகாசனத்தில் ஒரு வகை. சப்பளாம் போட்டு குந்தரத்துக்கு, முழங்கால்கள் பணியவேணும். 
2. விக் ஆனாலும், வக்கணையே.
3.மேலதிக விவரங்கள் வேணுமே!
4.பேசா சித்திரம்.
இன்னம்பூரான்


2010/8/24 N. Kannan <navan...@gmail.com>

Chandar Subramanian

unread,
Aug 23, 2010, 9:32:53 PM8/23/10
to mint...@googlegroups.com
கூனிக்கிடக்கும் கிளைக்கு 
வேர் ஆதாரம்.
ஊணைத் துழவும் கிழவிக்கு
யார் ஆதாரம்?



2010/8/24 ஆராதி <aara...@gmail.com>



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

N. Kannan

unread,
Aug 23, 2010, 10:11:02 PM8/23/10
to mint...@googlegroups.com
ஆராதியும், தாங்களும் அப்படத்தை எடுக்கும் போது எனக்கிருந்த மனநிலையைப்
படம் பிடித்துவிட்டீர்கள் ;-)

அவள் நான் படமெடுப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. கிளிக் சத்தம்
கேட்டதும் என்னைப் பார்த்து சிரித்தாள்.

க.>

2010/8/24 Chandar Subramanian <chandarsu...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Aug 23, 2010, 10:21:01 PM8/23/10
to mint...@googlegroups.com
கண்ணன் உபயத்தில் காமிரா சாளரம்.
 
அநேகமாக அந்தச் சிகையலங்காரத்தை யார் பொறுமையாக அவிழ்த்து வாரி மீண்டும் அவ்வாறு பின்னி அணிபெற அமைக்கிறார்களோ அவர்களையே மணப்பாள் என்று சுயம்வரமே வைக்கலாம் போல் இருக்கிறது.
வில் எல்லாம் வேண்டாம். அவ்வளவு கஷ்டம் போல் தெரிகிறது
.:--))
 
இது என்ன எந்த நாயகி பாடிக்கொண்டு இருக்கிறாள்?
“திரண்டெழுந்த மாமுகில்காள், மாருதங்காள்” என்று?
வெண்மேகத்தை முகில் என்று கூறமுடியுமா?
:--)))

 

N. Kannan

unread,
Aug 23, 2010, 10:53:19 PM8/23/10
to mint...@googlegroups.com
2010/8/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> அநேகமாக அந்தச் சிகையலங்காரத்தை யார் பொறுமையாக அவிழ்த்து வாரி மீண்டும்
> அவ்வாறு பின்னி அணிபெற அமைக்கிறார்களோ அவர்களையே மணப்பாள் என்று சுயம்வரமே
> வைக்கலாம் போல் இருக்கிறது.
> வில் எல்லாம் வேண்டாம். அவ்வளவு கஷ்டம் போல் தெரிகிறது
> .:--))
>

அதே! அதே!
வியட்நாமிலிருந்து ஒரு பெண் இங்கு வந்திருந்தது. அவளுக்கும் ஆறடி கூந்தல்.
ஜப்பானில் (கியோத்தோ) ஒரு கோயிலில் இப்படி முடியளித்த பெண்டிர் முடியை
வைத்து பிரம்மாண்டமான கயிறு திரித்து வாசலில் கட்டி இருக்கிறார்கள்.
முன்பு படமெடுத்தது. சிலைடாக புரணில் கிடக்கிறது (இந்தியாவில்).


> இது என்ன எந்த நாயகி பாடிக்கொண்டு இருக்கிறாள்?
> “திரண்டெழுந்த மாமுகில்காள், மாருதங்காள்” என்று?
> வெண்மேகத்தை முகில் என்று கூறமுடியுமா?
> :--)))
>

ஆண்டாள் ஞாபகம்தான் வந்தது.

விண்ணீல மேலாப்பு
விரித்தாற் போல் மேகங்காள்,
தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
திருமாலும் போந்தானே!
கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோரச் சோர்வேனை,
பெண்ணீர்மை யீடழிக்கும்
இது தமக்கோர் பெருமையே?

க.>

Kamala Devi

unread,
Aug 24, 2010, 1:33:05 AM8/24/10
to mint...@googlegroups.com
நிங்ஙளின் புகைப்பட கலெக்‌ஷனிலேயே என்னை மிகவும் கவர்ந்தது மேகத்தூண்.
மிக அழகு. பலமுறை பார்க்கத்தூண்டியது.
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

----- Original Message ----
From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com

http://photo-view.blogspot.com/

--

N. Kannan

unread,
Aug 24, 2010, 2:19:39 AM8/24/10
to mint...@googlegroups.com
2010/8/24 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:

> நிங்ஙளின் புகைப்பட கலெக்‌ஷனிலேயே என்னை மிகவும் கவர்ந்தது மேகத்தூண்.
>  மிக அழகு. பலமுறை பார்க்கத்தூண்டியது.

கமலம் இதைவிட அழகாக மேகக்கூட்டங்கள் சஞ்சாரிக்கும். எத்தனை வகைகள்!
அடுத்தமுறையாவது இன்னும் அழகான மேகங்களை எடுக்க முயல்கிறேன்.
அன்று ஒரு சின்ன வானவில் தோன்றியது (மேலேதான்), எடுப்பதற்குள் விமானம்
நகர்ந்துவிட்டது. எல்லாம் நொடிக்காட்சி!!

க.>

N. Kannan

unread,
Aug 24, 2010, 6:47:21 PM8/24/10
to mint...@googlegroups.com
நேற்று பௌர்ணமி. சந்த்ரோதயம் பார்ப்பது மகிழ்வானது. ஆசை தீரப்படமெடுத்தேன். ஒன்றுதான் இட்டுள்ளேன் மூன்றாம் கண் வலைப்பதிவில். மீதமுள்ள படங்களை பிக்காசாவில் ஏற்றிவிட்டேன்.  பார்த்து மகிழுங்கள். இன்று உங்கள் பார்வைக்கு:
 
 
மூன்றாம் கண் - மொழி கடந்த பார்வை.
 
1.என் கொல்லை நிலா கொள்ளை அழகு: முழுநிலவு தரும் வெளிச்சத்தில் பத்திரிக்கை படிக்கலாம் என்பார் என் ஜெர்மன் சகா. அதாவது பனிக்காலத்தில், பனியின் கூடுதல் பிரதிபலிப்பும் சேரும் போது! இங்கு கூட night scene model-ல் எடுக்கும் போது மிகப்பிரகாசமாகவே உள்ளது! பல்வேறு கோணங்களில் காண நான் கொடுத்துள்ள தொடுப்பைத் தட்டவும்.
 
கம்போடியா, தாய்லாந்து இங்கு கோயில் நிர்மாணம் ஒரே மாதிரி உள்ளது! நம் கோயில் கலசம் வேறு வகையானது. இங்கு வேறு வகையிலுள்ளது!
 
இந்தியா போன்று சமயச் சுதந்திரமுள்ள நாட்டில் மிக விரைவில் கடவுளர் பெருகிவிடுகின்றனர். பின் அவைகளை இணைக்கின்ற தத்துவங்கள் தேவைப்படுகின்றன. எத்தனை ஆயிரம் தெய்வங்கள் இருப்பினும் இருப்பது ஒன்றுதான் என்று நிருவ நாம் பிரயாசைப்பட வேண்டியுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் சிவ-வைஷ்ணவ வேறுபாடு கலகங்கள் அளவிற்கு போயிருக்கின்றன (இப்போது யாரும் பெரிது படுத்துவதில்லை என்பது நல்ல சேதி). கம்போடிய ராஜ மாளிகையில் எடுத்த படம் இது. கையில் சங்க சக்ர கதா தாரியாக சிரிக்கும் இறைவனின் நெற்றியில் முக்கண்!
 
அடுத்த இரு படங்களும் யாரும் எளிதில் பார்க்க முடியாத படங்கள் ஏனெனில் அங்கு போவது சிரமம். உலகின் வடகிழக்குக் கோடியில் இருக்கிறது பேரிங் ஜலசந்தி. நான் மேற்கொண்ட மிக நீண்ட கடல் பயணமது. அமெரிக்காவின் சியாடல் துறை முகத்திலிருந்து, பேரிங் ஜலசந்தி வழியாக ஜப்பானின் தோக்கியோ துறைமுகம் வந்தது. கடல், கடல், கடல். நிலமே கண்ணில் படாத அந்த ஒரு மாத பயணத்தில் கண்ணில் பட்ட ஒரு தீவு!
 
சந்திரோதயம் எவ்வளவு அழகோ அது போன்ற அழகு சூரிய அஸ்தமனம். சூர்யோதயமும் அழகு என்றாலும், நடைமுறை வாழ்வில் எப்போதாவது ஒருமுறைதான் அதைக் காணும் வாய்ப்பு வருகிறது. இதற்காக காலை 4:30க்கு எழுந்து சியாம்ரீப் நகரில் ஓடியது ஞாபகம் உள்ளது. அது அங்கோர்வாட் கோயிலை சூர்யோதயத்தில் படமெடுப்பதற்காக. இந்தப்படம் கப்பலிலிருந்து எடுத்தது!
 
இன்று மூன்றாம் கண் பார்த்தாகிவிட்டது ;-)
 
க.>
 

N. Kannan

unread,
Aug 24, 2010, 9:07:43 PM8/24/10
to mint...@googlegroups.com
சந்திரோதயம் படங்களை பேஸ்புக் (ஒலிப்பு தோஷம்); Facebook (மொழிக்கலப்பு தோஷம்); முகமண்டலம் (பாரம்பரிய (convention) தோஷம்) படத்தொகுப்பாகப் போட்டுள்ளேன்:
 
 
க.>!

ஆராதி

unread,
Aug 24, 2010, 9:15:41 PM8/24/10
to mint...@googlegroups.com
ஓ, சங்கரா!
இரவு நேரம்
உயிர் உலுக்கும்
குளிர்த் தண்ணீர்.
நடுங்கும்
நிலாப் பிம்பம்.
இதுவா ’நான்’
’அது’
’அவனா?’

அவனிடம்
இல்லாத
நீரும்
நடுக்கமும்
நீள் கரையும்
நான் காண.

எது
‘பொய்’?குடை  என்னும் படி ஏறி
கூப்பியக் கை உயர்த்தி
அண்ணாந்து பார்க்க
ஆண்டவன் தரிசனம் படுத்தபடி
புகை பிடித்தால்
பார்க்காமல்
போவோமா?வானக் குகையின்
வாயில்.

தங்கக்
கிரீடத்தில்
தவழும்
குழந்தை

அணையப் போகும்
விளக்கின்
சுடர்.


அன்புடன்
ஆராதி
2010/8/25 N. Kannan <navan...@gmail.com>
 
க.>
 

--

Chandar Subramanian

unread,
Aug 24, 2010, 9:27:24 PM8/24/10
to mint...@googlegroups.com
என் கொல்லை நிலா கொள்ளை அழகு: 
-------------------------------------
இரவில் ஒருவன் அலைகின்றான் -
இரவைத் தேடி. 
நிலவு.

கோபுர கலசம், கம்போடியா!
--------------------------
என் நெஞ்சின் எண்ணத்தை
எட்டாதான் செவிசேர்க்க
எழும்பி நிற்கும்
ஓர் அண்டெனா!

பேரிங் ஜலசந்தியில் சூரிய அஸ்தமனம்
------------------------------------
அங்குமா?
நாட்பொழுதும் 
நயவஞ்சகர்களின்
செயல் கண்டு, கொதித்து, 
கோபத்தொடு மறையும் சூரியன்!


2010/8/25 ஆராதி <aara...@gmail.com>

N. Kannan

unread,
Aug 25, 2010, 3:07:44 AM8/25/10
to mint...@googlegroups.com
2010/8/25 ஆராதி <aara...@gmail.com>

>
> .என் கொல்லை நிலா கொள்ளை அழகு:
>
> ஓ, சங்கரா!
> இரவு நேரம்
> உயிர் உலுக்கும்
> குளிர்த் தண்ணீர்.
> நடுங்கும்
> நிலாப் பிம்பம்.
> இதுவா ’நான்’
> ’அது’
> ’அவனா?’
>
> அவனிடம்
> இல்லாத
> நீரும்
> நடுக்கமும்
> நீள் கரையும்
> நான் காண.
>
> எது
> ‘பொய்’?
>


வித்தியாசமான கோணம்!
நிலாவைப் பிடிக்கும் போது நான் அத்வைதம் எண்ணவில்லை.
அதன் அழகு, தொழில் நேர்த்தி - இவைதான் உள்ளத்தில் நின்றன.
அத்வைதமெனக் கொண்டால் ஒரு மயக்கம் இயல்பாக வருகிறது.
இதுவொரு கனவா? நிலவும் நானே! அதைப் போட்டோ பிடிப்பவனும் நானே!
சார் இப்ப இது வேண்டாம். விஷிட்டாத்வைதமே இருக்கட்டும் :-))

க.>

N. Kannan

unread,
Aug 25, 2010, 3:13:22 AM8/25/10
to mint...@googlegroups.com
2010/8/25 Chandar Subramanian <chandarsu...@gmail.com>:

> என் கொல்லை நிலா கொள்ளை அழகு:
> -------------------------------------
> இரவில் ஒருவன் அலைகின்றான் -
> இரவைத் தேடி.
> நிலவு.

முழுநிலவு வந்தவுடன் இரவு தணிகிறது.
இன்னும் சென்சிடிவ் செட்டப்பில் வைத்து எடுத்துப் பார்த்தால் சூரியன்
போல் தகிக்கிறது ;-)
ஏதோ ஓவியம் போல் தென்படுகிறது. அதை பேஸ்புக்கில் போட்டிருக்கிறேன்.


> கோபுர கலசம், கம்போடியா!
> --------------------------
> என் நெஞ்சின் எண்ணத்தை
> எட்டாதான் செவிசேர்க்க
> எழும்பி நிற்கும்
> ஓர் அண்டெனா!


ஆகா! இதற்குப் பெயர்தான் கோபுர தரிசனமா? சரி..சரி..


> பேரிங் ஜலசந்தியில் சூரிய அஸ்தமனம்
> ------------------------------------
> அங்குமா?
> நாட்பொழுதும்
> நயவஞ்சகர்களின்
> செயல் கண்டு, கொதித்து,
> கோபத்தொடு மறையும் சூரியன்!
>

ம்..ம்..
சூரிய அஸ்தமனம் அழகானது. அமைதியானது.
ஜப்பானில்தான் உலகின் அதி அற்புதமான சூரிய அஸ்தமனங்கள் நிகழ்கின்றன.
என் பெண்ணிற்கு அப்படியொரு ஜப்பானியப் பெயர் வைக்க ஆசைப்பட்டேன். யூகி
(யூஹி) என்றால் சூரிய அஸ்தமனம் என்று பெயர்.
ஆனால் சம்பிரதாயப்படி குழந்தைகளுக்கு மறையும் சூரியன் பெயர் வைப்பதில்லை.
அசாஹி (அஸாஹி) என்றால் காலைச் சூரியன். இது ஏற்புடையது.

க.>

srirangammohanarangan v

unread,
Aug 25, 2010, 9:59:01 AM8/25/10
to mint...@googlegroups.com
ஸ்ரீவைஷ்ணவ திவய பிரபந்த கோஷ்டிக்கு நேரம் கடந்து வந்தால் திடுதிடுன்னு ஓடிப்போய் வரிசையில் நிக்க முடியாது.
ஒரு விதி உண்டு.
 
லேட்டாக வருகிறவர் கோஷ்டியை விழுந்து வணங்கிவிட்டுத்தான் வரிசையோடு வந்து சேர முடியும்.
 
ஸ்ரீமத் உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி கூட்டத்தில் தமாஷாகச் சொல்வதுண்டு.
 
‘நான் கோஷ்டியை ஸேவித்ததே இல்லை!’ என்று.
 
எல்லோரும் என்ன இது இவரே இப்படிச் சொல்கிறார்.
 
இவர் இல்லாமல் கோஷ்டித் தொடக்கமே இல்லை. தாம் ஆழ்வார் பாசுரங்களை அணிபெற நின்று பாடுவதாகிய கோஷ்டி சொன்னதே இல்லை என்கிறாரே-- என்று சல்சலப்பு.
 
அப்புறம் அவர் விளக்கியதும்தான் ‘கொல்லென’ அனைவரும் சிரித்துவிட்டனர். அதாவது ‘தாம் ஒரு நாளும் திவ்ய பிரபந்த கோஷ்டிக்குக் காலம் பிந்தி வந்ததில்லை’ என்று கருத்து. 
 
அதனால் கோஷ்டியை வணங்கிவிட்டு நானும் கலந்துகொள்கிறேன் லேட்டாக வந்தமைக்காக.:--)))
 
நிலவு --  பாரதிதான் சரி.
 
“நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்து ஒரு
கோல வெறி படைத்தோம்
 
சீரவிருஞ் சுடர் மீனொடு வானத்துத்
திங்களையும் சமைத்தே
ஓரழகாக விழுங்கிடும் உள்ளத்தை
ஒப்பதோர் செல்வமுண்டோ?”
 
நிலவையும் டவரையும் பிணைத்து, யாரு? பாரதிதான்.
 
“செவ்வொளி வானில் மறைந்தே -- இளம்
தேன் நிலவு எங்கும் பொழிந்தது கண்டீர்
இவ்வளவான பொழுதில் -- அவள்
ஏறிவந்தே உச்சிமாடத்தின் மீது
கொவ்வை இதழ் நகை வீச -- விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தாள்”
 
இதில் எவ்வளவு விழிக்கோண நாயகிகள் நிலவைப் பிடித்திருக்கின்றனர் பாருங்கள்.
 
முதலில் ஆராதி --
 
நீர் கரை அது மட்டுமன்று அவனிடமில்லாத நடுக்கமும் நான் --
 
போட்டாரே ஒரு போடு. ஐயா ஆயிரம் பொற்காசு உமக்கேதான்!
 
அடுத்து ஒருவர் வருகிறார் பாருங்கள் சந்தர் --
 
பாரதி அவள் விழிக்கோணம் கொண்டு நிலவைப் பிடித்த கதை சொன்னால், இவுரு நிலவே விழிகோணம் உருட்டி என்னமோ தேடிக்கிட்டு போவுதுங்கறாரு.
 
தேட்டத்தின் பொருளாய்க் கண்ட நிலவை தேடும் தம்பிரானாய் ஆக்க என்ன ஒரு துணிச்சல்!! பலே.
 
ஜல சந்தி ஆராதி  --  என்ன ஒரு சஹ்ய பாவம்!
 
விட்டா அந்த ஜல சந்தித் தீவு ஒரு நிமிஷம் எழுந்திருச்சி
‘என்ன அண்ணாச்சி! என்ன இப்படி ஒரு விசை கால்நடையா வந்துட்டுத்தேன் போறது’ என்று சொல்லுமோன்னு பயமா இருக்கு.  
 
*** 

 
 
க.>
 

--

Tthamizth Tthenee

unread,
Aug 25, 2010, 10:33:56 AM8/25/10
to mint...@googlegroups.com
வைஷ்ணவ கோஷ்டீலே  வந்து கலந்துண்டாலும்  அந்தக் கோஷ்டி சொல்ற சப்தபாவத்திலே ஒத்து சொல்ல முடியலைன்னா அதுகூட  மனசுக்கு ரொம்பக் கஷ்டமான,சங்கடமான  நிலமையாதான் இருக்கும்,
திவ்யப் பரபந்தம் தெரிஞ்சா மட்டும் போறாது, அதை சரியான உச்சரிப்பில், கோஷ்டியோடு ஒத்திசைக்கும்  ரொம்ப முக்கியம்
ஆனாலும் கோஷ்டி முடிஞ்சவுடனே  கிடைக்கப் போற  ப்ரசாதத்தையே  மனசிலே  நெனைச்சிண்டே இருந்தா என்ன பண்றது
இந்த  மனசு இருக்கே  ரொம்ப பொல்லாதது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Chandar Subramanian

unread,
Aug 25, 2010, 10:23:52 AM8/25/10
to mint...@googlegroups.com
'தன்னையே தன்னுள் தேடுபவனே உயர்வான்' என்று கொண்டால், ஏற்கனவே உயரே உள்ளவன், தன்னையே எங்கும் தேடுபவனாக அல்லவா இருப்பான்?!! 



2010/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>

பாரதி அவள் விழிக்கோணம் கொண்டு நிலவைப் பிடித்த கதை சொன்னால், இவுரு நிலவே விழிகோணம் உருட்டி என்னமோ தேடிக்கிட்டு போவுதுங்கறாரு.
 
தேட்டத்தின் பொருளாய்க் கண்ட நிலவை தேடும் தம்பிரானாய் ஆக்க என்ன ஒரு துணிச்சல்!! பலே.
 

Innamburan Innamburan

unread,
Aug 25, 2010, 12:52:08 PM8/25/10
to mint...@googlegroups.com
படம் பாடமாகி, படமெடுத்தது பாடலாகி...


2010/8/25 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Subashini Tremmel

unread,
Aug 25, 2010, 2:18:03 PM8/25/10
to mint...@googlegroups.com
கண்ணனின் படங்களுக்குக் கவிதைகள் கொட்டுகின்றதே. அருமை!
-சுபா

2010/8/25 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Subashini Tremmel

unread,
Aug 25, 2010, 2:31:33 PM8/25/10
to mint...@googlegroups.com


2010/8/23 N. Kannan navan...@gmail.com
..
 
காட்சி 5. பொசு, பொசு
 
செடி, கொடிகள் எங்கும் வளர்ந்து விடுகின்றன. புல்லின் கனியொரு பொசு, பொசு. அது நெல்லாக, இருந்தாலும், மக்காச் சோளமாக இருந்தாலும், இந்தப் புல்லாக இருந்தாலும்!!
 
கண்ணன், ஜெர்மன் மொழியில் பேச்சு வழக்கில் இந்தச் செடிக்கு  Lampe putzen என்று பெயர். விளக்கு துடைக்கப் பயன்படுத்தும் ப்ரஷ் போல  இந்தச் செடியின் பூ இருப்பதால்!
 
இதனை பார்த்ததும் இவ்வளவு அழகாக இருக்கின்றதே. மலேசியாவாவில் பார்த்ததில்லையே என நினைத்து வீட்டில் வாங்கி நட்டு வைத்தேன். வளர்ந்தது. குளிர் பனி காலத்திலும் தாங்கும் வகைச் செடி இது. குளிரில் காய்த்து சருகாகி இருக்கும்; மீண்டும் கோடை வந்ததும் துளிர்ப்பித்து விடும். அதோடு நீங்கள் கூறும் பொசு-பொசு பூவும் வந்து விடும். இந்த செடியில் இரண்டு வகை உண்டு.ஒன்றின் பூ பச்சை நிறத்திலும் கொஞ்சம் ப்ரவுன் கவர்ணத்தில் இருக்கும். மற்றது  முழுதும் கரும் ப்ரவுன் வர்ணத்தில் இருக்கும்லிங்கு கொஞ்சம் விலை ஜாஸ்தி.   கடந்த ஆண்டு மலேசியாவில் சகோதரியின் இல்லத்திற்குப் பின் புறம் உள்ள வயல் பகுதியில் நடக்கும் போது தற்செயலாகப் பார்த்தேன். அங்கே மிகப் பெரிதாக கொத்து கொத்தாக வளர்ந்திருந்தது இந்த Lampe putzen. சர்வ சாதாரணமாக வயல் ஓரத்தில் சாலை ஓரத்திலெல்லாம் இந்தச் செடி இருக்கின்றது.
 
-சுபா

N. Kannan

unread,
Aug 25, 2010, 6:57:20 PM8/25/10
to mint...@googlegroups.com
ரங்கன்:

இது இப்போ கோஷ்டி போல்தான் நடை போடுகிறது.

என் கவலையெல்லாம், இனி எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டிவருமோ! என்ற
பயம்தான் ;-) ஏதோ இப்போதைக்கு ஓடுகிறது. ஆச்சர்யம், வெளியே போனவுடன்
எதாவது புதிதாக கிடைக்கிறது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து என் தேடுதலைப்
புதுமைப்படுத்தியுள்ளீர்கள். வாழ்க! கோஷ்டி!!

க.>

2010/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 25, 2010, 7:15:21 PM8/25/10
to mint...@googlegroups.com
இன்று.....
 
 
 
இரவில் மீன்பிடிப்பதில் ஒரு சுகம் காணுகின்றனர் கொரியர்கள். அதுவும் கோடையென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்களுக்காக எவ்வளவு பெரிய கம்ப விளக்கு பாருங்கள். எல்லாம் காந்தி கணக்குதான் போலும் ;-)
 
 
குறியீட்டளவில் படிகள் முக்கியமானவை. பகலில் எடுத்தது போல் தோற்றமளிக்கும் இப்படம் இரவில் எடுத்ததுதான். சாம்சுங்கின் digital enhancement technology என்னவெல்லாம் செய்ய வைக்கிறது. நான் Facebook-ல் போட்டிருக்கும் ஒரு படத்தில் இரவைப் பகல் போல் ஆக்கிக்காட்டியிருக்கிறது. வரும் காலம் மென்பொருள் காலம்.
 
 
likeSun.jpg
சூரியன் போல் தோற்றமளிக்கும் நிலா!
 
 
 
 
எனது பழைய ஆல்பத்திலிருது ஒரு படம். ஆஸ்திரேலியாவில் எடுத்தது. ஆஸ்திரேலிய தாவர, விலங்குகள் மிக வித்தியாசமானவை. அவைகளை இங்கு கொஞ்சம் அறிமுகப்படுத்துகிறேன். இந்தப்படம் என் சுவரொட்டியாக (Wall paper) பல காலம் இருந்தது.
 
 
காலையில் எழுந்து வெளியே வந்தால் இப்படிக் குட்டிக் குட்டிக் குழந்தைகள், எங்கள் தோட்டத்தில்! எல்லாம் சிறு செடிகள். அருகே எடுக்கும் போது மலர் பெரிதாய் தெரியும். பூவெல்லாம் இரட்டையர் ஜாதியோ?
 
 
நல்ல வேளை இது என் காலில் மிதிபடாமல் தப்பியது. வெளி வாசல் படியில் கிடக்கிறது. என்ன தூக்கமோ? 9 மணி வரைக்கும்!
 
மேலும் பல படங்கள் எடுத்தேன். அவைகளைத் தனி ஆல்பமாக்கி Facebook-ல் போட்டிருக்கிறேன். இங்கே சொடுக்கி அதைக் காண்க!
 
க.>
 
 
likeSun.jpg

N. Kannan

unread,
Aug 25, 2010, 7:53:19 PM8/25/10
to mint...@googlegroups.com
2010/8/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

> கண்ணன், ஜெர்மன் மொழியில் பேச்சு வழக்கில் இந்தச் செடிக்கு  Lampe putzen என்று பெயர். விளக்கு துடைக்கப் பயன்படுத்தும் ப்ரஷ் போல  இந்தச் செடியின் பூ இருப்பதால்!
>

சுபா:

நீங்கள் பார்த்தது நாணலின் ஒரு வகை. நாணல் பூ அப்படித்தான் இருக்கும்.
பினாங்கில் எடுத்த பழைய படங்களில் தென்படுகிறதா பார்ப்போம்!

க.>

Innamburan Innamburan

unread,
Aug 25, 2010, 8:04:09 PM8/25/10
to mint...@googlegroups.com


2010/8/26 N. Kannan <navan...@gmail.com>

இன்று.....
 
 
 
இரவில் மீன்பிடிப்பதில் ஒரு சுகம் காணுகின்றனர் கொரியர்கள். அதுவும் கோடையென்றால் சொல்லவே வேண்டாம்! இவர்களுக்காக எவ்வளவு பெரிய கம்ப விளக்கு பாருங்கள். எல்லாம் காந்தி கணக்குதான் போலும் ;-)
 
 
குறியீட்டளவில் படிகள் முக்கியமானவை. பகலில் எடுத்தது போல் தோற்றமளிக்கும் இப்படம் இரவில் எடுத்ததுதான். சாம்சுங்கின் digital enhancement technology என்னவெல்லாம் செய்ய வைக்கிறது. நான் Facebook-ல் போட்டிருக்கும் ஒரு படத்தில் இரவைப் பகல் போல் ஆக்கிக்காட்டியிருக்கிறது. வரும் காலம் மென்பொருள் காலம்.
 
 
likeSun.jpg
சூரியன் போல் தோற்றமளிக்கும் நிலா!
 
 
 
 
எனது பழைய ஆல்பத்திலிருது ஒரு படம். ஆஸ்திரேலியாவில் எடுத்தது. ஆஸ்திரேலிய தாவர, விலங்குகள் மிக வித்தியாசமானவை. அவைகளை இங்கு கொஞ்சம் அறிமுகப்படுத்துகிறேன். இந்தப்படம் என் சுவரொட்டியாக (Wall paper) பல காலம் இருந்தது.
 
 
காலையில் எழுந்து வெளியே வந்தால் இப்படிக் குட்டிக் குட்டிக் குழந்தைகள், எங்கள் தோட்டத்தில்! எல்லாம் சிறு செடிகள். அருகே எடுக்கும் போது மலர் பெரிதாய் தெரியும். பூவெல்லாம் இரட்டையர் ஜாதியோ?
சித்திரமும் பேசுதடி!
இன்னம்பூரான் 
 
நல்ல வேளை இது என் காலில் மிதிபடாமல் தப்பியது. வெளி வாசல் படியில் கிடக்கிறது. என்ன தூக்கமோ? 9 மணி வரைக்கும்!
 
மேலும் பல படங்கள் எடுத்தேன். அவைகளைத் தனி ஆல்பமாக்கி Facebook-ல் போட்டிருக்கிறேன். இங்கே சொடுக்கி அதைக் காண்க!
 
க.>
 
 

--
likeSun.jpg

ஆராதி

unread,
Aug 25, 2010, 9:35:12 PM8/25/10
to mint...@googlegroups.com
நரசிம்ம
அவதாரம்.
ரத்தம் தோய்ந்த
வாயும் தாடிமீசையும்
சாந்தமும் சேர்த்துச்
சற்றே முகம் மட்டும்
வரைந்து எடுத்த
வடிவழகுவாழ ஒளி
காட்டென்றால்
சாக ஒளி
பாய்ச்சுகின்ற
சதிகாரக் கூட்டம்இளமையின் பூரிப்பில்
இருபூக்கள் அழகென்றால்
இதழ் இற்றுப் போன பின்பு
இலை பச்சை நிறப் பூக்கள்
இருப்பும் அழகேதான்.

வண்ண வகைகாட்டி
வா என்னும்
இரு பூக்கள்

பசை அற்றுப்
போனபின்பும்
பசுமைச் சிரிப்போடு
பார்த்திருக்கும்
பல பூக்கள்.

பூக்களுக்குள்
பூப் பூவாய்
இன்னும் எத்தனையோ

நிழலும் ஒரு
பூவாக
பூவுக்குள்
பூத்திருக்கு

மனத்துக்குள்
பூக்கிறது
வாழ்க்கை
தெருப்படியில்
காத்திருக்கும்
தெய்வத்
திருவடிகள்

திருநாமத்தைக்
தெருப் படியில்
தலைகீழாய்
வரைந்தவர் யார்?


அன்புடன்
ஆராதி
2010/8/26 N. Kannan <navan...@gmail.com>
 
 

--
likeSun.jpg
It is loading more messages.
0 new messages