//வர்மா
வரும் ஆனா வராது -
வவ//
சேசாத்திரி எழுதினார்:
”இலங்கையில் உள்ள பிராகிருத கல்வெட்டுகளில் சில தமிழ்ச் சொற்களும்
கலந்துள்ளன
என்று வடமராச்சி பற்றிய தொடுப்பு ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு
மின்தமிழில்பார்த்த நினைவு. அதில் பருமக என்ற சொல்லாட்சி சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது. பெருமகன் என்பதே பருமக(ன்) என்று ஆளப்பட்டுள்ளதாக
அக்கட்டுரை ஆசிரியர் அதில் கூறி இருந்தார்.
அதே போல் பல்லவர் கால நடுகற்களில் மகேந்திர வர்மன் > மயிந்திர பருமர்
என்று
குறிக்கப்பட்டுள்ளான். இதை சிலர் வர்ம என்ற சமற்கிருத சொல்லே பரும என
எழுதப்பட்டதாகக் கூறினாலும் கல்வெட்டாய்வாளர் ச. கிருஷ்ணமூர்த்தி அதை
மறுத்துப் பேசுகிறார். இலங்கைக் கல்வெட்டையும் தமிழ்நாட்டு நடுகல்
கல்வெட்டையும் ஒப்பு நோக்கினால் வர்ம என்ற சொல்லுக்கு இந்த பெருமகன்
வழிதோன்றிய பருமன் என்பதே மூலமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
சேசாத்திரி ”
பேரா. சி. பத்மநாதன் கட்டுரையில் பெருமகன் பருமகன் என லங்கா பிராமியில்
உள்ளதை எழுதியிருந்தார். பின்னர் வெ. வேதாசலம் போன்ற கல்வெட்டாய்வர்கள்
இலங்கை சென்று திரும்பினர்.
பெருமகன்/பருமகன் என்பதுடன் பருமன்/வருமன்/வர்மன் தொடர்பு படுத்தத்
தேவையில்லை
எனக் கருதுகிறேன். மகன் என்ற சொல் இல்லை - பருமம்/வருமத்தில் இல்லையே.
-------------------------------
ப > வ - பல இடங்களில் Plosive எழுத்து மெலியும். உதாரணமாக, பொருந்தலில்
கிடைத்துள்ள கி. பி. 5-ஆம் நூற்றாண்டு பானையோட்டில் ‘வயிர’ என்ற சொல்
அந்த ஊர்க்கிழானைப் புதைத்த முதுமக்கட்டாழி, புரிமணையில் உள்ளது.
அங்கு பயிரன் என்ற குலத்தார் பெருமளவு வாழ்கின்றனர். கொங்கின்
4 பட்டக்காரர்களில் ஒருகுடியினர் பயிர குலத்தார். தீரன் சின்னமலை அக்
குலத்தில்
பிறந்தவர் தான். பயிரன் > வயிரன் என்று பொருந்தலில் பதிவாகியுள்ளது
என பேரா. கி. நாச்சிமுத்து கருதுகிறார்.
உணவைப் பகுக்கும் குடல் உள்ள இடம் (பகு-) பகுறு > வகுறு(வவுறு/வயிறு)
என்கிறோம்.
வர்மன் என்றால் கேடயம், கவசம் என்ற சொல்லாக இருக்குவேதத்திலே இருக்கிறது.
இது பருமம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபு. பருமம் சங்க இலக்கியத்தில்
காணலாம்.
வருமம் > பருமம் ஆகியது என்கிறது மதறாஸ் லெக்ஸிகன். ஆனால், பருமம்
என்னும் தமிழ்ச்சொல் வர்மம் என்றானது என தெரிகிறது. ப > வ இயல்பான
மாற்றம்.
பருமம்² parumam , n. < varman. 1. Coat of mail, armour; கவசம். (பிங்.)
2. Saddle; pillion; குதிரைக்கலனை. பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
(நெடுநல். 179). 3. Cushion on an elephant's neck; யானைக்
கழுத்துமெத்தை. அவ்வியானை . . . புனைபூண் பருமத்து (கலித். 97). 4.
Trappings, as on the back of a bull; எருத்து முதுகிலிடும் அலங்கார
விரிப்பு. பருமம் புறங்கௌவி மின்ன (திருவிளை. மாயப்பசு. 14).
காட்டில் சல, சல என அரைச்சல் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மரம் அரை
(அரசமரம்).
அதனடியிலே கொற்றவை விளங்குகிறாள் - சிந்து நாகரீகத்தில்.
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
நடுகற்களில் அரைசரு, அரையன் என்றுதான் இருக்கும். மூத்தரைசரு -
முத்தரையர்.
இது தமிழ்ச் சொல். ராஜா என்னும் இந்தோ-ஐரோப்பியச் சொல் அல்ல. அது போல்
தான்
மயேந்திர பருமற்கு என்று வரும் நடுகற் சொற்களும் வர்மா என்ற வடசொல் அல்ல.
தமிழின் பருமன் > வர்மன்
என வடக்கே த்ராவிட மொழிகள் ஹிந்தி போன்றவை ஆன போது ஏற்பட்ட
திரிபு.
நா. கணேசன்
வருமம் > பருமம் ஆகியது என்கிறது மதறாஸ் லெக்ஸிகன். ஆனால், பருமம்
என்னும் தமிழ்ச்சொல் வர்மம் என்றானது என தெரிகிறது.