த.ம.அ கட்டுரை வெளியீடு: கல்லாட நூலாராய்ச்சி

200 views
Skip to first unread message

Suba

unread,
Nov 9, 2016, 12:15:32 PM11/9/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram, Mythilly Thiyagu, PK Sivakumar, தேமொழி
அரிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளை மின்தமிழ் வாசகர்களுக்கு வழங்கும் பொருட்டு  தமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரை வெளியீட்டுப்பணிக்குழு கட்டுரைகளைப் பழைய சஞ்சிகைகளிலிருந்து தட்டச்சு செய்து வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது., இப்பணியை முனைவர்.தேமொழி தலைமை ஏற்க அவருடன் இணைந்து வட அமெரிக்க நண்பர்கள் திருமதி மைதிலியும் திரு.சிவகுமாரும் தொடர்ந்து வழங்கிவருவர். இந்த முயற்சியில் இடம்பெறும் முதல் கட்டுரை இங்கே இன்று பகிர்ந்து கொள்ளப்படுகின்றது . இக்கட்டுரை த.ம.அ வின் மரபு விக்கியில் ஆய்வு நோக்கம் கொண்டோர் பயன்பெறும் வகையில் இணைத்து வைக்கப்படும்.
-சுபா

தமிழ் பொழில் : Vol.12_1936-1937_09; பக்கம்: 316-323



கல்லாட நூலாராய்ச்சி
திருவாளர், E. R. நாசிம்மஐயங்கார் அவர்கள் B.A., B.L., சேலம்,


ஆக்கியோன் பெயர்பெற்ற நூல்களுக்கு எடுத்துக் காட்டாக வச்சணந்திமாலை உரையாசிரியர் ஆண்ட நூல்களில் கல்லாடம் ஒன்றாம். இதன் ஆசிரியர் கல்லாடர் என்னும் புலவர். இப்பெயர் வகித்த புலவர் பலருளர். பதினொன்றாம்  திருமுறையில் கண்ணப்பர் திருமறம் இயற்றிய புலவர் இப்பெயரால் விளங்குவர். இவர் இயற்பெயரால் விளங்காது புனைபெயர் பூண்டாரென்பதைப் பின்னர் கூறுவாம். தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரிகளில் ஒருவர் கல்லாடர் எனும் பெயருடையவர். இவ்வாசிரியர் இளம்பூரணர் உரையைக் தழுவியும் அதனை  விளக்கியும் போந்தாராதலின்  இவர் 13ம் நூற்றுண்டில் இருந்தவராவர். சங்க காலத்துப் புலவர் ஒருவரும் கல்லாடர் எனப்படுவர். கல்லாட நூலின் சிறப்புப் பாயிரம் இதனைச் சங்க நூலெனும் பொருள் படும்படிப் பகருமாயினும் இதன் அகச் சான்றுகள் சங்ககாலத் தன்றெனப் புகலுமாதலின் இதனைச் சங்க காலப் புலவர் மேலேற்றிக் கூற வியலாது. இதனுரையாசிரியர் மயிலேறும் பெருமாள் பிள்ளை சிறப்புப் பாயிரத்திற்கு உரைவரையாது விடுத்த காரணத்தான் இதனை உரையாசிரியர் ஓதினாரெனக் கொள்ளத்தகும். இஃதுண்மையாயின் உரையாசிரியர் ஆராயாது தமது காலத்து நிலவியிருந்த கருத்தை உரைத்தாரென்றல் பொருந்துமென்க.

திருவாளர் சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழத் தொகுதி 15-ல் கல்லாடநூலில் காணப்படும் சிலவகச் சான்றுகளை ஆராய்ந்து கல்லாடம் 9-ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தாகுமென்றும், கல்லாடச் செய்யுட்களை உரையாசிரியர் மேற்கோளாட்சி கொள்ளாத காரணத்தான் கல்லாடம் 13-ம் நூற்றாண்டினத்தாகு மென்றும்,  தமது முடிபைக் கூறியுள்ளார். இவ் வறிஞர் தமது ஆராய்ச்சியில் கல்லாடம் என்னும் பெயரை வச்சணந்திமாலை யுரைகாரர் ஆட்சிகொண்டுள்ளதைக் கருதவில்லை.

வச்சணந்திமாலை உரை 12-ம் நூற்றாண்டில் வரையப் பட்ட தெனக் கூறலாமாதலின் கல்லாடம் 12ம் நூற்றுண்டிற்கும் 9ம் நூற்றண்டிற்கும் இடைக் காலத்தில் தோன்றிய தென்பது பொருந்தும். இக்கருத்து, நம்பியாண்டார் கம்பிகள் இயற்றி யருளியுள்ள கோயிற் றிருப்பண்ணியர் திருவிருத்தத்தால் வலியுறுவதைக் கூறுவாம். நம்பியாண்டார் 
"வருவா சகத்தினின் முற்றுணர்ந் தோனை வண்டில்லை மன்னைத் 
திருவாத வூர்ச் சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவை கண்டேயு மற்றப் பொருளைத் 
தெருளாக வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப் பிப்பரே" 
என்னும் செய்யுளில் திருக் கோவையாரின் பெருமையைப் புலவர்களும் அறியவில்லையே யென்று வருந்திக் கூறுகின்றார். சிலபுலவர் இயற்றும் நூலின் பெருமை செவ்வனே உணர்வதற்குப் பலவாண்டுகள் இடைப்படுவதை அனுபவத்தால் அறியலாம். எனவே மணிவாசகனார் காலம் நம்பியாண்டார் காலத்திற்கு சில நூற்றாண்டு முன்னராகுமென ஊகிக்கலாம். கல்லாடநூல் திருக்கோவையாரின் பெருமையை எடுத்துக் கூறவே எழுந்ததென்று கூறுவராதலின் கல்லாடநூல் நம்பியாண்டார் காலத்திற்கு முன் இயற்றப்படவில்லை யெனலாம். நம்பியாண்டார் 10-ம் நூற்றாண்டிறுதியிலும் 11-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் திகழ்ந்தவராவர். எனவே கல்லாட நூல் நம்பியாண்டார் நம்பிகளின் காலத்திற்கும் பின்னர், நம்பியாண்டார் கருத்தை நிலை நாட்டவே எழுந்த தென்றும் கூறலாமாகலின் கல்லாடம் 11ம் நூற்றாண்டினிடையில் இயற்றப்பட்டதென்பது போதரும். 

திருவாளர் வேதாசலம் என்னும் மறைமலையடிகள் என்பார் மணிவாசகனார் 2-ம் நூற்றாண்டில் அவதரித்தா ரென்பதற்குக் கல்லாட நூலை ஓர் சிறந்த ஆதரவாகக் கொண்டார். இவ்வாராய்ச்சியாளர் கருத்து, கல்லாடம் 6-ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட தென்பது. இவ்வாராய்ச்சியில் வேறு பல சான்றுகளையும் எடுத்தாண்டுள்ளாரெனினும் ஆராய்ச்சிக்கு அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள் வழுவுடையனவாகத் தோன்றுதலின் இவர் முடிபை ஏற்பதற்குச் சில தடைகளுண்டென்பதை ஆங்காங்குக் கூறுவாம்.

கல்லாடம் ஓர் கோவை நூல். கூடற்பெருமானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அப் பெருமான் ஆற்றிய திருவிளை யாடல்கள் அறுபத்து நான்கில் சிலவற்றை அப்பெருமானின் புகழ்களாகக் கூறுமாகலின் கல்லாடம் திருவிளையாடற்புராணத்தொடும் ஓரியைபுடையதாகும். கல்லாட நூலாசிரியர்,
"கூடற் பதிவரு மாடற் பரியோன்
எட்டெட் டியற்றிய கட்டமர் சடையோன்" 
என்று திருவிளையாடல்களின் தொகை அறுபத்து நான்கெனத் தொகை கூறியுள்ளார். இந்நூலில் முப்பத்து நான்கு திருவிளை யாடல்களே கூறப்பட்டுள்ளன. எனவே கல்லாடருக்கு முன்பு அறுபத்து நான்கு திருவிளயாடல்களையும் விரித்துக் கூறும் நூல் ஒன்றிருந்ததென்பது போதரும். மணிவாசகனார் காலவாராய்ச்சியாளர் கல்லாட நூலை ஆதரவாகக் கொண்டாரேனும் திருவிளையாடல்களைக் கூறும் நூல் ஒன்றுண்டென்பதையும் அது யாதென்பதையும் கருதாதது ஓர் குறைபாடுடையதாகும். இவ்வாராய்ச்சியாளர் தமிழ் நூல்களையே ஆதரவாகக் கொண்டார். தமிழ் நூல்களின் ஆசிரியர் தமது நூல்கள் வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்பென்றே கூறுவதாகத் தெரிகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரையர், மணிவாசகனார் முதலியோர் திருப்பாட்டுக்களாலும் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பெறப்படா. இவ்வடியார்கள் அறுபத்து நான்கென்னும் தொகையையும் யாண்டும் கூறவில்லை. வேறு தமிழ் நூல்கள் இருந்தனவெனக் கூறுவாருளராயின் அவருறை வெற்றுரை யெனத்தகும். திருவிளையாடற் புராணங்கள் 13-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டன வென்பதை தனிக் கட்டுரையில் வாம். எனவே வடமொழி நூல்கள் 13ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தே தோன்றினவாகு மென்பது தெளிவாம். வடமொழி நூல்களில் உத்தரபுராணம் முந்தியதென்றும் ஆலாசிய மகாத்துமியம் பிந்தியதென்றும் உணரலாகும். கல்லாடருக்கு முன்யிருந்த நூல் வடமொழி உத்தரபுராணமே யாகும். இதுவே பழைய புராணமெனப்படும். இப்புராணத்தில் மூர்த்தி நாயனார்  திருவிளையாடலும் காரியார் நாரியார் பாப்பகுந்த திருவிளையாடலும் கூறப்பட்டுள்ளன (இந்நூல் இதுபோது வழக்கினின்றும் வீழ்ந்ததென்று டாக்டர் ஐயரவர்கள் கூறியுள்ளதால் அறியலாமாயினும் இந்நூலின் கருத்துக்களெல்லாம் இதன் மொழி பெயர்ப்பாகிய பெரும்பற்றப்புலியூர் நம்பிகள் புராணத்தாலறியலாகும். இக்கட்டுரையில் வடமொழி நூலின் கருத்தைக் கூறுமிடத்தெல்லாம் நம்பிகள் திருவிளையாடற் புராணத்தைக் கொண்டு கூறினாமென்க).  ஆலாசிய மகாத்துமியத்தின் ஆசிரியர் இவ்விரு திருவிளையாடல்களையும் நீக்கி, மற்றைத் திருவிளையாடல்களை செவ்விதின் ஆராய்ந்து, அத் திருவிளையாடல்கள் அழகுற வைப்பு முறையை மாற்றிக் கூறியுள்ளார். கல்லாட நூலில் மூர்த்திநாயனார் வரலாறு கூறப்பட்டிருப்பதால் கல்லாடர் உத்தரபுராணக்தை யொட்டிக் கூறினாராவர். கல்லாட நூல் 11-ம் நூற்றாண்டிடையில் இயற்றப்பட்டதென்று முன் கூறினாம். உத்தரபுராணம் 11-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியதாகும். ஆலாசியமகாத்துமியம் கல்லாட நூலிற்குப் பிற்பட்ட காலத்தில் தோன்றியதெனலாம்.

திருவிளையாடல்கள் அறுபத்து நான்கில், ஆறு வரலாறுகள் சிலப்பதிகாரத்தாலும், பதினான்கு வரலாறுகள் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரையர் தேவாரங்களாலும், பதினான்கு வரலாறுகள் திருவாசகத்தானும், மூர்த்தியார் வரலாறு ஒன்று சுந்தரமூர்த்திகள் தொண்டர் தொகையானும் ஆக 35 வரலாறுகள் பழையனவெனலாம். மற்றை இருபத்தொன்பது வரலாறுகள் புதியனவாகும்.திருவிளையாடற் புராணங்களில் சேரமான் பெருமாள் நாயனார் காலத்தும் ஓர் அருட்செயல் நடந்ததாகக் கூறப்படுமாதலால் இப்புதியனவான திருவிளையாடல்களும் மற்றைத் திருவிளையாடல்களோடு கர்ண பரம்பரையாய் வழங்கினவாகும். இவைகளை வடமொழிப் புராணக்காார் தொகுத்துக் கூறினாராவர். இத்தொகுப்பில் வரலாறுகள் ஆராயப்படாது அவைகள் வழங்கியவாறே புராணத்தில் கூறப்பட்டனவெனலாம்; எனவே திருவிளையாடல்களை ஆராயின் திருவிளையாடற்புராண காலமும் இதன்பின் தோன்றிய கல்லாட நூலின் காலமும் புலப்படும்.

சான்றழைத்த வரலாறென்று சிலப்பதிகார நூலின் வஞ்சினமாலையில்,
"வன்னியு மரமு மடைப் பள்ளியுஞ் சான்றாக
முன்னி றுத்திக் காட்டிய மொய் குழலாள்"
என்னும் அடிகளில் கூறப்பட்டது. இவ்வரலாறு சிறிது மாறு பட வன்னியுங் கிணறு மிலிங்கமும் அழைத்த திருவிளையாடலெனப் பிற்காலத்து வழங்கியதாகும். இது சான்றழைத்த திருவிளையாடலென்றும் புராணத்தில் காணப்பெறும். புராணங்களில் இச்செய்தி நிகழ்ந்தவிடம் திரும்புறம்பயமென்று கூறப்பட்டுளது. இவ்வரலாற்றில் குறிக்கப்பட்ட கன்னி காவிரிப் பூம்பட்டினத்துக் குரியவளென்று சிலப்பதிகாரத்திலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது. எனவே இவ்வரலாறு பழைய தென்பதற்கையமில்லை. புராணகாலத்து பழைய வரலாறு சிறிதுமாறுபடக் கூறப்பட்டதென்பது தெளிவாம். வடமொழிப் புராண காலத்து செய்தி நிகழ்ந்தவிடம் திருப்புறம்பயமென்று வழங்கியதை புராணகாரர் உள்ளவாறே கூறினனாராவர். வட மொழிப் புராணத்தை மொழி பெயர்த்த தமிழ்ப் புலவர்களும் அவ்வாறே கூறினாராவர். சேக்கிழார் தமது புராணத்தில் செய்தி நிகழ்ந்தவிடம் திருமருகல் என்று கூறி திருஞான சம்பந்தர் பதிகத்தையும் ஆதரவு காட்டியுள்ளார். வரலாற்றில் குறித்த கன்னி வைப்பூர்க்கோன் மகள் என்றார். இவ்வைப்பூர் திருமருகலுக்கு அருகிலுள்ளவூராகும். சேக்கிழார் கூறிய வரலாற்றுக்குச் சான்று ஒன்றுமில்லையாதலான் இதுவும் திருவிளையாடற் புராணக்கதை யென்றே கொள்ளப்படும். சேக்கிழார் புராணத்தும் திருவிளையாடற் புராணங்களிலும் இவ்வருட் செயலை திருஞானசம்பந்தர் ஆற்றியதாகக் கூறப்படும். சேக்கிழார் வரலாறும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட வரலாற்றை யொட்டியதே யாகும். வரலாறுகள் பேதம் படக் கூறப்படும் வழக்கை மற்றைப் புராணங்களிலும் காணலாகும். இதனைப் புராணகாரர் மரபெனக் கொள்ளவமையும். வடமொழியாளர் இதனைக் கற்பபேதம் என்று கூறுவர். தமிழ்மொழிப் புராணங்களையே ஆதரவாகக் கொள்ளின் விகற்பங்களுக்குக் காரணம் கூறவியலாது. இவ்வரலாறுகள் பலகாலத்தில் நிகழ்ந்தனவாகக் கொள்வோமாயின் திருவிளையாடல்கள் பல்கி அறுபத்து நான்கென்னும் தொகைக்கு மேற்படுமாறறிக.

இதனையோர்ந்தே பெரும் பற்றப்பூலியூர் நம்பிகள் தமது புராணத்தில் திருமருகலிலும் முன் கூறிய செய்தி நடந்த தென்று கூறி சேக்கிழார் வரலாற்றையும் அறுபத்து நான்கென்னும் பழைய வரலாற்றில் அடக்கிக் கூறியிருப்பதும் காண்க. நம்பிகள் வடமொழிநூல் வரலாற்றை மாற்றிக் கூறுவதற்கு அஞ்சினராவர் (இதனால் நம்பிகள் புராணம் சேக்கிழார் புராணத்திற்கு பிற்பட்டகாலத்தில் இயற்றப்பட்டதென்பது தெளி வாம்). இதனால் பழைய வரலாறு ஒன்றையே புராணகாரர்
விகற்பித்து கூறிஞர் என்பது தெளிவாம்.

பாணன் வரலாறு மூன்றும், பாணன் மனைவி வரலாறு ஒன்றும் ஆக நான்கு திருவிளையாடல்கள் புராணங்களில் கூறப் பட்டுள்ளன. இவைகளில் ஒன்றே பழையதாகும். மற்றை மூன்றும் பிற்காலத்தனவெனலாம்; திருஞான சம்பந்தரால் குறிக்கப்பட்ட பாணன் கூடற்பிரானிடத்துத் திருமுகம்பெற்று சேரமான் பெருமாள் நாயனாரிடம் சென்று அதனைக்காட்டி பரிசு பெற்றானென்று திருவிளையாடற் புராணங்களிலும் சேக்கிழார் புராணத்திலும்  கூறப்பட்டுளது. இவ்வரலாறு கால இடர்ப் பாட்டை உடையதாகும். திருஞான சம்பந்தருக்கு ஒரு நூற்றாண்டிற்கு  மேற்பட்ட காலத்தில் சேரமான் பெருமாள்நாயனார் அவதரித்தவராவர். இம்முரண்பாட்டுக்கு திருவிளையாடற்புராணகார்களே காரணமென்று திரு. மறைமலையடிகள் கருதுவர். தமிழ்ப் புராணங்கள் வடமொழிப் புராணங்களின் மொழி பெயர்ப்பென்பதைக் கருதாதலினால் இவ்வாராய்ச்சியாளர்க்கு முரண்பாட்டின் காரணம் விளங்கவில்லே யென்னலாம். வட மொழிப் புராணத்தில் இம்முரண்பாடு காணப்படும். எனவே வடமொழிப் புராணம் சேரமான் காலத்திற்கும் (அதாவது 9ம் நூற்முண்டிற்குப்) பிற்பட்டதாகும். கல்லாடமும் புராணக் திற்கும் பிற்பட்டதாகும். 

பாணன் வரலாற்றால் பழைய வரலாறு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு வேறு புதிய வரலாறுகள் கூறப்பட்டன வென்பது தெளிவாம். இப்புதிய வரலாறுகள் வடமொழிப் புராணகாரர் காலத்திற்கும் சேரமான் காலத்திற்கும் இடையில் புணர்க்கப்பட்டனவெனலாம். இப்புதிய வரலாறுகளின் சற்றேறக்குறைய தொகை 29 என்று முன் கூறினாம். இவையனைத்தும் கல்லாடத்தினும் கூறப்பட்டனவாகும். இப்புதிய வரலாறுகளில் நக்கீரர், உக்கிரப்பெருவழுதி, மூர்த்திநாயனார் முதலியோர் செய்திகளும் அடங்கினவாகுமென்பதைக் காட்டுவாம். 

நக்கீரருக்கு ஓர் சிறப்பைக் கூறுவதற்கு இறையனுருரை, நக்கீரரால் வரையப்பட்டு குருசீடர் வழிமுறையில் கர்ண பரம்பரையாக ஓதப்பட்டு வந்ததென்று, கூறப்பட்டதாகும். இவ்வுரையில் சங்ககாலத்துச் செய்யுட்களும், சிலப்பதிகாரமும், பாண்டிக் கோவையும் ஆட்சி பெற்றுள்ளன. உரையில் கூறப்படும் சில துறைகள் புதியனவாகச் சங்ககாலத்து வழக்கினோடு  மாறுபட்டனவாகத் தோன்றும். இப்புதிய துறைகளுக்கு சங்க விலக்கியங்களினின்றும் மேற்கோள் காட்டவியலாது. இத்துறைகளுக்கு பிற்காலத்து இலக்கியங்களிலிருந்தே எடுத்துக்காட்டு கூறவேண்டும். எனவே இறையனாருரையை சங்க காலத்து  நக்கீரர் மேல் ஏற்றிக் கூறுவது பொருந்தாது. உரை தோன்றிய காலத்திற்கும் சங்ககாலத்திற்கும் இடையில் 7 அல்லது 8 நூற்றாண்டாகும். குரு சீட முறையில் 13 பெயர்கள் கூறப்பட்டிருக்தலும் உரைக் கூற்றை வலியுறுத்தாது. 

இறையனார் உரையின் காலத்தை யறிவதற்கு பாண்டிக் கோவை உதவிபுரியும். இக்கோவை நூலின் பாட்டுடைத் தலைவன்  அரிகேசரி நெடுமாறன் என்பவன். இவனைக் கூன் பாண்டியனென்றும் கூறுவர். இம்மன்னன் கி. பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செங்கோலோச்சினான். இவ்வரசன் சைனமதத்திலிருந்து நீங்கிய வரலாறு கோவை நூலில் யாண்டும் கூறப்படவில்லை. இவ்வரசனைப் பற்றிய கதையும் பிற்காலத்ததாகுமெனக் கூறலாம். இக்கோவையில் பல போர்க்களங்கள் கூறப் பட்டுள்ளன. இவைகளில் பாழி, செந்நிலம், நெல்வேலி என்ற மூன்றும் வேள்விக்குடி சாசனத்திலும் காணப்படும். கோவையில் காணப்படும் மற்றைப் போர்க்களங்கள் சாசனத்தில் காணப்படா. இப்போர்க்களங்களிற் சில இம்மன்னன் முன்னோர் காலத்திற்குரியவையாகும். வேள்விக்குடி சாசனத்தில் இம்மன்னன் முன்னோர்கள் போர்க்களங்களொன்றும் கூறப் படாமையால் கோவையில் கண்ட மற்றைப் போர்க்களங்கள் புணர்ப்பாகுமெனவும் இந்நூல் 8ம் நூற்றுண்டிற்கும் பிற்பட்டதெனவும் சிலவாராய்ச்சியாளர் கூறுவர். பாட்டுடைத்தலைவன் முன்னோர் செயல்களையும் பாட்டுடைத் தலைவன் செயல்களாகக் கூறுவதோர் மரபையறியாது ஆராய்ச்சியாளர் கூறுங்கூற்றை மறுக்க, கோவை நூலில் கூறப்படும் செயல்களனைத்தும் உண்மையேயாகும். கோவைநூல் அரிகேசரியின் இறுதிக் காலத்தில் (7ம் நூற்றாண்டிறுதில்) பாடப்பட்டதாகும்.

வேள்விக்குடி சாசனத்தில் அரிகேசரியின் முன்னோர்களான கடுங்கோன், அவனிசூளாமணி, சேந்தன் என்னும் மூவர் செயல்கள் கூறப்படாதிருப்பது ஓர் ஐயப்பாடுடையதாகும். பாண்டிய நாட்டை களப்பிரர் என்னும் ஓர் புதிய குலத்தினர் வெளவி சில நூற்றுண்டுகள் வரையில் அரசு புரிந்தாரென்பதொரு வரலாறு சாசனத்தில் காணப்படும். கடுங்கோனென்னும் பாண்டியன் இப்பகைவரைவென்று அவர்களை  தன்னாட்டினின்றும் அகற்றிக் தன்னுரிமையைப் பெற்று அரசாட்சி புரிந்தானென்று வேள்விக்குடி சாசனங் கூறும். பகைவரை வென்றதற் கறிகுறியாக ஒரு போர்க்களமேனுங் கூறாதிருத்தல் வியப்பைத்தருகின்றது. அரிகேசரி முதல் பிற்பட்ட அரசர்களின் முறையை வேறு சாசனத்தாலும் அறியலாகும். கடுங்கோன், அவனிசூளாமணி என்றவர்களைக் குறிக்கும் வேறு சாசனச் சான்றுகள் இல்லை. எனவே வேள்விக்குடி சாசனத்தில் இவ்விருவரசர்களைக் குறித்த வரலாறு பாண்டிக்கோவையோடு முரண்படுவதால் வேள்விக்குடி சாசனத்தை ஏற்றுக்கொள் வதற்கு ஐயப்பாடுண்டென்க. இதனக்குறித்து மூர்த்திநாயனார் வரலாற்றில் வேறு காரணங்களைக் காட்டுவாம்.



Innamburan S.Soundararajan

unread,
Nov 9, 2016, 1:19:20 PM11/9/16
to mintamil, Subashini Kanagasundaram, Mythilly Thiyagu, PK Sivakumar, தேமொழி
என் மன நிறைவை எப்படி எடுத்துச்சொல்வது என்று தெரியவில்லை. அண்மையில் கல்லாடம் வகுப்புக்கு ஆகஸ்ட் மாதம் போகும் முன், சில சைவ நூல்களை படித்து நற்பெயர் பெற்ற ஒரு நண்பரிடம் விசாரித்தேன். அவருக்கு கல்லாடம் பற்றி தெரிந்திருக்கவில்லை. என் ஆர்வமோ வித்திடப்பட்ட வருடம் 1947. திருநெல்வேலி சீமையில் ஒரு முதியவர், பேரனை தூளியில் ஆட்டிக்கொண்டிருந்தார். அப்போது பாட்டு/மெட்டு. என்னவென்று கேட்டேன்: கல்லாடம் என்றார். அன்று புரியாமல் விட்டதை, இவ்வருடம் முனைவர். இந்திரா பாடம் எடுத்தார். அவருக்கு இதை அனுப்பப்போகிறேன். முனைவர் தேமொழிக்கும்,திருமதி மைதிலிக்கும், திரு.சிவகுமாருக்கும் என் நன்றி & சுபாஷிணிக்கும்.
அன்புடன்,
இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Nov 9, 2016, 4:55:52 PM11/9/16
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, vallamai, podhuvan sengai, Vasudevan Letchumanan, Sivakumar M A, ara...@gmail.com, Maravanpulavu K. Sachithananthan, Raji M, Banukumar Rajendran
திருமதியர் தேமொழி மற்றும் சுபா அவர்களுக்கு 

கல்லாடம் எனும் நூல்பற்றி முதுசொம் தனில் பதிவேறுவது பற்றி மிக்க மகிழ்ச்சி 

கல்லாடம் பற்றிய சில கருத்துக்கள் 
(1)
கல்லாடம் பயின்றாரோடு சொல்லாடதே எனும் பழம் சொல்லை  மீண்டும் மீண்டும் 
பலரும் காட்டுவர் என்பதனை அறிவோம் இந்நூல் பிற்காலத்தியதே என்றாலும் சங்கநூகளின் நடையை சார்ந்து அதனை பதிவிறக்கம் செய்தது போல் தோன்றும் அளவிற்கு பழைய ஆசிரிய நடைதனைக் கொண்டது காணலாம் 

(2)
கல்லாடனார் எனும் புலவரின் பெயர் (கள்) அவர் (கள்) காவி உடை அணிந்ததவர  என்பதே ஆகும்
கல்லாடை என்றால் காவி நிற ஆடை முற்காலத்தில் பௌத்தர்களுடன் மற்ற சமயத்தினர் எல்லோரும் அணிந்துள்ளனர் இன்றும் இராமகிருஷமடம் வரை கல்லாடை சிவந்தமஞ்சள்  காவியாடை தொடர்வதும் அறிவோம்  

"கல்லாடை புனைந்து அருளும் காபா லியை கற்பகத்தை என  " Circa 650 CE சார்ந்த  அப்பர் தேவாரம் சிவபெருமானைப் போற்றும் 

மழை பெய்தவுடன் ஓடும் பொது  ஆற்று வெள்ள நீர் மஞ்சள் நிறமாக இருந்ததால் பொன்னி எனும் பெயர் பெற்றது (சீனாவிலும் yellowriver உண்டு)  அதுபோல் ஆற்று நீர் சிவந்து வந்ததால் கல்லாடம்  என ஆற்றின் பெயரும் உண்டு (கேரளம் குற்றாலம் மேல் ) 

இன்றும் கல்லாடா  என பெயரைத் தேடினால்  கூகுளார் ஆயிரம் கல்லாடர் களைக் காட்டும் இது ஓர் குடும்பப் பெயராக காணலாம் ஒருகாலத்தி ல் சிவந்த ஆடை உடைதங்கிய பண்புடைய இனம் வழி வந்தவர் போலும் அல்லது பௌத்தர்களாகலாம் 

பௌத்தர்கள் தம் காவி ஆ டைக்க்கு பயன்கொலும் நிறமி (DYE) காம்போஜம் என்னும் தவர்த்திலிருந்து கிடைப்பதும் அதனாலதான் காம்போஜ நாடு Cambodia  காவி அணிந்த பௌத்தர்களைத் நாடு எனும் பொருளில் வந்துள்ளது  விக்கியிலிருந்து காண்க 

Gamboge is most often extracted by tapping resin (sometimes incorrectly referred to as sap) from various species of evergreen trees of the family Clusiaceae (also known as Guttiferae). The tree most commonly used is the gamboge tree (genus Garcinia), including G. hanburyi (Cambodia and Thailand), G. morella (India andSri Lanka), and G. elliptica and G. heterandra (Myanmar).[5] The orange fruit of Garcinia gummi-gutta (formerly called G. cambogia) is also known as gamboge[6] or gambooge.

The trees must be at least ten years old before they are tapped.[7] The resin is extracted by making spiral incisions in the bark, and by breaking off leaves and shoots and letting the milky yellow resinous gum drip out. The resulting latex is collected in hollow bamboo canes.[5] After the resin is congealed, the bamboo is broken away and large rods of raw gamboge remain. 

(3)
கல்லாடம் பாடல்கள்   மதுரையை கூடல் என விளி க்கும்  
அதனில் வரும் பாடல் ஒன்று 
 ( நன்றி = மதுரைத்திட்டம் http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0244.html ) 

    61. ஆதரம் கூறல்

    நெடுவரைப் பொங்கர்ப் புனம்எரி கார்அகில் 
    கரும்புகை வானம் கையுறப் பொதிந்து 
    தருநிழல் தேவர் தம்உடல் பனிப்பப்
    படர்ந்தெறி கங்கை விடும்குளிர் அகற்றும் 
    பொன்னம் பொருப்ப! நின்உளத் தியையின்
    (5)
    கனல்தலைப் பழுத்த திரள்பரல் முரம்பு 
    வயல்வளை கக்கிய மணிநிரைப் பரப்பே
    அதர்விரிந் தெழுந்த படர்புகை நீழல் 
    பொதுளிய காஞ்சி மருதணி நிழலே!
    தீவாய்ப் புலிப்பற் சிறுகுரல் எயிற்றியர்
    (10)
    கழுநீர் மிலையும் வயல்மா தினரே
    அயற்புலம் அறியும் எயினர் மாத்துடி 
    நடுநகர்க் கிரட்டும் களிஅரி கிணையே!
    இருள்கவர் புலன்எனச் சுழல்தரும் சூறை 
    மதுமலர் அளைந்த மலையக் காலே
    (15)
    எழுசிறை தீயும் எருவையும் பருந்தும் 
    குவளையம் காட்டுக் குருகொடு புதாவே
    வலியழி பகடு வாய்நீர்ச் செந்நாய் 
    தழைமடி மேதியும் பிணர்இடங் கருமே
    பட்டுலர் கள்ளி நெற்றுடை வாகை
    (20)
    சுருள்விரி சாலியும் குலைஅரம் பையுமே
    வடதிருஆலவாய் (1) திருநடுவூர் (2)
    வெள்ளியம்பலம்(3) நள்ளாறு (4) இந்திரை (5)
    பஞ்சவ னீச்சரம்(6)
    அஞ்செழுத்து அமைத்த
    சென்னி மாபுரம்(7) சேரன் திருத்தளி(8)
    (25)
    கன்னிசெங்கோட்ட ம்(9) கரியோன்திருவுறை(10)
     
    விண்ணுடைத் துண்ணும் கண்ணிலி ஒருத்தன் 
    மறிதிரைக் கடலுள் மாவெனக் கவிழ்ந்த 
    களவுடற் பிளந்த ஒளிகெழு திருவேல் 
    பணிப்பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன்
    (30)
    முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த
    அருவிஅம் சாரல் ஒரு
    பரங் குன்றம் (11)
    சூழ்கொள இருந்த கூடலம் பெருமான் 
    முழுதும் நிறைந்த இருபதம் புகழார்
    போம்வழி என்னும் கடுஞ்சுரம் மருதம் 
    மாமை ஊரும் மணிநிறத்து இவட்கே
    .                  (36)
     

கோடிட்டுக்கா  ட்டப்பெற்ற 11 கோயில்கள் சூழ்கொள இருந்த
 கூட லெம்பெருமான் என பேசுகின்றது 

இதனி ல் வரும் நள்ளாறு  திருஞானசம்பந்தர் அனல்வாதம்  செய்த திருத்தலம் 
என அவரது தேவாரம் சான்று காட்டும் அனால் சேக்கிழார் காலத்தில் அவர் அறியாததனால் அப்பெருமான் புதியதாக ஏட்டுச்சுவடியில் கயிறு சாற்றி எனும் கற்பனைத்தனை புனைந்து பாடினார் 

சம்பந்தர் குறித்த நள்ளாறு   எனும் திருத்தலம் கல்லாடனார் காலத்தில் இருந்துள்ளது 
ஆ னால் சேக்கிழார் காலத்தில் கிடைக்காததால் காட்டப்படவில்லை சேக்கிழாராலேயே அறிய முடியாதபடி காணுதலால் ஒரு சில நூற்ராண்டுகளாவது முன் கல்லாடனார் கல்லாடம் இயற்றியிருக்க வேண்டும், அதாவது சேக்கிழாரின்  13  இக்கு  முன் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டு எனலாம் 
வடதிரு ஆலவாய் ஓர் ஆலமரத்தின் அடியில் இருந்துள்ளதும் ஆகும் (வடம் = ஆல மரம் )


மேலே கல்லாடம் பாடல் 61 திருப்பரங்குன்றம் திருமாலிருஞ்சோலைமலை 
 தனைக்பேசுகின்றது இவைகளை இன்றும் காணலாம் மற்றவை எங்கிருள்ளது என அறியமுடியவில்லை ஆழ்ந்த ஆய்வுகள் தேவையாகிவி ட்டது

நூ த லோ சு 
மயிலை 

2016-11-09 22:45 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:

தேனீ

unread,
Nov 10, 2016, 3:09:04 AM11/10/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com, meenu...@gmail.com, pksiv...@gmail.com, jsthe...@gmail.com
த.ம.அ-வின் செயலுக்கு தமிழ் குமுகாயம் நன்றி கடன் பட்டுள்ளது. தங்கள் சேவை எங்களுக்குத் தேவை. பாராட்டுகிறோம்.

தமிழ் பொழில் போன்றே செந்தமிழ் மற்றும் செந்தமிழ் செல்வி போன்ற இதழ்களை சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தின் ஒப்புதலைப் பெற்று இணையத்தில் பிரசுரிப்பீர்களேயானால் நாங்கள் பாக்கியசாலிகள். தாங்கள் சிவபுண்ணியம் பெறுவீர்.

நன்றி.

தேனீ    

Suba

unread,
Nov 21, 2016, 3:08:14 AM11/21/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram, Mythilly Thiyagu, PK Sivakumar, தேமொழி

தமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரை மின்னாக்கக் குழுவின் தொடர் முயற்சியில் ஆய்வுக் கட்டுரைகள் தட்டச்சு செய்யப்பட்டு மின்னாக்கம் செய்யப்படுகின்றன . அந்த வகையில் தமிழ்ப்பொழில்   : Vol.12_1936-1937_10; பக்கம்: 347-354 வெளிவந்த கல்லாட நூலாராய்ச்சி கட்டுரையின் இரண்டாம் பாகம் இன்று வெளியிடப்படுகின்றது. இதனை  தட்டச்சு செய்து வழங்கிய நண்பர்.திரு.சிவக்குமார் ( நியூ ஜெர்சி) அவர்களுக்கு நமது நன்றி.
-சுபா


கல்லாட நூலாராய்ச்சி
திருவாளர், E. R. நாசிம்மஐயங்கார் அவர்கள் B.A., B.L., சேலம்,
(முற்றொடர்ச்சி துணர் 12, மலர் 9, பக்கம் 323)

இறையனாருரை, சங்ககாலத்திற்குப்பின் 8-ம் நூண்றுண்டில் இயற்றப்பட்டதாகும்; கிளை முறையாக 35 பெயர்களால் ஓதப்பட்டு வந்ததாக உரைகாரர் கூறியிருப்பின் இவ்வுரை நக்கீரர் உரையாகுமெனக் கொள்ளத்தகும். 13 பெயர்களே உரைகாரர் கூறியுள்ளார். இக்கூற்றை ஆராய்ச்சியாளர் கொள்ளார். எனவே நக்கீரர் உரையென்பது கற்பனையாகும். இக்கற்பனையை உரைகாரர் கூற்றெனக்கொள்க. இந்நூலாசிரியர் இறையனார் என்பவர். இப்புலவர் "கொங்குதேர் வாழ்க்கை" என்னும் குறுக்கொகைச் செய்யுளை இயற்றியவர். இப்புலவர் ஊனுடம்பொடு பிறந்தவரேயன்றி பிறவாயாக்கைப்பெரியோனல்லர், இப்புலவர் பெயர் ஈசன் பெயரொடு ஒரொற்றுமைப் படுவதைக் கருதி இந்நூல் ஈசனே இயற்றியதென்றும் களவியலுரைகாரர் கற்பித்துவிட்டார். இதனைப் பின்னோரும் பின்பற்றி வேறு கதைகளும் புணர்த்தார்.

இறையனாருரைகாரர் கருத்தையறிந்த மற்றோர் புலவர் ஈசனார் பாடிக் கொடுத்த செய்யுளில் நக்கீரர் குற்றங் காட்டினாரென்று ஒர் கதையைப் புணர்த்து நக்கீரர் பெயரால் சில நூலகளைப்பாடி இறையனாருரைகாரர் கூறிய கதையை வளம்பெறச் செய்தார். இக்கதைக்கரு "நன்பாட்டுப் புலானாகிச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்' என்று நாவுக்கரையர் பாடியுள்ள பழைய வரலாறொன்றை ஆதரவாகக்கொண்டு, நக்கீரர் குற்றங்காட்ட, ஈசனார் நக்கீரன்மாட்டு சினமுடையவராய் நெற்றிக் கண்ணால் நோக்க, நக்கீரன் விழிக்கனலின் வெப்புக் காற்றானாகி, ஒர் வாவி நீருட்புக் கிருந்தவாறே ஈசனைப்பாடி அருள்பெற்றுய்ந்தான் என்று இப்புலவர் கற்பித்தார்.  இக்கதை புணர்த்தவர் ஈசனார் பாடிய செய்யுளைக் கூறாது விடுத்தது குறிக்கத்தக்கது.

இக்கதையைப் புணர்த்த புலவர் தாம் பாடிய பாட்டுக்களுக்கு நக்கீரர் பெயரைச் சூட்டியது போலவே வேறு சில செய்யுட்கள் பாடி அவற்றிற்கு மற்றை சங்கப்புலவரான கபிலர், பரணர், கல்லாடர் முகலியோர் பெயரையும் சூட்டினார்போலும். இப்பாட்டுக்களனைத்தும் பதினொன்றாம் கிருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகள் நடையானும் இலக்கணக் குறிப்புக்களானும் தேவாரப் பதிகங்களுக்கும் முந்தியவை யாகவெனச் கூறலாகும். இறையனாருரையை இப்புலவர் பின்பற்றினாரெனவுங் கூறலாமாகலான் இப்புலவர் 8-ம் நூற்றண்டிற்கும் முற்பட்டவராகார். "நுணலுந் தன் வாயாற்கெடும்" என்பதற்கு இப்புலவர் பாடிய திருவெழுக் கூற்றிருக்கையில் "நால்வகை, இலக்கணம் நலந்தக மொழிந்தனை” என்னும் கூற்றே  இலக்காகும் என்பதனைக் காட்டுவாம்.

சொல்காப்பியருக்கு முன்னர் இலக்கணம் எழுத்தும்பொருளும் என்னும் இருவகைப்பாகுபாடே இருத்ததென்பர். தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்றும் மூவகைப் பகுபாட்டைக் கொண்டனர். பல்காயனார்,, பல்காப்பியனார் முதலியோர் செய்யுளியலைத் தனியே பிரித்து யாப்பு என்னும் ஒர் அதிகாரம் ஆக்கினாரெனக் கூறலாம். இவர்களில் பதின்மருக்கு மேல் யாப்பு நூல்கள் யாத்தனர் என்பது யாப்பருங்கல விருத்தியால் உணரலாகும். இறையனாருரைகாரர் எழுத்து, சொல், பொருள், யாப்பு என நால்வகைப் பாகுபாட்டைக் கூறியுள்ளார். நால்வகைப் பாகுபாடு இறையனார் உரைகாரர் காலத்திற்கு முற்பட்டதாகும். திருவெழுகூற்றிருக்கையின் ஆசிரியர் இறையனாருரைகாரருக்கும் பிற்பட்டவரென்று முன்னர் கூறினாமாகலின் இறையனாருரை காலத்திற்குப் பின்னும் நால்வகைப் பாடே வழங்கியதாகும். பிங்கலங்தையாசிரியர் இலக்கணக்கின் ஐவகைப் பாகுபாட்டை, கவியரங்கேற்றிய பாட்டுடைத் தலவன் செய்யும் வழிபாடு கூறுமிடத்து
“உருவக முவமை வழிநிலை மடக்கே
…. …. …. …. ….
…. …. …. …. ….
ஐய முயர்வே விரவியல் வாழ்த்தென
வெய்து மிருபதெட் டலங்காரத் தாலு
மெழுத்துச் சொற்பொரு ளியாப்பு நெறியாலும்
நவையறச் செய்யுள் செய்யும் பாவலன்”
என்பதில் அலங்காரம், எழுத்து, சொல், பொருள் யாப்பு எனக் குறித்துள்ளது காண்க. இந்நிகண்டுகாரர் யாப்பருங்கலகாரருக்குப்  பிற்பட்டவராகுமெனலாம். இக்கருத்து வலியுறுவதைக் காட்டுவாம். யாப்பருங்கலச் சூத்திரமாகிய சித்திர கவிச்சூத்திரம் பிங்கலந்தையில் காணப்படும் பிங்கலஙதையார் தொல்காப்பியச் சூத்திரங்களையும்,

"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் 
கூனுங் குறளு மூமுஞ் செவிடு
மாரு மருளு முளப்பட வாழ்நாக்
கெண்பே ரெச்சம்” என்னும் புறநானூற்றுச் செய்யுளையும் ஆண்டுள்ளாராதலின் நிகண்டுகாரர் யாப்பருங்கலச் சூக்திரத்தையும் ஆண்டாரெனலாம். யாப்பருங்கலம் பிங்கலயந்தையாருக்கு முற்பட்டதென்பது நன்குவிளங்கும். யாப்பருங்கலம் 40ம் நூற்றண்டின் முதற்பகுதியிலும் பிங்கலங்தை 10ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இயற்றப்பட்டதெனலாம். யாப்பருங்கலம் 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதெனத் தமிழ்ப்பொழில் 10ம்தொகுதியில் கூறியுள்ளாம். யாப்பருங்கலத்தில் சித்திரக் கவி சூத்திரத்திலும் "உருவக முதலாக வாழ்த்து ஈறாக" அணி வகையின் முறையைக் கூறியுள்ளாராதலின் அணியியல் நூல் யாப்பெருங்கலகாரருக்கு முற்பட்ட காலத்தில் யாக்கப்பட்டடிருந்ததாகல் வேண்டும். அணியியல் என்ற ஓர் நூலின் பெயரையும் அணிவகை இருபத்தெட்டின் பெயர்களையும் யாப்பருங்கல விருத்திகாரர் கூறியுள்ளதால் அணியியல் நூலிருந்ததென்பது தெளிவாம். இந்நூல் 9ம் நூற்றாண்டில் தோன்றியதெனக் கூறலாகும். இந்நூல் தோன்றியபின்னர் இலக்கணம் ஐந்து பாகுபாடுடையதாயிற்று. நக்கீரர் திருவெழுகூற்றிருக்கை பாடிய புலவர் அணியியலுக்கு முற்பட்டராவர். நக்கீரர் திருவெழுகூற்றிருக்கை பாடிய புலவர் 9ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அணியியல் நூலார் பிற்பகுதியிலும் இருந்தவராவர். இப்புலவர் 5ம் நூற்றாண்டிலிருந்தவரென்று திரு.மறைமலையடிகள் கூறியிருப்பது சிறிதும் பொருந்தாதெனத் தெளிக.

நக்கீரர் என்னும் பெயர் பூண்ட புலவர் ஈசன் அருளிய செய்யுள் இன்னதெனச் சுட்டிக் கூறாது விடுத்ததை பின்னுள்ளோர் இறையனார் என்னும் புலவர் பாடியுள்ள
“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி யெறிற் றரிவை கூந்தலின்
ஈறியவு முளவோநீ யறிவும் பூவே”
என்னும் செய்யுளைப் புணர்த்துக் கூறிய பின்னர் கதைஒருவாறு பூர்த்தியாயிற்று. இறையனாருரைகாரர் ஒரு பெருமையைக் காட்டத் தொடங்கிய கதை முடிவுறுவதற்கு ஒரு நூறாண்டுக்கும்மேல் சென்றது. புலவர்களும் இக்கதையை நிறுவ புனபெயர்களையும் பூண்டனர். இக்கதை முறிவுற்றது 10ம் நூற்றாண்டிலெயனக் கூறலாகும்; இக்கதையனைத்தும் திருவிளையாடல்களிலும் கல்லாடத்தும் காணப்படும். இந்நூல்கள் 11ம் நூற்றாண்டில் தோன்றினவென்பது  இங்குக் கூறிய வரலாற்றாலும் உறுதி பெறுகிறது காண்க. இவ்வரலாறுகள் பழைய வரலாறுகளாகா; புதியனவேயாகுமென்க.

உத்திரப்பெருவழுதியைக் குறித்த திருவிளையாடலும் புதிய வரலாற்றிலடங்குமென்பதைக் காட்டுவோம். இப்பாண்டியன் சங்கமேறிய புலவர்களில் ஒருவனாகக் கூறப்படினும் சங்கத் தொகைகளில் இப்பாண்டியன் பாடிய செய்யுள் காணப்படாது. இறையனாருரை சங்கம் இவன் காலத்தோடு முடிந்ததென்று கூறும். இப்பாண்டியன் காலத்துச் சங்கம் தழைத்தோங்கிய நிலையில் இருந்ததென்றுணரலாகும். நக்கீரரைச் சிறப்பிக்கவெழுந்த கதைபோல இப்பாண்டியனையும் சிறப்பிக்க சிலகதைகள் தோன்றின. இப்பாண்டியன் அவையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்றும் அதற்கு ஈசன் முதற்கவி பாடிக்கொடுத்தாரென்றும், உக்கிரப்பெருவழுதியும் ஓர் கவி பாடினாரென்றும்  பிற்காலத்தாரொருவர் கற்பித்தார். இதன் பின்னர், உக்கிரப் பெருவழுதி தெய்வத்தன்மை வாய்ந்தவனென்றும் நெடுஞ்சடையோடு பிறந்தானென்றும், வளை, வேல், செண்டு பெற்று அரிய செயல்களைப் புரிந்தானென்றும் பலவித கற்பனைகள் எழுந்தன. இக்கதையனைத்தும் திருவிளையாடலில் காணலாம்.

வளை,வேல், செண்டு பெற்ற வரலாறு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டதோர் வரலாறாகும். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் பெயர் கூறாதிருத்தல் குறிக்கத்தக்கது. இக்கதை பிற்காலத்தில் உக்கிரப் பெருவழுதிமேல் ஏற்றிக் கூறப்பட்டது. இக்கற்பனை 8ம் நூற்றாண்டிற்கும் இறையனாருரை காலத்திற்கும் பிற்பட்டதாகுமென்பதைக் கூறுவாம். 

பாண்டிய மன்னர் சடையன் என்னும் பெயரைப் பட்டப் பெயராக வகித்து வந்தார். அரிகேசரியின் புதல்வன் கோச்சடையன் என்னும் இயற்பெயரை உடையவன், இவன் புதல்வன் ராஜசிம்மனுக்கு, தகப்பன் பெயரை முன்வைத்து சடையன் மாறன் என்னும் பெயர் வழங்கியது. இவன் புதல்வன் காலம் முதல் மாறன் சடையனென்ற பட்டமும், சடையன் மாறன் என்ற பட்டமும் மாறிமாறி வழங்கப்பட்டது. இவ்வழக்கம் தொடங்கியது 8ம் நூற்றாண்டினிடைக்காலம் முதல் என்னலாம். பிற்காலத்தார் இவ்வரலாற்றுக்கு ஓர் கதை புணர்த்து குலமுதல்வனாகக் கூறப்படும் உக்கிரபெருவழுதி சடையுடன் பிறந்தானென்றார். இக்கதை திருவிளையாடலில் கூறப்பட்டுளது. கல்லாடத்திலும் காணப்படும். இக்கதை 9ம் நூற்றாண்டிற்குப் பின்னரே புணர்க்கப்பட்டதாகும். 

மூர்த்தி நாயனார் “மும்மையா லுலகாண்ட மூர்த்தி” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பித்துக் கூறப்பட்டார். இச்சிறப்பின் முழுவரலறு அறிவதற்கியலாது. திருவிளையாடலில் இவ்வடியார் அரசுரிமையைத் தாங்கி மதுரையில் ஆட்சிபுரிந்தாரென்று கூறப்படும். இவர் அரசு பூணுவதற்குமுன் வடுகக்கருநாடர் என்னும் ஒரு குலத்தினர் பாண்டியவரசி நீக்கி பாண்டி நாட்டை ஆண்டதாகவும் இக்குலத்தினர் சைன மதத்தைப் பரவச் செய்தனர் என்றும் இறுதியில் அரசுரிமை தாங்கக்கூடிய மக்களின்றி அக்குலம் முடிவுற்றதென்றும் மூர்த்தி நாயனார் அமைச்சர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரென்றும் புராணம் கூறும். இம்மூர்த்திநாயனார் பசுக்காவலன் எனக் கூறப்படுவாராதலின் இவர் அரச குலத்தைச் சார்ந்தவரன்று. பின்னர் பாண்டியர் எவ்வாறு அரசுரிமை யெய்தினரென்று புராணம் கூறவில்லை. இக்கதை சுந்தரமூர்த்திகள் காலத்திலும் விளங்காததொன்றாக விருந்ததென் றறியலாகும். பிற்காலத்தில் மூர்த்தி நாயனார் வரலாறு விரித்துக் கூறப்பட்டது. புணர்ப்பெனவே படும். 

வேள்விக்குடி சாசனம் பாண்டி நாட்டை வெளவினவன் பெயர் களப்பிரன் என்று கூறுகின்றது. இவன் வமிசத்தார் மதுரையில் பலவாண்டுகள் ஆட்சிபுரிந்தார் என்பது பெறப்படும். இவர்களாட்சி ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் நடந்ததெனவும்ஆராய்ச்சியாளர் ஊகிக்கின்றனர். கடுங்கோன் இவர்களைத் துரத்திவிட்டு தன்னுரிமையை எய்தினானென்று சாசனம் கூறும். ஆயினும் இவன் காலத்திலாவது, இவன் புதல்வன் காலத்திலாவது, போர் நடந்ததாக சாசனங் கூறவில்லை. கடுங்கோன் போரின்றி நாட்டை அடைந்தான் என்றாவது கூறப்படவுமில்லை. இவற்றை நோக்கின் கடுங்கோன் முதல் மூன்று அரசர்கள் வரலாறு வேள்விக்குடி சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ளது, உண்மையன்றென்னும் ஓர் ஆசங்கைக்கு இடந்தருகிறது.

களப்பிரர் என்பார் பெயர் 9ம் நூற்றாண்டுப் பல்லவ சாசனங்களில் காணப்படும். பல்லவர்கள் சேர, சோழ, பாண்டி, களப்பிரரோடு போர் செய்தார்களென்று கூறப்படுகிறது. இக்களப்பிரருக்குரிய நாடு இன்னதென்றும் இவர்கள் பாண்டிாட்டை அடைய எவ்வழி கொண்டாரென்று அறியவியலாது; இப்பெயர் கள்வன் என்னும் பெயரின் திரிபென்று கொண்டு வேங்கட நாட்டையாண்ட கள்வன் புல்லி என்ற குலத்தைச் சார்ந்தவரென்று டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் கூறுவர். திரு. மு. இராகவ ஐயங்கார் இககளப்பிரர், பிற்காலத்தில் பலவிடங்களில் களப்பாளர் என்று விளங்கியவர் குலத்தின் முன்னோராவர் என்று கூற்றுவ நாயனார் வரலாற்றைச் சான்றாகக் கூறுவர். கூற்றுவ நாயனார் வரலாறும் மூர்த்தி நாயனார் வரலாற்றைப் போலவே யுளது. சோழநாட்டிற்கோர் பெருமை கொடுக்க கூற்றுவ நாயனார் வரலாறு எழுந்தது போலும்.

சாசன வரலாறும் ஐயப்பாடுடைய தாகும் . மூர்த்தி நாயனார் வரலாறும் புராணக் கதையாகச் சரித்திர வரலாற்றுக்கு ஒவ்வா திருக்கிறது.

கார் மண்டல சதகத்தார் முத்தரையர் என்னும் ஓர் குலத்தினர் மதுரையிலிருந்ததாகக் கூறுவர்.
“நூல்தொகுத்தா ரெவர்நுண்மா நுழைபுலம் நூலவையும்
பால்தொகுத்தா ரெவர்பன் மாடக்கூடற் பழம்பதிக்க
ணேல்தொகுத்தா ரெவர்முத் தமிழ்ப்பாண ரிசைவருப்ப
மால்தொகுத்தார் முத்தரையர் யவர்காராளர் மண்டலமே”
என்னும் பாட்டில் இவர்கள் மதுரையிலிருந்தபோது பலநூல்கள் தொகுத்த தாகவும் இசைால்கள் தோற்றுவித்ததாகவும் கூறப்பட்டுள்ளார். நாலடியாரிலும் முத்தரையர் புகழப்பட்டுள்ளார்.. இக்குலத்தார் சோழ தேசத்தை 9ம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்ததாகச் சோழ வமிச சரித்திரத்தா லுணரலாகும்;பல்லவ சாசனங்களிலும் இவர்கள் பெயர்கள் காணப்படும், குடுமியாமலை, பொன்னமராவதி முதலிய ஊர்களில் கிடைக்கும் சாசனங்களால் பாண்டி நாட்டின் சில பகுதிகளை இக்குலத்தினர் ஆண்டு வந்தாரெனப் புலப்படுகிறது. நார்த்தா மலைச் சாசனத்தில் இவர்கள் மதுரை யரசர் குலத்தினரென்று கூறப்பட்டுளது. எனவே இவர்கள் ஒருபெருங்குலத்தைச் சார்ந்தவராய் தொண்டைநாடு முதல் பாண்டிநாடு வரையில் பரவி யிருந்தனர் எனப் பெறப்படும். பாண்டிாட்டை வெளவி யர சாண்டவர் இம்முத்தரையரே எனலாம். இவர்கள் சைன மதத்தைச் சார்ந்தவராயிருப்பதும் முன் கூறிய கருத்தை வலியுறுத்துகின்றது. களப்பிரர் என்பார் கூலிப்படை வீரரெனக் கருதலாகும். முத்தரையர் இக்கூலிப்படை வீரரைக் கொண்டு பாண்டி நாட்டைக் கவர்ந்து பலவாண்டுகள் அரசாண்ட காலத்து நூல்கள் தொகுத்தாரென  ஊகிக்கலாகும். திசம்பர தரிசனம் என்னும் சைனநூல் விக்கிரமசகம் 526 (கி.பி.470) பூச்சிபாதர் என்பாருடைய மாணாக்கரொருவரான வச்ச நந்தி என்பார் ஒரு திராவிட சங்கம் தாபித்தார் என்று கூறுமென்பர் (செங்தமிழ் 3:406). இவ்வரலாறுகளை நோக்கின் கார்மண்டல சதகத்தார் வரலாறு உண்மையெனக் கொள்ளவமையும்.

இதுகாறும் திருவிளையாடல்களின் ஆராய்ச்சியால் கல்லாட நூல் 11ம் நூற்றுண்டிற்கு முற்பட்டதாகாதெனக் கூறினாம்.  திருரு. மறைமலையடிகள் கல்லாடம் 6-ம் நூற்றாண்டில் தோன்றியதென்பது பொருந்தாது.  மணிவாசகனார் வரலாறும் பிற்பட்ட காலத்ததாகும். இவ்வரலாறும் புராண காலத்திற்கு அணுகிய காலத்ததாகும். மணிவாசகனார் நூலில் காணப்படும் சில அகச்சான்றுகளால் மணிவாசகனார் காலத்தை ஆராய்வோம்.


(தொடரும்.)


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Thenee MK

unread,
Nov 21, 2016, 10:00:30 AM11/21/16
to mint...@googlegroups.com
இவ்வகையான ஆராய்ச்சிக் கட்டுரைகளே நமக்குத் தெளிவைப் பிறப்பிக்கும். கட்டுரையை பதிப்பித்மைக்கு நன்றி. தமிழ்ப்பொழிலில் பதிவிடப்பட்ட 'மூவர் தமிழ்' என்ற தொடர் கட்டுரையையும் பதிவிட்டால் படிபோருக்கு விருந்தாகும். 

மு. கமலநாதன்  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/7kkLeGgVS90/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Nov 28, 2016, 3:22:20 AM11/28/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram, Mythilly Thiyagu, PK Sivakumar, தேமொழி
தமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரை மின்னாக்கக் குழுவின் தொடர் முயற்சியில் ஆய்வுக் கட்டுரைகள் தட்டச்சு செய்யப்பட்டு மின்னாக்கம் செய்யப்படுகின்றன . அந்த வகையில் தமிழ்ப்பொழில்   : Vol.12_1936-1937_10; பக்கம்: 347-354 வெளிவந்த கல்லாட நூலாராய்ச்சி கட்டுரையின் மூன்றாம் பாகம் இன்று வெளியிடப்படுகின்றது. இதனை  தட்டச்சு செய்து வழங்கிய நண்பர்தி ருமதி மைதிலி ( நியூ ஜெர்சி) அவர்களுக்கு நமது நன்றி.
-சுபா



கல்லாட நூலாராய்ச்சி - 3

திருவளர். R. R. நாசிம்மஐயங்கார் அவர்கள் B.A., B.L., சேலம்.
                                           
(முற்றொடர்ச்சி துணர் 12. மலர் 10. பக்கம் 354.)


            திருஞானசம்பந்தர் கூறிய 14 அடியார்கள், திருஞான சம்பர்கருக்கு முற்பட்டவராவர். கல்லாடத்தில் இவ்வடியார்களில், கண்ணப்பர், காரைக்காலம்மை, மூர்த்திநாயனார், சாக்கியர் ஆகிய நால்வரை கூறப்பட்டிருப்பதால் இவ்வடியார்கள் கல்லாடருக்கு முற்பட்டவர் என்றும் இவர்களில் பின் கூறப்பட்ட மூவரும் மணிவாசகனார் கூறாததால் கல்லாடருக்கு முற்பட்டவரென்றும், மணிவாசகனார் கண்ணப்பரையும், சண்டீசரையும் கூறுவதால் இவ்விருவடியானார்களும் மணிவாசனார்க்கு முற் பட்டவரென்றும் திருமறைமலையடிகள் கூறுவர்.


           கல்லாடரும், மணிவாசகனாரும் தமக்கு முற்பட்ட அடியார்களின் தொகையை கூறும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தரராயின் அடிகள் கூறிய காரணம் பொருத்தமானதாகும். திருஞானசம்பதர் நலக்தொகை கூறியது போலவும் சுந்தரமூர்த்திகள் அடியார்தொகை கூறியதுபோலவும் இவ்விருவரும் கூறினாரல்லர்.அடிகள் கூறிய துண்மையாயின் மணிவாசகனாருக்கும் முன்னிருந்த கோச்செங்கண் சோழனாரை மணிவாசகனார் கூறாத காரணமென்ன? காரணம் கூறவியலாதாகலின்  அடிகள்கொண்ட கருத்து, வழுவுடையதாகும்.


          கல்லாடர் திருஞானசம்பர்கருக்கு முற்பட்டவராயின் கல்லாடர் கூறியுள்ள திருவிளையாடல்கள் அறுபத்து நான்கெனும் தொகை எங்ஙனம் பெறப்படும்? திருவிளையாடல்கள் அறுபத்து நான்கில், பாண்டியன் வெப்புத் தீர்த்ததும், சமணரைக் கழு வேற்றியதும், சான்றழைக்த்தும் ஆகி
ய மூன்றும் நீக்கப்பட வேண்டும். கல்லாடர் காலத்துக்கு முன்நிகழ்ந்த திருவிளையாடல்கள் 61 என்றே தொகை பெறப்படும். கல்லாடர் 64 என்று கூறியிருப்பதொடு முரண்படும். இவ்வகையானும் திரு. மறைமலையடிகள் கருத்து வழுவுடையதாகும். 


         இவ்வாராய்ச்சியாளர் மணிவாசனார் காலத்திற்கு முன்பு 54 கோயில்களே இருந்தனவென்றும், பிற்காலத்தில் கோயில்கள் பல்கியிருந்தனவென்றும் அதனால் தேவாரங்களில் 274 கோயில்கள் கூறப்பட்டிருக்கின்றனவென்றும் ஒர் காரணம் கூறுவர். மணிவாசகனார் மற்றை நாயனாரைப் போல தலத் தொகைகள் கூறவில்லையென்பதை யறிக. போற்றித் திருவகவலில் சிலதலங்களில் எழுந்தருளியுள்ள பெருமானின் புகழ்களையே கூறியுள்ளார். எனவே மணிவாசகனார் கோயிலின் தொகை கூறினாரென்னும் கருத்து வலியுறாதென்பதையறிக.


         இனி மணிவாசகனார் காலத்திற்கு முன்பு பலகோயில்கள் இருந்தன வென்பதையும் அவைகளில் சிலவற்றில் செங்கண் சோழனார் செய்வித்த பணிகளையும் இங்குக் கூறுவாம்.


         திருமங்கை மன்னன் தாம் பாடியருளிய திருநறையூர் பதி கத்தில்,


                   "இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ னீசற்கு 
                    எழில்மாட மெழுபதுசெய் துலகாண்ட 
                    திருக்குளத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்" 
என்று சோழன் செங்கணான் பணிவித்த கோயில்கள் எழுப தென்றுத் கொகை கூறியதுள்ளது காண்க. இப்பதிகத்தில் மற்றைப் பாசுரங்களில் சோழன் செங்கணானையே புகழ்ந்து பாடியுள்ளராதலால் இங்கும் அச்சோழனையே குறிந்தாரென்க, இச்சோழனார் பலதளிகள் பணிவித்தாரென்று நாயனார்களாலும் புகழப்பட்டுள்ளார். திருமருகல் மாடக்கோயில் பதிகத்தில்,
              "வையம் மகிழ்தர வைகல் மேற்றிசை 
               செய்யவ ளவன்முன் செய்த கோயிலே”
        என்றும், திருவம்பர்ப் பெருங்கோயிற் பதிகத்தில்,
              ”அருசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் 
               குருசில் செங்கண்ண வன்கோயில் சேர்வீரே"


என்றும் திருஞானசம்பந்தராலும், நன்னிலத்துப் பெருங்கோயிற் பதிகத்தில்
"திரைபொரு பொன்னிநன்னீர்த் துறைவன்றிகழ் செம்பியர் 
 தரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தனனே” [கோன் 
“கோடுயர் வெங்களிற்றுத் திகழ்கோச் செங்கணான்
 நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தனனே" 
என்றும் சுந்தரமூர்த்தி நாயனாராலும் செங்கணான் பணியைப் பாராட்டப் பட்டுள்ளது காண்க.


           இக் கோச்செங்கணான் செய்வித்த கோயில்கள் மாடம் கோயில் என்றும், பெருங்கோயில்கள் என்றும் பெயர் பெற்ற விளங்கினபோலும். முன்பாசுரங்களிலும் இப்பெயர்வத்துள்ளது நோக்கியோர்க.
l
            திருநாவுக்கரையரும், பொதுத்தாண்டகத்தில், “பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்பெருங் கோயில் எழுபதினே டேட்டும்” என்று அருளியுள்ளதும் செங்  கண் சோழனார் செய்வித்த கோயில்களை யேகுறிக்குமென்னலாம். நாவுக்கரையர் 78 கூறியுள்ளதைக் குறிக்க.


           இவ்வகை ஆழ்வார் வாக்கு நாயனார் பதிகங்களால் சான்றுறுவதையறிக. இதனால் சோழனார்காலத்து 70, 78 கோயில்களேயன்றிப் பலகோயில் இருந்தனவெனப் பெறப்படும். பதிகங்கள் பெற்ற தலங்கள் சிலவேயென்க. இதனை போராது திருமறைமலையடிகள் மணிவாசகனார்காலத்து 54 ஆலயங்களே இருந்தனவென்பது பொருந்தாது. அன்றியும் ஆலயமில்லா ஊர்பாழ் என்னும் பழமொழியை இங்குஞாபகமூட்டுவேன். எண்ணிறந்த தலங்களில் மணிவாசகனார்  வழிபாடு கொண்ட தலங்கள் சிலவேயென்பது பொருந்துமாறறிக,.


           திரு. மறைமலையடிகள் திருப்பெருந்துறையில் மணிவாசகனார் காலத்தில் கோயில் இல்லையென்னும் கூற்றை யாராய்வாம். இவ்வாராய்ச்சியாளர் நூல்களின் காலத்தையாராய முயலாது  நம்பிகள் புராணம் சேக்கிழாருக்கும் முற்பட்டதென்றார். நம்பிகள் ஆலயம் ஒன்று திருப்பெருந்துறையில் இருப்பதாகக் கூறியுள்ளார். பரஞ்சோதியார் கோயிற்றிருப்பணிக்கும் அடிகள் தாம் எடுத்துக் கொண்டுபோன பொருளை செலவழித்தாரென்று கூறுவர். திருவிளையாடற் புராணத்தார் காலத்தும் திருப்பெருந்துறையில் கோயிலிருக்கவில்லையென்று கூறுவதற்கு அக்கோயிலில் இப்போது விஜயநகரவாசகர்கள் சாசனமே கிடைப்பதைக் கூறி 15, 16ம் நூற்றண்டின் முன்னர் அமைக்கப்பட்ட கோயிலென்றும் பொருள்படும்படிக் கூறிச்செல்வர். கோயில்களைப் புதுக்குவார் பலரும் பழைய சாசனச் சான்றுகளை மீண்டும் பொறித்து வைக்கும் வழக்கை ஆளவில்லை யென்பதற்கு பல திருட்டாந்தங்கள் உளவென்பதை இவ்வாராய்ச்சியாளர் கருதவில்லை. இவ்வகையில் பெருந்துறைப் பழங்கோயில் விஜயநகரச் சக்கரவர்த்திகள் காலத்திற்குமுன்பு புதுக்கப்பட்ட தென்னலாம். கடவுண்மாமுனிவர் புராணம் மிகப் பிற்காலத்ததென்று இவ்வடிகளே பலவிடத்தும் ஒதுக்கித்  தள்ளுபவர். இந்நூலில் தமது கருத்துக்கிசைந்ததோர்வழுவானகூற்றைத்தழவி,பழைய நூல்களைப் புறக்கணித்ததன் பயனாக, ஆதரவுபெறாது வழுக்குண்டாராவர். இவற்றான் இவ்வாராய்ச்சியாளர் தமதுமதத்தை நாட்டப் புகுந்தாரேயன்றி உண்மை யறிய முயன்றாரில்லை  யென்பது தெளிவாம். மணிவாசகனார்க்கு இறைவன் காட்சி கொடுத்தது ஒர் சோலையிலென்று கடவுண் மாமுனிவர் கூறியதைக் கடைப்பிடித்து இவ்வாராய்ச்சியாளர் அவர் கருத்தே உண்மை யென்றும் சாதிப் புகுந்தபோது, 


           “செந்த ழல்புரை  திருகோரியங்காட்டி 
           திருப்பெருந்துறை யுறை கோயிலுங்காட்டி" 


என்னும் திருப்பள்ளி யெழுச்சி அடிகள் திரு. மறைமலையடிகள் நினைவிற்கு வரவில்லை போலும்.


               அன்றியும் ஆகமங்கள் கோயில் வழிபாட்டிற்கே யெழுச் தன் வென்று கூறுவாருளர். அடிபார்கள் ஆகமங்களேயே சிறக் தனவாகக் கருதுகின் தவசாய், கோயில்கொண்டருளியுள்ள பெரு மானின் சிலையுருவங்களே வணங்கிப் பதிகங்கள்பாடி வந்தன ரென்பது நன்கறிக்க தொன்மும், கோயிலில்லாத் தலங்களுக்கு அடியார்கள் பதிகம் பாடினரென்று யாண்டும் கண்டது மிலம்
கேட்டதுமிலம், கிரு மறைமலையடிகள் கூற்றுப் புதுமை யாத் ஒதான் றும் இவ்வாறு இவ்வடிகள் கூறும் புதுமைக்ளில் கட்டளைக் வித்துறை பாவினங்களில் ஆதித் தோற்றத்தையுடையதென்
தும் மற்று ஒன்ரும்.


               தொல்காப்பியர் நாலசையை அடிப்படையாகக் கொண்டு செய்யுளியல் யாத்தனர். நால்வகையசை கொள்ளின் சீர்களின் வாய்பாடு பல்குமாதலின்  மாணவரறிவதற்கு கடினமாயிருக்குந் தன்மையைநோக்கி தொல்காப்பியரோடு ஒத்த காலத்துப் புலவர்கள் செய்யுளியலைச் சுருக்கமாகக் கூறமுயன்று பலவகை யாப்புநூல்கள் யாத்தனர், யாப்புநூல்கள்  பல்கியதுபோல மற்ற வியல்களுக்கு தனிநூல் இயற்றப்படவில்லை யென்று கூறலாம். பல்காயனார், பல்காப்பியனார், பரிமாணனார் காச்சைபாடினியார்
போன்றோர் பதின்மருக்குமேல் யாப்பு நூல்கள் இயற்றினரென்பது 


"தொல்காப் பியப்புலவேர் தோன்றவிரித் துரைத்தார்  
 பல்காய னார்பகுத்துப் பளனினார் -நல்யாப்புக் 
கற்குர் மதிக்குங் கலைகாக்கை பாடினியார் 
சொற்ருர்தந்  நூலுட் டொகுத்து' 


          என்னும் யாப்பருங்கல மேற்கோள்வெண்பாவாய் அறியலாகும். இப்புலவோர் அசை இரண்டாகவே கொண்டு யாப்பியலை யாவரும் எளிதிலுணருமாறு ஒவ்வோர் நூலை  யாத்தனர். இவ்வாசிரியர்கள் பாவினமுங்  கொண்டார். தொல்காப்பியர் அடிகளுக்கு எழுத்து அளவை கொண்டார். இவ்வாசிரியரிற் பெரும்பாலார் எழுத்துக் கணக்களவு வேண்டினாரலர். இந்நூல்கள் தோன்றிய பின்னர் தொல்கப்பியர் செய்யுளியல் கரந்துறையுந் தன்மை பெற்றதாகும். பாவினங்களே நிலைபெற்றன.  பாவினங்கள் தாழிசை, துறை, விருத்தமென்னும் பாகுபாடு தொன்மை  வாய்ந்தது.
“நாலசைச் சீரும் ஓரோவிடத் தியலும் 
பாவொடு பாவினம் பயிற லின்றி"   என்பது
நற்றத்தனார் சூத்திரமென்ப. இதில் பாவினம் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. இப்புலவர் சங்ககாலப் புலவராவர். இவரோடொத்த காலத்தவரென்று கருதப்படும் தாக்கைபாடினியார்,
 "விருத்தந்  துறையொடு தாழிசை யென்றா  
வினச்செய்யு ளெல்லா வடியினு நடக்கும்" 
என்று தாழிசை, துறை, விருத்தம் என்றும் பாவினங்களின் வகை கூறியுள்ளதுமறிக. இப்பாவினங்களின் வகையில் எது முன் தோன்றியதென இதுபோது கூறுவதற்கு சான்றகப்படாதாயினும் கலித்துறையின்பாற்படும் கட்டளைக் கவித்துறையே முதன் முதல் 2ம் நூற்றண்டில் தோன்றிற்றென்று திரு. மறைமலையடிகள் கூறுவர். கமது கூற்றுக்குச் சான்றில்லையாதலின் பாவினங்களின் வரலாற்றைத் தமக்கு ஆதரவாகக் கூறத் தொடங்கினர். இவ்வாராய்ச்சியாளர் கூறும் வரலாறு தலை தடுமாற்றத்தையுடைய தென்பதைக் காட்டுவாம். 


முன் காட்டிய காக்கைபாடினியார் சூத்திரத்தால்  கலிப் பாவினங்களில் கலித்துறை ஒன்றாகும். இப்பெயர் ஐந்து சீரான் ஆக்கப்பட்ட அடியைக் குறிக்கும். இவ்வடிக்கு,
"ஐஞ்சீர் முடிவி னடித்தொகை நான்மையொடு
எஞ்சா மொழிந்தன வெல்லாங் கலித்துறை" 
என்னும் காக்கைபாடினியார்  சூத்திரத்தில் எழுத்துக் கணக்கு கூறப்படாமையறிக. 10ம் நூற்றாண்டில் தோன்றின யாப்பரு கலத்தினும் 
“கெடில நான்காய் திகழ்வது கவித்துறை" 
என்று ஐஞ்சீருடை படியே கலித்துறையென்று கூறியிருக்கல் காண்க. 


இந்நூல் 10ம் நூற்றாண்டின் முதலில் தோன்றியதாகும். இக்காலத்தில் ஒருவகை கலித்துறைக்குக் காரிகையென்னும் பெயர் நிலவிற்றுபோலும். இந்நூலைப் பின்பற்றி செய்யப்பட்ட யாப்பருங்கலக் காரிகை என்னும் நூல் எழுத்தளவையுடைய கலித்துறையடியால் யாக்கப்பட்டுளது. இவ்வெழுத்தளவை யுடைய கலித்துறை 11ம் நூற்றாண்டில் கட்டளைக் கலித்துறை யென்றும் விருத்தமென்றும் கூறப்பட்டது. இதனைக் குறித்து
யாப்பருங்கல விருத்திகாரரும் இக்காலத்தார் சில கலித்துறைகளை   விருத்தமென்றும் கட்டளைக் கலித்துறையென்றுங்கூறுவர் என்றார். இக்காலத்தில் தொகுக்கப்பட்ட திருமுறைகளில் சில பதிகங்களுக்கு திருவிருத்தமென்றும், வைணவப் பிரபந்தமான நம்மாழ்வார் பதிகங்களில் சிலவற்றுக்கு திருவிருத்தமென்றும் பெயர் கொடுத்துக் கூறியுள்ளதை யறிக. நம்பியாண்டார் நம்பிகள் தாமியற்றிய நூலுக்கும் கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் என்னும் நாமம் சூட்டியுள்ளதையுங் காண்க. கட்டளைக் கலித்துறையென்னும் பெயர் பெருவழக்காக இக்காலத்தில் வழங்காததறிக. யாப்பருங்கல விருத்திகாரரும் உரைச் சூத்திரங்கள் பலவிடத்தும் கூறிச் செல்லும் திறம் வாய்ந்தவர் கட்டளைக் கலித்துறைக்குச் சூத்திர முரையாத தாலும் இப்பெயர் பெருவழக்குப் பெறவில்லையென்பது பெறு *,  இவ்வாசிரியர் 11ம் நூற்றாண்டினிடைக் காலத்திலிருந்தவராவர்.  12ம் நூற்றாண்டிலிருந்தவராகக் கருதப்படும் யாப்பருங் கலக் காரிகை ஆசிரியர் தமது உரையிலே கட்டளைக் கலித் துறைக்குச் சூத்திரம் உரைத்தார்போலும், இதுகாறும் கூறிய வாற்றால் கட்டளைக் கலித்துறை என்னும் நாமம் நிலவியது 12ம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகாது. இது 10ம் நூற்றண் டில் காரிகையென்னும் பெயராலும், 11ம் நூற்முண்டில் விருக்கம் என்னும் பெயராலும் விளங்கியது. எழுக்தெண்னும் அளவை புடைய கவித்துறை 10ம் நூற்றுண்டிற்கு முற்பட்டதாகாது. எழுத்தெண்னும் வழக்கு கொல்காப்பியர் காலத்தே விழ்க்க வழக்கயிற்று. பின்னர் 10ம் நூற்றுண்டு முதல் ஒருசார் கலித்துறைக்கு எழுத்துக் கணக்கு சில ஆசிரியர் வேண்டினுர், இவ்வழக்கு கிலைபெறுவதற்கு இருநற்குண்டு சென்றது. இதன் பின்னர் ஒருசார் எண்சீர் ஆசிரிய விருத்தமும் எழுத்தளவை பெற்று கட்டளைக் கலிப்பா என்னும் காமம் பெற்றது. கட் டளேக் கலித்துறை பிற்காலித்ததென்று சிலவாராய்ச்சியாளர் கூறி மணிவாசகனுர் நூலும் பிற்காலத்திகென்று கூறுவதை மறுப்பதற்கு மறைமலையடிகள் அச்சத்தில் தோன்றியதை ஆகியில் தோன்றினதென்று கூறப்புகுந்த்து ஒர் வியப்பைக் தருகின்றது.


இவ்வாராய்ச்சியாளர் திருமுறை தொகுக்கப்பட்ட வரலாற் தையும் கவனிக்கவில்லை  போலும். திருமுறை கண்ட புராணகாரர் ஆராய்ச்சியறிவு வாய்ந்தவரன்றென்று இவ்வடிகள் கூறியிருப்பது பொருத்தமாகும். இவ்வுரைக்குக் கார்மண்டலசதகம்  துணை  புரிவதைக் கூறுவாம். 


“தலைச்சங்கணிந்த தடக்கைப் பெரும்புயல், தண்டமிழ்சூர்த் தொலைச்சிக்குடுமிப் படைகொள் பரமன் சுருதிமறை  
மிலைச்சிப் புகழ்பெற்ற நாதமுனிநம்பி வேந்திருவர் 
மலைச்சிக்க பூபதிவாழ்க்கையர் காராளர் மண்டலமே” 


என்று கார்மண்டலசதகத்தார், திருமுறைநம்பியாண்டாராலும், திவ்விய பிரபந்தம் நாதமுனிகளாலும் சிக்கபூபதி வேண்டுகோளுக்கிணங்கித் தொகுக்கப்பட்டதென்னும் பொருள்படும்படி கூறியுள்ளார். இச்சதகத்தர் 11ம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்தவராவர். திருப்பதிகங்கள் தொகுக்கப்பட்ட வரலாற்றின் உண்மை இதுவேயாகும். திருமுறைகண்ட  புராணத்தார் 13, 14-ம் நூற்றாண்டில் இருந்தவராவர். அவர் கூறிய வரலாறு கற்பனையேயாகும்.


நம்பியாண்டார் நம்பிகள் திருமுறையில் மூவரின் பதிகங்களையே தொகுத்தாராவர். எட்டாந் திருமுறையில் கண்ட கங்கைகொண்ட சோளேச்சுரம் ராஜேந்திரன் வடதேசம்வென்ற வெற்றிக் கறிகுறியாக 11ம் நூற்றாண்டினிடையில் கட்டப்பட்டதாகும். அக்காலத்திற்கு முன்பே நம்பியானாடார்  இறைவனடி 
கீழலடைந்தாராவர். எனவே 8 முதல் 12 திருமுறைகள் 12ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டனவாகும் என்பது தெளிவாம். எழுத்தெண்ணும் அளவைப்பெற்ற கலித்துறைக்கு இக்காலத்தில் கட்டளைக் கலித்துறையென்ற பெயரே நிலைபெற்றதால் அப்பெயரை திருவாசகத்தின் சில பதிகங்களுக்குச் சூட்டினாரென் றல்வேண்டும் . கட்டளைக் கலித்துறை என்னும் பெயர் திருவாசகத்தில் காணப்படுவது திருவாசகம் தொகுக்கப்பட்ட் காலத்தை குறிக்குமேயன்றி  மணிவாசகனார்  காலத்தைச்சுட்டிக் காட்டாதெனத் தெளிக.


இனித் திருவாசகத்திலும் திருக்கோவையாரிலும் பயிலப்பட்டுள்ள சொற்களின் தன்மையறிய முயலுவாம்.

Thenee MK

unread,
Nov 28, 2016, 9:34:01 AM11/28/16
to mint...@googlegroups.com
//திருமுறைகண்ட  புராணத்தார் 13, 14-ம் நூற்றாண்டில் இருந்தவராவர். அவர் கூறிய வரலாறு கற்பனையேயாகும்.//


கல்லாட நூலாராய்ச்சி - 3ல் இக்கட்டுரையாளர் திருமுறை கண்ட புராணத்தவரின் கூற்று "கற்பனை"யேயாகும் என்று கூறியது சிந்தித்து ஆராயப்பட வேண்டிய பொருளாகும். 

கமலநாதன் 

--

தேமொழி

unread,
Dec 6, 2016, 1:41:53 PM12/6/16
to மின்தமிழ், mint...@googlegroups.com, ksuba...@gmail.com, jsthe...@gmail.com, pksiv...@gmail.com, meenu...@gmail.com, devanya_m...@freenet.de, alban...@gmail.com
தமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரை மின்னாக்கக் குழுவின் தொடர் முயற்சியில் ஆய்வுக் கட்டுரைகள் தட்டச்சு செய்யப்பட்டு மின்னாக்கம் செய்யப்படுகின்றன.    அந்த வகையில் தமிழ்ப்பொழிலில் வெளியிடப்பட்ட: 
கல்லாட ஆராய்ச்சி - 4  (துணர் 12. மலர் 12. பக்கம் 441-446)  
என்ற கல்லாட நூலாராய்ச்சி கட்டுரையின் நான்காம்  பாகம் இன்று வெளியிடப்படுகின்றது. 
இதனைத்  தட்டச்சு செய்து வழங்கிய நண்பர் செல்வி டிவன்யா மகாலிங்கம்  (இங்கிலாந்து) அவர்களுக்கு நமது நன்றி.

- தேமொழி 


கல்லாட நூலாராய்ச்சி - 4
திருவாளர். E. R. நாசிம்மஐயங்கார் அவர்கள் B.A., B.L., சேலம்.
(முற்றொடர்ச்சி துணர் 12, மலர் 11, பக்கம் 402) 


அரிகேசரி என்னும் பெயர் போற்றித் திருவகவலில் “கலையால் அரிகேசரியாய் போற்றி” என்ற அடியில் வந்துளது. உரையாசிரியர் அரிகேசரி யூரிலமர்ந்தவனே என்று பொருளுரைத்திருப்பது பொருத்தமானதே. மன்னர்களின் பெயரால் ஊர், நாடு, கோயில், தெய்வம் முதலிய வழங்கப்படும் வழக்கை சாசனங்களாலறியலாம். பாண்டியன் நெடுமாறன் என்னும் கூன் பாண்டியன் அரிகேசரி என்னும் பட்டம் வகித்தான் என்பதை முன் கூறினாம். பாண்டியக்கோவையில் இப்பட்டம் கூறப்பட்டுளது. இப்பாண்டியன் 7ம் நூற்றாண்டிறுதியிலிருந்தவனாவன். எனவே இம்மன்னன் பெயரிடப்பட்ட ஊரை மணிவாசகனார் கூறியுள்ளாராதலின் அடிகள் 7ம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராகார் என்பது ஒருதலை.
மலைநாடெனப்படுவது மேற்கடலை யடுத்துள்ள நாடாகும். சங்ககாலம் முதல் இப்பகுதி சேரநாடென்றே வழங்கி வந்தது. சங்க விலக்கியம் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களினும் சேரநாடென்றே வழங்கப்பட்டுளது. மலையமானாடு என்று ஒரு பெயர் நடுநாட்டிற்குச் சங்க காலத்தில் வழங்கப்பட்ட பெயரை சங்க விலக்கியங்களில் காணலாம். தேவாரங்களிலும் மலைநாடெனும் பெயர் காணவரிதாகும் கி. பி. 7, 8-ம் நூற் றாண்டுவரையில் சேரநாட்டிற்கு இப்பெயர் பயிலப்படவில்லை எனலாம். பிற்காலத்திலக்கியங்களில் சேக்கிழார்புராணத்தும், கார்மண்டலசதகத்திலும், கம்ப இராமாயாணத்திலும் காணப்படும். எனவே இப்பெயர் 8-ம் நூற்றாண்டிற்குப் பின்னரும், 10, 11-ம் நூற்றாண்டிற்கு முன்னரும் சேரநாட்டைக் குறிப்ப தற்கெழுந்ததென்னலாம். மணிவாசகனாரும் 8-ம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராகார் எனக்கொள்ள வேண்டியிருத்தல் காண்க.
கல்லால் மதில் ஆக்கப்படும் வழக்கு தேவார காலத்தில் தோன்றிய தென்னலாம். பல்லவ அரசர்கள் முதன்முதல் கற்பாறைகளைக் குடைந்து கோயில்கட்டினாரென்று பல்லவ சரித்திரத்தாலறியலாம். இதன் பின்னர் கல்லின்மேல் கல்பொருத்திக்கட்டும் புதுமையைக் கண்டு பிடித்தாரென்னலாம். அல்லது வடதேசத்தாரிடம் கற்றனர் எனலாம். இவ்வழக்கு தென்னாட்டில் 6-ம் நூற்றாண்டில் பரவவில்லையென்பதற்கு
“சுடுமண் நெடுமதில் சுற்றிப் பிரியார்
கடுமுரண் எஃகங் கழிய”
என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுள் சான்றாகும் புறப்பொருண் வெண்பாமாலை 6-ம் நூற்றாண்டினதென அறிஞர் கூறுவர். மறைமலையடிகளும் இக்கருத்துடையவர் எனவே 6ம் நூற்றாண்டில் மதில்கள் சுடுமண்ணால் (செங்கல்) கட்டபட்டுவந்த தென்பது தெளிவாம். கல்லால் மதில் கட்டப்பட்ட புதுமையை “கல்லார்மதில் சூழ்ந்த காழிநகரே” (பண்முறை 81: 1) என்று திருஞானசம்பந்தரும், கல்லாருமதிள் சூழ்ந்த தண் கருவிலி (பண. 183: 8) என்று நாவுக்கரையரும் யருளியுள்ளார். 7, 8-ம் நூற்றாண்டில் இப்புதிய வழக்குப் பரவத் தொடங்கியது போலும். திருவாசகம் 310ம் செய்யுளில் “கல்பாமதிற் றில்லைச் சிற்றம் பலம்” என்று அடிகள் கல்லால் மதில் செய்விக்கப்பட்டிருப்பதைக் குறித்துள்ளதைக் காண்க. இவ்வகைச் சான்றானும் மணிவாசகனார் 7, 8ம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராகாரென்க.
தமிழ் எழுத்துக்களின் வரலாறும் மணிவாசகனார் காலத்தை யுணர்த்துவதைக் கூறுவாம்.
அகர வடிவெழுத்திலிருந்து பிறவடிவெழுத்துக்கள் பிறந்தனவென்று காலஞ்சென்ற மாணிக்கநாயக்கர் ஒர் கொள்கையை நாட்டினர். இவ்வறிஞர் அகரவெழுத்தை பலதிறப்பட எழுதி அதனைச் சிதைத்து, சிதைந்த உறுப்புக்களை யமைத்து மற்றை எழுத்துக்கள் பெறப்படுவதை காட்டினரென்று கேள்வியா னுணரலாகும். இப்புதுமையைப் பின்பற்றி பல்வேறுரை பகரு வாருளர். நாயக்கர் அவர்களின் திறம் வியக்கற்பாலது. இஃது அவர் அறிவின் கூர்மையை விளக்குமென்பதற்கையமில்லை. இது தமிழ்மொழி யாராய்ச்சிக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் எத்துணையும் பயன்படாதாயினும் அகரவொலியே மற்றை யெழுக்தொலிகளுக்குப் பிறப்பிடமாகுமென்னும் தத்துவக் கொள்கையை சித்திரத்திலமைத்துக் காட்டப்படும் ஓர் விசித்திரமாகும் என்னலாம். நாயக்கரவர்கள் தத்துவக் கொள்கையைக் கூறவில்லைபோலும். அவர் ஒலியைக் குறிக்கும் தத்துவக் கொள்கையில் வடிவைப் புகுத்துக் கூறியிருப்பராயின் அது வழுவுடையதென்க. அன்றியும் அவர் கருத்து எழுத்துக்களின் வரலாற்றொடும் முரண்படும்.
எழுத்துக்கள் ஆதியில் வட்ட வடிவத்தையுடையதாயிருந்த காரணத்தான் வட்டெழுத்து என்னும் பெயர் பெற்றன. இவ் வட்டெழுத்துக்களால் வடமொழி பயிலுவதற்கு சில குறைபாடிருந்தமையால் பல்லவ மன்னர்கள் காலத்து ஒர் புதிய வடிவுடைய எழுத்துக்கள் உண்டாக்கப்பட்டன. இவ்வெழுத்துக்கள் கிரந்த எழுத்து என்றும், பல்லவ மன்னர் காலத்து இயற்றப் பட்டதால் பல்லவ கிரந்தமென்றும் வழங்கத் தொடங்கின. இவ்வெழுத்துக்கள் தமிழ் நாட்டிலும் 8ம் நூற்றாண்டில் வழங்கப் பட்டனவென்பதற்கு வேள்விக்குடி சாசனம் ஒர் சான்றாகும். இச்சாசனத்தில் தமிழ்ப்பகுதி வட்டெழுத்திலும் வடமொழிப் பகுதி கிரந்தத்திலும் உள்ளதென எழுத்துப் பரிசோதகர் கூறுவர். கிரந்தத்தில் எண் குறிகளுக்கு உயிர் மெய் எழுத்துக்களே பயிலப்பட்டதென்றும், ஆராய்ச்சியாளர் கூறுவர். 9-ம் நூற்றாண்டில் தமிழும் கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட தென்பர். ஆயினும் பாண்டி நாட்டில் 12-ம் நூற்றாண்டுவரையில் வட்டெழுத்துக்களே பயிலப்பட்டு வந்தன. சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் 10, 11-ம் நூற்றாண்டில் வட்டெழுத்தால் எழுதும் வழக்கொழிந்தனவென்று சாசனங்களால் அறியலாகும். இதுபோது வழங்கும் தமிழ் எண் குறிகள் முன் காலக்தில் வழங்கப்பட்ட கிரந்த எழுத்துக்களாகும்.
மணிவாசகனார் கிரந்த எழுத்துக்கள் பரவினகாலத்து இருந்தவராவர் என்பது
“பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டோடு இரண்டு மறியே னையே”
என்னும் அடிகளால் உணரலாகும். இங்கு எட்டு என்பது அகர எழுத்தால் குறிக்கப்படும், இரண்டு என்பது உகரத்தால் குறிக்கப்படும். மணிவாசகனார் ஓர் உத்திபடவும் அ, உ அறியாத அறிவிலி என்னும் பழமொழியையும், அகர உகரத்தால் உணர்த்தப்படும் தத்துவக் கொள்கையையும் உணர்த்த எட்டொடிரண்டு என்னும் ஓர் அழகுபடவருளிச் செய்தார். எனவே அகர, உகரங்களால் எண் குறிக்கும் வழக்கு கிரந்த வழக்கிற்கே உரிய தாகும். மணிவாசகனாரும் கிரந்த எழுத்துக்கள் தென்னாட்டில் பரவிய காலத்திருந்தவராவர். கிரந்த எழுத்துக்கள் தொண்டை நாட்டில் 7, 8ம் நூற்றாண்டில் ஆக்கப்பட்டனவாகும். இவ்வகை யானும் மணிவாசகனார் 8-ம் நூற்றாண்டிற்கு முற்பட்டவராகாரெனலாம்.
இனி மணிவாசகனார் காலம் சில இலக்கணக் குறிப்புக்களாலும் அறியலாகுமென்பதைக் காட்டுவாம்.
நான், நீர், நீங்கள் என்னும் தன்மைப் பெயர்களும், உம், உன், என்னும் முன்னிலைப் பகுதிகளும், உங்கள் என்னும் முன்னிலைப் பெயரும், புதியன புகுதலில் அடங்கும். இப்பெயர்களும் பகுதிகளும் சங்க காலத்தில் பயிலப்படவில்லை. இவை சிலப் பதிகாரத்தில் அருகிக் காணப்படும். பெருவழக்கன்று. இவை தேவாரங்களில் பெருவழக்கினவாய் பயிலப்பட்டுள்ளன. திருவாசகத்தினும் இவை பெருவழக்கினவாய்க் காணப்படும்.
தன்மை யொருமை வினை முற்று சங்ககாலத்திலும் பின்னரும் அல் ஈற்றால் உணர்த்தப் பட்டது. அல் ஈறு அன்னாசுப் பெறுமே என்பது அவிநயச்சூத்திரம். அன்ஈறு திருக்குறளில் ஒன்றிரண்டிடத்து காணப்படும்; தேவார காலங்களில் அல்லீறொழிந்ததென்னலாம். திருவாசகத்தினும் அவ்வாறே. தன்மைப் பன்மையில் ஒம் ஈறு புதியதாகும். இது தேவார காலத்தில் பெருவழக்காயிற்று. “நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்” என்னும் அடி நாவுக்கரையர் பாசுரத்திலும் திருவாசகத்திலும் காணப்படும். சங்ககாலத்தினும் சிலப்பதிக்கார காலத்தினும் இவ்வழக்கு இன்றென்க. இங்கு ஆர்க்கும் என்பது யார்க்கும் என்பதன் திரிபாகும்; இவ்வழக்கும் பிற்காலத்ததே. 
சங்ககாலத்தில் தன்மை வினைகளே பிறவினைப் பொருளும் உணர்த்தின. தேவாரகாலம்முதல் பிறவினைகளை உணர்த்த வி, பி விகுதிகள் பயிலத் தொடங்கின. இவ்வழக்கு திருவாசகத்தினும்,
“சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பை” என்றும் 
“விரிப்பிப்பன் என்னை விடுதிகண்டாய்” என்றும் வந்துள்ள அடிகளில் 
காண்க. இங்கு, விடுதிகண்டாய் என்றது பிற்கால வழக்குக் கொத்தது.
சங்ககாலத்தில் செய்யும் என்னும் முற்றே எதிர் காலத்தையும் நிகழ்காலத்தையும் உணர்த்திற்று; பிற்காலத்தார் தெரித்துக் கூறல் வேண்டி கிறு கின்று, ஆநின்று என்னும் இடை நிலைகளை வழங்கத் தொடங்கினர். இவைகளில் சில தனிவினை முற்றுக்களாக, கிற்பனே, கிற்றியே என்றும் வழங்கத் தொடங்கின. இவ்வழக்குகள் தேவாரங்களினும் திருவாசகத்திலும் காணப்படும்.
புரை என்று உயர்வைக் குறிக்கும் பதம் பிற்காலத்து இழிவைக் குறிப்பதுபோல், எய்த்தல் என்பதும் இளைத்தல் என்னும் பொருளில்,
“எய்ப்பிடத் திலுன்னை சிக்கெனப் பிடித்தேன்”
“எய்ப்ப்பினில் வைப்பு” என்றும்
“ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து” என்றும் வந்துள்ளனவற்றைக் காண்க. “வையெற்று எய்யாமகளிர்” என்பது பரிபாடல் 9: 33ல் யெய்யா என்பது அறியாமை என்று வந்துளது காண்க.
வடமொழிப் புணர்ச்சிகளை மணிவாசகனார் தமிழில் புகுத்தினார் என்னலாம். வடமொழியில் பயிலும் தீர்க்கசந்தி, குண சந்தி முதலிய பதங்களை திருவாசகத்தில் பயிலப்பட்டிருப்பது போல் தேவாரங்களிலும் காண்பதரிது. “கதியது பரமா அதிசயமாக” எனவும் “பரானுபவங்கள்” “இவானுபவங்கள்” “உத்தோன்மத்தன்” “மத்தோன் மத்தன்” என்பன திருவாசகத்தில் வந்துள்ளவையாகும். திரு. மறைமலையடிகள் வட மொழிச் சொற்களை மணிவாசகனார் பயின்றதன் காரணம் புறச் சமயத்தோரை வெல்வதற்கு என்று கூறியுள்ளார். ஒவ்வொரு புலவர் காலத்து வழக்கை அப் புலவர் நூல்கள் காட்டும் என்பதே ஆராய்ச்சிக்குப் பொருந்தியதாகும். திரு மறைமலையடிகள் கூறியுள்ள காரணம் போலிக்காரணமாகத் தோன்றும். முன் கூறிய தொடர்களால் எவ்வாறு மணிவாசகனார் வெற்றியுற நினைந்தாரென்பது எம்போலிய சிற்றறிவினோர்க்குப் புலப்படவில்லை.
இது காறுங் கூறியவாற்றால் திருவிளையாடல்கள் காலந் தோறும் தோன்றின வென்பதும், தேவாரம் பாடிய நாயனார் காலங்களுக்குப் பிற்பட்ட காலங்களில் நிகழ்ந்த சில திருவிளையாடல்களும் உளவென்பதும், இவைகளனைத்தும் வடமொழி நூல்களில் முதன் முதல் தொகுக்கப் பட்டனவென்பதும் வடமொழி நூல் 11ம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகாதென்பதும், கல்லாடம் வடமொழி நூலுக்குப் பிற்பட்ட தென்பதும் கூறினாம். கல்லாடநூலின் காலமும் 11ம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகா தென்பது தெளிவாம். இந்நூல் 6ம் நூற்றாண்டின தென்பது பொருந்தாது. மணிவாசகனார் காலமும் 9ம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகா தெனவும் பெறப்படும்.

______________________________________________________________________

Thenee MK

unread,
Dec 6, 2016, 9:21:50 PM12/6/16
to mint...@googlegroups.com
மேற்கூறிய தொடர் கட்டுரைப் பதிவுக்கு நன்றி தேமொழி.

தற்கால சைவ சமய அறிஞரும் மணிவாசகனார் காலம் 9-ம் நூற்றாண்டுப் பிற்பகுதி என்றே ஒரு மனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இக்கட்டுரையாளர் கூறிய "வடமொழிப் புணர்ச்சிகளை மணிவாசகனார் தமிழில் புகுத்தினார் என்னலாம். வடமொழியில் பயிலும் தீர்க்கசந்தி, குண சந்தி முதலிய பதங்களை திருவாசகத்தில் பயிலப்பட்டிருப்பது போல் தேவாரங்களிலும் காண்பதரிது.“ எனும் கூற்று ஆராயத்தக்கது.

9-ம் நூற்றாண்டு வாக்கில் வடமொழி கலப்பு தமிழில் அதிகமாக வந்து விட்டதை இது காட்டுகின்றது. இது வைதிக பண்பாடும் வடமொழியும் அக்காலத்தில் மிகுதியாக தென்னகத்தில் பரவத் தொடங்கியதைக் காட்டுகின்றது.  

அது மட்டுமல்லாமல் தமிழ் வட்டெழுத்துக்களுக்குப் பின் பல்லவ கிரந்த எழுத்துக்கள் மூவேந்தர் நாட்டில் 10-ம் நூற்றாண்டு முதல் பரவியது என்பதால் இன்றைய பல்லவ கிரந்த எழுத்துக்கள் கொண்ட சைவ ஆகமங்கள் 10-ம் நூற்றாண்டுக்குப் பிறகே ஓலைச் சுவடிகளில் படியெடுத்திருக்க வேண்டும்.

ஆகமங்கள் இன்று பல்லவ கிரந்த எழுத்துக்களில் இருப்பது, தமிழை வட்டெழுத்தில் எழுதும் வழக்கம் ஒழிந்து பல்லவ கிரந்த எழுத்துக்கள் கொண்டு எழுதும் வழக்கம் ஏற்பட்டதால் வந்த வினை போலும் 

அன்புடன் கமலநாதன்


      

--
Reply all
Reply to author
Forward
0 new messages