பிரசாரணம்!

59 views
Skip to first unread message

கலை

unread,
Mar 26, 2010, 7:29:02 PM3/26/10
to விக்சனரி
Osmosis என்பதற்கான தமிழ்ச் சொல்லாக இலங்கையில் பயன்படுத்தப்பட்ட சொல்
‘பிரசாரணம்'. பாடப் புத்தகங்களிலும் இவ்வாறே இருக்கிறது. இந்தச் சொல்
அர்த்தமற்றது எனச் சொல்லப்படுகிறது. இதுபற்றிய உரையாடல்,
விக்கிப்பீடியாவில் இங்கே உள்ளது.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

எனக்குத் தமிழில் புலமைத்துவம் இல்லை. அதனால் இதுபற்றி இவ்விடத்தில்
கேட்பது பொருத்தம் என நினைக்கிறேன். இந்தச் சொல்லைப்பற்றி உங்கள்
கருத்துக்களைக் கூறுங்கள். நன்றி.

Sathia Narayanan

unread,
Mar 26, 2010, 11:46:35 PM3/26/10
to tamil_wi...@googlegroups.com
சவ்வூடு பரவுதல் என்று தமிழில் படித்ததாக நினைவு.

-சத்தியா.

2010/3/27 கலை <kalai...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary

To unsubscribe from this group, send email to tamil_wiktionary+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

த*உழவன்

unread,
Mar 27, 2010, 1:44:30 AM3/27/10
to tamil_wi...@googlegroups.com
அடர்த்தியில் வேறுபட்ட இருதிரவங்கள் ,

ஒரு சவ்வினால் பிரிக்கப்படும் போது,

 இரு அடர்த்தியும் சமமாகும் வரை, 

அச்சவ்வின் ஊடே,  திரவம் பரவல் நடக்கும்.

நம் உடலின்,

ஒவ்வொரு செல்லிலும்(கலத்திலும்) நடக்கும் / நடக்க வேண்டிய,

 மிக அவசியமான / எளிமையான உடற்செயலியல் வினை ஆகும்.

தமிழகத்தில் இன்றளவும் சவ்வூடு பரவல் என்றே கற்பிக்கப் படுகிறது. எந்த வகுப்புப் பாடத்தில் என்று என்னால் இப்பொழுது சொல்ல இயலவில்லை. தெரிந்தவுடன், இங்கு அறிவிக்கிறேன். நன்றி. வணக்கம்.

2010/3/27 Sathia Narayanan <msa...@gmail.com>



--
(.!.) த*உழவன்
-------* தமிழ்; தரம்; தகவல்; தன்னம்பிக்கை

OAGAI NATARAJAN

unread,
Mar 28, 2010, 9:56:14 PM3/28/10
to tamil_wi...@googlegroups.com
சவ்வூடல் என்பது மிகச்சரியாக அதன் பொருளைக் குறிக்கிறது.
 
ஓகை நடராஜன்.

2010/3/27 த*உழவன் <tha.u...@gmail.com>

இராமகி

unread,
Mar 30, 2010, 4:57:59 AM3/30/10
to விக்சனரி
சவ்வூடு பரவல் என்ற சொல் நான் உயர்நிலைப் பள்ளியிற் படித்த 1960 களிலேயே
புழங்கிய சொல். அந்தக் கால அறிவியற் பாடநூல்களில் உள்ள சொல். அதிலும்
பரவல் என்ற பின்னால் வரும் சொல்லையும், சவ்வு என்ற முன்னொட்டையும்
தவிர்த்தாலும் ஊடுதல் என்ற சொல்லே முழுப் பொருளும் தரும். ஊடுதல் (to
osmose) என்னும் வினை சவ்வின் வழியாக நடைபெறுகிறது. ஊடுதல் என்ற வினையைக்
குறிக்கத் தமிழில் வேறு சொற்களே இல்லாத காரணத்தால் தான் media என்ற
சொல்லிற்கு மிடையம் என்று புழங்கத் தொடங்கினேன். ஊடுதல் (to osmose),
ஊடுகை (osmosis) ஊடகம் (osmotic medium) போன்ற சொற்களை இதற்கென ஒதுக்கி
மிடையம் (medium), மிடைத்தல் (to mediate) என்பவற்றை வேறு பொருளிற்
பயன்படுத்தினால் நல்லது.

இப்படி மாறாது, ஊடுதல் என்பதை media என்றே பயன்படுத்திக் கொண்டிருந்தால்
அப்புறம் osmosis க்கு ஈடாகச் சவ்வூடு பரவல் என்று முன்னொட்டு,
பின்னொட்டுச் சேர்த்துப் புழங்கிக் கொண்டிருக்க வேண்டும். இன்னும் பெரிய
கூட்டுச் சொற்கள் osmosis ஒட்டித் தமிழிற் சொல்ல வேண்டுமானால்
சரவற்படும்.

அடிப்படை வினைச்சொல்லைத் தவறாகப் புழங்கிவிட்டால் அப்புறம் காலத்திற்கும்
கடினம் தான்.

அன்புடன்,
இராம.கி.

On Mar 27, 4:29 am, கலை <kalaiar...@gmail.com> wrote:
> Osmosis என்பதற்கான தமிழ்ச் சொல்லாக இலங்கையில் பயன்படுத்தப்பட்ட சொல்
> ‘பிரசாரணம்'. பாடப் புத்தகங்களிலும் இவ்வாறே இருக்கிறது. இந்தச் சொல்
> அர்த்தமற்றது எனச் சொல்லப்படுகிறது. இதுபற்றிய உரையாடல்,

> விக்கிப்பீடியாவில் இங்கே உள்ளது.http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%...

த*உழவன்

unread,
Mar 30, 2010, 10:07:37 AM3/30/10
to tamil_wi...@googlegroups.com
தமிழின் சிறப்புகளில் ஒன்றான பன்பொருள்ஒருமொழி என்ற அடிப்படையில் ஊடுகை(osmosis) என்பது சிறப்பானச் சொல்லாக இருக்கிறது. மேலும்,

 //அடிப்படை வினைச்சொல்லைத் தவறாகப் புழங்கிவிட்டால் அப்புறம் காலத்திற்கும்
கடினம் தான்//
நீங்கள் சொல்வதை உணர்கிறேன். பல அறிவியல் சொற்கள், இந்த வகையில் கடினமாக மாறிவிட்டதை, நினைத்தால் மனம் உறுத்துகிறது.

reverse osmosis என்பதனை, பின்னூடுகை எனலாமா?





2010/3/30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>
--
You received this message because you are subscribed to the Google Groups "விக்சனரி" group.
To post to this group, send email to tamil_wi...@googlegroups.com
To unsubscribe from this group, send email to tamil_wiktiona...@googlegroups.com
For more options, visit this group at http://groups-beta.google.com/group/tamil_wiktionary

To unsubscribe from this group, send email to tamil_wiktionary+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

இராமகி

unread,
Mar 30, 2010, 12:38:19 PM3/30/10
to விக்சனரி
reverse osmosis = எதிர் ஊடுகை

அன்புடன்,
இராம.கி.

> -------* தமிழ்; தரம்; தகவல்; தன்னம்பிக்கை- Hide quoted text -
>
> - Show quoted text -

த*உழவன்

unread,
Mar 30, 2010, 7:27:24 PM3/30/10
to tamil_wi...@googlegroups.com
reverse osmosis = எதிர் ஊடுகை என்பதை ஏற்கிறேன். இருப்பனும்,  reverse என்பதற்கு பின் என்ற சொல்லினை அதிகம் பயன்படுத்துகின்றனரே. எடுத்துக்காட்டு, வண்டியில்   reverse gear எடுக்கும் போது, மிகக் கவனமாக எடுக்க வேண்டும்.

எனவே பின்னூடுகைப் பற்றி விரிவாக அறிய ஆவல்.

2010/3/30 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>
To unsubscribe from this group, send email to tamil_wiktionary+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

இராமகி

unread,
Mar 30, 2010, 8:54:28 PM3/30/10
to விக்சனரி
நம்முடைய தமிழ்ப்பேச்சில் ”தன்வினை, பிறவினைப் பயன்பாடு” மிகவும் அதிகம்.
நம்மையறியாமலேயே அதைச் செய்கிறோம். நம் நடையின் ஊடேயும் வருகிறது.

மகிழுந்து என்பது நாம் (மாந்தர்) சென்றுவரப் பயன்படுகிறது என்ற
காரணத்தால், நம்மை உள்வைத்தே அந்தச் சொற்களை அமைக்கிறோம். reverse gear
போட்டால், வண்டி நமக்குப் பின்னே வருகிறதல்லவா? அந்தக் காட்சி நமக்குள்ளே
நின்றுபோனதால், reverse என்பதற்குப் பின் என்னும் பயன்பாடு வருகிறது.
ஒருவகையில் அது சரிதான். இங்கே எதிர் என்பது வண்டிக்கு முன்னிருக்கும்
நிலையைச் சொல்லும். தமிழ் மரபு வேறு; மேலையர் மரபு வேறு என்று உணர்த்தும்
சொல் இது.

அறிவியற் போக்கோடு இதைத் தமிழிற் சொல்லவேண்டுமானால், ”எதிர்ப்
பல்லிணையைப் (reverse gear) போட்டால் நம்முடைய வண்டி பின்னே போகும்”
என்று விளக்க வேண்டும்.

ஆனால் எதிர் ஊடுகையில், மூலக்கூறுகள் நிலையில் இயக்கம் நடைபெறுவதால்,
நாம் வெளியே நின்று கொண்டு, நொதுமலாக (neutral) ஆகச் சொல்ல
முற்படுகிறோம். அப்பொழுது பிறவினைப் பயன்பாடு தான் வரும். பின்னூடுகை
என்பது பொருத்தமாய் இராது.

பொதுவாக வினைப்பயன்பாட்டை ஒட்டியே தமிழில் பேச்சுநடை இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி. .

On Mar 31, 4:27 am, த*உழவன் <tha.uzha...@gmail.com> wrote:
> reverse osmosis = எதிர் ஊடுகை என்பதை ஏற்கிறேன். இருப்பனும்,  *reverse
> என்பதற்கு பின்* என்ற சொல்லினை அதிகம் பயன்படுத்துகின்றனரே.
> எடுத்துக்காட்டு, *வண்டியில்
>   reverse gear எடுக்கும் போது, மிகக் கவனமாக எடுக்க வேண்டும்.*
>
> எனவே *பின்னூடுகை*ப் பற்றி விரிவாக அறிய ஆவல்.

த*உழவன்

unread,
Mar 30, 2010, 11:57:28 PM3/30/10
to tamil_wi...@googlegroups.com
அகமகிழ்ந்தேன். ”தன்வினை, பிறவினைப் பயன்பாடு” என்பதனை உணர்ந்தேன். வினைப்பயன்பாட்டின் முக்கியவத்தினையும் புரிந்து கொண்டேன். தங்கள் உயரிய நேரத்தினையும், கருத்துக்களையும் பகிர்ந்தமைக்கு என் நன்றியை, சிரம்தாழ்ந்த வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2010/3/31 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>
நம்முடைய தமிழ்ப்பேச்சில்மிகவும் அதிகம்.
To unsubscribe, reply using "remove me" as the subject.
B56.gif

OAGAI NATARAJAN

unread,
Apr 4, 2010, 10:36:56 PM4/4/10
to tamil_wi...@googlegroups.com
பின்னூடுகை என்பதை விட எதிர் ஊடுகை என்பதே மிகச் சரியானது என்பதற்கு அறிவியல் நோக்கிலேயே பதிலும் இருக்கிறது. ஊடுகை என்பது இரண்டு வெவ்வேறு அடர்த்தி கொண்ட கரைசல்கள் ஒரு சவ்வால் பிரிக்கப்பட்டிருக்கும் போது இயல்பாக நடக்கும் செயல். இங்கே ஊடுகையின் போக்கை மாற்ற வெளி அழுத்தம் என்றொரு விசையைப் பயன்படுத்தினால் ஊடுதல் எதிர் திசையில் நிகழ்கிறது. இது ஆற்றுநீர் ஓடும் திசைக்கு எதிராக நாம் விசைகொடுத்து நீந்தும் எதிர்நீச்சல் போன்றது.
 
ஓகை நடராஜன்.

 
2010/3/31 த*உழவன் <tha.u...@gmail.com>
B56.gif

த*உழவன்

unread,
Apr 5, 2010, 12:08:36 AM4/5/10
to tamil_wi...@googlegroups.com
தங்களது விளக்கம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி.வணக்கம்.

2010/4/5 OAGAI NATARAJAN <enge...@gmail.com>
B56.gif
Reply all
Reply to author
Forward
0 new messages