மே 17 இயக்கம் சார்பில் மெரினா கடற்கரையில் இன்று (19-05-2013) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
5 views
Skip to first unread message
முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
unread,
May 19, 2013, 11:47:12 AM5/19/13
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to
மே 17 இயக்கம் சார்பில் மெரினா கடற்கரையில் இன்று (19-05-2013) நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கலந்து கொண்டேன்.
என் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி அங்கிருந்த ஒருவரிடம் தனக்கு பாலச்சந்திரன் ஓவிய அட்டை தான் வேண்டுமென அடம்பிடித்து வாங்கி மடியில் வைத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தன முன் அதனை மணலில் ஊன்றி வைத்துக் கொண்டார். முடியும் வரை அதனை கேட்ட யாருக்கும் தர மறுத்து விட்டார். அந்தப் பெண்மணியைப் பார்த்து ஆச்சர்யமாக "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண் தான் மதுரையிலிருந்து இங்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தோழியர்கள் பறையடித்து நடனமாடினார்கள். அவர்களில் ஒரு ஆறு வயது சிறுவனும் பறையடித்தபடி ஆடினான். அந்த பறை சத்தம் செவிகள் வழி உள்ளே நுழைந்து ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அந்தப் பறையொலி என் காதுகளில்.
--
================= = அன்பே கடவுள் = ================= முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி - 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106. http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
unread,
May 21, 2013, 4:49:43 AM5/21/13
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to
எனக்கு இடது புறம் அமர்ந்திருந்தவர் என்னிடம் 'தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?' என்றார். கடவுள் இருக்கிறார் என்பது நம்பிக்கை; கடவுள் இல்லை அதாவது கடவுளை கண்களால் காணமுடியவில்லை என்பது நடைமுறை உண்மை. நம்பிக்கைக்கும் நடைமுறைக்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. நாம் கொள்ளும் நம்பிக்கையானது ஆழ்மனதில் வேரூன்றும் போது நடைமுறையில் உண்மையாகிறது என மனதினில் நினைத்தபடியே 'எனக்குத் தெரியவில்லை ஐயா' என்றேன். என்னோடு ஏற்கனவே பழகியவராக இருந்தால் நான் மனதில் நினைத்ததை அப்படியே அவரிடம் சொல்லி இருந்திருப்பேன்.
என்னிடம் கேட்ட அதே கேள்வியை எனக்கு வலது புறம் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியிடம் கேட்டார். பாலச்சந்திரன் புகைப்படத்தை இறுகப் பிடித்தபடியே 'தலைவர் பிராபகரன் எங்கோ உயிருடன் வாழ்கிறார். அவர் நிச்சயம் திரும்ப வருவார்' என்றார். நான் அந்தப் பெண்மணியை ஆச்சர்யமாக பார்த்தேன்.
சில நிமிடங்கள் கழித்து சிலர் வரிசையாக வந்து துண்டுப்பிரசுரம் தாங்கிய தாள்களை தந்து விட்டு நகர்ந்தனர். அதில் ஒரு தாளில் 'ஏர்டெல்லை புறக்கணிப்போம்' என்ற வாசகம் இருந்தது. அந்தப் பெண்மணி 'எதற்காக இப்படி எழுதியிருக்கிறார்கள்?' என்று கேட்டார். எனக்கு இடதுபுறத்தில் இருந்தவர் விளக்கினார். நான் சொன்னேன் 'அதை புறக்கணிப்போம் இதை புறக்கணிப்போம் என்று சொல்வது தவறு. முதலில் நாம் அனைவரும் இந்தியாவைத்தான் புறக்கணிக்க வேண்டும்.' என்றேன்.
எனக்கு முன்னே அமர்ந்திருந்தவர் ஆமோதித்தார்.
தமிழ் எழுச்சிப் பாடல்களுக்கு பள்ளிக்கூட சிறுமிகள் நடனமாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.