kavithA maNdalam

19 views
Skip to first unread message

Pas Pasupathy

unread,
Jun 10, 2009, 4:07:21 PM6/10/09
to yAppulagam / யாப்புலகம்

 கவிதா மண்டலம்.

'கவிதா மண்டலம்' என்ற பெயர் பாரதி வரலாற்றில் புகழ் பெற்றது. அதைப் பற்றிய ஒரு வரலாற்றுத் துணுக்குச் சொல்கிறேன்.

 

ஜூன் 2001. ஆம், எட்டு வருடங்களுக்கு முன். நான் சென்னையில் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். பாரதி சுராஜ்  "திரு மெய்கண்டார் சென்னையிலிருந்து 'கவிதாமண்டலம்' என்ற பத்திரிகை (மீண்டும்)தொடங்கி உள்ளார்" என்று சொன்னார். ஜூலை இதழில் ஈற்றடி கொடுத்து வெண்பா கேட்டிருந்தனர். நான் சென்னையிலிருந்து வருவதற்கு முன் ஒரு முயற்சியை அவர்களுக்கு அனுப்பினேன். நண்பர் வேதம் என் வெண்பா ஆகஸ்ட் இதழில் வந்ததாகத் தெரிவித்தார்.
(அப்போது மன்றமையத்தில் நாங்கள் எழுதிக் கொண்டிருந்த காலம்.)

அந்த வெண்பா:

பாட்டிசை மாமுனிகள் பாரதியும் தாசனும்
மூட்டிய பாநெருப்பில் மூழ்கியதோர் -- காட்டினிலே
தண்டமிழ்ப் பாமலர்கள் தாங்கிவரும் நற்கவிதா
மண்டலத்தில் வீசும் மணம்.

 

அதற்கு அடுத்த வெண்பாப் போட்டியில் என்ன ஈற்றடி என்பதை கவியோகி தெரிவித்தார். எங்களில் சிலர் அனுப்பியதை அவர் 'கவிதா மண்டல'த்திற்கு அனுப்பினார். விளைவு? அக்டோபர் இதழில் வெளிவந்த வெண்பாக்களை இணைப்பில் பார்க்கவும்.
முதல் வெண்பா சிகாகோவில் இருந்த இலந்தை இராமசாமியுடையது. இரண்டாவது டொராண்டோவிலிருந்து நான் எழுதியது.
பசுபதி
10-6-09
kavitha_mandalam_oct_01.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages