தமிழ் மொழி தொன்மையானதா சமஸ்கிருதம் தொன்மையானதா?

431 views
Skip to first unread message

Paul

unread,
Mar 13, 2008, 12:54:48 PM3/13/08
to விக்சனரி
அன்பு நண்பர்களே,

நான் விக்சனரியில் சேர்ந்து பல நாட்கள் ஆகின்றது. உங்களின் அருமையான
தகவல்களை தினமும் படித்து திளைக்கின்றேன்.

எனக்கு மிக நாட்களாக ஒரு சந்தேகம். இந்தக் குழுவில் கேட்கலாமா இல்லையா
என்று தெரியவில்லை. ஆனால் வழக்கத்திலிருந்த எழுத்து முறைகளின் மூலமும்
என் கேள்விக்குப் பதிலளிக்கலாம் என்பதால் இந்தக் குழுவிலேயே
கேட்கின்றேன்.

தமிழ் மொழி தொன்மையானதா அல்லது சமஸ்கிருதம் தொன்மையானதா?

தயவு செய்து யாரேனும் எனது கேள்விக்கு ஆதாரபூர்வமாக விடையளித்தால்
மிகவும் நன்றி சொல்வேன்.

நன்றி...

சீனிவாசன் அ. பால் ஜோசப்.

செல்வா

unread,
Mar 13, 2008, 1:33:04 PM3/13/08
to விக்சனரி
> தமிழ் மொழி தொன்மையானதா அல்லது சமஸ்கிருதம் தொன்மையானதா?
>
> தயவு செய்து யாரேனும் எனது கேள்விக்கு ஆதாரபூர்வமாக விடையளித்தால்
> மிகவும் நன்றி சொல்வேன்.

இரண்டுமே மிகவும் தொன்மையான மொழிகள். எவ்வளவு பழமையானது
என்பதை கணிக்க இயலவில்லை. ஆனால் பலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
சமசுகிருதத்திற்கு முன்வடிவமான வேதமொழியில் வேதங்களே மிகவும்
பழமையானவை (இருக்கு வேதம் அவற்றுள் பழமையானது). அவற்றின் காலம்
கி.மு 1500க்கும் முன்னது என்பார்கள். இருக்கு வேதத்திலேயே திராவிட/
தமிழ்ச்
சொற்கள் இருப்பதால், தமிழும் இணையான பழமை உடையது, ஆனால் தமிழில்
கிடைத்துள்ள நூல்கள் கி.மு 300க்கும் முன்னதென்று கூறுவது கடினம்
(தொல்காப்பியத்தின்
சில பகுதிகள் கி.மு 700க்கும் முன்னது, கி.மு 1000க்கும் முன்னது, கி.மு.
2000க்கும் முன்னது
என்றெல்லாம் கூறுவோர்கள் உண்ட்). அதேபோல, வேதம் கி.மு 1500க்கும் முன்னது
என்பதற்குப்
போதுமான அடிச்சான்றுகள் இல்லை (அது வாய்வழியாக வந்தது). வேதத்திற்கு
சான்றுகோளாக கிடைக்கும் "பதிவு" கி.பி. 11 ஆம் நூறாண்டினது. வேதத்திற்கு
முதன்முதலாக
சயனாச்சாரியர் (இறந்த ஆண்டு கி.பி. 1387 ) என்பவர் 14 ஆம் நூற்றாண்டில்
உரை எழுதினார்.
ஆர்வார்டு பல்கலைக்கழக இந்தியவியல் ஆய்வாளர் மைக்கேல் விட்சல் (Michael
Witzel ) என்பவரின்
கருத்துப்படி வேதங்கள் கி.மு 1500 முதல் கி.மு 500 வரையிலான
காலப்பகுதியில் எழுதிருக்க வேண்டும்.
கீழ் எல்லையாக கி.மு 150 என்று கூறுகின்றார்.

இவையெல்லாம் நூல்களுக்கு, மொழிகளுக்கு அல்ல. தமிழும் சமசுகிருதமும்
மிகப்பழமையான
மொழிகள் என்பதில் ஐயம் வேண்டியதில்லை. அவற்றுள் எது பழமையான மொழி என்பது
அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. இரண்டுமே தொன்மையான செவ்வியல்
செம்மொழிகள்.
இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும், தமிழ் உட்பட, தாக்கம் ஏற்படுத்திய
செல்வாக்கு மிக்க
மொழி சமசுகிருதம். அதே போல தமிழும், வட பிராகிருத மொழிகளும்
சமசுகிருதத்தின் மீது
தாக்கம் ஏற்படுத்தியது (இதனை சமசுகிருத வன்சார்பு ஆர்வலர்கள் ஒப்புக்
கொள்ளமாட்டார்கள், ஆனால்
மறுக்கொணா உண்மை). சமசுகிருதத்தைப் பேணி வளர்த்தெடுத்தவர்களில் தமிழர்கள்
மிக
முன்னணியினர். அதே போல தமிழுக்கு ஆக்கம் தந்தவர்களுள் சமசுகிருதப்
பண்பாட்டை ஏற்றுக்கொண்ட
பரம்பரையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ, இசுலாமியப் பண்பாட்டு
வழி வந்தவர்களும், சமண, பௌத்த
பண்பாட்டு வழி வந்தவர்களின் ஆக்கங்களும் குறிப்பிடத்தக்கன (சமயப் பண்பாடு
எதுவானாலும்,
அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள், ஒரு சிலர் பிற மொழியாளர்கள்).

இம் மறுமொழி விக்கி அகரமுதலிக் குழுமமாகிய இதற்கு ஏற்றதல்ல எனினும்,
உங்கள் கேள்விக்கு
மறுமொழியாகவும், சில தொடர்பான கருத்துக்களையும் முன் வைத்துள்ளேன்.
குழுமத்தினர்,
மன்னிப்பார்களாக.

செல்வா

Ravishankar

unread,
Mar 13, 2008, 1:45:19 PM3/13/08
to tamil_wi...@googlegroups.com
செல்வா,

இது போன்ற உரையாடல்கள் இந்தக் குழுமத்தில் முழுமையாக ஏற்புடையதே. ஏன் மன்னிப்பு எல்லாம் கேட்கிறீர்கள் :)

எப்போதும் சொற்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் அலுக்கலாம். தவிர, இது போன்ற தமிழ் சார்ந்த கேள்விகளை மட்டும் கேட்பதற்கு என்று வேறு குழுமம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

ரவி

சீனிவாசன்

unread,
Mar 16, 2008, 6:02:31 AM3/16/08
to விக்சனரி
அன்பு நண்பரே செல்வா,

மிகவும் அருமையான பதில். பல வரலாற்று சான்றுகளை முன்வைத்துள்ளீர்கள்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நண்பர் ரவி கூறியதைப்போல நீங்கள் மன்னிப்பு கேட்கத்தேவையே இல்லை. மிக
அருமையான பதிலை என்னுடைய கேள்விக்கு வழங்கியிருக்கின்றீர்கள்.

மிகவும் நன்றி...

எனக்கு இன்னொரு கேள்வி உண்டு... அது கண்டிப்பாக இந்தக் குழு
சார்ந்ததுதான். நீங்கள் அணைவரும் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளுக்கு
தமிழ் வார்த்தைகளை கொடுக்க முயலும் சிறந்த செயலை செய்து வருவதை நான்
இங்கு இணைந்த நாளிலிருந்து கண்டு மகிழ்கின்றேன். ஆனால், ஏன் மிகவும் தூய
தமிழ் சொற்களாக தேடுகின்றீர்கள்? சாதாரண மக்களுக்கு இது புரியாதல்லவா?
தொழில்நுட்பமே எவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதுதானே? பின்
ஏன் அதை பயன்படுத்த உதவும் சொற்களை எவருக்கும் எளிதில் புரியாத தூய
தமிழ் சொற்களாக்குகின்றீர்கள்? தமிழில் அந்தந்த தொழில்நுட்ப சொற்களை
விவரிக்கும் வகையிலான எளிதான சொற்களை உபயோகிக்கலாமே? தமிழ் மொழி ஒரு
தலைச் சிறந்த மொழி. அதில் இல்லாத வார்த்தைகளே இல்லை என்று எனக்கு ஒரு
எண்ணம். நானும் தமிழுக்கு தொண்டாற்ற தமிழ் அமிழ்தம் எனும்
விக்கிபீடியாவை எனது சொந்த இணையதள வழங்கியில் பதிவேற்றியுள்ளேன் (http://
www.tamilamirtham.org). இதற்கு நான் மீடியாவிக்கி மென்பொருளை
பதிவேற்றியபின் தமிழ் மொழியை தேர்வு செய்து பார்த்தால் பெரும்பாலானவை
புரிந்து கொள்ள முடியாத தமிழ் மொழி வார்த்தைகளே. அணைவரும் புரிந்து
கொள்ளும்படியான தமிழ் வார்த்தைகளை உபயோகிக்க ஒரு சிறு முயற்சியாக (நான்
செம்மொழியில் தேர்ந்தவனல்ல) என்னுடைய தமிழ் அமிழ்தம் வலைத்தளத்தின்
தமிழ் அமிழ்தம் சமூகத்தை (http://community.tamilamirtham.org/) தமிழ்
படுத்தியிருக்கின்றேன் (அது ஆங்கில ஐபி.போர்டு எனும் சமூகங்களை
உருவாக்கும் மென்பொருள்). இந்த முயற்சி சரியானதா? இல்லை, தூய தமிழ்
சொற்கள்தான் சரியானதா? தயவு செய்து நேரம் கிடைக்கும் போது எனக்கு
விளக்கவும்.

உங்களின் முயற்சிக்கும் எனது கேள்விக்கான பதிலுக்கும் மிகவும் நன்றி...

சீனிவாசன் அ. பால் ஜோசப்

M.Mauran | மு.மயூரன்

unread,
Mar 16, 2008, 6:41:03 AM3/16/08
to tamil_wi...@googlegroups.com
சீனிவாசன்,

தூயதமிழ் சொற்கள் என்பதால் எதைக் கருதுகிறீர்கள் என்று புரியவில்லை.

உங்கள் தமிழாக்கத்தை என்னோடு அருகிலிருந்த நண்பருக்கு இப்போது காட்டினேன்.
பின்வரும் சொற்கள் தனக்கு என்ன என்று புரியவில்லை என்றார். தூய தமிழாக இருக்கிறதே என்று.
சொற்கள் வருமாறு:

நுழைவு
வலைக்குறிப்புகள்
சமூகம்
பதிவிறக்கம்
சுற்றறிக்கை
துணுக்கு


முகப்புப் பக்கத்திலிருந்து மட்டுமே இந்தச்சொற்கள் எடுக்கப்படுள்ளன.
இந்தச்சொற்களின் அர்த்தம் தனக்கு புரியவில்லை என்று சொன்னார்.



இவ்வாறான சொற்களைப்பற்றித்தான் நீங்கள் தூயதமிழ் என்று சொல்கிறீர்களா?

-மு.மயூரன்

amachu

unread,
Mar 16, 2008, 12:00:17 PM3/16/08
to விக்சனரி
On Mar 16, 3:02 pm, சீனிவாசன் <sapauljos...@gmail.com> wrote:
> இங்கு இணைந்த நாளிலிருந்து கண்டு மகிழ்கின்றேன். ஆனால், ஏன் மிகவும் தூய
> தமிழ் சொற்களாக தேடுகின்றீர்கள்?

தமிழ் சொற்கள் அவ்வளவுதான்! ஆனால் இப்படி எம்மிடமும் கேட்பவர் பலருண்டு!
இங்கே பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு தானாக முயற்சி செய்யாது போனால்
தமிழுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக பொறியியல்/
தொழில்நுட்ப கல்லூரிகள். காண நேரிடும் பல சொற்கள் நாம் பள்ளிகளில்
அருஞ்சொற்பொருட்கள், பிரித்து எழுதுக, சேர்த்து எழுதுக இப்படி பல
வகைகளில் படித்தவையே.

தொடர்ச்சியான பயிற்சி குறைந்து போகவே அவை மதியின் அடியே மறைந்தே
இருக்கின்றன! சில நேரங்களில் சில சொற்கள் எங்கிருந்து எழும்புகின்றன
என்றே தெரியாது! பளிச்சுன்னு! என்னிக்கோ எங்கேயோ படிச்சு ஒப்பிச்ச
செய்யுளிலிருந்து வருவதை பின்னர் உணர்வதுண்டு!

இன்னொரு விடயம். இங்கே ஆங்கில செய்தி தாட்களை பலர் வாசிப்பதே ஆங்கில
அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே! ஒரு பக்க கட்டுரையில்
பத்து சொற்களுக்கு டிக்ஷனரி புரட்டாது போனால் அது நல்லதொரு ஆங்கிலக்
கட்டுரையாக ஏற்கப்படுவது அரிது. அதே போல் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதும்
போதும் எளிமையான சொற்கள் இருக்கும் போதே நல்ல வொகாபுலரி போட்டு
திறமையெல்லாம் கொட்டி எழுதினாதான் அதற்கு ஒரு மரியாதை.

இதை சற்றே தமிழுக்கு பொருத்திப் பார்த்தால் நிலைமை தலை கீழ். அதிகம்
பழக்கத்தில் இல்லாத சொற்களைப் பயன்படுத்தினால் சென்ற தலைமுறை மனிதனாக
கருதப் படலாம்! பலரும் படித்திருக்க வாய்ப்புள்ள திருக்குறள் சொற்களை
ஆண்டால் சில நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்தவராகலாம்!

பள்ளிச் செல்லும் சிறார்களுக்காக பெற்றோர் ஆக்ஸ்போர்டு முதல் லிட்டிள்
பிளவர் வரை பல நூறு ரூயாய் செலவு செய்து ஆங்கில அகராதிகள் வாங்கித்
தருவதை பார்த்திருக்கின்றேன்! அவர்களில் பலரிடம் எளியமையான ஒரு தமிழகராதி
கூட இல்லாதிருக்கும்.

இணையத்தில் கிடைக்கும் கதிர்வேலகராதி முதற்கொண்டு எவ்வளவு அகராதிகள்
இருக்கின்றன! கழகத் தமிழ் கையகராதியின் விலை நாற்பது ரூபாய்! தெரியாத
சொல்லொன்றை காண நேரிட்டால் இவற்றை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும் என ஏன்
தோன்றுவதில்லை? விடை அவரவர் மனமே.

பழைய பதில் தான். சித்திரமும் கைப்பழக்கம்! செந்தமிழும் நாப்பழக்கம்!

அன்புடன்
ஆமாச்சு









சீனிவாசன்

unread,
Mar 17, 2008, 6:09:11 AM3/17/08
to விக்சனரி
அன்பு நண்பரே மயூரன்,

உங்களுடைய கருத்து எனக்கு சிறிது குழப்பம் தருகின்றது. உண்மையில், நான்
என்னுடைய தமிழ் அமிழ்தம் சமூகத்தை சில நண்பர்களிடம் காட்டி அவர்களுக்கு
புரிகிறது என்பதை உறுதி செய்து கொண்டுதான் அவ்வாறு எழுதினேன். ஆனால்,
நிறைய நண்பர்களிடம் காட்டவில்லை என்பது உண்மைதான். நான் அதில் ஆராய்ச்சி
செய்யவில்லை. நீங்கள் குறிப்பிட்ட சொற்கள் அணைத்துமே (பதிவிறக்கம்,
வலைக்குறிப்புகள் நீங்கலாக) அணைத்து தமிழ் பள்ளிகளிலும் அரசாங்க
அலுவலகங்களிலும் பயன்படுத்தப்படும் தினசரி வார்த்தைகள். ஆனால் அது
உங்களுடைய நண்பருக்கு புரியவில்லை என்கிறீர்கள். ஆக, நானே பிழை
செய்திருக்கின்றேன் இங்கே. இது சரியெனில், என்னுடைய கேள்வி இப்போது
மறுபடியும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஏன் நாம் அணைவரும்
தினந்தோறும் பயன்படுத்தும், நடைமுறையில் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய
தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில்லை? நண்பர் ஆமாச்சு சொல்லியதை
நான் ஓரளவு ஏற்றுக்கொள்வேன். ஆனால் தமிழ் வலைத்தளங்களை படிக்க அல்லது
கணினி மென்பொருள்களை இயக்க அகராதியின் துணை வேண்டுமாயின் அது எத்தைனை
பேரை சென்றடையும்? என்னுடைய குறிக்கோளே, இந்த நவீன உலகத்தில் தமிழ்
மொழியை அழியாமல் பாதுகாப்பது தான். ஆனால், அதற்காக தமிழ் சொற்களை
திணிக்கக்கூடாது அல்லவா? எந்த ஒரு சாப்பாட்டையுமே முதலில் எளிதில் ஜீரணம்
ஆகக்கூடிய வகையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அகராதியின் துணையை தேட
மக்களுக்கு பல இலக்கியங்கள் இருக்கின்றன. இதை அவர்களிடம் கொண்டு
சேர்த்தால், அவர்கள் அதை படித்து மகிழ்வுற கண்டிப்பாக அகராதியை அணுகியே
ஆகவேண்டும். அவ்வாறு அணுகினால், அவர்களால் தமிழ் மொழி இன்னமும் வளரும்
அல்லவா? அந்த முயற்சியாகத்தான் நான் தமிழ் அமிழ்தத்தை துவக்கினேன்
(இன்னமும் அங்கே ஒன்றும் போடவில்லை என்பது வேறு விஷயம். நான் கொஞ்சம்
பிஸியாகிவிட்டேன்... :) ). ஆனால், ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு நேரத்தில்
உழைக்கக்கூடிய தமிழ் பேராசிரியர்களை நான் தேடிக்கொண்டிருக்கின்றேன். அது
வேறு கதை. மன்னிக்கவும், என்னுடைய கேள்வியிலிருந்து விலகிவிட்டேன்.

ஆகவே, தமிழ் மொழியின் எளிய உருவத்தை தொழில்நுட்பங்களில் பயன்படுத்துவது
வேண்டுமா அல்லது வேண்டாமா?

தயவு செய்து பதிலளியுங்கள் நண்பர்களே...

Ravishankar

unread,
Mar 17, 2008, 6:25:20 AM3/17/08
to tamil_wi...@googlegroups.com
மயூரன் - உங்கள் நண்பருக்குத் தமிழில் எந்த அளவு அறிமுகம் உண்டு என அறிய ஆவல். அவரை ஒத்து எத்தனை வீதம் தமிழர்கள் இருப்பார்கள் என்று அறிய உதவும்.

நுழைவு, சமூகம், துணுக்கு போன்ற சொற்கள் கூட புரியாவிட்டால், வேறு எப்படி இவற்றை எழுதுவது? பேச்சுத் தமிழில் எழுதினால் தான் உண்டு.

உள்ளே போ, கூட்டம், bit இப்படி எழுதலாம். இல்லை, பேசாமல் ஆங்கிலத்திலேயே எழுதி விடலாமோ?

:(

ரவி

M.Mauran | மு.மயூரன்

unread,
Mar 17, 2008, 6:33:06 AM3/17/08
to tamil_wi...@googlegroups.com
சீனிவாசன்,

உங்கள் வலைத்தளத்திலிருந்தே சொற்களை எடுத்து உதாரணம் காட்டியதற்கான காரணம், புரிகிறது அல்லது புரியவில்லை என்பது எதைச்சார்ந்திருக்கிறது என்பதை விளக்கத்தான்.

In certain filesystem types like the File Allocation Table (FAT) filesystem of MS-DOS or the NTFS filesystem of Windows NT, a cluster is the unit of disk space allocation for files and directories. In order to reduce the overhead of managing on-disk data structures, the filesystem does not allocate individual disk sectors, but contiguous groups of sectors, called clusters.

இந்தப்பந்தியை சாதாரண ஆங்கிலக்கணினிப்பயனருக்கு வாசிக்கக்கொடுத்தால் அவருக்குப் புரியும் என்றா நினைக்கிறீர்கள்?

அப்படியானால் புரியாத தூய ஆங்கிலத்தில் கலைச்சொற்கள் ஆக்கப்பட்டுள்ளன என்றா அர்த்தம்?

இல்லை. மாறாக, சொற்கள் புழக்கத்துக்கு வந்து அதை நாம் பழகிக்கொள்ளும்போதே எளிமை வருகிறது.  பதிவிறக்கம் என்ற சொல் கூட பரவலாகப் பயன்படுத்தப்படுவதாலேயே உங்களுக்கு எளிய சொல் போல தெரிகிறது. பதிவிறக்கம் என்று பயன்படுத்துவதை விடுத்து "டவுன்லோடு" என்று பயன்படுத்தியிருந்தீர்களானால் இன்னும் பலருக்கு எளிமையாகப்புரிந்திருக்கும்.

எனக்கு இணையம் அறிமுகமான ஆரம்ப காலத்தில் sign up, sign in, sign out போன்ற வார்த்தைகள் ஏன் வருகின்றன என்பது புரியவில்லை. பிறகு பல இடங்களில் அவற்றைப்பார்த்து அவற்றின் பயன்பாட்டை அறிந்தபின் இப்போது எளிய வார்த்தைகளாகப் படுகினறன. விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கத்தொடங்கிய ஆரம்ப காலங்களில் "புகுபதிகை" என்ற சொல் எனக்கு கடுமையனதாகத் தெரிந்தது. இது ஏறத்தாழ முன்னர் sign in  என்ற சொல் கடுமையாகத்தெரிந்ததற்கு ஒப்பானது.
பிறகு அன்றாடம் விக்கிபீடியாவுடன் பழக ஆரம்பித்தபிறகு அங்குள்ள சொற்கள் மிக எளிமையானவையாகத் தோன்றின.

விக்கிபீடியாவை தமிழிலேயே நான் பயன்படுத்தி வருவதால் எனக்கு ஆங்கில விக்கிப்[ஈடியாவில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள் பல குழப்பம் தருவனவாகவும் விளக்கம் குறைந்தனவாகவும் தோன்றுகின்றன.

இதைத்தான் ஆமாச்சுவும் சொல்ல வந்தார்.

எளிமை எது , விளக்கம் எது என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் முதன்மையானது புழக்கமே.
இணையம் என்பது இன்டர்நெட்டைத்தான் குறிக்கிறது என்று அந்தச்சொல்லை அறிந்திராத ஒருவர் உய்த்துணரவே வாய்ப்பில்லை.

ஆனால் தேவையற்ற கடுமைகளை சொற்களில் புகுத்துவது தொடர்பாக உங்கள் கண்டனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ் அமுதத்தில் உங்கள் சொற்கள் அழகானவை.

நாம் உருவாக்கும் சொற்கள் தம்மளவில் நன்கு பொருளை உணர்த்துமானால், அந்தச்சொற்கள் நல்லவையே. பயனுள்ளவையே. அவற்றை நாம் புழங்க ஆரம்பித்த பிறகு அவை மகக்ளிடம் எளிய சொற்களாக வந்தடையும்.

"ஆணைக்குழு" "திணைக்களம்", "சேமலாப நிதியம்", "பாராளுமன்றம்", "வேதிப்பொருள்", "மடக்கை அட்டவணை", "வானொலி" போன்ற சொற்கள் கூட வந்த புதிதில் கடுமையானவையாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அன்றாடம் பேசப்படும்போது நாளிதழ்களில் பயன்பாட்டுக்கு வரும்போது இவை எளிமையன, மகளுக்கு விளங்கும் சொற்களாக மாற்றம் பெறுகின்றன.

ஆகவே எளிமை என்பதை மிகக்கடுமையான நிபந்தனையாகக் கலைச்சொல்லாக்கத்தில் விதிக்கதேவைய்ல்லை.

கலைச்சொல், தான் குறிக்கும் பொருளை சரியாக உணர்த்த வேண்டும். மக்கள் மொழி கற்க வேண்டும். வீணான இடர்களை சொற்களுள் புகுத்தாமல் இருக்க வேண்டும். அவ்வளவே.

ஆனால் நான் வலுவாக நம்புகிறேன், கலைச்சொற்களின் உருவாக்கத்தில் புலமையாளர்களும், இடைமுகப்புச் சொற்களின் உருவாக்கத்தில் பயனாளர்களும் அதிகம் பங்கேற்கவேண்டும். இது தலைகீழாகும்போது குழப்பங்கள் மிஞ்சுகின்றன.


தோழமையுடன்,

மு.மயூரன்


amachu

unread,
Mar 17, 2008, 10:21:17 AM3/17/08
to விக்சனரி
On Mar 17, 3:33 pm, "M.Mauran | மு.மயூரன்" <mmau...@gmail.com> wrote:
>
> கலைச்சொல், தான் குறிக்கும் பொருளை சரியாக உணர்த்த வேண்டும். மக்கள் மொழி கற்க
> வேண்டும். வீணான இடர்களை சொற்களுள் புகுத்தாமல் இருக்க வேண்டும். அவ்வளவே.
>
> ஆனால் நான் வலுவாக நம்புகிறேன், கலைச்சொற்களின் உருவாக்கத்தில்
> புலமையாளர்களும், இடைமுகப்புச் சொற்களின் உருவாக்கத்தில் பயனாளர்களும் அதிகம்
> பங்கேற்கவேண்டும். இது தலைகீழாகும்போது குழப்பங்கள் மிஞ்சுகின்றன.
>

மேலும், ஒரு சொல் கடினமாக எப்போது தோன்றத் துவங்குகிறது? தமிழ்ச் சொல்
ஒன்றைப் பார்த்து அதற்கு நிகரான ஆங்கிலச் சொல் என்னவாக இருக்கும் என
யூகிக்கும் போது துவங்குகிறது. இவ்விடத்தில் பழக்கம் குறைந்த தமிழ்ச்
சொல், பழக்கப்பட்ட ஆங்கிலச் சொல்லைக் காட்டிலும் சற்றே விகாரமாய்
தோன்றுவதில் வியப்பில்லை.

ஒரு கட்டுரையை வாசிக்கும் போது நமக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்துக்
கொண்டு வாசித்தால் இது விலகத் துவங்குமோ? அப்படித்தான் எல்லா இடங்களிலும்
செய்யவும் செய்கிறோம். பலரும் ஒரு உரையை வாசித்து அதில் வரும்
சொல்லொன்றுக்கு ஆங்கிலச் சொல் என்னன்னு கேட்டு பாரு அது எவ்ளோ ஈஸியா
இருக்குன்னு கேட்க கேட்டிருக்கிறேன்! இத்தகைய இடங்களுக்கு வரும் போது
மட்டும் அந்த ஒப்பீட்டு குணம் எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை.

பொதுவாக எழுதப் படுவது யாருக்கு ? ஆங்கிலம் தெரியாது தொழில் நுட்பம் அறிய
வேண்டும் என ஆர்வம் உள்ளவர் முதல் இலக்கு. அவர் நிச்சயம் ஆங்கிலச்
சொல்லையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகையோரிடம் சிக்கலிருக்க
வாய்ப்பில்லை. ஆங்கிலம் தெரிந்தவராக இருந்தாலுமே அதுதான் முதல் தடவை
இத்தகைய சூழலுக்கு ஆட்படுகிறார் என்றாலும் இது தான் நிலைமையாக இருக்க
வாய்ப்பு. (நிச்சயம் அவர் அம்மா என்றால் மதர் என்று எப்படி அறிய வந்தாரோ/
வருவாரோ அதே முறையில் இதனையும் அறிய வருவார். அறிந்து கொள்ளவும் வேண்டும்
என்பது இன்றைய தேவையும் கூட.)

மேலும் ஒவ்வொரு சொல்லும் காணும் இடத்துக்கோ, வாசிக்கப்படும் பத்திக்கோ
தொடர்புடையதாவே இருக்கும். அதனோடு பொருந்தி பொருத்தி வாசிக்கும் போது
புரிந்து கொள்வதில் சிக்கல் இராது என்றே கருதுகிறேன். இப்படி காணும்
போதெல்லாம் உடனுக்குடன் நிகரான ஆங்கிலச்சொல் என்னவென்று யோசிக்கத்
துவங்கும் போது சிக்கலாய் இருப்பது போல் ஒரு தோற்றம்! அதுவும்
பழக்கத்தால் போய்விடும்.

செல்வா

unread,
Mar 17, 2008, 10:58:57 AM3/17/08
to விக்சனரி
அன்புள்ள சீனிவாசன்,

வணக்கம்.

நீங்கள்:
>ஆனால், ஏன் மிகவும் தூய
> தமிழ் சொற்களாக தேடுகின்றீர்கள்? சாதாரண மக்களுக்கு இது புரியாதல்லவா?

இதற்கு தமிழ் விக்கிபீடியாவிலும் பிற இடங்களிலும் என் கருத்தை
அடிக்கரணியங்களோடு (அடித்தேவைகளோடு, காரணங்களோடு) கூறியிருக்கின்றேன்.
ஒரு சில கோணங்களில் இதற்கு மறுமொழி தருதல் வேண்டும். ஆனால் இவற்றுள்
சிலவற்றை
கேள்விகளாகவும், சிலவற்றை என் கருத்துக்களாகவும் முன்வைக்க விழைகிறேன்.

(1) கலைச்சொற்களாகட்டும், எச்சொற்களாகட்டும், தெரியாத ஒன்றை தமிழர்களாகிய
நாம் எப்படித் தெரிந்து கொள்கிறோம்? அது ஆங்கிலச் சொல்லாக இருந்தால் என்ன
செய்கிறோம், தமிழ்ச்சொல்லாக இருந்தால் என்ன செய்கிறோம்? ஒரு ஆங்கிலேயர்,
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ஒரு புதிய ஆங்கிலச்சொல்லைக் காண
நேர்ந்தால் என்ன செய்கிறார்?. எடுத்துக்காட்டாக முதன்முதல் ஓர்
ஆங்கிலேயரோ, தமிழரோ முன்பின் கேட்டிராமல் ellipse என்னும் சொல்லை
எதிர்கொள்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

(2) தமிழில் *முறைப்படி* எழுதவோ, பேசவோ, தமிழர்களுக்கு ஆங்கிலேயர்கள்,
செருமானியர்கள் போன்றவர்களோடு ஒப்பிடும்பொழுது போதிய வாய்ப்புகள்
உள்ளனவா? (அறமன்றங்கள், கல்விக்கூடங்கள், அலுவலகங்கள், இசைநிகழ்வுகள்,
கோயில்வழிபாடுகள், நடனநிகழ்வுகள், ஒருவர் வீட்டில் நடக்கும் நல்லது
கெட்டதற்கான சடங்குகள் (திருமணம், குழந்தை பிறப்பு, வளைகாப்பு,
இறப்பு..). செய்தி ஊடங்கங்கள் உள்ளன, அன்றாடப் பேச்சும் (தமிங்கிலம்..)
பெரும்பாலும் நிகழ்கின்றது. ஆனால் அதல்ல நான் கூறுவது. ஒரு ஆங்கிலேயரோடோ,
செருமன், சப்பானியர் போன்ற மொழியினர்களோடோ ஒப்பிடும் பொழுது, *முறைப்படி*
*வரையறை* செய்வது போலவோ, பொதுமுறையான உரைநடைப்பேச்சாகவோ (formal,
official, legal, systematic....) *போதிய* வாய்ப்புகள் உள்ளனவா?

(3) தூய தமிழ், தனித்தமிழ் என்றெல்லாம் நினைப்பதைவிட
எச்சொல் பயன் மிகுந்ததாய்,
பல்வேறு வகையாய் கிளைக்க வல்லதாய்,
பிற சொற்களோடு தொடர்பு கொண்டு (பொருள்வழியான) உள்ளிணைப்பு கொண்டு உள்வலு
சேர்ப்பதாய்,
பொதுவாக தமிழ் மக்கள் எல்லோருக்கும் (மிகப்பெரும்பாலார்க்கும்)
ஒருவாறேனும் ஒரு சிறிதேனும் பொருள் உணர்த்தவல்லதாய், "எல்லோரும்"
பயன்படுத்ததக்கதாய்
இருப்பது என்று நினைத்து ஆக்குதல் நல்லது.
ஒரு சில எடுத்துக்காட்டுகள் கூறினால் இன்னும் எளிதாகப் புரியக்கூடும்.
நானும் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப்
பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் என்பவரும் தமிழ் மின்குழுமத்தில் உரையாடிய
பொழுது,
சற்றேறக்குறைய கீழ்க்காணுமாறு உரையாடல் நிகழ்ந்தது.
"எல்லோரும்" சீக்ரம் என்றுதானே சொல்கிறார்கள் ஏன் "விரைவு" என்று சொல்ல
வேண்டும் என்று
கேட்டார். அதற்கு நான் கூறினேன், தமிழகத்தில் சீக்ரம் என்று சொல்பவர்கள்
ஒரு 5-10% இருக்கலாம்,
ஆனால் "அட விரசலாத்தான் வாயேன், இப்படி ஆற அமர வந்தா எப்படி?", "இங்க
அங்கெ பாத்து பேசிக்கிட்டு இருக்கூடாது, சட்டு புட்டுன்னு வரணும்
பாத்துக்கோ", "சரி,சரி மளமளன்னு செய்ங்க", "அட மளார்ன்னு வா"
"அட விறுவிறுன்னு வா", "அட போய்ட்டு விர்னு வந்துட்டேயே!", "போய்ட்டு
சுருக்க வந்துடணும் பாத்துக்கோ",
"எம்புட்டு சுருக்க வந்திட்டீங்க!" என்று சொல்பவர்கள் நிறைய
பேர்கள் இருக்கிறார்கள். விர், விரசலா என்பது பொது வழக்கு விரைவு என்பது
நல்ல எளிய சொல். விரைதல் என்னும் வினைச்சொல்லும் உண்டு, விரைந்து வந்தான்
என்று வினையெச்சமாகக் கூறமுடியும், விரைசல் விரைதல் போன்ற சொற்கள் உண்டு.
விரைமை என்று புதுச்சொல்லும் ஆக்க முடியும். அதே போல சட்டுபுட்டுன்னு
என்று கூறுபவன் சடுதி என்னும் சொல்லையும் புரிந்துகொள்ள அதிக வாய்ப்பு
உள்ளது. சட்டென்று முடித்துவிட்டான் என்பதனையும் புரிந்து கொள்வான்.
மளமளன்னு வா என்று அறிபவன் மள்குதல் என்றால் குறைதல், சுருங்குதல்
(அஃகுதல்) என்று சொன்னால் புரிந்து கொள்வான். compress என்பதற்கு
மள்குதல் (சுருங்குதல்) என்றுகூட சொல்லலாம். "சுருக்க வா" என்பதால்,
தொடர்பான சுருங்கு, சுருட்டு (சுருட்டி சின்னதாவது. சுருள் <-> உருள்
என்பது வேராக இருப்பினும்; சுருட்டி என்று ஒரு இசைப்பண் உண்டு).
சுருக்கு = விரைவு என்னும் பொருள் இருப்பதை சுட்டினால்
உடனே புரிந்து கொள்வான். சீக்ரம் என்னும் சொல்லை வேறு விதமாக
(வினைச்சொல்லாகவோ, பெயர்ச்சொல்லாகவோ) சொல்ல முடியுமா என்று பாருங்கள்
(விரைந்தான், விரைந்து செல், விரைதல், விரைவுந்து..) . தமிழ் வேர் உள்ள
சொற்கள் பல்வேறு விதமாக கிளைத்துப் பெரும்பயன் தரவல்லது. கடன்பெறும்
சொற்கள் அப்படிப்பட்டன அல்ல. மண்ணில் போட்ட பிளாஸ்டிக் போல்
துருத்திக்கொண்டு நிற்கும். நியூ என்பது எளிய சிறிய சொல்தானே, ஏன்
எடுத்துக்கொள்ளக்கூடாது? புது என்றால் அது மேலும் "புத்" என்று சுருக்கம்
கொண்டு புத்+ஆண்டு = புத்தாண்டு, புத்துணர்வு, புத்தூக்கம்,
புத்திணக்கம், புத்தெழுச்சி என்று எத்தனையோ சொற்கள் ஆக்கலாம். புதிய
கிளர்சியூட்டும் பொருள்கள் கிட்டும். நியூ உணர்ச்சி, நியூ ஊக்கம் , நியூ
ஆண்டு என்றெல்லாம் சொல்லிப்பாருங்கள், எப்படிச் செத்துக் கிடக்கும்
உணர்வுகள் என்று. மேலும் தமிழ் வேர்ச்சொற்கள் வளர்சியூட்டும் விரிவு
தரும், கடன் சொற்கள் இயல்பான
வளர்ச்சியை முடக்கும். நிறைய விரித்து எழுதலாம். நீங்கள்
புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

இன்னும் பல சொல்லவேண்டும் (கலைச்சொல் ஆக்கம் பற்றி).. பின்னர்
பார்ப்போம்..

அன்புடன்
செல்வா

On Mar 16, 6:02 am, சீனிவாசன் <sapauljos...@gmail.com> wrote:
> அன்பு நண்பரே செல்வா,
>
> மிகவும் அருமையான பதில். பல வரலாற்று சான்றுகளை முன்வைத்துள்ளீர்கள்.
> எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
>
> நண்பர் ரவி கூறியதைப்போல நீங்கள் மன்னிப்பு கேட்கத்தேவையே இல்லை. மிக
> அருமையான பதிலை என்னுடைய கேள்விக்கு வழங்கியிருக்கின்றீர்கள்.
>
> மிகவும் நன்றி...
>
> எனக்கு இன்னொரு கேள்வி உண்டு... அது கண்டிப்பாக இந்தக் குழு
> சார்ந்ததுதான். நீங்கள் அணைவரும் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளுக்கு
> தமிழ் வார்த்தைகளை கொடுக்க முயலும் சிறந்த செயலை செய்து வருவதை நான்
> இங்கு இணைந்த நாளிலிருந்து கண்டு மகிழ்கின்றேன். ஆனால், ஏன் மிகவும் தூய
> தமிழ் சொற்களாக தேடுகின்றீர்கள்? சாதாரண மக்களுக்கு இது புரியாதல்லவா?
> தொழில்நுட்பமே எவரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதுதானே? பின்
> ஏன் அதை பயன்படுத்த உதவும் சொற்களை எவருக்கும் எளிதில் புரியாத தூய
> தமிழ் சொற்களாக்குகின்றீர்கள்? தமிழில் அந்தந்த தொழில்நுட்ப சொற்களை
> விவரிக்கும் வகையிலான எளிதான சொற்களை உபயோகிக்கலாமே? தமிழ் மொழி ஒரு
> தலைச் சிறந்த மொழி. அதில் இல்லாத வார்த்தைகளே இல்லை என்று எனக்கு ஒரு
> எண்ணம். நானும் தமிழுக்கு தொண்டாற்ற தமிழ் அமிழ்தம் எனும்
> விக்கிபீடியாவை எனது சொந்த இணையதள வழங்கியில் பதிவேற்றியுள்ளேன் (http://www.tamilamirtham.org). இதற்கு நான் மீடியாவிக்கி மென்பொருளை
> ...
>
> read more »

சீனிவாசன்

unread,
Mar 17, 2008, 6:05:43 PM3/17/08
to விக்சனரி
அன்பு நண்பரே மயூரன்,

உங்களின் விரிவான பதிலுக்கு என் முதற்கண் நன்றி. ஆங்கிலத்தில்
இணைப்பெயர்கள் (Thesaurus) என்று ஒன்று உண்டு. தமிழ் அகராதியிலும் இது
காணக்கிடைத்தாலும், ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுகின்ற அளவு தமிழில்
பயன்படுத்தப்படுவதில்லை என்பது என்னுடைய ஒரு ஆதங்கம். இந்த இணைப்பெயர்களை
உண்மையில் கவிஞர்கள் (முக்கியமாக நவீன கால கண்ணதாசன்) மிகவும் அதிகமாக
பயன்படுத்தி கவிதைக்கு பொருளும் சுவையும் கூட்டுவர். ஆங்கிலத்தில்
இணைப்பெயர்களுக்கு என்று தனி அகராதிகளே உண்டு. தமிழில் இப்படி
இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இதைப் பற்றி பேசுகின்றேன்
என்றால், ஆங்கில அகராதிகளில் ஒரு முறை பின்பற்றப்படுவதுண்டு
(ஆக்ஸ்போர்டு முதற்கொண்டு). அது என்னவென்றால் கடினமான ஆங்கில
வார்த்தைகளை எளிமையான ஆங்கில வார்த்தைகளின் மூலம் விளக்குவது. சில தமிழ்
- தமிழ் அகராதிகளில் நீங்கள் இதைக் காணலாம். தூய தமிழ் சொற்களுக்கு
நடைமுறையிலுள்ள எளிமையான தமிழ் வார்த்தைகளைக் காட்டி விளக்குவார்கள். இது
மிகவும் பொருத்தமான விளக்கமாக இல்லாவிடினும் குறைந்த பட்சம் படிப்பவர்
புரிந்துகொள்ளும் அளவிற்கு இருக்கும். நான் கூறுவது இப்படிப்பட்ட
முறையைத்தான். தொழில்நுட்பத்தால் விளைந்த ஆங்கில புதுச்சொற்களை நன்றாக
கூர்ந்து கவனித்தால் அவற்றின் பொருள் எளிமையான ஆங்கில
மொழிச்சொற்களிலிருந்தே உருவாக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு,
உங்களின் எடுத்துக்காட்டு ஆங்கில பத்தியிலிருந்து சில வார்த்தைகள்: File
Allocation Table, File System, Cluster is a unit of disk space
allocation for files and directories, data structures, contiguous
groups of sectors. இந்த வார்த்தைகளில் File, Allocation and Table
மூன்றுமே சாதாரண ஆங்கில வார்த்தைகள் சேர்த்தால் எளிதில் பொருள்
புரியக்கூடியவை. System என்பதும் சாதாரண ஆங்கில வார்த்தையே (ஒரு முறையைக்
குறிப்பது). ஆகவே, File System என்பதை கோப்பு வரைமுறை என்று எளிதில்
ஆங்கிலேயரால் புரிந்துகொள்ள முடியும். File and Directories என்பவையும்
சாதாரண ஆங்கில வார்த்தைகளே. Directory என்பது ஒரு தொகுப்பு என்பது
வீட்டில் டெலிபோன் டைரக்டரி வைத்திருக்கும் எந்த ஆங்கிலேயருக்கும்
புரியும். இப்படி பல தொழில்நுட்ப சொற்களை பிரித்து பார்த்தால் அவற்றின்
பொருளை புரிந்து கொள்ள, குறைந்த பட்சம் யூகிக்கவாவது முடியும். இந்த
முறையை ஏன் நாம் தமிழ்படுத்தும்போது பயன்படுத்துவதில்லை என்பதுதான்
என்னுடைய கேள்வியே. நான் தர்க்கம் செய்வதாக தயவு செய்து எண்ண வேண்டாம்.
நான் கண்டனங்களையும் கூறுபவனல்ல. இந்தக் குழுமத்தைன் தூய சேவையை பல
நாட்கள் கண்டு மகிழ்ந்த பின்தான் நான் கேள்வியே கேட்க ஆரம்பித்தேன்.

விக்கிபீடியாவையே உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், புகுபதிகை எனும்
சொல் இரண்டு புரியக்கூடிய எளிமையான சொற்களின் இணைப்பாக இல்லை. புகு
என்பது புரியக்கூடியதாக இருந்தாலும், பதிகை என்பது தூய தமிழ்ச்சொல். அது
நிறைய பேருக்கு புரிவது கடினம். ஆயினும், தொடர்ந்த பழக்கத்தில்
புரிந்துகொள்வார்கள் என்கிற தங்களின் கருத்தை நான் முழுவதும்
ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், என்னுடைய பயமே தொடர விரும்பாமல்
விட்டுவிட்டுப் போகும் மனிதர்களைக் கண்டுதான். நாம் தமிழ் மொழியை
வளர்க்க இவ்வளவு கஷ்டப்பட்டால், அதை பயன்படுத்துபவர், இது புரிய இலகுவாக
இல்லை என்று ஆங்கிலத்திற்கே மாறிவிட்டால்? நம்முடைய நோக்கம்
பொய்த்துப்போகிறதல்லவா? இதைத் தடுப்பதே என் நோக்கம். புகுபதிகை
என்பதற்கு பதிலாக நுழைவுப்பலகை அல்லது புகுபலகை என்று வைத்திருந்தால்
எளிதில் புரியுமல்லவா? இது போல நான் நிறைய உதாரணங்களைக் காட்டலாம்.
ஆனால், என்னுடைய நோக்கம் தர்க்கம் அல்ல, தங்களுக்கு என் கருத்தின்
ஆழத்தை காண்பிப்பது மட்டுமே.

அன்பு நண்பரே ஆமாச்சு,

உங்களின் கேள்வி மிக அருமை. நானே சில சமயங்களில் வியந்த உண்மை. நான்
தமிழ் முறை கல்வி கற்றவன் (10 வது வரை). பின் ஆங்கில முறை கல்வி கற்க
ஆரம்பித்தபோது நிறைய சிரமப்பட்டேன். ஏனெனில் அணைத்தும் மிகவும் புதிதாக
இருந்தது. ஆனால், என்னுடைய கடும் முயற்சியினால் இப்போது தெளிவாக
ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரியும் எனக்கு. அலுவலகத்தில் தினமும்
வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் ஆங்கிலத்தில் எளிதில் உரையாடுகின்றேன்.
ஆனால் சில சமயம் என்னுடைய நண்பர்கள் யாராவது ஆங்கில வார்த்தைக்கு தமிழ்
அர்த்தம் கேட்டால் மிகவும் யோசிக்கும் நான், அதையே தமிழ் வார்த்தைக்கு
ஆங்கிலத்தில் அர்த்தம் கேட்டால் பட்பட்டென்று சொல்லிவிடுகின்றேன். இதை
நாம் உளவியல் ரீதியாகத்தான் நோக்க வேண்டும். தமிழ் என்னுடைய தாய் மொழி
ஆகவே அதை புரிந்து கொள்ள என்னுடைய மூளை ஒரு உள்ளினைந்த மொழியாக்கம்
செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஆங்கிலம் நான் கற்ற மொழி, ஒவ்வொரு ஆங்கில
சொற்களையும் பத்திகளையும் என்னுடைய மூளை தானாகவே உள்ளினைந்த
மொழியாக்கம் (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) செய்வதால், தமிழை
ஆங்கிலப்படுத்துவது எனக்கு எளிது. இதையே ஒரு ஆங்கிலேயரின்
பார்வையிலிருந்து பார்த்தால், அவர் தமிழை கஷ்டப்பட்டு கற்றறிந்த ஜி.யு.
போப் போன்ற மகராசனாயிருந்தால், அவரிடம் ஆங்கிலத்திலிருந்து தமிழை
மொழிபெயர்க்கச் சொன்னால் மிக எளிதில் செய்வார். ஆனால், தமிழிலிருந்து
ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கச் சொன்னால் சற்று தடுமாறுவார். இது கல்வி
கற்ற முறையையும் அவரவர் மூளை செயலாக்கும் விதத்தையும் சார்ந்து
இருக்கின்றது.

உங்களின் கடைசி இரண்டு பத்திகளையும் நான் முழுமையாக ஏற்கின்றேன். அதிலும்
நீங்கள் கூறிய பத்தியில் பொருத்தமான வார்த்தைகளைத் தந்து விளக்குவது
அருமையான யோசனை. ஆனால், தனிப்பட்ட சொற்களுக்கு இம்முறை பயன்படாது
அல்லவா? அவற்றுக்கும் சில எளிய தமிழ் சொற்களின் இணைந்த வடிவத்தை
உபயோகப்படுத்தினால் என்ன என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

அன்பு நண்பரே செல்வா,

உங்களின் முதல் கேள்விக்கு விடை அகராதி. ஆனால் நான் ஏற்கனவே இங்கே
கூறியுள்ளபடி, வலைப்பக்கங்களை உபயோகப்படுத்துவதற்கும், மென்பொருள்களை
உபயோகப்படுத்துவதற்கும் ஒருவருக்கு அகராதி தேவையென்றால் அவர் அந்த
வலைப்பக்கங்களையும் மென்பொருள்களையும் எந்த அளவு உபயோகிப்பார் என்பது
சந்தேகத்துக்குரியதே.

தமிழில் முறைப்படி பேசுவதும் எழுதுவதும் எளிதில் வாய்க்கும் அளவு இன்றைய
தமிழ்நாடும் தமிழ்நாட்டு அரசாங்கமும் இல்லை என்பது வேதனைக்குரிய உண்மை.
இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்? அமிழ்தம் போன்ற தமிழை சுவைக்கக்
கொடுக்க வேண்டுமல்லவா? ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் வெறும் நடைமுறைத்
தமிழ் மட்டுமே அறிந்தவர் என்று கொள்வோம், உங்களுக்கு கண்ணதாசனின் ஒரு
அழகான பாடலை பாடிக்காட்டி விளக்கம் புரிகிறதா என்று கேட்டால், விளக்கம்
புரியாவிட்டாலும் அந்த பாடலிலுள்ள சொற்களின் அழகு உங்களைக் கவர்ந்து
அதன் உண்மையான பொருளை அறிய வேண்டும் என்ற ஆவல் கூடுமல்லவா? ஆனால்,
அதற்காக ஒவ்வொருவரிடமும் சென்று கண்ணதாசனின் பாடல்களை பாடிக்காட்டச்
சொல்லவில்லை நான். அந்த புண்ணிய காரியத்தை பழம் பெரும் திரைப்படங்கள்
செவ்வனே ஆற்றிவிட்டன. ஆனால், இன்றைய நாகரீக உலகத்தில் இவ்வாறு செய்ய
ஆளில்லை. சமீபத்தில் வந்த ஒரு தமிழ் திரைப்படம் (வாழ்த்துக்கள்) ஒரு புது
முயற்சியாக திரைப்படம் முழுவதும் அணைத்து கதாப்பாத்திரங்களும் தமிழிலேயே
பேசுவதாக அமைத்திருந்தது. இது எவ்வளவு உன்னத முயற்சி? அருமையான முயற்சி
அல்லவா? தமிழை உயிரென மதிக்கும் முனைவர் திரு. மு. கருனாநிதி
(தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர்) அவர்கள் தமிழ் அமிழ்தத்தை இன்றைய
நாகரீக உலகிற்கு அளிக்க மிகவும் கடினமான முயற்சிகளை எடுத்தவர். ஆனால்,
அவரேகூட தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு
என்று முட்டாள்தனமாக ஒரு சட்டம் இயற்றினார். இதைப் பயன்படுத்த உடனடியாக
தமிழ் பெயருக்கு மாறிய நிறைய (அல்லது மாற்றக் கட்டாயப்படுத்தப்பட்ட)
இயக்குநர்களை நான் காண்கின்றேன். திரு. மு. கருனாநிதி அவர்களே தமிழில்
பெயரை வைத்தால் மட்டும் போதும் என்று முடிவுகட்ட வைத்தது யாது? தமிழ்
மக்களின் ஏற்றுக் கொள்ளாமையா அல்லது மெத்தனமா? தமிழை உண்மையிலேயே
உணர்த்த வேண்டியிருந்தால், திரைப்படம் முழுவதும் தமிழை மட்டும்
பயன்படுத்தியுள்ள வாழ்த்துக்கள் போன்ற படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு
என்று சட்டம் அமைத்து அதை தவறாக உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து தமிழை
காப்பாற்றலாம் அல்லவா? இங்கே நான் திரு. மு. கருனாநிதியாரை
இழிவுபடுத்தவில்லை, மூதறிஞர் அவருக்குக் கூட தமிழ் மக்கள் வெறும்
பெயரளவில் மட்டுமே தமிழை ஏற்றுக்கொள்வார்கள் என்று முடிவெடுக்க வைத்த
இன்றைய நிலையைத்தான் நான் இழிவுபடுத்துகின்றேன். இதை மாற்றுவது நம்மைப்
போன்ற தமிழ்த் தாயின் மக்களுக்கு ஒரு கடமையல்லவா? தமிழ் மொழியின்
அமிழ்தத்தை பருகிய எவருமே கண்டிப்பாக அந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத்து
மேலும் மேலும் அதைக் கற்க ஆர்வம் செலுத்துவார்கள் என்பதில் எனக்கு
கடுகளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த அமிழ்தத்தை கொடுக்க நாம்
உபயோகிக்கும் பாத்திரம் எளிதானதாக இருக்க வேண்டுமல்லவா? இதுதான்
என்னுடைய ஆதங்கம்.

என்னுடைய பதில் உங்களில் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால், தயவு செய்து
மன்னிக்கவும். அது என்னுடைய நோக்கமல்ல.

என்னையும் ஒரு பொருட்டாக மதித்து இதுநாள்வரை என்னுடைய கேள்விக்கு
பதிலளித்த உங்களனைவருக்கும் என்னுடைய இதயங்கனிந்த நன்றிகள்...


மிக்க அன்புடன்,

சீனிவாசன் அ. பால் ஜோசப்.

On Mar 17, 3:33 pm, "M.Mauran | மு.மயூரன்" <mmau...@gmail.com> wrote:
> சீனிவாசன்,
>
> உங்கள் வலைத்தளத்திலிருந்தே சொற்களை எடுத்து உதாரணம் காட்டியதற்கான காரணம்,
> புரிகிறது அல்லது புரியவில்லை என்பது எதைச்சார்ந்திருக்கிறது என்பதை
> விளக்கத்தான்.
>
> In certain filesystem <http://en.wikipedia.org/wiki/Filesystem> types like
> the File Allocation
> Table<http://en.wikipedia.org/wiki/File_Allocation_Table>(FAT)
> filesystem of
> MS-DOS <http://en.wikipedia.org/wiki/MS-DOS> or the
> NTFS<http://en.wikipedia.org/wiki/NTFS>filesystem of Windows
> NT <http://en.wikipedia.org/wiki/Windows_NT>, a *cluster* is the unit of
> disk space allocation for files and directories. In order to reduce the
> overhead <http://en.wikipedia.org/wiki/Overhead> of managing on-disk data
> structures, the filesystem does not allocate individual disk
> sectors<http://en.wikipedia.org/wiki/Disk_sector>,

Ravishankar

unread,
Mar 17, 2008, 6:42:33 PM3/17/08
to tamil_wi...@googlegroups.com
சீனிவாசன்,

உங்கள் ஆதங்கம் புரிகிறது.

புகுபதிகை என்ற எடுத்துக்காட்டுச் சொல் குறித்த கருத்துக்கள் சில:

நுழைவுப்பலகை அல்லது புகுபலகை என்ற சொல்லைப் பரிந்துரைத்துள்ளீர்கள். எடுத்துக்காட்டுக்குத் தான். இதே போல் "உள்ளே நுழை", "நுழை" "உள்ளே" போன்ற சொற்களும் புழக்கத்தில் உள்ளன. இந்த மாற்றுச் சொற்களும் மக்களுக்குப் புரியும். ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவென்றால்,

have you logged in ?

you need to log in.

Log in to access this content?

log out

you have logged in as srinivasan

currenly 6 users logged in

keep me logged in across all sessions

some one has already logged in this user name

போன்ற சொற்றோடர்கள் ஏறக்குறைய பல இணையத்தளங்களிலும் வருகின்றன.

log in  என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பார்த்தால் நுழைவுப்பலகை போன்ற பெயர்கள் புரியும். ஆனால், அதையே வினைச்லொக்கி மேற்கொண்ட எடுத்துக்காட்டுச் சொற்றொடர்களில் பொருத்தினால் பிழையாகி விடும். உள்ளே, வெளியே, நுழை போன்ற சொற்களைப் பயன்படுத்தினால்

keep me logged in போன்ற சொற்றொடர்களை "என்னை உள்ளேயே வைத்திருக்கவும் / என்னை நுழைத்து வைத்திருக்கவும்" என்று ஏடாகூடமாக மொழிபெயர்க்க வேண்டி வரும்.

இது தவிர விக்கிப்பீடியாவில் delete log, move log, new user creation log என்ற பல இடங்களிலும் log என்னும் சொல் ஒரே இடத்தில் வருகிறது. இது எல்லா இடத்திலும் உள்ள கருத்து என்னவென்றால் ஒரு நிகழ்வை பதிவு செய்கிறோம். பதிவு செய்வது பதிதல், பதிக, பதிகை போன்ற தொடர்புடைய சொற்களுக்கு இட்டுச் செல்கிறது.

புகுபதிகை = login

விடுபதிகை = logout

have you logged in ?  = புகுபதிந்து விட்டீர்களா?

you need to log in. = புகுபதிய வேண்டும்

Log in to access this content? = இந்த உள்ளடக்கத்தைப் பார்க்க புகுபதிய வேண்டும்.

log out = விடுபதியவும்; விடுபதிக.

you have logged in as srinivasan = சீனிவாசனாகப் புகுபதிந்துள்ளீர்கள்.

currenly 6 users logged in  = 6 பயனர்கள் புகுபதிந்துள்ளார்கள்.

keep me logged in across all sessions = அமர்வுகளுக்கிடையேயும் புகுபதிந்து இருக்கவும்.

some one has already logged in this user name = உங்கள் பெயரில் வேறு யாரோ புகுபதிந்து இருக்கிறார்கள்.

delete log = நீக்கல் பதிகை

move log = நகர்த்தல் பதிகை

user creation log = புதுப்பயனர் உருவாக்கப் பதிகை

***

பதிகை என்ற ஒரே ஒரு சொல்லை ஒரு இடத்தில் மட்டும் பார்க்கும் போது சிரமமாக இருக்கிறது. ஆனால், அதே பொருள் தொடர்புடைய பல இடங்களிலும் அச்சொல் தேவைப்படும் போது அதன் பயன்பாட்டு முக்கியத்துவத்தை உணரலாம்.

இதே போல் தான் இன்னும் பல சொற்களுக்கும். பலரும் சொல் புரியவில்லை எனச் சொல்கையில் ஒரே ஒரு இடத்தைத் தான் பார்க்கிறார்கள். ஆனால், ஒரு இடைமுகப்பு மொழிபெயர்ப்பாளராக இருக்கையில் அது பயன்படும் எல்லா இடங்களையும் கவனித்து தளம் முழுக்க ஒரே மாதிரி ஒழுங்குடன் மொழிபெயர்ப்பது அவசியமாகிறது.

அதனால், தகுந்த இடங்களில் புதிய பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது.

ரவி

செல்வா

unread,
Mar 17, 2008, 10:54:14 PM3/17/08
to விக்சனரி
சீனிவாசன்,

"நுழைபலகை" எப்படி login ஆகும்?! பலகை என்பது log என்பதின் நேரடி
மொழி பெயர்ப்பாய் உள்ளது, ஆனால் முற்றிலும் பொருந்தாதது என்பது என்
கருத்து.
"நுழைய உன் முகவரியை இட்டுப் பதிவு செய்" என்பதுதான் கருத்து.
நுழைபதிவு எனலாம், ஆனால் ரவி சொன்னது போல புகுபதிகையில் நிறைய நன்மைகள்
உண்டு.

அடுத்ததாக "தூய தமிழ், தனித்தமிழ்" என்பது அவற்றுக்காக அல்ல, இயல்பான,
தேவையன
வளர்ச்சிக்கு என்பதைப் புரிந்து கொண்டீர்களா எனத் தெரியவில்லை.

மூன்றாவதாக நீங்கள் கூறுவது போல ஆங்கிலத்தைத் தமிழிலோ, தமிழை
ஆங்கிலத்திலோ
மொழி பெயர்த்தல் எளிதல்ல (தொழிநுட்பத்தில் மட்டுமல்ல, பிற துறைகளிலும்).
முடியாததல்ல, பல குறைபாடுகள், பொருள்திரிபுகள் ஏற்படும் அது எந்த இரு
வேறான மொழிக்குடம்பங்கலுக்கும் இடையே உள்ளது.

அன்புடன்
செல்வா
> நாம் ...
>
> read more »

amachu

unread,
Mar 17, 2008, 11:06:43 PM3/17/08
to விக்சனரி
சீனிவாசன் wrote:
> அருமையான யோசனை. ஆனால், தனிப்பட்ட சொற்களுக்கு இம்முறை பயன்படாது
> அல்லவா? அவற்றுக்கும் சில எளிய தமிழ் சொற்களின் இணைந்த வடிவத்தை
> உபயோகப்படுத்தினால் என்ன என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.
>

இத்தகைய சிக்கல் எப்போது தோன்றும் எனவும் யூகிக்க முடிகிறது. ஒரு
ஆங்கிலச் சொல்லை எடுத்துக்கொண்டு அதன் முழுப் பொருளையுமே நிகரான தமிழ்ச்
சொல் தர வேண்டுமெனும் எண்ணம் ஆட்கொண்டு, இருக்கிற தமிழ்ப் புலமையெல்லாம்
கொட்டி, ஒரு சொல்லை எடுத்து, அதில் அறிவு ஜீவித் தனத்தையெல்லாம்
புகுத்தி, விளக்கம் கொடுத்து, கடைசியா ஒரு சொல் வருகிறதென்றால் அச்சொல்,
உருவாக்கியவரின் சிந்தனையை, வாசிப்பரும் கொண்டிருக்காது போனால்
விகாரமாய்த் தான் தோன்றும்.

அத்தகைய சொற்களைத் தான் தாங்கள் தூய தமிழ்ச் சொல் என சொல்ல வருகிறீர்கள்
என நினைக்கிறேன்.

amachu

unread,
Mar 18, 2008, 12:10:39 AM3/18/08
to விக்சனரி
மற்றடி நாம் சார்ந்திராத ஒரு துறையில் பயன்படுத்தப்படும் சொல்லினை தனியாக
காணநேரிடும் போது, அதற்கு பொருள் விளங்கவில்லையே என்பது தங்கள் கருத்தாக
இருப்பின் அது ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் ஒருங்கே பொருந்தும்.

அன்புடன்,
ஆமாச்சு

சீனிவாசன்

unread,
Mar 18, 2008, 6:20:06 PM3/18/08
to விக்சனரி
அன்பு நண்பர்களே,

உங்களின் பல்வேறுவிதமான விளக்கங்களுக்கு மிகவும் நன்றி...

ரவிசங்கர், உங்களின் விளக்கம் மிகவும் அருமை. நான் முழுமையாக
ஏற்றுக்கொள்கின்றேன். நான் இதுநாள் வரை நீங்கள் கொடுத்த ஆங்கில
சொற்றொடர்களுக்கு தனித்தனியான மொழிபெயர்ப்புகள்
கொடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஒரே சொல் எவ்வளவு அருமையாக பொருந்த
முடியும் அப்படி பொருந்தினால் அதை கற்றுக்கொடுப்பது எவ்வளவு முக்கியம்
என்பதை ஒரு குழந்தைக்கு விளக்குவது போல் தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.
உங்களின் பதிலை பார்த்தபின்தான் எளிமையான தமிழ் என்ற பெயரில் எவ்வளவு
குழந்தைத்தனமான மொழிபெயர்ப்புக்களை நான் செய்துகொண்டு
வந்திருக்கின்றேன் என்று எனக்கு புரிகின்றது. மிகவும் நன்றி.

செல்வா, உங்களின் கருத்தை நான் அப்படியே ஏற்கின்றேன். ஏற்கனவே ரவிசங்கர்
அவர்களுக்கும் எனக்கு மிகவும் தெளிவாக விளக்கிவிட்டார்.

ஆமாச்சு, ஒரு வகையில் நீங்கள் சொன்ன கூற்று சரியே. ஆனால் நான் அத்தைகைய
சொற்களை மட்டும் கூறவில்லை. ஆனால், இப்போது யோசித்துப்பார்க்கும்போது
எதுவுமே தூய தமிழ் என்று எளிதில் ஒதுக்கி வைத்தல் கூடாது என்று எனக்கு
ஒரு யோசனை தோன்றுகின்றது. நன்றி.

நண்பர்களே, உங்களின் மேலான கருத்துக்களுக்கும் நேரத்திற்கும் என்னுடைய
நன்றி. இந்த தலைப்பிலான விவாதம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று நான்
நினைக்கின்றேன். மிகவும் நன்றி...

மிக்க அன்புடன்,

சீனிவாசன் அ. பால் ஜோசப்

M.Mauran | மு.மயூரன்

unread,
Mar 18, 2008, 6:55:23 PM3/18/08
to tamil_wi...@googlegroups.com
நன்றி சீனிவாசன்.

உங்கள் ஒத்துழைப்பும் உடனிருப்பும் இந்தக்குழுமத்தை மேலும் வினைத்திறன் மிக்கதாக்கும்.
தொடர்ந்தும் சொல்லாக்கத்தில் பங்களிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

இடைமுகப்பு மொழியாக்கத்தில் பயனர் எளிமை குறித்த உங்கள் பார்வை சிறப்பானது.


-மு.மயூரன்

வி. சு.

unread,
Apr 25, 2008, 8:02:18 AM4/25/08
to விக்சனரி
On Mar 13, 9:54 pm, Paul <sapauljos...@gmail.com> wrote:
...
> தமிழ் மொழி தொன்மையானதா அல்லது சமஸ்கிருதம் தொன்மையானதா?
...

தொண்மையில் சங்கதத்துடன் ஏன் போட்டி போடுகிறோம் என்று தெரிய வில்லை.
சங்கதத்தை விட பழமையான சீன மொழி தமிழை ஒத்துள்ளது போல உள்ளது. தன்மைக்கு
வோ (நகர-வகர திரிவுகளைக் கவனிக்கவும்); முன்னிலைக்கு நீ; சொற்றொடருடன் ஆ
சேர்த்து வினாவாக மாற்றுவது, போன்றவை. இதிலிருந்து தமிழின் தொன்மையைக்
கணக்கிட முடியாவிட்டாலும், தமிழர்-சீனர் தொடர்பின் காலத்தையாவது
கணக்கிட்டு விடலாம் இல்லையா? சீனர்-தமிழர் தொடர்புக்கு ஆதாரங்கள்
உள்ளதாகவும் நண்பர் சொன்னதாக நினைவு.

ஆங்கிலத்தைத் தமிழ் படுத்தும் போது, பொதுவாக சொற்பிறப்பியல் (etymology)
துணை கொண்டு சரியான சொற்களைக் காண இயலும், மேலும் அதே ஆங்கிலச் சொல்லின்
பிற மொழியாக்கங்களைக் கவனித்தால், காட்டாக சீனம், தமிழிலும் புதிய
சொற்கள், சரியான வேறு சொற்கள் புலப்படலாம்.
Reply all
Reply to author
Forward
0 new messages