Re: சமணர்கள் ஏன் நிகண்டுகளைத் தயாரித்தார்கள்

39 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 27, 2011, 10:36:15 AM9/27/11
to மின்தமிழ், panb...@googlegroups.com, valai...@googlegroups.com, pira...@googlegroups.com, thami...@googlegroups.com, yavaru...@googlegroups.com, housto...@googlegroups.com

On Sep 24, 9:58 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/09/blog-post_3897.html
>
> சமணர்கள் ஏன் நிகண்டுகளைத் தயாரித்தார்கள்?
>
> வீ.அரசுவின் அழைப்பின் பேரில் சில வருடங்களுக்கு முன் சென்னைப்
> பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சமண நிகண்டுகள் பற்றி உரையாற்றினேன். வேறு
> ஏதோ தேடப்போக அந்த உரைக்காகத் தயாரித்த குறிப்புகள் கிடைத்தன.அந்த
> குறிப்புகளில் சிலவற்றை இங்கே பதிவேற்றுகிறேன்.
>
>  என்னுடைய கேள்விகளெல்லாம் சமண முனிவர்கள் ஏன் அகராதி தயாரிப்பில்
> ஈடுபட்டார்கள்? சமண மதத்திற்கும் அகராதி தயாரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?
> நிகண்டுகளிலிருந்து அவற்றின் தயாரிப்புத் திட்டங்களை அனுமானிக்க இயலுமா?
> அவ்வாறே அந்த தயாரிப்புத்திட்டங்கள் தெரியவந்தால் அவற்றிலிருந்து எந்த தத்துவ
> நோக்கு சமண நிகண்டுகளின் உள்தர்க்கத்தைத் தீர்மானிப்பதாக இருந்தது என்று
> அனுமானிக்க இயலுமா ? இதுவரைக்கும் கல்விபுல ஆய்வாளர்கள் எழுதியவற்றுள் சமண
> நிகண்டுகள் பற்றிய பொதுவான விவரணைகள், வரலாற்று செய்திகள் இடம்
> பெற்றிருக்கின்றனவே தவிர என்னுடைய கேள்விகளுக்கான விடைகள் எதுவும்
> கிடைக்கவில்லை. என் யூகங்கள் சிலவற்றை சுருக்கமாக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
>

நன்றி, பானுகுமார்.

தேவ் சார் உயிரின் பகுப்பு வகைகள் 84 லக்ஷம் என்று
எழுதினார். இவ்வாறு முதலில் பகுப்பு செய்தது
சமணர்கள். இந்தியாவில் வேளாண் நாகரிகத்தின்
- உ-ம்: சிந்துக்கரை நாகரிகத்தின் வழிபாட்டு முறைகள்
(அணங்கு), யோகம் - முதிர்ச்சிகள்
பாரதத்தில் சமணம் போன்ற சிரமண சமயங்கள்
வழியாக வெளிப்படுகின்றன. சிந்துக்கரையில்
த்ராவிடம் போன்ற மொழியினர் ஆரியம் பேசும்
மொழியினராக மாறியபின்னர் அவர்களின்
பண்பாட்டுக்கூறுகள் சிரமண சமயங்களில்
மீட்டும் தலையெடுக்கத் தொடங்கின.
இதைத் தெளிவாக, கலை வரலாற்றில் காண முடிகிறது.
எழுத்து உருவாக்கம் - சிந்து, காந்தாரம், பொருந்தல்
(பேரா. கா. ராஜன் அவர்களின் அறிக்கையை அனுப்பியது
நினைவிருக்கலாம்), புலிமான் கோம்பை, கொற்கை, ... -

குறள் 550 - பழைய சமணர் உரை சுட்டிக்காட்டியுள்ளேன்.
10+ ஆண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் கவி விளக்கம்
பற்றி எழுதினேன்.

திருக்குறளுக்கு பழைய சமண உரை கிடைத்துள்ளது. அது அச்சாகியும்
இருக்கிறது. அதில் குறள் 550-க்கு கொலைதண்டனைப் பரிந்துரை இல்லை.
நாமக்கல்
கவிஞர் உரையைப்போல என்று சொல்லலாம்:
http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html
சமணர்கள் எழுதிய தர்ம சாஸ்திரங்களில் கொலைதண்டனையைப்
பரிந்துரை செய்வதில்லை. நாகரிகம் அடைந்து வரும் நாடுகள்
தூக்குதண்டனையை முற்றாக ஒழித்துவருகின்றன.
http://www.thirukkural2005.org/researchpaper/Rex_and_Muthusamy_Special_Prize.pdf
திருக்குறளில் கட்டுதல் என்ற சொல்லை அறியக் காலங்காலமாக
உழவர்கள் கடைப்பிடித்துவரும் இயற்கை வேளாண்மை வழிகளில்
புல் கட்டுப்பாடுகளை நோக்க வேண்டும்.

சமணர்கள் இல்லாதிருந்திருந்தால் தமிழுக்கு
இலக்கண இலக்கியங்கள் செம்மையாக அமைந்திருக்குமா?
என்றே ஐயம் எழுகிறது. தொல்காப்பியம், அதன் உரையாசிரியர்
இளம்பூரணவடிகள், நன்னூல், குறள்,
நாலடி, சிலம்பு, அதன் உரையாசிரியர் அடியார்க்குநல்லார்,
சிந்தாமணி (சிந்தாமணியை கொங்குநாட்டு
நூல் என்கிறார் உவேசா அவர்கள்), நிகண்டுகள்
(பிங்கலந்தை பொள்ளாச்சி சிவன்பிள்ளை அச்சாக்கினார்கள்), ....

நன்னூல் ஆசிரியர் போலவே அதன் உரைகாரர் மயிலைநாதர்
கொங்கு நாட்டினர் என்ப. மயிலைநாதர் உரையைப்
பின்பற்றிச் சைவபரமான உரைகள் பின்னாளில் எழுதுள்ளன.
இலக்கணக்கொத்து ஆசிரியர் கூற்றை நோக்குவோம்.

--------

”நன்னூல் உரையாசிரியர்கள்

1. நன்னூல் உரைகள்

தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய இலக்கண நூல்களுள்,
பவணந்தியார் இயற்றிய நன்னூலே தலைமையும் செல்வாக்கும் பெற்றுச்
சிறந்து விளங்குகின்றது. சுருக்கமும் செறிவும் இந்நூலின் தனிச்
சிறப்பியல்புகளாகும். இந் நூலிலிருந்து இலக்கண விளக்க ஆசிரியர் 250
சூத்திரங்கள் வரை எடுத்துத் தம் நூலில் சேர்த்துள்ளார். இலக்கணக்
கொத்தின் ஆசிரியராகிய சாமிநாத தேசிகர் “முன்னோர் ஒழியப் பின்னோர்
பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ என்னும் துணிவே
மன்னுக” என்று வாயாராப் புகழ்கின்றார்.

நேமிதா தத்தால் நிலைதெரியாச் சொற்புணர்ச்சி
காமர் நன்னூற் சூத்திரத்தாற் காட்டிடீர்

என்று திருத்தணிகையுலா போற்றுகின்றது.

பவணந்தியார் சமணத் துறவி. சனகை என்னும் ஊரில் பிறந்தவர்.
சீயங்கன் என்னும் குறுநில மன்னன் வேண்டுகோளின்படி, பவணந்தியார்
நன்னூலை இயற்றினார். சீயகங்கன் மூன்றாம் குலோத்துங்கனுக்கு (1178-1216)
உட்பட்ட சிற்றரசன். எனவே, நன்னூலார் பன்னிரண்டாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் வாழ்ந்தவர்.

நன்னூலுக்குக் காலந்தோறும் பல உரைகள் தோன்றியுள்ளன. ஒவ்வோர்
உரைக்கும் ஏதேனும் தனிப்பட்ட சிறப்பியல்பு இருக்கின்றது. நன்னூலுக்கு
முதன் முதலில் தோன்றிய உரை மயிலைநாதர் உரையேயாகும். மயிலைநாதர்
நன்னூலார் காலத்தை அடுத்துத் தோன்றியவர். இவர் நன்னூலார் கருத்தை
ஒட்டி உரைசெய்து, சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார். இவ்வுரையைக்
காண்டிகையுரை என்றும் வழங்கினர். மயிலைநாதர் சமணர் ஆதலின்,
இவரது உரையில் சமணச் சார்பான மேற்கோளும் உதாரணமும் இடம்
பெற்றுள்ளன.

இவ்வுரை பதினேழாம் நூற்றாண்டு வரை (ஏறத்தாழ நானூறு ஆண்டுகள்)
செல்வாக்குப் பெற்று விளங்கியது. சமணர் இயற்றிய உரையைச் சைவர்கள் கற்கத்
தயங்கினர்.
சமணச்சார்புடைய உதாரணங்களையும் மேற்கோள் பாடல் கலையும்
கற்கும்போது விருப்பமின்றிக் கற்றனர். இத்தகைய எதிர்ப்புணர்ச்சி,
பதினேழாம் நூற்றாண்டில் நன்னூலுக்குப் புதிய உரை ஒன்று தோற்றுவிக்கும்
எண்ணத்தைச் சைவ உலகில் உண்டாக்கிற்று. இலக்கணக் கொத்தின்
ஆசிரியர், “சேற்று நிலத்தில் கவிழ்ந்த பால், தேன், நெய் முதலியனவும்
சேறானாற்போல், நன்னூற் சூத்திரமும் அவ்வுரையுடனே கலந்து
குற்றப்பட்டது என்க” என்று மயிலைநாதர் உரையைக் கடிந்தார்; தம்
மாணவராகிய சங்கர நமச்சிவாயரை நன்னூலுக்கு வேறுரை எழுதுமாறு
தூண்டினார். சங்கரநமச்சிவாயர் சைவ சித்தாந்தங்களையும் திருமுறைகளையும்
நன்கு ஓதி உணர்ந்தவர். நன்னூலுக்கு உரைஎழுதத் தொடங்கி, தம் உரை
எங்கும் சைவமணம் கமழும்படி செய்தார். மேற்கோளும் உதாரணமும் சைவ
சமயச் சார்புடையனவாகக் காட்டினார். இவ்வுரை தோன்றியபின், மயிலைநாதர்
உரை செல்வாக்கிழந்து ஒதுங்கியது. சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு இயற்றிய
விருத்தியுரை எங்கும் பரவியது.”

மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள், (பக். 554-555)

---------------


வாழ்க நலமுடன்,
நா. கணேசன்

தமிழன்பர் ஆ. சிவகுமாருக்கு குறளின்
சமணக்கருத்துக்கள் பற்றி நான் எழுதிய மடல்:

ஆ. சிவக்குமார் எழுதினார்:
> மிக்கநன்றி ஐயா. நல்ல கருத்துகள். அக்கருத்துகளை நான்
> படித்துப்புரிந்துகொள்ள சிலநாள்கள் ஆகும். அவகாசம் தேவை.

> ஆனால், சமணம் பூலோக-தெய்வலோக பரிமாற்றங்களை ஏற்காதது.
> பூசுரர் கேள்வி (வேதம்), அவியுணவை தேவர் உண்பதும்
> ஒப்பானவை என்கிறது வள்ளுவம். அதாவது, இரண்டுமே
> கதைகளே ஒழிய உண்மை எனலாகாது என்பது பொருள்.

> நன்றி
> - ஆ.சிவக்குமார்

குறளின் பௌத்தத்தைச் சாடும் முக்கியமான சிலவற்றுக்கு
விளக்கம் அளித்துள்ளேன். இணையத்தில் இனி
வருங்காலங்களில் திருவள்ளுவரின் உள்ளம் அறிய
அவரது குறள்களுக்கு சமண சமயப் பார்வையில்
பார்த்தால் பொருள் தெளிவாகும். பரிமேலழகர் இடறுகிற
இடங்களும் உண்டு. பரிமேலழகர் வாழ்ந்த காலகட்டம்
அப்படி. சமணர்களின் இலக்கணக் கொடையை மறைத்து
அகத்தியர் என்ற கதைகளை சைவர்கள் (உ-ம்: நச்சினார்க்கினியர், ...)
கட்டுகிற மாதிரியான ஹிந்து எழுச்சியின் முன்னோடி
பரிமேலழகர். ஆனால், வள்ளுவர் உள்ளம் அறிய அதற்கும்
பல நூற்றாண்டுகள் முன்னர் சென்று அப்போதைய
காலத்தின் சூழலை ஆராய வேண்டியுள்ளது.

> பௌத்த ஊன் தின்னும் கொள்கைக்கும்
> (தேரவாத நாடுகள் - சிலோன், பர்மா, தாய்லாந்து,
> மஹாயான சீனா, கொரியா, ஜப்பான்,...)
> சமணம் முழுக்க மறுப்பதற்கும் வேறுபாடுண்டு.

> (அ)
> தினற் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
> விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல். குறள் - 256

> கொல்லாமையை உலகு முழுதும் ஏற்றால்,
> கிருகஸ்தர்கள் கடைகளில் இறைச்சி வாங்கமுடியாது,
> பிக்‌ஷுக்களுக்கும் தானமாக ஊனும் இல்லை.

> (ஆ)
> யாரானாலும் எதற்காகவானாலும் புலால் உண்பதை மறுக்கிறவன்
> வணங்கத் தக்கவன் - (நாமக்கல் கவிஞர் திருக்குறள் உரை)

> 260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
> எல்லா உயிரும் தொழும்.

----------------------

மகாகவி பாரதி சரியாகத்தானே பாடி இருக்கிறார்,
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

புல்லைப் பிடுங்கி அப்பாலே எறிந்து பயிரை
இரட்சிக்கிறாற்போல, அரசாங்கம் கொலை
செய்வோரை அப்புறப்படுத்தி சிறையில் அடைக்கணும்
என்று பழைய சமணர், அரசவைக் கவிஞர்
நாமக்கல் இராமலிங்கர் குறள் 550-க்காக
விளக்கியுள்ளனர்.

-----------------

*துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. *1050

இக் குறளில் பௌத்த சமயத்தின் செயல்களை
மறுக்கிறார் வள்ளுவர். என் விளக்கம்
படித்துப் பாருங்கள்:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/1cb7d038fc59d0b7?scoring=d&

-------------

பரிமேலழகர் வள்ளுவரின் குறள்களை அப்படியே
மாற்றும் உதாரணம் இருக்கிறது:

559.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

560.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

இரண்டு குறளையும் படித்தால் வேள்வி நடந்தால் தான் மழை பெய்யும்
என்றா வள்ளுவர் உரைத்துள்ளார்? பரிமேலழகர் அப்படிச் சொல்கிறார்.

இவை பற்றி விரிவாக இந்த இழையில் ஆ. சிவகுமார்
படிக்கலாம்:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/8173e022245c3eb0?scoring=d&

நா. கணேசன்


> சரஸ்வதி மகால் வெளியிட்ட பதார்த்தசாரம் என்ற சமண தத்துவ நூல் உயிருள்ள பொருள்
> உயிரற்ற பொருள் அனைத்துமே அணுக்களால் கட்டமைக்கப்பட்டவை அவை கடவுளின்
> துணையின்றியே தன் போக்கில் இயங்குகின்றன என்று சொல்கிறது. அதாவது கடவுள்
> என்றால் இங்கே உலகைப்படைத்து வழி நடத்திச் செல்கிற மனிதனுக்கு மேம்பட்ட சக்தி
> என்று மட்டுமே பொருள்கொள்ளலாகாது. மனித அறம் சார்ந்து, மனித அறத்திற்கு செவி
> மடுத்து, மனிதனுக்கு மேல் இயங்குகின்ற இயற்கை சக்தி ஒன்று இல்லை என்றே சமணரின்
> கடவுள் மறுப்புக்கொள்கையை நாம் பொருள்கொள்ளவேண்டும். பிராகிருதமும் பாலியும்
> கலந்து பழைய அர்த்தமாகதியில் எழுதப்பட்ட பதார்த்தசாரம், இயற்கையின் மனித அறமற்ற
> தன்மையை (கடவுள் இல்லாத தன்மையை) அறிவதில் தேவ மூடம், உலக மூடம், பாஷாண்டி
> மூடம் என்ற மூன்று தடைகள் (சமண மொழியில் மூன்று குற்றங்கள்) ஏற்படுகின்றன என்று
> சாடுகிறது. தேவ மூடம் கடவுள் நம்பிக்கையைக் குறிக்கிறதென்றால் உலக மூடம்
> இயற்கையை அளவுக்கு அதிகமாக மனிதன் பயன் படுத்துவதைக் குறிப்பிடுகிறது. சமண சிறு
> காப்பியங்களான யசோதரகாவியம், உதயணன் கதை ஆகியவற்றில் உலக மூடத்தை
> கிண்டலடிக்கும் நகைச்சுவை பல இடங்களில் காணக்கிடைக்கிறது. இயற்கையை
> தேவைக்கதிகமாக பயன்படுத்துவதின் உருவகமாக அதிகம் சாப்பிடுதல் சமண நகைச்சுவையில்
> அதிகம் காணக்கிடைக்கிறது. பாஷாண்டி மூடம் என்றால் என்னவென்று தெரியவில்லை.
> இந்தக்கட்டுரைச் சுருக்கமாகக்கூட இருக்கலாம்.
>
> மனிதனுக்கான அறத்தை மனிதன் தான் உருவாக்கவேண்டுமே தவிர இயற்கையோ கடவுளோ
> மனிதனுக்கான அறத்தைத் தரமாட்டார்கள் என்பதே சமணக்கோட்பாடு. சிறைக்கோட்டத்தை
> அறக்கோட்டமாக மாற்றுவதற்கான (first prison reform in human history)
> தர்க்கத்தையும் இந்தக் கோட்பாட்டினை ஒட்டியே இதர சமண பனுவல்களிலும் காணலாம்.
>
> ஆக உயிரற்றது, உயிருள்ளது அனைத்தையுமே மனித அறிவினுள் எனவே மனித அறத்தினுள்
> மொழியின் மூலமும் கணிதத்தின் மூலமும் கொண்டுவருவதே சமணர்கள் அகராதி
> தயாரிப்பிலும் வானியல் மற்றும் சோதிட கணிதத்திலும் ஈடுபட காரணம் என்று
> நினைக்கிறேன்.
>
> ஒன்றைப்பார்த்து வியந்து ஐ என்று ஒலிஎழுப்புகிறோம் என்றால் அவ்வொலியை
> வியப்புசொல்லாகவே கருதவேண்டும் என்கிறது தொல்காப்பியம். இந்த அடிப்படை
> சொல்லாக்க முறைமையையே சமண நிகண்டுகளின் ஆசிரியர்கள் பின்பற்றினார்கள் என்று
> நம்ப இடமிருக்கிறது. சொற்களின் பெருக்கத்திற்கு அவர்கள் பிற மொழிகளையே
> சார்ந்திருந்தார்கள். பிற மொழி, பிற பண்பாட்டு கலப்பற்று தமிழ் மொழியும் தமிழ்
> சிந்தனையும் வளர்ச்சிபெற்றது தமிழ் சிந்தனையை இந்த மண்ணின் தூய சிந்தனையாக
> அடையாளம் காணமுடியும் என்பது மூடங்களில் ஒரு வகை அல்லாமல் வேறு என்ன?
>
> விருப்பமுள்ளவர்கள் Joseph, George Gheverghese. The Crest of the Peacock Non
> European roots of mathematics. Princeton University Press, 2000. என்ற
> புத்தகத்தில் சமண கணிதம் பற்றிய அத்தியாயத்தைப் படித்துப்பார்க்கலாம். சமணரின்
> அறிவியலை குறிப்பாக அணு அறிவைப் பற்றிய விளக்கமான கட்டுரையை புதுவை ஞானம்
> எழுதியுள்ளார். அவரும் பதார்த்தசாரம் நூலையும் The Crest of Peacockஐயும்
> குறிப்பிடுகிறார் என்றாலும் சமணர்கள் ஏன் நிகண்டுகளைத் தயாரித்தார்கள் என்பதை
> ஒட்டிய என் கேள்விகளுக்கான விடைகள் அவர் கட்டுரையில் இல்லை. தன்னளவிலேயே
> முக்கியமான புதுவை ஞானத்தின் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்:...
>
> read more »

Reply all
Reply to author
Forward
0 new messages