நல்லெண்ணையும் அதன் மருத்துவ குணமும் !!!
* நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது. * நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது. * நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது. * நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். * நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர். |
உணவுகளின் மருத்துவ குணம்பற்றி நீங்கள் தொடர்ந்து எழுதும் அனைத்தையும் படித்து வருகிறேன்..
யாவருக்கும் பயனளிக்கும் பணி.. வாழ்த்துக்கள்!
தொடருங்கள்..!
வாரம் தவறாமல் புதன்-சனிக்கிழமைகளில்;
100 மி. ந.எண்ணையை, தலையிலிருந்து உடல் முழுதும் பூசித் தேய்த்துத் தேய்த்து... சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஊறவைத்து..;
அதன்பிறகு சிகைக்கால் தூளைக் கொண்டு தேய்த்துக் குளித்துவிட்டு..;
அரைகிலோ மே... மாமிசத்துடன், சோற்றையோ-பிரியாணியையோ,
உள்ளே உட்கொண்டுவிட்டு, பகலில் உறங்காமல் (ஆனால், தூக்கம் சொக்கி இழுக்கும்) இரவு உறங்க படுக்கையில் விழுந்தால் பிணம்தான்.;-)
திருமணம் ஆனவர்களாக இருந்தால் இரவு சீண்டக்கூடாது;
திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் சுவரைத் தாண்டக்கூடாது;;-)
தனிப்படுக்கையே உத்தமம்!
இந்தக் கட்டுப்பாட்டை மீறினால், ஜன்னி வந்து செத்துப்போயிடுவாங்கன்னு, எங்க தாத்தாவும் ஆயாவும் சொல்லினாங்க!
கட்டுப்பாட்டை மீறி ஜன்னி வந்துப்போச்சுன்னா..,
சம்பந்தப்பட்டவங்க தொடை ரத்தத்தைக் கீறிக் குடிச்சா;
ஜன்னி விட்டு மென்னித் (தொண்டைச் சங்கு) தப்பிச்சுக்கும்னும் சொல்லினாங்க!;-)
நல்லெண்ணையை இட்டுக் கெட்டது காது; இடாமல் கெட்டது கண்ணுன்னு சொல்லுவாங்க.
கண்ணுல ரொண்டு சொட்டுவிட்டு, இமைகளை மூடிக்கிட்டு கண்களை உள்ளுக்குள்ளேயெ வெச்சு ஒரு சுழற்று வலமும் இடமுமா சுழற்றினா..
கண்ணுக்குள்ளே குளிர்ச்சி ஏற்பட்டு பார்வை குளு குளு..!
ஆனால்,
தாயகத்தைவிட்டு பல ஆண்டுகளை பாலைவன தேசத்துல தொலைச்சதோட.. எண்ணையையாவது தேய்க்கறதாவது..;
வருகிற வாரத்துல இருந்தாவது முயற்சி பண்ணிப் பார்ப்போம்..!
ஆனாலும்,
தனிப்படுக்கையை நினைச்சாத்தான் கவலையா இருக்கு..
தனியாப் படுக்கறதுன்னா எனக்கு ரொம்பவே பய்ய்ய்ய்ய்ய்ய்யம்!;-)
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en