ஓம்.
மறை பொருள். ஒவ்வொரு மூலிகைக்கும் தனித் தனியே பெயர் இருந்தாலும் பல பெயர்களால் அழைப்பது உண்டு. சித்தர்களின் மருத்துவப் பாடல்களில் நேரடியாக மூலிகையின் பெயரைக் குறிக்காமல் அதற்குரிய வேறு பெயரைக் குறிபிடுவதும் உண்டு. அவ்வாறு குறிப்பிடுவதைத்தான் மறைபொருள் என்று கூறுவர். ஒரு மருந்தினை எடுத்துக் கொடுத்து புலிப்பாலில் அரைத்துக் குழந்தைக்குக் கொடு என்றார் வைத்தியர். இது நடக்குமா? புலிப்பால் என்பது கழுதைப் பாலுக்கு வைத்தியம் கூறும் மறைபெயர் அது. எடுத்துக் காட்டாக ஒரு பாடல். ஆனைக் கன்றில் ஒருபிடியும் அரசன் விரோதி இளம்பிஞ்சும் கானக் குதிரைப் புறத்தோலும் காலில் பொடியை மாற்றினதும் தாயைக் கொன்றான் சாறு விட்டுத் தயவாக அரைத்துக் கொள்வீரேல் மானைப்பொருவும் விழியாளே!வடுகுந் தமிழும் குணமாமே. இம் மருத்துவப் பாடலில் மறைபொருளாகச் சொல்லப்பட்ட மூலிகை விளக்கம் வருமாறு ஆனைக் கன்று= அத்திப் பிஞ்சு அரசன் விரோதி= கோவைப் பிஞ்சு கானக் குதிரைப் புறத்தோல்= மாமரத்துப் பட்டை காலில் பொடியை மாற்றினதும்= சிரு செருப்படைப் பூண்டு தாயைக் கொன்றான் சாறு= வாழைப் பூச்சாறு வடுகும் தமிழும்=வயிற்றுக் கடுப்பு நோய். என்பதாகும். அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாமரத்துப் பட்டை, சிறு செருப்படைப் பூண்டு இலைகளைச் சமமாக எடுத்து வாழைத் தண்டு அல்லது பூவின் சாறு விட்டு அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.( வடுகு என்பது தெலுங்கில் வயிற்றுக்கு கடுபு என்று பெயர். தமிழில் உள்ள வயிறு என்ற சொல்லையும் இணைத்து "வயிற்றுக் கடுப்பு"), என்று நோயைக் கூட மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளது. |
Aum
(¨`•.•´¨) Always
`•.¸(¨`•.•´¨) Keep
(¨`•.•´¨)¸.•´ smiling!
`•.¸.•´ Aum. | |||
![]() |
|