வந்தேன், வந்தேன்!

2 views
Skip to first unread message

எஸ்.கே

unread,
May 5, 2007, 7:19:22 AM5/5/07
to wordpress தமிழாக்கம்
என்ன சத்தத்தையே காணோம் என்று முதல் பதிவை இட்டுவிட்டேன்!

தோழர்கள் தமிழிலேயே உரையாடலாம்.

அன்புடன்,

எஸ்.கே

Ravishankar

unread,
May 5, 2007, 7:48:43 AM5/5/07
to tamil_wordpre...@googlegroups.com
நண்பர்களுக்கு வணக்கம்.

சில குறிப்புகள் -

மொழிபெயர்ப்புகள் குறித்த பொதுவான வழிகாட்டலுக்கு http://codex.wordpress.org/Localizing_WordPress

wordpress.com தமிழாக்கத்தை இணையத்தில் செய்யாமல் po கோப்பாக இறக்கி செய்வது இலகுவானது. ta.po கோப்பை http://svn.automattic.com/wpcom-i18n/ta.po என்ற முகவரியில் இருந்து இறக்கிக் கொள்ளவும். இதை நம் கூகுள் குழுமத்தின் கோப்புகள் பகுதியிலும் காணலாம்.

புதிய தமிழாக்கங்களில் ஒரே சரத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் செய்யாமல் இருக்க வேலையை நமக்குள் பிரித்துக் கொள்வது நல்லது.

a முதல் d வரையான சரங்களை நான் எடுத்துக் கொள்கிறேன்.

e முதல் h - sk?

i முதல் l - மயூ?

m முதல் p - shankar ganesh?

அவரவரின் உடன்பாட்டைத் தெரிவிக்கவும். நம் எழுத்துக்களை முடித்த பின் அடுத்தடுத்த எழுத்துக்களை அறிவித்துத் தொடங்குவோம். புதியவர்கள் வந்தால் அவர்களுக்கும் வேலையைப் பகிர்ந்தளிப்போம். அவ்வப்போது இந்தக் கோப்புகளை கூகுள் குழுமத்திலும் பதிவேற்றி வைக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, என் தமிழாக்கங்களை ta_wp_ravi.po என்று சேமித்து வைக்கிறேன்.

முதலில் wordpress.com தமிழாக்கத்தை முடித்து விட்டு அடுத்து பதிவிறக்கி நிறுவத்தக்க wordpress.org மென்பொருளை தமிழாக்கலாம் என்று முன்மொழிகிறேன்.

வேறு யோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும்.

ரவி


Jeyakumaran mayuresan

unread,
May 5, 2007, 10:13:17 AM5/5/07
to tamil_wordpre...@googlegroups.com
ரவி சொன்னபடியே ஆகட்டும்!!!
நான் ரவி சொன்ன பகுதியை பாரம் ஏற்கின்றேன்.. Consider it done!! :)
அன்புடன்,
மயூ!

 
Faculty Of Science
University Of Kelaniya
Sri Lanka.
Reply all
Reply to author
Forward
0 new messages