ஒரு கலைச்சொல் எவ்வாறு உருவாகின்றது, அதன் குறிக்கோள் என்ன, அது
எப்படிப்பட்ட சொல்லாக இருக்க வேண்டும் என்பனவற்றை
பலரும் அறியாமல் கூறுவதை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம்.
கரி என்றால் கருப்பாய் (கறுப்பாய்) இருக்கும் ஒன்று என்னும் ஒரு
பண்பை வைத்து பெயரிடுதல். அதனால் கறுப்பாய் இருக்கும்
எல்லாவற்றுக்கும் கரியா என்றால் இல்லை எனலாம், ஆனாலும்
பல "பொருள்"களுக்கு அவ்வாறு நிறப்பண்பின் அடிப்படையில்
சொல் அமையும் வாய்ப்பு உள்ளது (அது ஏற்கும் வழக்கைப் பொறுத்து).
எடுத்துக்காட்டாக கரி என்றால்
யானை என்றும் தமிழில் பொருள், கரி என்றால் மிளகு என்றும் பொருள்.
ஆங்கிலத்திலே smoking gun என்பார்களே, அது போல
கரி என்றால் அடையாளம், உறுதிப்படுவதற்கு உதவும்
சாட்சி என்றும் பொருள். திருக்குறளில் இப்பொருளில்
பயன்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.
கரி என்பது கறுப்பு என்னும் நிறத்தன்மை பற்றி
தோன்றிய சொல் என்றாலும்
பழுப்பு நிலக்கரி என்று முரண்பட இருப்பது போன்ற சொல்லும் உண்டு.
பழுப்பு என்பது பொதுவான மண்ணிறம், "பிரௌன்".
இப்படிப் பழுப்பு நிலக்கரி என்ற சொல் உருவாவதற்கு வெகு
காலத்துக்கு முன்பாகவே கரி என்பது ஒருவகை
எரிபொருள் என்னும் பொருள் வலுத்துவிட்டது. ஆகவே கரி
என்பது எரிபொருள் அவ்வளவே. அதன் தொடக்ககால
நிறப்பண்பின் அடிப்படையில் அமைந்த பெயர் உள்ளே
தொக்கி மட்டுமே நிற்கும்- இதெல்லாம் பொருள்கோண்மை முறைமை-
அதாவது பொருள் கொள்ளும் வழிமுறைகளின் கொள்கை.
ஆகவே ரேடியோ என்றால் அது மின்காந்த அலைபரப்பு
என்னும் சொற்பொருள் ஆங்கிலத்திலும் கிடையாது என்னும்
கருத்தைப் பலரும் அறிவதில்லை. ரேடியோ என்பது ரேடியசு (radius),
இணைப்பு ஏற்படுத்தும் ஒன்று என்னும் பொதுப்பொருளின்
அடிபப்டையில் 1903 ஆம் ஆண்டுமுதல் வழக்கில் உள்ளது.
(தகவல் ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி)
அதற்கு சற்று முன்பாக பிரான்சிய மொழியில் மின்காந்த
அலைக்கு தொடர்பில்லாத ரேடியோ-கண்டக்டர் (radioconductor) என்னும்
சொல்லில் இருந்தும் (இது உதிரித் துகள்கள் இணைந்து
மின்கடத்துமை கொள்ளும் ஒன்று),
இடாய்ட்சு மொழியில் (செருமன் மொழியில்),
ரேடியோசோன்டெ (Radiosonde) என்னும் ஒலியுணர் கருவியைக்
குறித்த ஒரு சொல்லில் இருந்தும் கருத்தூட்டம் பெற்று
ரேடியோ என்னும் சொல் வழக்கில் வலுப்பெற்றது.).
தமிழில், வான்வழியே பரவிவரும் அலைகளைப் பற்றி (ஈர்த்து, வாங்கி)
அவற்றிலிருந்து ஒலிக்குறிப்பலைகளைப் பிரித்துப் பாடலாகவும் பேச்சாகவும்
மாற்றித்தரும் கருவிகளையும், அவ்வகையான பரப்பலைகளையும்
வானொலி என்றனர். அது மிகவும் அருமையான சொல்லாக்கம்
மட்டுமல்லாமல், நன்கு வழக்கூன்றிய சொல்லும் கூட.
வெற்றிடத்திலும் இம்மின்காந்த அலைகள் பரவும்
(ஆனால் தனி ஒலியலைகள் பரவாது) என்பதெல்லாம்,
ஒரு கலைச்சொல் என்ன என்பதை அறியாமல், அது **சுட்டும்*
பொருளின் பண்புகள் யாவற்றையும் விளக்கவேண்டும் என்னும்
தவறான கருத்தில் எழுவது. வானொலி என்பது வரலாற்றில்
பதிவான அருமையான கலைச்சொல். அந்த மின்காந்த அலைகளில் மீது
ஒளி, ஒலி, பிற தரவுகள், பண்புணரிகளின் குறிகைகள் அல்லது குறிதிகள்
(sensor signals) என்று தக்க மாற்றம் செய்த ஏதொன்றையும்
ஏற்றி பரப்பவும் ஈர்த்து, வாங்கிப் பற்றிப் பிடிக்கவும் முடியும். நாம்
ரேடியோ
என்று சொல்வதிலும் தவறு இல்லை. ஒலி-பற்றிய பரப்பலைகளை,
குறிப்பாக கம்பி, வடம் வழியாக வராமல் "வான்வழி" வருவதை
வானொலி என்று கட்டாயம் சொல்லலாம். மிக அருமையான சொல்லாட்சி.
வானொலி அலைபரப்பு, தொலைக்காட்சி அலைபரப்பு என்றெல்லாம்
கூறலாம்.
அன்புடன்
செல்வா
> 2009/11/1 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > On 31 Oct, 21:18, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> > > ஹாஹாஹா......
>
> > விஞ்ஞானம் என்பதுதான் ஸயன்ஸ், அறிவியல் அல்ல என்று வாதிப்பது
> > வியப்புத் தருகிறது. வடமொழியிலே பஞ்சகந்தங்களில் ஒன்று
> > விஞ்ஞானம் - உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம்
> > என்ற ஐவகைக் கந்தங்கள். (மணிமேகலைக் காப்பியம் 30, 33.)
>
> > விஞ்ஞானம் = ஸயன்ஸ் என்று வடமொழிச் சொல்லுக்குப்
> > பொருள் ஏற்றியது 100, 130 வருடங்கள்தான். பழையபொருள் அதுவல்ல,
>
> > தாகூர் ரேடியோ, கல்ச்சர் - ஆங்கிலச் சொற்களுக்கு
> > ஆகாஷ்வாணி, கலாச்சாரம் என்று வடசொல் அமைத்தளித்தார்.
> > வானொலி, பண்பாடு என்று தமிழ் அமைத்துக்கொண்டது.
>
> > விஞ்ஞானம் தான் ஸயன்ஸ், அறிவியல் பொருந்தாது
> > என்னும் வாதம், எனக்கு “ஆகாஷ்வாணீ தான் ரேடியோ,
> > வானொலி ரேடியோ ஆகாது” என்று வாதம்செய்வதைப்போல்
> > படுகிறது.
>
> > அன்புடன்,
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
1 நவம்பர், 2009 10:27 am அன்று, செல்வா <c.r.sel...@gmail.com> எழுதியது:
.
எடுத்துக்காட்டாக கரி என்றால்
யானை என்றும் தமிழில் பொருள், கரி என்றால் மிளகு என்றும் பொருள்.
திருத்தம் செல்வா
கறி என்றால் மிளகு எனும் மிரியல்
கறிவளர் அடுக்கம் என்று சங்கப்பாடலில் வரும்
க்றிவேப்பிலை மிளகுடன் பயன்படுத்தும் வேப்பிலை
மிளகின் காரம் கொண்ட சில்லி நாட்டு காயை மிளகுக்காய்=மிளகாய் என்றோம்
மிரியல் எனும் சொல் தெலுகில் மிரேலு எனப்படும்
மிளகாய் என்பதை மிரபகாய் என்பர் , வடமொழிகளில் மிர்ச்சி
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”