திதலை: சொல்லாய்வு (Reference: ஜெயமோகனின் “திதலையும் பசலையும்” )

115 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 6, 2016, 10:07:30 AM12/6/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, Erode Tamilanban Erode Tamilanban, Dr. Y. Manikandan, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, jeyamohan_ B, jeyamohan novelist, சுசீலா எம். ஏ.
ஜெயமோகனின் தளத்தில் “திதலையும் பசலையும்” கட்டுரை படித்தேன்:

திதலை: சொல்லாய்வு

திதலை - பொன்னின் பிதிர்வு போன்ற புள்ளிகள்.

தித்- என்ற சொல்லுக்கு (பொன் போன்ற) புள்ளி என்ற பொருள்.
தித்திரம் - அரத்தை  (1) Galangal, shrub, Alpinia (2)Big galangal


தித்திரப் பூ (= அரத்தைப் பூ) திதலையால் அடைந்த பெயர்.




















புள்ளிகள் உடலெங்கும் கொண்டவை கவுதாரிகள் (செந்தமிழ்ப் பெயர்: கதுவாலி).
எனவே, தித்திரி என்று கவுதாரிக்கு ஒருபெயர். மீன்குத்திக்கு தைத்திரம் (< தைத்தல் = மீன்குத்துதல்)
எனப் பெயர். மீன்குத்தியால் தைத்திரீயம் என வேதம், உபநிஷதப் பேர்களுண்டு. மீன்குத்தி
என்று அறியாமல் 19-ஆம் நூற்றாண்டில் வெள்ளைக்காரர்கள் தைத்திரீயத்தை கவுதாரியுடன்
பொருத்தியுள்ளமை பிழை. தைத்திரம் தைத்தல் என்னும் த்ராவிடதாது தரும் சொல். மீன்குத்தி எனப் பொருளுடையது.

கதுவாலிகள் (பேச்சுத்தமிழில் கவுதாரி, by metathesis) போலவே திதலை உடையவை காடைகள் (Quails).
இவற்றை “இதல்” என்கின்றன சங்கச் சான்றோர் செய்யுள்கள். இதல் < திதல் என முன்பு விளக்கியுள்ளேன்.

திதல்- > சிதல்- என்றும் மாறும். சிதர் = Pollen of flowers; பூந்தாது. (பிங்கலந்தை). பொள்ளாச்சிச் சிவன்பிள்ளை பதிப்பு
Powder; பொடி. (பிங்.) , பொற்பொடி தூவினாற்போல் உள்ள துணி, பொன்வண்டு, சிச்சிலி.
சிதர் சிதலை என்றும் இலக்கியங்களிலே உண்டு. 
திதலை போல் உள்ளதால் கறையான், ஈசல் இவற்றுக்கு சிதல் எனப் பெயர்:
சிதல் cital , n. < id. [T. ceda, K. gedalu, M. cital.] 1. Termite; கறையான். சிதல் மண்டிற் றாயினும் (நாலடி, 147). 2. Flying white ant; ஈசல். (பிங்.)


திதலை திதனி என்றும் வரும்.
திதனி titaṉi, n. See திதலை, 1. ஆகத்தா ரெழிற் றிதனி (கலித். 14).

திதலை titalai, n. perh. sita. 1. cf. sidhma. Yellow spots on the skin, considered beautiful in women; தேமல். பொன்னுரை கடுக்குந் திதலையர் (திருமுரு. 145). 2. Pale complexion of women after confinement; ஈன்ற பெண்களுக் குள்ளவெளுப்புநிறம். ஈன்றவ டிதலைபோல் (கலித். 32). (MTL)
------------------------------
புராணத் திருமலைநாதர், மதுரைச் சொக்கநாதர் உலா:
புதிய மணிமுடிமேற் பொற்பே ரொளியின்
திதலைத் திருவாசிச் சேவை - உதயகிரி
திதலை - பொற்பிதிர்வு. உவேசா குறிப்புரை)

--------------------------

பழனி திருவாவினன்குடி பற்றித் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர்:
மென்மொழி மேவலர் இன்னரம்(பு) உளர,
நோயின் றியன்ற யாக்கையர், மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர், இன்னகைப்

150. பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்,
அடி-151: மாசு இல் மகளிரொடு - (உடம்பிலும், குணத்திலும்) யாதொரு குற்றமும் இல்லாத கந்தருவ மாதரோடு கூடி (‘இன் நரம்பு உளர’ என மேலே கூட்டுக.)

அடி-147: நோய் இன்று இயன்ற யாக்கையர் - (தேவர் ஆதலின்) மக்கள் யாக்கை போல நோய் உடையன ஆகாது. நோய் இல்லனவாய் அமைந்த உடம்பினையும்.

அடி-147, 148: மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - மா மரத்தினது விளக்கமான தளிர்களை ஒத்த நிறத்தினை யுடையவரும்.

அடி-148, 149: அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் - விளங்குந்தோறும் பொன்னை உரைத்த உரை விளங்குதல் போலக் காணப்படுகின்ற தேமலையுடையவரும்.

---------------------------------

கச்சிக் கலம்பகம்:

குருகு நெகிழுந் திறநவில்வாய்
      கழிசேர் குருகே குருகழியக்
   கொங்கை திதலை பூப்ப வுளங்
      குலைந்தே யுடைய வுடைசோரப்

கொங்கை திதலை பூத்தல் - தனங்களில் பொன் போன்ற தேமல் பூக்க

------------------------------

இ. வை. அனந்தராமையர், கலித்தொகை,
பாலைக்கலி:
(29) தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி (1)
னல்லாந்தா ரலவுற வீன்றவள் கிடக்கைபோற்
பல்பய முதலிய பசுமைதீ ரகன்ஞாலம்
புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர
வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள  (5)
விளையவ ரைம்பால்போ லெக்கர்போழ்ந் தறல்வார
மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ
லாயிதழ்ப் பன்மல ரையகொங் குறைத்தர
மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதின்கண்;

நச்சினார்க்கினியர்:
”கருப்பந் தங்கிய காலத்துப் பிறக்கும் வேட்கையாகிய நோய் இளமைக்காலத்து அழகைக் கெடுக்குமளவன்றி மிகவருத்துகையினாலே அதற்கு அலமந்த சுற்றத்தார், பின்னர் அவள் மெய்ந்நோக்காடு கண்டு வருத்தமுறும்படி புதல்வனையீன்றவள், அப்புதல்வனைக்கொண்டு அக்குடியையெல்லாம் பாது காத்துக்கிடந்த கிடக்கைபோல, தன்னிடத்துப் பயிரையுண்டாக்கின உழவர், தனக்கு இடையில் வந்த நோய்க்கு வருந்திய வருத்தம் நீங்கும்படி, தான் ஈன்ற உணவுகளைக்கொண்டு குடிமக்களையெல்லாம் பாதுகாத்த உலகம், அவள் தன்னைப்புல்லிய ஈன்றணுமை தீர்ந்து புதுநலம் பெற்றாற் போல, தான் ஈன்ற பசுமை தீர்ந்த புதிய அழகு தோன்ற, வளையினையுடைய இளையோர் இழைத்த
வண்டற்பாவையும் பூவுங் கலந்துகிடந்தாற்போல வார்ந்த மணல் பூக்கள் உதிர்ந்துகிடந்த வடுவைத் தன்னிடத்தே கொள்ள, இளையமகளிருடைய மயிர்போல இடுமணலை ஊடறுத்தலையுடைய நீர் ஒழுக, மாமை நிறத்தையுடையவள் திதலைபோல மாவீன்ற சிறிது முற்றின தளிரின் மேலே அழகிய இதழையுடைய பல மலர்களினுடைய வியக்கத்தக்க தாதுகள் உதிர்தலைச்செய்ய, பெருமை பொருந்த இளவேனிற்காலம் வந்துவிட்ட பொழுதின்கண்ணே; எ - று.”

நச்சினார்க்கினியர் உரையால் மா நிறத்தவள் மேலே பல மலர்களின் பொன்னொத்த மகரந்தப்பொடி தூவினாற்போல
திதலை இருந்தது எனப் புரியும். மேலும் அரத்தை மலருக்கு (Alpinia Galangal) தித்திரம் என்ற பெயரும், காடைக் குருவிகளுக்கு (Quails) இதல் < திதல் என்னும் சங்கப்பெயரும், தித்திரம் எனக் கதுவாலி (Partridge)யின் பெயரும் நான் சொல்வதி விளக்கும்.) இடையாற்றுமங்கலம் வை. அனந்தராமையர் குறிப்புகள் திதலை பற்றி அறியப் பயனுடையவை. இ.வை.அ. எழுதுகிறார்:
“3. (அ) "மாவின், றளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத், தீர்க்கி னரும்பிய திதலையர்" மது. 706 - 8. (ஆ) "ஈன்றவ டிதலைபோ லீர்பெய்யுந் தளிரொடும்" (இ) "மாயவண் மேனிபோற் றளிரீன வம்மேனித், தாய சுணங்குபோற் றளிர்மிசைத் தாதுக” கலி. 32 : 7, 35 : 3 - 4. என்பவையும் (ஈ) “பூத்ததைந்த தாழ்சினைத் தளிரன்ன வெழின்மேனி தகைவாட" கலி. 40 : 19 - 20; என்றவிடத்து "பூத்தாழ்ந்த தளிரெனவே சுணங்கும் மாமை நிறமுங் கூறிற்று" என்றெழுதியிருக்குமுரையும் (உ) "வண்ணநுண் சுண்ணமாட்டி வளரிளந் திங்களன்ன, வொண்ணுதலொருத்தி மாமை யொழுகுமா மேனி நோக்கும், பண்ணமர் மழலைப் பல்காற் பறவை வீழ்ந் துழுது மென்பூந், தண்ணறுந் தாது துற்றுத் தயங்குசெந் தளிரு நோக்கும்" பாகவதம். (10) கோவியரை. 28. என்பதும் ஈண்டுக் கருதற்பாலன.”

நா. கணேசன்

தேமொழி

unread,
Dec 6, 2016, 1:19:36 PM12/6/16
to மின்தமிழ்
திதலை என்பது Stretch marks (striae) என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a2/Belly_Strech_Marks.jpg/631px-Belly_Strech_Marks.jpg


Stretch marks are caused by tearing of the dermis. This is often from the rapid stretching of the skin associated with rapid growth or rapid weight changes. Stretch marks may also be influenced by hormonal changes associated with puberty, pregnancy, bodybuilding, or hormone replacement therapy.


..... தேமொழி 

iraamaki

unread,
Dec 6, 2016, 6:22:22 PM12/6/16
to mint...@googlegroups.com
நன்றி தேமொழி. வெறுமே முன்முடிவுகளையும், உரையாசிரியர்களையும் கொண்டுவிடாது, அறிவியல்முறையில் ஏரணத்தோடு ஓர்ந்துபார்க்கிறீர்கள்.
 
நீங்கள் காட்டிய எடுகோளையும் படிப்பேன்.  அதைப் பாடல்களோடு பொருத்தியும் பார்ப்பேன். பின்னாளில் என் எதிர்வினையைத் தருகிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Dec 6, 2016, 7:50:34 PM12/6/16
to vallamai, சந்தவசந்தம், மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம், Erode Tamilanban Erode Tamilanban, Dr. Y. Manikandan, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, jeyamohan_ B, jeyamohan novelist, சுசீலா எம். ஏ.
திதலை அல்குல்’லிலும் பசலை மேனி எங்கும் வரும்.

6 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:07 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 6, 2016, 8:17:22 PM12/6/16
to mintamil

வணக்கம்.


On 07-Dec-2016 4:52 AM, "iraamaki" <p...@giasmd01.vsnl.net.in> wrote:
>
> நன்றி தேமொழி. வெறுமே முன்முடிவுகளையும், உரையாசிரியர்களையும் கொண்டுவிடாது, அறிவியல்முறையில் ஏரணத்தோடு ஓர்ந்துபார்க்கிறீர்கள்.
>  

+1
அன்பன்
கி. காளைராசன்

> நீங்கள் காட்டிய எடுகோளையும் படிப்பேன்.  அதைப் பாடல்களோடு பொருத்தியும் பார்ப்பேன். பின்னாளில் என் எதிர்வினையைத் தருகிறேன்.
>  
> அன்புடன்,
> இராம.கி.
>  
> From: mailto:jsthe...@gmail.com
> Sent: Tuesday, December 06, 2016 11:49 PM
> To: மின்தமிழ்
> Subject: [MinTamil] Re: திதலை: சொல்லாய்வு (Reference: ஜெயமோகனின் “திதலையும் பசலையும்” )
>  
> திதலை என்பது Stretch marks (striae) என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 
>  
>

> https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a2/Belly_Strech_Marks.jpg/631px-Belly_Strech_Marks.jpg
>
>  
>
> Stretch marks are caused by tearing of the dermis. This is often from the rapid stretching of the skin associated with rapid growth or rapid weight changes. Stretch marks may also be influenced by hormonal changes associated with puberty, pregnancy, bodybuilding, or hormone replacement therapy.
>
>  
>
> ..... தேமொழி
>
>  
>  
>
>
> On Tuesday, December 6, 2016 at 7:07:30 AM UTC-8, N. Ganesan wrote:
>>
>> ஜெயமோகனின் தளத்தில் “திதலையும் பசலையும்” கட்டுரை படித்தேன்:
>> http://www.jeyamohan.in/93006#.WEWRd9IrKUl
>>  
>> திதலை: சொல்லாய்வு
>>  
>> திதலை - பொன்னின் பிதிர்வு போன்ற புள்ளிகள்.
>>  
>> தித்- என்ற சொல்லுக்கு (பொன் போன்ற) புள்ளி என்ற பொருள்.
>> தித்திரம் - அரத்தை  (1) Galangal, shrub, Alpinia (2)Big galangal
>>

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Dec 6, 2016, 8:48:54 PM12/6/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Tuesday, December 6, 2016 at 4:50:34 PM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
திதலை அல்குல்’லிலும் பசலை மேனி எங்கும் வரும்.


திதலை (தித்தி) நகில்களிலும், அல்குலிலும் வரும்.

திதலை அணிந்த தேம் கொள் மென் முலை

தித்தி பரந்த பைத்தக லல்குற் 

எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை 

வயிற்றிலும் வரிகளாக, பொரிப்புள்ளிகளாக
புதல்வர்ப் பயந்த பெண்டிர்க்கு திதலை/தித்தி வரும்.

தித்- என்பது தாதுவேர். தித்தி (அ) திதலை/சிதலை > இதல்: தொடர்புடைச் சொற்கள்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Dec 6, 2016, 8:53:37 PM12/6/16
to வல்லமை, mint...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=21&song_no=380
நற்றிணையில் திதலை = தித்தி:

நெய்யும் குய்யும் ஆடி மையொடு   
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் 
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் 
புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே 

N. Ganesan

unread,
Dec 6, 2016, 9:21:03 PM12/6/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, erodetam...@gmail.com, v.y.man...@gmail.com, sirpip...@gmail.com, tamiz...@gmail.com, svs....@gmail.com, jeyamoha...@gmail.com, jeyamohan...@gmail.com, susi...@gmail.com, Vasu Renganathan, Srinivasakrishnan ln
இன்னொன்றும் தித்தி = திதலை பற்றிச் சொல்கையில் குறிப்பிடவேண்டும்.

பக்தி இலக்கியக் காலத்திலிருந்து, தித்தி (புள்ளிகள், பொறி) = திதலை துத்தி என்றாகிவிட்டது.
இது பேச்சுத்தமிழால் விளைந்த மாற்றம் எனலாம். தித்தி > துத்தி. 
இதற்கு ஒப்பீடு:
பிடி > புடி
பிள்ளை > புள்ளை
பிட்டு > புட்டு
பிடு > புடு
பிடி > புடி
பிடுங்கு > புடுங்கு
பிண்ணாக்கு > புண்ணாக்கு
பிணை > பொணை/புணை
பிணையம் > புணையம் [1]
பிழுக்கை > புழுக்கை
விழி > முழி
விழுதல் > வுழு(உழு)தல்
விழுங்கு > முழுங்கு
மிடைதல் > முடைதல்
விடு > விடு(உடு)
வீடு > வூடு(ஊடு)

தித்தி > துத்தி

(1) திதலை அல்குல் நலம்பா ராட்டிய 
”அணிப் பொலிந்த திதலை அல்குல் நலம் பாராட்டிய வரும் - மகளிர் சென்று கடனீராடுகின்ற அகன்ற இடத்திலே மிக்க அழகுடன் பொலிந்து விளங்குகின்ற துத்தி படர்ந்த நினது அல்குலின் நலனைப் பாராட்டுமாறு இப்பொழுதே வருகிற்பன்காண்!; ”

(2) தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே! அடியார் வினை
ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே! அருள் நல்குமே! (தேவாரம்)
துத்தி = பாம்பின் படத்தில் உள்ள பொறிகள். துத்தி < தித்தி/திதலை

(3) "பத்தித்த அகட்ட, கறைமிடற்ற, பைவிரியும்
     துத்திக் கவைநாத் துளைஎயிற்ற; - மெய்த்தவத்தோர்
     ஆகத்தான், அம்பலத்தான், ஆரா அமுதுஅணங்கின்
     பாகத்தான், சாத்தும் பணி"
பைவிரியும் துத்தி = படத்தின்கண் புள்ளிகளை உடையன;

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்தது சொல்லகி லேனே - திருமந்திரம்

புள்ளிகளை உடைய தேமல் கொண்ட நகில்களை உடைய உமையாள்.

An instance of Spoken Tamil change from titti to tutti.

http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=21&song_no=380
நற்றிணையில் திதலை = தித்தி:

நெய்யும் குய்யும் ஆடி மையொடு   
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் 
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் 
புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே 

On Tuesday, December 6, 2016 at 5:48:55 PM UTC-8, N. Ganesan wrote:


On Tuesday, December 6, 2016 at 4:50:34 PM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
திதலை அல்குல்’லிலும் பசலை மேனி எங்கும் வரும்.


திதலை (தித்தி) நகில்களிலும், அல்குலிலும் வரும்.

திதலை அணிந்த தேம் கொள் மென் முலை

தித்தி பரந்த பைத்தக லல்குற் 

எதிர்த்த தித்தி ஏரிள வனமுலை 

வயிற்றிலும் வரிகளாக, பொரிப்புள்ளிகளாக
புதல்வர்ப் பயந்த பெண்டிர்க்கு திதலை/தித்தி வரும்.

தித்- என்பது தாதுவேர். தித்தி (அ) திதலை/சிதலை > இதல்: தொடர்புடைச் சொற்கள்.

நா. கணேசன் 
On Tuesday, December 6, 2016 at 7:07:30 AM UTC-8, N. Ganesan wrote:

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 6, 2016, 11:17:14 PM12/6/16
to mintamil

2016-12-06 23:49 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
திதலை என்பது Stretch marks (striae) என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

அப்படியென்றால் திதலை என்பது ஆணுக்கும் வருமா?

எந்த சூழ்நிலையில் திதலை யாருக்கு எங்கே உருவாகிறது?

இதைப் பற்றியும் சற்று விளக்குங்கள் அக்கா. :))


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

தேமொழி

unread,
Dec 6, 2016, 11:41:35 PM12/6/16
to மின்தமிழ்
திதலை என்பதை Stretch marks (striae)  என்று ஏற்றுக் கொண்டால் அது ஆண்களுக்கும் வரும்தான்

breast cancer  ஆண்களுக்கு வருவதில்லையா?  
Varicose veins ஆண்களுக்கும் இருப்பதில்லையா?
female mustache பார்த்ததில்லையா?
female alopecia  சிருக்கு இருப்பதில்லையா?

ஹார்மோன் சுரப்பிகளுடன் தொடர்பு உள்ள குறிப்பிடத்தக்க சில  நிலைகள் என்றால்,  
எந்த ஹார்மோன் அதிகரிப்பதால் எந்தப்பாலினத்தில் அதிகம் காணப்படுகிறது என்பதைக் கொண்டே  
பெரும்பாலும் வழக்கில் கூறப்படும் வகையில்  அமைந்திருக்கலாம்.

பொதுவாக மார்பகப் புற்று நோய் என்றாலோ வாரிகோஸ் வெயின் என்றாலோ எந்த உருவம் மனக்கண்முன் தோன்றும்?

..... தேமொழி 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 6, 2016, 11:58:30 PM12/6/16
to mintamil
2016-12-06 23:49 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
திதலை என்பது Stretch marks (striae) என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

அக்கா,

திதலை என்பது அழகுடையது என்றும் அதைப் பாராட்டுவது குறித்தும் கீழே சில பாடல்வரிகள்.

திதலை அல்குலும் பல பாராட்டி - நற் 84/2
திதலை அல்குல் நலம் பாராட்டிய - நற் 307/4

நீங்கள் காட்டிய படத்தில் உள்ளதைப் பார்த்தால் எனக்குப் பாராட்டத் தோன்றவில்லை. 
வாந்திதான் வருகிறது. :)))

தேமொழி

unread,
Dec 7, 2016, 12:13:38 AM12/7/16
to மின்தமிழ்


On Tuesday, December 6, 2016 at 8:58:30 PM UTC-8, திருத்தம் பொன். சரவணன் wrote:

2016-12-06 23:49 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
திதலை என்பது Stretch marks (striae) என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

அக்கா,

திதலை என்பது அழகுடையது என்றும் அதைப் பாராட்டுவது குறித்தும் கீழே சில பாடல்வரிகள்.

திதலை அல்குலும் பல பாராட்டி - நற் 84/2
திதலை அல்குல் நலம் பாராட்டிய - நற் 307/4

நீங்கள் காட்டிய படத்தில் உள்ளதைப் பார்த்தால் எனக்குப் பாராட்டத் தோன்றவில்லை. 
வாந்திதான் வருகிறது. :)))


beauty lies in the eyes of the beholder  :))

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Dec 7, 2016, 1:43:24 AM12/7/16
to mintamil

2016-12-07 10:43 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
beauty lies in the eyes of the beholder  :))

நல்லா சமாளிக்கிறீங்க. :)))

இதோ ஒரு படம் போட்டுருக்கேன் பாருங்க.

Inline image 1

இதுல புருவத்துக்கு மேல வெள்ளையா வட்டமா இருக்குல்ல. அதுமாதிரி தான் திதலை வரையப்பட்டு இருக்கும்.

அதுக்கும் மேல நெத்தியில் ஒரு அணிகலன் இருக்கில்லையா. அதுமாதிரிதான் மேகலை அணி இருக்கும்.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
thithalai-alkul-mekalai.jpg

தேமொழி

unread,
Dec 7, 2016, 2:20:36 AM12/7/16
to மின்தமிழ்


On Tuesday, December 6, 2016 at 10:43:24 PM UTC-8, திருத்தம் பொன். சரவணன் wrote:

2016-12-07 10:43 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
beauty lies in the eyes of the beholder  :))

நல்லா சமாளிக்கிறீங்க. :)))

இதோ ஒரு படம் போட்டுருக்கேன் பாருங்க.

Inline image 1

இதுல புருவத்துக்கு மேல வெள்ளையா வட்டமா இருக்குல்ல. அதுமாதிரி தான் திதலை வரையப்பட்டு இருக்கும்.

அதுக்கும் மேல நெத்தியில் ஒரு அணிகலன் இருக்கில்லையா. அதுமாதிரிதான் மேகலை அணி இருக்கும்.


சரவணன் உங்களுக்குப் புரிந்த வகையில் நீங்கள் பொருள் கொண்டீர்கள். 
எனக்குப் புரிந்த வகையில் நான் பொருள் கொண்டேன்.

ஏன் நீங்கள் மட்டுமே மாற்றி யோசிக்கும் திலகமாக இருக்க வேண்டுமா?  
எனக்கும் அது போலவே வேறு கோணத்தில் பார்க்கத் தெரியுமே.

..ம்ம்க்க்ம்.

இராம.கி. ஐயா சொன்னதையே நானும் சொல்ல வேண்டியிருக்கிறது.  
அது உங்கள் கருத்து. உங்கள் கருத்தை வலியுறுத்துவது உங்களின் உரிமை. 

உங்கள் கருத்தை நீங்கள் வலியுறுத்தும் பொழுது, 
எனக்கு இப்படித் தோன்றுகிறது என்று நான் எனது கருத்தைப் பகிர்ந்து கொள்ள உரிமை இல்லையா?



..... தேமொழி

 


N. Ganesan

unread,
Dec 7, 2016, 9:20:05 AM12/7/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, erodetam...@gmail.com, v.y.man...@gmail.com, sirpip...@gmail.com, tamiz...@gmail.com, svs....@gmail.com, jeyamoha...@gmail.com, jeyamohan...@gmail.com, susi...@gmail.com, vasuren...@gmail.com, lns2...@gmail.com

தித்- என்னும் தாதுவேர் பிறப்பிக்கும் தித்தி/திதலை பற்றி நேற்று பல சங்க இலக்கியச் சான்றுகளுடன் விளக்கினேன். புள்ளி அல்லது பொறி எனப் பொருள். பென்ணின் மறைவங்கங்களின் அருகிலே தித்தி/திதலை தோன்றும் என்பர் சங்கச் சான்றோர். பெண்களின் அல்குல், நகில், வயிறு அருகே தித்தி அல்லது திதலை தோன்றும் என்பன சங்க இலக்கியங்கள்.

தித்தி (புள்ளி (அ) பொறி) பக்தி இலக்கிய காலத்திலேயும், இன்றும் துத்தி என பேச்சுத்தமிழில் மாறிவிட்டது. இதனை ஆயிரக்கணக்கான இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. சங்க காலத்திலே, திதல் > இதல் என்றாகிக் காடைப் பறவைகளைக் குறித்தது.
அதேபோல, தித்தி > துத்தி > உத்தி எனவும் பிற்காலத்தில் வழங்கிற்று:
உத்தி² utti , n. cf. துத்தி. 1. Spots on the hood of the cobra; பாம்பின்படப்பொறி. கேழ்கிள ருத்தி யரவு (நற். 129). 2. Yellow or tawny spots on the skin, chiefly of women, considered as marks of beauty; தேமல். (திவா.)  [MTL]

தமிழ் இலக்கணமாக இன்றும் இருப்பது நன்னூல். நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவரும், அவர் காலத்திலேயே (13-ஆம் நூற்றாண்டு) நன்னூலுக்கு உரை செய்த மயிலைநாதரும் கொங்குநாட்டுச் சமணர்கள். சீரங்க பட்டினம், தழைக்காடு போன்ற காவிரி முதலில் பாயும் இடங்களிலே ( http://nganesan.blogspot.com/2016/11/speed-of-light-in-bharatiyar-poem.html ) அரசாண்ட சீயகங்கன் என்னும் கங்கமன்னனால் ஆதரவுபெற்றவர்கள். மயிலைநாதர் நன்னூல் உரையில் உத்தி (< துத்தி) பற்றிக் குறிப்பிடுகிறார்:

நன்னூல் (271)

ஒருபொருள் குறித்த பலசொல் லாகியும்
பலபொருள் குறித்த வொருசொல் லாகியும்
அரிதுணர் பொருளன திரிசொல் லாகும்.
“வ - று. வெற்பு, விலங்கல், விண்டு, அடுக்கல், பொற்றை, பொருப்பு, பொறை,
அறை, நவிரம், குன்று, குவடு, வரை, சிலம்பு, ஓங்கல் எ - ம், படி, பார், புடவி,
பொழில், இடம் எ - ம், எல்லி, கங்குல், அல்கல், அல் எ - ம், கொங்கை, குரூக்கண்,
குயம், வல்லுஎ - ம், சுணங்கு, துத்தி, உத்தி, திதலை, தொய்யில் எ - ம், துய்த்தல்,
மிசைதல், நுகர்தல், அயிறல் எ - ம் இவை முறையே பொருளாதியாறனுள்,
ஒருபொருள்கருதிய பல பெயர்த்திரிசொல். இயங்கினான், ஏகினான் எனவிவை
ஒருதொழில்குறித்த பலவினைத்திரிசொல். சாத்தனே, வந்தாயே; கூத்தனோ, வந்தாயோ ”

புள்ளி, பொறி என்ற பொருளில் சங்க இலக்கியங்கள் தித்தியையும், திதலையையும் குறிப்பதால்
மயிலைநாதர் காட்டும் உதாரணங்களில் “தித்தி”யையும் சேர்த்தலாம்:
சுணங்கு, துத்தி, உத்தி, திதலை, தித்தி, தொய்யில் எ - ம்,

----------------------

இத்தி (< தித்தி) : மரப்பெயர்

திதல் > இதல் என்றாகிக் காடைப் பறவைகளைக் குறித்தது.

இத்தி (அ) இச்சி என்னும் Fig (Ficus) மரங்கள் காடுகளில், மலைகளில் வளர்வன. இவற்றுக்கு சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் பண்டைத் தமிழர்கள் தித்தி/திதலை போன்று புள்ளிகள்/பொறிகள் கொண்ட இலைகளாலும், காய்களாலும் பெயர் தந்துள்ளனர். அதாவது, தித்தி > இத்தி. இத்தி என்ற பெயர் இச்சி (மரம்) என்றும் வழங்கும். சோறு ஆயிடுத்தா? என்பது சோறு ஆயிடுச்சா? என்பதுபோல்.

இத்தி itti , n. [M. itti.] 1. White fig, 1. tr., Ficus infectoria; கல்லால். (திருவாச. 4, 162.) 2. Stone-fig. See கல்லிச்சி. (L.) 3. Tailed oval-leaved fig. See கல்லித்தி. (L.)

இச்சி¹ icci , n. 1. Oval-leaved fig. See கல்லிச்சி. (L.) 2. Jointed ovate-leaved fig, 1. tr., Ficus tsiela; மரவகை. (L.)

இத்தி (< தித்தி) white fig, Ficus infectoria

Ficus virens

Synonym: Ficus infectoria













































































































இத்தி மரத்து இலை



தித்தி (புள்ளி) உடைய இச்சிக் காய். எனவே, இத்தி < தித்தி.


















Ficus amplissima

synonyms: Ficus indica, F. tsiela
















தித்தி/திதலை கொண்ட இச்சிக் காய் 

~NG

வேந்தன் அரசு

unread,
Dec 8, 2016, 7:55:12 AM12/8/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம்


6 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:48 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Tuesday, December 6, 2016 at 4:50:34 PM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:
திதலை அல்குல்’லிலும் பசலை மேனி எங்கும் வரும்.


திதலை (தித்தி) நகில்களிலும், அல்குலிலும் வரும்.


அவ்வளவு உன்னிப்பாக நான்பெண்களை நோக்குவது இல்லை.
 

வேந்தன் அரசு

unread,
Dec 8, 2016, 7:57:04 AM12/8/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, தமிழ் பிரவாகம்
பிலிற்று= oozing


8 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:55 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Dec 8, 2016, 8:17:31 AM12/8/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஒத்தவரி ஆராச்சி உன்னிப்புடன் இருப்பதில்லை. ஆனால், நான் அனுப்பும் அறிஞர்கள் எல்லோருக்கும்
உன்னிப்பாக தவறான செய்தியை அனுப்பாமல் நீங்கள் இருப்பதில்லை.

இங்கிலீஷ் - தமிழ் வார்த்தை ஒலி ஒப்பீடுகள், தமிழின் பண்டை உச்சரிப்பு - மற்ற திராவிட மொழிகள்
இழந்துவிட்ட - voiceless fricatives இவைபற்றிய ஒத்தவரிகளும் அவ்வாறே.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Dec 8, 2016, 8:40:17 AM12/8/16
to மின்தமிழ், vallamai


On Tuesday, December 6, 2016 at 10:19:36 AM UTC-8, தேமொழி wrote:
திதலை என்பது Stretch marks (striae) என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a2/Belly_Strech_Marks.jpg/631px-Belly_Strech_Marks.jpg


Stretch marks are caused by tearing of the dermis. This is often from the rapid stretching of the skin associated with rapid growth or rapid weight changes. Stretch marks may also be influenced by hormonal changes associated with puberty, pregnancy, bodybuilding, or hormone replacement therapy.



நன்றி. இது பற்றி நச்சினார்க்கினியர் விரிவாகச் சொல்லியுள்ளார். 

நா. கணேசன்
 

..... தேமொழி 

N. Ganesan

unread,
May 4, 2017, 7:52:19 AM5/4/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
உழக்கு- < துழக்கு- (துழாவுதல்).

On Monday, May 1, 2017 at 12:08:02 AM UTC-7, dorai sundaram wrote:
திண்டுக்கல் செக்குக் கல்வெட்டில் வருகின்ற துடவு
என்னும் சொல் ஓர் அளவையைக்குறிக்கும் என்பதைச்
சொற்பிறப்பியல் பேரகராதி சுட்டுவதைப் பார்த்தோம்.
மேலும் ஒரு தரவு கிடைதுள்ளது. திருவிதாங்கோடு 
தொல்லியல் வரிசை (TRAVANCORE ARCHAEOLOGOCAL 
SERIES )  நூலில், திருக்கால்க்கரை விண்ணகரக்
கோயிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டில் ஒரு குறிப்பு
உள்ளது. கல்வெட்டில் காணப்படும் வரி:

2.  டு ...தேவர் துடவினால் முப்பத்து அஞ்சு துடவு நெய் செலுத்தக் கடவர்.....

நூலில் கீழ்க்கண்டவாறு விளக்கம் தரப்பட்டுள்ளது.

“Tudavu is a grain and liquid measure; this form must have been the original of the modern tudam which is a measure holding quarter of a nali."

இக்குறிப்பிலிருந்து, துடவு என்பது தானியத்தையும், எண்ணெயையும் அளக்கப்பயன்பட்ட அளவை என அறிகிறோம். இது நாழியின் கால் பங்கு. ஓர் உழக்கு.


துடவு - நெய், எண்ணெய் போன்றவற்றை அளக்கப்பயன்படுவது என்கிறது சென்னைப் பேரகராதி. 

துடவு tuṭavu   n. cf. துடுவை A liquid measure; ”ஓர் அளவு ஒரு துடவு நெயும்” (T. A. S. ii, 86). துடம் என்ற சொல்லுக்கும் துடவு என்கிறது.

துடுவை tuṭuvai, n.  Wooden ladle for taking ghee; நெய்த்துடுப்பு. துடுவையா னறுநெ யார்த்தி (திருவிளை. திருமணப். 184).
 
துழவுதல் - துடுப்பு. துழ- > துடவை.

சுவர், மரம் புல்லிக்கொண்டிருக்கும் புல்லியைப் பல்லி என்கிறோம்.
”தலைக்கு எண்ணெய் தடவு” என்கிறோமே. இதில் தடவு- < துடவு- (துழ-) [[ Cf. பல்லி < புல்லி]


துடைத்தல் என்ற வினைபற்றியும் சிந்திக்கலாம். துடைப்பம்.

குழந்தை தண்ணியில் உழப்பிக்/ஒழப்பிக் கொண்டுள்ளது. சசிகலாவால் அதிமுகவை உழப்பிக் கொண்டுள்ளார், ....
உழக்கு என்ற சொல் இதனால் தான். திரவப் பொருளை துழாவி அளக்கும் அளவை: உழக்கு. துடுவை/துடவை (Cf. துடுப்பு).

உழக்குதல் என்ற வினையால் Porpoise என்னும் கடல் உயிரிக்கு உழசிமீன் எனப் பெயர். கன்னடத்தில் உணசிமீன்.

போர்த்துக்கீசிய/ஸ்பானிஷ் சொல் உழசி/உணசிக்குத் தமிழில் புழங்குகிறது: Vaquita. தாராவுக்கு வாத்து என்பதும் போர்த்துகீசியச் சொல்தான்.

பார்க்க:
-----------------------------

இரகுவம்மிசத்தில் (இலங்கைக் காவியம், அரசகேசரி என்னும் மன்னர் யாத்தது) ஒல்லை < தொல்லை இருப்பதாக
சங்கரதாஸ் கொடுத்த சுட்டி தெரிவிக்கிறது. ஈழவழக்காக இருக்கலாம். சிறுகதை, நாவல், பிற்கால பிரபந்தங்களிலோ
இருக்கக் கூடும்.  

ஸப்பிலிமெண்டரி வால்யூம் (தொகுதி 7) - சென்னைப் பேரகராதியில் சேர்த்துள்ளனர்.
ஒல்லை ollai n. prob. தொல்லை. Trouble; தொந்தரவு. (அக. நி.)

சொன்முதல் த் அழிதல் சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது:
(1) தித்தி > இத்தி (மரம்)

(2) திதல் > இதல் (quails)

(3) திமில் > இமில்
ஏறுதழுவல் வர்ணனைகளில் ‘துளங்கு இமில் நல் ஏறு’ எனச் சங்க இலக்கியத்தில் பலமுறை வரும்.
திமிர்தல் என்றால் பூசுதல். சந்தனம் திமிர்ந்தாள் என்றால் சந்தனத்தைப் பூசினாள் எனப் பொருள்.
திமிர்:திமில் (நீர்:நீல-, வார்:வால், ...) திமிர (தைம்ர) - கருமை, கண்ணில் சாளேசுவரம் போன்றவற்றிற்கு
வடசொல் இந்த வேளாண் சொல் ஆகிவருகிறது. இந்தியாவின் எல்லா நாட்டுமாடுகளிலும்
காளைகளில் திமிலில் கருமை பூசியிருக்கும். உடைதட்டி எருது ஆவதன்முன்னம். 
எனவே, திமில் > இமில்.

சங்க இலக்கியத்தில் நல் = கருமை. களி நல் யானை = களிக்கும் கருத்த யானை.
நெடுநல் வாடை = நீண்ட இரவில் வாட்டும் வாடைக்காற்று.
அதேபோல, ’துளங்கு இமிலின் நல்லேறு’. நல்லேறு = திமில் கருத்த காளை.

கண்ணா கருமைநிறக் கண்ணா
இதுவே, தெலுங்கில் கண்ணையா நல்லனி கண்ணையா

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
May 4, 2017, 1:23:44 PM5/4/17
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
பிலிற்றுதல் என்பது oozing? அது செய்வினையா செயப்பாட்டு வினையா?

தொய்யில் = மருதாணி= செம்பஞ்சு பூச்சு.

நல் என்பது தெலுகுச்சொல். நலுப்பு = கருப்பு.
தமிழில் நலுப்பு இல்லை.

N. Ganesan

unread,
May 5, 2017, 7:29:24 AM5/5/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Thursday, May 4, 2017 at 10:23:44 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
பிலிற்றுதல் என்பது oozing? அது செய்வினையா செயப்பாட்டு வினையா?


மயிலின் பின்னால் பிலிறுவது பீலி. இங்கே தன்வினை.

N. Ganesan

unread,
May 5, 2017, 7:39:10 AM5/5/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Friday, May 5, 2017 at 4:29:24 AM UTC-7, N. Ganesan wrote:
On Thursday, May 4, 2017 at 10:23:44 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
பிலிற்றுதல் என்பது oozing? அது செய்வினையா செயப்பாட்டு வினையா?


மயிலின் பின்னால் பிலிறுவது பீலி. இங்கே தன்வினை.


இங்கே இசுலாமிய சூஃபி மார்க்கத்தில் முக்கியமான சொல் ஒன்றும் குறிப்பிடணும்.

மாணவனாக இருந்த காலத்தில் வால்டர் ஃபேர்ஸெர்விஸ் என்ற சிந்து தொல்லியல் அறிஞர்
கட்டுரை, நூல்களை விரும்பிப்படிப்பேன். அவர் நியூ யார்க் மாகாணத்தில் விவசாயக்
குடும்பத்தில் பிறந்தவர். சிந்து ஆய்வின் போக்கையே மாற்றியவர். அவ்ர் குறிப்பிட்ட சொல்:
சிந்து மாகாணத்தில் பீர் என்று முஸ்லிம் சூஃபி செயிண்ட்ஸுக்கு பெயர், இது சிந்து சமவெளிச்
சொல். அப்போது அவருக்கு பிரான்/பிராட்டி என்ற சொல் குறித்து எழுதினேன். நன்றி தெரிவித்து
பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

பிர்-/பில்- = சுரத்தல், அருள் சுரத்தல் grace-oozing என்ற பொருள். பீர் முகமது என்கிறோமே,
பீர் பீலி என்பன பிர்-/பில்- என்னும் த்ராவிட/தமிழ்த் தாதுவேர் கொண்ட சொற்கள்.
அதில் பீர் பிரான் பிராட்டி. தன்+பிரான் = தம்பிரான். தன் + பிராட்டி தம்பிராட்டி,

மிளகு என்பதற்கு முளகு என்பது மூலப்பெயர் அன்று என சேசாத்திரிக்கு எழுதியிருந்தேன்.
மிளகு > முளகு, பிடி > புடி, ... போல தம்பிரான் > தம்புரான், தம்பிராட்டி > தம்புராட்டி என
இன்று பேச்சுவழக்கில் கேரளா, தமிழ்நாட்டில்.


நா. கணேசன்

 

N. Ganesan

unread,
May 5, 2017, 8:02:21 AM5/5/17
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
பீர் என்னும் இசுலாமிய உலகத்தின் சொல் சிந்துவெளிச் சொல். திராவிட தாதுவேர் கொண்ட சொல்.

சங்க இலக்கிய உதாரணம். பீலி, பீர் போன்றவை பிர்-/பில்- என்ற வேர்ச்சொல்.
பிலிற்றுதல் - சுரந்து பொழிதல். எனவே, பீர் = (அருள்) சுரப்பவர்.

திதலை மென்முலைத் தீம்பால் 2 பிலிற்றப் 
    
புதல்வற் புல்லிப் புனிறுநா றும்மே 


திதலை மெல்முலைத்தீம்பால் பிலிற்றப் புதல்வன் புல்லி தோளும் புனிறு நாறும்மே - சுணங்கு அணிந்த மெல்லிய கொங்கையின் இனியபால் பெருகுதலாலே அந்தப் பால் சுரப்பப் புதல்வனைப் புல்லிக் கொண்டு எம் தோளும் ஈன்ற அணிமையானாகிய முடைநாற்றம் வீசாநிற்கும்; 

N. Ganesan

unread,
May 6, 2017, 10:29:21 PM5/6/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

மேலும்:

On Thursday, May 4, 2017 at 10:23:44 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
பிலிற்றுதல் என்பது oozing? அது செய்வினையா செயப்பாட்டு வினையா?

பீர்ச்சுதல் என்ற சொல் பீச்சுதல் என்று பேச்சுவழக்கில் வரும். ’எருமை தண்ணிதண்ணியாய்ப் பீச்சுகிறது’.

பீர்ச்சாங்குழல் என்று அகராதிகள் தருவதைப் பீச்சாங்குழல் (syringe, ...)
See the entry of PiirccaaGkuzal in 1842 American Mission Press dictionary: https://books.google.com/books?id=gj9MAAAAYAAJ&

பீர்க்கு - பிலிற்றி (தாதுவேர்: பிர்-/பில்-) தொங்கும் காய்களால் பெற்ற சினையாகுபெயர்.

பீர்க்கு - பிக்க-/பிங்க- என்று பிராகிருதத்தில் குறுகும். கூர்மம் > கும்மம், கீர்ண- > கிண்ண- ....
பீர்- > பீர்க்கு/பீர்ங்கு > பீக்கு/பீங்கு > பிங்க- பிங்கலன். பிங்கலனை தெய்வமாகக் கொண்டவன், அக் குலத்தான் பிங்கலந்தை.

வேதத்துக்கு சந்தசாஸ்திரம் செய்த, உலகின் முதல் கம்ப்யூட்டர் மேதை பிங்கலன் என்னும் இத் தமிழ்ப்பெயர் கொண்டவர்:

The Chandaḥśāstra presents the first known description of a binary numeral system in connection with the systematic enumeration of meters with fixed patterns of short and long syllables.[5] The discussion of the combinatorics of meter corresponds to the binomial theorem. Halāyudha's commentary includes a presentation of the Pascal's triangle (called meruprastāra). Pingala's work also contains the Fibonacci numbers, called mātrāmeru.[6]

Use of zero is sometimes ascribed to Pingala due to his discussion of binary numbers, usually represented using 0 and 1 in modern discussion, but Pingala used light (laghu) and heavy (guru) rather than 0 and 1 to describe syllables. As Pingala's system ranks binary patterns starting at one (four short syllables—binary "0000"—is the first pattern), the nth pattern corresponds to the binary representation of n-1 (with increasing positional values).

Pingala is credited with using binary numbers in the form of short and long syllables (the latter equal in length to two short syllables), a notation similar to Morse code.[7] Pingala used the Sanskrit word śūnya explicitly to refer to zero.[8]

Editions[edit]

    N. Ganesan

    unread,
    May 6, 2017, 10:45:33 PM5/6/17
    to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

    மேலும்:

    On Thursday, May 4, 2017 at 10:23:44 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
    பிலிற்றுதல் என்பது oozing? அது செய்வினையா செயப்பாட்டு வினையா?

    பீர்ச்சுதல் என்ற சொல் பீச்சுதல் என்று பேச்சுவழக்கில் வரும். ’எருமை தண்ணிதண்ணியாய்ப் பீச்சுகிறது’.

    பீர்ச்சாங்குழல் என்று அகராதிகள் தருவதைப் பீச்சாங்குழல் (syringe, ...) என்கிறோம்
    See the entry of PiirccaaGkuzal in 1842 American Mission Press dictionary: https://books.google.com/books?id=gj9MAAAAYAAJ&


    பீர்ச்சாங்கை - பீச்சாங்கை ஆகிறது. மூக்கு:மூச்சு போல பீர்க்கு:பீச்சு
    Reply all
    Reply to author
    Forward
    0 new messages