வாழ்க உறவுகள் ...
இந்த இழையில் நீங்கள் பார்க்கப் போகும் காட்சிகளும், படங்களும் உங்களை ஒரு நொடியேனும் நிகழ்காலத்திலிருந்து விலக்கி........பின்னோக்கி அழைத்துச் செல்லுமேயானால்............... நம்புங்கள் ... நீங்கள் ஒரு பொற்காலத்தில் வாழ்ந்திருக்கிறீர்கள்
( நன்றி : இணையம் / ஃபேஸ் புக் / யூட்யூப் (படங்களுக்காக )
முதலில் வீட்டுக்குள் அடிதடி நடக்கும் இடத்திலிருந்து தொடங்குவோம் ..
1.ஆரஞ்சு மிட்டாய் :
இதை சரிபாதியாக வாயில் வைத்து கடித்து உடைப்பதில்/பங்கு வைப்பதில் வரும் பாருங்க சண்டை :)
2.அப்பளப் பொரி :
இதை திங்கவும் மாட்டாம ... எதிரிக்குக் காட்டி கடுப்பேத்திக்கிட்டே இருந்து ... எங்காவது இடிச்சுக்கிட்டு ..உடைந்தவுடன் பொங்கி அழுது ..’இவந்தான் ஒடைச்சான்’ன்னு எதிரியை போட்டு விடுறதுல உள்ள சந்தோசமிருக்கே :))
இன்னும் வரும் :))