Re: இறைவன் நம்மை மறப்பதில்லை

9 views
Skip to first unread message

Sathesh Kumar

unread,
Sep 29, 2010, 12:31:06 AM9/29/10
to vallala...@googlegroups.com
Dear All,

* தன்னை எத்தனை பழித்துப் பேசினாலும் இறைவன் அதைப் பொருட் படுத்தாமல் நம் மீது தயவாகவே உள்ளான். ஆனாலும், மக்கள் கடவுளை பற்றிய வேண்டாத விவாதங்களை விட்டு விட்டு, மேம்பட்டவனான அவனது அருளைப் போற்றுதல் வேண்டும். காலத்தை வீணாகக் கழிக்கக் கூடாது.
* புறத்தில் வெளுத்திருந்தாலும் உள்ளம் கருத்தவர்களாக இருக்கக் கூடாது. வெளியே வெளிச்சம், உள்ளே இருட்டு. இப்படி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கீழான நிலையில் இருக்கும் உறவிலிருந்து விலகி வாழுங்கள்.
* கருணை நிறைந்தவர்களாக இருங்கள். அது உங்கள் உள்ளத்தில் ஊற்றாய் பொங்கி வழிந்தோடட்டும். அடுத்தவர் துன்பத்தை காணச் சகிக்காமல் மனம் வருந்துபவரே கருணைமிக்கவர்கள். 
* தங்கள் வயிற்றை வளர்க்க வேண்டும் என்று எண்ணி, உயிர்களை துன்புறுத்தி கொலை செய்யும் கொடியவர்கள் எந்த நாளும் எனக்கு உறவாக மாட்டார்கள். எவ்வுயிரையும் தன் உயிராக மதித்து அன்பு காட்டுபவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் எனக்கு மிகவும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். 
* உடம்பை மறந்தாலும், உயிரை மறந்தாலும், உணர்வை மறந்தாலும் ஏன் இந்த உலகத்தையே மறந்தா லும் ஒரு போதும் கடவுளை மறக்கக் கூடாது. ஆனால், மனிதர்கள் மேலான கடவுளை மறந்து விடுகிறார்கள். அவர் நம் எப் போதும் மறப்பதே இல்லை.


--
With Regards,
S.Sathesh Kumar
+919444426032.

P Sujatha Rajashree

unread,
Oct 5, 2010, 8:11:30 AM10/5/10
to vallala...@googlegroups.com
Very Good sathesh Anna

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Reply all
Reply to author
Forward
0 new messages