இந்து ஆட்சி! - - தர்மதீர்த்த அடிகளார்.

12 views
Skip to first unread message

இரவா

unread,
Jul 3, 2008, 1:10:16 PM7/3/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

ஏகாதிபத்தியவாதிகளான வெள்லையர்கள் இந்திய மக்களை அடிமைப் படுத்தியதுடன் அவர்களுடைய குடியுரிமை, கல்வி, சுதந்திரம், செல்வம், போன்றவற்றை அபகரித்துக் கொண்டு அவர்களின் முன்னேற்ற வாய்ப்புகளை மறுத்து, தேசிய விருப்பங்களை அடக்கி ஒடுக்கி வந்தார்கள் என்று, நாம் குற்றஞ்சாட்டுவது வழக்கம். வெள்லையர்களைப் போலவே அகந்தையாளர்களாக, சுயநலக்கார்ர்களாக, கொடூரமானவர்களாக, வஞ்சகர்களாக இருந்தவர்கள் புராதன இந்துக்கள் எனப்படும் புரோகிதர்கள். புரோகிதர்களின் கொடுமைகளை விட கொடியதோர் ஆதிக்கக் கொடுமைகள் உலகில் எந்த ஆதிக்கக் கொடுமையினத்தாரிடமும் காணப்படவில்லை.

புரோகிதர்கள் உயர்ந்த சாதியினராகத் தங்களைத் தாங்களே பெருமைப் படுத்திக் கொண்ட போது, மற்றவர்களையெல்லாம் ஈன சாதிகளாகத் தரம்பிரித்து தாழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மக்களைப் பிளவு படுத்தி, பலவீனப் படுத்தி வீழ்த்திய பிறகு, புரோகிதர்களுக்கு கல்வி, கலாச்சாரம், வாழ்க்கை வசதி போன்றவற்றையும் மறுத்து, மக்கள் தலைநிமிர முடியாத அளவுக்கு கீழ்மைப் படுத்த வேண்டுமென்ற திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதை அடிப்படையாகக் கொண்டுதான்,  சாதி வேற்றுமைகள் வகுக்கப்பட்டன. இந்தியாவை அடிமைப் படுத்திய வெள்ளையர்களின் உதவியோடு அதை மக்கள் மீது திணிக்கவும் செய்தனர்.

உயிர் வாழ்வதற்கு சாமானிய மக்களைப் போல உழைத்து பணியாற்றுவது உயர்ந்த இனமான புரோகிதர்களுக்கு இழிவானது என்று கருத்தப் பட்டது.

-       தொடரும்.


--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

இரவா

unread,
Jul 3, 2008, 10:31:47 PM7/3/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


மரியாதைமிக்க பணிகளை மேற்கொண்டு பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளெல்லாம் புரோகிதர்களின் வீண் ஜம்பங்களால் அடைபட்டுப் போயின. போர் புரிந்தும், கடினமாக உழைத்தும் பொருள் சேர்ப்போர்களைச் சுரண்டி அவர்களிடமிருந்து தங்களுக்கு வேண்டிய பாதுகாப்பான ஏற்பாட்டை புரோகிதர்கள் தங்களுடைய பிழைப்புக்காக தாங்களே ஏற்படுத்திக் கொண்டனர்.

கோயில்கள், உற்சவம், பூஜை, புனித யாத்திரை, ரகசிய வித்தை, மந்திர தந்திரம் போன்ற இந்துமதம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் புரோகிதர்கள் அல்லாத மக்களை மயக்கிச் சுரண்டி புரோகிதர்கள் ஆதாயம் அடைவதற்காகச் செய்யப்பட்டவையாகும்.

இவற்றினால் மக்களுக்கு என்ன நன்மை இருக்கிறது? இந்நடவடிக்கையினால் மக்களின் நம்பிக்கை அழிகிறது. மக்கள் வீழ்ச்சியடைகிறார்கள். உணர்வோ அறிவோ இல்லாத நிலையில் மக்களை மரக்கட்டைகளாக மாற்றினாலன்றி புரோகிதர்களால் வாழ முடியாத நிலை உருவானது.

ஆனால், புரோகிதர்கள் நடுவிலும் சில அறிஞர்கள் இருந்தனர். அவர்கள் இம்மாதிரியான நடவடிக்கைகளைக் கண்டித்தனர். எதிர்த்தனர். பொருளற்ற சாதிகளையும் புரோகிதர்களின் தந்திரங்களையும் கண்டித்தனர். புரோகிதர்களின் மத்த்தினால் ஒரு பயனும் இல்லை என்பதை அறிவுறுத்தினர்.

என்றாலும்,

சாதி வேற்றுமை, விக்கிரக வழிபாடு, பூஜைகள், மூடச் சடங்குகள், போலியான சாத்திரங்கள், பிரமாணங்கள், சூத்திரங்கள், புராணங்கள், விரிவுரைகள், மகாத்மியங்கள், தத்துவ ஞானங்கள், மூடு மந்திரங்கள் போன்றவற்றை புரோகிதர்கள் முடிவின்றி படைத்துக் கொண்டிருந்தனர்.

புராதன அறிஞர்களின் நூல்களை அழிப்பது, திருத்துவது, இடைச்செருகல் செய்வது, கெட்ட விளக்கம் அளிப்பது, தங்கள் பெயரில் புதிய நூல்களை இயற்றுவது போன்ற ஏமாற்று வேலைகளை, வஞ்சனைகளை, தந்திரங்களைக் கையாண்டு மக்களை மயக்கி ஈர்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்.

சாதி வேற்றுமை அமைப்பு பெரும்பான்மையான மக்களை(இந்து) ஒரு சிலரின் சுயநலத்திற்காகச் சுரண்டப்படும் ஒரு வலுவற்ற அமைப்பாக மாறிவிட்டது.

-       இன்னும் இருக்கே

 

Narayanan Kannan

unread,
Jul 4, 2008, 12:17:10 AM7/4/08
to minT...@googlegroups.com
இத்தொடர் இங்கு ஏன்? என்று புரியவில்லை. வேறு குழுமங்களுக்கு
உவப்பளிக்கும் தலைப்புகள் இங்கும் எடுபடுமென்று தோன்றவில்லை.

அறிவியல் துணையற்ற வெறும் சுடுசொற்கள், கண்டனக் குரல்களால் என்ன பயன்?
வெறுப்பை வளர்ப்பது எளிது. வளர்ந்து வரும் இந்தியாவிற்கு ஆரோக்கியமான
கூடுறவே பயனளிக்கும்.

ஆரோக்கியமான சிந்தனைகளை விதையுங்கள். நன்றி.

கண்ணன்

2008/7/4 இரவா <vasude...@gmail.com>:


>
>>
> கோயில்கள், உற்சவம், பூஜை, புனித யாத்திரை, ரகசிய வித்தை, மந்திர தந்திரம்
> போன்ற இந்துமதம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் புரோகிதர்கள் அல்லாத மக்களை
> மயக்கிச் சுரண்டி புரோகிதர்கள் ஆதாயம் அடைவதற்காகச் செய்யப்பட்டவையாகும்.
>>

Tthamizth Tthenee

unread,
Jul 4, 2008, 2:53:02 AM7/4/08
to minT...@googlegroups.com

சாதி வேற்றுமை, விக்கிரக வழிபாடு, பூஜைகள், மூடச் சடங்குகள், போலியான சாத்திரங்கள், பிரமாணங்கள், சூத்திரங்கள், புராணங்கள், விரிவுரைகள், மகாத்மியங்கள், தத்துவ ஞானங்கள், மூடு மந்திரங்கள் போன்றவற்றை புரோகிதர்கள் முடிவின்றி படைத்துக் கொண்டிருந்தனர்.

புராதன அறிஞர்களின் நூல்களை அழிப்பது, திருத்துவது, இடைச்செருகல் செய்வது, கெட்ட விளக்கம் அளிப்பது, தங்கள் பெயரில் புதிய நூல்களை இயற்றுவது போன்ற ஏமாற்று வேலைகளை, வஞ்சனைகளை, தந்திரங்களைக் கையாண்டு மக்களை மயக்கி ஈர்ப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்.

சாதி வேற்றுமை அமைப்பு பெரும்பான்மையான மக்களை(இந்து) ஒரு சிலரின் சுயநலத்திற்காகச் சுரண்டப்படும் ஒரு வலுவற்ற அமைப்பாக மாறிவிட்டது.

-       இன்னும் இருக்கே

 

 

இந்தக்காலத்தில் பார்ப்பனர்களையும்,பார்ப்பனர்கள்
அல்லாதாரோயையும்,மொத்தத்தில் மக்களையே


உணர்வோ அறிவோ இல்லாத நிலையில்

மக்களை மரக்கட்டைகளாக்கி அராஜக அரசியல் புரிந்து
தங்களுக்கு மட்டும் சொத்து சேர்த்துக்கொண்டு
நாட்டை இழி நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறார்களே
அவர்களும் பார்ப்பனரோ............?

அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் சர்வாதிகாரிகளாக இருந்தனர்
என்னும் வாதத்தை இன்னும் எத்னைகாலம்
சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒரு பயனும் விளையப்
போவதில்லை,
ஆனால் இப்போது நம்மைச் சுரண்டி நாட்டைச் சுரண்டி
கேடு விளைவிக்கும் அரசியல்வாதிகள், சாதி ,மதம்,
எதையுமே பார்க்காது அத்தனைபேரையும்
சுரண்டிக் கொண்டிருக்கும் நிலையைப் பற்றி தைரியமாகப் பேசி ,
நாட்டுக்கு நல்லது செய்ய , தவறுகளைத் தட்டிக் கேட்க
இயலாதவர்கள் தாம் இன்னும் அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள்
செய்ததாக சொல்லப்படும் , தவறுகளையே........மீண்டும் மீண்டும்
எழுதி, பேசி , இன்னும் அந்தக் காலத்திலிருந்து ,
யதார்த்த நிலைக்கு திரும்பாமல், மக்களையும் யதார்த்த
நிலைக்கு  திரும்பவிடாமல் இன்னும் இன்னு ம்  ....
சாதி, மத  விரோதங்களை வளர்ப்பதே நோக்கமாய்
செயல் பட்டு வருவதும்.....
.மற்ற .... யாருமே அது போன்ற தவறுகளை செய்யாததைப்
போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதே நோக்கமாய்
அதைப்பற்றியே ,பேசிக் கொண்டிருக்கின்றனர்

இதை விடுத்துவிட்டு இப்போதாகிலும் விழித்துக்
கொண்டால் நல்லது


 

இரவா

unread,
Jul 4, 2008, 11:31:57 AM7/4/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

குறிப்பு:
 
இக்கட்டுரை இந்திய சமுதாயத்தின் வரலாற்றை ஆராய்ந்து கண்ட   அறிஞர்  தர்மதீர்த்த அடிகளார் 1968 இல் எழுதிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கட்டுரை, முனைவர் நா.கண்ணன், அறிஞர் கிருஷ்ணமாச்சாரி போன்றோர்க்கும் பிறர்க்கும் பிடிக்கவிலையென்றால்,
 
எனது, அஞ்சல்  மின்தமிழ் குழுமத்தில் இடம்பெறாதவாறு தடை செய்துகொள்ளலாம். எந்தக் காரணத்தை முன்னிட்டும் நடந்த வரலாற்றை நாங்கள் திரிக்க மாட்டோம். அழிக்க மாட்டோம். மறைக்க மாட்டோம்.
 
இரவா

 
 

 

மேற்கண்ட கொடுமைகளை வளர்க்கத்தான் அனைத்து இந்து நாடுகளும் முயன்றிருக்கின்றன. அவை இந்துக்களின் பொது நலனுக்காக எதையும் செய்யவில்லை. இந்து மன்னர்களின் ஆட்சியில் அவர்களுடைய இந்துக் குடிமக்களுக்கு முன்னேறும் வாய்ப்பே கிடைக்கவில்லை. மாறாக ஒருவர்க்கொருவர் காழ்ப்புணர்ச்சி, சண்டை போன்றவற்றால் சிதைவுற்று ஆண்மை, தன்மானம் போன்றவற்றைப் பறிகொடுத்துவிட்டு ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்து சமுதாயத்திலிருந்து வெளியேறி கிறிஸ்துவ புத்த ஜைன மதத்திலும் பிரம்ம சமாஜத்திலும் ஆரிய சமாஜத்திலும் அடைக்கலம் புகுந்தனர். இன்றளவும் இந்த நிலையிலிருந்து எந்த மாறுதலும் நிகழ்ந்து விடவில்லை.

இந்து மாநிலங்களின் சமகால வரலாற்றை ஆராய்ந்தால் இவற்றைப் புரிந்து கொள்ளலாம். கல்வி முன்னேற்றத்திலும் அரசியல் எழுச்சியிலும் முன்னணியாக திருவிதாங்கூர் மாநிலம் இருக்கிறது. திருவிதாங்கூர் மகாராஜா தன்னுடைய கோயில் நுழைவுப் பிரகடனத்தினால் இந்து சமுதாயத்திம் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தினார்.

இந்துக்களின் உள்ளங்களில் அடைபட்டுக் கிடந்த மூடநம்பிக்கையை ஒழிக்கவும் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் எப்பொழுதும் அனுபவத்து அறியாத சுதந்திரத்தை தன்மானத்தைக் கிடைக்கச் செய்தார். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட அடித்தட்டு  மக்கள் கோயிலுக்கு நுழைய அனுமதித்த அந்த துணிச்சலான செயலை உலகெங்கிலும் உள்ள மாமனிதர்களெல்லாம் வானளாவப் புகழ்ந்தார்கள். இருப்பினும் மகாராஜாவின் உத்தரவை ஏற்று இந்துக்களால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. சாதிச் சண்டை இருக்கும் வரை இந்துக்களால் ஒன்று படமுடியாது என்பது தெளிவாகியது. அதன்பின், இந்துக்களும் இந்துக்கள் அல்லாதாரும் ஒன்று சேர்ந்து ஆட்சியைக் கவிழ்த்தனர்.

அச்சமயத்தில் சமஸ்தானத்தின் திவானாக சர்.சி.பி.இராமசாமிஅய்யர் பதவியில் இருந்தார். அப்போது திவானும் நாராயணகுருவும் ஒன்றாக இருந்த போதே இந்த நிலை உருவானது. இவர்களுடைய காலத்தில் தான் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி தனது இன்னுயிரை பலிகொடுத்தார், காந்தி.

மகான்களெல்லாம் சீரியனைப் போல உதித்தெழுந்து, பகலின் போதில் மறைகின்றனர். அவர்கள் தூவிய விதை முளைவிட்டு வளரும் வாய்ப்பு இந்த நாட்டுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. அவை என்று கிடைக்குமென்று யாரால் கூற முடியும்?

                                                                                                இருக்கு……இன்னும்….!

Tthamizth Tthenee

unread,
Jul 4, 2008, 11:44:12 AM7/4/08
to minT...@googlegroups.com
திரு இரவா அவர்களே
நான் எப்போது சொன்னேன் நீங்கள்  எழுதிய
கட்டுரை பிடிக்கவில்லை என்று,
காலம் காலமாக நாம் எப்போதும் முன்பு செய்த
தவறுகள் என்று பேசிக் கொண்டிருக்கிறோம்
நாளை..... இன்று நாம் செய்யும் தவறுகளை
வருங்கால சந்ததியினர் பேசிக் கொண்டிருப்பர்
ஆக மொத்தம் நடை முறை வாழ்க்கையில்
அன்றாட தீர்வுகள் கிடைப்பதில்லை
என்பதே என்னுடைய வருத்தம்
இதில் என்னுடைய  அறிஞர்தனம் எங்கே
தலைகாட்டியது என்று எனக்குப் புறியவில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
2008/7/4 இரவா <vasude...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Jul 4, 2008, 6:25:07 PM7/4/08
to minT...@googlegroups.com
2008/7/5 இரவா <vasude...@gmail.com>:

>>
> எனது, அஞ்சல் மின்தமிழ் குழுமத்தில் இடம்பெறாதவாறு தடை செய்துகொள்ளலாம்.
> எந்தக் காரணத்தை முன்னிட்டும் நடந்த வரலாற்றை நாங்கள் திரிக்க மாட்டோம். >அழிக்க மாட்டோம். மறைக்க மாட்டோம்.
>

அன்பின் இரவா:

இங்கு "நாங்கள்" என்று கட்சி கட்ட வேண்டாம்.

அபிப்ராய மூட்டைகள் களையப்படும் போதுதான் சத்ய தரிசனமாகிறது. ஒரு ஆய்வு
பொருள் என்றால் உசாத்து நூற் குறிப்பு வேண்டும். யார் சொல்வது என்பது
தெளிவாக அறியப்பட வேண்டும். எல்லா மடலாடற்குழுக்களிலும் ஜாதி பற்றி
ஆயிரமாயிரம் அபிப்பிராயங்கள் குப்பையாய் நிறைந்து கிடக்கின்றன. மின்தமிழ்
அப்படியான குழுமமல்ல. உங்கள் தொடரில் இந்தத் தெளிவில்லாமல் இருந்தது.
யார் பேசுகிறார் என்பது பல நேரங்களில் எங்களுக்குப் புரிவதே இல்லை!

அபிப்பிராயம் என்றில்லாமல் ஆய்வு பூர்வமாக, சான்றுகளுடன் தரப்படும்
கட்டுரைகள் பாராட்டையே பெருகின்றன. சத்திரியர் பற்றிய உங்கள் கட்டுரை
ஜாதிக்கட்டுரைதான் என்றாலும் அதில் ஒரு ஆராய்ச்சிப் போக்குத் தெரிகிறது.
அதைப் பாராட்டி இருக்கிறேன்.

அன்பரே! இங்கு மார்தட்ட வேண்டிய அவசியமே இல்லை. இங்கு விரிவான புரிதல்
உள்ள ஜனங்களே வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். நன்றி.

கண்ணன்

இரவா

unread,
Jul 4, 2008, 11:31:35 PM7/4/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


இந்து என்றால் யார்?

இந்து என்றால் யார் என்றோ இந்து மதம் என்றால் என்ன என்றோ யாராலும் கூறமுடியாது.இந்து மதத்தில் கடவுளை நம்புகின்றவர், நாத்திகர், அத்வைதி, துவைதி, சைவர்,வைணவர் போன்றோரும், சூரியன், சந்திரன், அக்னி, வாயு போன்ற இயற்கை சக்திகள், மண்ணில் மறைந்த மூதாதையர்கள், அவர்கள் உருக்கொண்ட  விக்கிரகங்கள், பறவைகள், மிருகங்கள், ,அரங்கள், தேவதைகள், தேவர்கள் போன்ற வழிபாட்டாளர்களும் இருக்கிறார்கள்.

அவர்களிடம் மிருகபலி, நரபலி போன்ற காட்டுமிராண்டிச் சடங்குகளும் உண்டு. அதேபோது மேன்மையான தியானம், யோகம் போன்ற பயிற்சிகளும் உண்டு. அத்தகையோர்களாகிய பழங்குடிகள், தாழ்த்தப்பட்ட மக்கள், தீண்ட்த்தகாதோர், பண்பாட்டுச் சிறப்புடையோர், மேட்டுக்குடியினர் ஆகிய எல்லோரும் இந்துக்களாகக் கருதபடுகின்றனர்.

பொதுவான நம்பிக்கை பிரமாணங்களோ, குருவோ, பொதுப்பயில் முறைகளோ, பொதுக்கடவுளோ எதுவும் இந்துக்களுக்கு இல்லை.

புத்தமதம், கிருஸ்து மதம், இஸ்லாம் மதம் போன்ற  மதமாக இந்துமதம் இல்லை. நூற்றுக்கணக்காக சாதிகளும் குலங்களும் கோதிரங்களும் வர்க்கங்களும் வண்ணங்களும் கொண்ட  கிருஸ்துவ முஸ்லீம் அல்லாத இந்தியர்களை வெளிநாட்டினர் குறிப்பிட்ட சொல்லே இந்துக்கள் என்பதாகும்.

இந்தியாவிலுள்ள இந்துக்களிடம், வாலும் தலையும் இல்லாத புராணக்கதைகளைக் காதுகொடுத்து கேட்பதைத் தவிர அவர்களிடம் வேறு எந்த ஞானமும் இல்லை. அவர்களுடைய முன்னோர்களின் உயர்ந்த சிந்தனைகளுக்கு முற்றிலும் மாறாக ஈனத்தனமான விக்கிரக பூஜைகளும் கெட்ட பழக்கவழக்கங்களும் மலிந்திருக்கின்றன.

மரம், கல், உலோகம் போன்றவற்றைச் செதுக்கி உருவாக்கப்பட்ட விக்கிரகங்களில் தேவர்களும் தேவதைகளும் குடிகொண்டிருப்பதாக எழுத்தறிவு இல்லாதவர்கள் பெரும்பாலோர் நம்புகின்ற மதமாக உள்ளது.

சுதந்திரச் சிந்தனையாளர்களும் பண்டிதர்களும் புலவர்களும் இந்து மதத்தைப் பற்றி எழுதிவைத்ததெல்லாம் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களும் விருப்பங்களுமாகும்.

-       இருக்கிறது.

Tthamizth Tthenee

unread,
Jul 5, 2008, 12:37:18 AM7/5/08
to minT...@googlegroups.com
இருக்கட்டும் .....இன்னும் வளரட்டும்
 
ரசிக்கிறோம்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

இரவா

unread,
Jul 8, 2008, 9:36:53 PM7/8/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com


ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த  "ஆபீடுபோய்" (Abbe Dubois) என்னும் பிரெஞ்சுக்காரர் எழுதிய நூலிலிருந்து.

'கோவில் சுண்டெலி கடவுளர்களைக் கண்டு பயப்படவில்லை' என்று, இந்துக்களிடம் ஒரு பழமொழி உண்டு. புரோகிதர் விஷயத்தில் இது நூற்றுக்குநூறு உண்மை. அவர்கள் கோயிலுக்குள் நுழைவதையும் அங்கு அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தையும் பார்த்தால் கோயிலிலிருக்கும் கடவுள்களிடம் பூசாரிகளுக்குச் சற்றும் பயபக்தி கிடையாது என்பது  அவர்களுடைய பூஜை, பஜனை, சடங்கு, மந்திர தந்திர உச்சாடணம் போன்றவை செய்யும் போது  புலப்படும்.

மேலும் பூசாரிகள், ஒரு வேசியுடனோ திருமணமாகாத பெண்ணுடனோ படுக்கையைப் பங்குபோட்டுக் கொள்வது தவறானது என்று நினைக்கவில்லை. மிகவும் அற்பமான சாதி நடைமுறைகளை மீறுவதைக்கூட மகாபாவம் என்று கூறுகிற பூசாரிகள் பார்வையில், "வேசித் தொழிலும் சோரம்போவதும் தவறில்லையாம். கோவில்களில் தேவதாசிகளையும் வேசிகளையும் வளர்ப்பதே இவர்களின் காமவெறியைத் தணித்துக் கொள்ளட்தான். "வேஸ்யா தர்சனம் புண்யம், பாபநாசனம்" என்று அவர்கள் பாடுவது வழக்கம். வேசியைப் பார்த்தால் பாவத்திலிருந்து மீளலாம். புண்ணியம் கிடைக்கும். அண்மைக்காலங்களில் கோவில்களில் தாசிமுறை நிறுத்தப்பட்டுவிட்டாலும், புரோகிதர்களின் மனப்பான்மைகளில் மாறுதல் எதுவும் நடந்துவிடவில்லை.

புதிதாக ஒரு கோயில் உருவாகிறது என்றால், அக்கோயிலிலிருந்து ஒரு சில புரோகிதர்களின் ஜீவனம் உறுதியாகிறது என்பது உறுதியாகிறது! என்று பொருள். ஆன்மீக உணர்வு கொண்ட சிந்தனையாளர் பார்வையில் அது கேலிக்குறியது உண்மையான மதத்தைக் விகாரப் படுத்துவதும்  ஆதிகாலத்திலிருந்து தொடரும் பாவச் செயலாகும். இத்தகைய வெற்றுக் கட்டிடங்கள் நாடெங்கிலும் இருக்கின்றன. பல லட்சம் இந்துக்களுக்கும் சீரழிந்த புரோகித மையங்கள் புகலிடமாக இருக்கின்றன.  இந்த கோயில் இயக்கத்தின் மூலம் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை எதுவும் கிடையாது. அது புரோகித இனத்தின் சுரண்டல் தந்திரத்தை வாழ வைக்கிறது. மக்களின் செல்வம் ஆன்மீக உணர்வு எனும் பெயரால்  புரோகிதச் சடங்குகளால் விரயமாகி விடுகிறது. மூட நம்பிக்கையும் கெட்ட குணங்களும் வளர்கின்றன. இதைவிடவும், இந்துக்கள் விக்கிரகங்களுக்காக உயிர்விடவும் தயாராகின்றனர்.

அடுத்து சன்யாசி மடங்கள்

 

Message has been deleted

Narayanan Kannan

unread,
Jul 9, 2008, 7:02:11 PM7/9/08
to minT...@googlegroups.com
அன்பின் ஸ்ரீநிவாசன்:

இம்மாதிரி மடல்கள் தமிழ் குழுக்களில் சர்வ சாதாரணம். எப்போதும் ஒரு
ஜாதியைத் திட்டிக் கொண்டே இருப்பது! உண்மையில் சாதீயம் என்பது
சாதீயத்தைப் பொருட்படுத்தாமைதான். எப்படி நாத்திகன் என்பவன் எப்போதும்
இறைவனைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கிறானோ, அது போல்தான் இதுவும்.
Positive discrimination என்பதும் ஜாதீயம்தான் என்பது புரிவதே இல்லை
பலருக்கு. பேசினால் 'பிறப்பு' குறித்துச் சாடுவார்கள்! இதுவொரு நிகழ்கலை.
பேசாமல் ரசிப்பதே உசிதம் (ரசிக்க முடிந்தால்)! பெரியார் செய்ய பெரிய
அனுக்கிரகம் பிராமணர்களை விழிக்கச் செய்தது. இவர்கள் பேசும் பிராமணீயம்
(சாதீயம்) இப்போது அக்கிரகாரங்களில் இல்லை, வெவ்வேறு இடங்களில் ஒளிந்து
கொண்டு ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. அதைச் சாடும் திறன் அற்றவர்கள்.
செத்த பாம்பை அடிப்பதில் வல்லவன் தமிழன்!

கண்ணன்

2008/7/9 Srivatsan R <vaid...@gmail.com>:
> Mr Kannan this is clear rubbish. Vomitting some undigested
> writings of others and deriving a purile kick out of what it
> will do to others concerned. Are these Drs of India always like
> this? Stagnant pools of stench and sterile gaps of the rift.
>
> 2008/7/9 இரவா <vasude...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Jul 10, 2008, 10:24:48 AM7/10/08
to minT...@googlegroups.com
வருக  ஸ்ரீவத்ஸன்.   வைதிக  நாட்டம்  மிக்க  உங்களுக்கு    இதில்  அருவருப்பு  தோன்றுவது  நியாயமே.   தங்களுடைய   கருத்துகள்  எவ்வளவு எதிர்ப்புடையதாய்  இருப்பினும்,  எத்துணை  கடுமை  உடையதாய்  இருப்பினும்  மற்றவர்கள்   தவறவிடும்  நாகரிகத்தையும் எடுத்துக்காட்டும்  வகையில்   (தி  வா  குறிப்பிடுவதுபோல்) எழுதலாமே.   இந்தக்  கருத்து  சுதந்திரத்தையும்  நீங்கள்  கண்ணனின்   குழுமத்தில்தான்  காணமுடியும்  என்பதும்  உண்மை.  மற்றவர்கள்  கருத்து  சுதந்திரத்தைப்  பற்றிப்  பேசுவதோடு  சரி.
 
தமிழில்   மின்தட்டில் எழுதுவது   சுலபம்.    நாம் எழுதுவதும்   மின்தமிழ்  ஆயிற்றே!   ஆயினும்   நீங்கள்  தவிர்க்க  இயலாது   ஆங்கிலத்தில்  எழுதும்  பட்சத்திலும்    ரசிக்க  நான்  தயார்.

Narayanan Kannan

unread,
Jul 10, 2008, 11:29:19 AM7/10/08
to minT...@googlegroups.com
---------- Forwarded message ----------
From: ravindran sriramachandran <ravindran.sr...@gmail.com>
Date: Thu, Jul 10, 2008 at 11:19 PM
Subject: from ravindran sriramachandran new york
To: nka...@gmail.com

dear dr. kannan
my name is ravindran sriramachandran (ravi), from coimbatore, now
doing my phd at columbia university in new york in
anthropology/history, i am a member in the min-tamil kuzhu and have
read with interest your postings, i have difficulty in replying, i
dont know where to click to reply as (other than the postings) its all
in korean font (i think), so i am writing to you, would it be possible
to post this on the mintamil blog? i will write a more detailed mail
on my work soon.
much regards
ravi

இந்து ஆட்சி! - - தர்மதீர்த்த அடிகளார்

Dear Ira. Va
Apologies for writing in English, I am writing this from the library
computer and have no access to Tamil fonts here. Here are some
thoughts on your posting, first I agree with friends, let us not
rehash tired old debates here. I think and have seen that we are
capable of serious enquiry here. Moreover i dont see any point in
pointing fingers as 'us' vs 'them' , it is not conducive for enquiry
at all, this is not to say that that kind of polemic has no place, but
there is no point in speaking that language here. I think that sort of
polemic is left to politics (not the 'political', the difference
between politics and political is too big to take on here). Having
said that, I dont see how one could make an argument for a 'pure'
pre-caste (or 'casteless') sangam period, enough scholars from George
Hart to Raj Gowthaman (see Dalit Paarvayil Tamil Panpaadu, Vidiyal)
downward have explained and written innumerable articles and quite a
few books on this. Morevover 'çaste' as we know it and pre-colonial
caste are two different things (leave alone the Sangam period). The
changes that the idea of Caste and culture in general underwent in the
colinial period has been demonstrated by Nicholas Dirks in his
wonderful book ('Castes of Mind', Permanent Black, 2002) , Bernard
Cohn ('Colonialsm and its forms of Knowledge') and the whole
sub-altern school of historians. As to the role of 'Brahmin' as we
witness now see M.S.S. Pandian's new book 'Brahmin/Non-Brhamin'
(Permanent Black, 2006) . Abbe Dubois can hardly be seen as an
impartial observer, not necessarily because he was a missionary
travelling in India and was really hell bent on saving souls but
merely because of cultural intranslatabaility. Cultures are not
apparent to describe, one cannnot look at something in culture and
describe and it and get at the 'truth'of it. In a wonderful piece
Umberto Eco writes a fictional account of a Pacific Island
anthropologist studying Italian culture describe a football game as a
cannibalistc reirual from cries he hears from outside the stadium.
Moreover Abbe Dubois accounts were disputed in his own time and later
it was said that he nevr wrote any of those but used aother French
travellers account as his own. Abbé Dubois influenced James Stuart
Mill's malicious "History of British India" (which for years was the
guiding book for histories of India, in many ways still is) which was
written in six volumes in 1818. The volumes were compulsory reading
for candidates wishing to appear for the I.C.S. exams. Mill's history
has in fact mesmerized the best Hindu minds. And here is what Max
Mueller himself has to say in this book "India - What it can teach
us?" 'The book which I consider to be most mischievous, nay which I
hold responsible for some of the greatest misfortunes that have
happened to India, is Mill's 'History of British India'...Mill, in his
estimate of the Hindu character, is chiefly guided by Dubois, a French
missionary and by Orme and Bucahnan, Tennant and Ward, all of them
neither very competent nor unprejudiced judges.

Hinduism as a religion, I dont see the point of discussing this
unless we agree on a common definition of what religion is. Over three
decades ago Wlliam Cantrell Smith argued in his book 'The Meaning and
End of Religion' ( Harper and Row, 1978) that the term is a scholarly
construct that had little to do with anything on the ground, in our
context Frits Staal in his 'Rules Without Meaning' (Peter Lang 1989)
argued that the term religion hardly applied to eastern 'religions'and
was only applicable to the semitic religions. H.N. Balagangadhara, in
his book 'Heathen In His Blindness' (Brill, 1994) says the term
'religion'grows out of protestant christian studies in the eighteenth
century, and that the notion that all people have a 'religion' is a
bias that comes out of enlightenment conceit. If one were to take
'religion' as an explanatory account of the cosmos, it is hardly
applicable to eastern religions, as it would be to the semitic ones
according to Balagangadhara. Now, I do not necessarily agree with
everything that Balagangadhara says (in fact I dont agree with a lot
he says), but there is something to be said about considering the
'modern' (or 18th century and after European thought) as a defining
moment of our understanding. Or in other words that all our
understanding is necessarily through the 'modern', there is no way we
can construct a pure 11thy century or sangam period, our reading, our
understanding is always through the intervening history. Does this
mean that we should stop all enquiry? Not at all, but let us accept
things with a little scepticism and postpone judgement. Lastly, to
return to caste, caste as mere difference is different caste as
hierarchy, as is hierarchy in anything this has to be condemned,
gender, language, nation whatever may be the basis hierarchy it has to
be rejected. Lets us be wary of history too and all that gives us
'truths' to live with for issuing manifestoes will take us nowhere and
nor will ad hominem attacks on any one group in scholarship.

With much regards
Ravi

Narayanan Kannan

unread,
Jul 10, 2008, 11:44:11 AM7/10/08
to minT...@googlegroups.com
தி.வா இவ்விழையில்தான் என்னைக் கேள்வி கேட்டார் என்று நம்புகிறேன். இரவு
12:37! தேடினால் அகப்படவில்லை!

கண்ணன் சாமர்த்தியக்காரன் இல்லை.

நமது நோக்கம் தெளிவாக பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி நீங்கள்
கூட சமீபத்தில் ரங்கனுக்கு நினைவுறுத்தினீர்கள். இத்தொடரால் மின்னாக்க
முயற்சிக்கு என்ன பலன்? முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருக்கலாம்.
அதற்குத்தான் பல வம்பு மடங்கள் உள்ளனவே?

மேலும் மட்டுறுத்தர் என்ற அளவில் இங்குள்ள புரோகிதர்களின்,
அர்ச்சகர்களின் மனதை புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அவர்கள்
கேட்டவுடன் உதவி செய்கின்றனர்.

மீண்டும் இத்தொடரால் மின்னாக்கப் பணிக்கு என்ன உபயோகம் என்பதை
அனுப்புவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

செய்ய வேண்டிய பணி நிரம்பக் கிடக்கிறது.

கண்ணன்

srirangammohanarangan v

unread,
Jul 10, 2008, 12:28:17 PM7/10/08
to minT...@googlegroups.com
>நமது நோக்கம் தெளிவாக பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி நீங்கள்
கூட சமீபத்தில் ரங்கனுக்கு நினைவுறுத்தினீர்கள். இத்தொடரால் மின்னாக்க
முயற்சிக்கு என்ன பலன்? முடிவில்லாமல் பேசிக்கொண்டே<
நோக்கத்திற்குப்  புறம்பாக   பெரும்பாலும்  பேசுபவர்    அநேகமாகக்  கண்ணன்தான்.   மற்றவர்க்கு   நினைவுறுத்துவது  போல  பொய்பாவனைகளை  விடுத்து  தனக்குத்  தானே  நினைவுறுத்திக்  கொள்ளுதலே   செய்யத்தக்கது.  ஆனால்  பாவம்....!
2008/7/10 Narayanan Kannan nka...@gmail.com:
, visit this group at http://groups.google.com/group/minTamil
-~----------~----~----~----~------~----~------~--~---


kra narasiah

unread,
Jul 10, 2008, 12:37:10 PM7/10/08
to minT...@googlegroups.com

Erudite posting by Ravi.

narasiah

Tirumurti Vasudevan

unread,
Jul 10, 2008, 12:38:39 PM7/10/08
to minT...@googlegroups.com
இல்லை கண்ணன் இந்த இழையில் நான் இன்னும் ஏதும் எழுதவில்லை.
ரங்கருக்கு நான் ஒன்றும் அறிவுறுத்தவில்லை. என் நிலைப்பாட்டை சொன்னேன், அவ்வளவே.

நான் எழுதியது ஸ்ரீவத்ஸன் எழுதிய இழையில்.
நீங்கள் கேள்வி கேட்பது ஒரு கலை என்று சொன்னதற்கு நீங்கள் அதில்
கெட்டிக்காரர் என்று மறு மொழி தந்தேன்.
திவா

2008/7/10 Narayanan Kannan <nka...@gmail.com>:


> தி.வா இவ்விழையில்தான் என்னைக் கேள்வி கேட்டார் என்று நம்புகிறேன். இரவு
> 12:37! தேடினால் அகப்படவில்லை!
>
> கண்ணன் சாமர்த்தியக்காரன் இல்லை.
>
>


--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Narayanan Kannan

unread,
Jul 10, 2008, 8:14:19 PM7/10/08
to minT...@googlegroups.com
2008/7/11 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> நோக்கத்திற்குப் புறம்பாக பெரும்பாலும் பேசுபவர் அநேகமாகக்
> கண்ணன்தான். >>

அப்படியா! சரி.

இனிமேல் எல்லோரும் கவனமாக இருப்போம்!

கண்ணன்

இரவா

unread,
Jul 11, 2008, 12:53:51 PM7/11/08
to தமிழாயம், தமிழ்நண்பர்கள், minT...@googlegroups.com

Ref: Aitreya Brahmana 8: 24 page 212

"அரண்மனைப் புரோகிதரை நியமனம் செய்யாத ஒரு மன்னர் படையல் அளித்தால் அதைக் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார். எனவே யாகங்கள் மேற்கொள்ளாத நாட்களிலும் ஒரு புரோகிதர் அரண்மனையில் இருந்தே ஆக வேண்டும். புரோகிதர் வைஸ்வாரை அக்னியாவர். அவருக்கு ஐந்து சம்ஹார அக்னிகள் இருக்கின்றன.

(1)  சொல்லில் அக்னி

(2)  பாத்த்தில் அக்னி

(3)  பிறப்புறுப்பில் அக்னி

(4)  சருமாக்னி

(5)  இதயாக்னி

இந்த ஐந்து அக்னியின் பலத்துடன் மன்னரை அணுகுகிறார்.

1)பணியாட்கள் அவர் அமர புல்லைப் பரப்பும் போது புரோகிதரின் சாபத்திலிருந்து மன்னர் தப்புகிறார்கள். 2) பணியாட்கள் புரோகிதரின் காலைக் கழுவத் தண்ணீர் எடுத்துவரும் போது பாதாக்கினியில் இருந்து மன்னர் தப்புகிறார்.  3) புரோகிதருக்கு ஆடை ஆபரணங்களை அணிவிக்கும் போது மன்னர் சருமாக்கினியிலிருந்து தப்புகிறார். 4) உணவளித்து மகிழ்விக்கும் போது இதயாக்கினியிலிருந்து மன்னர் தப்புகிறார். 5)மன்னரின் அரண்மனைக்குள் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி புரோகிதர் உலவும் போது அவரது பிறப்பு உறுப்பு அக்னியிலிருந்து மன்னர் தப்புகிறார். இவ்வாறு புரோகிதரின் பஞ்சாக்னிகளையும் திருப்திப் அடுத்தினால் புரோகிதர் மன்னரை சொர்க்கத்திற்கு வழிநட்த்துகிறார். மன்னருக்கு அரச பதவியும், துணிவும், நாடும், குடிகளும் நிலைக்கின்றன. புரோகிதரை திருப்திப் படுத்தாவிட்டால் இவை அனைத்தும் அற்றுப் போய்விடும்".

மன்னர்களும் பிரபுக்களும் சுகபோகங்களில் மூழ்கித் திளைத்ததனால் புரோகிதர்களின் இந்த்த் தீய குணங்களுக்கு எளிதாக அடிபணிந்து விட்டார்கள். மன்னர்களின் மீதும் அவர்களின் மனைவிமார்களின் மீதும் புரோகிதர்களுக்கு நிலையான அதிகாரம் கிடைத்தது.

இரவா

unread,
Jul 12, 2008, 2:33:42 AM7/12/08
to Tamil2...@googlegroups.com, தமிழாயம், minT...@googlegroups.com
இதே கேள்வியைத் தான் அறிஞர்கள் காலங்காலமாகக் கேட்டுக் கொண்டு வருகின்றார்கள். கேட்டவை கேட்பவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிக் கொண்டிருக்கின்றன.

2008/7/12, dhandapani s.dhandapani <udtdha...@gmail.com>:
இந்துக்கள் என்றால் "திருடன்" என்று கருணாநிதி சொல்லியுள்ளார்
என்று குறிப்பிட்டுள்ளீர்.அது தவறு.

இதோ விவேகானந்தர் என்ன சொல்லியுள்ளார் என்று பாருங்கள்.

    "நாம் இந்துக்கள்,நான் இந்து என்ற வார்த்தையை மோசமான
பொருளிலில் பயன்ப்டுத்துவே இல்லை.பழைய காலத்தில் அந்த்ச்
சொல் சிந்து நதியின் மறுபக்கத்தில் வாழ்ந்த மக்களைக் குறிப்பிடு
வதற்க்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.தற்கால்த்தில் இந்து என்னும்
வார்த்தை கெட்டவைகளைப் பொருள் செய்வதற்கே பயன்படுத்த்ப்
ப்டிகின்ற்து"

                அது என்ன,மோசமான பொருள்? அதுதான் இந்து என்றால்
"திருடன்" என்று பாரசீக மொழியில் கூறும் பொருள்.

                 சிந்து நதிக்கு மறுபக்கத்தில் வாழ்ந்த மக்களை மட்டுமே
குறிப்பிட்ட சொல் என்று விவேகானந்தர் கூறுகின்றார்.அதாவது
பாரசீக நாட்டுக்காரனுக்கு மறுபக்கம் என்பது சிந்துநதிக்குக் கிழக்கே
இருக்கும் ப்குதி.அதாவது இந்திய நாட்டுப்பகுதி.இதே பொருள்தான்
ஆக்ஸ்போர்டு அகராதியில் காணப்ப்டுகின்றது.

                  மக்களைக் குறித்த சொல் மதத்ஹை குறிப்பதாக எப்படி
ஆகும்? ஆகிவிட்டது?எப்படி? சாமிநாத சங்கராச்சியாரின் தெய்வத்தின்
குரல் நூலின் படி வெள்ளைக்காரர்கள் அப்படி கூப்பிட ஆரம்பித்தார்
கள்- பெயரில்லாத நாம் சந்தோசத்துடன் அதை வைத்துக்கொண்ட்டோம்.

                  என்வே இந்து எனறு மதமே கிடையாது.இது ஒரு
க்லாச்சாரம்.இல்லையெனில் இந்து என்ற சொல் எந்த வேதத்தில்?
எந்த புராணத்தில்? உள்ளது?

                   செப்பு மொழி நம் த்மிழ் மொழியில் உள்ளதா?
கடவுள் மொழி என்று சொல்கின்ற வட மொழியான சமஸ்கிரத்தில்
உள்ளதா?

                ஆக,மதத்திற்கு பெயர் பாரசீக சொல்.அழைத்தது
ஆங்கிலேயர்கள்..ஆதார வேதங்கள் ஆரியருடையவை.

                 தமிழ்ர்க்கு-திராவிடர்களுக்கு-இம் மதம் எப்படி பொருந்தும்?
தமிழ்ர்க்கான மதமாக இந்த மதத்தை எப்ப்டி ஏற்க முடியும்?
Message has been deleted

Narayanan Kannan

unread,
Jul 12, 2008, 3:40:44 AM7/12/08
to minT...@googlegroups.com
ஸ்ரீவத்சன்:

1. கூகுளில் 'தேர்ந்தெடுத்த பகுதிகளை' நீக்கும் வசதி இல்லை (I can't edit
mails to the group)

2. பொறுப்பான எழுத்து எது என்பதை எழுதுபவரே தீர்மானித்துக் கொள்ள
வழிகாட்டலாம். பல நேரங்களில் நல்ல முதிர்ச்சியுள்ள பங்களிப்பாளரே தவறு
செய்வதுண்டு. To error is human!

3. I do not want to create heros out of my action! பெரும்பாலும்
இம்மாதிரிக் கட்டுரைகளின் தலைப்பைப் பார்த்தாலே 'தினத்தந்தி' பாணி என்று
புரிந்துவிடும். 'சதக், சதக்' என்று வெட்டு. சுடச்சுட செய்தி இப்படி. இவை
அல்ப கவன ஈர்ப்பை மனதில் கொண்டு எழுதுபவை. அல்பங்களை அல்பங்களாக
அனுமதிக்க வேண்டும். அவைகளை அரச பீடத்தில் அமர்த்தக் கூடாது. நாம்
எல்லோரும் படித்தவர்கள், சமூகப் பொறுப்பு உள்ளவர்கள். நம் எல்லோருக்கும்
எது நல்லது, எது கெட்டது என்பது தெரிந்தவர்கள். எனவே 'பள்ளிக்கூட'
பாணியில் கம்பு எடுக்க முடியாது :-)

4. இத்தொடரைப் படித்தாலே புரிகிறது எப்படியானதொரு குழம்பிய மனோநிலையில்
எழுதப்பட்டிருக்கிறது என்று. அவருக்கு தமிழ்ப் பதிப்பித்தல் பற்றிய எந்த
அடிப்படையும் தெரியாது என்று தெளிவாகிறது. ஏடுகளைப் பதிப்பிக்கும் போது
பல்வேறு பிழைகள் வருவதற்கு சாத்தியமுண்டு. உ.வே.சா எவ்வளவு
உழைத்திருக்கிறார் என்பதை அவரது சுயசரிதம் வாசித்தவர்களுக்குப் புரியும்.
எவ்வளவு கவனமாக இருந்தாலும் சிறு பிழைகள் வருவதற்கு வாய்ப்புண்டு.
உ.வே.சா காலத்தில் பதிப்பித்த நாவலர், தமது பதிப்பில் எழுத்துப்பிழை
காண்பவருக்கு பரிசு தருவதாக அறிவித்து இருக்கிறார். அவ்வளவு
professionalism இருந்த காலம். ஆனால் எந்தப்பொறுப்புணர்வும் இல்லாமல்
அத்தகைய பெரியோரை வெறும் 'ஜாதி' கண்ணோட்டம் கொண்டு சாடுதல், பெரியோருக்கு
'இகழ்' சேர்க்காது. எழுதுபவரை 'இனம்' காட்டிவிடும். அவ்வளவுதான்.

5. மேலும் ஜாதியம் என்பது ஒரு துறை. 'ஜாதி' என்பதைப் பற்றிப் பேச மனித
உளவியல், உயிரியல், அறிவியல், மானுடவியல், சரித்திரவியல், போன்ற துறை
அறிவு இருக்க வேண்டும். தமிழ் பற்றிப் பேச இலக்கிய, மொழி அறிவு வேண்டும்.
நம்மவர்கள் ஒன்று தெரிந்தால் மற்ற எல்லாம் தெரிந்த மாதிரிப் பேசுவது
வழக்கம். ஆய்வுப் பயிற்சி இல்லை என்பதே இதன் பொருள். உ.வே.சா 'இன
உணர்வுடன்' எழுதினார் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? அவர் 'ஐயர்'
என்பதைத் தவிர? தென் ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் 'நாயுடு' என்று
பெயர் வைத்துக் கொண்டுள்ளனர். அதனால் அவர்கள் எழுத்து 'நாயுடு' எழுத்து
என்று சொல்லிவிட முடியாது :-) உ.வே.சா ஒரு தேர்ந்த பேராசிரியர். தன்
துறையறிவு நிரம்பப் பெற்றவர். அவரிடம் பிழை காண வேண்டுமெனில், தக்க
சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். இவையெல்லாம் 'வெற்றுக் கூச்சல்'.

5.தமிழ் ஆராய்ச்சி என்று வரும் போது பல குழப்பங்களைக் காண்கிறேன்.
'தமிழ்ப்பற்று' என்பதும் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
பலர் தங்கள் இருப்பிற்கு தொடர்ந்து எதிரிகளை உருவாக்கிக்கொண்டே
இருப்பார்கள். கட்சிகளை பகுத்துக் கொண்டே இருப்பார்கள். நமக்கு யாரும்
பகையில்லை. கருத்துப்பிழை என்றால் சொல்லித்திருத்த முயலுதல் நலம்.
சமூகப்பொறுப்பை எல்லோரும் வளர்த்துக்கொள்ளுதல் நலம்.

கண்ணன்


2008/7/12 Srivatsan R <vaid...@gmail.com>:
> Mr Kannan my little suggestion in this. U are having a group,
> not just like that, but towards a cause of preserving the
> traditions and heritage. So u can take a bold step in editing
> off totally puerile stuff like cut and paste sadisms, attacking
> groups of people on the basis of caste and clan. especially when
> they are totally alien to the main cause. Anyway u will be
> stamped by ur caste. So why bother?
>
> 2008/7/11 Narayanan Kannan <nka...@gmail.com>:

--
"Be the change you wish to see in the world." -Gandhi

Tirumurti Vasudevan

unread,
Jul 12, 2008, 5:53:17 AM7/12/08
to minT...@googlegroups.com


2008/7/12 Narayanan Kannan <nka...@gmail.com>:

> ஸ்ரீவத்சன்:
>
> 1. கூகுளில் 'தேர்ந்தெடுத்த பகுதிகளை' நீக்கும் வசதி இல்லை (I can't edit
> mails to the group)

அட மாடரேட்டர் இல்லாமலா குழு இருக்கு? இல்லை அது வேறு யாரோவா?

>
> 2. பொறுப்பான எழுத்து எது என்பதை எழுதுபவரே தீர்மானித்துக் கொள்ள
> வழிகாட்டலாம்.

அதுதானே சாமி காணோம். என்ன செய்ய போறீங்க?


பல நேரங்களில் நல்ல முதிர்ச்சியுள்ள பங்களிப்பாளரே தவறு
> செய்வதுண்டு. To "error" is human!

-i agree! ;-)))))))))


>
> 3. I do not want to create heros out of my action! பெரும்பாலும்
> இம்மாதிரிக் கட்டுரைகளின் தலைப்பைப் பார்த்தாலே 'தினத்தந்தி' பாணி என்று
> புரிந்துவிடும். 'சதக், சதக்' என்று வெட்டு. சுடச்சுட செய்தி இப்படி. இவை
> அல்ப கவன ஈர்ப்பை மனதில் கொண்டு எழுதுபவை. அல்பங்களை அல்பங்களாக
> அனுமதிக்க வேண்டும். அவைகளை அரச பீடத்தில் அமர்த்தக் கூடாது. நாம்
> எல்லோரும் படித்தவர்கள், சமூகப் பொறுப்பு உள்ளவர்கள். நம் எல்லோருக்கும்
> எது நல்லது, எது கெட்டது என்பது தெரிந்தவர்கள்.

அப்படியா? பரவாயில்லையே!


 எனவே 'பள்ளிக்கூட'
> பாணியில் கம்பு எடுக்க முடியாது :-)

கம்பெல்லாம் எடுக்க வேண்டாம். தவறு நடக்கும்போது சுட்டிக்காட்டுங்கள். தவறுகள்  தொடர்ந்தால் குழுவிலிருந்து நீக்குங்கள். அந்த உரிமை இருக்கிறதா இல்லையா?


>
> 4. இத்தொடரைப் படித்தாலே புரிகிறது எப்படியானதொரு குழம்பிய மனோநிலையில்
> எழுதப்பட்டிருக்கிறது என்று. அவருக்கு தமிழ்ப் பதிப்பித்தல் பற்றிய எந்த
> அடிப்படையும் தெரியாது என்று தெளிவாகிறது. .... எழுதுபவரை 'இனம்' காட்டிவிடும். அவ்வளவுதான்.

அப்படி நினைத்தால் எங்கே குழப்பம் என்று எழுதுவதே முறை. நான் தொடர் முடியட்டும் என்று இருந்தேன். மேலும் நேரப்பிரச்சினை.




> 5.தமிழ் ஆராய்ச்சி என்று வரும் போது பல குழப்பங்களைக் காண்கிறேன்.
>
ஏன் தமிழ் ஆராய்ச்சி? பொதுவாகவே இந்த காலத்தில்  நடக்கும் "ஆராய்ச்சி"யை பற்றி அறிஞர்  யாருக்கும் இப்போது நல்ல அபிப்பிராயம் இல்லை. இந்த நிலையில் ஆராய்ச்சி எப்படி அமைய வேண்டும் என்று ஒரு தொடர் வர வேண்டியது அவசியம்.



> கருத்துப்பிழை என்றால் சொல்லித்திருத்த முயலுதல் நலம்.
> சமூகப்பொறுப்பை எல்லோரும் வளர்த்துக்கொள்ளுதல் நலம்.

நன்று!

திவா

Narayanan Kannan

unread,
Jul 12, 2008, 6:52:00 AM7/12/08
to minT...@googlegroups.com
2008/7/12 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

>
>
> 2008/7/12 Narayanan Kannan <nka...@gmail.com>:
>> ஸ்ரீவத்சன்:
>>
>> 1. கூகுளில் 'தேர்ந்தெடுத்த பகுதிகளை' நீக்கும் வசதி இல்லை (I can't edit
>> mails to the group)
>
> அட மாடரேட்டர் இல்லாமலா குழு இருக்கு? இல்லை அது வேறு யாரோவா?
>>


அந்தப் பொருளில் இல்லை! கூகுள் அஞ்சல்களைத் தணிக்கை (அனுப்பு x
அனுப்பாதே) செய்யும் வசதி செய்திருக்கிறதே தவிர, அஞ்சல்களுக்குள்
புகுந்து வெட்டி ஒட்டும் வசதி செய்து தரவில்லை. உம்.திரு.சௌந்திரராஜனின்
கடிதங்களின் பின்னொட்டு மிக அதிகம். அதை வெட்ட முடியவில்லை.

மாடரேஷன் (மட்டுறுத்தல்) இல்லாத முறையை நாங்கள் தமிழ்.நெட் குழுமத்தில்
கண்டிருக்கிறோம். அதன் அபாயம் என்னவென்று எங்களுக்குப் புரியும். ஆனால்
இங்கு இந்த வேடிக்கையை நடத்திக் கொண்டிருப்பவர் இரவா. அவர் எல்லோருக்கும்
தெரிந்தவர். த.ம.அக்கு கணிசமாக பங்களித்து வருபவர். அதனால்தான் இது
வெறும் 'கருத்துப் போர்' என்ற அளவில் நிற்கிறது. அவரை மட்டுறுத்த வேண்டிய
அவசியமில்லை.


>> 2. பொறுப்பான எழுத்து எது என்பதை எழுதுபவரே தீர்மானித்துக் கொள்ள
>> வழிகாட்டலாம்.
>
> அதுதானே சாமி காணோம். என்ன செய்ய போறீங்க?
>

அப்படிச் சொல்லிவிட முடியாது. நீங்களே கேள்வி கேட்டது போல், எல்லாமே
தெளிவிற்கான வாய்ப்புதான். இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி அந்தணர்களின்
தமிழ் பங்களிப்பை முறையாக வெளியிடலாம். மூன்று பெரிய வால்யூம்
வந்திருப்பதாக லண்டன் ஐயர் சொல்லியிருக்கிறார். அல்லது சங்கத்தமிழும்
பார்ப்பனர்களும் என்று சுதர்சனம் ஆசிரியர் எழுதிய கட்டுரைகளை
வெளியிடலாம். இரவா ஒரு சுயதேடலை துருதப்படுத்தியிருக்கிறார்.


அவ்வளவுதான்.

ஆனால் எந்த நேரத்திலும் நாம் இனவெறியைத் தூண்டக்கூடாது. தமிழ்
வளர்ச்சிக்கு ஒவ்வொரு சமூகமும் பங்களித்துள்ளது. அதை ஆவணப்படுத்த
வேண்டியது அந்தந்த சமூகங்களின் பொறுப்பு. நான் முன்பு சொன்னமாதிரி ஆரிய
திராவிட வாதமென்பது பிரித்தாளும் ஆங்கிலத்தன்மை. கருப்பு-வெள்ளை எனும்
நிறவெறியும் இதுவும் ஒன்று. எந்த இன, நிறவாதத்தையும் ஏற்றுக்கொள்ள
முடியாது.


>
> எனவே 'பள்ளிக்கூட'
>> பாணியில் கம்பு எடுக்க முடியாது :-)
>
> கம்பெல்லாம் எடுக்க வேண்டாம். தவறு நடக்கும்போது சுட்டிக்காட்டுங்கள். தவறுகள்
> தொடர்ந்தால் குழுவிலிருந்து நீக்குங்கள். அந்த உரிமை இருக்கிறதா இல்லையா?
>

சுட்டிக்காட்டி வருகிறேனே. மற்றவர்களும் சுட்டியுள்ளனரே.

>>
>> 4. இத்தொடரைப் படித்தாலே புரிகிறது எப்படியானதொரு குழம்பிய மனோநிலையில்
>> எழுதப்பட்டிருக்கிறது என்று. அவருக்கு தமிழ்ப் பதிப்பித்தல் பற்றிய எந்த
>> அடிப்படையும் தெரியாது என்று தெளிவாகிறது. .... எழுதுபவரை 'இனம்'
>> காட்டிவிடும். அவ்வளவுதான்.
>
> அப்படி நினைத்தால் எங்கே குழப்பம் என்று எழுதுவதே முறை. நான் தொடர் முடியட்டும்
> என்று இருந்தேன். மேலும் நேரப்பிரச்சினை.
>

இங்கு மிக கவனமான ஒரு நுண் அரசியலை கவனிக்க வேண்டியுள்ளது. நாயைச் 'சூ'
காட்டுவது போல் பிரச்சனை முழுவதையும் ஒரு சமூகத்தை நோக்கிக் குவிக்கும்
ஒரு நுண் அரசியல் இது. இதுவொரு தப்பிக்கும் போக்கு. ஒவ்வொருவரும் சுய
பரிசோதனை செய்து கொள்ளாதவரை சாதீயம் என்பது அங்கிருந்து (இந்தியா)
போகப்போவதில்லை. அது பற்றி சிலாகித்துப் பேசுவது நம் நோக்கமும் அல்ல.

ஆய்வு ரீதியாக, ஆவணப்படுத்தப்பட்ட நல்ல நூல்கள் இருந்தால் வெளியிடலாம்.
உம். அம்பேத்காரின் 'பார்ப்பனீயத்தின் வெற்றி' எனும் நூல் வாசிக்கத்தக்க
நூல். அம்பேத்கார் என்ற பார்ப்பனப் பெயரை அவர் சூடிக்கொண்டிருந்தாலும்
நடு நிலையுடன் எழுதியிருக்கும் நூல் அது. அதுவல்லாமல் வெறும்
'அபிப்பிராயங்களையும், அவதூறுகளையும்' பரப்ப நாம் இடம் கொடோம். அது
வெறுப்பையும், பிரிவையும் தூண்டும். நல்ல செயல்கள் செய்யவே இறைவன் நமக்கு
வாழ்வு தந்துள்ளான்.

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages