ஹம்மிங் என்பதற்குத் தமிழில் வார்த்தை என்ன?
இராமகி ஐயாவோ, சங்கீதம் தெரிந்தவர்களோ நண்பர்களுடன்
பங்கேற்றால் நல்ல சொல் கிடைக்கும்.
நன்றி!
நா. கணேசன்
In India, laptop internet for everyone's ownership
is impossible. Tamil and other native Indic scripts
will reach masses only via microblog "twits" thru
mobile devices. Govt.-provided kiosks for public net
access can help to read the bit.ly links sent via
cell phones. More in Tamil:
http://bit.ly/tamil_microblogs
பூஞ்சிட்டு = சிறுகுருவி, தேன்சிட்டு = அமெரிக்காவின் சிறப்புகளில்
ஒன்றாகிய ’ஹம்மிங்’ சிட்டுப்பறவைகள். இந்த ‘ஹம்மிங்’ இசை தேன்சிட்டின்
சிறகுகள் வேகமாகக் காற்றில் அதிர்வதனால் ஏற்படும் இசை. சிட்டு = சிறு
பறவை. சிட்டுக்குருவி, ...
மூக்கே நீ முரலாய்; முதுகாடுறை முக்கணனை - வாக்கே
நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்!!
- அப்பர் பெருமானின் திருவங்கமாலை
humming bird என்பதை முரல்சிட்டு எனலாம்.
நான் ஓசனிச்சிட்டு என்று பெயரிட்டேன்.
பார்க்கவும்:
http://tinyurl.com/osani-chittu
அன்புடன்
செல்வா
On Jun 27, 11:35 am, Elangovan N <nelan...@gmail.com> wrote:
> மூக்கே நீ முரலாய்; முதுகாடுறை முக்கணனை - வாக்கே
> நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்!!
>
> - அப்பர் பெருமானின் திருவங்கமாலை
>
> 2009/6/27 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > பூஞ்சிட்டு = சிறுகுருவி, தேன்சிட்டு = அமெரிக்காவின் சிறப்புகளில்
> > ஒன்றாகிய ’ஹம்மிங்’ சிட்டுப்பறவைகள். இந்த ‘ஹம்மிங்’ இசை தேன்சிட்டின்
> > சிறகுகள் வேகமாகக் காற்றில் அதிர்வதனால் ஏற்படும் இசை. சிட்டு = சிறு
> > பறவை. சிட்டுக்குருவி, ...
>
> > ஹம்மிங் என்பதற்குத் தமிழில் வார்த்தை என்ன?
> > இராமகி ஐயாவோ, சங்கீதம் தெரிந்தவர்களோ நண்பர்களுடன்
> > பங்கேற்றால் நல்ல சொல் கிடைக்கும்.
>
> > நன்றி!
> > நா. கணேசன்
>
> > In India, laptop internet for everyone's ownership
> > is impossible. Tamil and other native Indic scripts
> > will reach masses only via microblog "twits" thru
> > mobile devices. Govt.-provided kiosks for public net
> > access can help to read the bit.ly links sent via
> > cell phones. More in Tamil:
> >http://bit.ly/tamil_microblogs- Hide quoted text -
>
> - Show quoted text -
Hummingbirds சிறிய உருவத்தினவாகையால் தமிழ் முறைப்படி சிட்டு என்று பொதுவாய்
அழைப்பதிற் தவறில்லை. நம்மூர்த் தேன்சிட்டுக்களைப் (Nectarinia) போல இவையும்
தேன் குடிப்பதில் பெரிதும் ஆழ்வதால், இன்னும் சற்று விதந்து தேன்சிட்டு என்றோ,
[அன்றிக் குடும்ப வேறுபாட்டைக் காட்ட வேண்டுமானால் தேன்சிட்டிற்கு மாறாய்
பூஞ்சிட்டு என்றோ], சொல்லலாம். இதற்கு மேலும் விதந்து சொல்ல, நான்
விலங்கியலாளன் இல்லை. [ஓரளவு புதலியற் பெயர்களை ஆர்வம் கொண்டு பார்ப்பது போல்,
விலங்கியற் பெயர்களை நான் பார்த்தவன் இல்லை.]
தேன்சிட்டுக்களில் நான்கு வகைகளை [ஊதாப்பிட்டத் தேன்சிட்டு Purple - rumped
Sunbird, Nectarinia Zeylonica, சின்னத் தேன்சிட்டு Small sunbird, Nectarinia
minima, ஊதாத் தேன்சிட்டு Puple sunbird, லோடென் தேன்சிட்டு Loten's sunbird,
Nectarinia Lotenia] "தமிழ்நாட்டுப் பறவைகள்” என்ற பொத்தகத்தில் [மெய்யப்பன்
தமிழாய்வகம், 2002] முனைவர் க.ரத்னம் தெரிவிக்கிறார்.
இந்தப் பொத்தகம் நம் போன்றோர் வாங்கிப் போற்ற வேண்டிய பொத்தகம். இது போன்றவை
தமிழிற் பெருக வேண்டும். நம் அகரமுதலிகளுக்குள், கலைக்களஞ்சியங்களுக்குள்,
இந்தச் செய்திகள் இடம் பெறவேண்டும். அதையெல்லாம் செய்ய முன்வராமல், ”தமிழில்
அது முடியாது, இது முடியாது” என்று ஒப்பாரி மட்டுமே நாம் வைத்துக்
கொண்டிருக்கிறோம். தமிங்கிலம் வளர்ந்து கொண்டே போகிறது. ஒப்பாரியை நிறுத்தி
உருப்படியான வேலைக்கு வரலாம். நம்மூர் விலங்கினங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு
அதைத் தமிழிலும் இற்றைக் கண்ணோட்டத்தில் சொல்ல வல்ல விலங்கியலாளர்கள் இனிமேல்
முன்வர வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒருசிலரே இருக்கிறார்கள். இந்தத்
துறைகளில் தமிழர் மிகவும் பின் தங்கியிருக்கிறோம்.
இன்னொரு வருத்தம். என்னையும் சேர்த்தே சொல்லுகிறேன். படித்த தமிழர்களிற் பலரும்
நம்மூர் இயற்கையை விட்டு வெகுவாய் விலகி விட்டோம். அது ஒரு பெரிய இழப்பு என்று
கூடத் தெரியாதும் இருக்கிறோம். மேல்நாட்டு பைன், செடார் மரங்களைப்
பற்றியெல்லாம் விழுந்தடித்துப் படிக்கிறோம். அந்த ஊர் விலங்கினங்களைப் பற்றித்
தெரிந்து கொள்ள முற்படுகிறோம். ஆனால் நம்மூர் நிலத்திணைகளை அடையாளம் காணத்
தவறிவிடுகிறோம். எத்தனை பேருக்கு ”முள்முருக்கு” ஏதென்று தெரியும்? இதே
நிலைதான் பறவைகள், விலங்குகள் பற்றியும் இருக்கிறது. எத்தனை பேருக்கு ஆண்டாள்
சொன்ன ஆனைச் சாத்தான் ஏதென்று தெரியும்?
நம்மூர்ப் படிப்பிலும் ஒரு பெருங்குறை இருக்கிறது. மனப்பாடம் பண்ணி
ஒப்புவித்தலிலேயே பெரும் நேரம் நாம் பள்ளிப் படிப்பிற் செலவழிக்கிறோம். நம்மைச்
சுற்றியுள்ள இயற்கையறிவை நம் பள்ளிப்பாடம் சொல்லித் தருவதேயில்லை. பெற்றோரும்
இதை அழுந்தச் சொல்லுவதில்லை. மதிப்பெண் பெறுவதிலேயே அதிகக் கவனம்
செலுத்துகிறார்கள். பெரிய சோகத்தை நாம் உணருவதே இல்லை.
-----------------------------------
சட்டென்று புரிவதற்காக விக்கிப்பீடியாவில் இருந்தும் சில செய்திகளை வெட்டிக்
கீழே ஒட்டியிருக்கிறேன்.
Hummingbirds are birds in the family Trochilidae, and are native to the
Americas. They are among the smallest of birds, and include the smallest
extant bird species, the Bee
Hummingbirds. They can hover in mid-air by rapidly flapping their wings
12-90 times per second (depending on the species). They can also fly
backwards, and are the only group of birds able to do so.[1] Their English
name derives from the characteristic hum made by their rapid wing beats.
They can fly at speeds exceeding 15 m/s (54 km/h; 34 mph).[2] They are
amazing
Hummingbirds feed on the nectar of plants and are important pollinators,
especially of deep-throated, tubular flowers. Like bees, they are able to
assess the amount of sugar in the nectar they eat; they reject flower types
that produce nectar which is less than 10% sugar and prefer those whose
sugar content is stronger. Nectar is a poor source of nutrients, so
hummingbirds meet their needs for protein, amino acids, vitamins, minerals,
etc. by preying on insects and spiders, especially when feeding young.
Most hummingbirds have bills that are long and straight or nearly so, but in
some species the bill shape is adapted for specialized feeding.
Like the similar nectar-feeding sunbirds and unlike other birds,
hummingbirds drink by using protrusible grooved or trough-like tongues
அன்புடன்,
இராம.கி.
On Jun 27, 10:35 am, Elangovan N <nelan...@gmail.com> wrote:
> மூக்கே நீ முரலாய்; முதுகாடுறை முக்கணனை - வாக்கே
> நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்!!
>
> - அப்பர் பெருமானின் திருவங்கமாலை
On Jun 27, 9:28 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> பார்க்க:http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/441c0...
>
> இளங்கோவன் சுட்டியது:
>
> மூக்கே நீ முரலாய்; முதுகாடுறை முக்கணனை - வாக்கே
> நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்!!
> - அப்பர் பெருமானின் திருவங்கமாலை
>
முரலுதல் என்றால் buzzing அல்லவா?
வண்டினம் முரலும் சோலை. (buzzing bees)
சென்னைத் தமிழ் அகராதி
ஞிமிர்தல்/இமிர்தல் என்பதை ஹம்மிங் ஒலிக்குக்
கொடுக்கிறது.
தேன்சிட்டு, பூஞ்சிட்டு என்று சொன்னாலும்,
'ஞிமிர்சிட்டு' ஹம்மிங் பறவைக்கு நேர்பொருத்தமாய்ப்
ப்டுகிறது.
நா. கணேசன்
>
> 2009/6/27 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > பூஞ்சிட்டு = சிறுகுருவி, தேன்சிட்டு = அமெரிக்காவின் சிறப்புகளில்
> > ஒன்றாகிய ’ஹம்மிங்’ சிட்டுப்பறவைகள். இந்த ‘ஹம்மிங்’ இசை தேன்சிட்டின்
> > சிறகுகள் வேகமாகக் காற்றில் அதிர்வதனால் ஏற்படும் இசை. சிட்டு = சிறு
> > பறவை. சிட்டுக்குருவி, ...
>
> > ஹம்மிங் என்பதற்குத் தமிழில் வார்த்தை என்ன?
> > இராமகி ஐயாவோ, சங்கீதம் தெரிந்தவர்களோ நண்பர்களுடன்
> > பங்கேற்றால் நல்ல சொல் கிடைக்கும்.
>
> > நன்றி!
> > நா. கணேசன்
>
> > In India, laptop internet for everyone's ownership
> > is impossible. Tamil and other native Indic scripts
> > will reach masses only via microblog "twits" thru
> > mobile devices. Govt.-provided kiosks for public net
> > access can help to read the bit.ly links sent via
> > cell phones. More in Tamil:
ஓசனிச்சிட்டின் (humming bird) ஒலிப்பும் இப்படித்தான் இருக்கும்.
பெரு நாட்டில் இன்க்கா மலைப்பாதையில் நடந்து சென்று
மாச்சு பிச்சு மலையுச்ச்சி நகரத்தைக் காணச் சென்றபோது
பலவகையான ஓசனிச்சிட்டுகள் கண்டோம். ஒலியைக்
கண்டுதான் அருகில் இந்த சிட்டு உள்ளது என்று முதலில்
உணர்வோம். வண்டு முரல்வது போன்றுதான் இருக்கும்.
பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் மிகச் சிறியதாய்
இருப்பினும் சில உருவில் சற்ரு பெறிதாகவும்
இருக்கும் (பெரு நாட்டில்). ஓசனிச்சிட்டை முரல்சிட்டு,
ஞிமிர்சிட்டு என்றும் அழைக்கலாம். சுரும்புச்சிட்டு என்றும்
அழைக்கலாம். பறந்துகொண்டே அந்தரத்திலே
"நிற்பதை" , ஞாற்சி அல்லது நாற்சி என்று கூறலாம்.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள ஓசனிச்சிட்டுக்
கட்டுரையை, திருத்தியும் விரிவாக்கியும் உதவலாம்:
http://tinyurl.com/osani-chittu
பயனுடைய வழிகளிலே பதிவுகள் செய்வோம்!
இப்பொழுது முரல்சிட்டு, ஞிமிர்சிட்டு ஆகிய பெயர்களையும்
அக் கட்டுரையில் சேர்த்துள்ளேன். இளங்கோவனுக்கும்
கணேசனுக்கும் நன்றி.
அன்புடன்
செல்வா
> > >http://bit.ly/tamil_microblogs-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
என்பதை "சற்று பெரியதாகவும்" என்று திருத்திப் படிக்கவும்!
> > > >http://bit.ly/tamil_microblogs-Hidequoted text -