1. கடவுள் என்று சொன்னாலே
கலிபுருஷன் ஒரு நமட்டு சிரிப்பு
சிரிக்கிறானே ! ஏன் ?
இந்தக் குப்பைக்கூளங்களில்
வஜ்ரப்படை எங்கோ விழுந்து கிடக்கிறது.
பொறுமையாகத் தேட வேண்டும்.
அழிவிற்கு ஏங்கி
கால நதிக்கரையில்
ஊடலில் சிணுங்கி நிற்கும்
உலகை சினையாக்க
ருத்ரன் தன்னை சிங்காரித்துக்கொள்கிறான்
அழிவே அமுதாகி அதையும்
கவர்ந்துண்ணும் உலகை
முதல் திரை வளைத்துப் பரிமாறித் துடைக்க
*
2.உலகம் அழியத் தொடங்கி விட்டது
உலகைத் திருத்தாதீர்!
ஈர நெஞ்சைப் பிழியாதீர்
தீயணைந்தால்
உங்கள் ஆன்மா சிதையேறும்
நம்பிக்கையால் பொத்தி அணைக்காதீர்
உங்கள் நெஞ்சு கொதிக்கும்
அழியத் தொடங்கி விட்டது
உலகம். திருத்தாதீர்!
*
3. ஆரம்பப் பள்ளி நினைவுகள்
ஆட்டுக்காலில் அ ஆவன்னாவை
போட்டு ஆட்டியவாறே
மதில் மேல் குருவிகள்
ஆறடிச் சந்தில்
பாடம் பண்ணி வைத்த காலத்தின்
பக்குவம் சொல்லிய காக்கைகள்
பன்றியின் தணிக்கை உறுமலை
கவனியாதது போல்
காலை கொதித்து பகலாகி
மாலை வடிந்த நிழலில்
படிந்த தூவல்.
இந்தக் கவிதைகள் நம் வல்லமை உறுப்பினர் ஒருவரின் கவிதைகளே. கண்டுபிடிங்க கண்டுபிடிங்க
வாழ்த்துகள் கவி ஞானியே! கவிப்பேரொளியே!! கவிப்பிரபஞ்சமே!!!
நான் எழுதியதல்ல. டைப்பியது மட்டுமே நான் :)