புவித்தட்டுகளின் கட்டமைப்பு (PLATE TECTONICS)

284 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Aug 15, 2016, 5:52:41 AM8/15/16
to mint...@googlegroups.com

புவித்தட்டுகளின் கட்டமைப்பு


 முதலில் ஒரு சிதறுத் தேங்காய் உடையுங்கள்- சுமாரான வேகத்துடன். ஏழெட்டு சில்லுகளாக உடைந்து விட்டதா. அந்த சில்லுகளை எல்லாம் பொறுக்கி முறையாக சேர்த்து உடையாத தேங்காயின் வடிவத்திற்குக் கொண்டுவாருங்கள். தேங்காயின் மேற்பரப்பில் கீறல்கள். அப்படித்தானே. பூமியின்  மேற்பரப்பும் இப்படித்தான் உள்ளது. ஒவ்வொவொரு சில்லும் ஒரு புவித் தட்டு.(TECTONIC PLATE),,புவியின் முழு மேற்பரப்பையும் ஏழு பெரிய தட்டுகள் மூடியுள்ளன. ஆதலின் இப்புவித்தட்டுகளின் பரப்பளவு பல ஆயிரம் சதுர கி.மீ. என்பதை ஊகிக்க முடியும்.தட்டுகளின் தடிமன் சுமார் 40  முதல் 200 கி,மீ.   கீறல்கள் –தட்டு விளிம்புகள் (PLATE BOUNDARIES)


Inline image 1



.

கண்டங்களைத் தாங்கியுள்ள தட்டுகள் சில பிரியும் விளிம்புகளில்  ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன. கூடும் விளிம்புகளில் இவை  ஒன்றை நோக்கி ஒன்று நகர்கின்றன. இவற்றை முன்பே கண்டோம்.

இப்படிப் புவித்தட்டுகள் பிரிவதும் ( தென் அமெரிக்கா-ஆப்ரிக்கா , அட்லாண்டிக் முகட்டில்), இணைவதும் (இந்திய-ஆசிய தட்டுகள் ,  இமயம், அந்தமான் பகுதியில்), புதுப் பெருங்கடல்கள் தோன்றுவதும் (அட்லாண்டிக் பெருங்கடல்), கடல்கள் மலையாவதும் (டெதிஸ்—இமயம்)  ........இவையெல்லாம் நம் வீடான பூமியில் நடக்கும் வியத்தகு நிகழ்வுகள். ஆனால் இவை சில நாட்களிலோ அன்றி சில  ஆண்டுகளிலோ நிகழ்வான அல்ல. மாறாக சில பல கோடி ஆண்டுகளில் நிகழ்பவை.

இவை அனைத்தையும் அறிவுப் பூர்வமாக விளக்குவதுதான் “புவித் தட்டுகளின் கட்டமைப்பு” கோட்பாடு. கண்டப் பெயர்ச்சி, கடல் தரை பரவுதல் போன்ற கருது கோள்களின் பரிணாம வளர்ச்சி. புவியியலின் விளக்க  முடியாத பல புதிர்களுக்கு இந்தக் கோட்பாடு விளக்கம் அளிப்பதால் , நாங்கள் இதை தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம். இதன்படி , இலெமுரியா போன்ற நிலப் பாலங்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிறது. கடந்த நூற்றாண்டில் இலெமுரியாக் கண்டத்தின் அடியொற்றி பெரும் தமிழ் அறிஞர்கள் பலர் முன் வைத்த குமரிக் கண்ட கருத்துகளில் பெரும்பான்மையானவை  தவறு என்பதும் வெள்ளிடை மலை எனப் புலனாகிறது. .

(புவித்தட்டுகள் இணைவதையும் –பிரிவதையும் காட்டும் அசைபடங்கள்  U-TUBE இல் ஏராளமாக உள்ளன . PLATE TECTONICS எனப் போட்டு கண்டு மகிழுங்கள்,)

 

 

சி. ஜெயபாரதன்

unread,
Aug 15, 2016, 8:30:56 AM8/15/16
to mintamil, Singanenjam Sambandam
நண்பர் சிங்கநெஞ்சம் சம்பந்தன்,

///புவித்தட்டுகளின் கட்டமைப்பு (PLATE TECTONICS) :////

நான் புவித்தட்டுப் பெயர்ச்சி அல்லது புவித்தட்டு நகர்ச்சி என்று என் கட்டுரைகளில் மொழிபெயர்த்துள்ளேன். கட்டமைப்பு என்றால் முறிவு அமைப்பு என்று பொருள் தொனிப்பதில்லை.

சி. ஜெயபாரதன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சி. ஜெயபாரதன்

unread,
Aug 15, 2016, 8:55:22 AM8/15/16
to mintamil, Singanenjam Sambandam
புவித்தட்டுப் பிறழ்ச்சி என்றும் எழுதியுள்ளேன்.

சி. ஜெயபாரதன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 15, 2016, 12:09:37 PM8/15/16
to mintamil
வணக்கம் ஐயா.
நன்றாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.

எனக்கு மூன்று ஐயங்கள்.
1) பூகம்பங்கள் நிகழும் இடங்களை எல்லாம் கோடுபோட்டு இணைத்து  convergent என்று குறிப்பிட்டுள்ளனர் என்றும்,
எரிமலை உள்ள இடங்களை எல்லாம் கோடுபோட்டுச் சேர்த்து  divergent என்று குறிப்பிட்டுள்ளனர் என்றும்
கொள்ளலாமா?

2) அல்லது இங்கே குறிப்பிடப்பட்டுள்ள convergent இடங்களைத் தவிர வேறுபல இடங்களிலும் பூகம்பங்கள் நடந்து கொண்டுதான் உள்ளனவா?
அதேபோல், இங்கே divergent  என்று குறிப்பிடப்பட்டுள்ள இடங்களைத் தவிர பூமியில் வேறு இடங்க்ளில் எரிமலைகள் உள்ளனவா?

3) இதே dataக்களை வைத்துக் கொண்டு, ஆப்பிரிக்காக் கண்டத்திலிருந்து அமெரிக்காக் கண்டம் பிரிந்து சென்றுள்ளது என்றும், ஆப்பிரிக்காக் கண்டம் ஆசியாக்கண்டத்துடன் எப்போதும் பொருந்தியே உள்ளது என்றும் முடிவு செய்ய முடியுமா?

அன்புடன் எனது ஐயத்தைத் தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 15, 2016, 12:12:06 PM8/15/16
to mintamil, Singanenjam Sambandam
வணக்கம்.

2016-08-15 18:24 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
புவித்தட்டுப் பிறழ்ச்சி என்றும் எழுதியுள்ளேன்.

சி. ஜெயபாரதன்
அழகாகத் தமிழிலில் முன்பு வழங்கியிருந்தீர்கள்.
தங்களது கட்டுரையைப் படித்துள்ளேன் ஐயா.
நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

துரை.ந.உ

unread,
Aug 15, 2016, 12:16:22 PM8/15/16
to Groups
அருமை ஐயா .. நான் படம் போடலாமென்று பார்த்தேன் ... கடைசிவரியால் கட்டிப் போட்டு விட்டீர்கள் :)


2016-08-15 15:22 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 15, 2016, 12:24:04 PM8/15/16
to mintamil
வணக்கம் ஐயா.
2016-08-15 15:22 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
இதன்படி , இலெமுரியா போன்ற நிலப் பாலங்கள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிறது. கடந்த நூற்றாண்டில் இலெமுரியாக் கண்டத்தின் அடியொற்றி பெரும் தமிழ் அறிஞர்கள் பலர் முன் வைத்த குமரிக் கண்ட கருத்துகளில் பெரும்பான்மையானவை  தவறு என்பதும் வெள்ளிடை மலை எனப் புலனாகிறது.
“கொடுங்கடல் கொண்ட குமரிக்கோடு“ என்பது உண்டு.
இலெமுரியா என்பது இல்லை.
சரியாகச் சொல்லி வருகின்றீர்கள்.

அன்பன்

Singanenjam Sambandam

unread,
Aug 17, 2016, 4:57:01 AM8/17/16
to mint...@googlegroups.com
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயபாரதன் அவர்களுக்கு  வணக்கம். 

காலம் தாழ்த்தி மறுமொழி அளிப்பதற்கு வருந்துகிறேன். 

புவியியலில் கலைச் சொற்கள் இன்னும் சரியாக மொழிபெயர்க்கப்பட்டு  வகைப் படுத்தப் பட வில்லை. 

நீங்கள் கொடுத்துள்ள  புவித்தட்டுப் பெயர்ச்சி அல்லது புவித்தட்டு நகர்ச்சி போன்ற தொடர்கள்  செயலினைக்  குறிக்கும்  வகையில் , நன்றாக அமைந்துள்ளன. நன்றி. 

Singanenjam Sambandam

unread,
Aug 17, 2016, 7:35:08 AM8/17/16
to mint...@googlegroups.com
அன்பின்   காளை ராஜன் ஐயா  அவர்களுக்கு , வணக்கம். 

உங்கள் வினாவிற்கு விடை மிகவும் நீண்டதாக  அமையும். ஆதலின் இப்போதைக்கு  இந்தப் படங்களை மற்றும் பதிவேற்றுகிறேன்.
rf.png
TAM9.png
rf1.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 17, 2016, 9:10:35 AM8/17/16
to mintamil
வணக்கம் ஐயா.

2016-08-17 17:05 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
உங்கள் வினாவிற்கு விடை மிகவும் நீண்டதாக  அமையும்.
ஆமாம்.
இதை நன்கு உணர்ந்துள்ளேன்.
தாங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கூறினால் போதும் ஐயா.
அல்லது இதற்கான பதில்கள் அடங்கிய பதிவுகள் ஏதேனும் இருந்து அவற்றின் தொடுப்புக்களைக் கொடுத்தால், நானும் படித்துப் புரிந்து கொள்ள முயற்சிப்பேன்.
 
ஆதலின் இப்போதைக்கு  இந்தப் படங்களை மற்றும் பதிவேற்றுகிறேன்.

இணைப்பில் உள்ள படங்களின்படி
கடலின் நடுவே உள்ள எரிமலைகளால்  கண்டங்கள் நகரவில்லை அல்லவா?
1) எரிமலைகளும் நிலநடுக்கமும் சேர்ந்து இடம் பெரும் இடங்களை எல்லாம் ஒன்றுசேர்த்துக் ஒரு கோடு வரைந்து கொண்டு, அந்த இடங்களில் எல்லாம் கண்டங்கள் நெருக்குகின்றன என்றும்,
2) எரிமலை இல்லாமல் நிலநடுக்கம் மட்டும் இடங்களை எல்லாம் ஒன்றுசேர்த்து ஒரு கோடு வரைந்து கொண்டு, அந்த இடங்களில் எல்லாம் கண்டங்கள் பி(வி)ரிந்து செல்கின்றன என்றும் கொள்ளலாமா?

Singanenjam Sambandam

unread,
Aug 23, 2016, 8:02:05 AM8/23/16
to mint...@googlegroups.com
கடலின் நடுவே உள்ள எரிமலைகளால்  கண்டங்கள் நகரவில்லை அல்லவா?

இல்லை .....மாறாக , புவித்தட்டுகள் நகரும்போது  அதில் உள்ள  எரி மலைகள் நகர்கின்றன 

1) எரிமலைகளும் நிலநடுக்கமும் சேர்ந்து இடம் பெரும் இடங்களை எல்லாம் ஒன்றுசேர்த்துக் ஒரு கோடு வரைந்து கொண்டு, அந்த இடங்களில் எல்லாம் கண்டங்கள் நெருக்குகின்றன என்றும்,) எரிமலை இல்லாமல் நிலநடுக்கம் மட்டும் இடங்களை எல்லாம் ஒன்றுசேர்த்து ஒரு கோடு வரைந்து கொண்டு, அந்த இடங்களில் எல்லாம் கண்டங்கள் பி(வி)ரிந்து செல்கின்றன என்றும் கொள்ளலாமா?

படங்களை மீண்டும் கூர்ந்து  நோக்குங்கள் ஐயா  விடை கிடைக்கும்.

..

Oru Arizonan

unread,
Aug 23, 2016, 3:55:00 PM8/23/16
to mintamil
2016-08-23 5:02 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
கடலின் நடுவே உள்ள எரிமலைகளால்  கண்டங்கள் நகரவில்லை அல்லவா?

//இல்லை .....மாறாக , புவித்தட்டுகள் நகரும்போது  அதில் உள்ள  எரி மலைகள் நகர்கின்றன //

 உண்மையே!  ஹவாய் மேற்குத் தீவிற்கடியில் இருந்த எரிமலை  பசிபிக் தட்டின் நகர்வால் கிழக்குப் பெருந்தீவான ஹவாயில் கீழ் வந்திருக்கிறது.  தொடர்ந்து கற்குழம்பை [lava] கக்கி, அத்தீவின் அளவைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு அரிசோனன் 

Singanenjam Sambandam

unread,
Aug 24, 2016, 1:14:29 AM8/24/16
to mint...@googlegroups.com
ஆமாங்க.... நல்ல  எடுத்துக் காட்டு.

ஒரு  சிறு தகவல். கற்குழம்பு  அல்லது  பாறைக்குழம்பு  என்பதை Magma  என்கிறோம். இது பூமிப் பந்துக்கு உள்ளே உருவாகிறது. அது கக்கி  வெளிப் படும்போது அது  Lava  எனப்படுகிறது.  Lava  என்பதை  எரிமலைக்குழம்பு   என்று சொல்லலாம்.


வானத்திலே   கார்........பூமியின் மீது  நீர்...... ஆச்சி கையில்  மோர்.........என்பது போல். 

--

Hari Krishnan

unread,
Aug 24, 2016, 6:47:38 AM8/24/16
to mintamil

2016-08-24 10:44 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
ஆமாங்க.... நல்ல  எடுத்துக் காட்டு.

ஒரு  சிறு தகவல். கற்குழம்பு  அல்லது  பாறைக்குழம்பு  என்பதை Magma  என்கிறோம். இது பூமிப் பந்துக்கு உள்ளே உருவாகிறது. அது கக்கி  வெளிப் படும்போது அது  Lava  எனப்படுகிறது.  Lava  என்பதை  எரிமலைக்குழம்பு   என்று சொல்லலாம்.


மிக்க நன்றி திரு சிங்கநெஞ்சன்.  லாவா என்பதை எரிமலைக் குழம்பு என்றல்லவா சொல்வோம் என அரிசோனன் எழுதியதைப் பார்க்கும் போதே தோன்றியது.  புதிய சொல்லாக்கமோ என்று நினைத்துக்கொண்டேன்.  கற்குழம்பு என்பது magmaவுக்கு இணைச் சொல்லா?  நன்றி. 

சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னால் வில் டூரன்ட்டின் The Story of Philosophyயை மொழிபெயர்த்துப் பார்த்தேன்.  (மூலம் கையில் இல்லாததால் கணினியில் உள்ள மொழிபெயர்ப்பால் இட்டு நிரப்புகிறேன்).  அதில் சொல்வார்:

===============
எஞ்சியிருந்தோர் யார்?   'சிறிதிலும் சிறிது பற்றி, பெரிதினும் பெரிது' அறிந்து வைத்திருந்த விஞ்ஞான விற்பன்னர்களும், 'பெரிதினும் பெரிது பற்றி, சிறிதினும் சிறிதே' அறிந்திருந்த தத்துவ ஊகிகளும் (philosophical speculators) தான்.  விற்பன்னர்கள் தம்முடைய நாட்டம் நிலைத்திருக்கும் இடத்தில் மட்டுமே தம் பார்வை பட வேண்டும் என்பதற்காகவும், அது தவிர்த்த உலகம் தம் பார்வையில் பட்டுவிடாமலிருப்பதற்காகவும் தம் கண்களுக்கு லகான் அணிந்து கொண்டனர்.  பரந்த பார்வை தொலைந்தது.  ஒன்றைப் புரிந்துகொள்வதைவிட, உண்மைகளைத் தொகுப்பதே பெரிதாகிப் போனது.  முழுமையானதாகப் பிறப்பிக்கப்பட்ட ஞானம் என்ற நிலை மாறி, அறிவென்பது பிளவுபட்டதும், தனித்தனியானதுமான துணுக்குகளானது.  அறிவியலும், தத்துவத்தின் ஒவ்வொரு துறையும் தம்துறையினர் மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய சொல்லாக்கங்களைப் படைத்துக் கொண்டன.  மனிதர் உலகினை எவ்வளவு அதிகமாக அறிந்து கொண்டனரோ அவ்வளவு அதிகமாகத் தம் சக மனிதர்களுக்கு - படித்த சக மனிதர்களுக்கு - தாம் அறிந்தவற்றை எடுத்துச் சொல்லும் சக்தியற்றவர்கள் ஆனார்கள்.  வாழ்க்கைக்கும், அறிவுக்குமான இடைவெளி பெருகிக்கொண்டே போனது.  ஆளுவோரால், சிந்திப்போரைப் புரிந்துகொள்ள முடியவில்லை.  தெரிந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பமுள்ளோரால், தெரிந்துகொண்டோ ரைப் புரிந்துகொள்ள முடியவில்லை.  முன்பெப்போதுமிராத கல்விப் பெருக்கத்தினிடையே பரவலான அறியாமை தழைத்தது.  அந்த அறியாமையே அப்படிப்பட்டவர்களின் முன்மாதிரிகளை உலகத்தின் பெரிய நகரங்களை ஆளத் தேர்ந்தெடுத்தது.  முன்பெப்போதுமில்லாத அளவு வரம் பெற்று அரியணை ஏறிய அறிவியல் துறைகளினிடைய புதிய புதிய மதங்கள் ஒவ்வொரு நாளும் தோன்றின.  பழைய மூடநம்பிக்கைகளோ, இழந்த தம் இடங்களை மீண்டும் வென்றெடுத்தன.  சாதாரண மனிதனோ, இரண்டு வகைகளினின்று மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டான்.  புரிந்துகொள்ள முடியாத அவநம்பிக்கையை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் விஞ்ஞானப் பூசாரித்தனம் ஒன்று.  நம்பவே முடியாத நம்பிக்கைகளை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் மதம் சார்ந்த பூசாரித்தனம் மற்றொன்று.

இத்தகைய சூழலில் தேர்ந்த கல்வியாளனின் பணி என்ன என்பது தெளிவு.  விற்பன்னருக்கும் மற்றோருக்கும் இடையே அவன் வந்திருக்க வேண்டும்.  விற்பன்னர் இயற்கையில ஆன மொழியைக் கண்டு கற்றறிந்ததைப் போல், விற்பன்னரின் மொழியைக் கல்வியாளன் கற்றிருக்க வேண்டும்.  அவ்வாறு கற்றறிந்த புதிய உண்மைகளுக்கு - படித்த மற்றையோர் புரிந்துகொள்ளக் கூடிய - பழைய வார்த்தைகளைக் கண்டறிந்திருக்க வேண்டும்.  இதுவே அறிவுக்கும், தேவைக்கும் இடையே முளைத்த தடைகளைத் தகர்த்திருக்கும்.  அறிவ பரப்பப்பட முடியாததாகிப் போனால், அது பண்டிதத்தனமாகச் சீர் குலைந்து பலமற்ற நிலையில் அதிகாரம் ஏற்கும். 

=============

அவ்வாறு கற்றறிந்த புதிய உண்மைகளுக்கு - படித்த மற்றையோர் புரிந்துகொள்ளக் கூடிய - பழைய வார்த்தைகளைக் கண்டறிந்திருக்க வேண்டும்.  இதுவே அறிவுக்கும், தேவைக்கும் இடையே முளைத்த தடைகளைத் தகர்த்திருக்கும்.

இந்தக் காரியத்தை நீங்கள் செய்வதைப் பார்க்கிறேன்.  மீண்டும் நன்றி.  வாழ்த்துகள்.  பாராட்டுகள்.

பின் குறிப்பு: என்னுடைய மேற்படி மொழிபெயர்ப்பு துல்லியமானதன்று.  ஏதோ ஒரு ஆர்வத்தின் காரணமாக--கணினி வாங்கிய சமயத்தில்--செய்து பார்க்கவேண்டுமென்று செய்தது.  நான் சொல்ல வருவதை விளக்குவதற்காகப் பயன்படுத்திக் கொண்டது.  அம்மட்டே.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Singanenjam Sambandam

unread,
Aug 24, 2016, 8:15:46 AM8/24/16
to mint...@googlegroups.com
அன்பின் ஹரி ஐயா அவர்களுக்கு வணக்கம். 
தங்களைப் போன்ற அறிஞர்கள் புகழும்போது  உச்சி ' ஜில்' என்கிறது
'சிறிதிலும் சிறிது பற்றி, பெரிதினும் பெரிது' அறிந்து வைத்திருந்த விஞ்ஞான விற்பன்னர்களும், 'பெரிதினும் பெரிது பற்றி, சிறிதினும் சிறிதே' அறிந்திருந்த தத்துவ ஊகிகளும் (philosophical speculators) தான்

முதல் வரியிலேயே தூக்கி  சாப்பிட்டுவிட்டீர்கள். 
அழகு.
 ரசித்துப் படித்தேன். 
படித்ததை ரசித்தேன்.
நன்றி .....வணக்கம்.

.  

--
Reply all
Reply to author
Forward
0 new messages