வீடியோ

27 views
Skip to first unread message

M.Mauran | மு.மயூரன்

unread,
Dec 22, 2007, 3:21:48 AM12/22/07
to tamil_wi...@googlegroups.com
வீடியோவை, வீடியோ என்றே தமிழில் புழங்குவதில் என்ன சிக்கல்?
தமிழுக்கு ஒரு புதிய சொல் வந்ததாக இருக்காதா?

-மு.மயூரன்

--
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com | http://www.noolaham.net

amachu

unread,
Dec 22, 2007, 6:07:15 AM12/22/07
to விக்சனரி


On Dec 22, 1:21 pm, "M.Mauran | மு.மயூரன்" <mmau...@gmail.com> wrote:
> வீடியோவை, வீடியோ என்றே தமிழில் புழங்குவதில் என்ன சிக்கல்?
> தமிழுக்கு ஒரு புதிய சொல் வந்ததாக இருக்காதா?
>

பதிவொளி ன்னு பயன்படுத்தி வருகிறேன்..

முன்னாடி இக்குழுவில் இதுபற்றி ஆலோசித்த நினைவு

அன்புடன்
ஆமாச்சு

amachu

unread,
Dec 22, 2007, 6:08:57 AM12/22/07
to விக்சனரி
On Dec 22, 4:07 pm, amachu <shriramad...@gmail.com> wrote:
>
> பதிவொளி ன்னு பயன்படுத்தி வருகிறேன்..
>
> முன்னாடி இக்குழுவில் இதுபற்றி ஆலோசித்த நினைவு
>

http://groups.google.com/group/tamil_wiktionary/browse_thread/thread/2fc4a16434f6237f/ea9a58caed6d479e?lnk=gst&q=audio#ea9a58caed6d479e

M.Mauran | மு.மயூரன்

unread,
Dec 22, 2007, 10:41:59 AM12/22/07
to tamil_wi...@googlegroups.com
ஆமாம் ஆமாச்சு. முன்னர் உரையாடியிருக்கிறோம்.

ஆனால் இந்தக்கேள்வி வீடியோவுக்கு மட்டுமல்ல .
இப்படியான ஒரு கருத்துத்தொடர்பான உரையாடலுக்காகவும்தான்.

நன்றி


மு.மயூரன்



Ravishankar

unread,
Dec 22, 2007, 10:54:35 AM12/22/07
to tamil_wi...@googlegroups.com
மயூரன்,

இப்படி ஒரு கேள்வி உங்களிடம் இருந்து வந்திருப்பது வியப்பளிக்கிறது.

என்ன காரணத்துக்காக ஆங்கில அடிப்படைச் சொற்களைக் கொண்டே தமிழ்ச் சொற்களை எல்லா இடத்திலும் உருவாக்கக்கூடாது என்று இராம.கி அவர்களுடன் முரண்பட்டோமோ அதே காரணம் தான் இங்கும்.

மொழி என்பது ஒரு ecosystem போல் என்று செல்வா சொல்வார். ஒவ்வொரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் தொடர்பு இருக்கும் போது தான் அந்த மொழி உயிர்ப்புடன் இருக்கும்.

video என்ற ஆங்கிலச் சொல்லுடன் visual என்பதைப் பொருத்தலாம். audio என்ற சொல்லுடன் audible என்ற ஆங்கிலச் சொல்லைப் பொருத்தலாம். இந்தச் சொற்களைப் பொருத்திப் பார்த்துப் புரியாத சொல்லைப்புரிந்து கொள்ள முடியும் வசதி ஆங்கிலேயருக்கு இருக்கிறது.

ஆனால், இந்தச் சொற் தொடர்பைக் கணக்கில் எடுக்காமல் தனிச்சொற்களை மட்டும் கடன் வாங்கினால் ஒன்று அந்தச் சொல் புரியாமல் தனித்து நிற்கும். அல்லது, அதைத் தொடர்ந்த சொற்களும் ஆங்கில மூலமாகவே மாறும்.

கலைச்சொல்லாக்கத்தில் இந்தத் தொடர்பை முக்கியமாக கருதுகிறேன். வலைப்பதிவு என்று சொன்னால், பதிவர், பதிவுலகம், பதிப்பித்தில் என்று தொடர்பு வருவதைப் பாருங்கள். அதே வேளை வலைப்பூ என்றால் பூக்காரன், பூவுலகம், பூப்பூத்தல் என்றா சொல்ல முடியும்? ஆகவே, தமிழ்ச்சொல்லாகவே இருந்தால் கூட இந்த சொற் தொடர்பைப் பேணுவது அவசியம்.

video என்ற ஒற்றைச் சொல்லைப் புகுத்துவது மூலம் வீடியோக்காரர், வீடியோக்கலை, வீடியோ கடை என்று எத்தனை இடங்களில் ஒரு சொல்லைப் புகுத்துகிறோம் பாருங்கள்..

இதையும் தாண்டி தமிழ் இலக்கணப்படி ஒவ்வொரு சொல்லும் தன்னாலேயே பொருளுடையது. ஒவ்வொரு சொல்லின் ஒலிப்பும் சில இலக்கணங்களுக்கு உட்பட்டது. இப்படி காரணமே இல்லாமல் கடன்வாங்கப்படும் சொற்கள் தமிழின் ஒலிப்பையும் பொருட்செறிவையும் குறைப்பதைக் காணலாமே?

அன்புடன்
ரவி

M.Mauran | மு.மயூரன்

unread,
Dec 22, 2007, 11:53:30 AM12/22/07
to tamil_wi...@googlegroups.com
//இப்படி ஒரு கேள்வி உங்களிடம் இருந்து வந்திருப்பது வியப்பளிக்கிறது. //

 ரவி,

ச்சோழியன் குடும்பி ச்சும்மா ஆடாதுலே மக்கா ;-)

-மு.மயூரன்

Ravishankar

unread,
Dec 22, 2007, 11:58:39 AM12/22/07
to tamil_wi...@googlegroups.com
;)

amachu

unread,
Dec 22, 2007, 12:11:27 PM12/22/07
to விக்சனரி
On Dec 22, 8:54 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
>
> என்ன காரணத்துக்காக ஆங்கில அடிப்படைச் சொற்களைக் கொண்டே தமிழ்ச் சொற்களை எல்லா
> இடத்திலும் உருவாக்கக்கூடாது என்று இராம.கி அவர்களுடன் முரண்பட்டோமோ அதே காரணம்
> தான் இங்கும்.
>

இங்கே சில இடங்களில் விதிவிலக்குகள் உள்ளன..

மனிதன் Man
அம்மா Ma
ஒன்று One

இன்னும் சில யோசித்ததுண்டு.. ஒத்த சொற்கள் இப்படி கலந்துதான்
கிடக்கின்றன. அப்பப்போ இப்படி செய்யறதுல சிக்கல் இல்லை.. அப்படியே
ஆக்கறது கொஞ்சம் சிக்கல்தான்..

> video என்ற ஆங்கிலச் சொல்லுடன் visual என்பதைப் பொருத்தலாம். audio என்ற
> சொல்லுடன் audible என்ற ஆங்கிலச் சொல்லைப் பொருத்தலாம். இந்தச் சொற்களைப்
> பொருத்திப் பார்த்துப் புரியாத சொல்லைப்புரிந்து கொள்ள முடியும் வசதி
> ஆங்கிலேயருக்கு இருக்கிறது.
> ஆனால், இந்தச் சொற் தொடர்பைக் கணக்கில் எடுக்காமல் தனிச்சொற்களை மட்டும் கடன்
> வாங்கினால் ஒன்று அந்தச் சொல் புரியாமல் தனித்து நிற்கும். அல்லது, அதைத்
> தொடர்ந்த சொற்களும் ஆங்கில மூலமாகவே மாறும்.
>

சில சொற்கள் இப்படி ஆவதில் குறையொன்றுமில்லை. (வீடியோவைக் குறிப்பிட்டு
சொல்லல) அதான் ஒன்ன விட்டாச்சே எல்லாத்தையும் விடலாம்னாலும் சிக்கல்..
ஆங்கிலம் இறக்குமதியை அனுமதிக்கறதுங்கறத நாம கவனத்தில் கொள்ளனும்..
ஜப்பான் முதலிய மொழிகளும் கூட.. எந்த அளவுக்கு நாம அனுமதிக்கணுமுன்னு
சொல்றது சிக்கலானதுதான்...

> video என்ற ஒற்றைச் சொல்லைப் புகுத்துவது மூலம் வீடியோக்காரர், வீடியோக்கலை,
> வீடியோ கடை என்று எத்தனை இடங்களில் ஒரு சொல்லைப் புகுத்துகிறோம் பாருங்கள்..
> இதையும் தாண்டி தமிழ் இலக்கணப்படி ஒவ்வொரு சொல்லும் தன்னாலேயே பொருளுடையது.
> ஒவ்வொரு சொல்லின் ஒலிப்பும் சில இலக்கணங்களுக்கு உட்பட்டது. இப்படி காரணமே
> இல்லாமல் கடன்வாங்கப்படும் சொற்கள் தமிழின் ஒலிப்பையும் பொருட்செறிவையும்
> குறைப்பதைக் காணலாமே?

புதிய சொற்கள் காலத்துக்கு காலம் உருவாகிதான் வருகிறது. எப்படி? யாரால்?
தமிழ் சொல், தமிழாகக்கப்பட்ட சொல் இப்படிதான் அணுக வேண்டியிருக்கு..
தமிழானால் மகிழ்ச்சி.. தமிழாக்கப்பட்டதானால் பரவாயில்லை..

சலாம், மகசூல், பஸ், மோட்டார், காபி, கமலம், ஜனங்கள் ...

தமிழாசிரியர்கள் தளராமல் இருப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.. வேறு
காரணங்களுக்காக பிறர் (எம்மையும் சேர்த்து) வளைவதும் ஏற்புடையதே..

இருக்கற சொல்லைத் தான் பயன்படுத்துவோம்னாலும் அத்தனையும் தெரியாத ஒரு
துர்பாக்கிய நிலை..

எல்லா தமிழ் சொல்லையும் தெரிஞ்சிக்கிட்டு வந்து தமிழாக்கும் போது நிலைமை
எப்படி இருக்குமுன்னு தெரியல.. தமிழறிவையும் வளர்த்துக்கிட்டு இணையா அதை
பயன்படுத்தி பழகி வருவது நடைமுறைக்கு ஒத்த அணுகுமுறையாகப் படுது..
காலமும் அனுபவமும் மெருகேற்றும்.. இப்போதைக்கு உடையாமல் வளைந்து
நிமிரலாம்..

அன்புடன்
ஆமாச்சு

Ravishankar

unread,
Dec 22, 2007, 12:52:05 PM12/22/07
to tamil_wi...@googlegroups.com
On Dec 22, 2007 6:11 PM, amachu <shrira...@gmail.com> wrote:
On Dec 22, 8:54 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
>
> என்ன காரணத்துக்காக ஆங்கில அடிப்படைச் சொற்களைக் கொண்டே தமிழ்ச் சொற்களை எல்லா
> இடத்திலும் உருவாக்கக்கூடாது என்று இராம.கி அவர்களுடன் முரண்பட்டோமோ அதே காரணம்
> தான் இங்கும்.
>

இங்கே சில இடங்களில் விதிவிலக்குகள் உள்ளன..

மனிதன் Man
அம்மா Ma
ஒன்று One

இன்னும் சில யோசித்ததுண்டு..

mango, rice, catamaran,  curry இதைக் கூடச் சொல்லலாமே :) mango மாங்காய் என்று தமிழாக்கப்பட்டதா தமிழ்ச்சொல் mango என்று ஆங்கிலத்தில் ஆனதா என்று பார்க்க வேண்டும். வடக்கு தெற்கு இரு திசையிலும் சொற்கள் செல்வதும் எது எங்கிருந்து போனது என்று குழம்புவதும் உண்டு தான். ஆனால், தமிழ்ப் புதுச்சொல்லாக்கத்துக்குத் தகுந்த நெறிகளாக இவற்றை மேற்கோள் காட்ட இயலாது.
 
சில சொற்கள் இப்படி ஆவதில் குறையொன்றுமில்லை. (வீடியோவைக் குறிப்பிட்டு
சொல்லல) அதான் ஒன்ன விட்டாச்சே எல்லாத்தையும் விடலாம்னாலும் சிக்கல்..
ஆங்கிலம் இறக்குமதியை அனுமதிக்கறதுங்கறத நாம கவனத்தில் கொள்ளனும்..
ஜப்பான் முதலிய மொழிகளும் கூட.. எந்த அளவுக்கு நாம அனுமதிக்கணுமுன்னு
சொல்றது சிக்கலானதுதான்...

ஒவ்வொரு மொழியின் இலக்கணம், இயல்பு, தன்மை வேறங்க. இதைக் கருத்தில் கொள்ளாமல் ஜப்பானில் செய்கிறார்கள் நாமும் செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது.
 

புதிய சொற்கள் காலத்துக்கு காலம் உருவாகிதான் வருகிறது. எப்படி? யாரால்?
தமிழ் சொல், தமிழாகக்கப்பட்ட சொல்  இப்படிதான் அணுக வேண்டியிருக்கு..
தமிழானால் மகிழ்ச்சி.. தமிழாக்கப்பட்டதானால் பரவாயில்லை..

சலாம், மகசூல், பஸ், மோட்டார், காபி, கமலம், ஜனங்கள் ...

வணக்கம், விளைச்சல், தாமரை, மக்கள் போன்ற சொற்களைக் கேள்விப்பட்டதில்லையா?

இருக்கிற சொல்லுக்குப் பதிலாகப் புதுச்சொல்லைக் கடன் வாங்கி அப்புறம் கடன் வாங்கிய சொல்லும் தமிழ் தான் என்று குழம்ப வேண்டியது..

ரவி


amachu

unread,
Dec 22, 2007, 1:01:16 PM12/22/07
to விக்சனரி
On Dec 22, 10:52 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:
> ஒவ்வொரு மொழியின் இலக்கணம், இயல்பு, தன்மை வேறங்க. இதைக் கருத்தில் கொள்ளாமல்
> ஜப்பானில் செய்கிறார்கள் நாமும் செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது.
>

தமிழிலும் அப்படி உண்டு.. அதான் சில சொற்கள் இப்படி ஆவதில்
குறையொன்றுமில்லைன்னு சுட்டியிருந்தேன்..


>
> > சலாம், மகசூல், பஸ், மோட்டார், காபி, கமலம், ஜனங்கள் ...
>
> வணக்கம், விளைச்சல், தாமரை, மக்கள் போன்ற சொற்களைக் கேள்விப்பட்டதில்லையா?
>

இதில் சில வசதிகளும் உள்ளன.. விடுதலையும் சுதந்தரமும் ஒரே பொருளைத்
தந்தாலும்.. லிபரேஷன் ப்ரீடம் பயன்படுத்தப்படும் கட்டுரைகளில் பொருள்
விளக்கப் பயன்படுகிறது..

quite, calm என்பவைகளுக்கு சாந்தம் அமைதின்னு பயன்படுத்த முடியுது..
வளைவதும் வளர்ச்சிக்கே...

அன்புடன்
ஆமாச்சு

வி. சு.

unread,
Jan 12, 2008, 12:23:35 PM1/12/08
to விக்சனரி
On Dec 22 2007, 1:21 pm, "M.Mauran | மு.மயூரன்" <mmau...@gmail.com>
wrote:
> வீடியோவை, வீடியோ என்றே தமிழில் புழங்குவதில் என்ன சிக்கல்?
> தமிழுக்கு ஒரு புதிய சொல் வந்ததாக இருக்காதா?

பழக்கமின்மையால்தான் தமிழ்ச் சொற்கள் வேறுபட்டுத் தெரிகின்றன.

ஒரு நூலில் பின்வருமாறு குறிபிடப் பட்டிருந்த நியாபகம்.

எல்லா வளங்களையும் உடைய ஒருவர் பிறரிடமிருந்து கடன் பெறுவதை இழுக்காகக்
கருதுவர். அது போன்றதே வேண்டாச் சொற்கடன்களாகும்.

Trengarasu

unread,
Feb 28, 2008, 11:09:04 PM2/28/08
to விக்சனரி
//mango, rice, catamaran, curry இதைக் கூடச் சொல்லலாமே :) mango
மாங்காய் என்று
தமிழாக்கப்பட்டதா தமிழ்ச்சொல் mango என்று ஆங்கிலத்தில் ஆனதா என்று
பார்க்க
வேண்டும். //
மாங்காய், கட்டுமரம் கரி என்றத் தமிழ் சொற்களை கடன் வாங்கியே
mango,catamaran, curry என்ற ஆங்கிலச் சொற்களை ஆக்கியிருக்கிறார்கள்.
ஆக்ஃச்போட் ஆங்கில அகராதியில் பார்த்தால் மூலமாக தமிழை தந்திருப்பது
புரியும்.

வீடியோவை சில தளங்கள் <<<<காணொளி >>> என பயனப்டுத்துகிறார்கள்

டெரன்ஃச்

K. Sethu

unread,
Feb 29, 2008, 12:25:26 AM2/29/08
to tamil_wi...@googlegroups.com

2008/2/29 Trengarasu <tmoha...@gmail.com>:

//mango, rice, catamaran,  curry இதைக் கூடச் சொல்லலாமே :) mango
மாங்காய் என்று
தமிழாக்கப்பட்டதா தமிழ்ச்சொல் mango என்று ஆங்கிலத்தில் ஆனதா என்று
பார்க்க
வேண்டும். //
மாங்காய், கட்டுமரம் கரி என்றத் தமிழ் சொற்களை கடன் வாங்கியே
mango,catamaran,  curry என்ற ஆங்கிலச் சொற்களை ஆக்கியிருக்கிறார்கள்.
ஆக்ஃச்போட் ஆங்கில அகராதியில் பார்த்தால் மூலமாக தமிழை தந்திருப்பது
புரியும்.

கரி அல்ல. கறி = curry

 

வீடியோவை சில தளங்கள் <<<<காணொளி >>> என பயனப்டுத்துகிறார்கள்

டெரன்ஃச்

டெரன்ஃச் - இதை எப்படி பலுக்குகிறீர்கள்? ஆங்கிலத்தில் எழுதி காட்ட முடியுமா?

~சேது

செல்வா

unread,
Feb 29, 2008, 1:07:27 PM2/29/08
to விக்சனரி


On Feb 29, 12:25 am, "K. Sethu" <skh...@gmail.com> wrote:
> 2008/2/29 Trengarasu <tmohana...@gmail.com>:

> > வீடியோவை சில தளங்கள் <<<<காணொளி >>> என பயனப்டுத்துகிறார்கள்
>
> > டெரன்ஃச்

காணொளி என்பது சரியாகப் படவில்லை. நிகழ்படம் என்பது பொருந்துவதாக
உள்ளது. "படம் பிடிக்கிறார்கள்"
என்பது சினிமாப் படம் "பிடிப்பதை"க் கூறுகிறார்கள். எனவே படம் என்று
வருவது தவறில்லை. வீடியோ என்பதில்
உள்ள கண்,காணல் என்பதை நேரடியாக மொழி பெயர்த்தல் கூடாது.
நிகழ்ந்துகொண்டிருக்கும் காட்சிகளைப் பதிவு செய்து, பிறகு
"ஓட்டி"க்காட்டுவதே வீடியோ. அசையாப் படமாக இல்லாமல் நிகழும் (நகர்ந்து
இயங்கும் காட்சிப்) படமாக உள்ளது நிகழ்படம்.
>
> டெரன்ஃச் - இதை எப்படி பலுக்குகிறீர்கள்? ஆங்கிலத்தில் எழுதி காட்ட முடியுமா?
>
Terrance டெரன்ஸ் (ஸ் என்னும் எழுத்தைத் தவிர்ப்பதாக இருந்தால் டெரன்சு
அல்லது டெரன்˘ச் அல்லது டெரன்˜ச் என குறிக்கலாம் என்று நினைக்கிறேன்;
காற்றொலி சகரத்தைக் குறிக்க டில்டெ அல்லது breve என்னும் குறியைப்
பயன்படுத்தலாம்.)

> ~சேது

செல்வா
Reply all
Reply to author
Forward
0 new messages