2 ஆகஸ்ட் 2010
மன்னிக்கவும். என்னுடைய மின்னஞ்சல் அனுப்பு மென்பொருளில் சிறிய தவறு ஏற்பட்டதால் மின்னஞ்சல் நிறைய வாசகர்களை சென்றடையவில்லை. ஆகையால் இதே தலைப்பினை மீண்டும் அனுப்புகிறேன்.
ஒரு பிறவி பலமுறை வாழ்தல்
கண்ணதாசனின் பாடல் வரிகளில் சில….
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் – நிலை
உயரும் போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்!
ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனிதவடிவில் தெய்வம்!!
மானிடப் பிறவி: அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனின் கூண், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது. இப்படியொரு மானிடப் பிறவியைய் பெறுவதற்கு என்ன தவம் செய்திடல் வேண்டும். இந்த அரியதொரு மானிட பிறவியில் பிறந்து பிறவிப் பயனை அடைவதற்குள், தினம் தினம் நமது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள், வேதனைகள், சோதனைகள். இறுதியல் சாதனைகள்! ஒரு பிறவியைய் எடுத்து அதில் ஒரு வாழ்க்கையைய் வாழ்வதில் நாம் இவ்வளவு சோதனைகளை சாதனைகாளக மாற்றுகிறோம். இப்படிப்பட்டதொரு வாழ்க்ககையைய் வாழ்கின்ற நம் மத்தியல் ஒரு பிறவியல் பலமுறை வாழ்ந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் அனைவரும் ‘மனித வடிவில் தெய்வமானவர்கள்’ என்றே கூறலாம்!!
முதல் வாழ்க்கை – குழந்தைப் பருவ வளர்ச்சி, நல்ல கல்வி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வான் இயல் பேராசிரியர் வேலை. முதல் வாழ்க்கை நாற்பத்தெட்டு ஆண்டுகள் நீடித்தது. பிறகு புதிய மாறுபட்ட வாழ்க்கை வாழ்வது என தீர்மானித்தார். வானிவியல் நிபுணராக இருந்து தூரத்திலிருந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, வான் உலகத்தையே பூமிக்குக் கொண்டுவந்து அழகான தேவாலயங்களை நிர்மாணிப்பது என முடிவெடுத்தார்.
இரண்டாவது வாழ்க்கை – அடுத்த நாற்பத்தெட்டு ஆண்டுகளில், ஐம்பத்து மூன்று தேவாலயங்களை நிர்மாணிப்பதில் செலவிட்டார். அந்த தேவாலயங்கள் அவருடைய பெருமையின் நினைவுச் சின்னங்களாக கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் போல் “நான் நிரந்தமானவன் அழிவதில்லை! எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!” இன்றும் நிலைத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று தான் லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல். அந்த மிகப்பெரிய தேவாலயம் இன்றைக்கும் அவருடைய புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
பிறகு மதத்துறையில் ஒரு புதிய வாழ்க்கையினை தேடினார். மத சம்பந்தப்பட்ட தத்துவங்களை பயின்று டாக்டர் பட்டம் பெற்றார். மத போதகராகி இரண்டாவது புதிய வாழ்க்கையினை தொடங்கினார். பிறகு, சங்கீதத்தை போதித்தார். அதைப் பயின்றார். சங்கீதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். உலகப் புகழ் பெற்ற ‘சங்கீத மேதை’ என்கிற சிறப்புக்கும் உரியவரானார். சங்கீதத் துறையிலும் சிறப்பினைப் பெற்ற இவர் தனது மூன்றாவது வாழ்க்கையுடன் நிறுத்தவில்லை.
ஆப்பிரிக்க காடுகளில் வாழும் நாகரிகமற்ற மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். மருத்துவத்துறை பற்றியும் அறுவை சிகிச்சை பற்றியும் பயிலலானார். நான்காவது முறையாக, மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். சங்கீத மேதை என்கிற புகழை உதறி எறிந்து விட்டு நான்காவது வாழ்க்கையினைத் தொடங்கினார். ஆப்பிரிக்காவில் உள்ள லம்போர்னியாவில் உள்ள காடுகளில் நான்காவது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. மலைப்பாம்புகள், கொரிலாக்கள், முதலைகள், காட்டுமிராண்டிகள் வசிக்கின்ற ராட்சஸ காடுகளை அழித்து அங்கு வசிக்கின்ற மக்களுக்கு மருத்துவவசதி செய்ய மருத்துவமனை ஒன்றையும் கட்டினார். தனது நான்காவது வாழ்க்கையினை அந்த காட்டிலேயே அமைத்துக் கொண்டு தெய்வீக மயமானார்.
“நிகழ்காலத்திலேயே சிக்கித் தடுமாறுகிறீர்கள் என்று பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது ஒரு அறிவுப் பூர்வமான வாசகம்”. பலரும் ஒரே ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். அதையும் வெற்றியாக்கிக் கொள்வதில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.
“வாழ்க்கை ஒரு சுகமான அனுபவமே!
வாழக் கற்றுக் கொள்வோம்.
நமது இப்போதைய வாழ்க்கையிலேயே சிக்கித் தடுமாறாமல் இருப்பதற்கான
வாழ்க்கையைய் வாழக் கற்றுக் கொள்வோம்.”!!
குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையைய் பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananth...@drcet.org.
அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு,
கொல்லி மலை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்
கல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எமது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - www.drcet.org
எம்மைப் பற்றி மற்றும் எமது முந்தைய தொகுப்புகளை பற்றி அறிய - http://ceoblog.kapsystem.com | http://anudhinam.blogspot.com | www.kapsystem.com