Re: [MinTamil] சொற்பொருள் ஆய்வு--A Tryst With Words

344 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 12, 2012, 2:12:34 PM8/12/12
to வல்லமை, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, yavaru...@googlegroups.com, pira...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
On Aug 10, 11:02 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> 2012/8/9 திருவள்ளுவன் இலக்குவனார் <thiru2...<http://groups.google.com/groups/unlock?_done=/group/mintamil/browse_t...>@gmail.com>
>
> > வேள் என்றால் விருப்பம் என்றும் விருப்பத்திற்குரிய நாட்டம் என்றும்
>
>  பொருள்.
>
> > அவா என்றாலும் விருப்பம்தான். இரண்டு சொற்களும் இணைந்து மிகு விருப்பத்தைக்
> > குறிக்கின்றன. எனினும் பொதுவாக மிகுதியான நீர்  வேட்க‌ையை வ‌ேணவா என்பது
> > குறிப்பிடும்.
>
> தொல்காப்பியர்  தனிப்படச்  சூத்திரமாகவே இயற்றி,  வேட்கையும்
> அவாவும் சேர்ந்து, ‘கை’ என்பது மறைந்து,  டகாரம்  ணகாரமாகி ’வேணவா’
> எனும் சொல் கிடைக்கிறது என்று எழுத்ததிகாரம் 288ம் சூத்திரத்தில்
> அவரே கல்வெட்டாக ஆக்கி வைத்திருக்க,
> அதை நச்சினார்க்கினியர் உரையோடு  பதிப்பித்த தேவநேயர்
> அதற்கு அடிக்குறிப்பு எழுதுகையில் சம்பந்தமே இல்லாமல்
> ’வேள் + அவா’ என்பதே ‘வேணவா’ என்றாதல் கூடும்
> என்று நகைச்சுவைக்கு இடம் தரும் வண்ணம்
> ஒரு விபரீதச் சொல்லாக்கம் காட்டியுள்ளார். அதற்கு உதாரணமாக,
> ‘பெள்’ என்பதிலிருந்து ’பெண்’ வரும் என்றும்  கூறுகிறார்.
>
> மூலநூல் ஆசிரியரான தொல்காப்பியருக்கே தெரியாத தமிழ்
> தேவநேயருக்குத் தெரிந்திருந்ததால் அவரை ‘மொழி ஞாயிறு’
> என அழைத்தனரோ தெரியவில்லை :))
>

தொல்காப்பியருக்குத் தெரியாது எனச் சொல்ல முடியாது.
ஆனால், தேவநேயப் பாவாணர் சிந்தித்த வழியில் காப்பியர் சிந்தனை
2300 ஆண்டு முன் செல்லாமல் இருக்கலாம் அல்லவா?

” [பாவாணர்] ’வேள் + அவா’ என்பதே ‘வேணவா’ என்றாதல் கூடும்
 என்று நகைச்சுவைக்கு இடம் தரும் வண்ணம்
 ஒரு விபரீதச் சொல்லாக்கம் காட்டியுள்ளார். அதற்கு உதாரணமாக,
 ‘பெள்’ என்பதிலிருந்து ’பெண்’ வரும் என்றும்  கூறுகிறார்.” ” (தேவ்)

திராவிட மொழிஞாயிறு பாவாணர் சரியாகத்தானே  கூறியுள்ளார்.
இதில் என்ன “விபரீதச் சொல்லாக்கம்” இருக்கிறது என தேவ்
விளக்கினால் தெரிந்துகொள்வேன்.

திராவிடமொழிகளிலே -ள்-/-ண்-/ட்- இரண்டாம் எழுத்தாக வரும்
சொற்றொகுதிகள் ஏராளம். அடிப்படையான பொருளமதி
கொண்டவையாக இருக்கும். பல உதாரணங்களை பல்லாண்டாய்க்
காட்டியுள்ளேன். ஒரு சில சான்றுகளாய், -ள்-/-ண்-/-ட்- வேர்த் தொகுப்புகள்
பத்து உதாரணங்கள் இங்கே பார்ப்போம்:

(1) நள்-/நட்-/நண்- “நெருங்கு’ என்ற வேர்.
நட்பு, நண்பு (நண்பர்), நட்டார், நள்ளார், நண்ணார்.

(2) நிரஞ்சனின் 9, 90, 900 பற்றியகேள்வியை எடுத்துக்கொள்வோம்.
தொண்டு = 9 என்னும் தொல்காப்பியர் காட்டும் திராவிட
மொழியின் அடிப்படையான சொல்லில்
தொள்-/தொண்-/தொட்-  என்ற வேர் உள்ளது.
தொள்- வேரில் பிறக்கும் சொற்களாக, தொள்ளை, தொண்ணை,
தொட்டி, தோண்டு-, ... என்று பல சொற்கள் உள்ளன.
தொள்- என்றால் ஓட்டை, குறைவு (= slack) என்பது பொருள்.
உதாரணம். தொண்டு, தொண்டுமுட்டி என்ற சொற்களின்
பொருள்கள் காட்டி நிற்கின்றன. நிரஞ்சனின் 9, 90 பற்றிய
கேள்விக்கு 2002-ல் யானெழுதிய மடலைத் தரலாம்:
http://www.treasurehouseofagathiyar.net/18600/18651.htm

போத்து கோவை மாவட்டத்திலும் அன்றாடம் வழங்கும் சொல்.
போத்து = ஆண்கன்று. எருமைக்கன்றில் ஆணுக்குப் போத்து
என்பது வழக்கம். வயல்வெளியில் சேற்றுழவின்போதும், சும்மா
திரியும்போதும் போத்துக்குத் தொண்டுமுட்டி கட்டப்படும்.
தொண்டு - குறைவான நடத்தை. "அவள் தொண்டு" என்றால் அர்த்தம் வேறு.
(தொல்காப்பியத்தில் வரும் தொண்டு (9) பேரெண் 10க்குக் குறைவாக
இருப்பதால் ஏற்பட்ட பெயர்). கேரளாவில் வயலுழவுக்கு போத்தேர்
தான் (போத்து + ஏர்). தொல்காப்பியத்தில் யாடுகளின் பெண்குட்டிக்கு மூடு
என்றுவரும். இதுவும் கொங்குநாட்டில் நடைமுறைவழக்கிலுள்ள
ஒரு சொல்.

(3) விள்-/விண்-/விட்-
விள்ளுதல், விண்ணு/விண்டு, விட்டு (விட்டுசித்தன்).
விட்டல் - பாண்டுரங்க விட்டலன்.
விஷ்ணு என்னும் சம்ஸ்க்ருதச் சொல் இத் தமிழ்ச்
சொல்லில் இருந்து வடமொழி பெற்ற கடன் என்பர்
மேலைநாட்டு ஸம்ஸ்க்ருத மொழியியல் பேராசிரியன்மார்.

(4) குள்-/குண்-குட்- வேரைப் பார்த்தால்,
குளம், குண்டம் (உ-ம்: ஓம குண்டம்), குண்டா, குண்டுகுழி, குட்டை

(5) எள்-/எண்-/எட்-
எள்- என்பதன் பொருள் “மிகக் குறுகிய”
எனவே, குறுவிதை கொண்ட தாவரம் எள், அது எண் என்பது
சங்க இலக்கியம். பொருள்களை திராவிட ஜனங்கள்
எள் தானியம் கொண்டு “எண்ண” தொடங்கினர். அது முடியும்
இடம் எட்டு. தமிழ் எண்களுக்கு எட்டு அடிப்படையா (octal base)
அல்லது பஃது (decimal base) என்பது ஆதி காலத்தில் பல காலமாய்
ஒரு போராட்டம் நிகழ்ண்டிருக்கிறது.

(6) புள்-/புண்-/புட்- குழி,
அலகால் நிலங்கொத்தி குழியாக்கித் தின்பதால்
பறவை = புள். எள் = எண், அதுபோல், புள் = புண் குழி,
புட்டம் (< புள்-) = காக்கை. புட்டில் அம்பறாத்தூணி.
விள்- விண்ணு/விட்டு/விண்டு (> viSNu in Sanskrit
from Dravidian). அதுபோல், புள்- வேரால் த்ராவிட
மொழிகளில் பெண்ணின் உடற்குறி.

(7) துள்-/துண்-/துட்-
துளி - சிறு துளி, துணி(த்தல்) - சிறு பாகம் ஆக்கல்,
துண்டித்தல், துண்டு, துட்டு - சிறுகாசு.

(8) வள்-/வண்-/வட்- வளைதல்
வள்ளை, வண்டி, வடம், வட்டம் ....
எதிரியை வளையச் செய்வது வாள்.
வளைந்து செக்காட்டி எள்ளை எண்ணெய்
ஆக்கும் வாணியன் (< வாள்- ). இம் மரபினரில்
வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர் வாணியன்
தாதன் கம்பன் பாடாத உத்தரகாண்டம் பாடியவர்.

(9) பிள்-/பிண்-/பிட்-
பிளத்தல், பிணா, பிடுதல், ...

நேற்று இறந்துபோன தெலுங்கு அறிஞர் ப. கிருஷ்ணமூர்த்தி
உ/ஒ மற்றும் இ/எ உயிர்கள் முதலெழுத்தில் மாறுதலைக்
காட்டி ஒரு முக்கியக் கட்டுரை வரைந்துள்ளார்,
துளை/தொளை, குடு/கொடு, முய்/மொய், கிடை/கெடை, ..

பிள்-/பெள்- வேர் இதில் முக்கியமானது. [BTW, முகம் தமிழ்
ஸம்ஸ்க்ருதத்துக்கு அளித்த கடன்சொல் (லோன்வொர்ட்)
என்பர் அறிஞர். முக்யம் முகம் என்ற தமிழ்ச் சொல்லில்
இருந்து வடமொழியில் உருவாகியுளது.] இந்த
பிள்-/பெள்- வேரைத் தான் தமிழறிஞர் பாவாணர் ஐயா தன் நுண்மாண்
நுழைபுலத்தினால் விளக்கியுள்ளார்.

> அதை நச்சினார்க்கினியர் உரையோடு  பதிப்பித்த தேவநேயர்
> அதற்கு அடிக்குறிப்பு எழுதுகையில் சம்பந்தமே இல்லாமல்
> ’வேள் + அவா’ என்பதே ‘வேணவா’ என்றாதல் கூடும்
> என்று நகைச்சுவைக்கு இடம் தரும் வண்ணம்
> ஒரு விபரீதச் சொல்லாக்கம் காட்டியுள்ளார். அதற்கு உதாரணமாக,
> ‘பெள்’ என்பதிலிருந்து ’பெண்’ வரும் என்றும்  கூறுகிறார். (தேவ்)

பிள்-/பெள்- வேரில் பிறந்தது பெண்- என்னும் சொல்.
அதனால் தான் பெண்பனைக்கும் (=பெண்ணை),
நிலத்தைப் பிளந்து செல்லும் யாற்றுக்கும் பேராக
த்ராவிட ஜனங்கள் 10+ ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே
அமைத்துக் கொண்டனர். இந்த பிள்-/பெள்- வேரை
முன்னர் ஆய்ந்துள்ளேன். பிள்- என்ற வேரில் பிறக்கும்
சொல்லுக்குச் சூத்திரம் தொல்காப்பியர் தருகிறார்.

http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html
”பெண்ணை (< பெண்-): ஆறுகளுக்கு ஒரு காரணப்பெயர்
பெண் என்ற பெயர்ச்சொல்லின் அடிப்படை வேர் பிள- என்னும் வினைச்சொல் ஆகும்.
பிணா (< பிள்- ) என்றும் பெண் அழைக்கப்படுகிறாள். ”பெண்ணும் பிணாவும்
மக்கட்குரிய” - தொல். மரபியல் 62. மலையில் இருந்து மழைநீர் நிலத்தைப்
பிளந்து பள்ளம், படுகைகளை உருவாக்கி ஓடும் ஆறுகளுக்குப் பெண்ணை என்ற
பெயர் ஏற்படுதல் இயற்கையே. நிலத்தைப் பிளந்து ஓடும் நதிகள் சில பெண்ணை
என்றே காரணப் பெயர் பெறுகின்றன:
கரும்பெண்ணை (கண்ஹபெண்ணா, ஆந்திராவின் க்ருஷ்ணா நதி), வடபெண்ணை,
தென்பெண்ணை.”

(10) வேள்-/வேண்-/வேட்- விழைதல்/விரும்புதல்
வேள் ‘காமன்’ (காமன் என்பதும், அனங்கன் என்பதும்
திராவிட மொழிகளில் இருந்து சம்ஸ்கிருதம் சென்ற
சொற்கள், கருத்தாக்கங்கள்.)
வேள், வேட்டை, வேள்வி, வேண்டு-, வேட்டல், ...

வேள் - இந்த வேரைத் தமிழ்த்திரு பாவாணர் அழகாக விளக்கியுள்ளார்கள்.
வேள் + அவா, வேணவா, வேட்பவா.

பாவாணர் கூறும் வேள்- என்னும் வேரினின்றும் வேணவா பிறந்தது
என்னும் கருத்து திராவிட மொழிகளின் அடிப்படையான சொற்பிறப்பு
விதிகளில் ஒன்று. மேலும், பல -ள்-/-ண்-/-ட்- சொற்றொகுதிகளில்
இந்தத் தமிழமைப்பு விதி இயங்குதலை அறிய முடியும்.
சில சான்றுகளே தரப்பட்டன.

நா. கணேசன்

> மூலநூல் ஆசிரியரான தொல்காப்பியருக்கே தெரியாத தமிழ்
> தேவநேயருக்குத் தெரிந்திருந்ததால் அவரை ‘மொழி ஞாயிறு’
> என அழைத்தனரோ தெரியவில்லை :))
>
>தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை
>புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் எம். ஏ
>எழுதிய அடிக்குறிப்புகளுடன்.
>பக்கம் 174
>நூற்பா 288
>தென்னிந்திய  சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு
>திருநெல்வேலி
>ஆகஸ்ட் 1955
>ஒருவேளை  ‘நூலே கரகம்.... ‘ இடைச் செருகல்
>என்றதுபோல் எழுத்ததிகாரம் 288ம் சூத்திரத்தையும்
>இடைச் செருகல் என்பரோ ?
>தேவ்
>
On Thursday, 9 August 2012 07:08:48 UTC-7, Srirangam V Mohanarangan
wrote:
> நன்றி ஐயா.
> ***
> 2012/8/9 திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com <javascript:>>
>> வேள் என்றால் விருப்பம் என்றும் விருப்பத்திற்குரிய நாட்டம் என்றும்
>> பொருள். அவா என்றாலும் விருப்பம்தான். இரண்டு சொற்களும் இணைந்து மிகு
>> விருப்பத்தைக் குறிக்கின்றன. எனினும் பொதுவாக மிகுதியான நீர்  வேட்க‌ையை
>> வ‌ேணவா என்பது குறிப்பிடும்.
>> நீர் வே ட்கையின் தொடர்ச்சியாக மிகு பசியையும் இச் சொல் குறிக்கும்.
>> 2012/8/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com <javascript:>>
>>> *வேணவா*
>>> இந்தச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கலாம்.
>>> அது என்ன வேணவா?
>>> அவா -- என்றால் புரிகிறது.
>>> வேணவா என்றால் வேண்டப்பட்ட அளவு அவா என்று பொருளோ?
>>> ***

Reply all
Reply to author
Forward
0 new messages