உஷ்ணம்(சுஷ்ணம்) - வடசொல்
---------------------------------------------------------
ஹிந்தியில் ஔஸ்னா என்றால் சூடாதல். H. ausnā ʻ to be hot'.
ஔஸ்னா என்னும் சொல் சம்ஸ்கிருதத்தின் ஔஷ்ண்ய- (< உஷ்ண)
3 auSNya n. (fr. %{uSNa}) , heat , warmth , burning Ya1jn5. iii , 77 Sus3r. &c.
உஷ்ண- 'heat, burning' - சுஷ்ண என்றும் வடமொழிகளிலே வழங்குதல் அறியற்பாலது. தமிழ்ச்சொல் வேர்கொண்ட ‘உஷ்ணம்’ என்பதன் தாதுச்சொல்லை ஆராயவும், வட இந்தியா த்ராவிடமொழிகளை மொழிமாற்றம் செய்தவரலாறும் தெரிந்துகொள்ள உதவும் ஒரு சொல் சுஷ்ண > உஷ்ண. விண்ணு > விஷ்ணு என்றானதல்லவா? அதுபோல. வடமொழிகள் எல்லாவற்றிலும் அடிப்படையாக உள்ள “உஷ்ண” (< சுஷ்ண) என்பதன் தமிழ்வேர்ச் சொல்லை ஆராந்து அறிவோம்.
ஒரு சொல்லின் இரண்டாம் எழுத்தாக -ள்-/-ண்-/-ட்- அமையுமானால் அச் சொற்றொகுதியில் பொருள்கள் ஒன்றோடொன்று தொடர்புகொண்டதாக அமைந்திருக்கும். த்ராவிட சொல்லமைப்பு விதிகளில் அடிப்படையான ஒன்று இது. இந்திய பாஷைகளில் retroflexion தரும் தொன்மையான தமிழின் சொல்லாக்க முறைகளில் ஒன்று:
(1) வேள்-/வேண்-/வேட்டல் (2) நள்-/நட்-/நண்- “நெருங்கு’ (3) தொள்-/தொண்-/தொட்- ‘தோண்டு’(4) விள்-/விண்-/விட்- ‘விஷ்ணு’ என்பதன் வேர் (5) எள்-/எண்-/எட்- ‘குறுகிய’ (6) புள்-/புண்-/புட்- ’குழி’, (7) துள்-/துண்-/துட்- (8) வள்-/வண்-/வட்- வளைதல் (9) குள்-/குண்-குட்- ’குண்டம்’
(10) பிள்-/பிண்-/பிட்- பிளத்தல், பிணா, பிடுதல் ... இவ்வாறு ஏராளமான -ள்-/-ண்-/-ட்- சொற்றொகுதிகள் இலங்குவது தெளிவு. அவ்வகையில், சுள்-/சுட்-/சுண்- என்பதும் அடங்கும்.
சுள்ளி, சூளை, சூளைபிரித்தல், சுட்ட கறி, சூடு, சுட்டது, சுண்ணம், சுண்ணாம்பு, ... சுள்-/சுட்-/சுண்- ..
சுணங்குதல் (> உணங்குதல்) சுணக்குதல் - வாடுதல்/வாட்டுதல். சுண்ண- என்ற heat, to burn பொருள்கொண்ட த்ராவிடச் சொல் இன்றும் சுஷ்ண/சொஷ்ண என்று வடக்கே வழங்கிவருகிறது.
சுப்பு(சப்பு), சுவை என்னும் சொல் உப்பு என்றாதல் போலவும், சமையம்> அமயம், சமணர் > அமணர்,
சிப்பி > இப்பி, போலவே, சுண்ண-/சுஷ்ண > உண்ண-/உஷ்ண என்றாகி வட இந்தியாவில் வழங்கிவருகிறது,
விஷ்ணு < விண்ணு. உஷ்ண < உண்ண < சுண்ண-/சுஷ்ண (cf. சுள்ளி, சூடு, சுண்ணாம்பு etc., திராவிட ரெட்ரோப்லெக்ஸ் விதி:-ள்-/-ண்-/ட்)
நா. கணேசன்
Comparative Dictionary of Indo-Aryan Languages:
uṣṇá 2389 uṣṇá1 ʻ hot ʼ RV., °aka -- m. ʻ heat ʼ Pat. [√vas3]
Pa. uṇha -- , Pk. uṇha -- , usiṇa -- ʻ hot ʼ, m. ʻ heat ʼ; K. wuśunu, f. °śüñü ʻ warm, hot ʼ; H. unāh m. ʻ hot vapour, steam ʼ; G. ūnũ, hunũ ʻ hot, warm ʼ; M. ūnh, ūn ʻ hot ʼ, n. ʻ heat of sun ʼ, redup. ūnhūnh, unhan ʻ burning hot ʼ; Ko. hūna ʻ hot ʼ; Si. uṇu ʻ hot ʼ, uṇa ʻ fever ʼ. -- P. ludh. huṭṭ ʻ sultry ʼ rather < uṣṭa -- 2.
uṣṇayati, *uṣṇāpana -- , uṣṇālu -- , uṣṇiman -- ; uṣṇakāla -- , *uṣṇadhāra -- , *uṣṇapānīya -- , *uṣṇavāta -- , *uṣṇālaya -- ; *apoṣṇa -- .
Addenda: uṣṇá -- 1: Md. hūnu ʻ hot ʼ.
226a †*atyuṣati ʻ burns ʼ. 2. †*atyōṣati. 3. †*atyuṣyatē ʻ is burnt ʼ. [Semant. rather than with Him.I 52 < cūṣati: cf. uṣṇánt -- RV., ōṣati Pāṇ., †*atyuṣṇa -- , átidahati ŚBr., and †*adhyuṣyatē: √vas3]
1. Ku. ciśṇo ʻ to burn ʼ or poss. < †*atiyuṣati with loss of a -- and assimilation of initial t -- to following palatal (as in tucchyá -- > Pk. cuccha -- etc. or poss. tathya -- > Gy. eur. čačo ʻ true, right opp. to left ʼ).
2. WPah.J. cośṇu ʻ to burn ʼ.
3. WPah.kṭg. cúśṇõ ʻ to be burnt ʼ.
226b †*atyuṣṇa -- ʻ very hot ʼ. [uṣṇá -- RV.: √vas3]
Pa. Pk. accuṇha -- ʻ very hot ʼ.
†*atyuṣyatē see †*atyuṣati.
uṣṇiman 2398 uṣṇiman m. ʻ heat ʼ ChUp. [uṣṇá -- 1]
Si. uṇuhuma ʻ heat ʼ (D. E. Hettiaratchi, Univ. of Ceylon Review vi 291 uṣṇá -- 1 + ūṣmán -- ; EGS 25 uṇu + kama)
uṣman -- see ūṣmán -- .
uṣmāyatē see ūṣmāyatē.
uṣṇālu 2397 uṣṇālu ʻ suffering from heat ʼ Kāty. [uṣṇá -- 1]
M. unhāḷṇẽ ʻ to be affected by heat of weather ʼ rather than der. uṣṇakāla -- .
apōṣṇa 499 *apōṣṇa ʻ not hot ʼ. [uṣṇá -- ]
Kal. rumb. ɔ̈̄žnḗ ʻ cool ʼ.
நடன. காசிநாதன், தொல்லியல் இயக்குனர் (ஓய்வு):
”இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான்.
தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!”
On Thursday, April 17, 2014 6:02:51 PM UTC-7, Dev Raj wrote:
On Thursday, 17 April 2014 15:59:15 UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
கீழே கொடுத்திருக்கும் "மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத சொல் அகராதியில் விஷ்ட(ர்) என்ற சொல் புல் கற்றை கொண்டு பரப்பிய மேடை (கூரை)என்று குறிக்கிறது.அதை ஒட்டிய சொற்களும் இந்த புற் கூரை பற்றி குறிப்பிடுகின்றன.
பாவாணரின் கருத்து :
விட்டம்-விஷ்ட
விட்டம் =
1. குறுக்காகச் சென்று வட்டத்தை இரண்டாகப்
பிரிக்கும் கோடு.
2. குறுக்குத்தரம்
வட்டத்தின் இரு எதிர்ப்புள்ளிகளை இணைக்க விடுப்பது விட்டம். கூரையின் விட்டம் இருசுவர்களை இணைக்க விடுப்பது.
விட்டம் (> விஷ்டம்) - Crossbeam in the roof
------------------------------------------
சென்னைப் பேரகராதி தருகிறது வடமொழி தொடர்பை:
விட்டம் < விஷ்ட என்று.
விட்டம்¹ viṭṭam
, n. < viṣṭa. 1. Cross beam; உத்திரம். இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென (அகநா. 167). 2. Diameter; வட்டத்தின் குறுக்களவு. 3. Anything put across; குறுக்காக இடப்பட்டது. (W.) 4. Body; தேகம். விட்டத்தினுள்ளே விளங்க வல்லார் (திருமந். 2904).
100 ஆண்டுகட்கு முன்னே சம்ஸ்கிருத அறிஞர்கள் ஒப்புமை உள்ள இரு வார்த்தைகளை தமிழ்-வடமொழியில் கண்டால் உடனே சம்ஸ்கிருதம் என்று எழுதுவது வழமை. ஆனால், தமிழில் விட்டம் என்ற சொல் சங்க இலக்கியத்திலேயே உள்ளது. அது பிறக்க, விஷ்ட என்ற வடசொல் தேவையா? - எனப் பார்த்தல் அவசியம். ஒரு திறந்தவெளியினை இணைக்க இரு சுவர்களுக்கு இடையே எறிந்த/விட்ட மரம் விட்டம். பூப்பு புப்ப என்றாகி புஷ்ப என்றாகிவிடுகிறது. அதுபோல், விட்ட > விஷ்ட என்றாகியுள்ளது.
இன்னும் சில:
(1) முட்டி : முஷ்டி (மூட்டுதல் joint ).
முடக்கு: முடக்கல், கையை மடக்கிச் சண்டை.
முஷ்டாண்ட ,..
(2) வீட்டுக் கூரைக்கு வைக்கும் விட்டம் (> விஷ்ட),
விடு- என்னும் வினைச் சொல். (சங்க இலக்கியம்)
(3) விரல் போன்றவற்றை அழுகச்செய்து
குட்டை ஆக்கும் குட்டம் (> குஷ்டம்)
(4) இடு- என்னும் வினைச்சொல்லில் இருந்து
இட்டு எழுப்பும் சுவர். எனவே செங்கல்லுக்கு
இட்டி, இட்டிகை என்ற பெயர் (சங்க இலக்கியம்).
வேள்வியில் யாக குண்டங்கள் கட்ட
எழுப்புவது இட்டி (> இஷ்டி).
விரும்புவதை வேண்டும் வேள்வி வேட்பதாகையால்
இஷ்டம் என்றால் “விருப்பம்” என்ற பொருள்
இட்டி/இஷ்டி என்னும் செங்கல், வேள்விக் குண்ட்ம்
- இதன் நீட்சிப் பொருள் எனலாம்.
(5) பூப்பு/புப்ப > புஷ்ப
(6) விண்ணு > விஷ்ணு
(7) காடு/கட்டை > காஷ்ட
சிந்து சமவெளியில் லட்சக் கணக்கான இட்டிகளால்
கட்டிடங்கள் எழுந்தன. பின்னர் வேள்விக்குண்டங்களுக்கும்
அஃது பயன் பட்டது. ஆக்ஸஸ் என்னும் நதிக்கரைக்கும்,
சிந்துக்கும் தொடர்புகள் உண்டு. சிந்தின்
இட்டிகள் பற்றிய தொழில்நுட்பம் அங்கிருந்து போய்
இஸ்தி என்று வழங்கும். இந்தியாவுக்கு வெளியே
நா-வளை (retroflexes) ஒலிகள் அத்தன்மையை இழக்கும்.
(சோழர்: சோலர் ஆகின்றனர்! அதுபோல.)
-ஷ்ட- : -ட்ட- தொடர்புகள் - மொழியியல் நிபுணர்கள் பார்க்க வேண்டும்.
அன்புடன்
நா. கணேசன்
ருத்ரா ஐயா கொடுத்துள்ள சுட்டிகளில் கூரை, வட்டத்தைப் பிரிக்கும் கோடு, குறுக்கு உத்தரம்
போன்ற பொருள்களைத் தரவில்லை. இருக்கைக்கான விரிப்பைச் சுட்டும் சொல் அது.
विष्टर -
a handful of grass for siiting on,
a seat made of 25 shoots of Kusa grass tied up in a sheaf
புஷ்கர விஷ்டரா - அலர்மேல்மங்கையைச் சுட்டும் சங்கதச் சொல்;
அலர்கீழ் மங்கை என்று பொருள்தரவில்லை, தாமரை
இருக்கையாக இருப்பதால்
தேவ்