தமிழ்ப் பொழில் இதழ்களில் வ. உ. சிதம்பரம் பிள்ளை எழுதிய திருக்குறள் கட்டுரைகள்.--பாயிரவியல்கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமைஅறன்வலியுறுத்தல்திருவள்ளுவர் திருக்குறள், பாயிர ஆராய்ச்சி -- வ. உ. சிதம்பரம் பிள்ளைIபாயிர ஆராய்ச்சி, திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல (பக்கம்-233) என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. தமிழ்ப் பொழில் (5/6), பக்கம்: 232-237.IIபாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. 'வழிபடு கடவுள் வாழ்த்து' (நூலாசிரியர் கடவுளை வணங்கி வேண்டுதல்), 'ஏற்புடைக் கடவுள் வாழ்த்து' (நூலை வாசிப்பவர் கடவுளை வணங்குவதற்காக எழுதப்படுவது) என இருவகைப்படும். திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் வள்ளுவரால் எழுதப்பட்டதல்ல . தமிழ்ப் பொழில் (5/9&10), பக்கம்: 329-334.IIIபாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. தொல்காப்பிய இலக்கணத்தைப் பின்பற்றிய வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் காணப்படுவது போன்று மெய்ப்பொருளை உயர்திணை ஆண்பாலாகக் குறிப்பிட வழியில்லை. மெய்ப்பொருளை மனித உருவாக, அது தாள் முதலியவற்றை கொண்டதாகக் காட்டுவதும் பொருந்தவில்லை. சொற்குற்றம், பொருட்குற்றம் கொண்ட இக்குறட்பாக்களை வள்ளுவர் இயற்றினார் என்று கூறுவது, வள்ளுவரைப் புலவரல்லர் என்று கூறுவதற்கு ஒப்பாகும். தமிழ்ப் பொழில் (5/11&12), பக்கம்: 447-455.IVபாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து; வேண்டுதல் வேண்டாமை குணநலன்கள் இல்லாதிருப்பது கடவுளின் இலக்கணமா? அல்லது துறவியின் இலக்கணமா? சொற்குற்றம் பொருட்குற்றம் கொண்ட "வேண்டுதல் வேண்டாமை" குறளை வள்ளுவர் எழுதியிருக்க வழியில்லை. அவ்வாறே, "இருள் சேர் இருவினையும் சேரா", "பொறி வாயில் ஐந்தவித்தான்" ஆகிய குறள்கள் இறைவனைக் குறிக்கவில்லை, துறவியைக் குறிக்கின்றன என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. தமிழ்ப் பொழில் (6/11&12), பக்கம்: 456-462.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இவ்விழையில் கருத்துக்கள் பதிந்த மிந்தமிழ் நண்பரகள் அனைவருக்கும் வணக்கம் .1975-முதுகலை தமிழ் வகுப்பில் நடந்த ஒருகருத்துப்பரிமாற்றம் பற்றி இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .தேம்பாவணி பாடம் எடுக்க ஒரு பாதிரியார் வருவார் .திருவள்ளுவர் மயிலாப்பூரைச் சேர்ந்தவர் .கிறிஸ்து மறைந்தபின் அவரது சீடரகளில் ஒருவர் மயிலாப்பூரில் வந்து கரையேறினார் .திருவள்ளுவர் அவரைச் சந்தித்து இருக்க வேண்டும் .அதனால்தான் திருக்குறள் கிறிஸ்துவம் போற்றும் கருத்துக்களையெல்லாம் தன்னுள் கொண்டிருக்கிறது என்று கூறும் கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்றார் .மேற்கூறிய கருத்தை பெரிதுபடுத்தத் தேவையில்லை .ஆனால் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் தோன்றிய ஒரு சமயத்தைச் சார்ந்தவர்கள் திருக்குறளைத் தம்மோடு இணைக்கத் துடிக்கும்போது நம்நாட்டிலேயே தோன்றிய இருவேறு சமயங்கள் தம்முள் போட்டி போடுவது வியப்பன்று .ஆனாலும் எனக்குள்ள ஐயங்கள் 3.1.திருக்குறள் பாயிரத்தில் மழையைப் போற்றுவதுபோல சைவம் மழையை தெய்வமாகப் போற்றச் சொல்கிறதா /2திருக்குறள் நீத்தாரைப் போற்றுகிறது .சைவம் நீத்தாரை தெய்வமாகப் போற்றச் சொல்கிறதா /3திருக்குறள் அற த்தை வலியுறுத்த்துகிறது .வாழ்வில் எந்தத் தொழிலைச் செய்தாலும் அறம் பிறழக்கூடாது .இது செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் மூலம் .சமணபௌத்தப் பள்ளிகளைத் தான் அறப்பள்ளி என்றும் கூறுவோம் .சைவம் அறத்தை வலியுறுத்துகிறதா /இளங்கோவடிகள் மழையைப் போற்றுகிறார் .அறவாழி உருட்டும் மன்னனைப் போற்றுகிறார் .இதனால் திருவள்ளுவரும் இளங்கோவடிகளும் ஒரே சமயத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லலாம் .கண்மணி
நன்றி தேமொழி.வ.உ.சி அவர்களின் இக்கட்டுரையை நீண்ட நாள்களுக்கு முன்னால் நகல் எடுத்து கொடுத்திருந்தார். தேடுபோதுகண்மறைப்பாகயிருந்தது. தங்கள் இச்சுட்டி சரியான நேரத்தில் கைகொடுத்தது. நனிநன்றி!கட்டுரையை படித்தீர்களா?என்னமாய் தடுமாறுகிறார் பாருங்கள். திருக்குறள் கடவுள் வாழ்த்து எல்லாம் வல்ல இறைவனை குறிக்கவில்லையேஎன்று அவர் மனதிற்கு தெரிந்திருக்கிறது. அதன் வெளிபாடே இக்கட்டுரை.குறளின் முதனுரை தருமருடையது. தற்போது நமக்கு கிடைக்கவில்லை. சில குறளின் உரை மட்டும்கிடைத்திருக்கின்றன. திட்டதட்ட கிடைத்த பழைய உரைகள் எல்லாவற்றிலும் கடவுள் வாழ்த்தை சேர்த்தேஉரை கிடைத்திருக்கிறது. அதனால் சிறப்பு பாயிரம் (கடவுள் வாழ்த்துடன்) இடைசெறுகல் என்றுஒதுக்கி வைக்கமுடியாது.ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமைஇலான், பொறிவாயில் ஐந்தவித்தான் போன்ற விளிகளைமுழுமுதற் இறைவனுக்கு பொருத்தமுடியாது. அதனால்தான், வ.உ,சி அவர்கள் இப்படி தடுமாறியிருக்கிறார்.இரா.பானுகுமார்
அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு
நான் உங்கள் வாசகன் நீங்கள் இன்று எழுதிய கட்டுரை வாசித்தேன் அப்போது என் நண்பர்களுடன் ஒரு சிறிய உரையாடலில் திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் விவாதம் எழுந்தது அதில் ஒரு நண்பர் திருவள்ளுவர் முதலில் எழுதியது கடவுள் வாழ்த்து அல்ல என்று கூறினார் நான் தேடிய வரையில் எந்த தெளிவும் பிறக்கவில்லை தங்கள் இதற்குரிய தெளிவினை தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
அன்புடன்,
பே.ஜதுர்சனன்
அன்புள்ள ஜதுர்சனன் அவர்களுக்கு
இதுவரை கேட்காத பெயர். நீங்கள் ஜைனரா?
நான் பள்ளியில் படிக்கும் காலகட்டத்திலேயே இந்த விவாதம் நடந்து ஓரளவு முடிவுக்கு வந்துவிட்டது. என் வகுப்புகளில் அன்றைய தமிழாசிரியர்கள் இதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்
தமிழ்ப் பதிப்பியக்கமும், சைவமறுமலர்ச்சி இயக்கமும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நூறாண்டுகளுக்கு முன் தொடங்கியவை. அன்று திருக்குறளை ஒரு சைவநூல் என நிறுவும் பல்வேறு உரைகள் எழுந்தன. கா.சு.பிள்ளை எழுதிய உரைவிளக்கநூல் அதில் முதன்மையானது
அதன்பின் ஐம்பதுகளில் திருக்குறளை மதச்சார்பற்ற தமிழ்ப்பொதுமறையாக நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடங்கின. அன்றைய தமிழியக்கம், திராவிட இயக்கத்தின் பண்பாட்டுப்பணிகளில் முக்கியமானது இது. பல்வேறு உரைகள் வழியாக இது நடந்தது. முதன்மையான உரை மு.வரதராசனாருடையது. மிகப்பிரபலமானதும் அதுவே
இருசாராருக்குமே சிக்கலாக இருந்தது திருக்குறளின் கடவுள்வாழ்த்து அதிகாரம்தான். சைவர்களுக்கு அதிலுள்ள இறைவிளக்கம் அவர்களின் சைவ மரபுசார்ந்த விளக்கங்களுடன் பொருந்தாததாக இருந்தது. ஆதிபகவன், மலர்மிசை ஏகினான், பொறிவாயில் ஐந்தவித்தான், வாலறிவன் போன்ற சொல்லாட்சிகள் சமணத்தின் அருகர்களுக்குப் பொருந்துபவை. அவற்றை சைவத்துக்குள் கொண்டு வைக்க மிகப்பெரிய சொல்திரிப்பும் கருத்துவளைப்பும் தேவைப்பட்டது.
அதேபோல மதச்சார்பின்மைவாதிகளுக்கும் அந்த அதிகாரத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்கள் இரண்டு வாதங்களை முன்வைத்தார்கள். ஒன்று குறளின் பிற அத்தியாயங்களில் எங்கும் வாழ்க்கையின் சிக்கல்களுக்குத் தீர்வாக இறைவழி சொல்லப்படவில்லை. ஊழுக்கு அளிக்கப்பட்ட இடம் கூட கடவுளுக்கு அளிக்கப்படவில்லைஆகவே கடவுள்வாழ்த்துப் பகுதி பின்னர் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்
இரண்டாவது வாதம், தேவநேயப் பாவாணர் வழிவந்தது. அவர் சொற்திரிப்புக்கு உலகளவில் நிகரற்றவர். ஆதிபகவன் முதலிய அனைத்துச் சொற்களையும் இலக்கணநெறிகளைக்கூட மீறி விருப்ப்படி பிரித்து எந்த விதப் பண்பாட்டுக்குறிப்புகளும் இல்லாமல் பொருள்கொண்டு அவை குறிப்பிடுவது இறைவனையே அல்ல என்றும் தொல்தமிழ் மூத்தார்வழிபாட்டை மட்டும்தான் என்றும் அவர் சொன்னார்.
உண்மை என்ன? நமக்கு திருக்குறள் எப்போது கிடைக்கிறதோ அப்போதே இறைவாழ்த்துடன் 1330 குறள்களுடன்தான் உள்ளது. அதன் எண்ணிக்கை பல இடங்களில் சொல்லப்பட்டிருப்பதனால் அந்நூலின் அமைப்பு எளிதில் மாற்றப்படக்கூடியது அல்ல.
தமிழ்நூல்களில் சமண பௌத்தப் பின்புலம் கொண்ட நூல்களில் இடைச்செருகல்களும் பாடபேதங்களும் குறைவு. சமண பௌத்த மதங்கள் விரிவான எழுத்துமரபும் கல்விப்புலமும் கொண்டவை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். சமண பௌத்த மதங்களின் சரிவுடன் அவையும் மறக்கப்பட்டு நீண்டநாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம்.
கம்பராமாயணம் போன்றவற்றிலுள்ள இடைச்செருகல்கள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தாலும் மதம்சார்ந்த முக்கியத்துவத்தாலும் உருவானவை. காப்பியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் போன்ற சமண பௌத்த நூல்களிலேயே குறள் தூயபிரதியாகவே நமக்குக் கிடைத்தது.
ஆகவே இறைவாழ்த்தை வள்ளுவர் எழுதவில்லை, இறைவாழ்த்தை அவர் பின்னால் எழுதியிருக்கலாம் என்று சொல்வதற்கு மிகச்சிறிய ஆதாரத்தைக்கூட நாம் இன்று கண்டடைய முடிவதில்லை
திருக்குறள் கிபி நான்காம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம். 1500 ஆண்டுகள் பழைமை கொண்ட ஒரு பிரதியைப்பற்றி அப்படி ஆதாரபூர்வமாக ஏதும் சொல்லிவிடமுடியாது. அத்துடன் தமிழில் நமக்கு தெளிவாக வரலாறுகளைப் பேணும் வழக்கமும் இல்லை.
திருக்குறளை மட்டும் வைத்துக்கொண்டு இத்தகைய ஊகங்களை நிகழ்த்துவதெல்லாம் வெறும் தர்க்கவிளையாட்டு. எல்லா பழைய நூல்களும் அவ்வாறு சமகாலத்தில் வாசித்து அர்த்தப்படுத்தப்படுகின்றன. பல்வேறு கோணங்களில் வாசிப்பு நிகழ்கிறது. அவற்றுக்கிடையேயான ஒரு சமரசமாக அந்நூலுக்கான பொதுவாசிப்பு திரண்டு வருகிறது. இது முடிவடையாது நடந்துகொண்டே இருக்கும் ஒரு செயல்பாடு.
பொதுவாக மூலநூல்களை ஒவ்வொரு தரப்பும் தங்கள் நோக்குக்கு இழுக்க முயல்வது எங்கும் நிகழ்வதுதான். இந்திய மரபில் நமக்கு இவ்வாறு உரைகள் வழியாக மூலநூல்களை வளைத்துக்கொள்வது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சிந்தனைமுறையாகவே உள்ளது. பிரம்மசூத்திரமோ கீதையோ தலைமுறை தலைமுறையாக வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகளால் வெவ்வேறுவகையில் உரைவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. அதுவே குறள்சார்ந்தும் தொடர்கிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்
ஜெ
வ.உ.சி.யின் முக்கியமான கட்டுரைகள்.இரா. பானுகுமார் சில குறிப்புகளைச் சரியாகக் கொடுத்துள்ளார்.
உலகப்பொதுமறை என்று பாராட்டப்படுகின்ற ஒரு தலையாய இலக்கியம், திருக்குறள். திருக்குறளின் பகுப்புமுறை, அதிகாரங்களுக்குத் தலைப்புத் தந்துள்ள முறை போன்றவை யாரால் எப்பொழுது செய்யப்பட்டவை என்பதெல்லாம் சரிவரத் தெளிவாகவில்லை. இப்பொழுது நாம் காணும் அதிகாரப் பகுப்பு, அதிகாரத் தலைப்புகள், இயல் பகுப்பு போன்றவை எல்லாம் திருவள்ளுவரே செய்ததாகத் தோன்றவில்லை. சான்றாக, திருக்குறளின் முதல் நான்கு இயல்களைப் பாயிரம் என்று பகுத்துள்ளனர் சில ஆசிரியர்கள். பரிமேலழகர் போன்ற செல்வாக்குள்ள உரையா சிரியரும் இதனை ஏற்றுக் கடைப்பிடிப்பதால் இது பெரும்பாலும் ஏற்கக்கூடிய கருத்தாகி விட்டது. இப்பகுப்பு சரியானது என நிறுவப்படவில்லை. இயல்பகுப்பு உரையாசிரியருக்கு உரையாசிரியர் மாறுபடுகிறது. அதிகாரத்தலைப்புகளும் அவ்வாறே. மணக்குடவர் மக்கட்பேறு எனக்கூறும் அதிகாரத்தைக் காலத்தால் பிற்பட்டவராகிய பரிமேலழகர் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் இங்கு நினைவுகூறக் காரணம், திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதன் தலைப்பே பொருத்தமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டத்தான். பொதுவாக, திருக்குறளில், அதிகாரத் தலைப்பாக அமைந்த சொல், பெரும்பாலும் அந்த அதிகாரத்திலுள்ள ஓரிரு குறட்பாக்களிலேனும் இடம் பெறுவது வழக்கம். இதற்கு மிகச்சில விதிவிலக்குகளே உண்டு. அந்த விதிவிலக்குகளில் ஒன்று, கடவுள் வாழ்த்து. கடவுள் என்ற சொல்லோ, வாழ்த்து என்ற சொல்லோ கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எங்கும் இடம்பெறவேயில்லை.
இந்தச் சொற்களை முக்கியமாக ஆராய்வதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால் கடவுள் என்ற கருத்தும், வாழ்த்துதல் என்ற கருத்தும் திருவள்ளுவருக்கு உடன் பாடானவை என்று தோன்றவில்லை. இன்று இறைவன், தெய்வம், கடவுள் என்ற மூன்று சொற்களும் ஏறத்தாழ ஒரே அர்த்தத்தில் கையாளப்படுகின்றன. ஆனால் திருவள்ளுவருடைய ஆளுகையில் இம்மூன்று சொற்களுக்கும் பொருள் வேறு. கடவுள் என்ற சொல்லை அவர் திருக்குறளில் கையாளவே இல்லை. கட+உள் என்று இச்சொல்லைப் பிரித்து நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நமக்கு உள்ளும் நம்மைக் கடந்தும்(அப்பாலும்) இருக்கிறது என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறுவர். அல்லது கடவுதல் (இயக்குதல், செலுத்துதல்) என்ற சொல் அடியாகப் பிறந்தது இச் சொல் என்ற கருத்தும் உண்டு. உயிர்களுக்கெல்லாம் அப்பால் நின்று ஒரு சக்தி அவற்றைக் கடவுகின்றது என்ற கருத்து இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட, உயிர்களுக்கும் மனிதருக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியில்(transcendent force) திருவள்ளுவருக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் அவர் இச்சொல்லைத் தமது நூலில் எங்குமே பயன்படுத்தவில்லை என்று கருதமுடியும்.
பழங்காலத்தில் வைதிக சமயத்தினர் தமக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுள் ஒன்றில் நம்பிக்கைகொண்டவர்கள். வைதிகசமயத்தினர்க்கு மாறான சார்வாகர், சாங் கியர், பௌத்தர், சமணர் போன்ற மரபுகளைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை அற்றவர்கள். திருக்குறளை ஆழ்ந்து நோக்கும்போது திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக்கூடும் என்பதை நாம் உணரமுடியும்.
இறைவன்-தெய்வம் என்ற சொற்கள் கடவுள் என்ற கருத்துக்கு மாறானவை. தேவன் அல்லது தேவ என்ற சொல்தான் தெய்வம் என்ற வடிவத்தில் தமிழில் வழங்குகிறது. இச்சொல்லுக்கு மனிதனைவிட உயர்உலகம் ஒன்றில் வாழும் (மனிதனைவிட அதிகமான, ஆனால் எல்லைக்குட்பட்ட சக்தியுடைய) உயர்பிறவிகள் என்பது அர்த்தம். வள்ளுவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொல்கிறார். மனிதர்கள் தங்கள் நிலையில் உயரும்போது தெய்வம் ஆகிறார்கள்.
இறை என்ற சொல் ஆதி என்ற சொல்லுக்கு எதிரானது. மனிதனால் ஆதி (யாவற்றிற்கும் முற்பட்ட நிலை)யையும் சிந்திக்க முடிவதில்லை, அந்தம் (இறை, இறுதி) என்ற நிலையையும் சிந்திக்க முடிவதில்லை. இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற அர்த்தத்தில்தான் வள்ளுவர் மிகுதியும் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால், மனிதர்களுக்குள் இறுதியான தலைமைநிலையில் இருப்பவன் அரசன்தான். இறு (வேர்ச்சொல் ‘இற்’) என்ற சொல்லிலிருந்துதான் இறையன், இறைவன், இறுதி, இற்றுப் போதல், இறுத்தல், இறப்பு போன்ற சொற்கள் உருவாகின்றன. இறத்தல் என்பதற்கு ஒரு எல்லையைக் (இங்கே மனித வாழ்க்கை எல்லை) கடந்து செல்லுதல் என்று பொருள். எனவே இறைவன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லன்று.
கடவுள் என்ற சொல் திருக்குறளில் எங்கும் இடம்பெறவேயில்லை என்ப தையும், காரணம் அது நமக்கு அப்பாற்பட்ட அதீத சக்தியைக் குறிக்கின்ற ஒன்று என்பதையும் முன்பே கூறினோம். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனைக் குறிப்பதாக இடம் பெறும் சொற்கள் அனைத்தும் மனிதநிலையிலிருந்து உயர்ந்த சான்றோர்களைக் (இவர்களை நாம் சமண முன்னோரான துறவிகளாகக் கொள்ள வாய்ப்பு உண்டு) குறிப்பவைதான்.
மனிதநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுளைக் கருத்தில் ஏற்றுக்கொள்ளாததால் திருவள்ளுவருக்கு அத்தகைய கடவுளை வாழ்த்துவது என்ற எண்ணமும் தோன்றவில்லை. திருக்குறள் கடவுள் வாழ்த்தின் பத்துச் செய்யுட்களையும் நன்கு கவனித்துப் பாருங்கள் – எந்தச் செய்யுளாவது, கடவுளை வாழ்த்துவதாக அமைந் துள்ளதா? எல்லாச் செய்யுட்களுமே – பத்துக்குறட்பாக்களுமே உயர்ந்த மானிடர்களின் பத்து இயல்புகளைக் குறிப்பிடுவனவாகத்தான் அமைந்துள்ளன. நம் சிந்தனையையும் மனத்தையும் கடந்த ஒன்றிற்கு இயல்புகளைச் சொல்வது எப்படி?
முதல் குறட்பாவைப் பார்ப்போம். அகரமுதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு என்பது குறள். இது சொல்வது என்ன? எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருப்பதுபோல, இந்த உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டிருக்கிறது என்பதுதானே? இதில் உள்ள இரு பகுதிகளும் நாம் கவனிக்க வேண்டியவை.
ஒன்று, எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாக உடையவை.
இரண்டு, (அதுபோல) உலகம் ஆதிபகவனை முதலாக உடையது.
முதல் பகுதியைக் கவனிப்போம். எழுத்துகள் அகரத்தை முதலாக உடையன என்றால் என்ன? இறைவன் உயிர்களை ஆக்குவது போல, எல்லா எழுத்துகளையும் (உயிர், மெய்) அகரம் ஆக்குகிறது, படைக்கிறது என்றா அர்த்தம்? முதல் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. மண்ணிலிருந்து குடம் ஆகிறது என்றால் மண் காரண முதல் என்போம். குயவனால் குடம் ஆகியது என்றால் குயவனைக் கர்த்தா முதல் என்போம். இந்த அர்த்தங்கள் எதுவும் இங்கு இல்லை.
பெரும்பாலான மொழிகளில் அகரம் முதல் எழுத்து. பிறகு மற்ற எழுத்துகளின் வரிசை தொடர்கிறது. ஒரு கியூ வரிசையில் முதலில் நிற்கும் ஆள், கியூவை உண்டாக்குபவரா? அதாவது காரணமுதலா? கர்த்தா முதலா? இரண்டும் அல்ல, அவர் வரிசை முதல். அவ்வளவுதான். அதுபோல எழுத்துகள் வரிசையில் அகரம் முதன்மையாக நிற்கிறது. வரிசை முதல். அதுபோல உயிர்களின் வரிசையில் ஆதிபகவன் முதலில் நிற்கிறார். அவ்வளவுதான். ஆதி என்றசொல்லும் குணங்களில் முதன்மையானவர் என்பதைத்தான் குறிக்கிறது.
இரண்டாவது, பகவன் என்ற சொல்லைப் பார்ப்போம். இது பகவான் என்ற வட சொல் அடிப்படையிலானது அல்ல. தமிழில் முற்றும் துறந்த முனிவர்களை-மனிதர்களை பகவன் என்று கூறினார்கள். கலித்தொகையில் ஒரு செவிலித்தாய் தலைவனுடன் போய் விட்ட தன் மகளைத் தேடிவருகிறாள். அவளுக்கு முக்கோல் பகவர்கள் (அதாவது திரிதண்டம் என்னும் கோலை உடைய பகவர்கள் சிலர்) ஆறுதல் சொல்கிறார்கள். இங்கு முக்கோல் பகவன் என்ற சொல்லுக்கு கடவுள், பகவான் என்றா அர்த்தம்? முனிவன் என்பதுதான் பொருள். அதே பொருளில் – அதாவது முற்றும் துறந்த முனிவன் என்ற பொருளில்தான் பகவன் என்ற சொல்லை இங்கும் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். ஆனால் இவர் நீண்ட காலத்துக்கு முன்னாலிருந் தவர் (ஒருவேளை அருகதேவராக இருக்கலாம்). அதனால் ஆதி பகவன்.
எனவே இந்த முதற்குறள் கூறுவது என்ன? மனித வரிசையிலே குணங்களால் உயர்ந்த, காலவரிசையில் முற்பட்ட ஒரு முனிவர் – ஆதி பகவன் – அவரை உதாரணமாகக் கொண்டது இவ்வுலகு என்பதுதான்.
இனி வரும் குறட்பாக்களும் அந்த ஆதி பகவனின் – அதாவது மனிதராக இருந்து உயர்ந்த நிலை அடைந்த – வள்ளுவர் வாக்கில், தெய்வநிலை அடைந்தவர் களின் பண்புகளைப் பற்றித்தான் பேசுகின்றன. இரண்டாவது குறட்பாவில் ‘வால் அறிவன்’ என்கிறார். அதாவது தூய்மையான அறிவுடையவன். மூன்றாவது குறட்பா இன்னும் தெளிவானது. மலர்மிசை ஏகினான். இது புலனறிவைக் கடந்த கடவுளைக் குறிக்கும் சொல்லே அன்று என்பது மிக வெளிப்படை. மலரின்மீது நடந்தவன். இங்கு மலர் என்பது உருவகமாக பூமியைக் குறிக்கிறது. (மலர் தலை உலகம் என்று வருணிப்பதை நோக்குக). எனவே இந்தப் பூமியின்மீது வாழ்ந்த ஒரு தெய்வப் பண்புடைய ஒருவன் என்பது இச்சொல்லின் பொருள்.
அடுத்த குறள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறது. அதாவது அந்த நிலைகளைக் கடந்தவன். அதற்கடுத்த குறளில் இறைவன் என்றசொல் வருகிறது. அதாவது நாம் அடையவேண்டிய இறுதிநிலையாக இருப்பவன், அல்லது அந்த இறுதிநிலையை அடைந்தவன். பத்தாம் குறளும் இறைவன் என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. (இறைவன் அடி சேராதார், பிறவிப்பெருங்கடல் நீந்தார்).
அடுத்த குறள் இன்னும் தெளிவானது. பொறிவாயில் ஐந்து அவித்தான். எல்லாவற்றையும் கடந்த கடவுளுக்குப் பொறிவாயில்கள் (அதாவது புலன்நுகர்ச்சி உறுப்புகள் – கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) என்பன ஏது? இப்பொறிவாயில்கள் ஒருவனுக்கு உண்டு, அவற்றை அவித்தவன் (கட்டுப்படுத்தியவன்) என்றாலே கடவுள் என்ற அர்த்தமா வருகிறது? எந்தக் கடவுளும் புலன்களை அவிக்கத் தேவையில்லை. சாதாரண மனிதநிலையில் இருந்து, புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்தி, தெய்வ நிலையை அடைந்த சான்றோன் என்னும் பொருள் அல்லவா இந்தச் சொல்லுக்கு வருகிறது? அப்படிப்பட்ட சான்றோனுடைய பொய்தீர் ஒழுக்கநெறியில் நின்றவர்கள் நீடுவாழ்வார் என்பதில் கடவுளுக்கு எங்கே இடம்?
அடுத்த குறளில் வரும் சொல் தனக்குவமை இல்லாதான். பொறிவாயில் அவித்த ஒருவனுக்கு உலகிலுள்ள சுகபோகங்களில் ஈடுபட்ட யாரை அல்லது எதை உவமை சொல்ல முடியும்? அடுத்த சொல் அறவாழி அந்தணன் அறக்கடலாக விளங்குகின்ற அந்தணன். அந்தணன் என்பது பார்ப்பனச் சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. அந்தணர் என்போர் அறவோர் – திருவள்ளுவரைப் பொறுத்தமட்டில். அறவோனாக இருப்பவன் அந்தணன். அறக்கடலாகவே விளங்கும் முதன்மையான அந்தணன் இந்த பகவன்.
ஒன்பதாம் திருக்குறள் மிகமிக முக்கியமானது. ஏனென்றால் இதுவரை இறைவனுடைய பண்புகளாகக் குறிப்பிட்டவற்றைத் தொகுத்துரைக்கிறது. கோளில் பொறியில் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. எண்குணத்தான் என்ற சொல்லுக்கு நம் மனங்களில் எண்ணப்படுகின்ற நல்ல குணங்களையெல்லாம் உடையவன் என்று சமத்காரமாகப் பொருள்சொல்லலாம். எட்டு குணங்களை உடையவன் என்பதும் பொருள். அதாவது, இதற்கு முன்னுள்ள எட்டுகுறட்பாக்களில் சொல்லப்பட்ட எட்டு குணங்களையும் உடையவன். அதனால் தான் பத்தாம் குறளில் வேறு எந்தப் பண்பையும் புதிதாகச் சேர்க்காமல், ஐந்தாம் குறட்பாவில் ஆண்ட இறைவன் என்ற சொல்லையே திரும்பவும் பயன்படுத்தி விடுகிறார்.
இக்காலத்தில் தமிழ் இலக்கியம் படிப்போர் சொற்களுக்கு இக்காலப் பொருளையே கொண்டுவிடுகின்றனர் என்பது ஒரு குறைதான். அது சிலவித இலக்கிய ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியதே என்றாலும், மிகப் பழங்கால இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு சொல்லைக் கண்டால் அது அக்காலத்தில் எப்பொருளில் பயன்பட்டிருக்கும் என்று ஓரளவேனும் ஆராய்ந்தே பொருள்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் குழப்பம்தான் ஏற்படும். பரிமேலழகர் போன்ற உரையாசிரி யர்களிடம் உள்ள குறைபாடு, அவர்கள் அவ்வக்காலத்திற்கேற்ற பொருளைக் கொண்டமையே ஆகும். அதனால் சமணசமயம் மேலோங்கியிருந்த – நீதி இலக்கிய காலத்தில், அறச்சிந்தனைக் காலத்தில் இயற்றப்பட்ட திருக்குறளுக்குச் சைவசித்தாந்த, வைணவசித்தாந்தப் பொருள் கூறி இடர்ப்பட்டனர். சான்றாக எண் குணத்தான் என்றசொல்லுக்குச் சைவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது, வைணவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது என்றெல்லாம் குறித்துள்ளனர். மாறாக, சமணசமயத்தில் எண்குணம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று நோக்கினால் பொருத்தமாக இருக்கும்.
எனவே திருவள்ளுவர் பாடிய கடவுள் வாழ்த்து கடவுளைப் பற்றியதும் அல்ல, அது வாழ்த்தாக அமைந்ததும் அல்ல என்று சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம்.
=======================================
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தமிழ்ப் பொழில் இதழ்களில் வ. உ. சிதம்பரம் பிள்ளை எழுதிய திருக்குறள் கட்டுரைகள்.பாயிரவியல்கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமைஅறன்வலியுறுத்தல்திருவள்ளுவர் திருக்குறள், பாயிர ஆராய்ச்சி -- வ. உ. சிதம்பரம் பிள்ளைIபாயிர ஆராய்ச்சி, திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல (பக்கம்-233) என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. தமிழ்ப் பொழில் (5/6), பக்கம்: 232-237.IIபாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. 'வழிபடு கடவுள் வாழ்த்து' (நூலாசிரியர் கடவுளை வணங்கி வேண்டுதல்), 'ஏற்புடைக் கடவுள் வாழ்த்து' (நூலை வாசிப்பவர் கடவுளை வணங்குவதற்காக எழுதப்படுவது) என இருவகைப்படும். திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் வள்ளுவரால் எழுதப்பட்டதல்ல . தமிழ்ப் பொழில் (5/9&10), பக்கம்: 329-334.IIIபாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. தொல்காப்பிய இலக்கணத்தைப் பின்பற்றிய வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் காணப்படுவது போன்று மெய்ப்பொருளை உயர்திணை ஆண்பாலாகக் குறிப்பிட வழியில்லை. மெய்ப்பொருளை மனித உருவாக, அது தாள் முதலியவற்றை கொண்டதாகக் காட்டுவதும் பொருந்தவில்லை. சொற்குற்றம், பொருட்குற்றம் கொண்ட இக்குறட்பாக்களை வள்ளுவர் இயற்றினார் என்று கூறுவது, வள்ளுவரைப் புலவரல்லர் என்று கூறுவதற்கு ஒப்பாகும். தமிழ்ப் பொழில் (5/11&12), பக்கம்: 447-455.IVபாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து; வேண்டுதல் வேண்டாமை குணநலன்கள் இல்லாதிருப்பது கடவுளின் இலக்கணமா? அல்லது துறவியின் இலக்கணமா? சொற்குற்றம் பொருட்குற்றம் கொண்ட "வேண்டுதல் வேண்டாமை" குறளை வள்ளுவர் எழுதியிருக்க வழியில்லை. அவ்வாறே, "இருள் சேர் இருவினையும் சேரா", "பொறி வாயில் ஐந்தவித்தான்" ஆகிய குறள்கள் இறைவனைக் குறிக்கவில்லை, துறவியைக் குறிக்கின்றன என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. தமிழ்ப் பொழில் (6/11&12), பக்கம்: 456-462.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.பாயிரம் நூலுக்கு முன்னுரைதிருக்குறளின் 1) கடவுள் வாழ்த்து 2) வான் சிறப்பு 3) நீத்தார் பெருமை 4) அறன் வலியுறுத்தல் என்ற முதல் நான்கு அதிகாரங்களில் உள்ள நாற்பது குறட்பாக்களே பாயிரம் என்று அழைக்கப்படுகின்றன,பாயிர அதிகார அமைப்பு முறை
ஐயன் திருவள்ளுவரின், இறைவன் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலானவற்றைப் பாயிரத்தின் முதல் அதிகாரத்தில் மட்டுமே காணலாம், பாயிர அதிகார அமைப்பு முறையில் கடவுள் வாழ்த்திற்குப் பின் இரண்டாம் அதிகாரமாக வான் சிறப்பும். மூன்றாம் அதிகாரமாக நீத்தார் பெருமையும். நான்காம் அதிகாரமாக அறன் வலியுறுத்தலும் கூறப்பட்டுள்ளது, இந்த அதிகார அமைப்பு முறையை ஆராயாத அறிஞர்களே இல்லை எனலாம்,முதல் அதிகாரமாகக் கடவுள்வாழ்த்தும், இரண்டாம் அதிகாரமாக வான் சிறப்பும், மூன்றாம் அதிகாரமாக நீத்தார் பெருமையும், நான்காம் அதிகாரமாக அறன் வலியுறுத்தலும் பாடப் பெற்றதன் காரணம் இதுநாள் வரை தெளிவாக அறியப்பட வில்லை,இவ்வாறான பாயிர அமைப்புமுறை தமிழ் மொழியின் பிறநூல்கள் எதிலும் காணப்பட வில்லை, பிறநாட்டு நூல்களிலும் மற்ற பிறமொழி நூல்களிலும் இம் முறை இல்லை,
வணக்கம்.
வடதிசை என்பது அறத்திற்கானதாகும். இதில் மாற்றம் இல்லை.
ஆனால் பின்னாளில் குபேரன் இலங்கையிலிருந்து இமயம் சென்று விட்டபடியாலும், வீரபாண்டின் வடக்கே சென்று மேருவைச் செண்டால் அடித்துப் பொதிந்திருந்த பொன்னை எடுத்து வந்த காரணத்தாலும் வடதிசையானது செல்வத்திற்கும் ஆனது.
வள்ளுவர் வடதிசையை அறத்திற்கு மட்டுமே கொண்டு, அன்ற்வலியுறுத்தல் பாடியுள்ளதால், திருக்குறளின் காலம் குபேரனுக்கும் முந்தியது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருக்குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் திசைதெய்வங்களை வணக்கிப் பாடப்பட்டுள்ளன என்பதை இன்னும் விரிவான விளக்கங்களுடன் வீடு திரும்பியதும் எழுதுகிறேன்.
அத்துடன் தாங்கள் குறிப்பிடும்
தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்பத் தொல்காப்பியத்தின் பாயிரமே அமைந்துள்ளதா ?
இது இப்படி யிருக்கத் திருக்குறளின் பாயிர அதிகாரங்களை தொல்காப்பிய நூற்பாவுடன் ஒப்பிடுவதால் ஏற்படும் பிழைகளையும் எழுத முற்படுகிறேன்.
அன்பன்
கி. காளைராசன்