பகு பகா

38 views
Skip to first unread message

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Oct 12, 2009, 4:11:54 AM10/12/09
to tamil_wi...@googlegroups.com
1. பகு பகா ?

2. பகா பகும் ?

வினாக்களில் இலக்கணப் பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டவும். அல்லாவிடில் விடைகள் கூறவும்.

;>)

~சேது

M.Mauran

unread,
Oct 12, 2009, 5:46:54 AM10/12/09
to tamil_wi...@googlegroups.com
இதொரு புது விளையாட்டா இருக்கே சேது ;)


--
மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
[ http://www.google.com/profiles/mmauran ]


2009/10/12 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
Oct 12, 2009, 8:59:15 AM10/12/09
to tamil_wi...@googlegroups.com
ஓம்.
பகு பதம், பகா பதம் என்பது இலக்கணத்தில் சொல்லப்பட்டதே.
 பகுத்தல்=பிரித்தல்,  பகு= பிரி’ பிரித்தெடு ‘உடன்பாடு’ ஆக வந்துள்ள கட்டளைப்  பெயர்  எச்சம்.
பகுx பகா
பகு பதம்= பிரித்து பார்க்கமுடிந்த சொல்.
பகா= பிரிக்கமுடியாத  எதிர்மறை ஆகவந்துள்ள பெயர் எச்சம்.

அன்பின் சேது! உங்கள் எடுத்துக்காட்டு வினா அன்று.

ஓம். வெ.சுப்பிரமணியன்

2009/10/12 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
1. பகு பகா ?

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Oct 27, 2009, 9:52:50 PM10/27/09
to tamil_wi...@googlegroups.com

2009/10/12 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

ஓம்.
பகு பதம், பகா பதம் என்பது இலக்கணத்தில் சொல்லப்பட்டதே.
 பகுத்தல்=பிரித்தல்,  பகு= பிரி’ பிரித்தெடு ‘உடன்பாடு’ ஆக வந்துள்ள கட்டளைப்  பெயர்  எச்சம்.
பகுx பகா
பகு பதம்= பிரித்து பார்க்கமுடிந்த சொல்.
பகா= பிரிக்கமுடியாத  எதிர்மறை ஆகவந்துள்ள பெயர் எச்சம்.

அன்பின் சேது! உங்கள் எடுத்துக்காட்டு வினா அன்று.

ஓம். வெ.சுப்பிரமணியன்


அன்பின்குரிய  நண்பரே

தாங்கள் உடனடியாக பதிலிட்டமைக்கு நன்றி. அதற்கு நான் கால தாமதமாக இம் மறுமொழி இடுவதற்கும் மன்னிக்கவும்.

நான் கேட்டவைகள் வினாக்கள்தான். பகு, பகா எனும் இரு கிளவிகளின் பொருள் நிலை விளக்கம் அல்லாது அவ்விரு கிளவிகளின் பதவியல் விளக்கங்கள் பற்றியது.

பகு எனும் கிளவி பகுதி, பகா, பகும் என பலச் சொற்களின் பகுதி.

எனவே பகு எனும் கிளவி ஒரு பகாப்பதம் என்பதை ஏற்றுக்கொள்வீர்.

அதாவது பகு பகாதது. 

அதையே பகு பகாது எனவும் கூற இயலுமா ?

"பகு பகாதது" எனக் கூறுகையில் பகு செயப்படு பொருள் போலவும் "பகு பகாது" எனக் கூறுகையில் பகு எழுவாய் போலவும் ஆவதால் எனக்குள்ள ஐயம் இது.

அடுத்து "பகு பகாது" என்பதும் ஏற்றுக்கொள்ள வியலுமாயின் "பகாது" என்பதன் ஈறு குன்றி

"பகு பகா" என்ற கூற்று சரியா? அதுவே என் முதல் வினா. ஆ வுடன் முடியும் எதிர்மறை வினைமுற்று அஃறிணை பலவின் பாலுக்கு மட்டுமா எனவும் ஐயம் உள்ளது. (பகு எனும் கிளவி ஒன்றன்பால் தானே  ?)

அடுத்து பகா எனும் கிளவி பகு + ஆ ஆயினவையானதால்

பகா எனும் கிளவி ஒரு பகுபதம். எனவே

"பகா பகும் " எனக் கூறுவது சரியா என்பதே இரண்டாம் வினா? ( பகும் என்பதிற்குப் பதிலாக  பகுப்படுவது என்றுதான் கூற வேண்டுமோ என்ற ஐயம் உள்ளதால்)

~சேது






 
Reply all
Reply to author
Forward
0 new messages