விக்சனரிகளில் தமிழின் இடம்

3 views
Skip to first unread message

வி. சு.

unread,
Jan 21, 2009, 12:23:31 PM1/21/09
to விக்சனரி
விக்சனரிகளில் தமிழ் விக்சனரி 10 அல்லது 11 ஆவது இடத்தில் உள்ளது. எந்த
இந்திய மொழியும் இதற்கு அருகில் இல்லை. சற்று தள்ளி தொலைவில், தெலுங்கு
10000+ மொழிகளின் வரிசையில் உள்ளது. கீழே பார்ப்பதை விட்டு கொஞ்சம் மேலே
பார்க்கலாமா? மேலே எட்ட முடியாத உயரத்தில் பிரெஞ்சும், ஆங்கிலமும் உள்ளன
(11 இலட்சம் வார்த்தைகளுக்கும் மேல்). இரண்டாவது மூன்றாவது இடத்திற்கு
இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது (8 இலட்சம் வார்த்தைகள்).

தமிழ் __மூன்றாவதாக__ வர வேண்டுமெனில் நாம் இன்னும் ~1.5 இலட்சம்
சொற்களைச் சேர்க்க வேண்டும். தானியங்கி முறையில் ஆங்கிலம் - தமிழ்
சொற்களைச் சேர்த்ததைப் போல, வேற்று மொழிச் சொற்களையும் சேர்க்க முடியும்,
இல்லையா? இதற்கான முயற்சிகள் தொடர்கின்றனவா? உங்கள் கருத்துக்களையும்
எதிர்பார்க்கிறேன்.

french 1,148,000
english 1,128,000
turkish 252,000
viet 228,000
russian 188,000
ido 145,000
polish 123,000
chinese 116,000
finnish 104,000
tamil 102,000
greek ???

ravid...@googlemail.com

unread,
Jan 21, 2009, 11:36:39 PM1/21/09
to tamil_wi...@googlegroups.com
தமிழ் விக்சனரியில் 1, 00, 000 சொற்கள் சேர்த்தது தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியைக் கொண்டே.

இதே முறையில் தானியங்கியைக் கொண்டு மேலும் சொற்களைச் சேர்க்க எண்ணியிருக்கிறோம். பிரச்சினை என்ன என்றால், த.இ.ப அகரமுதலி போல் இணையத்தில் பொதுக்கள தகவல் தளங்கள் இல்லாமல் இருப்பது தான். 

http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil உள்ள தமிழ்ச் சொற்களைச் சேர்க்க எண்ணி அப்பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிட்டவில்லை. இது குறித்த தொடர்புகளை யாராவது ஏற்படுத்தித் தந்தால் அவர்களது தரவுத் தளத்தைப் பெற்று விக்சனரியில் சேர்க்கலாம். 

இதே போல் இணையத்தில் காணப்படும் வேறு தமிழ் - தமிழ், பிறமொழி - தமிழ் தகவல் தளங்களைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டாலும் உதவும். 

கிரியாவின் தற்காலத் தமிழ் அகரமுதலி முழுக்க தரவுத்தள அடிப்படையில் செய்யப்பட்டதாக கேள்வி. இது போன்ற அச்சுப் பதிப்பு அகரமுதலிகளின் தரவுத் தளங்களை யாரும் பகிர்ந்து கொள்ள முன்வந்தாலும் விக்சனரியில் சேர்க்கலாம். 

அன்புடன்
ரவி

Bsubra

unread,
Jan 23, 2009, 12:09:32 AM1/23/09
to விக்சனரி
from Maalan:
http://snapjudge.blogspot.com/2009/01/tamil-wiktionary-dictionary-wiki.html

கணிச் சொற்களுக்கான ஓர் சொற்களஞ்சியம் (glossary)மைக்ரோசாஃப்ட் பாஷா
த்ளத்தில் கிடைக்கும். நான் நெறிப்படுத்தித் தொகுத்த அது ஒரு Community
Glossary அதாவது தமிழ்க் கணீனிச் சமூகத்தைச் சேர்ந்த பலர் பங்களித்தது.
அதிலிருக்கும் சொற்களை நீங்கள் எடுத்துக் கொள்வதைப்பற்றி யோசிக்கலாம்.

தமிழ் இணைப்பல்கலைக்கழகத்தின் தளத்தில் ஒரு கணிச் சொல்லகராதியும்,
பழனியப்பா பிரதர்சின் பால்ஸ் அகராதியும் உள்ளன.

கொலேன் பல்கலைக் கழகத்திடம் ஒரு தரவு தளம் இருந்ததாக நினைவு.

அன்புடன்
மாலன்

On Jan 21, 11:36 pm, ravidre...@googlemail.com wrote:
> தமிழ் விக்சனரியில் 1, 00, 000 சொற்கள் சேர்த்தது தமிழ் இணையப் பல்கலைக்கழக
> அகரமுதலியைக் கொண்டே.
> இதே முறையில் தானியங்கியைக் கொண்டு மேலும் சொற்களைச் சேர்க்க
> எண்ணியிருக்கிறோம். பிரச்சினை என்ன என்றால், த.இ.ப அகரமுதலி போல் இணையத்தில்
> பொதுக்கள தகவல் தளங்கள் இல்லாமல் இருப்பது தான்.
>

> http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamilஉள்ள தமிழ்ச் சொற்களைச்

Sundar

unread,
Jan 23, 2009, 5:09:35 AM1/23/09
to விக்சனரி

On Jan 22, 9:36 am, ravidre...@googlemail.com wrote:
> தமிழ் விக்சனரியில் 1, 00, 000 சொற்கள் சேர்த்தது தமிழ் இணையப் பல்கலைக்கழக
> அகரமுதலியைக் கொண்டே.
> இதே முறையில் தானியங்கியைக் கொண்டு மேலும் சொற்களைச் சேர்க்க
> எண்ணியிருக்கிறோம். பிரச்சினை என்ன என்றால், த.இ.ப அகரமுதலி போல் இணையத்தில்
> பொதுக்கள தகவல் தளங்கள் இல்லாமல் இருப்பது தான்.
>

> http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamilஉள்ள தமிழ்ச் சொற்களைச்


> சேர்க்க எண்ணி அப்பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகளுக்கு
> வெற்றி கிட்டவில்லை. இது குறித்த தொடர்புகளை யாராவது ஏற்படுத்தித் தந்தால்
> அவர்களது தரவுத் தளத்தைப் பெற்று விக்சனரியில் சேர்க்கலாம்.
>
> இதே போல் இணையத்தில் காணப்படும் வேறு தமிழ் - தமிழ், பிறமொழி - தமிழ் தகவல்
> தளங்களைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்டாலும் உதவும்.

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினாலோ, தானியங்கித்
திட்டத்தை முன்னெடுக்க விரும்பினாலோ, இந்தத் திட்டத்துக்கான பக்கத்தில்
( http://is.gd/gWcb ) பதியுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்,
சுந்தர்

Reply all
Reply to author
Forward
0 new messages