audio, video?

4 views
Skip to first unread message

Ravishankar

unread,
Feb 8, 2007, 5:08:32 AM2/8/07
to tamil_wi...@googlegroups.com
வணக்கம்.

தமிழில் இணையத்தில் நுட்பச் செய்திகளை எழுதும் போது பெரிதும் அடிபடும் சொல் இது. ஆனால், இதற்கான ஒருமித்த பயன்பாட்டுச் சொல் புழக்கத்துக்கு வரவில்லை.

video - வீடியோ, ஒளித்துண்டு, ஒளிப்படம் என்று பலவாறாக எழுதுகிறார்கள். இது ஒளித்துண்டு, ஒளிப்படம் என்றால் photographல் ஒளி இல்லையா? இலங்கை தளங்களில் காணொளி என்ற சொல் பரவலாக இருக்கிறது. இங்குள்ள (நெதர்லாந்து) சாதாரண தமிழரும் இதை புழங்குகின்றனர். ஆனால், இதில் எனக்கு ஒப்புதல் இல்லை. காண்பது, காணத்தக்கது தானே ஒளி..அப்புறம் அதை சேர்த்து எதற்குச் சொல்ல வேண்டும். இதே வரிசையில், audio - கேட்பொலியாகவும் எழுதப்படுகிறது. கேட்கப்படாமல் ஏது ஒலி?

தமிழ் விக்கிபீடியாவில் நிகழ்படம் என்ற சொல்லை C.R.Selvakaumar, videoவுக்கான சொல்லாக எடுத்தாண்டார். நிழற்படம் x நிகழ்படம் என்று பொருத்திப் பார்க்கத் தக்கது, தவிர நிகழ்கின்ற நகர்கின்ற படம் என்ற கருத்தையும் தாங்கி இருப்பது சிறப்பு. ஆனால், audioவுக்கு இதே வரிசையில் நிகழொலி என்ற சொல்லை இது வரை ஆக்கிக் கையாளவில்லை.

அண்மையில் தமிழ் விக்சனரி தளத்தில் ஒலிதம், ஒளிதம் - ஆகிய சொற்கள் audio, videoவுக்கு இணையாக பரிந்துரைத்திருந்தார் ஒரு பயனர். இவை எனக்கு நல்ல பரிந்துரைகளாகத் தோன்றுகின்றன. -தம் பின்னொட்டு பல தமிழ்ச் சொற்களில் காணத்தக்கதாகவும் சொற்கள் சுருக்கமாகவும் உள்ளன.

ரொம்ப நாளாக குழப்பி வந்த இன்னொரு சொல் audio volume. audioவையும் volumeஐயும் பல சமயங்களில் கேட்பொலி என்று சொல்லி மாற்றி மாற்றிக் குழப்பிக் கொள்வதுண்டு. எனக்கென்னவோ, water volumeஐ கொள்ளளவு என்பது போல் audi volumeஐ கேட்பளவு என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. இல்லை, இந்த சொல் எல்லாம் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிறதா? அறிந்தவர் சொல்லுங்கள்.

அன்புடன்,
ரவி

Nandhi Varman

unread,
Feb 8, 2007, 8:50:45 PM2/8/07
to tamil_wi...@googlegroups.com

உங்கள்

சொல்லாக்க யோசனை சிறப்பாக உள்ளது

நந்திவர்மன்

amachu

unread,
Feb 9, 2007, 11:48:20 PM2/9/07
to விக்சனரி
Video - பதிவொளி
Audio - பதிவொலி/ பதிவோசை

நமது செயல்கள் ஏதோ ஒரு சாதனத்தில் பதிவாகி பின்னர் திரையில்
வபிரதிபளிக்கப் படுகிறது.
அங்ஙகமே நமது குரல்கள், ஒலிகள் ஒரு இடைப்பட்ட சாதனத்தில் பதியப் பெற்று
நமக்கு மீண்டும் வழங்கப்படுகிறது.

நன்றி.

amachu

unread,
Feb 9, 2007, 11:52:48 PM2/9/07
to விக்சனரி
நாதம், இரைச்சல், சத்தம், ஓசை, ஒலி போன்றவற்றை கருத்தில் கருத்தில்
கொண்டு இதற்கு பரிந்துரைகள் வழங்கலாம்.

volume - இதற்கு சத்தம், ஓசை இவற்றுள் எது பொருத்தமாக இருக்கும்.

Increse the volume - ஓசையை அதிகப் படுத்துக
Decrease the volume - ஓசையை குறைக்கவும்.


amachu

unread,
Feb 10, 2007, 1:09:39 AM2/10/07
to விக்சனரி
பதிவொலி / பதிவொளி - audio/ video

ஒலிப்பதிவு/ ஒளிப்பதிவு - audio recording/ video recording

ஒலிப்பரப்பு/ ஒளிப்பரப்பு - audio broadcasting/ video brodcastiong

ஒத்து வருமா?

K. Sethu

unread,
Feb 10, 2007, 8:09:32 AM2/10/07
to tamil_wi...@googlegroups.com
ரவி "கேட்பளவு" என்பதைப் பிரேரிக்கிறார். 'volume" என்று சொல்கையில் அது சத்தம்
/ஒலி / ஓசை காதுக்கு எட்டும் அளவையே அநேகமாகக் குறிக்கிறோம்.

நான் விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவுகள் மட்டுமே விக்சனரியில் இட்டுள்ளேன் (அதுவும்
விகக்சனரி பயனராக இணைந்த தருணத்தில் ~ Jan. 2006). அவற்றுள், volume என்பதற்கு
ஏற்கனவே இருந்த "கனவளவு " என்ற வார்த்தைக்கு மேலதிகமாக பின்வரும் இரு அர்த்தங்களைப்
பதித்திருந்தேன்:

# புத்தகத்தொகுதி, புத்தகப்பகுதி
# ஒலி சத்தம் காதுக்குக் கேட்கும் அளவு

ஒலித்துறை பொருத்த வரை எனது பதிவு அர்த்தத்துக்கு விளக்கமளித்தல் மட்டும் ஆகிறது.
(வார்த்தையல்ல)

எனக்குச் சரியெனத் தெரிவது : கேட்பளவு, ஒலியளவு, ஓசையளவு, சத்தமளவு


மேலும்:
"Vetri Mega Dictionary" - English-English-Tamil" (4th edition -2001) இல்
"ஒலிப்பருமன்" . அதுவும் பொருத்தம் என நினக்கிறேன்.

Univ. of Madars , ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் (1992) இல் ஒரு பதிவு இவ்வாறு:
"(இசை.) தொனி நிறைவு"

இசைத்துறையில் volume என்பதற்கு வேறு அர்த்தமுள்ளதா? "தொனி" நிறைவு என்கையில் வேறு
ஏதோ ஒன்றைக் கூறுகிறார்களோ? "தொனி" என்பதற்கு ஆங்கில வார்த்தை என்ன?

~சேது

"


Ravishankar

unread,
Mar 10, 2007, 5:12:46 AM3/10/07
to tamil_wi...@googlegroups.com
சேது, அறிவியல் வகையில் ஒலிப்பருமன் போன்ற சொற்களை அகராதிகளில் தரலாம் என்றாலும் அவை பேச்சு வழக்கில் வருவது கடினம் என்று நினைக்கிறேன். கேட்பளவு கூட சற்று சிரமம் தான். ஒலியளவு பெரிதும் புழக்கத்துக்கு வரக்கூடியது..அதன் பொருள் குறையுடையதாக இருக்கலாம் என்றாலும்.
 
ரவி

NATARAJAN SRINIVASAN

unread,
Mar 11, 2007, 12:58:27 PM3/11/07
to tamil_wi...@googlegroups.com
அன்புடையீர்,
 
பதிவொலி, பதிவொளி ஆகிய சொற்கள் எனக்கு ஏற்புடடயவைகளாக தோன்றுகின்றன. இவை ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு ஆகியவற்றுடன் ஒத்துப் போகின்றன.
 
 audio volumeஐ ஒலி அளவு என்றே நான் பேசுகிறேன். இதில் புரிதல் குறைவு இருப்பதாக தோன்றவில்லை.
 
 
அன்புடன்
நடராஜன்.

 
Reply all
Reply to author
Forward
0 new messages