மட்டன் பிரியாணியும், எலிப்பொறியலும்

242 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 26, 2018, 10:58:39 AM1/26/18
to செல்வன்
மட்டன் பிரியாணியும், எலிப்பொறியலும்

நற்றிணையில் காதலன் வரவை எதிர்பார்த்து காதலி காத்திருக்கிறாள். அப்போது அங்கே உள்ள கடவுள் வாழ்வதாக கருதப்படும் மரம் ஒன்றில் ஆந்தை ஒன்று அமர்ந்திருக்கிறது. அது கூவி, கீவித்தொலைத்தால் அதன் குரல் கடுமையைக்கண்டு காதலன் வராமல் போய்விடுவானோ என அவளுக்கு ஒரே அச்சம்.

அதனால் இப்பாடலை பாடுகிறாள்

"எம்மூர் வாயில் உண்டுறைத் தடை இய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூருகிர்
வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலி வான்சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரும் பொழுதில்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே”– நற்றிணை 83 

"வலுவான ஆந்தையே..ஊர் எல்லையில் கடவுள் வாழ்வதாக கருதப்படும் மரத்தில் அமர்ந்து உன் கூரிய நகங்களால் அனைவரையும் அச்சுறுத்துவாய். உனக்கு மையூன் புழுக்கலும் (நெய்யும், ஊனும் கலந்த புழுங்கல் அரிசியும்), சூடான எலிக்கறியும் தருவோம். காதலன் வரும் சமயம் சத்தம் போடாமல் இரு"

அப்பவே மட்டன் பிரியாணி இருந்திருக்கு..இவங்க என்னடான்னா கிச்சடியை தேசிய உணவா அறிவிக்கறாங்க

--

செல்வன்

kanmani tamil

unread,
Jan 27, 2018, 12:17:13 AM1/27/18
to mintamil
ஊன்துவை அடிசில் என்பது பிரியாணியின் பழம்பெயர் .
அதில் எந்த அளவு கறி போடவேண்டும் என்று பதிற்றுப்பத்து (பா.45)கூறுகிறது.
"சோறு வேறு என்னா ........"=இது சோறு; இது கறி என்று பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு .....இது பரணர் கூற்று.

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப்  பெருங்கெளசிகனார் பாடிய மலைபடுகடாம் (அடி 174-181) ....ஒரு வளமான பிரியாணி ....
பலாக்கொட்டை ,மான்கறி ,பன்றிக்கறி,உடும்புக்கறி எல்லாம் சேர்த்துச் சமைத்த மூங்கிலரிசிச்சோறு ....இதற்கு மோர் தான் உலை ....புளியம்பழத்தின் சாரமும் சேர்த்துச் சமைக்கிறாள்.(இன்று எலுமிச்சைச் சாறு சேர்ப்பது போல ....) 
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 27, 2018, 4:46:11 AM1/27/18
to mint...@googlegroups.com, vallamai
அருமை திரு செல்வன், திருமிகு கண்மணி.
சொ. வினைதீர்த்தான்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 27, 2018, 10:06:01 AM1/27/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
எதிர்ப்பு இல்லாம இருக்கணும்னா எதெதெல்லாம் யார்யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று அறிந்து வைத்துள்ளாள் தலைவி.

மதுவொடு
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
வான்சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கைஎம் வேட்பாளர் வரல்நசைஇத்
துஞ்சாது தேர்தல் பொழுதில்
அஞ்சுவரப் பணம் பயிற்றாதீமே”

குடியாட்சிச் சிந்தனையுடன்,
அன்பன்
கி.காளைராசன்

2018-01-26 21:28 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

kanmani tamil

unread,
Jan 28, 2018, 12:45:45 AM1/28/18
to mintamil
சூஉஉஉஉஉ ப்பர்
கண்மணி  

N. Ganesan

unread,
Jan 28, 2018, 2:50:26 AM1/28/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-01-26 7:58 GMT-08:00 செல்வன் <hol...@gmail.com>:
மட்டன் பிரியாணியும், எலிப்பொறியலும்

நற்றிணையில் காதலன் வரவை எதிர்பார்த்து காதலி காத்திருக்கிறாள். அப்போது அங்கே உள்ள கடவுள் வாழ்வதாக கருதப்படும் மரம் ஒன்றில் ஆந்தை ஒன்று அமர்ந்திருக்கிறது. அது கூவி, கீவித்தொலைத்தால் அதன் குரல் கடுமையைக்கண்டு காதலன் வராமல் போய்விடுவானோ என அவளுக்கு ஒரே அச்சம்.

அதனால் இப்பாடலை பாடுகிறாள்

"எம்மூர் வாயில் உண்டுறைத் தடை இய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூருகிர்
வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலி வான்சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரும் பொழுதில்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே”– நற்றிணை 83 

"வலுவான ஆந்தையே..ஊர் எல்லையில் கடவுள் வாழ்வதாக கருதப்படும் மரத்தில் அமர்ந்து உன் கூரிய நகங்களால் அனைவரையும் அச்சுறுத்துவாய். உனக்கு மையூன் புழுக்கலும் (நெய்யும், ஊனும் கலந்த புழுங்கல் அரிசியும்), சூடான எலிக்கறியும் தருவோம். காதலன் வரும் சமயம் சத்தம் போடாமல் இரு"

இங்கே குறிப்பிடப்படும் எலி = வெள்ளெலி. அடிவயிறு வெள்ளை ஆக இருக்கும் எலி. பகலில் வங்கில் இருக்கும். இரவில் அறுகம்புல் தின்னும்.
வெள்ளெலி veḷ-ḷ-eli , n. < id. + எலி¹. A species of rat, Gerbillus indicus; எலிவகை. குரூஉமயிர்ப் புன்றாள் வெள்ளெலி (அகநா. 133). https://en.wikipedia.org/wiki/Indian_gerbil

”மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் வான் எலி சூட்டொடு மலியப் பேணுதும் - யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு”

கிராமங்களில் வெள்ளெலி வேட்டை:
Inline image 1

நா. கணேசன்
 
அப்பவே மட்டன் பிரியாணி இருந்திருக்கு..இவங்க என்னடான்னா கிச்சடியை தேசிய உணவா அறிவிக்கறாங்க

--

செல்வன்

--

Suba

unread,
Jan 28, 2018, 6:18:03 AM1/28/18
to மின்தமிழ்
😂😂😂

kanmani tamil

unread,
Jan 28, 2018, 7:05:38 AM1/28/18
to mintamil
///மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்///
 ///யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு” ///

பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் உரை இவ்வாறு கூறுகிறது.
ஆனால் இங்கே சோறு எங்கிருந்து வந்தது?
மையூன் =கொழுப்புடன் கூடிய ஊன் 
மையூன் தெரிந்த நெய் =கொழுப்புடன் கூடிய ஊனைச் சமைக்கும் போது உருகிவரும் நெய் 
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல் =கொழுப்புடன் கூடிய ஊனைச் சமைக்கும் போது ;அது உருகி வெளிப்படும் நெய்யிலே வெந்து வெண்மையாகக் காணப்படும் தசைத் துண்டுகள்  
இவ்வாறு கொழுப்புடன் கூடிய ஊனை இன்றும்  மதுரை வட்டாரத்தில் ---ரவாசு ---என்று தான் அழைப்பர்.
 கொழுப்பிலே வெந்து பதமாகும் ஊனை இன்றும் மதுரை வட்டாரத்தில் 'சுக்கா '  என்று சொல்வர்.
கொஞ்சம் தெற்கே வந்தால் 'வறட்டுக்கறி 'என்பர்.

ஆக இந்தப் பாட்டில் பிரியாணி இல்லை.
வேக வைத்த ஊன் கறியும் ,சுட்ட எலிக்கறியும் மட்டுமே உள்ளன.
ஊன் விருந்து உபசாரம் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் சங்க இலக்கியம்  வேக வைத்த பண்டம் ஒன்றுடன் சுட்ட பண்டம் ஒன்றையும்சேர்த்துப்  பேசுவதற்கு பொருநராற்றுப்படையும் சான்று பகர்கிறது.(102-107)
'அருகம்புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக்கிடாயின் வேகவைத்த தொடைக்கறியுடன் ,இரும்பு நாராசத்திலே கோத்துச் சுட்ட தசைத்துண்டும்
சேர்த்தே  பரிமாறப் படுகிறது.
கண்மணி    

--

iraamaki

unread,
Jan 28, 2018, 8:35:49 AM1/28/18
to mint...@googlegroups.com
ஊனோடு பழக்கப்படாத உரைகாரர் பேச்சுக்கள் பலவும் இலக்கியவுலகில் உலவுகின்றன. உரைகளை அதனாலேயே முழுதும் நான் எடுத்துக்கொள்வதில்லை. அவை ஒரு வழிகாட்டி மட்டுமே. மூலமே முகன்மையானது.
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 28, 2018, 9:48:36 AM1/28/18
to mintamil
2018-01-28 17:35 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்///
 ///யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு” ///

பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் உரை இவ்வாறு கூறுகிறது.
ஆனால் இங்கே சோறு எங்கிருந்து வந்தது?
மையூன் =கொழுப்புடன் கூடிய ஊன் 
மையூன் தெரிந்த நெய் =கொழுப்புடன் கூடிய ஊனைச் சமைக்கும் போது உருகிவரும் நெய் 
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல் =கொழுப்புடன் கூடிய ஊனைச் சமைக்கும் போது ;அது உருகி வெளிப்படும் நெய்யிலே வெந்து வெண்மையாகக் காணப்படும் தசைத் துண்டுகள்  
இவ்வாறு கொழுப்புடன் கூடிய ஊனை இன்றும்  மதுரை வட்டாரத்தில் ---ரவாசு ---என்று தான் அழைப்பர்.
 கொழுப்பிலே வெந்து பதமாகும் ஊனை இன்றும் மதுரை வட்டாரத்தில் 'சுக்கா '  என்று சொல்வர்.
கொஞ்சம் தெற்கே வந்தால் 'வறட்டுக்கறி 'என்பர்.

ஆக இந்தப் பாட்டில் பிரியாணி இல்லை.
வேக வைத்த ஊன் கறியும் ,சுட்ட எலிக்கறியும் மட்டுமே உள்ளன.
ஊன் விருந்து உபசாரம் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் சங்க இலக்கியம்  வேக வைத்த பண்டம் ஒன்றுடன் சுட்ட பண்டம் ஒன்றையும்சேர்த்துப்  பேசுவதற்கு பொருநராற்றுப்படையும் சான்று பகர்கிறது.(102-107)

'அருகம்புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக்கிடாயின் வேகவைத்த தொடைக்கறியுடன் ,இரும்பு நாராசத்திலே கோத்துச் சுட்ட தசைத்துண்டும்
சேர்த்தே  பரிமாறப் படுகிறது.
கண்மணி    

ஒன்று சாப்பிட, மற்றொன்று வெஞ்சனம் எனக் கொள்ளலாமா?

அன்பன்
கி.காளைரசான்

N. Ganesan

unread,
Jan 28, 2018, 10:08:22 AM1/28/18
to மின்தமிழ்
2018-01-28 4:05 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்///
 ///யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு” ///

பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் உரை இவ்வாறு கூறுகிறது.
ஆனால் இங்கே சோறு எங்கிருந்து வந்தது?

பின்னத்தூரார் போன்றே உவேசாவும் எழுதியுள்ளார். உவேசா மறைந்தபின் அவர் பல சுவடிகளைப் பார்த்து
எழுதிய நற்றிணை உரை அச்சுப்போட்டுள்ளார்கள் (உவேசா நூலகம், கலாக்ஷேத்ரம், அடையாறு.1989).
அதில் பக். 151-152ல் இப்பாடலும், உரையும் உள்ளது.
“நெய்வெண் புழுக்கல் - நெய் கலந்த வெள்ளிய சோற்றினை, 
எலிவான்சூட்டொடு - வெள்எலியின் சூட்டு இறைச்சியொடு கலந்து’

வெண்புழுக்கல் என்றதால் வெண்சோறு.

ஔவை தன் உரையில் என்ன சொல்கிறார் எனப் பார்க்கவேண்டும்.

-------------------

புழுக்கல், புழுக்கு இரண்டுக்கும் வேறுபாடு உண்டா? ஆராயத் தக்கது.

103 - 4. துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி - அறுகம்புல்லாற்றிரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதிற் பரியமேற் குறங்கு நெகிழவெந்ததனை விழுங்கென்று 2பலகாலலைத்து,;

100. [வாரா தட்ட வாடூன் புழுக்கல்:]

வாராது அட்ட புழுக்கல்-அரியாது ஆக்கின சோற்றை,

எயிற்றியர் (94) பெய்து (96) ஓச்சி(97) தோண்டி (98) ஏற்றி(99) அட்ட புழுக்கலென முடிக்க.

வாடு ஊன்-உப்புக்கண்டத்தோடே,

NG

kanmani tamil

unread,
Jan 28, 2018, 11:15:27 AM1/28/18
to mintamil
வெண்புழுக்கல் என்றதால் வெண்சோறு.

ஔவை தன் உரையில் என்ன சொல்கிறார் எனப் பார்க்கவேண்டும்.

///புழுக்கல், புழுக்கு இரண்டுக்கும் வேறுபாடு உண்டா? ஆராயத் தக்கது.

103 - 4. துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி - அறுகம்புல்லாற்றிரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதிற் பரியமேற் குறங்கு நெகிழவெந்ததனை விழுங்கென்று 2பலகாலலைத்து,; 

100. [வாரா தட்ட வாடூன் புழுக்கல்:]

வாராது அட்ட புழுக்கல்-அரியாது ஆக்கின சோற்றை,

எயிற்றியர் (94) பெய்து (96) ஓச்சி(97) தோண்டி (98) ஏற்றி(99) அட்ட புழுக்கலென முடிக்க.

வாடு ஊன்-உப்புக்கண்டத்தோடே,///

புழுக்கல் =தொழிற்பெயர் --------வேக வைத்தல் 

புழுக்கு =பெயர்ச்சொல் ----------வேக வைத்த பண்டம் 

ஊன் புழுக்கல் =வேக வைத்த ஊன் 

வாராது அட்டதால் தான் அது சோறு.........அரிசியைத்தான் அரிப்பர்.எனவே இடம் நோக்கிப் பொருள் கொள்ளுங்கால் ------இவ்விடத்தில் சோறு தான்.

ஆனால்' மையூன் தெரிந்த நெய்  ' -----என்ற தொடருக்கு முதலில் சரியான பொருளைப் புரிந்து கொண்டோமானால் -----

                                                                                ஊன் வேக வைத்த அனுபவம் இருப்பினும் ----------

வெண் புழுக்கல் என்பது ------வெந்த பின்னர் வெண்மையான ,மென்மையான ,கொழுப்பின் படலம் சூழ்ந்த ஊன் என்பதில் ஐயமே வராது.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயருக்கும் ,உ.வே.சா.வுக்கும் ஒப்ப -----------பார்த்த அனுபவமும் இருக்க வாய்ப்பில்லை 

                                                                                                                                                  செய்த அனுபவமும் இருக்க வாய்ப்பில்லை 

                                                                                                                                                    உண்ட அனுபவமும் இருக்க வாய்ப்பில்லை

வெண்மை சோற்றுக்கு மட்டும் உரியதன்று.

கொழுப்பு சூழ்ந்த ஊனும் வெண்மையாகத் தான் இருக்கும்.

கண்மணி  

kanmani tamil

unread,
Jan 28, 2018, 11:17:26 AM1/28/18
to mintamil
///ஒன்று சாப்பிட, மற்றொன்று வெஞ்சனம் எனக் கொள்ளலாமா?
அன்பன்
கி.காளைரசான்///
உண்ட வாய்க்கு எது ருசியோ அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
கண்மணி 

kanmani tamil

unread,
Jan 28, 2018, 11:20:44 AM1/28/18
to mintamil
///ஊனோடு பழக்கப்படாத உரைகாரர் பேச்சுக்கள் பலவும் இலக்கியவுலகில் உலவுகின்றன. .................... அவை ஒரு வழிகாட்டி ///

ஆம் ஐயா .
அனுபவமின்மையே இத்தகு உரைகளுக்குரிய காரணம்.
கண்மணி 

N. Ganesan

unread,
Jan 28, 2018, 11:38:54 AM1/28/18
to மின்தமிழ், vallamai

2018-01-28 8:15 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

வெண்மை சோற்றுக்கு மட்டும் உரியதன்று.

கொழுப்பு சூழ்ந்த ஊனும் வெண்மையாகத் தான் இருக்கும்.

கண்மணி

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். 

இதனையும் பாருங்கள்:
(1)
சம்பந்தர் தேவாரத்தில் வெண்புழுக்கல், ஒண்புழுக்கல் - பாடங்கள் உள்ளன:
{$} பூம்பாவாய்
see 1st verse.
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசும் நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
Civaṉ who dwells with desire in Kapālīccaram and who is in the form of the sacred ash, in the great mayilai where beautiful ladies who coat their bright eyes with collyriyum gather together.
நெய்ப்பூசும் (1) வெண்புழுக்கல் நேர் இழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ
do you go without seeing the festival in pūcum in the mouth of tai when ladies wearing suitable jewels celebrate the festival with white rice soaked in ghee?
[[Variant reading: (1) ஒண்புழுக்கல்]]

(2)
(வ. சு. செங்கல்வராயர்)

(3)
"ஐந்தாவது பாட்டு, வெண்பொங்கல் சமைத்துக் கொண்டாடும் தைப்பூச விழாவைக் காணாது போதியோ என்று கூறுகிறது. தைப் பூசத்தில் நெய் பெய்த பொங்கல் செய்து பூசிக்க வேண்டும் என்பது, 'நெய் பூசும் வெண் புழுக்கல்' என்று பாட்டில் வருவதால் அறியலாம். இதனையும் மாதர்கள் சிறப்புடன் கொண்டாடுவர் என்பது நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்” என்று வருதலால் அறிகிறோம். இந்தக் கருத்துகளே 'நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும், தைப் பூசம் காணுதே போதியோ பூம்பாவாய்' என்னும் வரிகளில் காண்க. ஒண்புழுக்கலாவது வெண் பொங்கல். ” பாலூர் கண்ணப்பர், தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவத்தலங்கள், பக். 269.  https://ta.wikisource.org/wiki/பக்கம்:தொண்டை_நாட்டு_பாடல்_பெற்ற_சிவதலங்கள்.pdf/269

நா. கணேசன்

NG> வெண்புழுக்கல் என்றதால் வெண்சோறு.

ஔவை தன் உரையில் என்ன சொல்கிறார் எனப் பார்க்கவேண்டும்.

///புழுக்கல், புழுக்கு இரண்டுக்கும் வேறுபாடு உண்டா? ஆராயத் தக்கது.

103 - 4. துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி - அறுகம்புல்லாற்றிரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதிற் பரியமேற் குறங்கு நெகிழவெந்ததனை விழுங்கென்று 2பலகாலலைத்து,; 

100. [வாரா தட்ட வாடூன் புழுக்கல்:]

வாராது அட்ட புழுக்கல்-அரியாது ஆக்கின சோற்றை,

எயிற்றியர் (94) பெய்து (96) ஓச்சி(97) தோண்டி (98) ஏற்றி(99) அட்ட புழுக்கலென முடிக்க.

வாடு ஊன்-உப்புக்கண்டத்தோடே,///

N. Ganesan

unread,
Jan 28, 2018, 12:08:29 PM1/28/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-01-28 6:48 GMT-08:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

///மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்///
 ///யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு” ///

ஒன்று சாப்பிட, மற்றொன்று வெஞ்சனம் எனக் கொள்ளலாமா?

கொள்ளலாம். மட்டன் பிரியானி - மெயின் கோர்ஸ், வெள்ளெலி வறுவல் - வெஞ்சனம் (side dish).

மை ஊன் புழுக்கல் (மட்டன் பிரியாணி) + எலிவறுவல்[தொகு]

வளைவாய்க் கூகையே, இது கேள்! ஊர்மன்றத்துக் கடவுள் மழத்தில் இருந்துகொண்டு நான் அஞ்சும்படி உன் கடுங்குரலால் பயிற்றாதே! அவர் வரவை நள்ளிரவில் நான் நினைத்துக்கொண்டிருக்கும்போது குரல் எழுப்பாதே. குழறாமல் இருந்தால் மையூன் புழுக்கலும் எலிவறுவலும் உனக்குத் தருவேன். - தலைவி கூகையோடு பேசுகிறாள். [5]
(இது தான் செல்வன் பார்த்து எழுதியுள்ளார் என நினைக்கிறேன்).

------------------------------

இப்பாட்டை ஒப்பிட, பதிற்றுப்பத்து வரிகள்:
எஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை 
மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு 
நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி 

இங்கே மட்டன் பிரியானி + டாஸ்மாக் :)

மையூன்  மொசித்த ஒக்கலொடு - செம்மறி யாட்டுத்  தசையைத் தின்ற  சுற்றத்துடனே;  (புறம்)

வெள்ளெலி தின்னலாம். காரெலி அதற்குதவாது. 
அதேபோல, மையூன் = செம்மறியின் ஊன். வெள்ளாடு - வெளிறிய ஊன்.
செம்ம்மறி ஆட்டுக் கறிக்கும், வெள்ளாட்டுக் கறிக்கும் வேறுபாடு
காட்டியுள்ளனர் சங்கப் புலவர். வெள்ளாட்டின் கறியை விடச் செம்பிலிக் கறி கறுத்தது. எனவே, மையூன்.

நா. கணேசன்

அன்பன்
கி.காளைரசான்

N. Ganesan

unread,
Jan 28, 2018, 12:17:23 PM1/28/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2010-ல் முனைவர் சி. மகேசுவரி தினமணியில் நற்றிணையின் இப்பாட்டை எழுதியிருக்கிறார்:
சங்க இலக்கியங்களுள் தலைவன், தலைவி, தோழி, தாய், செவிலித்தாய் முதலிய பாத்திரங்கள் தனித்தனிச் சிறப்புப் பெற்று விளங்குவதைக் காண்கிறோம். 

ஆனால், தோழி மட்டுமே தலைவிக்குத் தாயாகவும், செவிலித் தாயாகவும் சிறப்புத் தகுதி பெற்று பரிணமிக்கிறாள்.

தலைவனைக் காணாதபோது தலைவிக்கு ஏற்படும் துன்பத்திலிருந்து தலைவி மீண்டுவர, பல வழிமுறைகளைக் கையாண்டு தலைவிக்கு உற்ற துணையாயிருப்பவள் தோழி. 

அவ்வாறு தலைவனைக் காணாதபோது தலைவியின் உடல் நோய் (பசலை) கண்டு வருத்தப்படுமே என்ற தாய்மையின் உள்ளத்தோடு தலைவனின் வருகைக்காக கூகையின் தடையைத் தகர்க்கிறாள். 

மேலும், கூகையின் அலறலால் வீட்டில் உள்ள அனைவரும் விழித்து எழுந்து விட்டால், தலைவிக்குக் கேடு சூழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு செவிலித்தாயின் அக்கறையோடு தலைவியைக் காப்பாற்றுகிறாள்.

இவ்வாறாகத் தோழியின் பண்பும், பங்கும், தலைவிமேல் கொண்ட அன்பும், சமயோஜித புத்தியும், அறிவுத் திறனும், வீரமும் அகப்பாடல்களுள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், பெருந்தேவனார் என்ற புலவர் இயற்றிய, நற்றிணை - குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்று தோழியின் பண்பை மிகவும் சிறப்பாக விளங்குகிறது.

தலைவியைக் காண தலைவன் இரவுக்குறியிடத்து வரும்போது, கூகையானது (கோட்டான்) தனது கடூர குரலை எழுப்பி, வீட்டில் உள்ள அனைவரையும் துயில் களையச் செய்கிறது. 

இதனால், தலைவனின் வருகை தடைபடுகிறது. 

தலைவியைக் காண முடியாமல் தலைவன் வந்தவழியே திரும்புகிறான். 

தலைவனைக் காண இயலாமல், அத்துன்பத்தைத் தாங்கமாட்டாது தலைவி வருத்தமுற்று முகம் வாடுவதைக் கண்ட தோழி, கூகையிடம், 

"ஏ! கூகையே! எங்கள் ஊரின் முகப்பிலுள்ள பொய்கையின் அருகில் கடவுள் வீற்றிருக்கும் முதிய மரத்தின் மீதிருந்து வளைந்த வாயையும், தெளிந்த கண்களையும், கூரிய நகத்தையும் வைத்துக்கொண்டு பறையோசை போன்ற உன் குரல் ஒலியால் பிறரை வருத்துகிறாய். நாங்கள் ஆட்டிறைச்சியோடு நெய்ச்சோற்றினையும், வெள்ளெலியின் சூடான இறைச்சியையும் உனக்கு நிறையக் கொடுப்போம். எம்மிடம் அன்பு நிறைந்த எம் காதலர் வருவதை விரும்பி, இரவில் கூட துயில்கொள்ளாமல் உள்ளம் சுழன்று வருந்துகிறோம். அவ்வேளையில், யாவரும் அஞ்சி விழித்துக் கொள்ளும்படியாக உன் கடுமையான குரலை எடுத்துக் குழறி எங்களை வருத்துகிறாய். அவ்வாறு எங்களை வருத்தாதே'' 

என்று கூறுகிறாள்.

கூகையின் ஒலியால் தலைவனைக் காணமுடியாமல் வருத்தமடையும் தலைவியின் வருத்தம் கண்டு பொறுக்காத தோழி, கூகையிடம் இவ்வாறு தாழ்மையுடன் கெஞ்சி, கூகையைக் குளிர்விக்கிறாள். 

கூகையிடம் தோழி கெஞ்சிக் குளிர்விக்கும் பாடல் வருமாறு:-

"எம்மூர் வாயில் ஒண்துறைத் தடைஇய

 கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
 தேயா வளைவாய்த் தெண்கண் கூர்உகிர்

 வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
 மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
 எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்
 எஞ்சாங் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்
 துஞ்சாது அலமரு பொழுதின்
 அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே''.    (நற்றிணை - பா. 83)

சி.மகேஸ்வரி

நன்றி:- தினமணி 

kanmani tamil

unread,
Jan 28, 2018, 2:01:28 PM1/28/18
to mintamil
///2010-ல் முனைவர் சி. மகேசுவரி தினமணியில் நற்றிணையின் இப்பாட்டை எழுதியிருக்கிறார்:///

 முனைவர்.சி மஹேஸ்வரிக்கும்  ஊன் உணவைப் பற்றித் தெரியவில்லை

///நெய்ப்பூசும் (1) வெண்புழுக்கல் நேர் இழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ
do you go without seeing the festival in pūcum in the mouth of tai when ladies wearing suitable jewels celebrate the festival with white rice soaked in ghee?
[[Variant reading: (1) ஒண்புழுக்கல்]]///

தைப்பூசத்தன்று யாருமே ஊனுணவு உட்கொள்ளார்.நெய் சேர்த்த பொங்கல் தான் உண்பர்.
ஆனால் கூகை சோறு உண்ணாது.ஊனும் ,எலியுமே உண்ணும்.

///மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு 
நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி 
  //
இங்கு வெண்ணெல் வெண்சோறு வெளிப்படையாக உள்ளது.எனவே ஐயமேதும் இல்லை.
ஆனால் நற்றிணைப்பாடலில் வெண் புழுக்கல் மட்டுமே உண்டு -----வெந்த பின் வெண்ணிறமாகத் தெரியும் .
நிணம் 

///அதேபோல, மையூன் = செம்மறியின் ஊன். வெள்ளாடு - வெளிறிய ஊன்.
செம்ம்மறி ஆட்டுக் கறிக்கும், வெள்ளாட்டுக் கறிக்கும் வேறுபாடு
காட்டியுள்ளனர் சங்கப் புலவர். வெள்ளாட்டின் கறியை விடச் செம்பிலிக் கறி கறுத்தது. எனவே, மையூன்.///

வெளிறிய ஊன் என்பதற்கும் வெள்ளை ஊன் என்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டல்லவா!!
செம்மறிக்கறி வெள்ளாட்டின் கறியைக் காட்டிலும் நிறம் மாறுபட்டது.அவ்வளவே.
ஆனால் இந்த மேற்கோள் சுட்டும் "மையூன் தெரிந்த நெய்  வெண் புழுக்கல் "---
'தெரிந்த ' என்ற பெயரெச்சம் இங்கு வரக் காரணம் என்ன?
இந்தப் பெயரெச்சத்தின் பொருளை முற்றுப் பெறச் செய்வது ----நெய் ?/ நெய்  வெண் புழுக்கல் ?
சங்க இலக்கியத்தில் எந்த ஒரு சொல்லும் தேவையின்றி வருவதில்லை .
இரண்டு கேள்விகளுக்கும் பதில் தேடினால் கிடைக்கும் பொருள் நான் சொல்வதே.

கண்மணி 

N. Ganesan

unread,
Jan 28, 2018, 11:32:15 PM1/28/18
to மின்தமிழ்

On Sunday, January 28, 2018 at 11:01:28 AM UTC-8, kanmanitamilskc wrote:
<< பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் உரை இவ்வாறு கூறுகிறது.
ஆனால் இங்கே சோறு எங்கிருந்து வந்தது?
மையூன் =கொழுப்புடன் கூடிய ஊன் 
மையூன் தெரிந்த நெய் =கொழுப்புடன் கூடிய ஊனைச் சமைக்கும் போது உருகிவரும் நெய் 
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல் =கொழுப்புடன் கூடிய ஊனைச் சமைக்கும் போது ;அது உருகி வெளிப்படும் நெய்யிலே வெந்து வெண்மையாகக் காணப்படும் தசைத் துண்டுகள்  
இவ்வாறு கொழுப்புடன் கூடிய ஊனை இன்றும்  மதுரை வட்டாரத்தில் ---ரவாசு ---என்று தான் அழைப்பர்.
 கொழுப்பிலே வெந்து பதமாகும் ஊனை இன்றும் மதுரை வட்டாரத்தில் 'சுக்கா '  என்று சொல்வர்.
கொஞ்சம் தெற்கே வந்தால் 'வறட்டுக்கறி 'என்பர். >>

கொங்குநாட்டில் ’வறுகறி’. பெருமாள் முருகன் ‘வறுகறி’ என்ற சிறுகதை - பன்றிக்கறியை வறுத்தல்.

மை ஊன் - செம்மறி ஊன், வெள் ஊன் - வெள்ளாட்டு ஊன் (வெள்ளை வெள்மறி - அகம்).
-----------

///நெய்ப்பூசும் (1) வெண்புழுக்கல் நேர் இழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ
do you go without seeing the festival in pūcum in the mouth of tai when ladies wearing suitable jewels celebrate the festival with white rice soaked in ghee?
[[Variant reading: (1) ஒண்புழுக்கல்]]///

தைப்பூசத்தன்று யாருமே ஊனுணவு உட்கொள்ளார்.நெய் சேர்த்த பொங்கல் தான் உண்பர்.
ஆனால் கூகை சோறு உண்ணாது.ஊனும் ,எலியுமே உண்ணும்.

பலிச்சோற்றை விளக்கியுள்ளார் க. வெள்ளைவாரணனார்.

நா. கணேசன்

nkantan r

unread,
Jan 29, 2018, 2:52:39 AM1/29/18
to மின்தமிழ்
Quite an interesting topic. Being another person unaware of cooking or tasting meat...i don't have a direct say on that.. YET,

1) we discussed in another thread about புழுங்கல் அரிசி.
https://groups.google.com/forum/m/#!topic/mintamil/nKz8NXNb3fk

Essentially it is sweating by steam?

2) it also brings to mind the (legendary) story of adi shankara's parakaaya pravesha to answer the questions on sexual relations by ubhaya Bharati. Experience counts...

rnk

Pandiyaraja

unread,
Jan 29, 2018, 6:43:21 AM1/29/18
to மின்தமிழ்
சைவ உணவுக்கார உரையாசிரியர்கள் அசைவ உணவைப்பற்றி எழுதியதில் தவறுகள் இருக்கலாம் என்ற வகையில் சில கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட்டுள்ளன.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் போன்றவர்களை அவ்வளவு எளிதில் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.
அவர்கள் அசைவ உண்வுக்குப் பழக்கமற்றவர்கள் என்பதால் அவர்கள் அசைவ உணவு பற்றி எழுதியதில் தவறு உள்ளது என்று கூறுவதுதான் தவறு. உரையாசிரியர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றிலும் பட்டறிவு இருக்கவேண்டும் என்பதில்லை. கேள்வி ஞானம் என்று ஒன்று உண்டல்லவா? அவ்வாறு கேள்வி ஞானத்தால் மிகச் சரி என்று கேள்விப்பட்டதைவைத்துத்தான் அவர்கள் உரை எழுதுகிறார்கள். அவர்கள் கூறுவதற்கு மாற்றுக் கருத்துக்கள் கூறலாம். ஆனால் அவர்களுக்குப் பட்டறிவு இல்லை என்று அவ்வளவு எளிதில் அவர்களை ஒதுக்கிவிடமுடியாது. இல்லாவிட்டால் அவர்கள் சங்க இலக்கியம் போன்ற ஆழ்ந்த பொருள்கொண்ட பாடல்களுக்கு உரை எழுதத் துணியமாட்டார்கள். மேலெழுந்தவாரியாக தங்கள் விருப்பத்துக்கு எழுதக்கூடியவர்கள் அவர்கள் இல்லை.
ஒருவேளை அவர்கள் அசைவ உணவுக்காரர்களேயாக இருந்தாலும், அவர்கள் சமையலறைக்குள் நுழைந்து சமைத்துப்பார்த்துத்தான் எழுதியிருக்கிறாகள் என்று கொள்ளமுடியுமா? வீட்டுக்கார அம்மா சமைப்பதைப் பார்த்திருப்பார்கள் - இல்லை, அவர்கள் மூலம் தெரிந்துவைத்திருப்பார்கள். அதைப் போலவே, சைவ உணவுக்காரர்களும், அடுத்தவீட்டுக்கார அம்மா சமைப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கமாட்டார்களா?

புழுக்கல் என்பதற்கு புழுங்கிய சோறு என்ற பொருள் நிச்சயமாக சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
நெல்லை அவித்து அதினின்றும் அரிசி எடுப்பார்கள். அது புழுங்கல் அரிசி. அவ்வாறில்லாமல், நெல்லை அவிக்காமலேயே அரிசியை எடுத்தால் அது பச்சரிசி.
இந்த இரண்டு வகை அரிசியிலிருந்தும் சோறு ஆக்குகிறார்கள். உலையில் நிறைய நீரிட்டு, அதில் அரிசியைப் போட்டு, அரிசி வெந்ததும் அதிகமாக உள்ள நீரை வடித்துவிட்டுப் பதமாகச் சோறு ஆக்குவார்கள். இது ஒரு விதம். அவ்வாறில்லாமல், புழுங்கலரிசியோ, அல்லது பச்சரியோ, உலையில் அளவாக நீர் விட்டு, அரிசியை இட்டு, நன்கு கொதிவந்ததும் பக்குவமான நிலையில் வடிக்காமல் சோறு ஆக்குவார்கள். இதனை, "சோற்றை வடிக்காமல் அப்படியே புழுக்கிவிடு" என்று சொல்வார்கள். இது புழுங்கிய சோறு. இதனையே சங்க இலக்கியங்கள் புழுக்கல் என்கின்றன.
மாமிசத்தையோ, மீனையோ பலவகைகளில் சமைக்கலாம். சுட்டு உண்ணலாம். எண்ணெயில் பொரிக்கலாம். அல்லது நீரில் வேகவைத்து வேறு பொருள்கள் சேர்த்து உண்ணலாம். இவ்வாறு நீரில் வேகவைத்து உண்ணப்படும் சைவ/அசைவ உணவு புழுக்கு எனப்படுகிறது. மீன் புழுக்கு, அவரை விதைப் புழுக்கு ஆகியவற்றைப்பற்றி சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் பல இருக்கின்றன.
இதைப் பற்றி, சான்றுகளுடன், வேறு ஓர் இழையில் பின்னர் எழுதுகிறேன்.
பி.கு.
இதைவைத்து என் வீட்டில் நான்தான் சோறு ஆக்குகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்!
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Jan 29, 2018, 7:43:04 AM1/29/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-01-29 3:43 GMT-08:00 Pandiyaraja <pipi...@gmail.com>:

பின்னத்தூரார் மட்டுமில்லை. உவேசா அவர்களும் வெண்புழுக்கல் = வெள்ளிய சோறு என்றே உரை செய்துள்ளார்கள்.
 உவேசா மறைந்தபின் அவர் பல சுவடிகளைப் பார்த்து
எழுதிய நற்றிணை உரை அச்சுப்போட்டுள்ளார்கள் (உவேசா நூலகம், கலாக்ஷேத்ரம், அடையாறு.1989).
அதில் பக். 151-152ல் இப்பாடலும், உரையும் உள்ளது.
“நெய்வெண் புழுக்கல் - நெய் கலந்த வெள்ளிய சோற்றினை, 
எலிவான்சூட்டொடு - வெள்எலியின் சூட்டு இறைச்சியொடு கலந்து’

வெண்புழுக்கல் என்றதால் வெண்சோறு.

ஔவை தன் உரையில் என்ன சொல்கிறார் எனப் பார்க்கவேண்டும்.

-------------------

கொங்குநாட்டில் பட்டி நோன்பின்போது “அசனம் பட்டியாரே அரசனம்” என்று மாட்டுக்குச் சோறூட்டுவோம். திதியின் போது முன்னோர்களுக்கு பலிச்சோறு காக்கைக்கு இடுவது
தொல்தமிழர் மரபு. அதே போல, இந்த நற்றிணைப் பாடல் தமிழர் சமய நம்பிக்கை கூறும் பாடல். விளக்கம்: பேரா. க. வெள்ளைவாரணனார், அண்ணாமலைப் பல்கலை.
பேய்களும், பிணக்காடும் உள்ள இடங்களில் கூகை குழறும். எனவே, கூகை குழறலைத் தீநிமித்தம் என்பது தமிழர் வழக்கம். இந்தியா முழுதும் இவ்வழக்கம் உண்டு.
பலிச்சோறு கொடுக்கிறேன், அபசகுனமாகத் தலைவன் வருகையில் அலறாதே என்று தோழி கோட்டானைக் கெஞ்சும் பாடல்.

பலிச்சோறு - மை ஊனும், ஆய்ந்து அமைந்த (=தெரிந்த) நெய்யும் விராய வெண்புழுக்கல் என்பது பாடல் வரியின் பொருள்.
பலி (bali) < பொலி (பலிசை < பொலிசை), வடமொழிக்குத் தமிழ் தந்த சொல் பலி. சங்க இலக்கியத்தில் சான்றுள்ள பழய வார்த்தை இஃது.

நா. கணேசன்

புழுக்கல் என்பதற்கு புழுங்கிய சோறு என்ற பொருள் நிச்சயமாக சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
நெல்லை அவித்து அதினின்றும் அரிசி எடுப்பார்கள். அது புழுங்கல் அரிசி. அவ்வாறில்லாமல், நெல்லை அவிக்காமலேயே அரிசியை எடுத்தால் அது பச்சரிசி.
இந்த இரண்டு வகை அரிசியிலிருந்தும் சோறு ஆக்குகிறார்கள். உலையில் நிறைய நீரிட்டு, அதில் அரிசியைப் போட்டு, அரிசி வெந்ததும் அதிகமாக உள்ள நீரை வடித்துவிட்டுப் பதமாகச் சோறு ஆக்குவார்கள். இது ஒரு விதம். அவ்வாறில்லாமல், புழுங்கலரிசியோ, அல்லது பச்சரியோ, உலையில் அளவாக நீர் விட்டு, அரிசியை இட்டு, நன்கு கொதிவந்ததும் பக்குவமான நிலையில் வடிக்காமல் சோறு ஆக்குவார்கள். இதனை, "சோற்றை வடிக்காமல் அப்படியே புழுக்கிவிடு" என்று சொல்வார்கள். இது புழுங்கிய சோறு. இதனையே சங்க இலக்கியங்கள் புழுக்கல் என்கின்றன.
மாமிசத்தையோ, மீனையோ பலவகைகளில் சமைக்கலாம். சுட்டு உண்ணலாம். எண்ணெயில் பொரிக்கலாம். அல்லது நீரில் வேகவைத்து வேறு பொருள்கள் சேர்த்து உண்ணலாம். இவ்வாறு நீரில் வேகவைத்து உண்ணப்படும் சைவ/அசைவ உணவு புழுக்கு எனப்படுகிறது. மீன் புழுக்கு, அவரை விதைப் புழுக்கு ஆகியவற்றைப்பற்றி சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் பல இருக்கின்றன.
இதைப் பற்றி, சான்றுகளுடன், வேறு ஓர் இழையில் பின்னர் எழுதுகிறேன்.
பி.கு.
இதைவைத்து என் வீட்டில் நான்தான் சோறு ஆக்குகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்!
ப.பாண்டியராஜா

On Monday, January 29, 2018 at 1:22:39 PM UTC+5:30, nkantan r wrote:
Quite an interesting topic. Being another person unaware of cooking or tasting meat...i don't have a direct say on that.. YET,

1) we discussed in another thread about புழுங்கல் அரிசி.
https://groups.google.com/forum/m/#!topic/mintamil/nKz8NXNb3fk

Essentially it is sweating by steam?

2) it also brings to mind the (legendary) story of adi shankara's parakaaya pravesha to answer the questions on sexual relations by ubhaya Bharati. Experience counts...

rnk

--

N. Ganesan

unread,
Jan 29, 2018, 8:33:06 AM1/29/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai
Sankara hagiographical stories are largely from Tamil language, translated into wider Indian audience. Just like Srimad Bhagavatam, the most famous
Bhakti work in Sanskrit directly follows from Alvar "the immersed (in meditation)" paasurams. MaNanool, "the book of marriages" is Jeevaka Chintamani,
penned by Tirutakka Devar of Kongunad, He was a Jaina monk, yet ChintamaNi is known for beautiful descriptions of conjugal love making.
Ilango aDikaL, a Jaina monk also, describes intimate relationship between Kovalan with his caste wife (Kannaki) or the devadasi (Madhav) quite vividly.

-----------------------------

நற்றிணைப் பாடலில் வரும் வெண்புழுக்கல் என்பது சோறு.
Madras Tamil Lexicon:
வெண்புழுக்கல் veṇ-puḻukkal, n. < id. +. 1. Under boiling; parboiling; இளம்புழுக்கல். (J.) 2. Rice obtained by husking parboiled paddy; இளம்புழுக்கலரிசி. 3. See வெண்சோறு.

சி. மகேசுவரி, 2010, தினமணி:

வித்துவான் செங்கை பொதுவன் ஐயா, நற்றிணைப் பாடல் விளக்கவுரை:
செங்கை = செங்காட்டுப்பட்டி, கொங்குநாடு.
எனதுரைகளுக்கு வந்திருக்கிறார்கள் செங்கை ஐயாவும், அம்மாவும்.
அவர்களைப் பற்றி அறிய: 

புலவர் குணசீலன், கேஎஸ்ஆர் கல்லூரி, திருச்செங்கோடு விளக்கவுரை:

etc.
--------------------------------

புழுக்கல் என்றால் சோறு என்று காலமெல்லாம் தமிழில் சொல்லியுள்ளனர். தொகுக்கலாம்.
இப்போது ‘பொங்கல்’ என்கிறோமே. அந்த உணவின் பழைய பெயர்: ’புழுக்கல்’ என்றிருக்கலாம்.
அதில் பேலியோ புழுக்கல், சைவ புழுக்கல் என இருவகை உண்டு. சம்பந்தர் கூறும்
தைப்பூச நைவேத்தியம் ஆகிய வெண்புழுக்கல் சைவ வெரைட்டி (=வெண்பொங்கல்). நற்றிணைப் பாட்டில்
தோழி கூகை (=கோட்டான், பேராந்தை)க்கு தருவேன், அபசகுனமாய் அலறாதே என்று
மன்றாடுவது ஊனும், சிறந்த (=தெரிந்த) நெய்யும் விராவிய வெண்புழுக்கல், இது பலிச்சோறு, பேலியோ வெரைட்டி.
கொங்குநாட்டின் ‘புழுக்கல்’ - கொங்கு பிரியாணி என்கிறார் நாஞ்சில் நாடன். இது சைவம், எளிய சத்துணவு.

”கொங்கு நாட்டு உணவு வகைகளில் உங்களைக் கவர்ந்தது?”
‘கொங்கு மக்களின் எளிய உணவுகளில் பலவும் எனக்குப் பிடிக்கும். கச்சாயம், காட்டுக் கீரை கடைசல், அரிசீம் பருப்பும் சாதம்… என்பன சில. அவற்றுள் என்னைக் கவர்ந்தது ‘அரிசீம் பருப்பும் சாதம்’. இதை விளையாட்டாகக் ‘கொங்கு பிரியாணி’ என்பார்கள்.
உரித்த முழுதான சின்ன வெங்காயம், கிள்ளிப்போட்ட வரமிளகாய், கறிவேப்பிலை, கடுகு, காயப்பொடி, மஞ்சள்தூள் போட்டு கடலை எண்ணெயில் வதக்கி, தக்காளி அரிந்துபோட்டு தண்ணீர் விட்டு புழுங்கலரிசி ஒரு கப், துவரம்பருப்பு கால் கப் போட்டு வேகவிட வேண்டும். அதில் பூண்டு, சீரகம், நல்ல மிளகு போட்டு வெந்தவுடன் இறக்கவேண்டியதுதான். சூடாகச் சாப்பிட வேண்டும்; வாசமாக இருக்கும். கண்டிப்பாக உப்பு போட மறந்துவிடாதீர்கள். கவனிக்கவும், கொங்கு மண்ணில் விளையாத எந்த இறக்குமதிச் சரக்கும் இந்த உணவில் இல்லை!” https://nanjilnadan.com/2014/06/04/விகடன்மேடை/
-----------------------

கொங்குநாட்டில் பட்டி நோன்பின்போது “அசனம் பட்டியாரே அரசனம்” என்று மாட்டுக்குச் சோறூட்டுவோம். திதியின் போது முன்னோர்களுக்கு பலிச்சோறு காக்கைக்கு இடுவது
தொல்தமிழர் மரபு. அதே போல, இந்த நற்றிணைப் பாடல் தமிழர் சமய நம்பிக்கை கூறும் பாடல். விளக்கம்: பேரா. க. வெள்ளைவாரணனார், அண்ணாமலைப் பல்கலை.
பேய்களும், பிணக்காடும் உள்ள இடங்களில் கூகை குழறும். எனவே, கூகை குழறலைத் தீநிமித்தம் என்பது தமிழர் வழக்கம். இந்தியா முழுதும் இவ்வழக்கம் உண்டு.
பலிச்சோறு கொடுக்கிறேன், அபசகுனமாகத் தலைவன் வருகையில் அலறாதே என்று தோழி கோட்டானைக் கெஞ்சும் பாடல் இது.

“கூகைச் சேவல் குராலோடேறி
ஆரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறும்
அணங்கு கால் கிளருங் மயங்கிருள் நடுநாள்”–-(அகம் 260)

“திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்
இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்”– (அகம் 122)
(இதனால்தான், தோழி எலிக்கறி வெஞ்சனமாய்த் தருவேன் என்கிறாள் நற்றிணையில்).

“பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
சுட்டுக்குவியென செத்தோர்ப்பயிரும்
கள்ளியம் பறந்தலை” – (புறம்.240)
(ஆய் அண்டிரன் இறந்தபோது அவனது பெண்டிர் பலர் தீப்பாய்ந்தனர். கூகை
“சுட்டுக் குவி” என அலறியது.)

முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்காடெய்திய ஞான்றே (புறம்.364) 
முதுமக்கள் தாழி உள்ள இடுகாட்டில் கூகை குழறல்.

பலிச்சோறு - மை ஊனும், ஆய்ந்து அமைந்த (=தெரிந்த) நெய்யும் விராய வெண்புழுக்கல் என்பது பாடல் வரியின் பொருள்.
பலி (bali) < பொலி (பலிசை < பொலிசை), வடமொழிக்குத் தமிழ் தந்த சொல் பலி. சங்க இலக்கியத்தில் சான்றுள்ள பழய வார்த்தை இஃது.

நா. கணேசன்
https://archive.org/details/@dr_n_ganesan

kanmani tamil

unread,
Jan 29, 2018, 10:58:52 AM1/29/18
to mintamil
. Experience counts...

rnk
நன்றி ஐயா ,அனுபவம் என்பது ......ஏட்டுச்சுரைக்காய் போன்றதல்ல.
கண்மணி 

--

kanmani tamil

unread,
Jan 29, 2018, 11:07:22 AM1/29/18
to mintamil

///

Pandiyaraja

17:13 (4 hours ago)
to மின்தமிழ்
சைவ உணவுக்கார உரையாசிரியர்கள் அசைவ உணவைப்பற்றி எழுதியதில் தவறுகள் இருக்கலாம் என்ற வகையில் சில கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட்டுள்ளன.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் போன்றவர்களை அவ்வளவு எளிதில் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.
அவர்கள் அசைவ உண்வுக்குப் பழக்கமற்றவர்கள் என்பதால் அவர்கள் அசைவ உணவு பற்றி எழுதியதில் தவறு உள்ளது என்று கூறுவதுதான் தவறு. உரையாசிரியர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றிலும் பட்டறிவு இருக்கவேண்டும் என்பதில்லை. கேள்வி ஞானம் என்று ஒன்று உண்டல்லவா? அவ்வாறு கேள்வி ஞானத்தால் மிகச் சரி என்று கேள்விப்பட்டதைவைத்துத்தான் அவர்கள் உரை எழுதுகிறார்கள். அவர்கள் கூறுவதற்கு மாற்றுக் கருத்துக்கள் கூறலாம். ஆனால் அவர்களுக்குப் பட்டறிவு இல்லை என்று அவ்வளவு எளிதில் அவர்களை ஒதுக்கிவிடமுடியாது. இல்லாவிட்டால் அவர்கள் சங்க இலக்கியம் போன்ற ஆழ்ந்த பொருள்கொண்ட பாடல்களுக்கு உரை எழுதத் துணியமாட்டார்கள். மேலெழுந்தவாரியாக தங்கள் விருப்பத்துக்கு எழுதக்கூடியவர்கள் அவர்கள் இல்லை.///

ஐயா ,பின்னத்தூர் நாராயணசாமி ஐயரை ........மேலெழுந்தவாரியாகத் தன்விருப்பத்துக்கு எழுதக்கூடியவர் என்று நான் நினைக்கவில்லை.
அவர் கேள்வி ஞானத்தால் எழுதினாலும் .........தான் முன்னின்று சமைப்பவரின் அனுபவம் வர வாய்ப்பில்லை என்று தான் இப்போதும் கருதுகிறேன்.
கண்மணி  

Singanenjam Sambandam

unread,
Jan 29, 2018, 11:50:11 AM1/29/18
to mint...@googlegroups.com
நீராவியில் வேகவைத்த நேந்தரம் வாழைப்பழம் , புழுக்கின பழம் என்றே அழைக்கப் படுகிறது  

Pandiyaraja

unread,
Jan 29, 2018, 12:09:53 PM1/29/18
to மின்தமிழ்
>>
தான் முன்னின்று சமைப்பவரின் அனுபவம் வர வாய்ப்பில்லை என்று தான் இப்போதும் கருதுகிறேன்.
>>
தீ சுடும் என்பதைத் தெரிந்துகொள்ள தீக்குள் கையை விட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிறீர்கள்!!
ப.பாண்டியராஜா
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jan 29, 2018, 12:10:17 PM1/29/18
to mintamil
////பலிச்சோறு - மை ஊனும், ஆய்ந்து அமைந்த (=தெரிந்த) நெய்யும் விராய வெண்புழுக்கல் என்பது பாடல் வரியின் பொருள்.///

உங்கள் வசதிக்காக நீங்கள் செய்து கொள்ளும் கற்பனை இது.
காக்கைக்கு இடும் பலியை கூகைக்கு இடுவதாக .........பாடலில் இல்லாதவற்றையெல்லாம் .........இட்டுக்கட்டி எழுதக்கூடாது.
மை ஊன் =செம்மறி ஊன்(சரி) 
தெரிந்த நெய் =ஆய்ந்து அமைந்த நெய் .......இதை ஏற்றுக்கொள்ள முடியாது......ஏன் ?அந்தக் காலத்திலேயே நெய்யில் கலப்படம் வந்து விட்டதா?இன்றைய தொலைக்காட்சி விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லும் கருத்து இது.
தெரிந்த=வெளிப்பட்ட .............இப்பொருள் அனுபவத்தின் வாயிலாகச் சொல்வது.........
தெரிந்த நெய்வெண் புழுக்கல் =வெளிப்பட்ட நெய்யில் வெந்து வெண்மையாகத் தோன்றும் .....

வெண்புழுக்கல் =வெண்சோறு என்ற பொருள்படும் இடங்கள் உள்ளன.ஆனால் இங்கே அது பொருந்தாது.......இடம் நோக்கியும் காலம் நோக்கியும் பொருள் கொள்வதே சிறப்பாக இருக்க முடியும்.

ஆங்காங்கு எலிப் பொரியல் என்று சொல்லியுள்ளீர்கள் ........பொரியலுக்கும் சூட்டிற்கும் வேறுபாடு உண்டு.

வெள்ளெலி என்று விதந்து சொல்ல வேண்டிய தேவை என்ன?........கூகை காரெலியும் தின்னும்.

செல்வன் சொன்னது போல் பிரியாணி இல்லை என்று தான் நான் கூற முனைந்தேன். ஏனென்றால் அது 'ஊன்துவை அடிசில் 'என்றே பல பாடல்களிலும் பயின்று வருகிறது.

இன்றைய உணவு முறையில் (Starter,Soup,Roti,Main dish,Side dish,Juice/Fruits,Dessert) என்று இருப்பதைப் போல பண்டைத் தமிழகத்தில் ஒரு விருந்துணவு முறை இருந்துள்ளது.அதன்படி ' ஊன்துவை அடிசிலும் ,புழுக்கும்,சூட்டும்,இனிப்பும் 'என ஓம்பியமைக்கு சான்றுகள் உள்ளன.

உரையாசிரியர்கள் விளக்குத்தூண்கள்.அவர்கள் காட்டும் வெளிச்சத்தில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.விளக்குத் தூண்களோடு நின்று விட்டால் மேற்படி பயணமே தேங்கி நின்று விடும்.
கண்மணி   

kanmani tamil

unread,
Jan 29, 2018, 12:15:46 PM1/29/18
to mintamil
///நீராவியில் வேகவைத்த நேந்தரம் வாழைப்பழம் , புழுக்கின பழம் என்றே அழைக்கப் படுகிறது ///
ஆம் .நீராவியில் வேக வைத்து உண்பது திராவிட நாகரிகத்தின் அடையாளமாய் நம்மில் இன்றும் நிலைத்திருக்கும் எச்சம்.
நீங்கள் சொல்லும் புழுக்கின பழம் கேரளத்தில் குழந்தைகளுக்கு முதன்முதல் திட உணவாகக் கொடுக்கப்படுகிறது.
கண்மணி  

kanmani tamil

unread,
Jan 29, 2018, 12:21:17 PM1/29/18
to mintamil
///தீ சுடும் என்பதைத் தெரிந்துகொள்ள தீக்குள் கையை விட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிறீர்கள்!!
ப.பாண்டியராஜா///

இல்லை ஐயா .நான் அசைவ சமையல் பற்றி மட்டும் தான் பேசினேன்.
கண்மணி 

Pandiyaraja

unread,
Jan 29, 2018, 10:46:32 PM1/29/18
to மின்தமிழ்
அசைவம் உண்ணுவோருக்குத்தான் அசைவம் பற்றித் தெரியும் என்று தாங்கள் குறிப்பிட்டிருந்தததற்குத்தான் இந்தத் தீச்சுடுதல் பற்றிப் பேசினேன் அம்மா!
ப.பாண்டியராஜா
. Experience counts...
<br sty

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 29, 2018, 11:05:27 PM1/29/18
to mintamil
ஆந்தையானது எலி முதலானவற்றைக் கொத்திக் கிழித்துப் பச்சையாகக் குருதியுடன் சேர்த்து அப்படியே  சாப்பிடும்.

வேகவைத்த உணவுகளையோ பொரித்த உணவுகளையோ சாப்பிட்டதாகக் கேள்விப்பட்டதில்லை.

தலைவியின் வீட்டில் அன்று விருந்து போலும்.

மிச்சம் விழுந்திருக்கும் அசைவ உணவுகளை ஆந்தைக்குக் கொடுப்பதாக ஆசைகாட்டி ஏமாற்றப் பார்க்கிறாள். :)))

ஆனால் பாவம், ஆந்தை வேகவைத்ததையோ பொரித்ததையோ உண்ணாது என்பதை அவள் அறியவில்லை. :)))

2018-01-26 21:28 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
மட்டன் பிரியாணியும், எலிப்பொறியலும்

நற்றிணையில் காதலன் வரவை எதிர்பார்த்து காதலி காத்திருக்கிறாள். அப்போது அங்கே உள்ள கடவுள் வாழ்வதாக கருதப்படும் மரம் ஒன்றில் ஆந்தை ஒன்று அமர்ந்திருக்கிறது. அது கூவி, கீவித்தொலைத்தால் அதன் குரல் கடுமையைக்கண்டு காதலன் வராமல் போய்விடுவானோ என அவளுக்கு ஒரே அச்சம்.

அதனால் இப்பாடலை பாடுகிறாள்

"எம்மூர் வாயில் உண்டுறைத் தடை இய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூருகிர்
வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலி வான்சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரும் பொழுதில்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே”– நற்றிணை 83 

"வலுவான ஆந்தையே..ஊர் எல்லையில் கடவுள் வாழ்வதாக கருதப்படும் மரத்தில் அமர்ந்து உன் கூரிய நகங்களால் அனைவரையும் அச்சுறுத்துவாய். உனக்கு மையூன் புழுக்கலும் (நெய்யும், ஊனும் கலந்த புழுங்கல் அரிசியும்), சூடான எலிக்கறியும் தருவோம். காதலன் வரும் சமயம் சத்தம் போடாமல் இரு"

அப்பவே மட்டன் பிரியாணி இருந்திருக்கு..இவங்க என்னடான்னா கிச்சடியை தேசிய உணவா அறிவிக்கறாங்க

--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

N. Ganesan

unread,
Jan 30, 2018, 2:36:56 AM1/30/18
to மின்தமிழ், vallamai
Kanmani>  வெள்ளெலி என்று விதந்து சொல்ல வேண்டிய தேவை என்ன?........கூகை காரெலியும் தின்னும். 

 தேவை இருக்கிறது. சமைத்த பலிச்சோற்றுடன் வெள்ளெலி வறுவல் தருகிறேன் என்கிறாள் தோழி.

வெள்ளெலி பகலில் வெளியே வரவே வராது. அதனை  nocturnal species என்பர் (எல்லா Indian mammals நூல்களிலும் rodents section பாருங்கள்.)
இரவிலே தான் வெள்ளெலி (Indian gerbil. its current scientific name: tatera indica) வங்கில் இருந்து வெளியேறி இரைதேடும்.
இதனை நள்ளிரவில் அலறும் கூகைகள் விரும்பிப் பிடித்துண்ணும். சங்கப் புலவர் பதிவு செய்துள்ளனர்.

“திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்
இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்”– (அகம் 122)
இங்கே, இல்லெலி = வெள்ளெலி (Indian gerbil).

நள்ளிரவில் அணங்கு, பேய்கள், கடவுளர் வாழும் முதுமரங்களில் இருந்து கூகை குழறல் தீ நிமித்தம்.
’எங்கள் தலைவன் வருகையில் அந்த அபசகுனம் செய்யாதே. உனக்கு விருப்பான  பலிச்சோறும், வெள்ளெலியும்
அட்டித்துத் தருகிறேன்’ என்கிறாள் தோழி (பெருந்தேவனார் பாடல், நற்றிணை).

ஒன்று தந்து மற்றொன்றைப் பெறுதல் நம் சமய வழக்கம். அதனைக் கூறும் அரிய சங்கப் பாடலை செல்வன் தந்துள்ளார்.
 இதனை இன்றும் நேர்த்திக்கடன்களில் (உ-ம்: ஆனைமலை மாசாணியம்மன். இவள் நன்னனால் கொலையுண்ட பெண்மணி.) 
காணலாம்.  ஔவையும் இந்த mutual exchange பாடித்தான் தமிழ்க்கல்வியைத் தொடங்கி வைக்கிறாள். குழந்தைகள் விளையாடும் போது
4 தந்து, “நான் 4 பொருள் தாரேன், 3 தானே கேட்கிறோம், கொடு’ என்கிறாள். விளக்கம்: வாகீச கலாநிதி கிவாஜ.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை 
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் 

சங்கத் தமிழ் மூன்றும் தா

~NG

kanmani tamil

unread,
Jan 30, 2018, 2:57:57 AM1/30/18
to mintamil

திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

09:35 (3 hours ago)
to mintamil
///ஆந்தையானது எலி முதலானவற்றைக் கொத்திக் கிழித்துப் பச்சையாகக் குருதியுடன் சேர்த்து அப்படியே  சாப்பிடும்.

வேகவைத்த உணவுகளையோ பொரித்த உணவுகளையோ சாப்பிட்டதாகக் கேள்விப்பட்டதில்லை.

தலைவியின் வீட்டில் அன்று விருந்து போலும். 

மிச்சம் விழுந்திருக்கும் அசைவ உணவுகளை ஆந்தைக்குக் கொடுப்பதாக ஆசைகாட்டி ஏமாற்றப் பார்க்கிறாள். :)))

ஆனால் பாவம், ஆந்தை வேகவைத்ததையோ பொரித்ததையோ உண்ணாது என்பதை அவள் அறியவில்லை. :)))///

சரி சரவணன் ...இது தான் சரி ....ரொம்பவே சரி.
கண்மணி 

N. Ganesan

unread,
Jan 30, 2018, 3:44:51 AM1/30/18
to மின்தமிழ்

On Monday, January 29, 2018 at 8:50:11 AM UTC-8, singanenjan wrote:
நீராவியில் வேகவைத்த நேந்தரம் வாழைப்பழம் , புழுக்கின பழம் என்றே அழைக்கப் படுகிறது  

 அரிசீம்பருப்புஞ்சாதமும் ஒருவகைப் புழுக்கல் உணவுதான். இளங்கோ அடிகள் ’புழுக்கல்’ என்பது இவ்வகை உணவு எனக் கருதுகிறேன்.

2. வேட்டுவ வரி

வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் எந்தினர் பின்வர

புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் - புழுக்கப்பட்டனவும் எள்ளுண்டையும் நிணத்தொடு கூடிய சோறும், 
புழுக்கல் - அவரை, துவரை முதலியன. நோலை - எள்ளுண்டை. விழுக்கு - நிணம். மடை - சோறு. 

இன்றைய தமிழில் சொல்வதானால்,
(1) புழுக்கல் = அரிசீம்பருப்புஞ்சாதம். (வஞ்சி மாநகரின் அருகே கிராமங்களில் இன்றும் வேட்டுவர்கள் சிறப்புடன் வாழ்கின்றனர்.)
(2) நூ = எள்ளு, நோலை = எள்ளுண்டை
(3) விழுக்குடைமடை = பிரியாணி (ஹைதராபாதி வெரைட்டி). விழுக்கு = கறி.

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 30, 2018, 3:55:37 AM1/30/18
to மின்தமிழ்
In my view,
vizukkuDai maDai = Hyderabadi biryani kind
whereas
uun tuvai aDisil = Regular biriyani (say, Chettinad kind)

N. Ganesan

unread,
Jan 30, 2018, 11:52:19 PM1/30/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், நற்றிணை
தமிழ்ப்பொழில் (தாது வருடம், தைத் திங்கள், 1937)
காக்கைகள் பொழுதுபட்டவுடன் கூட்டை அடையும் என்பதை விளக்கியுள்ளார்.

ஆனால், கூகைகளோ இரவில் வெளியே வரும் வெள்ளெலிகளை வேட்டையாடும். கூகைகளுக்கு பகலில் கண் தெரியாது என்பர்.
‘பகல் வெல்லும் கூகையைக் காக்கை’ - திருக்குறள்.

காக்கைகளுக்கு பலிச்சோறு பகலில் அளிப்பது போல, நள்ளிரவில் கூகைகளுக்கு ஊனும், நெய்யும் கலந்த சோறும்,
அவைகட்குப் பிடித்தமான வெள்ளெலியும் சமைத்து அளிக்கிறேன் என்கிறாள் தோழி (நற். 83).

நற்றிணை 83-ல், புழுக்கல் = சமைத்த சோறு என்றே மகாவித்துவான் த. தேசிகர் பொருள் கொண்டுள்ளார். 

க. வெள்ளைவாரணனார், சைவசித்தாந்த சாத்திர வரலாறு, பக். 133
நற்றிணை 83-ஆம் பாடலைத்தந்து இது பொலிச்சோற்றுப் படையல் என தெளிவாக விளக்கியுள்ளார்:
“இதனைக் கூர்ந்து நோக்குங்கால் ஊனொடு நெய்விரவிச் சமைத்த சோற்றினை
எலிக்கறியுடன் கடவுள் மரத்தில் உடனுறையும் கூகை முதலியவற்றிற்குப் பலியாக இட்டுப்
படைக்கும் வழக்கம் பண்டைக்காலத்திருந்தமையும் கூகையின் குரல் நன்னிமித்தமாகக்
கொள்ளப்படாமையும் நன்கு புலனாகும்.”

சுடுகாடுகளின் அருகே கடவுள் வதியும் முதுமரங்களில் இப்படையல் ஆகிய பலிச்சோற்றை கூகைகளுக்கு
சங்கத் தமிழர் இட்டனர் என தெரிகிறது, அப்  படையலை அளிக்கிறேன்,
தலைவன் வருகையில் தீநிமித்தமாய் அலறாதே என வேண்டுகோளை கூகைக்கு வைக்கிறாள்
தோழி (நற். 83)

நா. கணேசன்

--

kanmani tamil

unread,
Jan 31, 2018, 6:50:34 AM1/31/18
to mintamil
தண்டபாணி தேசிகர் சொன்னாலும் ,வெள்ளை வாரணனார் சொன்னாலும் அப்படியே தலையாட்டி விட முடியாது.
கூகைக்குப் பலிச்சோறு கொடுக்கும் வழக்கம் இருந்தமையை நிறுவாமல் இவர்கள் உரையை ஏற்றுக்கொள்ள இயலாது.
இப்படி வலிந்து ஒரு பொருள் சொல்வதிலிருந்தே அவர்கள் தடுமாறுவது புரிகிறது.
சரவணன் சொன்னது தான் சரி.

விழுக்குடை மடை என்பது பிரியாணி இல்லை.
அது ஊன் உணவுகட்குரிய பொதுப் பெயர்.

வெள்ளெலி ,காரெலி ,கூகை எல்லாமே nocturnal தான்.
கண்மணி 
  
iraamaki

unread,
Jan 31, 2018, 8:09:32 AM1/31/18
to mint...@googlegroups.com
மடுத்தல் = வாய்க்குள் வைத்தல். உண்ணுதல், விழுங்குதல், ஊட்டுதல்.
மடுக்கும் பொருள் மடை.
மடைப்பள்ளி என்பது எல்லாவித மடையும் செய்யும் பள்ளி.
மடைநூல் = சமையற்கலை நூல்.
அடிப்படையில் மடை என்பது பொதுமையான சொல். அதை வெறுமே விதுமையாய்ச் சோறு என்பது சரியல்ல.
இடம்பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். 
வழக்கம்போல திரு.நா.க. தனக்கு ஏற்றபடி எதையும் வளைப்பார். அவர் நினைத்த பொருளே சரியென்பார்.
 
அன்புடன்,
இராம.கி. 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 31, 2018, 9:03:55 AM1/31/18
to மின்தமிழ்
2018-01-31 5:08 GMT-08:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
மடுத்தல் = வாய்க்குள் வைத்தல். உண்ணுதல், விழுங்குதல், ஊட்டுதல்.
மடுக்கும் பொருள் மடை.
மடைப்பள்ளி என்பது எல்லாவித மடையும் செய்யும் பள்ளி.
மடைநூல் = சமையற்கலை நூல்.
அடிப்படையில் மடை என்பது பொதுமையான சொல். அதை வெறுமே விதுமையாய்ச் சோறு என்பது சரியல்ல.

மடை = சோறு (பிங்கலந்தை).

விழுக்குடை மடை = ஊன் கலந்த சோறு (கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி).

நா. கணேசன்
 
இடம்பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். 
வழக்கம்போல திரு.நா.க. தனக்கு ஏற்றபடி எதையும் வளைப்பார். அவர் நினைத்த பொருளே சரியென்பார்.
 
அன்புடன்,
இராம.கி. 
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Jan 31, 2018, 9:22:29 AM1/31/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சிலம்பில் “விழுக்குடை மடை” - ஊன் உடைய சோறு. ஏனெனில் மடை = சோறு என்பது பிங்கலந்தை நிகண்டு.
இதனைக் கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி நூலிலும் காணலாம்.

விழுக்குடைமடை = ஊன் சோறு என்றால் என்ன வகைச் சோறு பற்றி இளங்கோ அடிகள் இங்கே
விழுக்குடைமடை என்கிறார்? நற்றிணை 83-ல் கூகைக்கு இரவில் வெள்ளெலியுடன் அளிக்கும் பலிச்சோறு பேசப்படுகிறது.

விழுக்குடைமடை - சிலம்பு. இங்கே, மடை = சோறு, அதாவது பலியாகப் படைக்கும் பால் சோறு.
கலித்தொகை:

17 

இடைதெரியா வேஎ ரிருவருந் தத்த
2முடைவனப் பெல்லா மிவட்கீத்தார் கொல்லோ
3படையிடுவான் மற்கண்டீர் காமன் (2)மடையடும்
பாலொடு கோட்டம் புகின்

எ - து: தம்மில்வேறு 4பெயர்விளங்கி அழகையுடையராகிய (3) உருப்பசியும் திலோத்தமையும் தம்முடைய தம்முடைய அழகையெல்லாம் இவட்குக் கொடுத்தார் கொல்லோ? அது தெரிந்ததில்லை; 5இவள் தெய்வத் திற்குப் பலியாகச்சமைக்கும் பாலோடே காமன்கோயிலிலே செல்லில் (4) அக்காமனும் நெஞ்சழிந்து தன்கையிற் படையை மிகவும் 6போகடுவன். எ-று.

"பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோ, ளாயர் முதுமகள்" (சீலப். 15 : 117 - 118.) என்பதனாலும் ஆய்ச்சியர் தெய்வத்தருள்பெறப் பலியாக அட்டபாலளித்தல் அறிய லாகும். உருப்பசியும் திலோத்தமையும் அழகிய மகளிர்க்கு உவமை கூறும்படி மிகச் சிறந்த அழகுடையராய் விளங்கும் தேவதாசியர்; இவர்களுள் உருப்பசியாவாள் திருமாலின் கூறாகிய நாராயணமுனிவர் வதரிகாரணியத்துத் தவஞ் செய்வதை அழித்தற் பொருட்டுத் தேவேந்திரனால் விடுக்கப்பட்ட தேவதாசியர்கள் வெட்கியோடும்படி அம்முனிவரால் தமது தொடையில் உண்டாக்கப்பெற்றவளென்றும் ஊரு (தொடை) வில் தோன்றினமையால் அவளுக்கு ஊர்வசி யென்று பெயர்வந்த தென்றும் சொல்லுவர். அப்பெயர் உருப்பசி யெனத் திரிந்து நின்றது. திலோத்தமையாவாள் பிரமதேவரால் அழகுடையபொருளொவ்வொன் றினுமுள்ள சிறந்த அழகை எள்ளளவு எள்ளளவாக எடுத்துச்சேர்த்துப் படைக்கப் பெற்றவளென்ப. இப்பெயரே இப்பொருளை அறிவிக்கும்.

சங்கத் தமிழை ஆழ்வார் பாடல் ஆக்கிய ஆண்டாளும் பலியாகப் பெருமாளுக்குப் படைத்த பால்சோறு (=பால்மடை, மடை = சோறு) பற்றிப் பேசுகிறாள்.

பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோர்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னை பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

NG

--

N. Ganesan

unread,
Jan 31, 2018, 10:02:31 AM1/31/18
to மின்தமிழ்

On Wednesday, January 31, 2018 at 3:50:34 AM UTC-8, kanmanitamilskc wrote:
தண்டபாணி தேசிகர் சொன்னாலும் ,வெள்ளை வாரணனார் சொன்னாலும் அப்படியே தலையாட்டி விட முடியாது.
கூகைக்குப் பலிச்சோறு கொடுக்கும் வழக்கம் இருந்தமையை நிறுவாமல் இவர்கள் உரையை ஏற்றுக்கொள்ள இயலாது.
இப்படி வலிந்து ஒரு பொருள் சொல்வதிலிருந்தே அவர்கள் தடுமாறுவது புரிகிறது.
சரவணன் சொன்னது தான் சரி.

விழுக்குடை மடை என்பது பிரியாணி இல்லை.
அது ஊன் உணவுகட்குரிய பொதுப் பெயர்.

மடை என்பதற்கு சோறு, பலி என்ற பொருள்கள் இருப்பதால்,
விழுக்குடை மடை - விழுக்குடை சோறு என உரைசெய்துள்ளனர்.
 
வெள்ளெலி ,காரெலி ,கூகை எல்லாமே nocturnal தான்.

மனிதர்கள் உண்ணும் விழுக்கு, நெய் உடை சோறு, வெள்ளெலி வறுவல்
சமைத்த படையலாக பலிச்சோறு கூகைக்கு அளிப்பேன் என்கிறது நற்றிணை 83.
தமிழரின் பழைய சமய விளக்கத்தை விளக்கும் அரிய சங்கப் பாடல்
என்கின்றனர்.

நா. கணேசன்
 
கண்மணி 
  
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Pandiyaraja

unread,
Jan 31, 2018, 10:58:52 AM1/31/18
to மின்தமிழ்
>>
கூகைக்குப் பலிச்சோறு கொடுக்கும் வழக்கம் இருந்தமையை நிறுவாமல் இவர்கள் உரையை ஏற்றுக்கொள்ள இயலாது.
>>
காக்கைக்குப் பலியுணவு தரும் பழக்கம் இருந்தது - இருப்பது - நமக்குத் தெரியும். அதைப் போலக் கூகைக்கும் பலியுணவு தருகிறேன், கொஞ்சம் கூவாமல் இரு என்று தலைவி கூறுவதாகப் படைக்கப்பட்டிருப்பதில் உள்ள கற்பனை நயத்தைப் பாராட்டக் கற்றுக்கொள்வோமே!
ப.பாண்டியராஜா

kanmani tamil

unread,
Jan 31, 2018, 1:20:49 PM1/31/18
to mintamil
 ///கற்பனை நயத்தைப் பாராட்டக் கற்றுக்கொள்வோமே! ///

நன்று சொன்னீர்கள் ஐயா.
அது தானே இலக்கியம் பயிலும் முறை.
கண்மணி 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Jan 31, 2018, 2:07:19 PM1/31/18
to mintamil
///சிலம்பில் “விழுக்குடை மடை” - ஊன் உடைய சோறு. ஏனெனில் மடை = சோறு என்பது பிங்கலந்தை நிகண்டு.
இதனைக் கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி நூலிலும் காணலாம்
சோறு மடைத் தொழிலில் கிடைப்பது; மடைப்பள்ளியில் செய்வது;அதனால் மடை=சோறு என்று சொல்வதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது .
ஆனால் சோறு மட்டுமே மடைக்குரிய பொருள் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று.
.விழுக்குடைமடை = ஊன் சோறு என்றால் என்ன வகைச் சோறு பற்றி இளங்கோ அடிகள் இங்கே
விழுக்குடைமடை என்கிறார்? நற்றிணை 83-ல் கூகைக்கு இரவில் வெள்ளெலியுடன் அளிக்கும் பலிச்சோறு பேசப்படுகிறது.
ஊன் தொடர்புடைய உணவு வகைகள் எல்லாமே விழுக்குடை மடை தானே.
ஆற்றுப்படை நூல்களில் வகை வகையாகச் சொல்லப்பட்டிருக்கும் ஊன் உணவுகள் ....விரிப்பின் பெருகும்.
மேலும் கொற்றவைக்கு விழா எடுக்கும் போது ஆடு,கோழி ....எல்லாம் தானே(ஆனால் எலி கிடையாது) ....பொரியல்,மிதவை (குழம்பு ),தந்தூரி 

விழுக்குடைமடை - சிலம்பு. இங்கே, மடை = சோறு, அதாவது பலியாகப் படைக்கும் பால் சோறு.
கலித்தொகை:

  3படையிடுவான்மற்கண்டீர்காமன்(2)மடையடும்

மடை = பொதுப்பெயர் என்பதற்கு இதைக் காட்டிலும் வேறு என்ன சான்று வேண்டும்?
மடைப்பள்ளியில் பால்சோறு மட்டும் தானா சமைப்பார்கள்?

மடைப்பள்ளியில் காய்ச்சிய பாலோடு கோட்டம் புகுந்தாள் என்றும் பொருள் கொள்ளலாம்.

பாலொடு கோட்டம் புகின்

எ - து: தம்மில்வேறு 4பெயர்விளங்கி அழகையுடையராகிய (3) உருப்பசியும் திலோத்தமையும் தம்முடைய தம்முடைய அழகையெல்லாம் இவட்குக் கொடுத்தார் கொல்லோ? அது தெரிந்ததில்லை; 5இவள் தெய்வத் திற்குப் பலியாகச்சமைக்கும் பாலோடே காமன்கோயிலிலே செல்லில் (4) அக்காமனும் நெஞ்சழிந்து தன்கையிற் படையை மிகவும் 6போகடுவன். எ-று. 

"பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோ, ளாயர் முதுமகள்" (சீலப். 15 : 117 - 118.) என்பதனாலும் ஆய்ச்சியர் தெய்வத்தருள்பெறப் பலியாக அட்டபாலளித்தல் அறிய லாகும். உருப்பசியும் திலோத்தமையும் அழகிய மகளிர்க்கு உவமை கூறும்படி மிகச் சிறந்த அழகுடையராய் விளங்கும் தேவதாசியர்; இவர்களுள் உருப்பசியாவாள் திருமாலின் கூறாகிய நாராயணமுனிவர் வதரிகாரணியத்துத் தவஞ் செய்வதை அழித்தற் பொருட்டுத் தேவேந்திரனால் விடுக்கப்பட்ட தேவதாசியர்கள் வெட்கியோடும்படி அம்முனிவரால் தமது தொடையில் உண்டாக்கப்பெற்றவளென்றும் ஊரு (தொடை) வில் தோன்றினமையால் அவளுக்கு ஊர்வசி யென்று பெயர்வந்த தென்றும் சொல்லுவர். அப்பெயர் உருப்பசி யெனத் திரிந்து நின்றது. திலோத்தமையாவாள் பிரமதேவரால் அழகுடையபொருளொவ்வொன் றினுமுள்ள சிறந்த அழகை எள்ளளவு எள்ளளவாக எடுத்துச்சேர்த்துப் படைக்கப் பெற்றவளென்ப. இப்பெயரே இப்பொருளை அறிவிக்கும். 

சங்கத் தமிழை ஆழ்வார் பாடல் ஆக்கிய ஆண்டாளும் பலியாகப் பெருமாளுக்குப் படைத்த பால்சோறு (=பால்மடை, மடை = சோறு) பற்றிப் பேசுகிறாள்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னை பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

கண்மணி 

kanmani tamil

unread,
Jan 31, 2018, 2:19:38 PM1/31/18
to mintamil
///தமிழரின் பழைய சமய விளக்கத்தை விளக்கும் அரிய சங்கப் பாடல் ///

இரவில் மட்டுமே வெளிவரும் கூகைக்கு ......அது உயிரோடு பிடித்து குருதி சொட்ட உண்ணும் எலியை (அது எந்த எலியாக வேண்டுமாயினும் இருக்கட்டும் )
சுட்டுத் தருகிறேன் என்று கெஞ்சும் தலைவியின் காமம் மிக்க கழிபடர் கிளவியை ..........சமய விளக்கம் என்று சொல்லும் ........உரையாசிரியர்கள் .....இலக்கிய விமர்சகர்கள் .......ஆய்வாளர்கள் .......அடடடடா !!!!!.............போதும் .இதற்கு மேல் ....வேண்டாம்.நான் விலகிக் கொள்கிறேன்.
கண்மணி 

N. Ganesan

unread,
Feb 1, 2018, 2:57:51 AM2/1/18
to மின்தமிழ், vallamai
Kanmani wrote:
> விழுக்குடை மடை என்பது பிரியாணி இல்லை.
> அது ஊன் உணவுகட்குரிய பொதுப் பெயர்.

மடை என்பது சோறு என்பது ஒரு பொருள். பொள்ளாச்சிச் சிவன்பிள்ளை அச்சிட்ட பிங்கலந்தையில் பாருங்கள்.
மடைப்பள்ளி = சோறு ஆக்கும் கூடம். இளங்கோ அடிகளும் மடை என்றால் சோறு என்றே பாடியுள்ளார். அதனால்தான்
ஆண்டாளின் “பாற்சோறு” திருப்பாவை குறிபிட்டேன். இடையர்களின் வாழ்க்கையின் 
நுட்பமான செய்திகளைச் சொல்கிறவள் ஆண்டாள். சிறுவீடு மேய்தல், கன்றை நினைத்து 
பசு இரங்கித் தானே பால் சொரிதல், தயிர் அரவம் கேட்டல், ... எல்லாம் சொல்பவள். 
கலித்தொகையின் ‘மடையடும் பாலொடு கோட்டம் புகின்’ என்பதனை 
பலியாகச் சமைக்கும் பாலோடே காமன்கோயிலிலே இடைச்சியர் செல்லுதல்
என விளக்கினார் நச்சினார்க்கினியர். அதாவது, மடையடும் பால் = பால்மடை = பால்சோறு
என்கிறார். பின்னாளில், கோதை நாய்ச்சியும் இதனை ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை 
வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோர்’ என்கிறாள்.

’ஊன் துவை அடிசில்’ என்றால் பிரியாணி என்கிறீர்கள். ஆம், ஊன் நன்கு துவைந்த ரெகுலர் பிரியாணி.
கறித் துண்டங்களைப் பெரட்டினாற் போல் உள்ள ஊன் சோற்றை ‘விழுக்கு உடை மடை’ என்கிறார்
இளங்கோ அடிகள். In my view, vizukkuDai maDai = Hyderabadi biryani kind
whereas ‘uun tuvai aDisil’ = Regular biriyani (say, Chettinad kind)
என்றேன். 

விழுக்குடை மடை. இங்கே மடை = சோறு. அஃதாவது பலிச்சோறு. இதனை, இளங்கோ அடிகளே
அடைக்கலக் காதையில் சொல்லியுள்ளார்.

5. அடைக்கலக் காதை

அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி யையையைக் கண்டடி தொழலும்

      அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய - அறத்தை விரும்பிய உள்ளத்தினையுடைய முனிவர்கள் நிறைந்த, புறஞ் சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்கு - எயிற்புறத்து மூதூர்க் கண் எழுந்தருளிய பூப்போலும் கண்களையுடைய இயக்கிக்கு, பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் - முறையானே பாற்சோறு படைத்து மீள்வோளாகிய, ஆயர் முதுமகள் மாதரி என்போள் - இடையர் குடிப் பிறந்த முதியோள் மாதரி எனப்படுபவள், கவுந்தியையையைக் கண்டு அடி தொழலும் - கவுந்தியடிகளைக் கண்டு அவருடைய அடிகளை வணங்குதலும்;

      அறவோர் பல்கிய மூதூர்க்கண் இயக்கி என்க. இயக்கி - ஒரு பெண் தெய்வம்; பாண்டி நாட்டில் இசக்கியென வழங்கும் ; ஆரியாங்கனை யெனவும் கூறுவர்; ஆரியாங்கனை - கணவனிருக்கும் பொழுதே துறவு பூண்ட தவப்பெண். பண்பிற் பால் மடை கொடுத்து என மாறுக. இனி, புறஞ்சிறை மூதூர்க்கண் காவுந்தியையை எனவும் இயைப்பர்.

ஆநிரை வளம் நிறைந்த கொங்கில் திருச்செங்கோட்டின் அருகே பால்மடை என்ற ஊரே உள்ளது. பாற்சோறு அங்குள்ள ஈசுவரன், ஈசுவரி கோயிலில் நிவேதனம்.
வேட்டுவர்கள் ஊன் உடைய சோறும் (’விழுக்குடை மடை’), இடையர்கள் யக்‌ஷிக்கு பால்மடை (= பாற்சோறு, பார்க்க: ஆண்டாள் பாசுரம்) நைவேத்தியமாகப்
படைக்கின்றனர் என்று இளங்கோ அடிகள் கூறுகிறார். பால்மடை போலவே, விழுக்குடைமடையிலும் மடை = சோறு. 

2. வேட்டுவ வரி

வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் எந்தினர் பின்வர

புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் - புழுக்கப்பட்டனவும் எள்ளுண்டையும் நிணத்தொடு கூடிய சோறும், 
புழுக்கல் - அவரை, துவரை முதலியன. நோலை - எள்ளுண்டை. விழுக்கு - நிணம். மடை - சோறு. 

இன்றைய தமிழில் சொல்வதானால்,
(1) புழுக்கல் = அரிசீம்பருப்புஞ்சாதம். (வஞ்சி மாநகரின் அருகே கிராமங்களில் இன்றும் வேட்டுவர்கள் சிறப்புடன் வாழ்கின்றனர்.
மாடு மேய்க்கப் போகையில், கட்டிச் சோறாக கொங்கர் எடுத்துச் செல்வது பிரசித்தம். “கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே! (பதிற்றுப்பத்து).
(2) நூ = எள்ளு (இன்றைக்கும் தெலுங்கு நூவு), நோலை = எள்ளுண்டை
(3) விழுக்குடைமடை = பிரியாணி (ஹைதராபாதி வெரைட்டி). விழுக்கு = கறி. மடை = சோறு.
விழுக்குடைமடை = ஊன் துண்டங்கள் கொண்ட சோறு. மேலெழுந்த வாரியாகக் கிடக்கும் கறித்துண்டுகள் கொண்ட உணவு.
ஊன் துவைந்த அடிசில் ரெசிப்பியிலும் சற்றே வேறானது எனலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 1, 2018, 3:08:08 AM2/1/18
to மின்தமிழ்

On Wednesday, January 31, 2018 at 11:19:38 AM UTC-8, kanmanitamilskc wrote:
///தமிழரின் பழைய சமய விளக்கத்தை விளக்கும் அரிய சங்கப் பாடல் ///

இரவில் மட்டுமே வெளிவரும் கூகைக்கு ......அது உயிரோடு பிடித்து குருதி சொட்ட உண்ணும் எலியை (அது எந்த எலியாக வேண்டுமாயினும் இருக்கட்டும் )
சுட்டுத் தருகிறேன் என்று கெஞ்சும் தலைவியின் காமம் மிக்க கழிபடர் கிளவியை ..........சமய விளக்கம் என்று சொல்லும் ........உரையாசிரியர்கள் .....இலக்கிய விமர்சகர்கள் .......ஆய்வாளர்கள் .......அடடடடா

இது தோழி கூற்று. அவள் காமம் மிகுந்து கழிபடர் கிளவி சொன்னதாக நற்றிணைப் பாட்டில் காணோமே. 

பலிச்சோறாக ஊனும், நெய்யும் உள்ள அன்னமும், கூட வெஞ்சனமாக எலிச் சூடும் தருகிறேன் என்கிறாள் தோழி.
‘உனக்கு இரண்டு பொருள் தருகிறேன். அதற்கு பதிலாக உன்னை ஒன்றே ஒன்று வேண்டுவன்: தலைவன் இரவுக்குறிக்கு வரும்
நேரத்தில் தீநிமித்தமாய் குழறாதே” என்று கூகையிடம் தோழி வேண்டும் பாடல். இரண்டு தர ஒன்று கேட்பது பாடல்நயங்களில்
ஒன்று. தமிழரின் பழஞ்சமயச் சடங்குகளில் சுடுகாட்டில் “கடவுள் முதுமரம்” ஊன்சோறும், எலிக்கறியும் கூகைக்குப் 
படைத்தனர்  போலும். அதனைச் சுட்டிச் செல்லும் அரிய பாடல்.

நா. கணேசன்
 
!!!!!.............போதும் .இதற்கு மேல் ....வேண்டாம்.நான் விலகிக் கொள்கிறேன்.
கண்மணி 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 1, 2018, 10:11:42 AM2/1/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
தமிழகத்தில் படியரிசி வாக்குறுதி, 
புதுதில்லியில் மின்சாரம் வழங்கல் வாக்குறுதி,
இந்தியாவில் சுவிட்சர்லாந்துப் பண மீட்பு வாக்குறுதி
போன்று மக்களைக் கவரும் வாக்குறுதிகளைத் தலைவர்கள் வழங்கி ஆட்சிக்கு வருவது போன்று,
கூகையைக் கவருவதற்காக, அது சுவைத்திராத “ மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
வான்சூட்டொடு மலியப் பேணுதும்“ என்று தலைவி வாக்குறுதி வழங்கி யிருப்பாளோ.

குடியாட்சித் சிந்தனையுடன்,
அன்பன்
கி.காளைராசன்

N. Ganesan

unread,
Feb 1, 2018, 10:21:54 AM2/1/18
to மின்தமிழ்
அம்மா அல்ல. சின்னம்மாவின் வாக்குறுதி. :-) தோழி (தலைவி அல்ல) தான் கூகைக்கு உரைக்கிறாள்.

----------------

ஒவ்வொரு சங்கப்பாட்டும் ஒரு காரணத்திற்காக எட்டுத்தொகை நூல்களில் பல ஆயிரம் பாடலில் தெரிந்தெடுத்து
வைக்கப்பட்டது. பெருந்தேவனார் பாடல் மறைந்துவரும் ஒரு சடங்குக்காக வைக்கப்பட்டது எனலாம்.

‘முண்டைச்சி’ என்னும் சொல் போன்ற அமங்கலமான சொற்களோ, வரம்பு மீறிய காமம், புணர்வு, ...
இவைஎல்லாம் சங்கச் சான்றோர் பாடலில் இரா. பாடல்கள் இருந்திருக்கும். ஆனால், அவை தகுதி பெறவில்லை.
ஆனால். ஆந்திரம், மஹாராஷ்ட்ரம் உருவான சங்கப்பாடல் போன்ற ‘காதா ஸப்தசதீ’ பாடல்களில் அச்செய்திகள்
பல உள்ளன. 

முண்டா என்ற பழந் தமிழ்ச்சொல் இன்று தென்கீழ் ஆசிய மக்கள் மொழிகளைக் குறிக்கும் சொல்லாகியுள்ளது
- மொழியியல்துறை நிபுணர்களால். https://en.wikipedia.org/wiki/Munda_languages
 
நா. கணேசன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 1, 2018, 12:31:59 PM2/1/18
to mint...@googlegroups.com
மடலாடுதலிலும் மடலாடுபவர்களைப் புரிந்துகொள்வதிலும் தேர்ந்துவிட்டீர்கள் திருமிகு கண்மணி. 
வாழ்த்துகள். பாராட்டுகள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
Reply all
Reply to author
Forward
0 new messages