மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மலி திரை ஊர்ந்து (தட்டோன்)

6 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 28, 2017, 12:21:58 PM5/28/17
to mintamil, Tharakai Editor, vallamai editor, Kalai Email, thiruppuvanam, senthamizh pavai, Au1 Udayaganesan, Au1 Chidambaram Puranam Book Correction, Au Sankara Narayanan

(குறிப்பு - படங்களுடனான கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.)

“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“ .(104).  திரைகடலானது மலிந்து, கரைகடந்து, பண்டைத் தமிழகத்திற்குள் புகுந்துள்ளது.  தமிழகத்தில் உள்ள குன்றுகளில் எல்லாம் கடல் வௌவிய மண்திட்டுக்கள் கிடப்பதைக் காணமுடிகிறது. 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை முழுவதும் கிரானைட் பாறைகளால் ஆனது.  ஆனால் இந்தக் குன்றின் உச்சியில் மண்திட்டுக்களைக் காணமுடிகிறது.  இதே போன்று தமிழகத்தில் மற்றபிற கிரானைட் குன்றுகளின் உச்சியிலும் இது போன்ற மண் திட்டுக்களைக் காண முடிகிறது. இந்த மண் திட்டுக்கள் சுனாமியால் அடித்து வரப்பட்ட மண்படிமங்களா? இவற்றில் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் ஏதேனும் உள்ளனவா? என அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
மதுரையானது கடற்கரையில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது.  வங்கக்கடல் இவ்வளவு தொலைவு வந்து தாக்கியிருக்குமானால், வங்கக்கடற்கரையில் உள்ள மியான்மார் (பர்மா) தேசத்திலும் இதே சுனாமியின் தாக்கம் இருக்க வேண்டும் அல்லவா?

ஆமாம்.  பர்மாவில் உள்ள கிரானைட் மலைகளிலும் தமிழக கிரானைட் மலைகளில் படிந்துள்ளது போன்ற மண்படிமங்களை அதிக அளவில் காணமுடிகிறது. 

சிவகங்கை மாவட்டம் திருமலையில் எடுக்கப்பட்ட மண்படிமத்தின் படமும், பர்மாவில் தட்டோனில் எடுக்கப்பட்ட மண்படிமத்தின் படமும் மேலே உள்ளன.  இந்த இரண்டு மண் படிமங்களும் ஒன்றுபோலவே உள்ளன. 

மேலும் மதுரைக்கு அருகே மணவூரில் (கீழடியில்) நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி போன்று பர்மா தட்டோன் என்ற ஊரிலும் நடைபெற்றுள்ளது.   தட்டோனிலும் மணவூரில் (கீழடியில்) புதையுண்ட நகரத்தில் உள்ள மண் படிமங்களைப் போன்றே மண்படிமங்கள் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.  இதனால் பர்மாவில் உள்ள தட்டோனும் தமிழகத்தில் உள்ள மணவூரும் (கீழடியும்) ஒரே காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் அழிந்திருக்கும் எனக் கருதமுடிகிறது.

பர்மாவில் யுரோஞ்சி என்ற ஊரில் உள்ள மலைப்பகுதியில் உள்ள மண் திட்டுக்களும், ஆந்திராவில் பெனுகொண்டாவில் உள்ள மலைப்பகுதியில் உள்ள மண் திட்டுக்களும் ஒன்றுபோல் உள்ளதைக் காணமுடிகிறது.

இதனால், பர்மாவில் உள்ள தட்டோன் மற்றும் யுரோஞ்சி ஆகிய ஊர்கள் சுனாமியினால் அழிந்துள்ளன எனக் கண்டறியப்பட்டால், தமிழகத்தில் திருமலை முதற்கொண்டு ஆந்திராவில் உள்ள பெனுகொண்டாவரை சுனாமியினால்தான் அழிந்துள்ளது எனக் கருத வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
(குறிப்பு – இக்கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட வேண்டியன.)

கட்டுரையாளர் –
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,

IMG_20161121_112606_HDR.jpg
IMG_20161118_110252_HDR.jpg
மலிதிரை ஊர்ந்து (தட்டோன்).docx
Reply all
Reply to author
Forward
0 new messages