அண்மையில் ‘அகத்தியர்’ யாஹூ குழுவில் டாக்டர் ஜேபி சிறுவயதில், தான் படித்த (Beano) பீ’னோ காமிக்ஸ்
http://en.wikipedia.org/wiki/The_Beano
போன்ற பல ஆங்கிலச் சிறுவர் காமிக்ஸ் இதழ்களைப் பற்றி எழுதியிருந்தார்.
http://groups.yahoo.com/group/agathiyar/message/51915
நானும் அவற்றைப் படித்தவன் என்பதால், என் நினைவுகளையும் அம்மடல் கிளறிவிட்டது.
50/60-களில் சென்னையில் எல்லா இடங்களிலும் Beano கிடைக்காது. மௌண்ட் ரோடில், பழைய ந்யூ எலிபின்ஸ்டோன் தியேட்டர் அருகே இருந்த ஒரு சிறு புத்தகக் கடையில் அதை நான் வாடிக்கையாக வாங்குவேன்! பிறகு மூர் மார்கெட்டில் தேடல்! இப்படி நூற்றுக் கணக்கில் பீ’னோக்களைச் சேர்த்திருந்தேன். ( யாரோ ஒரு புண்ணியவான் அவற்றை எல்லாம் எடுத்துச் சென்று, திரும்பித் தர ‘மறந்து விட்டான்” என்று என் குடும்பத்தார் சொல்கின்றனர்:-((
பீ’னோவில் வந்த பாத்திரங்கள் யாவரும் மிக அலாதி! ஒவ்வொருவரையும் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.
எடுத்துக் காட்டாக, டெ’ன்னிஸ் ( Dennis the Menace) என்ற வாண்டுப் பயல் . பீ’னோ பாத்திரங்களில் மிகப் பிரபலமானவன் இவன். பின்னர் அதே பெயரில் அமெரிக்காவிலும் டென்னிஸ் காமிக்ஸ் வரத் தொடங்கியது.
http://en.wikipedia.org/wiki/Dennis_the_Menace_(U.S.)
ஒரு திரைப்படம் கூட 1993-இல் வந்தது.
http://www.imdb.com/title/tt0106701/
ஆனால், பீ’னோவின் டெ’ன்னிஸ் தான் ’நிஜம்’; அவனுடைய விஷமத்திற்குமுன் அமெரிக்க டெ’ன்னிஸ் வெறும் நிழல் தான்! இப்போது மணி விழா கொண்டாடும் டெ’ன்னிஸுக்கு இதோ ஒரு வாழ்த்துப் பா!
அறுபதாண் டைக்கடந்த அடங்காப் பிடாரியவன்
துறுதுறு குறும்புசெயத் துடிதுடிக்கும் அவதாரம்
பரட்டைமுடி யன்துணைக்கோ ‘பைரவராய்’ நாயொன்று.
சிரிப்பிதழ் Beano-வின் Dennis-ஐ மறப்பேனோ?
மாதிரிக்கு ஒரு பீ’னோ இதழின் முதல் பகுதியின் பிடிஎஃப் கோப்பை இணைத்திருக்கிறேன். பார்த்து மகிழுங்கள். அடுத்த மடலில்
இரண்டாம் பகுதியைப் பார்க்கலாம்.
-
1988-ஆம் ஆண்டு 13- பிப்ரவரி பீ’னோ இதழின் இரண்டாம்
பகுதியின் பிடிஎஃப் கோப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
--