Re: Fw: ஆயுத எழுத்து

150 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 25, 2012, 9:26:43 AM3/25/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com

On Mar 25, 2:12 am, nkantan r <rnkan...@gmail.com> wrote:
> நண்பர்களே!
>
> எதிலும் மதமும் சமயமுமா? இந்த "அரிச்சுவடி" என்ற சொல் முதலில் எப்பொழுது
> யாரால் பயன்படுத்தப்பட்டது?
>
> பழங்காலத்தில் (400, 500 ஆண்டுகளுக்கு முன்னால்) தமிழ் கற்க துவக்கத்தில்
> "அரிச்சுவடி" (சிறிய சுவடி) யும் பின்னர் "நெடுஞ்சுவடியும்" (தமிழ் +
> கிரந்த) இருந்தன. (அரிச்சுவடி = 247 தமிழ் எழுத்துக்கள்);
> (நெடுஞ்சுவடி=355 +2 எழுத்துக்கள்)
>
> rnkantan

’அரி ஓம் நமோத்து சிந்தம்’ என்பது சமணர்கள் அரிச்சுவடி சொல்லிக்
கொடுக்கும்போது
பயிற்றுவித்த முதல் மந்திரம். அதனால் நெடுங்கணக்குக்கு அரிச்சுவடி எனப்
பெயர்.
திண்ணைப் பள்ளிக்கூடங்கள் 20-ஆம் நூற்றாண்டிலும் அரி ஓம் நமோத்து
கற்பித்தார்கள்.
இணையத்திலும் அப்படிக் கற்றோர் உள்ளனர். முனைவர் இராமகி பதிவில்
பாருங்கள்:
http://valavu.blogspot.com/2011/01/2.html
“தமிழில் அரி என்ற சொல் (அரிச் சுவடி = எழுத்துச் சுவடி என்ற கூட்டுச்
சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள்) எழுத்தையே உணர்த்தும். ஒரு காலத்தில்
செயினரின் தொடர்பால் தமிழ்நாட்டின் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் “அரி ஓம்
நமோத்து சிந்தம்” என்று சொல்லித்தான் பள்ளிப் பாடம் தொடங்குவார்கள். [என்
பள்ளிப் பாடமும் அப்படித்தான் தொடங்கியது.]”

சென்னைப் பல்கலைப் பேரகராதி (பக்கம் 2337):
நெடுங்கணக்கு neṭu-ṅ-kaṇakku
, n. < நெடு- மை +. 1. Alphabet; அரிச்சுவடி. (தொல். எழுத். 94, உரை.) 2.
A long account or reckoning; நெடு நாட்கணக்கு. (W.) 3. Bad debt;
வாராக்கடன். (W.)

தொல்காப்பிய எழுத்ததிகாரம் 94-ன் உரையில் நெடுங்கணக்கை அரிச்சுவடி
என்றிருப்பதாய் அறிகிறோம். அந்த உரையை தேடிப் பார்ப்போம்.
இலக்கண, இலக்கிய நூல்களில் உள்ளவற்றில் இது முதலில் இருக்கலாம்.

நா. கணேசன்
--------------------

எம் கண்டன் - மணிகண்டனா? தமிழ் ஆர்வம் உடைய நீங்கள் தமிழில்
கையெழுத்திடலாமே.

N. Ganesan

unread,
Mar 26, 2012, 9:22:51 AM3/26/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com
On Mar 25, 9:33 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அரிஹந்த் - சமஸ்கிருதம் - கந்தத்தை அறுத்தவர்.
> அரஹந்த் - பாகதம்
> அரிகந்தர் - கந்தழி - கந்தத்தை அழித்தவர்
>
> ஓம் = பஞ்ச நமஸ்கார மந்திரம் (http://banukumar_r.blogspot.in/2011/05/blog-post.html)
>
> இரா.பா,
> சென்னை
>
>

நன்றி, பானுகுமார்.

தென்னாட்டில் திராவிடமொழிகளைப் போதிக்க
சமணர்கள் ஆதியில் இலக்கணங்கள் எழுதி,
ஊர்மக்களுக்கு தம் பள்ளிகளில் முயன்றனர்.
அப்போது ‘அரி ஓம் நமோத்து சிந்தம்’ (பாண்டிநாட்டு
வழக்கு, இராமகி ஐயா பதிவு). சித்தம் - சிந்தை. பிற ஊர்களில் சித்தம்,
சித்தாணம் என்றும் இருந்துள்ளது.
‘அரி நமோத்து சிந்தம்’ மணலில் திண்ணைப்பள்ளியில்
எழுதும்போது சொல்வது:
http://www.thoguppukal.in/2012/01/blog-post_8799.html

சமணர்களின் மந்திரத்தில் அரி என்னும் வார்த்தை
அருகரை/அரிகந்தரைக் குறிப்பதாக
உள்ளது. வடசொல் அர்த்தம் பார்ப்போம்:
अरि ari : (page 217)
गदारिसरोजशङ्खैः Līlā.-8 A lord, master. -9 The wind.-1 A pious or
religious
man.-Comp. -कर्षण a. tamer or subduer of enemies.-कुलम् 1 a host of
enemies.-2 an enemy,-केलिः Sport of a foe, sexual enjoyment cf.
अरिकेलिः
शत्रुलीला स्त्रीरत्योश्चापि कीर्तितः Nm.-गूर्त a. Ved. ready for the
destruction of enemies; praised by devoted .

--------------

ஆய்தம் எழுத்தின் பெயர் - தொல்காப்பியத்தில்.

தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பிய முனிவரைச்
சமணர் என்பர் அறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர்.

பாவாணர் போன்றோர்கள் ஆய்தம் எனும் பெயர் ஆய்வது
என்னும் வினைச்சொல்லில் பிறப்பது (verbal noun) என்று
சொல்லியுள்ளனர். ஆனால் எனக்கு ஆய்தம் என்பதன் வேர்ச்சொல்
ஆய்வது தான் என்பதில் பெருத்த ஐயமுண்டு. எழுதியுமுள்ளேன்.

ஆய்வது/ஆய்தல் > ஆய்தம் என்றால், பாய்வது/பாய்தல் > பாய்தம்,
சாய்வது/சாய்தல் > சாய்தம், தேய்வது/தேய்தல் > தேய்தம்,
தோய்வது/தோய்தல் > தோய்தம் என்று பெயர்ச்சொற்கள் இருக்க
வேண்டுமே. ஆனால், காணோம். எனவே, மு. இராகவையங்கார்
100+ ஆண்டுகளுக்கு முன்னர் காட்டிய சொற்பிறப்பை
ஆய்தம் என்னும் எழுத்தின் பெயராகக் கொள்ள வாய்ப்புகள் மிகுதி.

---------------------------------------------
ஆய்தம் தமிழ் வேர் கொண்டதன்று. ஏன்? 2 காரணங்கள்:

(1) ஆய்த எழுத்து மிகப் பிற்காலத்திலேயே கல்வெட்டு, செப்பேடுகளில்
பதிவாகிறது. பல்லவர்களின் காசக்குடிச் செப்பேடு - வெஃகா என்னும்
இடப்பெயர்.
அதன் வடிவம் விஸர்க்கம். இன்று கணினிகளிலும், ஆய்த/ஆயித/ஆயுத
எழுத்தின் பெயர் விஸர்க்கம் தான்.

(2) ஒருமொழியில் ஒரு சொல் பலவிதங்களில் எழுதப்பட்டால்,
அது வேறு மொழியில் இருந்து கடனாகப்பெற்றது என்பதைக்
காட்டும் என்பர். ஆய்தம்/ஆய்தம்/ஆயிதம் எழுத்துக்கு தமிழர்கள்
பயன்படுத்துவது அச்சொல் வேர் தமிழன்று என்று காட்டி நிற்கிறது.

---------------------------------

அப்படியாயின், எந்தச் சொல்லில் இருந்து
ஆய்தம் என்ற எழுத்துப் பெயரைத் தொல்காப்பியம் தருகிறது?
என ஆய்வோம்.

மு. இராகவையங்கார், ஆராய்ச்சித் தொகுதியில் சாமிநாத ஐயர்
என்பவர் கூற்றைத் தந்துள்ளார்.
ஆஶ்ரித = இணைவது, ஒட்டுவது, தஞ்சம் என்பது, ...
என்றெல்லாம் பொருள் இருக்கிறது. இதெல்லாம் விஸர்க்கத்தின்
பண்பு ஆதலால், விஸர்க்கத்தின் ஒரு பெயர் ஆஶ்ரிதமாம்.
ஆய்தம்/ஆயுதம்/ஆயிதம் < ஆஶிதம் < ஆஶ்ரிதம் (வடசொல்)
எனக் கருதலாம்.

ஆய்தம் < ஆஶ்ரிதம் - இச் சொற்பிறப்புக்கு இரண்டு ஒப்புகள் தரமுடியும்:

(1) ஒப்புமையாக ஒரு வார்த்தையை ‘ஆராய்ச்சித் தொகுதி’ தருகிறது:
ஶ்மஶ்ரு > மசிரு (கன்னடம்) என்றானது.
தமிழில், ஶ்மசிரு > மயிர் என்றாகிறது. முதன்முதலில்
சமணரான திருவள்ளுவர் தமிழில் பயன்படுத்துகிறார்
என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

(2) தொல்காப்பியம் சமண வழியில் ஆய்தம் < ஆசிதம் (< ஆஶ்ரிதம்)
என்றாக்கியதற்கு சமணர்களின் மிகப்புனிதமான பஞ்சமந்திரத்திலேயே
சான்று இருக்கிறது. ஆசிரியர் (< ஆசார்ய) என்பது பிற்கால வழக்கு,
ஆனால் பண்டை வழக்கு ஆயிரியர் என்பதற்கு சமண மந்திரங்கள்
சாட்சி.

பஞ்சமந்திரத்தில் 3-ஆம் வாக்கியம்:
”நமோ *ஆயிரியாணம்* (ஆச்சாரியரை வணங்குகிறேன்)”

அரஹந்தா அசரீரா *ஆயிரியா* தஹ உவத்தாயா முனினோ|
படமம் கரணம் பண்ணோ ஓம்கார பஞ்ச பரமேஷ்டி ||
http://banukumar_r.blogspot.in/2011/05/blog-post.html

ஆசிரியர் என்னும் சொல்லை ஆயிரியர் என்னும் சமணர்
வழக்குப் போல, ஆசிதம் என்னும் சொல் ஆயிதம்/ஆயுதம்
என்றாகி, தொல்காப்பியத்தில் ஆய்தம் என்றாகி உள்ளது
எனக் கொள்ளலாம். அரி ஓம் நமோத்து சிந்தம், அரி நமோத்து சித்தாணம்
என்று முதலில் குழந்தைகளுக்குச் சொல்லி எழுத்துகளை
மணலில் விளம்பச் செய்த சமண ஆயிரியர்கள் (= ஆசிரியர்கள்)
ஆய்தம் என்று பிராகிருத வாயிலாக தமிழுக்கு
விசர்க்க எழுத்தைத் தந்துள்ளனர், அது தொல்காப்பியத்தில்
காண முடிகிறது. நெடுங்கணக்கை அரிச்சுவடி என்பது
“அரி நமோத்து சித்தாணம்” என்னும் அருக வழிபாட்டின்
விளைவு என்பது வெள்ளிடைமலை [1]

நா. கணேசன்

[1] //அரி(சி)யில் எழுதத் தொடங்கும் எழுத்துவகை என்பதால்
அரிச்சுவடி என்ற பெயர் ஏற்பட்டது.] // (http://valavu.blogspot.com)
முனைவர் இராமகி அரிச்சுவடி அரிசியில் எழுதுவதால்
எனக் கருதியுள்ளார்கள் என்பது தெரிகிறது. ஆனால்
எல்லோரும் அரிசியில் எழுதுவதில்லை, மணலில்
எழுதித்தான் பெரும்பாலோர் பள்ளியைத் தொடங்கினர்.
அரி நமோத்து சித்தம் - சமண வழிபாட்டு தொடர்.

N. Ganesan

unread,
Mar 29, 2012, 8:53:49 AM3/29/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com
On Mar 26, 9:44 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> இதோ, சமணமும் தமிழும் பொத்தகத்திலிருந்து...!
>

நன்றி, பானு. பள்ளி ஆசிரியராய் விளங்கிய மயிலை சீனி வேங்கடசாமி நாயகர்
தமிழில் சமணம், பௌத்தம் பற்றிய ஆழ்ந்த ஆய்வுகளைத் தொடங்கிவைத்த
முனைவர் ஆவார். பின்னர் கோவைகிழார் போன்றோர் ஈடுபட்டனர்.
நிற்க,

அரிச்சுவடி - சமணர் வழக்கு என்பது பற்றி புலவர் செ. இராசு ஐயா, ஈரோடு
கருத்து. புத்ச்சேரியில் அரிகமேடு என்பது சமணர் வாழ்ந்த பகுதி,
யவனர்களுடனும், பிற இந்தியாவின் பகுதிகளுடனும் தொடர்புடையது.
அரிகன் = அருக தேவர். இதேபோல், கோவையில், அரிமேடு
என்ற பகுதியை ஆராயவேண்டும் என்றார். முசிரி என்ற கேரள
துறைமுகப் பட்டினத்துடன் பாலைக்காட்டுக் கணவாய் வழியாய்
உள்ள உறவுகள் வெளிப்படும். அரிமேடு, அரிகமேடு போல
சமணர் வாழ்ந்த பகுதியாகலாம் என்றார். அதன் அருகே
சிரமணம்பட்டி உள்ளது, இன்று சரவணம்பட்டி ஆகிவிட்டது பாருங்கள் என்றார்.

கடாரத் தமிழறிஞர் ஜேபி அவர்கள் சமணர்களின் நமோகார மந்திரம்
அரி, சித்தரி, நானா, மோனா, ... என தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டதை
விளக்கியுள்ளார்:
http://groups.yahoo.com/group/agathiyar/message/44867
http://www.treasurehouseofagathiyar.net/07700/7794.htm

கணக்கதிகாரம் பௌத்தர், சமணர்களால் திண்ணைப்பள்ளிகளில்
கணக்கு கற்பிக்க ஏற்பட்ட நூல். இது சமணர்களின் வடமொழி
கணித நூல்களில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழில் அரிய புஸ்தகம். விஞ்ஞானத்தை சிரமண சமயத்தவர்
தமிழருக்கு திண்ணைப் பல்ளிகளில் போதிக்க மேற்கொண்ட முயற்சி.
த்ராவிட பாஷைகளின் அரிய தொல்லோசை ஆய்தம்,
சார்பு என்பதற்கு ப்ராகிருதச் சொல்லான ஆயிர்தம் என்பதை ஆயிதம்/ஆய்தம்
என்றாக்கியுள்ளார் தொல்காப்பியர் (ஒப்பு: சமண நமோகார
மந்திரத்தில் ஆயிரியர் < ஆசிரியர்).

கப்பலோட்டிய தமிழர் வ உ. சி தமிழில் கிரந்தம் தவிர்க்கவேண்டும் என்ற
கருத்துடையவர். அதை மறுத்து பிள்ளையவர்கள் பெயரைக் குறிப்பிடாமல்
பாரதியார் எழுதினார். அதில் மகாகவி ‘தொல்காப்பியர் கட்டின அரிச்சுவடி’
என்று குறிப்பிடுகிறார். தமிழில் டையாக்ரிடிகல் மார்க்ஸ் வேண்டும் என்று
முதலில் எழுதியவர் பாரதியாரே.

ஊருக்குப் பத்து பிள்ளைகளுக்கு அரிச்சுவடி சொல்லித்தர திண்ணைப்
பள்ளிக்கூடங்கள் இருந்தன. இவைஎல்லாம் தயாரித்த மாணவர் தொகை
சொற்பமே. சேசாத்திரிக்கு லிட்டரஸி பற்றி திண்ணைப் பள்ளி நிலைமை
பற்றி எழுதணும். இதை ஒரு தொழிலாக செய்வதுபற்றி கிறித்துவ
மிஷநரிகளும், காலனிய அதிகாரிகளும் எழுதியுள்ளனர்.

உவேசா அவர்களின் பாட்டனார் இப்படி ஒரு திண்ணைப்பள்ளி
ஆரம்பித்தவர் என்று உவேசா, என் சரித்திரம் கூறுகிறது:

In the autobiography if U. V. Saaminathaiyar, a discoverer of
Classical Tamil texts, he talks of his
grandfather, and his starting of a tiNNaip paLLikkuuTam 'pial school'.
UVS says he learnt
ariccuvaTi "alphabet" from his grandfather. In these paragraphs, there
are many Sanskrit
words, but only ariccuvaTi (not Hari-cuvaTi).

” "என் பாட்டனார் காலத்தில் எங்கள் குடும்பத்தில் கடன் ஏற்பட்டமையால்
அவர் தம்முடைய நிலத்தைப் போக்கியம் வைத்துப் பணம் வாங்கிப் பழைய கடனை
அடைத்தார். நிலத்தை வைத்துக் கொண்டு பாதுகாத்து அதில் வரும் வருவாயினால்
சுகமாக வாழ்ந்து வரும் நிலையிலிருந்த அவருக்கு அந்நிலத்தைப் போக்கியம்
வைப்பதால் ஜீவனத்துக்குக் கஷ்டமுண்டாகுமென்று தெரியும். ஆனாலும் கடனை
வைத்துக் கொண்டு உண்ணும் உணவு அவர் உடம்பில் ஒட்டவில்லை. ‘கடனில்லாச்
சோறு கால் வயிறு போதும்’ என்பது பழமொழி. ‘ஏதாவது வேலை செய்து
சம்பாதிக்கலாம்; கடன் நிர்ப்பந்தம் மட்டும் கூடாது’ என்று எண்ணித்
துணிந்து போக்கியத்துக்கு வைத்து விட்டார்.

அவருக்குத் தமிழிலும் ஸம்ஸ்கிருதத்திலும், கணக்கிலும் நல்ல பழக்கம்
இருந்து வந்தது. ஆகையால், ‘ஜீவனத்துக்கு என்ன செய்வோம்!’ என்று ஏங்காமல்
ஒரு பள்ளிக்கூடம் வைத்துப் பல பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க
ஆரம்பித்தார். அவரிடம் பலர் படித்தார்கள். அந்தப் பிள்ளைகளின் மூலமாகக்
கிடைக்கும் வரும்படியைக் கொண்டு அவர் செட்டாகக் குடித்தனம் செய்து
வந்தார். அவருக்கு அம்மணியம்மாளென்ற ஒரு பெண்ணும், வேங்கட சுப்பையர்,
ஸ்ரீ நிவாஸையர் என்ற இரண்டு பிள்ளைகளும் முறையே பிறந்தனர். வேங்கட
சுப்பையரே என்னுடைய தந்தையார்.

என் பாட்டனாரை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. எனக்கு அரிச்சுவடி
சொல்லிக் கொடுத்தவர் அவரே. எவ்வளவோ தெய்வ ஸ்தோத்திரங்களை வாய்ப் பாடமாகச்
சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவை இப்போது மறந்து போய்விட்டன. ஆனால் அவர்
கொடுத்த பலமான அடிகளை மாத்திரம் நான் மறக்க வில்லை." “
(உவேசா, என் சரித்திரம்).

பிற பின்,
நா. கணேசன்

> சித்தர் வணக்கம்
>
>  (சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி - இந்துமதத்தில்
>
> சமணக் கொள்கைகள் – பக்கம் 97, 98)
>
>  “பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குக் கற்பிக்கத்
>
> தொடங்குபோது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது மரபு. “ஹரி
>
> நமோத்து சிந்தம்” என்று கூறிய பின் ஆசிரியர் பிள்ளைகளுக்கு
>
> எழுத்துக் கற்பிப்பர். இக்காலத்துப் பாடசாலைகளில் இந்த வழக்கம்
>
> கைவிடப்பட்டது. ஆனால், பண்டைக் காலத்தில் இந்த வழக்கம்
>
> இருந்து வந்தது. இதில் சிந்தம் என்பது சித்தம் என்பதன் திரிபு.
>
> சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சபரமேஷ்டிகளில் ஒருவர்.
>
> எனவே, சமணர் சித்தர் வணக்கம் செய்து வந்தனர். இந்த வழக்கத்தைத்தான்
>
> மற்றவர்களும் கைக்கொண்டனர். தமிழ் நாட்டிலே சித்தர் வணக்கம்
>
> செய்த பிறகு சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கத் தொடங்கியது போலவே,
>
> “சித்தம் நம” என்று கன்னட நாட்டினரும், “ஓம் நமஸ்ஸிவாய சித்தம் நம”
>
> என்று தெலுங்கு நாட்டினரும் இவ்வாறே சித்த வணக்கம் செய்து
>
> பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பித்து வருகின்றனர்.
>
> இவ்விடத்தில், பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர்
>
> வழங்குவது நினைவுக் கூறத்தக்கது. பள்ளி என்பதற்குச் சமண முனிவர்
>
> வாழும் பள்ளி என்பது பொருள். சமண முனிவர், நாட்டுச் சிறுவர்களைத்
>
> தம் பள்ளியில் உள்ள கூடத்தில் இருக்கச் செய்து அவர்களுக்கு எழுத்துக்களையும்
>
> நூல்களையும் படிப்பித்து வந்தனர். இதனால் பாடசாலைகளுக்கும் பள்ளிக்கூடம்
>
> என்னும் பெயர் ஏற்பட்டது. சமணர் தம் பள்ளிக் கூடங்களில், சிறுவர்களுக்கு
>
> எழுத்துக் கற்பிக்கும்போது சித்தர் வணக்கம் கூறிய பிறகு கற்பிக்கும்
> வழக்கத்தைக்
>
> கொண்டிருந்தனர். இந்த வழக்கந்தான், இக்காலத்திலும் மற்றவர்களாலும்
>
> வழக்கத்தில் கைக்கொள்ளப்பட்டது. எனவே, பள்ளிக் கூடம் என்னும் பெயரும்
>
> சித்த வணக்க முறையும் சமணரிடமிருந்து பெற்றுக் கொண்டவை என்பது
>
> வெளிப்படை.”
>
> இரா.பானுகுமார்,
> சென்னை
>
>

Banukumar Rajendran

unread,
Mar 29, 2012, 10:43:58 AM3/29/12
to tiruva...@googlegroups.com
On Thu, Mar 29, 2012 at 6:23 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Mar 26, 9:44 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> இதோ, சமணமும் தமிழும் பொத்தகத்திலிருந்து...!
>

நன்றி, பானு. பள்ளி ஆசிரியராய் விளங்கிய மயிலை சீனி வேங்கடசாமி நாயகர்
தமிழில் சமணம், பௌத்தம் பற்றிய ஆழ்ந்த ஆய்வுகளைத் தொடங்கிவைத்த
முனைவர் ஆவார். பின்னர் கோவைகிழார் போன்றோர் ஈடுபட்டனர்.
நிற்க,

அரிச்சுவடி - சமணர் வழக்கு என்பது பற்றி புலவர் செ. இராசு ஐயா, ஈரோடு
கருத்து. புத்ச்சேரியில் அரிகமேடு என்பது சமணர் வாழ்ந்த பகுதி,
யவனர்களுடனும், பிற இந்தியாவின் பகுதிகளுடனும் தொடர்புடையது.
அரிகன் = அருக தேவர். இதேபோல், கோவையில், அரிமேடு
என்ற பகுதியை ஆராயவேண்டும் என்றார். முசிரி என்ற கேரள
துறைமுகப் பட்டினத்துடன் பாலைக்காட்டுக் கணவாய் வழியாய்
உள்ள உறவுகள் வெளிப்படும். அரிமேடு, அரிகமேடு போல
சமணர் வாழ்ந்த பகுதியாகலாம் என்றார். அதன் அருகே
சிரமணம்பட்டி உள்ளது, இன்று சரவணம்பட்டி ஆகிவிட்டது பாருங்கள் என்றார்.

கடாரத் தமிழறிஞர் ஜேபி அவர்கள் சமணர்களின் நமோகார மந்திரம்
அரி, சித்தரி, நானா, மோனா, ... என தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டதை
விளக்கியுள்ளார்:
http://groups.yahoo.com/group/agathiyar/message/44867
http://www.treasurehouseofagathiyar.net/07700/7794.htm

கணக்கதிகாரம் பௌத்தர், சமணர்களால் திண்ணைப்பள்ளிகளில்
கணக்கு கற்பிக்க ஏற்பட்ட நூல்.

திண்ணை சிறார்களுக்கு சிரமணர்களின் அரிச்சுவடி!

“முக்குடை யருகன் முதல்வனைப் போற்றிவாழ்
அக்கண லக்கம் அறிந்திடலாமே”  - இலக்கம் - கடவுள் வாழ்த்து

“வல்மதி முக்குடை யான்மல ரடிதொழ
நெல்லணி லக்கமென் னெஞ்சினில் வருமே” - நெல்லிலக்கம் - கடவுள் வாழ்த்து

“முத்தணிந்த முக்குடைக்கீழ் மூவாமுதல்வனே
அத்தனேயாதி யறவரசே சித்தனே
எண்ணூலி லாறைந்து வாயுமெனக் கருள்வாய்
இந்நூலை யானுணர்க வென்று” - எண்சுவடி - கடவுள் வாழ்த்து

“பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி பாதம்போற்றி
எண்ணினற் குழிகள்மாற எழில்பெருங் குழிக்குக்காப்பு
நண்ணவே கணக்காய்ந்த நானிலத்துள்ள வெல்லாம்
விண்ணவள் கமலமாது வாணிநாமகள் தாள்தானே” - பெருகுழி - கடவுள் வாழ்த்து

“அருகனை அமலனை அசலனை அடிதொழச்
சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” - சிறுகுழி - கடவுள் வாழ்த்து

ஆத்திச்சூடி (அகத்தில் சூடி) யாவரும் அறிந்ததே!


மற்ற நூல்கள் கொள்வார் இல்லாமையால் மறைந்தொழிந்தது!
--
You received this message because you are subscribed to the Google Groups "திருவள்ளுவர் சங்கத்தமிழ்" group.
To post to this group, send email to tiruva...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tiruvalluvar...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tiruvalluvar?hl=en.


Banukumar Rajendran

unread,
Mar 30, 2012, 12:12:04 AM3/30/12
to tiruva...@googlegroups.com

ஒளவையாரின் மற்றொரு நூலை மறந்துவிட்டேன்.

 'அஞ்சு வயதில் ஆதியை ஓது ஆதியை ஓத அறிவுண்டாமே' - கல்வி ஒழுக்கம் - கடவுள் வாழ்த்து!

N. Ganesan

unread,
Mar 30, 2012, 5:52:29 AM3/30/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com
On Mar 29, 10:38 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:

> >> கணக்கதிகாரம் பௌத்தர், சமணர்களால் திண்ணைப்பள்ளிகளில்
> >> கணக்கு கற்பிக்க ஏற்பட்ட நூல்.
>
> > திண்ணை சிறார்களுக்கு சிரமணர்களின் அரிச்சுவடி!
>
> > “முக்குடை யருகன் முதல்வனைப் போற்றிவாழ்
> > அக்கண லக்கம் அறிந்திடலாமே”  - *இலக்கம்* - கடவுள் வாழ்த்து

>
> > “வல்மதி முக்குடை யான்மல ரடிதொழ
> > நெல்லணி லக்கமென் னெஞ்சினில் வருமே” - *நெல்லிலக்கம்* - கடவுள் வாழ்த்து

>
> > “முத்தணிந்த முக்குடைக்கீழ் மூவாமுதல்வனே
> > அத்தனேயாதி யறவரசே சித்தனே
> > எண்ணூலி லாறைந்து வாயுமெனக் கருள்வாய்
> > இந்நூலை யானுணர்க வென்று” - *எண்சுவடி - *கடவுள் வாழ்த்து

>
> > “பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி பாதம்போற்றி
> > எண்ணினற் குழிகள்மாற எழில்பெருங் குழிக்குக்காப்பு
> > நண்ணவே கணக்காய்ந்த நானிலத்துள்ள வெல்லாம்
> > விண்ணவள் கமலமாது வாணிநாமகள் தாள்தானே” - *பெருகுழி* - கடவுள் வாழ்த்து

>
> > “அருகனை அமலனை அசலனை அடிதொழச்
> > சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” - *சிறுகுழி* - கடவுள் வாழ்த்து

>
> > ஆத்திச்சூடி (அகத்தில் சூடி) யாவரும் அறிந்ததே!
>

நன்றி. ஆத்திசூடி.என்பது யார் என்பது விளக்குவோர் குறைவு.

”ஆத்தி சூடி:அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” - ஔவையார்

ஆத்தி மரம் பாரத வரலாற்றில் மிக முக்கியமானது. லோகாயதத்தை வர்ணிக்கும்
போது மணிமேகலையில் வருவது. காராணை விழுப்பரையன் வளமடலில்
செய்னக்கொண்டார் மணிமேகலைக் கருத்தைப் பயன்படுத்துகிறார்.
மூவேந்தரில் சோழர்களின் குலச்சின்னம் ஆத்தி மரம்தான்.

ஆத்தி லோகம் என்பது மனிதர்கள் வாழும் ஜம்புத்வீபத்தை விடப்
பெரிய உலகம் என்கின்றன ஜைன நூல்கள். தாதகி (= ஆத்தி) தேடிப் பாருங்கள்:
http://www.indianetzone.com/49/madhyaloka.htm

ஆத்தி சூடி அமர்ந்த தேவன் = பார்சுவநாத தீர்த்தங்கரர். மகாவீரருக்கு
முந்தையவர். மகாவீரரும், இவரையும் தான் தீர்த்தங்கரர்களில்
சரித்திரத்தில்
வாழ்ந்த புருஷர்கள் என்கின்றனர்.
http://en.wikipedia.org/wiki/Parshvanath
http://en.wikipedia.org/wiki/Tirthankara
இஃதுணராது சிவன், விநாயகன் என்றெல்லாம் சொல்வது தற்கால வழக்கு.

ஔவை - மூத்தவள். ஆத்திசூடி, கல்வியொழுக்கம் தந்தவர்கள் சமணர்களே.

நா. கணேசன்

> ஒளவையாரின் மற்றொரு நூலை மறந்துவிட்டேன்.

N. Ganesan

unread,
Apr 21, 2012, 6:54:10 AM4/21/12
to திருவள்ளுவர் சங்கத்தமிழ், vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mintamil, Santhavasantham, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, yavaru...@googlegroups.com
கேட்டு மகிழ்க, குழைந்தைகளுக்கும் தருக:

ஆத்திசூடி:
http://www.youtube.com/watch?v=mCkM6pOJBGE&

A classical Indian poetry by the legendary Ovvaiyaar is brought to
life on modern day with the dynamic touch of world music. Enjoy this
original composition that will lift your spirits up. This song is
available now on iTunes, Amazon & cdbaby.

Produced by: SHISHA PRODUCTION
Composed & Arranged by: Shamroz Khan, Shivaranjini, Aleem & David C.
Raja
Vocals Arranged & Sung by: Shamroz Khan, Shivaranjini, Aleem & David
C. Raja
Flute & Additional Vocals by: J.B. Manimaran

Video Features:
Down Syndrome Association Singapore
Mr Sankara Raman
Mahesh & Naresh
Sharu & Vasanth
Meridian Primary School Tamil Department

நா. கணேசன்


On Mar 30, 2:52 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Mar 29, 10:38 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
> wrote:
>
>
>
>
>
>
>
>
>
> > >> கணக்கதிகாரம் பௌத்தர், சமணர்களால் திண்ணைப்பள்ளிகளில்
> > >> கணக்கு கற்பிக்க ஏற்பட்ட நூல்.
>
> > > திண்ணை சிறார்களுக்கு சிரமணர்களின் அரிச்சுவடி!
>
> > > “முக்குடை யருகன் முதல்வனைப் போற்றிவாழ்
> > > அக்கண லக்கம் அறிந்திடலாமே”  - *இலக்கம்* - கடவுள் வாழ்த்து
>
> > > “வல்மதி முக்குடை யான்மல ரடிதொழ
> > > நெல்லணி லக்கமென் னெஞ்சினில் வருமே” - *நெல்லிலக்கம்* - கடவுள் வாழ்த்து
>
> > > “முத்தணிந்த முக்குடைக்கீழ் மூவாமுதல்வனே
> > > அத்தனேயாதி யறவரசே சித்தனே
> > > எண்ணூலி லாறைந்து வாயுமெனக் கருள்வாய்
> > > இந்நூலை யானுணர்க வென்று” - *எண்சுவடி - *கடவுள் வாழ்த்து
>
> > > “பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி பாதம்போற்றி
> > > எண்ணினற் குழிகள்மாற எழில்பெருங் குழிக்குக்காப்பு
> > > நண்ணவே கணக்காய்ந்த நானிலத்துள்ள வெல்லாம்
> > > விண்ணவள் கமலமாது வாணிநாமகள் தாள்தானே” - *பெருகுழி* - கடவுள் வாழ்த்து
>
> > > “அருகனை அமலனை அசலனை அடிதொழச்
> > > சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” - *சிறுகுழி* - கடவுள் வாழ்த்து
>
> > > ஆத்திச்சூடி (அகத்தில் சூடி) யாவரும் அறிந்ததே!
>

> நன்றி.ஆத்திசூடி.என்பது யார் என்பது விளக்குவோர் குறைவு.


>
> ”ஆத்தி சூடி:அமர்ந்த தேவனை
> ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” - ஔவையார்
>
> ஆத்தி மரம் பாரத வரலாற்றில் மிக முக்கியமானது. லோகாயதத்தை வர்ணிக்கும்
> போது மணிமேகலையில் வருவது. காராணை விழுப்பரையன் வளமடலில்
> செய்னக்கொண்டார் மணிமேகலைக் கருத்தைப் பயன்படுத்துகிறார்.
> மூவேந்தரில் சோழர்களின் குலச்சின்னம் ஆத்தி மரம்தான்.
>
> ஆத்தி லோகம் என்பது மனிதர்கள் வாழும் ஜம்புத்வீபத்தை விடப்
> பெரிய உலகம் என்கின்றன ஜைன நூல்கள். தாதகி (= ஆத்தி) தேடிப் பாருங்கள்:http://www.indianetzone.com/49/madhyaloka.htm
>
> ஆத்தி சூடி அமர்ந்த தேவன் = பார்சுவநாத தீர்த்தங்கரர். மகாவீரருக்கு
> முந்தையவர். மகாவீரரும், இவரையும் தான் தீர்த்தங்கரர்களில்
> சரித்திரத்தில்

> வாழ்ந்த புருஷர்கள் என்கின்றனர்.http://en.wikipedia.org/wiki/Parshvanathhttp://en.wikipedia.org/wiki/Tirthankara


> இஃதுணராது சிவன், விநாயகன் என்றெல்லாம் சொல்வது தற்கால வழக்கு.
>

> ஔவை - மூத்தவள்.ஆத்திசூடி, கல்வியொழுக்கம் தந்தவர்கள் சமணர்களே.

Reply all
Reply to author
Forward
0 new messages