சூர்யா கூறும் நூறு பூக்களின் புகைப்படம் மற்றும் 'scientific name'

2 views
Skip to first unread message

Palaniappan Vairam Sarathy

unread,
Apr 23, 2009, 12:36:38 AM4/23/09
to Tamil2...@googlegroups.com, anb...@googlegroups.com, Thami...@googlegroups.com, panb...@googlegroups.com, UniTa...@googlegroups.com, mutht...@googlegroups.com, uyirez...@googlegroups.com, world...@googlegroups.com, Tamil_A...@googlegroups.com
http://karkanirka.wordpress.com/2009/04/23/99tamilflowers_index/ 
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா கூறும் 100 பூக்கள் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள் .... வள் இதழ்
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,  70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,  75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,  80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,  85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,  90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,  95
இந்த பூக்கள் எப்படி இருக்கும் ... இந்த பூக்களின் புகைப்படம் மற்றும் 'scientific name'
இதோ இங்கே ..... யாரும் இதுவரை செய்திடாத ஒரு புதிய முயற்சி ...
http://karkanirka.wordpress.com/2009/04/23/99tamilflowers_index/

--
Palaniappan Vairam Sarathy
Associate RF Engineer

Chandar Subramanian

unread,
Apr 23, 2009, 1:08:40 AM4/23/09
to uyirez...@googlegroups.com
அருமையான முயற்சி. மிகவும் சிரமப்பட்டே இதை தாங்கள் தயாரித்து இருக்கவேண்டும் என நினைக்கிறேன். வாழ்த்துகள்.

2009/4/23 Palaniappan Vairam Sarathy <vai...@gmail.com>



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

அன்புடன் புகாரி

unread,
Apr 23, 2009, 9:53:53 AM4/23/09
to uyirez...@googlegroups.com
இணையத்தமிழின் உண்மையான வளர்ச்சிக்குத் துணை நிற்கும் தொகுப்பு. மிகுந்த நன்றி கலந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
 
அன்புடன் புகாரி 

2009/4/23 Palaniappan Vairam Sarathy <vai...@gmail.com>



--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan
Reply all
Reply to author
Forward
0 new messages