'arukaamai' அருகாமை என்ற சொல் பிழை

1,218 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Sep 28, 2009, 10:53:44 AM9/28/09
to tamil_wiktionary

   .     
  ஓம்.அன்புடன் தமிழறிஞர்களே வணக்கம்.
'அருகாமை' என்ற சொல்லை அண்மை, மிக அருகில் என்ற பொருள்களில் பல
இடங்களிலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஒரு வேர்ச் சொல்லுடன் 'ஆமை'
என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்.

காட்டு:

பணிவு + ஆமை = பணியாமை
கனிவு + ஆமை = கனியாமை
செய் + ஆமை = செய்யாமை

அதே நெறியில் பார்த்தால்

அருகு + ஆமை = அருகாமை

என்பது நெருங்கியிராமை என்றல்லவா பொருள் தர வேண்டும். ஆனால்  online lexicon
இல் கூட  proximity என்றே அருகாமைக்குப் பொருள்
சொல்கிறது. இது புழக்கத்தில் வந்துவிட்டதால் தந்த மரியாதையா? அல்லது
இந்தச் சொல்லுக்குமட்டும் ஏதேனும் விதிவிலக்கா
-=-=-=-
தமிழண்ணலின் ஒரு கட்டுரை:
========
அருகில் புகுந்த ஆமை
=======
எங்கள் வீட்டிற்கு அருகில், சிவன் கோயிலுக்கு அருகில் என்று கூற வேண்டிய
இடங்களில் அருகாமையில் என்று எழுதுகிறார்கள். செந்தமிழாக எழுதுகிற
நினைப்பு; எங்கிருந்து இந்த ஆமை 'அருகில்' வந்ததென்று தெரியவில்லை.
கல்லாமை, அழுக்காறாமை, வெஃகாமை, விளங்காமை போன்ற எதிர்மறைத்
தொழிற் பெயர்கள் பலவுள. அருகாமையில் எதிர்மறை எதுவுமில்லை. அருகுதல்-
சுருங்குதல்; அருகாமை - சுருங்காமை என்றால் அத் தொழிற்பெயர் வேறு.
இனிமேல் நம் அருகில் இந்த 'ஆமை' வராமல் காக்க வேண்டும்.

'அண்மையிலுள்ளது; அண்மையில் நிகழும்' என இட அணிமையும் கால அணிமையும்
குறிக்கப்படுகின்றன. '

பசிப்பிணி மருத்துவன் பண்ணன் இல்லம், அணித்தோ,
சேய்த்தோ' என்பது புறப்பாட்டு (புறம்: 173).

 அருகே என்பதை இடச்சுருக்கத்தை மட்டும்  சுட்டவும்,
'அண்மை', 'அணிமையை' இடம், காலம்இரண்டிற்கும் பயன்படுத்தவும் பழகியுள்ளோம். எங்கள் வீடு அருகில்தான்
இருக்கிறது;
குடியரசு நாள் அணிமையில் வருகிறது, இல்லையா?*

மிகைத் திருத்தம்

சரியாக இருப்பதைத் தவறுபடத் திருத்துவது மிகைப்பட்ட செயலாகும். மிகைத்
திருத்தம் என்பது செந்தமிழாக எழுதுகிறோம் என நினைத்துக் கொண்டு தவறு
செய்வது. அவற்றுள் முக்கியமான சிலவற்றை நினைவுகூர்வோம்.

நூல்கள்

நூல்களே முறையாகும்.
செந்தமிழில் எழுதுவதாக எண்ணிக்கொண்டு நூற்கள் எனப்
பலர் எழுதி விடுகின்றனர்.
நமது கால்களைக் காற்கள் ஆக்கலாமா?
உழுகின்ற
சால்களை சாற்களாக்குவதா?
 வால்கள், வேல்கள் இருக்கவும் நூல்கள் நூற்களாவது
'மிக நன்றாக' எழுதுவதாக எண்ணிக் கொண்டு செய்யும் தவறு! அதைத் தவிர்க்க
வேண்டும்.

பொருள்கள்

பொருள்கள்தான் சரி.
ஆனால் பொருட்களை, பொருட்களுக்கு என்றே எழுதக்
காரணம் பொருட்சிறப்பு, பொருட்பேறு, பொருட்குறை எனப் பிற இடங்களில்
விகாரப்படுவதால், இதிலும் அவ்வாறே ஒலித்துவிடும் பழக்கமாகும்.

பொருள்களை எடுத்து வை, அங்கு எத்தனை பொருள்கள் உள்ளன என்பதே
முறையாகும்.

இவையெல்லாம் சரியாக உள்ளவற்றை நாமே ஒரு நினைப்பில் தவறென்று
எண்ணிக்கொண்டு பிழைபட எழுதி விடுவன ஆகும். பொருத்தமாகயிருப்பதைத்
திருத்தம் எனலாம். இப்படி மிகையாக - வேண்டாமல் செய்வதை (மிகைத்
திருத்தம்) என்றுதானே சொல்ல வேண்டும்.


*கோவை தமிழாசிரியர் நா.கு. பொன்னுசாமி, 'அருகண்மை என்ற சொல்லே
அருகாமை ஆயிற்று என்கிறார். '
நெடுஞ்சேண் ஆரிடை' போல, ஒரு பொருட்
பன்மொழியாக வருதல் கூடும் ஆயினும், 'அருகண்மை' பேச்சிலோ, எழுத்திலோ
ஆட்சி உண்டா என்று தேட வேண்டும். மற்றபடி மிகப் பொருத்தமாக உளது.
****
நன்றி: பேராசிரியர் பசுபதி அவர்களுக்கு

--- -=-


ஓம். அன்புடையீர்! . இதே பாங்கில்
பின்வரும் மரபுச் சொறொடர் பிழையாகப் பயன்பட்டுவருகின்றது.



(1 )"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"

ஆனால் பயன்படுத்துவோர் இப்படி எழுதுகின்றார்கள்.
"யாதும் ஊரே! யாவரும் கேளீர்!"

யாவரும் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள் என்று பொருள்பட எழுதுதல் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

பட்டுச் சேலை , பட்டுப்பூச்சி (சரி)
பட்டு சிறந்தது ( 'ச்' வரக் கூடாது)

சென்னை தொலைக்காட்சி; (  'த்' வரக் கூடாது)

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ( மதுரை'க்' வரக் கூடாது? )

வள்ளுவர் கோட்டம் (பிழை)
 வள்ளுவர்க்கோட்டம் (சரி)

எழுத்துகள் (சரி) எழுத்துக்கள்(பிழை)




அன்புடன்,
வெ.சுப்பிரமணியன்.
ஓம்

 

 













Sundar

unread,
Sep 29, 2009, 4:57:09 AM9/29/09
to விக்சனரி
ஐயா,

மிகவும் பயனுள்ள திருத்தங்கள். இனி இது போன்ற தவறான பயன்பாடுகளைத்
தவிர்ப்பேன்.
மிகைதிருத்தத்துக்கு நீங்கள் தந்துள்ள அருமையான எடுத்துக்காட்டை அருள்
கூர்ந்து விக்கிப்பீடியாவில் உள்ள
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
என்ற கட்டுரையில் சேர்த்தீர்களானால் பலருக்கும் பயன் தரும்.

அன்புடன்,
சுந்தர்

On Sep 28, 7:53 pm, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:

Venkatachalam Subramanian

unread,
Sep 29, 2009, 8:48:27 AM9/29/09
to tamil_wi...@googlegroups.com

ஓம்
அன்புடன் சுந்தர். நலம் விழைகிறேன்.
விக்கிப் பீடியாவில் நீங்கள் கொடுத்த சுட்டியினைத் தேடி அதில் இந்த எடுத்துக்காட்டுடனான விளக்கத்தை இட்டிருகிறேன்.
இதுதான் என்னுடைய முதல் பங்களிப்பு. மிக்க நன்றி.
மேலும் எவ்வாறு இன்னும் கட்டுரைகளை எங்கு சேர்க்கலாம் என்பதை எனக்கு புரிய வைத்தால் நன்று.
என்னுடைய பிற மடல்களையும் பார்த்துத் தேர்வு செய்யுங்கள்.
நன்றி
வெ.சுப்பிரமணியன்ஓம்.

2009/9/29 Sundar <balas...@gmail.com>

Sri Sritharan

unread,
Sep 29, 2009, 9:02:35 AM9/29/09
to tamil_wi...@googlegroups.com, wikipedia
அன்பின் சுப்பிரமணியன் ஐயா

தங்கள் விக்கிப்பீடியா பதிவுக்கு நன்றிகள். நீங்கள் இட்டவற்றில் சில திருத்தங்களை மட்டும் செய்திருக்கிறேன். (உள்ளடக்கத்தில் மாற்றம் ஒன்றும் செய்யவில்லை).

அன்புடன்
சிறீதரன்
http://ta.wikipedia.org
http://ta.wikinews.org

செல்வா

unread,
Oct 27, 2009, 4:10:46 PM10/27/09
to விக்சனரி
வணக்கம்.

>
> காட்டு:
>
> பணிவு + ஆமை = பணியாமை
> கனிவு + ஆமை = கனியாமை
> செய் + ஆமை = செய்யாமை

மேலே கூறியுள்ளவை சரியல்ல என நினைக்கிறேன்.

பணி என்பது வினை (ஏவல் வினை). பணி+ஆ = எதிர்மறை வினை வடிவம்.
பணியான் ஏன்றால் அவன் பணியாதவன் அல்ல்லது அவன் பணியமாட்டான்.
பணியா தன்மை (மை என்னும் பண்பு விகுதி) என்பதைப் பணியாமை என்கிறோம்.
"ஆமை" என்று பிரிப்பது சரியல்ல.

கனி என்பது கனிதல் என்னும் வினை. கனியாது என்றால் பழுக்காது என்று
பொருள்.
கனியா என்பது எதிர்மறை வினை வடிவம். மை விகுதி சேர்ந்து கனியாமை.

அதே போல செய்யாமை.

எனவே வினை (ஏவல் வினை) + ஆ + மை = எதிர்மறை வினையால் அமையும் பண்பு (இது
இலக்கணப் பெயர் அல்ல).

தமிழண்ணலில் கருத்து அருமையானது.
அருகாமை என்பது குறையாமை, அஃகாமை, சுருங்காமை என்னும் பொருள் தருவது.
அருகில் உள்ளது. அருகேதான் உள்ளது என்று சொல்லலாம்.

பக்கத்திலே உள்ளது என்பதைப் பேச்சு வழக்கில்
"பக்கத்தாலேதான் இருக்கு" என்பது போன்று
அருகேதான் இருக்கு என்பதை அருகாதான், அருகாமைலதான் இருக்கு
என்ரு ஆகியிருக்குமோ என எண்ணுகிறேன்.

ஒரு வேர்ச் சொல்லுடன் 'ஆமை'
> என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்

பணிவு, கனிவு என்பது வேர்ச்சொல் இல்லை (அவை வினை வடிவம் அல்ல,
ஆனால் செய் என்பது வினை வடிவம்).

செல்வா

>
> அதே நெறியில் பார்த்தால்
>
> அருகு + ஆமை = அருகாமை

பணி

On Sep 28, 10:53 am, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Oct 27, 2009, 9:07:10 PM10/27/09
to tamil_wi...@googlegroups.com
ஆமை என்பதை ஒரு விகுதி ஆகவோ சாரியை ஆகவோ குறிப்பிடப்படுவதை இலக்கண விளக்கவுரைகளில் கண்டிலேன். மாறாக அமை மற்றும் மை என்பன விகுதியாகவோ சாரியை ஆகவோ விளக்கப்படுவதையும் ஒலியன் சார்ந்த அலசல் ஒன்றில் மை ஆனது ஈற்று ஒலியனாக விளக்கப்படுவதையும் கண்டுள்ளேன்.

செல்வா அவர்களின் பதில் எனது ஊகங்களை தெளிவாக்கியது.

மேலும் ஒரு வினா:

அருகு என்பதற்கு ஆன் சாரியை தொடர்ந்து மை எனக் கூட்டின் அருகான்மை ஆகிறது. அருகான்மை என்ற செல்லாக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொன்றா? அவ்வாறாயின் அது அருகிலுள்ளத் தன்மையா அல்லது அருகாமைப் போல அருகான்மையும் எதிர்மறைச் சொல்லா?

~சேது

2009/10/28 செல்வா <c.r.sel...@gmail.com>

mani

unread,
Oct 28, 2009, 7:41:54 AM10/28/09
to விக்சனரி
எனக்கு தெரிந்த வரையில் அருகண்மை,பெ.- மிக நெருங்கிய என்னும்
பொருளுடையதாகும்.
அண்மை - ஊர் தொலைவிலில்லை என்று குறிப்பதாகும்-அருகண்மையில்தானிருக்கிறது
என்று விடை வந்தால் மிகமிக நெருங்கிய பக்கத்தில்தான் உள்ளது என்பதே அதன்
பொருள்.
அதாவது அருகு அல்லது அண்மை என்றாலே நெருங்கிய பக்கம் என்ற பொருள்.
அருகண்மை என்பது அருகாண்மை - அருகாமை எனபது வழுச்சொல்லாகும்
ஆகவே நெருங்கிய-பக்கத்தில் என்பதற்கு அணமையில் என்றும் சேய்மையில்
என்பதற்கு
தொலைவில் உள்ளதற்கும் பயன்படுத்துகிறோம்.வழக்கில் பெரும்பாலும் கிட்ட
அல்லது பக்கத்தில் என்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளதுபோல் ஈழத்தவர்கள்
இடையில் கிட்டடியில்
என்ற வழக்கில் உள்ளது..
இவண்
ஆம்பூர் பெ.மணியரசன்

On Oct 27, 9:10 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> வணக்கம்.
>
>
>
> > காட்டு:
>
> > பணிவு + ஆமை = பணியாமை
> > கனிவு + ஆமை = கனியாமை
> > செய் + ஆமை = செய்யாமை
>
> மேலே கூறியுள்ளவை சரியல்ல என நினைக்கிறேன்.
>

> பணி என்பது வினை (ஏவல் வினை). பணி + ஆ = எதிர்மறை வினை வடிவம்.


> பணியான் ஏன்றால் அவன் பணியாதவன் அல்ல்லது அவன் பணியமாட்டான்.
> பணியா தன்மை (மை என்னும் பண்பு விகுதி) என்பதைப் பணியாமை என்கிறோம்.
> "ஆமை" என்று பிரிப்பது சரியல்ல.
>
> கனி என்பது கனிதல் என்னும் வினை. கனியாது என்றால் பழுக்காது என்று
> பொருள்.
> கனியா என்பது எதிர்மறை வினை வடிவம். மை விகுதி சேர்ந்து கனியாமை.
>
> அதே போல செய்யாமை.
>

> எனவே வினை (ஏவல் வினை) + + ஆ மை = எதிர்மறை வினையால் அமையும் பண்பு (இது


> இலக்கணப் பெயர் அல்ல).
>
> தமிழண்ணலில் கருத்து அருமையானது.
> அருகாமை என்பது குறையாமை, அஃகாமை, சுருங்காமை என்னும் பொருள் தருவது.
> அருகில் உள்ளது. அருகேதான் உள்ளது என்று சொல்லலாம்.
>
> பக்கத்திலே உள்ளது என்பதைப் பேச்சு வழக்கில்
> "பக்கத்தாலேதான் இருக்கு" என்பது போன்று
> அருகேதான் இருக்கு என்பதை அருகாதான், அருகாமைலதான் இருக்கு
> என்ரு ஆகியிருக்குமோ என எண்ணுகிறேன்.
>
> ஒரு வேர்ச் சொல்லுடன் "ஆமை"
>
> > என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்
>
> பணிவு, கனிவு என்பது வேர்ச்சொல் இல்லை (அவை வினை வடிவம் அல்ல,
> ஆனால் செய் என்பது வினை வடிவம்).
>
> செல்வா
>
>
>
> > அதே நெறியில் பார்த்தால்
>
> > அருகு + ஆமை = அருகாமை
>
> பணி
>

> Am 28. September, 10.53 Uhr, Venkatachalam Subramanian <v.dotth...@ gmail.com>
> schrieb:
>
>
>
> >.
> > ஓம். அன்புடன் தமிழறிஞர்களே வணக்கம்.


> > 'அருகாமை "என்ற சொல்லை அண்மை, மிக அருகில் என்ற பொருள்களில் பல
> > இடங்களிலும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ஒரு வேர்ச் சொல்லுடன் "ஆமை"
> > என்ற விகுதி சேர்ந்தால் வழக்கமாக எதிர்மறைப் பொருளைக் குறிக்கும்.
>
> > காட்டு:
>
> > பணிவு + ஆமை = பணியாமை
> > கனிவு + ஆமை = கனியாமை
> > செய் + ஆமை = செய்யாமை
>
> > அதே நெறியில் பார்த்தால்
>
> > அருகு + ஆமை = அருகாமை
>

> > என்பது நெருங்கியிராமை என்றல்லவா பொருள் தர வேண்டும். ஆனால் Online-Lexikon
> > இல் கூட Nähe என்றே அருகாமைக்குப் பொருள்


> > சொல்கிறது. இது புழக்கத்தில் வந்துவிட்டதால் தந்த மரியாதையா? அல்லது
> > இந்தச் சொல்லுக்குமட்டும் ஏதேனும் விதிவிலக்கா
> > -=-=-=-
> > தமிழண்ணலின் ஒரு கட்டுரை:
> > ========
> > அருகில் புகுந்த ஆமை
> > =======
> > எங்கள் வீட்டிற்கு அருகில், சிவன் கோயிலுக்கு அருகில் என்று கூற வேண்டிய
> > இடங்களில் அருகாமையில் என்று எழுதுகிறார்கள். செந்தமிழாக எழுதுகிற
> > நினைப்பு; எங்கிருந்து இந்த ஆமை "அருகில்" வந்ததென்று தெரியவில்லை.
> > கல்லாமை, அழுக்காறாமை, வெஃகாமை, விளங்காமை போன்ற எதிர்மறைத்

> > தொழிற் பெயர்கள் பலவுள. அருகாமையில் எதிர்மறை எதுவுமில்லை. அருகுதல் --

> > * கோவை தமிழாசிரியர் நா.கு. பொன்னுசாமி, 'அருகண்மை என்ற சொல்லே
> > அருகாமை
>
> ...
>
> Lesen Sie mehr »- Zitierten Text ausblenden --
>
> - Zitierten Text anzeigen --

Reply all
Reply to author
Forward
0 new messages