வாங்கு-/வாக்கு- தன்வினை/பிறவினை இணைச்சொற்கள் (தேங்கு-/தேக்கு- .... போல)
----------------------------------------------------------------------------------------------------------------------
அரங்கு-/அரக்கு-, அணங்கு-/அணக்கு-, ஏங்கு-/ஏக்கு (ஏக்கம்), நீங்கு-/நீக்கு-, தாங்கு-/தாக்கு-, ... போன்றன தன்வினை/பிறவினை ஜோடிகள். இதேபோல, சங்க இலக்கியத்தில் இருந்து இன்றும் இருக்கிற வாங்கு-/வாக்கு- எனும் தன்வினை/பிறவினை சோடிச்சொல்லைப் பார்ப்போம். வாக்குதல் என்றால் சாய்த்து வளைத்தல் என்பது அடிப்படைப்பொருள். சட்டியை வாக்கினால்
கஞ்சி கீழே தாரையாய் ஊற்றப்படும்/வார்க்கப்படும். வாக்கல் - ஊற்றல்/வார்த்தல் என்பது இரண்டாம்பட்ச விளைவு தான்.
வாக்கு-/வாங்கு- அடிப்படைப்பொருள் சாய்தல், வளைதல்.
வாங்கு-தல்/வாக்கு-தல் = வளைதல்/வளைத்தல்
வாக்குதல் என்னும் இந்த சங்கச்சொல் நாட்டுப்புறத்தில் இருப்பினும்,
நகர்ப்புறங்களில் இல்லாமல் போனதற்கு ஒரு காரணம் வாக்கு
(vocal, voice, vAc 'sarasvati, vAkdevi') என்னும் வடசொல் மிகுதியும் பயன்படுவது ஆகும்.
On Monday, February 23, 2015 at 5:55:51 AM UTC-6, Pandiyaraja wrote:
மிக்க நன்றி ஐயா! தாங்கள் (நூதலோசு) குறிப்பிட்டிருந்த,
துளங்கு தசும்பு ஆக்கிய பசும்பொதித் தேறல்
என்ற மலைபடுகடாம் அடியில் (463) ஆக்கிய என்பதற்குப் பதில் வாக்கிய என்று இருக்கவேண்டும். வாக்கு என்றால் வார்த்தல். சோற்றுப் பானையை அடுப்பிலிருந்து சிறிதளவு சாய்த்து, மேலே நிறைந்து இருக்கும் கஞ்சியை வடித்துவிடல் போன்றது. தெளிவாக இறுத்தல் எனலாம். இதற்குப் பாத்திரத்தின் கழுத்து சற்றுக் குழிவாக இருக்கவேண்டும். அந்த இடத்தில் கவட்டையை வைத்துச் சட்டியை நிலைநிறுத்துவார்கள். கீழிருக்கும் பாத்திரத்தில் கஞ்சி வடிந்து விழும். எனவே அந்தச் சட்டி ஒரு பெரிய செம்பு போல் இருக்கவேண்டும். அல்லது ஒரு சிறிய குடம். தேறலைக் காய்ச்சும்போது (நான் காய்ச்சியதில்லை!!) 'கதக் புதக்'-என்று அது கொதிக்கும். அப்போது அதைத் தாங்கமாட்டாமல் பாத்திரம் பக்கவாட்டில் சாய்ந்து சாய்ந்து நிமிரும். இதுதான் துளங்குதல். இவ்வாறு துளங்குகின்ற தசும்பினின்றும் (தீயை இறக்கிவிட்டு) மேலாக இருக்கும் தேறலை வடித்துவிடுவார்கள். இதுதான் துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல். தேறல் என்றால் கள் தெளிவு என்று உங்களுக்குத் தெரியும். (மீண்டும் சொல்கிறேன் - எல்லாம் ஒரு அநுமானம்தான் - பழக்கம் இல்லை!!)
சோறு வாக்கிய கொழுங்கஞ்சி என்று பட்டினப்பாலையிலும் (44)வருதல் காண்க..
நன்றி,
ப.பாண்டியராஜா
வாக்குதல் என்றால் சாய்த்து வளைத்தல் என்பது அடிப்படைப்பொருள். சட்டியை வாக்கினால் கஞ்சி கீழே தாரையாய் ஊற்றப்படும்/வார்க்கப்படும். இது இரண்டாம்பட்ச விளைவு தான். வாக்கு-/வாங்கு- அடிப்படைப்பொருள் சாய்தல், வளைதல். வாங்கு-தல்/வாக்கு-தல் = வளைதல்/வளைத்தல்.
இதனை த்ராவிட எட்டிமாலஜிகல் அகராதியில் காணலாம்.
முதலில், தன்வினைச் சொல் “வாங்கு-தல்”
5335 Ta. vāṅku (vāṅki-), vēṅku (vēṅki-)
5335 Ta. vāṅku (vāṅki-), vēṅku (vēṅki-) to bend (intr., tr.), sink, subside, move to one side, withdraw; n. bending; vāṅkal bending, curve, inclination; vākku bend, irregularity. Ma. vāṅṅuka to bend, shrink, draw back; vāṅṅikka to withdraw (tr., as an army); vāṅṅal withdrawing. Ko. va·g- (va·gy-) to make (pot) bulge (in throwing it on the wheel); vag- (vagy-) to be slightly bowed down, crouch, be obedient to orders; vak- (vaky-) to bend (intr.), be cowed; vakc- (vakc-) to make to be obedient to orders, bend (tr., iron). To. pa·g- (pa·gy-) to fall, (disease) subsides, (buffalo, coagulant) goes to sacred place (dairy, etc.). Ka. bāgu to bend, bow, incline, stoop; bend (tr.); n. bending, inclining, curve; bāgisu to bend (tr.), cause to bend; bāguvatana, bāguha bending; baṅku to be crooked, bend; baggu, boggu to bend, bow, become submissive; baggisu, boggisu to bend (tr.); boṅkane in a bending or bent way; bokka with a turn, bend, or bow. Koḍ. ba·ŋg- (ba·ŋgi-) to become bent, slope; bagg- (baggi-) to stoop, bend down. Tu. bāguni, bāṅguni to bow, stoop, lean on one side; bāṅgāvuni to cause to bow or stoop, bagguni to bend, bow, stoop, yield, submit; baggāvuni to cause to stoop, make bend; baggele a bending or crouching man. Te. vaṅgu to bend, stoop, bow, become crooked, become low or humbled; vancu, (K. also) vampu to bend, cause to stoop, subdue, humble, overpower; vampu bend, curve, crookedness; bent, curved, crooked; vāncu to bend head, cause to bend; vã̄ka crooked. Kol. vaŋg- (vaŋkt-) to bend (intr.); vaŋgip- (vaŋgipt-), vap- (vapt-) id. (tr.). Nk. vaŋg- id. (intr.). Pa. vaŋg- id. (intr.); vaŋgip- (vaŋgit-) id. (tr.). Ga. (S.3) vaŋka curve. Go. (Mu.) vak-, (Ma.) vaŋg- to bend (intr.); (M.) vangānā to be bent; (Mu.) vakta crooked, zigzag (Voc. 3140); (S.) vaŋkor, (Ko.) vaŋko bent, crooked (Voc. 3144). Konḍa vaŋ- (-it-) to bend, become bent; vak- (-t-) to bend (tr.); vekoṟi crooked. Kuwi (F.) vwāngali to be crooked; vwakhali to bend; (S.) wanginai to be bent, stoop; (Su. Isr.) vaŋg- (-it-) to bend (intr.), be bent; vak- (-h-) to bend (tr.). Kur. beŋknā, beŋka'ānā to turn (tr.) from a straight line, bend, curve; beŋkō, baŋkā crooked, bent, curved. / Cf. Skt. (lex.) Pali Pkt. vaṅka- crooked; bend (of river); Turner, CDIAL, no. 11191. DED(S) 4371.
5336 Ta. vāṅku (vāṅki-)
5336 Ta. vāṅku (vāṅki-) to receive, take, buy, get, obtain, carry away as a flood, draw, drag, pull, take in (as breath), get back, take back, remove, take away; vāṅkal receiving, admitting, borrowing, buying. Ma. vāṅṅuka to take, receive, choose; vāṅṅal purchasing; vāṅṅikka to demand back; vāṅṅippikka to make one take. DED 4372.
வாங்குதல் - இதன் பிறவினைச்சொல் வாக்குதல்: வளைத்துச் சாய்ப்பதால் கஞ்சி ஊற்றப்படுவதைக் குறிப்பதாகிறது.
5334 Ta. vākku (vākki-)
5334 Ta. vākku (vākki-) to pour (tr.); vākkal boiled rice from which conjee has been poured. Ko. va·k- (va·yk-) to pour out slowly (tr.). To. po·x- (po·xy-) to flow down completely; po·k- (po·ky-) to empty out completely; ? po·x blood. Ka. bāgu to pour off water from boiled rice, etc., by inclining the vessel. Koḍ. ba·k- (ba·ki-) to pour off water from cooked rice. Te. vã̄ka, vã̄gu rivulet, streamlet; (K.) vancu to serve from a container, empty. Kol. va·ŋg- (va·ŋkt-) to pour or ladle (liquid). Nk. (Ch.) vāŋ(g)- to pour. Ga. (Oll.) vaŋ(g)- to leak; (S.) vāng- to leak, overflow; (S.3) vāŋ- to flow out like water; vāŋp- (vāŋup-) to make to flow out. Go. (Tr.) wāngānā to trickle, of water, grain, dust, etc.; (Ph.) vāngānā to drip, drop; (A.) vāŋg- to drip, leak; (Mu.) vāŋ- (pot) to leak; (Ma.) vāŋg- to be poured, spilled (Voc. 3218); (Ma. Ko.) vanc- to strain off water from boiled rice (Voc. 3145). Konḍa vāŋ- (-it-) to be poured, flow, drip; vāk- (-t-) to pour (as water). Pe. vāk- (-t-) to pour. Manḍ. vāŋ- to leak; vāk- to pour. Kui vānga (vāngi-) to leak, percolate; n. leak, percolation; vāpka (< vāk-p-; vākt-) to cause to leak, pour out from a small opening, sow in drills; n. sowing in drills. Kuwi (F.) vwāngali, (S.) wānginai to leak; (F.) vwākhali, (S.) wākh'nai to pour; vāŋg- (-it-) (Su.) to flow, be poured, (Isr.) leak; (Su. Isr.) vāk- (-h-) to pour. Malt. bagbagre to be poured out copiously. Cf. 5356 Ta. vār. DED(S, N) 4370.
காண்பது கண். அதுபோல். வாக்கு-தல் குறுகி வக்கல். வளைந்த விளிம்பு. வளவு (quarter), திசை.
5208(a) Ma. vakkal side; vakku brim, edge..Te. vaṅka direction, side, quarter. (b) Ta. vākku side, direction. Te. vã̄ka side, quarter. DEDS 851.
மேலும்,
வங்கு (எலிவங்கு = எலிவளை). வங்கி - வளைந்த நகை.
வணிகம் என்றால் வளைதல். கொடுக்கல் வாங்கலில் வளைந்துகொடுத்தல் நிறைய இருக்கும்.
வில் (”வில்லுன்னா வில்லு, வில்லாட்டிப் போ”), விற்றல்/விற்பனை, வாங்குதல் (=வளைதல்), வணிகம்,
வணியன் (வணிஜ - இருக்குவேதம்) வளை-தல் என்னும் தமிழின் தாதுவேர் இயங்குவது
காணலாம்.
நா. கணேசன்