குறளின் குரல் - 12.03.12

0 views
Skip to first unread message

மலர் சபா

unread,
Mar 12, 2012, 3:41:09 AM3/12/12
to vasent...@googlegroups.com, gulf_tami...@yahoogroups.com, tamil_...@googlegroups.com

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 13. அடக்கமுடைமை
குறள் எண்: 124

நிலையிற் றிரியா தடங்கியான் தோற்ற
மலையினு மாணப் பெரிது.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

விளக்கம்:

தன் நிலையில் மாறாது நேர்மையுடன் இல்லற நெறிகள் கடைப்பிடித்து அடக்கத்துடன் நடந்து கொள்வோர், பிறர் மனதில் மிகவும் உயர்ந்து நிற்பர். அத்தகைய உயர்ச்சி மலையை விட மிகவும் பெரியதாகும்.

அடக்கம் என்பது பெருமையை விட்டு விடுவதன்று. பெருமை வந்து சேர்ந்தவிடத்தும், தன் நிலையில் மாறாது தற்கட்டுப்பாடு மேற்கொண்டு, அத்தகைய தன்மையால் பிறர் மனதில் உயர்ந்து விளங்குவதேயாகும்.

--


Reply all
Reply to author
Forward
0 new messages