சிவபெருமானும் இட்டவியும் (=இட்டிலியும்)

13 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 31, 2012, 9:26:21 AM7/31/12
to Santhavasantham, மின்தமிழ், vall...@googlegroups.com, thami...@googlegroups.com, thamiz...@googlegroups.com, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
இட்லியின் பழைய பெயர் இட்டவி. இலக்கியங்கள், கல்வெட்டுகள் காட்டும்
பெயர் இட்டவி. அதைப் பயன்படுத்தினால், கிவாஜ வெண்பா:

ஆட்டியபின் ஆவியிலே பக்குவங்கண்டு அங்கெடுக்கும்
ஈட்டால் பொடிவெண்மை ஏய்வுறலால் - போட்டஇலை
மேலுறலால் சாம்பாரில் மேவியின்பம் தந்திடலால்
கோலுமரன் இட்டவியாய்க் கொள்!

மாவை பாத்திரத்தில் இட்டு அவிக்கும் உணவு - இட்டவி.
இட்டு அவித்தபின் எடுப்பது ஈடு. ஈடு என்ற சொல்லைக்
கிவாஜ வெண்பாவில் பாவிக்கிறார்.

நா. கணேசன்

-------------------------------

தமிழுலகம் ஏற்றிப் போற்றுகிற வாகீச கலாநிதி கி.வா.ஜ. அண்மைக் காலத்தில்
வாழ்ந்த "காளமேகம்" என அறுதியிட்டுச் சொல்லலாம்.
சிவபெருமானுக்கும், இட்டிலிக்கும் அவர் பாடியுள்ள சிலேடைப் பாடல், அவர்
புலமையையும், அன்னைத் தமிழின் அருமையையும் ஒருசேர உணர்த்துகிறது.

"ஆட்டியபின் ஆவியிலே பக்குவம்கண்டு அங்குஎடுக்கும்
ஈட்டால், பொடி வெண்மை ஏய்வுறலால் - போட்ட இலை
மேல்உறலால், சாம்பாரில் மேவி இன்பம் தந்திடலால்
கோலும் அரன் இட்டிலியாய்க் கொள்''

உயிர்களைப் பிறக்க வைத்து, அவ்வுயிர்களின் பக்குவம் அறிந்து மேற்கதி
(முக்தி-வீடுபேறு) தருகிறார் சிவபெருமான் என்பதை "ஆட்டியபின் ...
ஈட்டால்'' எனும் தொடர் விளக்குகிறது. அதே தொடர் மாவை ஆட்டிய பிறகு
ஆவியிலே வேகவைத்துப்
பக்குவம் அறிந்து இட்டிலியை எடுப்பதையும் குறிக்கிறது. திருநீறு துலங்க
சிவன்
பொலிவதையும், "பொடி வெண்மை ஏய்வுறலால்'' என்பது குறிக்கிறது. அர்ச்சித்த
வில்வ
இலையோடு சிவன், வாழையிலை மேல் இட்டிலி - இது "போட்ட இலை மேலுறலால்''
என்பதைக்
குறிக்கிறது. சாம் பாராகிய சுடலையில் சிவன் - சாம்பாரில் இட்டிலி என்பதை
இறுதித் தொடர் விளக்குகிறது.

இனி இட்டிலி சாப்பிடும்போது இட்டிலி சுவையோடு கி.வா.ஜ.வின் இன்தமிழ்
சுவைவையும் சேர்த்து இரட்டிப்பாக அனுபவிக்கலாம்!

மதிவண்ணன்

நன்றி:- தினமணி

N. Ganesan

unread,
Aug 5, 2012, 11:24:33 AM8/5/12
to housto...@googlegroups.com, thamiz...@googlegroups.com
On Jul 31, 9:08 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அருமையான சிலேடை. இங்கிட்டதற்கு நன்றி.
>
> பல ஆண்டுகளுக்கு முன் ‘அரனும் அடியேனும்’ என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு
> சிலேடை வெண்பாவில் ‘சாம்பாரை நாடுவதால்’ என்ற தொடரைப் பயன்படுத்தியிருந்தேன்.
> அதை முன்னமே கி.வா.ஜ. பயன்படுத்தியுள்ளார் என்பது இப்போது தெரிகிறது.
>
> …அனந்த்
>
> *வெள்ளைப் பனியிருப்பால் வேகமுள்ள வாகனத்தால்* *
> *வெள்ளந் தலையிருக்குங் காரணத்தால் - துள்ளிடச் *
> *சாம்பாரை நாடுவதால் சாம்பவனுக் கீடாக *
> *ஆம்பார்யாம் என்றே அறி*
>


சாம்பார் மராட்டியர் ஆட்சிக்காலத்தில்
சைவ மடங்கள், அரண்மனைகளில் புதிதாய்
உருவாகிய உணவுமுறை (recipe). ஒரு
கலப்புச்சொல்லாக உருவாகிய சாம்பாரைத்
தமிழ்ப் பொருளில் முதலில் குறித்தவர்
32 ஆண்டுகளே வாழ்ந்த மாதவச் சிவஞான
முனிவர் (1753 - 1785) ஆவார். ஏராளமான நூல்கள்
நம் இலக்கண இலக்கியங்களுக்கு அளித்தவர்.
காலன் கொடியவன்; பாரதியார் போலவே,
சிவஞான யோகிகளையும் இளமையில்
கொடுங்காலன் கவர்ந்துகொண்டான்.

சுமார் 15 ஆண்டுக்கு முன் ஒரு கட்டுரை எழுதினேன்.
அது கோலம் (கொலோன் யுனிவெர்சிட்டி. பதிப்பாசிரியர்:
சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் பேராசியை உல்ரிக் நிக்லாஸ்) என்னும்
ஆய்விதழில் வெளியான முதல் தமிழ்மொழிக் கட்டுரை.
மற்றவை எல்லாம் தமிழ் பற்றிய ஐரோப்பிய மொழிகளில்
தான். அதிலிருந்து:

”விருந்தினர் வந்தபோது சமையலாளிடம் மாதவச் சிவஞான
யோகிகள் இட்ட கட்டளையைப் பார்ப்போம்ஈ

 சற்றே துவையல்அரை தம்பிஒரு பச்சடிவை
 வற்றல் ஏதேனும் வறுத்துவை - குற்றம்இலை
 காயம்இட்டுக் கீரைகடை கம்மெனவேமிளகுக்
 காய்அரைத்து வைப்பாய் கறி

வேறொரு வேளையில், சிவஞான முனிவர் வந்தாரை வரவேற்று
விருந்துக்கு அழைக்கிறார். அன்னம், சாம்பார், இரசம், பூசனிக் கூட்டு,
பாயசம் கொண்ட பெருவிருந்தே படைக்கிறார்.

 அரன்சிரம் காணாப்புள்ளும்
      அத்துடன் இறக்கும்பூமி
  வரன்முறை யாகவந்த
      வடசொலில் சுவையாம்ஒன்றும்
 கரம்தனில் அள்ளிஉண்ணக்
     களிதரு பாயாடொடு
  உரமலர் மந்தன்கூட்டும்
     உண்ண வருகுவீரே ”

’விருந்துண்ண வருக’ எனும் என் கட்டுரை.
சிங்கை கிருஷ்ணன், நியு மெக்சிகோ வாசன்பிள்ளை
போன்றோர் குறிப்புடன்:
http://www.treasurehouseofagathiyar.net/02400/2493.htm

சைவ ஆதீனப் பாட்டு பர்த்தோம். லௌகீகமான பொருளுடைய
வெண்பா - மகாகவி இயற்றினது காண்போம்.
இலங்கையின் புகழ்பெற்ற 20-ஆம் நூற்றாண்டுக் கவிஞர்
’மகாகவி’ ஆவார். மகாகவியின் ‘தேரும் திங்களும்’
தமிழகச் சாதிப்பிரச்சினை பற்றி எழுந்த முதற் புதுக்கவிதை,
http://nganesan.blogspot.com/2009/03/therottam.html

மகாகவி விஸ்கியை விட சாராயம் மேல் என்பார்.
’விருந்துண்ண வருக’ கட்டுரையில் மகாகவி வெண்பா
குறிப்பிட்டேன். இது மகாகவி மகனார் கவிஞர் (பேரா.) சேரன்
(கனடா) எனக்குத்தந்த அவர்தந்தையார் பாட்டு.

 > நெல்முளையைக் காயவைத்து,
>மாவாக்கி, அரிசி சேர்த்துக், கஞ்சிவைத்துப், புதுக் கரகத்தில் இட்டு,
>தென்னம்பாளை செருகித், தோப்பி என்னும் நெற்கள் தயாரித்துக்
>கொற்றவைக்குப் படைத்துத் தாமும் அருந்தினர். சங்க காலம்
>தொடங்கி, இந்நாளும் இருக்கும் நெற்கள்ஜப்பான் நாட்டாரின் சாக்கி
>(Sake) அரிசிக்கள்ளுக்கு ஒப்பாகும். சிலஆண்டுகளுக்கு முன்னே,
>ஈழத்தில் மேனாட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டுப் பெருவிலை விற்றது.
>அச்சமயத்தில், ”இவ்வளவு போதும் எனக்கு” என்ற ஈற்றடி கொடுத்து
>யாழ்ப்பாணம் ஈந்த மகாகவி உருத்திரமூர்த்தியைப் பாடச்
> சொன்னர்கள்.  உடனே அவர் செய்த கவிதையைக் காண்போம்:
>
> காய்ச்சுச்சா ராயம் கடைவிஸ்கி காசுக்குஏன்?
> தீய்ச்ச கறிச்சோற்றுத் தீயலுடன் - ஆய்ச்சியின்
> செவ்விளநீர்த் தென்னையிலே சின்னையன் சீவும்கள்
> இவ்வளவும் போதும் எனக்கு!
>
>குப்பிகளைத் திறந்தும், கிடாய் அறுத்தும் - ’மட்டுவாய் திறப்பவும்,
>மைவிடை வீழ்ப்பவும்’ வாழ்ந்த தமிழரை, அவற்றை ஒழித்து அறநெறி
>நிற்க வலியுறுத்தினார் வள்ளுவர்.
>

BTW, சாராயங் காய்ச்சும் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள்
திராவிட மொழியினர் ஆகலாம். சிந்து சமவெளியில்
மதுகை புஷ்பம் போன்றன கொண்டு சாராயம் காய்ச்சும்
நுட்பம் பற்றித் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி
விஸ்கான்ஸின் பல்கலை மாணவர் ஒருவருக்கு
செந்தமிழ் (பாரிஸ் பல்கலை) குழுவில் விவரமாகச்
சிலதிங்கள் முன்  குறிப்பிட்டேன். சமண முனிபுங்கவர்களான
வள்ளுவர் போன்றோர் தம் பள்ளிகளில் என்ன சொல்லிக்
கொடுத்தாலும் தமிழர் சங்கப் பழக்கங்களை விடவில்லை.
தமிழ்நாட்டுத் தெருக்களில் எது உள்ளதோ இல்லையோ,
டாஸ்மாக் ஓடுகிறது. அந்த வரும்படியில் அரசும் ஓடுவதாகச் சொல்கின்றனர்.

நா. கணேசன்




> 2012/7/31 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > இட்லியின் பழைய பெயர் இட்டவி. இலக்கியங்கள், கல்வெட்டுகள் காட்டும்
> > பெயர் இட்டவி. அதைப் பயன்படுத்தினால், கிவாஜ வெண்பா:
>
> > ஆட்டியபின் ஆவியிலே பக்குவங்கண்டு எங்கெடுக்கும்

> > ஈட்டால் பொடிவெண்மை ஏய்வுறலால் - போட்டஇலை
> > மேலுறலால் சாம்பாரில் மேவியின்பம் தந்திடலால்
> > கோலுமரன் இட்டவியாய்க் கொள்!
>
> > மாவை பாத்திரத்தில் இட்டு அவிக்கும் உணவு - இட்டவி.
> > இட்டு அவித்தபின் எடுப்பது ஈடு. ஈடு என்ற சொல்லைக்
> > கிவாஜ வெண்பாவில் பாவிக்கிறார்.
>
> > நா. கணேசன்
>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



R. Radhakrishnan

unread,
Aug 5, 2012, 1:05:48 PM8/5/12
to housto...@googlegroups.com
Dear Ganesan,
Very nice mail.  Thanks for sharing.
 அருமையான சிலேடை. இங்கிட்டதற்கு நன்றி
Radhakrishnan
 
 
***********************************************************************************************
 
2012/8/5 N. Ganesan <naa.g...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "houstontamil" group.
To post to this group, send email to housto...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to houstontamil...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/houstontamil?hl=ta.

Reply all
Reply to author
Forward
0 new messages