தமிழாக்கத் தொனி குறித்த உங்கள் கருத்து தேவை

15 views
Skip to first unread message

Ravishankar

unread,
Mar 18, 2008, 4:02:24 PM3/18/08
to tamil_wi...@googlegroups.com
பல மென்பொருள்களையும் தமிழாக்கும் போது தமிழாக்கத்தின் தொனி குறித்த ஒரு கேள்வி தொடர்ந்து வருகிறது.

அதாவது, பல மென்பொருள்களில் cut, paste, search, close போன்ற கட்டளைகள் வருகிறது அல்லவா? இவற்றை வெட்டுக, ஒட்டுக, தேடுக, மூடுக என்று தமிழாக்கினால் உங்களுக்குப் பிடிக்குமா? அல்லது, வெட்டு, ஒட்டு, தேடு, மூடு என்று தமிழாக்கினால் பிடிக்குமா?

வெட்டு, ஒட்டு போன்ற கட்டளைகள் நாம் கணினிக்கு கொடுப்பவை என்றும், கணினி அஃறிணை தான் என்பதால் அதற்கு மரியாதை தரத் தேவை இல்லை என்றும், இப்படி எழுதுவது சுருக்கமாக இருக்கிறது என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

இன்னொரு தரப்பினரோ, இது போன்ற கட்டளைகள் கணினி தங்களைப் பார்த்துச் சொல்வதைப் போல் உணர்கிறார்கள். எனவே, மூடு, திற போன்ற கட்டளைகளை மரியாதை குறைவாக உணர்கிறார்கள். நானும் இந்த வகையைச் சேர்ந்தவன் தான்.

தற்போது மீடியாவிக்கி மென்பொருளை தமிழாக்கி வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்துக்கள் எங்கள் தமிழாக்கத்தைத் திறம்பட செய்ய உதவும்.

உங்கள் விருப்பத்தை http://kanimai.blogspot.com/2008/03/blog-post_18.html பக்கத்தில் உள்ள வாக்குப் பெட்டியில் தெரிவிக்கலாம்.

நன்றி

--
http://blog.ravidreams.net | http://maatru.net

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 19, 2008, 1:10:08 PM3/19/08
to tamil_wi...@googlegroups.com
//இன்னொரு தரப்பினரோ, இது போன்ற கட்டளைகள் கணினி தங்களைப் பார்த்துச் சொல்வதைப் போல் உணர்கிறார்கள். எனவே, மூடு, திற போன்ற கட்டளைகளை மரியாதை குறைவாக உணர்கிறார்கள். நானும் இந்த வகையைச் சேர்ந்தவன் தான்.//
 
கணினி தங்களைப் பார்த்துச் சொல்வதாக நினைப்பது தவறாகத் தெரிகிறது. திரையில் இருக்கும் கட்டளைகளை நாம்தான் தேர்ந்து பின் கணினியைச் செயல்படுமாறு சொல்கிறோம்.
 
தேடு, மூடு போன்ற ஏவல் வினைமுற்றுகள் பொதுவாக அஃறினைக்கும் தாழ்ந்தோர்க்கும் பய்ன்படுத்தும் சொற்களாக இருக்கின்றன. 'க' விகுதி சேர்ந்த வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் ஆகிய பொர்ட்களில் வருவதாகையால் விதித்தல் என்ற முறையில் 'மூடுக' என்ற பயன்பாடே எனக்குச் சரியெனப் படுகிறது.
 
நடராஜன்.

 

amachu

unread,
Mar 19, 2008, 1:46:31 PM3/19/08
to விக்சனரி


On Mar 19, 1:02 am, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> பல மென்பொருள்களையும் தமிழாக்கும் போது தமிழாக்கத்தின் தொனி குறித்த ஒரு கேள்வி
> தொடர்ந்து வருகிறது.
>
> அதாவது, பல மென்பொருள்களில் cut, paste, search, close போன்ற கட்டளைகள்
> வருகிறது அல்லவா? இவற்றை வெட்டுக, ஒட்டுக, தேடுக, மூடுக என்று தமிழாக்கினால்
> உங்களுக்குப் பிடிக்குமா? அல்லது, வெட்டு, ஒட்டு, தேடு, மூடு என்று
> தமிழாக்கினால் பிடிக்குமா?
>

வெட்டுக, ஒட்டுக, தேடுக என இடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். சிறப்பான
காரணங்கள் எதுவும் இல்லை.

அன்புடன்
ஆமாச்சு

Sarves

unread,
Mar 27, 2008, 2:02:12 AM3/27/08
to விக்சனரி
நாம் Joomla!, Moode, Firefox மற்றும் Thunderbird Localization இல்
ஈடுபட்டுவருகிறோம்.
அதில் நாம் கணினிக்குக் கொடுக்கப்படும் கட்டளைகளாயின் ஒட்டு, வெட்டு
என்றும் பயனாளர்களுக்கு கொடுக்கப்படும் தகவலாயின் ஒட்டுக, வெட்டுக
என்றும் பயன்படுத்திவருகிறறோம்.

~சர்வேஸ்

HK Arun

unread,
Mar 27, 2008, 9:18:26 AM3/27/08
to tamil_wi...@googlegroups.com

ஆங்கிலத்தில் நீ, நீங்கள் இரண்டுக்கும் "you" தான் பயன்படுத்துக்கின்றார்கள்.
 
அதனால் cut, paste, search, close போன்றச் சொற்கள் கட்டளைகள் சொற்களாக இல்லாமல்
சாதாரன வேண்டுகோள் சொற்களாகவும் பார்க்கலாம் அல்லவா?  (Please இன்றி)
 
ஆனால் தமிழில் வெட்டு, ஒட்டு, தேடு, மூடு என்பது கணனி எம்மைப் பார்த்து கட்டளையிடுவதாக மட்டுமின்றி
மரியாதைக் குறைவான வார்த்தைப் பிரயோகமாகவும் தெரிகின்றது.
 
அப்படியே cut, paste, search, close போன்றவற்றை கட்டளைச் சொற்களாகவே எடுத்துக்கொண்டாலும்,
அதே ஆங்கில வழிமுறையையே நாமும் பின்பற்றவேண்டிய அவசியம் என்பது ஏற்புடையதல்ல.
 
வெட்டுக, ஒட்டுக, தேடுக, மூடுக என்று அழகான சொல்லாடலாகவே எனக்குப் படுகின்றது.
 
(வெட்டவும், ஒட்டவும், தேடவும், மூடவும் இதையும் பாருங்கள்.)
 
-அருண்
 


Ravishankar

unread,
Mar 27, 2008, 11:30:00 AM3/27/08
to tamil_wi...@googlegroups.com
தமிழ் விக்கிப்பீடியா, இந்தக் குழுமம், என் வலைப்பதிவு என்று பல இடங்களிலும் உரையாடியதில் ஒன்று தெளிவாகப் புரிகிறது. இது ஒரு perception (தமிழில் என்ன?) பிரச்சினை.

சிலர் இவை நாம் கணினிக்குத் தரும் கட்டளைகள் என்று நினைக்கிறார்கள். ஆனால் பலர் (பாதிக்கு மேற்பட்டவர்களாவது) இக்கட்டளைகள் கணினி தம்மை நோக்கி அறிவுறுத்துவனவாக உணர்கிறார்கள். இதில் எது சரி, எது தேவை என்ற வாதம் முடிவில்லாமல் தொடரும்.

துல்லியமாக எத்தனை வீதத்தினர் எந்தத் தொனியை விரும்புகிறார்கள் என்று அறிய வாக்கெடுக்கவும் முடியாது. அது தேவையும் இல்லை. ஆனால், practicalஆ (இந்த இடத்தில் இந்த சொல்லுக்குத் தமிழில் என்ன?) சில விசயங்களைச் சொல்லலாம்.

- இவை கணினி என்னும் அஃறிணைக்கு இடும் கட்டளைகள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், கணினி தம்மைப் பார்த்துச் சொல்வதாக நினைக்கும் ஒவ்வொருவரிடமும் போய் "இது கணினிக்கு இடும் கட்டளை, எனவே நீங்கள் பிழையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று விளக்க முடியாது. அவர்கள் கடைசி வரை தாம் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதாக உணர்ந்து கொண்டே இருப்பார்கள். நாம் மனிதர்களுக்காகத் தானே இடைமுகப்புகளை வடிவமைக்கிறோம். பிறகு அவர்கள் மனதுக்கு ஏற்ற மொழியைப் பயன்படுத்தலாமே?


 - ஒட்டுக, மூடுக என்று மரியாதை கொடுத்துத் தமிழாக்கினால், "ஏன் இப்படி பிழையாகத் தமிழாக்குகிறாய், எனக்கு மரியாதை தேவை இல்லை" என்று கணினி உயிர்த்து வந்து சொல்லப் போவதில்லை. ஆனால், இலக்கணப்படி சரியாகவே தமிழாக்கினாலும், மனிதர்கள் தான் நம்மை வந்து கேள்வி கேட்கப் போகிறார்கள். நாம் கட்டளை நிரலை "மூடு" என்று எழுதி விட்டு இடைமுகப்பில் உள்ள கட்டளைச் சொல்லை "cinema பார்க்கப் போலாம் வர்றியா" என்று எழுதினாலும் அது மூடத் தான் போகிறது. இடைமுகப்பில் என்ன எழுதியிருக்கிறது என்பது கணினிக்கு ஒரு பொருட்டே அல்ல. இடைமுகப்பு பின் இருக்கும் நிரல் தான் கணினிக்குச் சொல்லப்படுவது. அப்ப இடைமுகப்பு மனிதர்களுக்குத் தான் என்பது புலப்படுகிறதே? "இன்ன பொத்தானை அழுத்தினால் இன்ன வேலையை நான் செய்வேன் என்று கணினி மனிதர்களுக்குச் சொல்வதே" அது. இன்னொரு நோக்கில் பார்த்தால், இன்னொரு நோக்கில் பார்த்தால் "நிரலை எழுதிய ஒரு மனிதர் அச்செயலியைப் பயன்படுத்தப் போகும் இன்னொரு மனிதருக்கு விட்டுச் செல்லும் குறிப்புகளாக" ஏன் இவற்றைப் பார்க்கக்கூடாது? லினக்ஸ் கட்டளை முனையத்தில் நாம் நேரடியாக கட்டளைகளைத் தரும் போது open file, close file என்று எழுதுவது தான் கணினிக்கு நாமே தரும் நேரடிக் கட்டளைகள். முதலில் கணினிப் பயன்பாடு இப்படித் தானே வந்தது? பிறகு, இவ்வாறு கட்டளைகளை இடத்தெரியாத மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது தானே guided user interface எல்லாம்? guided user interface என்ற பெயரே தெள்ளத்தெளிவாக இவை மனிதர்களுக்கானவை என்பதை விளக்குகிறதே?


தமிழிலேயே நிரல் எழுதுகிறோம் என்றால் அதில் தாராளமாக "மூடு, திற" என்று ஒருமையிலும் நிரலாளர்களுக்கு உதவும் வகையில் சுருக்கமாக எழுதப்படுவதாகவும் இருக்கலாம். இடைமுகப்பில் என்ன எழுதியிருக்கிறது என்பது கணினிக்கு ஒரு பொருட்டே இல்லை என்கையில் அதை ஏன் மனிதர்களுக்குப் பிடித்த மாதிரி செய்யக்கூடாது?

- மூடுக, தேடுக என்று மரியாதை கொடுத்து எழுதினால் சொற்கள் நீண்டு பொத்தான்கள் பெரிதாக பக்கங்களின் அழகு கெடுகிறது என்றும் சில நிரலாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், இதை நம் மொழியின் தன்மையாக ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். மூடு என்று சொல்லில் இரண்டு எழுத்து என்றால் உருவாக்கு என்ற சொல்லில் 5 எழுத்து இருந்தாலும் ஏற்றுக் கொண்டு தானே பொத்தான்கள் செய்கிறோம்? மரியாதை குறைவான பெரிய சொற்களையே ஏற்றுக் கொள்ளும்போது, மரியாதை கூடுதலாகத் தரும் பொருட்டு ஏன் அதே அளவு சொற்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது? பொத்தான்கள் பெரிதானால் அதற்கு ஏற்ப css வார்ப்புரு, எழுத்துரு அளவில் மாற்றம் செய்ய வேண்டுமே ஒழிய குறுக்கு வழியில் போய் மொழியைச் சிதைக்கக்கூடாது. நமக்குத் தேவையான வடிவமைத்தான் செய்ய வேண்டுமே ஒழிய வடிவமைப்புக்கு ஏற்ப நம் மொழியை வெட்ட முடியாது.

இடைமுகப்புத் தமிழாக்கங்களில் ஈடுபடும் நண்பர்கள் இக்கருத்துக்களை ஒரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். இங்கு grammatically correct approach என்பதை விட designing for humans என்ற அணுகுமுறையை மேற்கொள்ளலாம்.

அன்புடன்
ரவி

M.Mauran | மு.மயூரன்

unread,
Mar 27, 2008, 1:37:40 PM3/27/08
to tamil_wi...@googlegroups.com
ரவி,

உங்கள் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன்.
எனது கருத்தும் இதுவேதான்.

-மு.மயூரன்

2008/3/27 Ravishankar <ravishankar...@gmail.com>:

HK Arun

unread,
Mar 27, 2008, 11:29:25 PM3/27/08
to tamil_wi...@googlegroups.com

சிறப்பான விளக்கம். நன்றி ரவி
 
-அருண்



 


amachu

unread,
Mar 28, 2008, 1:37:17 AM3/28/08
to விக்சனரி
On Mar 27, 8:30 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> தமிழ் விக்கிப்பீடியா, இந்தக் குழுமம், என் வலைப்பதிவு என்று பல இடங்களிலும்
> உரையாடியதில் ஒன்று தெளிவாகப் புரிகிறது. இது ஒரு perception (தமிழில் என்ன?)
> பிரச்சினை.
>

இப்படி மூன்று விதமாக (ஒட்டு, ஒட்டுக, ஒட்டவும்) ஒரே காரியத்தை சுட்ட
இயல்வது ஒரு விதத்தில் நமக்குள்ள அனுகூலம் என்றே கருதுகிறேன்.

-- ஆமாச்சு

amachu

unread,
Mar 28, 2008, 1:38:05 AM3/28/08
to விக்சனரி
On Mar 27, 8:30 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> தமிழ் விக்கிப்பீடியா, இந்தக் குழுமம், என் வலைப்பதிவு என்று பல இடங்களிலும்
> உரையாடியதில் ஒன்று தெளிவாகப் புரிகிறது. இது ஒரு perception (தமிழில் என்ன?)
> பிரச்சினை.
>

Reply all
Reply to author
Forward
0 new messages