2009/11/18 <ravidre...@googlemail.com>
வழங்கப்பட்டுள்ளவைகள் பற்றிய *எனது கருத்துகள்* வருமாறு;-
1) கலைச்சொற்கள் என்பதனை விட, *துறைச் சொற்கள்* என்றழைத்தால், புதியவர்களுக்கு
மிகச்சுலபமாகப் புரியம். கலைச்சொற்கள் என்பது கலைத்துறைச் சார்ந்தவை என்றே,
புதியவர் பொருளுணர்வர்.
2) குறிப்பிட்ட ஒரு பெயர்ச்சொல்லே என்றும் நிலைக்கும் என்று யாராலும் கூற
இயலாது. அதற்காக பல சொற்கள் உருவாக்க வேண்டும் என்பது பொருளல்ல. ஒரிரு சொற்கள்
மிக அவசியம். அச்சொற்களில் சிறப்பானது, எளிமையானது, காலத்திற்கு ஏற்ப
நிலைபெறும். (எ.கா) சொடுக்கி, சுட்டி.
3) உலகின் பெரும்பான்மையான மொழிகளில், பெயர்ச்சொற்களே அதிக மாறுதல்களுக்கு
உட்பட்டிருக்கின்றன. இதுவே பல உலக மொழிகளிலும் நடந்துள்ளதாக அறிவியலாளர்
கூறுகின்றனர்.
--
த*உழவன்
(* தமிழ்; தகவல்; தன்னம்பிக்கை)