அடிப்படை ஆங்கிலம் என்பதற்குரியச் சொற்தொகுப்புகள், இணையத்தில் ஆங்காங்கு
கிடைக்கிறது. அதுபோல, நம் தமிழில் அடிப்படைச் சொற்களின் சொற்தொகுப்புகள்
உள்ளனவா?
அங்ஙனம் உள்ள சொற்கள், புதிதாகத் தமிழ் கற்பவருக்கு மிக அவசியமானது.
ஆப்பிரிக்க வாழ் தமிழருக்கு பெரும்பாலும், தமிழ் எழுத்துக்கள்
தெரிவதில்லை. எனினும், அவர்கள் தமிழ் இலக்கியங்களை இலத்தீனிய
எழுத்துக்களின் துணைக்கொண்டு படிக்கின்றனர். (இந்நிலை பிற
நாட்டினருக்கும் வரக்கூடாது.)
இங்ஙனம் தமிழ் அழிவதற்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகிறது. அவற்றில்
முதன்மையானது, 'தமிழ் வளர்ப்பு அமைப்புகள்', அடிப்படையானக்
கட்டமைப்பில் கவனம் செலுத்தாததே என்பது என் திண்ணமான கருத்து.
அத்தகைய சொற்தொகுப்புகளை, நம் விக்சனரியில் மேம்படுத்த வேண்டும் என
எண்ணுகிறேன்.
அதற்கு முதற்படியாக, பின்வரும் தொடுப்பிலுள்ள (David W. McAlpin
என்பவரின்) அகரமுதலியின்
1) http://dsal.uchicago.edu/dictionaries/mcalpin/
அனைத்துச் சொற்களையும்,
நம் விக்சனரிக்கு பதிவேற்றம் செய்தேன். அவற்றினை பின்வரும் தொடுப்பில்
காணலாம்
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0...
அவற்றிலுள்ள சொற்களைத் தற்போது, இந்தி மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்து
கொண்டு உள்ளேன். அது முடிந்தவுடன் பிற மலையாளம், தெலுங்கு, வங்காளம்,
உருது போன்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.
David W. McAlpin என்பவரின் அந்த core vacabulary dictionary, எந்த
அளவுக்கு நம்பத்தகுந்தது? அதன் சிறப்புகள் யாது?
அடுத்து பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பின்வரும் தொடுப்பில் ஒரு
சொற்கோவையினை அமைத்துள்ளது. அதன் சிறப்புகள் யாது? அவையனைத்தினையும்,
ஒருங்குறிக்கு மாற்றும் எழுத்துரு மாற்றி உள்ளனவா?
2) http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/tamilenglish.html
பின்வரும் பொங்குதமிழ் எழுத்துருமாற்றியில்,
http://www.suratha.com/reader.htm
மேற்கூறிய பென்சில்வேனியா எழுத்துருக்களை, ஒருங்குறிக்கு மாற்ற
இயலவில்லை. ஏன்? அவைகளை ஒருங்குறிக்கு மாற்ற வேறு வழி உண்டா?
மேற்கூறிய இரண்டு( David W. McAlpin & upenn list ) அடிப்படைத்தமிழ்
சொற்கள் எனக் கருதலாமா? ஏனெனில், இவைகளை அடிப்படையாகக் கொண்டு, பல தமிழ்
கற்கும் முறைகளை, நம் விக்சனரியில் உருவாக்க நானும், மற்றவரும்
எண்ணியுள்ளோம்.
அதனால் இத்தகைய ஐய்யங்களை இக்குழுமத்திடம் வினவுகிறேன். நன்றி! வணக்கம்.