it is a cruel thing to impose Tamil education only on the poor

18 views
Skip to first unread message

indyram

unread,
Nov 26, 2010, 11:18:33 AM11/26/10
to tamil_ulagam
நண்பர்களே

தற்காலத் தமிழ் நாட்டில் நடுத்தர வகுப்பினர், பணவசதியுள்ளோர், அரசு
அதிகாரிகள் எல்லோரும் தங்களது குழந்தைகளை ஆங்கில மெட்ரிகுலேஷன்
பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.

ஆனால் அரசதிகாரிகள் தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர்கள்தமிழ் தான்
பயிலவேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

ஆங்கில வழி கல்வி நிலையங்களெல்லாம் தனியார் நிறுவனங்கள்.
அவைகளில் படிக்க டுயூஷன் (கல்விகட்டணம்) கட்டவேண்டும். ஏழை
மாணாக்கர்களின் பெற்றோர்களால் அதை செய்யமுடியாது. ஆகவே அவர்களெல்லாம்
அரசு இலவசப்பள்ளிகளில்தான் படிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக 231 எம் எல் ஏக்களில் 181 பேர்களின் குழந்தைகளும்
பேரக்குழந்தைகளும் ஆங்கில வழி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தான்
பயிலுகிறார்கள் என்ற தகவலை பத்ரிகைகள் வெளிப்ப்டுத்தியுள்ளன

தற்காலத்தில் தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலை பெற வேண்டுமானால்
திறமையான ஆங்கில அறிவு தேவை.
இதை எல்லா பெற்றோர்களுக்கும் உணர்ந்துள்ளனர்.
ஏழை மாணவர்களின் பெற்றோர்களும் இதை அறிந்துள்ளனர்.
ஆனால் அவர்களிடம் தங்கள் குழந்தைகளை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்
படிக்கவைக்க பணவசதியில்லை

கர்நாடக மாநிலத்திலும் இதே நிலமை தான். ஆனால் அங்குள்ள ஏழை மக்களெல்லாம்
அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலத்தில் பயில வசதி செய்யவேண்டும் என்று
போராட்டம் செய்து வருகிறார்களாம்.

தமிழக ஏழை மக்கள் வாழ்க்கையில் உயரவேண்டுமானால் தங்களது குழந்தைகள்
ஆங்கில வழியில் பயில உதவவேண்டும் என்று கோரிக்கைவைக்கவேண்டும்.

மனசாட்சியுள்ள நடுத்தர வகுப்பினர் இதற்கு ஆதரவளிக்கவேண்டும்

50 வருடங்களுக்கு முன் நான் தமிழ்வழியில் தான் பயின்றேன். இப்போது காலம்
மாறிவிட்டது. இப்போதைய மாணவனாக நான் இருந்திருந்தேனானால் நானும்
ஆங்கிலவழியில் தான் பயில விரும்புவேன்

இண்டி ராம்

N. Ganesan

unread,
Nov 26, 2010, 11:27:28 AM11/26/10
to tamil_ulagam, mint...@googlegroups.com

Ram,

Good point. Tamil Nadu CM Karunanidhi wants to improve the
quality of education and English skils in Government schools
also. The project is called Chamacheer Kalvi project.
Our relative Sri. M. P. Vijayakumar, I.A.S is involved
in this project. Thangam Thennarasu and CM want to see
that quality of education improves in TN schools.

See Kapil Sibal, IT minister of India, looking at
TN schools' growth.
http://www.thehindu.com/news/states/tamil-nadu/article514055.ece

I think both Tamil and English will improve in Govt. schools,
if what Kapil Sibal, CM, Thennarasu, ... are desiring for.

N. Ganesan

Mani Manivannan

unread,
Nov 26, 2010, 1:53:53 PM11/26/10
to tamil_ulagam, mintamil, tamilmanram
இண்டி ராம்,
 
தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில வழிப்பள்ளிகள் மட்டுமல்ல, பல ஆங்கில வழிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் கூடப் பெயருக்குத்தான் ஆங்கில வழிக் கல்வி.  ஆங்கிலம் இந்தியாவைப் பொருத்தவரையில் இரண்டாம் மொழி.  ஆனால், ஆங்கிலத்தை முறையாக இரண்டாம் மொழிக் கல்வி முறைப்படி (English as a Second Language ESL) கற்பிக்காமல், அதை முதல் மொழி போல் கற்பிப்பதால் ஆங்கில மொழிப் புலமையே பலருக்கு இல்லை.  ஆங்கில மொழியே தகராறாக இருக்கும்போது ஆங்கில மொழி வழிக் கல்வியிலும் சிக்கல்தான்.  பெயருக்கு ஆங்கில வழி என்றாலும், பாடங்கள் நடத்துவது பல வகுப்புகளில் தமிழிலும்தான்.  அது மட்டுமல்ல, தேர்வுகளில் விடை அளிக்கும் போது தமிழிலும் விடையளிக்கலாம் என்ற வாய்ப்பு இருப்பதை மாணவர்கள் சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
 
ஆங்கில வழிப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்த மாணவர்கள் பலருக்கும் ஆங்கிலத்தில் தங்கு தடையில்லாமல் பேசவோ, பிழையில்லாமல் எழுதவோ தெரிவதில்லை.  பிறர் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதிலும் அவர்களுக்குச் சிக்கல் இருக்கிறது.  இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளி மாநிலங்களிலும் உள்ள கதைதான்.  இவர்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், தங்கள் தாய்மொழியிலும் நன்றாகப் பேச, எழுதத் தெரிவதில்லை.  ஆங்கில வழிப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் பலருக்கும் ஆங்கிலப் புலமை இருப்பதில்லை. “பட்லர்” இங்கிலிஷ், “சட்டக்காரி” தமிழ் பேசும் நிலைமைக்கு இழிந்திருக்கிறார்கள்.
 
அது மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் பயில்பவர்களிடையே டிஸ்லெக்சியா என்னும் எழுத்துக் குழப்பம் அதிகமாகக் காணப் படுகிறது.  எழுத்துக்கும் ஒலிக்கும் நெருங்கிய தொடர்புள்ள இந்திய எழுத்து முறைகளில் (deep orthography) அவ்வளவாகக் காணப் படாத டிஸ்லெக்சியா, எழுத்துக்கும் ஒலிக்கும் தொடர்பு குன்றிய ஆங்கில எழுத்து முறை (shallow orthography) உள்ள நாடுகளில் கூடுதலாகக் காணப் படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/Orthographies_and_dyslexia#The_effects_of_orthographic_depth_on_dyslexia)  டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் படிப்பதில் விருப்பம் இல்லாதவர்களாகக் காணப் படுகிறார்கள். அமெரிக்காவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு டிஸ்லெக்சியா உள்ளது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது (http://www.readfaster.com/education_stats.asp).  தமிழகத்தில், தமிழ் வழிப் பள்ளிகளில் டிஸ்லெக்சியாவைக் காண்பது மிக அரிது.  டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகளும் இந்திய எழுத்து முறைகளால் கற்க முடிகிறது என்பதைப் பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.
 
தமிழ்வழிப் பள்ளிகளை ஒழித்து விட்டு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றினால், பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டுத் தற்குறிகளாக மாறக் கூடுவோர் எண்ணிக்கை மூன்றில் ஒருவராகக் கூட மாறலாம் என்பது அமெரிக்கப் புள்ளி விவரத்தோடு ஒப்பிட்டால் தெரியவரும்.
 
சில சிறிய மாவட்டப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றி அவற்றில் மாணவர்கள் படிப்பு நிலை உயர்கிறதா என்று பார்த்து, அவற்றில் டிஸ்லெக்சியாவின் அறிகுறிகள் தென்படுகின்றனவா போன்ற புள்ளி விவரங்களைத் திரட்டிய பின்னரே ஆங்கில வழிப் பள்ளிகளால் வாழ்க்கை நிலை உயருமா என்று அறிய முடியும்.
 
இன்றைய நிலையில் கல்வி நிலையில் உயர்ந்திருப்பவர்கள் கல்விக்குச் செலவிடும் பொருள், நேரம், அக்கறையால் உயர்ந்திருப்பவர்கள் கூடுதலே தவிர இவர்கள் ஆங்கில வழிக்கல்வியால் மட்டும் உயர்ந்திருக்கிறார்கள் என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை.
 
மேம்போக்காகப் பார்க்கும் போது தலைசிறந்த ஆசிரியர்கள், தலைசிறந்த மாணவர்கள் திரண்டிருக்கும் பள்ளிகள் பெரும்பாலும் ஆங்கில வழிப் பள்ளிகளாக இருப்பதைப் பார்த்து, எல்லாப் பள்ளிகளையும் ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றினால் பெரும் வெற்றி கிடைக்கும் என்பது தோன்றலாம்.  ஆனால், இதற்குச் சான்றுகள் குறைவு.  ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு இருக்கும் முதலீடு தமிழ் வழிப்பள்ளிகளுக்கும் இருந்தால் அவற்றாலும் பெரும் வெற்றி அடைய முடியும்.
 
எது எப்படி இருப்பினும், தமிழ்நாட்டில் ஆங்கிலம் கற்பிக்கும் முறை இரண்டாம் மொழிக் கல்வி முறையைப் பின்பற்றினால், ஆங்கிலத்தில் புலமை கூடும் என்பதில் ஐயமில்லை.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

Nakinam sivam

unread,
Nov 26, 2010, 11:50:03 PM11/26/10
to tamil_...@googlegroups.com
அன்பு நண்பர் மணிவண்ணன் அவர்களுக்கு.

நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.

ஆங்கில வழி கல்வியால் கல்வியின் தரம் மேம்படும் என்பது ஒரு மாயை.

இன்றை பள்ளி பாடத்திட்டம் மனப்பாடத்தில் யார் சிறந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களே சிறந்த படிப்பாளிகள் என்பதாகதான் அமைந்துள்ளது.

அதாவது எவர் ஒருவர் உண்ட உணவை அப்படியே செரிமானம் இல்லாமல் வாந்தி எடுக்கின்றாரோ அவரே ஆரோக்கியமானவர். உண்ட உணவை செரிமானம் செய்து அதை உடலுக்கு ஊட்டமாக்கி கழிவை வெளியிடுபவர் ஆரோக்கியம் குறைந்தவர் என்பது போலதான் நமது கல்வி முறை உள்ளது.

கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமைய கூடாது.

தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.

எந்த ஒரு குழந்தைக்கும் தாய் மொழி கல்விதான் சிறந்தது.

நம்முடைய துரதிஷ்டம் தாய்மொழி கல்வியை கற்றால் சமுகத்தில் மதிப்பு குறைவு. அறிவாளியாக முடியாது என்று போலியான முகமுடி ஏற்பட்டு விட்டது.

மேலும் கிராம பகுதிகளில் உள்ள நிறைய பள்ளி ஆசிரியர்களுக்கே ஆங்கில மொழி அறிவு குறைவாகவே உள்ளது. அவர்களை வைத்து குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்பித்தால் குழந்தைகளின் நிலை ?

ஆகவே கற்பித்தல் முறை தாய் மொழியில் இருக்க வேண்டும்.
இருப்பினும் ஆங்கில மொழி அறிவை வளர்க்க பேசும், எழுதும் திறனை வளப்படுத்தும் விதத்தில் மொழிப்பாடங்கள் அமைய வேண்டும்.

ஆங்கில வழி கல்வி கூடங்களில் கூடுமானவரை ஆங்கில சூழலை (Atmosphere) பள்ளிகளில் உருவாக்கி வைத்துள்ளார்கள். இது மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் மீதுள்ள பயத்தினை போக்கி விடுகிறது.

ஆனால் கிராம பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இது சாத்தியமா ?

நமது கிராம பகுதிகளில் உள்ள ஒருவரை இலண்டன் மாநகரிலோ அல்லது ஆங்கிலம் பேசும் மக்கள் நிறைந்த நகரிலோ இரண்டு ஆண்டுகள் தங்க வைத்தால் அவர் தானாகவே ஆங்கிலத்தை கற்றுக்கொள்வார் காரணம் சூழல்தான்.

நண்பர் மணிவண்ணன் கூறியது போல கிராம பகுதிகளில் ஆங்கில வழி கல்வி ஏற்படுத்துவது என்பது பள்ளிக் கல்வியை பாதியில் விட்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவே செய்யும்.


அன்பு சகோதரன்

நக்கினம் சிவம்


2010/11/27 Mani Manivannan <mmani...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

indyram

unread,
Nov 27, 2010, 3:28:21 PM11/27/10
to tamil_ulagam

நண்பரே

எனது நோக்கம் தமிழர்கள் எவ்வாறெல்லாம் முன்னேற்றமடையலாம் என்பதே

ஆங்கில அறிவு பெற்றால் அவர்கள் பலவிதங்களில் முன்னேற்ற மடையாலாம்

எப்படி ...தற்காலத் தேவைக்கு வேண்டிய அறிவு ஆங்கில மொழியில்தான்

அதிகமாக உள்ளது. ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பளிக்கவேண்டும்

என்பது என் கருத்து...ஏன்

மறுக்கமுடியாத ஊண்மை என்ன வேனில்

தற்கால வேலைக்கு தேவையான அறிவு ( பலதுறைகளில்) எல்லாம்

ஆங்கிலத்தில் தான் உள்ளது.

மற்ற எந்த மொழிகளில் அல்ல (தமிழாகட்டும் ( நானும் தமிழன் தான்) அல்லது
ஹிந்தி ஆகட்டும்)

இதை தற்கால தமிழ் பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர்

நண்பர் மணிவண்ணன் , நண்பர் நகினம் சிவம் தயவு செய்து தமிழ் நாட்டிலுள்ள

உங்களது சொந்தக்காரர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் எல்லாம்

எந்த பள்ளியில் பயிலுகிறார்கள் என்று தெரிவிப்பிர்களா?

எனது உடன்பிறந்தோர்களெல்லாம் நான் படித்த பள்ளியிலேயே தமிழில்

பயின்றார்கள் ( 50-60 வருடங்களுக்கு முன்)

ஆனால் அவர்களின் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும்

ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படித்தார்கள் , படித்தும்
வருகிறார்கள்

இந்த குழுவில் தமிழில் எழுதிவரும் பெரும்பாலோரின் உடன்பிறப்புகளெல்லாம்

ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் படிக்கிறார்கள் என்று

எழுதினார்களென்றால் நான் ஆச்சரியப்படமாட்டேன்

On Nov 26, 1:53 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
>  இண்டி ராம்,
>
> தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில வழிப்பள்ளிகள் மட்டுமல்ல, பல ஆங்கில
> வழிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் கூடப் பெயருக்குத்தான் ஆங்கில
> வழிக் கல்வி.  ஆங்கிலம் இந்தியாவைப் பொருத்தவரையில் இரண்டாம் மொழி.  ஆனால்,
> ஆங்கிலத்தை முறையாக இரண்டாம் மொழிக் கல்வி முறைப்படி (English as a Second
> Language ESL) கற்பிக்காமல், அதை முதல் மொழி போல் கற்பிப்பதால் ஆங்கில மொழிப்
> புலமையே பலருக்கு இல்லை.  ஆங்கில மொழியே தகராறாக இருக்கும்போது ஆங்கில மொழி
> வழிக் கல்வியிலும் சிக்கல்தான்.  பெயருக்கு ஆங்கில வழி என்றாலும், பாடங்கள்
> நடத்துவது பல வகுப்புகளில் தமிழிலும்தான்.  அது மட்டுமல்ல, தேர்வுகளில் விடை
> அளிக்கும் போது தமிழிலும் விடையளிக்கலாம் என்ற வாய்ப்பு இருப்பதை மாணவர்கள்
> சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


அன்பு நண்பரே

நான் ஆங்கில வழி , தமிழ் வழி படிக்கும் மேல் நிலைப் பள்ளி
மாணவர்களை சந்திதுள்ளேன்

கணிதமும் , விஞ்ஞானமும் ( I know there is a better Tamil word. I don't
have the dictionary with me now)
அழாத குறையாக மாணவர்கள் உள்ளனர்
அவர்கள் பல சரியான வார்த்தைகள் அறியாமால் மேல் படிப்புக்கு படிக்கும்போது
அவதிப்படுகிறார்கள்


>
> ஆங்கில வழிப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்த மாணவர்கள் பலருக்கும்
> ஆங்கிலத்தில் தங்கு தடையில்லாமல் பேசவோ, பிழையில்லாமல் எழுதவோ தெரிவதில்லை.
> பிறர் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதிலும் அவர்களுக்குச் சிக்கல்
> இருக்கிறது.  இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளி மாநிலங்களிலும் உள்ள கதைதான்.
> இவர்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், தங்கள் தாய்மொழியிலும் நன்றாகப் பேச,
> எழுதத் தெரிவதில்லை.  ஆங்கில வழிப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கும்
> ஆசிரியர்கள் பலருக்கும் ஆங்கிலப் புலமை இருப்பதில்லை. “பட்லர்” இங்கிலிஷ்,
> “சட்டக்காரி” தமிழ் பேசும் நிலைமைக்கு இழிந்திருக்கிறார்கள்.

இருக்கலாம்

ஏன்

நன்றாகப் படித்த மாணவர்கள் என்ன வாத்திராகவா விரும்புகிறார்கள்

ஆங்கில வாத்தியாரின் தரத்தையோ, அதை கற்பவர்களின்

திறமையைப் பற்றியும் நான் எழுதவில்லை

ஆங்கில டுயூஷன் கொடுப்பவர்களை சோதித்து பாருங்கள்

எந்த மொழி பயிலுவதிலும் நாலு திறமைகள் உள்ளன

1. வார்த்தை களஞ்சியம்
2. புரிதல் ( எழுத்து , பேச்சு)
3. பேசுதல்
4. எழுதுதல்

தமிழ் நாட்டிலோ அல்லது மற்ற மொழி பேசும் இடங்களிலும்

ஆங்கிலம் பயின்றால் அவர்களுக்கு 1 2 கிடைக்கும்

பேசுதல் என்பது மிகக் கடினம்

எழுதுதல் பரவாயில்லை

தமிழ் நாட்டில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு

பேசுதல் எளிதாக வந்து விடும்

ஆனால் எழுதுப்படிப்பும் எழுதுவதும் சரியாக இருக்காது

இப்போது கல்லூரி படித்த எந்த தமிழ் மாணவர்களாக இருக்கட்டும்

( மருத்துவ, பல்) இவர்கள் எல்லோராலும் ஆங்கிலத்தில்

எந்த தலைப்பிலும் எழுத முடிகிறது. ஆனால் இவர்களுக்கு

தமிழில் எழுதவேண்டுமானால் ததிங்கினத்தாம் போடுவார்கள்

சரி சரி எங்கோ ஆரம்பித்து எங்கே போகிறேன்


>
> அது மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் பயில்பவர்களிடையே டிஸ்லெக்சியா என்னும்
> எழுத்துக் குழப்பம் அதிகமாகக் காணப் படுகிறது.  எழுத்துக்கும் ஒலிக்கும்
> நெருங்கிய தொடர்புள்ள இந்திய எழுத்து முறைகளில் (deep orthography) அவ்வளவாகக்
> காணப் படாத டிஸ்லெக்சியா, எழுத்துக்கும் ஒலிக்கும் தொடர்பு குன்றிய ஆங்கில
> எழுத்து முறை (shallow orthography) உள்ள நாடுகளில் கூடுதலாகக் காணப் படுவதாக

> ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/Orthographies_and_dyslexia#The_effects_o...)


> டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் படிப்பதில் விருப்பம் இல்லாதவர்களாகக் காணப்
> படுகிறார்கள். அமெரிக்காவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு டிஸ்லெக்சியா உள்ளது
> என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது (http://www.readfaster.com/education_stats.asp).  தமிழகத்தில், தமிழ் வழிப்
> பள்ளிகளில் டிஸ்லெக்சியாவைக் காண்பது மிக அரிது.  டிஸ்லெக்சியா உள்ள
> குழந்தைகளும் இந்திய எழுத்து முறைகளால் கற்க முடிகிறது என்பதைப் பற்றிய
> ஆய்வுகள் தொடர்கின்றன.

நண்பரே

அமெரிக்காவில் ஐந்தில் ஒன்று ( 20%) குழந்தைகளுக்கு டிஸ்லெக்ஸியாவா?

ஐயா டிஸ்லெக்சியா என்பதற்கு தமிழில் வார்த்தையிருக்கிறதா?

யாரு தமிழில் படித்தால் லிஸ்லெக்சியா இருக்காதுன்னு சொல்றாரு

அவர் என்ன ஆராய்ச்சி செய்து எங்கு பதிப்பித்துள்ளார்

தமிழில் படித்தால் இது இருக்காது

இது வரும்

அப்படி இப்படின்னு சொல்கிறவர்கள்முன்னே ஒரு கேள்வி வைக்கிறேன்

அதாவது

தயவு செய்து உண்மையாக சொல்லுங்கள்

“உங்களதுசொந்தக்காரர்களின் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும்

தற்சமயம் எந்த பள்ளியில் பயிலுகிறார்கள் ஆங்கில வழி மெட்ரிகுலேஷன்

பள்ளிகளிலா அல்லது தமிழ் வழி பள்ளிகளிலா”

ஆகவே ஊருக்கு ஒரு உபதேசம் கொடுக்காமால்

நாம் நம் குழந்தைகளுக்கும் பேரக்குழந்த்திகளுக்கும்

அளிக்கும் விதமாக தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஏழைகுழந்தைகளுக்கும்

ஆங்கில அறிவு பெற வாய்ப்பளிக்கவேண்டும் என்ற ஒரே கோரிக்கையைத்தான்

நான் உங்கள் முன் வைக்கிறேன்

ஆங்கிலம் படித்து புலமை பெறவேண்டாம்

ஆங்கிலத்திலுள்ள பலதரப்பட்ட தற்கால வேலைக்கு தேவையான

அறிவை எளிதில் படித்துபுரிந்துகொள்ளதான்


நண்பரே இன்னும் ஒரு தடவை கேட்கிறேன்

தமிழ்நாட்டிலுள்ள உங்கள் சொந்தக்காரர்களின் குழந்தைகள்

பேரக்குழந்தைகள் எல்லாம் எந்த் பள்ளியில் பயிலுகிறார்கள்

தெரிவியுங்கள்

தயவு செய்து உணர்ச்சியடையாமல் கோவப்படாமல்

விவாதிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

இண்டி ராம்

>


> >  On Nov 26, 10:18 am, indyram <indy...@gmail.com> wrote:
> > > நண்பர்களே
>
> > > தற்காலத் தமிழ் நாட்டில் நடுத்தர வகுப்பினர், பணவசதியுள்ளோர், அரசு
> > > அதிகாரிகள் எல்லோரும்  தங்களது குழந்தைகளை ஆங்கில மெட்ரிகுலேஷன்
> > > பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள்.
>

> ...
>
> read more »

indyram

unread,
Nov 27, 2010, 3:59:42 PM11/27/10
to tamil_ulagam
நண்பர் சிவம்

உணர்ச்சி வசப்படாமல்

கோவப்படாமல்

தயவு செய்து இந்த கேள்விக்கு பதில் அளியுங்கள்

“தற்சமயம், தமிழ் நாட்டிலுள்ள தங்களது

சொந்தக்காரர்களின் குழந்தைகளும் அல்லது பேரக்குழந்தைகளும்

எந்த பள்ளியில் படிக்கிறார்கள். ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலா

அல்லது தமிழ் வழிப் பள்ளிகளிலா?”

On Nov 26, 11:50 pm, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு நண்பர் மணிவண்ணன் அவர்களுக்கு.
>
> நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.
>
> ஆங்கில வழி கல்வியால் கல்வியின் தரம் மேம்படும் என்பது ஒரு மாயை.


கல்வியின் தரமல்ல

அமெரிக்காவில் இது பெரிய பிரச்சனை

எப்படி நல்ல கல்வி பற்பிப்பது

நான் சொல்லி வருவது

தமிழ் நாட்டிலுள்ள ஏழை மாணவர்களுக்கும் ஆங்கில வழியில்

கல்வி பயில வாய்ப்பளிக்கவேண்டுமென்பதே

>
> இன்றை பள்ளி பாடத்திட்டம் மனப்பாடத்தில் யார் சிறந்தவர்களாக இருக்கின்றார்களோ
> அவர்களே சிறந்த படிப்பாளிகள் என்பதாகதான் அமைந்துள்ளது.

ஒத்துகொள்கிறேன்

ஆனால் அவர்களெல்லாம் எந்த பள்ளியில் படிக்கிறார்கள்

ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலா?

அல்லது தமிழ் வழி பள்ளிகளிலா

தமிழ் வழியில் படித்து மாநில ரேங்க் வாங்கி பிறகு வேலைக்கு போனபிறகு

அவர்கள் அவர்களது குழந்தைகளை தமிழ் வழி பள்ளிகளுக்கா அனுப்புவார்கள்?

அனுப்புகிறார்களா? சொல்லுங்கள்


>
> அதாவது எவர் ஒருவர் உண்ட உணவை அப்படியே செரிமானம் இல்லாமல் வாந்தி
> எடுக்கின்றாரோ அவரே ஆரோக்கியமானவர். உண்ட உணவை செரிமானம் செய்து அதை உடலுக்கு
> ஊட்டமாக்கி கழிவை வெளியிடுபவர் ஆரோக்கியம் குறைந்தவர் என்பது போலதான் நமது
> கல்வி முறை உள்ளது.

கல்விமுறை எங்கும் நல்லாயில்லை

அமெரிக்காவில் அது படுமோசம்

தற்சமயம், சீனா, சிங்கப்பூர், செர்மனி, ஜப்பான், வட அய்ரோப்பா ஆகிய
நாடுகளில்தான்

உள்ளது


>


> கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட
> திறனை வெளிப்படுத்துவதாக அமைய கூடாது.
>
> தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை
> விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.

ஒத்துக்கொள்கிறேன்

>
> எந்த ஒரு குழந்தைக்கும் தாய் மொழி கல்விதான் சிறந்தது.
>
> நம்முடைய துரதிஷ்டம் தாய்மொழி கல்வியை கற்றால் சமுகத்தில் மதிப்பு குறைவு.
> அறிவாளியாக முடியாது என்று போலியான முகமுடி ஏற்பட்டு விட்டது.


தூரதிஷ்டம் கிடையாது

அய்யா . மெரும்பாலான படித்தவர்கள், நடுத்தர வகுப்பினர்

ஏன் 231ல் 181 எம் எல் ஏக்கள் எல்லாம் வெளியில் என்னதான்

சொன்னாலும் தங்களது குழந்தைகளையும் அவர்களது பேரக்குழந்தைகளையும்

எந்த பள்ளியில் படிக்கவைக்கிறார்கள்

இவர்களெல்லாம் முட்டாள்களா

இவர்களெல்லாம் என்னைப் போல ஒரு காலத்தில் தமிழ் வழி பள்ளியில்

தானே படித்து இப்போது முன்னேறியிருக்கிறார்கள்

இருந்தாலும் ஏன் அவர்கள் தங்களது குழந்தைகளை மட்டும் ஆங்கில வழி

பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்

அந்த வாய்ப்பை ஏன் அரசுப்பள்ளிகளில் படிக்கும்

ஏழை மாணவர்களுக்கு அளிக்ககூடாது. அதைத் தான் நான் சொல்லிவருகிறேன்


>
> மேலும் கிராம பகுதிகளில் உள்ள நிறைய பள்ளி ஆசிரியர்களுக்கே ஆங்கில மொழி அறிவு
> குறைவாகவே உள்ளது. அவர்களை வைத்து குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்பித்தால்
> குழந்தைகளின் நிலை ?

கிராமப்பகுதி என்ன நகரப்பகுதியிலும் தான்

தரவித்தியாசம் இருக்கத்தான் செய்யும்

(we have 500 engineering colleges in TN are they all as good as IIT?)

>
> ஆகவே கற்பித்தல் முறை தாய் மொழியில் இருக்க வேண்டும்.
> இருப்பினும் ஆங்கில மொழி அறிவை வளர்க்க பேசும், எழுதும் திறனை வளப்படுத்தும்
> விதத்தில் மொழிப்பாடங்கள் அமைய வேண்டும்.
>
> ஆங்கில வழி கல்வி கூடங்களில் கூடுமானவரை ஆங்கில சூழலை (Atmosphere) பள்ளிகளில்
> உருவாக்கி வைத்துள்ளார்கள். இது மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் மீதுள்ள
> பயத்தினை போக்கி விடுகிறது.
>
> ஆனால் கிராம பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இது சாத்தியமா ?
>
> நமது கிராம பகுதிகளில் உள்ள ஒருவரை இலண்டன் மாநகரிலோ அல்லது ஆங்கிலம் பேசும்
> மக்கள் நிறைந்த நகரிலோ இரண்டு ஆண்டுகள் தங்க வைத்தால் அவர் தானாகவே ஆங்கிலத்தை
> கற்றுக்கொள்வார் காரணம் சூழல்தான்.
>
> நண்பர் மணிவண்ணன் கூறியது போல கிராம பகுதிகளில் ஆங்கில வழி கல்வி ஏற்படுத்துவது
> என்பது பள்ளிக் கல்வியை பாதியில் விட்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவே
> செய்யும்.

கிராமங்களிலுள்ள பணக்காரர்களெல்லாம் தங்கள்

குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் எந்த பள்ளியில்

படிக்கவைக்கிறார்கள் என்ற தகவலை எனக்கு தெரிவிப்பீர்களா?

நண்பரே

உணர்ச்சிவசப்படாமல்

கோவப்படாமல்

நன்றாக விவாதிக்க கேட்டுக்கொள்கிறேன்

நடுத்தர வகுப்பினரும் பணவசதியுள்ளவர்களும்

அரசு அதிகாரிகளும் தங்களது குழந்தைகளை ஆங்க்கிலவழிப் பள்ளிகளில்

படிக்கவைக்கிறார்கள். அப்படியிருக்கையில்

ஏழை மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பை ஏன் அளிக்கக்கூடாது?

ஒரு காலத்தில் BC, MBC, SC, ST குழந்தைகளுக்கு பள்ளிவாய்ப்பே
அளிக்கப்படவில்லை

இப்போது ஏழை மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி ( பணம் இல்லாததால்)

கிடைக்காத நிலை உள்ளது

அதை மாற்றவேண்டும்

இண்டி ராம்

>
> அன்பு சகோதரன்
>
> நக்கினம் சிவம்
>

> 2010/11/27 Mani Manivannan <mmanivan...@gmail.com>

> >http://en.wikipedia.org/wiki/Orthographies_and_dyslexia#The_effects_o...)


> > டிஸ்லெக்சியா உள்ள குழந்தைகள் படிப்பதில் விருப்பம் இல்லாதவர்களாகக் காணப்
> > படுகிறார்கள்.
>

> ...
>
> read more »

Nakinam sivam

unread,
Nov 29, 2010, 7:55:27 AM11/29/10
to tamil_...@googlegroups.com
அன்பு நண்பர் இண்டிராம் அவர்களுக்கு.

நீங்கள் சொன்னதை மறுக்க வேண்டும் என்பதற்காக எதையும் எழுதவில்லை. தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்.

கிராம பகுதி மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்கின்ற உங்களது விழைவு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இருப்பினும் ஆங்கில வாயிலாக கற்றால் மட்டுமே கல்வியின் தரம் மேம்படும் என்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நாம் பேசுவது கிராம புற கல்வி மேம்பாட்டைப் பற்றி மட்டுமே

அப்படி இருக்கையில் இன்றைக்கு நமது கிராமங்களின் நிலையை நோக்கும்போது கிராமபுற மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆங்கில மொழி பாடம் மட்டுமே. கிராமபுற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணமே ஆங்கில மொழி பாடத்தில் அவர்களால் தேர்ச்சி பெற இயலாததே ஆகும். காரணம் ஆங்கிலம் அவர்களுக்கு அன்னிய மொழியாக இருப்பது மட்டுமல்லாமல் அவர்களை பயமுறுத்தும் மொழியாகவம உள்ளது.

அப்படிப்பட்ட மாணவர்களை அனைத்து மாணவர்களையும் பாடங்கள் அனைத்தையும் ஆங்கில வழியில் பயில வேண்டும் என்றால் அவர்களின் நிலை என்னவாகும் என்று சிறிது யோசிக்க வேண்டும்.

கிராமபுற மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி அளிப்பதை விட அவர்களுக்கு ஆங்கிலத்தின் மீது இருக்கும் பயத்தை போக்கும் விதமாக ஆங்கில மொழி பயிற்சி அளிப்பதே முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

நகரங்களில் உள்ள ஆங்கில வழி பள்ளிகளில் ஆங்கில சூழலை ஏற்படுத்துகின்றார்கள். தவறாக பேசினாலும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்படுவதனால் மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் மீதுள்ள பயம் அகற்றப்படுகிறது. 

ஆனால் கிராமபுறங்களில் அத்தகைய ஆங்கில சூழலை ஏறப்டுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதா ? என நாம் யோசிக்க வேண்டும்.

ஆங்கில வழியில் பயில வேண்டிய கட்டாயம் 

நாம் எப்போதும் நமக்காக வாழ்வதை விட நம்மை சுற்றியுள்ள நமது சமுதாயத்திற்காக வாழ்வதே நமது பிழைப்பாக மாறிவிட்டது. நம்மை சுற்றியுள்ள நமது சமுதாயம் நம்மை எந்த விதத்தில் ஏளனப்படுத்தலாம் என்று காத்திருக்கிறது. அது உறவினர்களாக இருக்கட்டும், நண்பர்களாக இருக்கட்டும், சுற்றி உள்ள அக்கம் பக்கத்தினர் ஆக இருக்கட்டும் அவர்களை சரிகட்டும் விதமாகவே நமது செயல்கள் அமைந்து விடுகின்றன.

நமக்கு விருப்பம் இருந்தாலும் சமுகத்தின் போலி கவுரவம் காக்க மற்றவர்களை பின்பற்ற வேண்டிய அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உதாரணத்திற்கு

அரசு பள்ளிகளிலோ, அல்லது அரசு கல்லுரிகளிலோ பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தங்களை அரசு ஊழியர்கள் என்று பெருமைபட்டுக்கொள்வார்கள். ஆனால் தங்கள் பள்ளிகளிலோ தங்கள் கல்லுரிகளிலோ தங்கள் பிள்ளைகளை சேர்க்க மாட்டார்கள். காரணம் சமுகத்தில் அரசு பள்ளியில் படித்தால் அவன் சமுக அந்தஸ்து குறைந்தவன் என்பது போல ஒரு மாயத் தோற்றம் உள்ளது. அதே போல்தான் தமிழ் வழி கல்வி பயிலுவதிலும் உள்ளது.

நான் இந்த சமுதாயத்திற்கு எல்லாம் செவி சாய்க்க மாட்டேன் என்பது வாதத்திற்கு வேண்டுமானால் இருக்கலாம் நடைமுறை என்பது மாறுபட்டே இருக்கிறது.

ஆகவே அன்பு நண்பர் ஆங்கில வழி கல்வியை கிராம புறங்களில் வழங்குவதை விட ஆங்கில மொழி மீது உள்ள பயத்தை போக்கும் விதத்தில் ஆங்கில மொழியை கற்றுத்தந்தால் அவர்களின் கல்வித்தரம் உயரும் மேலும் அவர்களின் உயர்கல்விக்கும் பெரிதும் உதவும் என்பதனை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 


அன்பு சகோதரன்

நக்கினம் சிவம்
 

2010/11/28 indyram <ind...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group,  send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

indyram

unread,
Nov 30, 2010, 3:15:27 PM11/30/10
to tamil_ulagam

On Nov 29, 7:55 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு நண்பர் இண்டிராம் அவர்களுக்கு.
>
> நீங்கள் சொன்னதை மறுக்க வேண்டும் என்பதற்காக எதையும் எழுதவில்லை. தயவு செய்து
> தவறாக நினைக்க வேண்டாம்.
>
> கிராம பகுதி மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்கின்ற உங்களது
> விழைவு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

தரமான கல்வி இலவசமாக எங்கும் கிடைப்பதில்லை என்ற புலம்பல்

எல்லா நாடுகளிலும் ( அமெரிக்காவிலும்) ஒலிக்கின்றன.

மாணவர்கள் தரமான கல்வி பெற

அவர்கள் நன்றாக படிக்கவேண்டும்
அவர்கள் பெற்றோர்கள் அவர்களுக்கு வீட்டில்படிப்புதவி அளிக்கவேண்டும்
நல்ல ஆசிரியர்கள் இருக்கவேண்டும்
தரமான பள்ளி நிர்வாகம் இருக்கவேண்டும்

இந்த நான்கும் இருந்தால் தான் எல்லாம் சரிப்படும்

இது கிராமங்களாகட்டும் அல்லது அமெரிக்காவிலுள்ள பெரும் நகர்களாகட்டும்
எல்லா இடங்களிலும் உள்ள சோதனைதான்


>
> இருப்பினும் ஆங்கில வாயிலாக கற்றால் மட்டுமே கல்வியின் தரம் மேம்படும் என்பதனை
> என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் அதை சொல்லவேயில்லை


ஆனால் நான் அடிக்கடி சொல்லி வருவது

தற்கால வேலைகளுக்கு தேவையான அறிவு எல்லாம் ஆங்கிலத்தில் அதிகமாகவுள்ளது

தமிழில் இல்லை

ஆங்கில அறிவு நன்றாக இருந்தால் அந்த அறிவை எளிதில் பெறலாம்

( அறிவியல், தொழில்நுட்பம், பிசினஸ், கண்டிராக்ட், மருத்துவம், எல்லாம்
ஆங்கில
மொழியில் தான் அதிகமாக உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை)

நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ ஏழை மாணவர்கள்

மற்ற நடுத்தரவர்கத்தினர் விரும்பிப்படிக்கிறமாதிரி ஆங்கில

வழியில் அரசுப்பள்ளிகளில் ஒரு “வாய்ப்பு” அளிக்கவேண்டும் என்பதே என்
கருத்து


அவர்கள் ஆங்கில வழியில் கட்டாயமாக கல்வி பயலவேண்டும் என்று சொல்லவில்லை.

-----------------------------------------------------------------------------------------

தாய் மொழியில் கற்றால் இந்த இந்த சாதகங்கள் உள்ளன

ஆங்கிலத்தில் கற்றால் இந்த இந்த பாதகங்கள் ஏற்படும் என்று

விவாதிப்பவர்களின் ”சொந்தக்காரர்கள்” எல்லோரும் அதீத கல்விக்கட்டணம்
கட்டி

மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அனுப்பிவைக்கிறார்கள்?

இந்த கேள்விக்கு யாரும் பதில் தரமாட்டேங்கிறார்கள்

(ஏன் அவர்கள் சொந்தக்காரர்கள் எல்லாம் கௌரவஸ்தர்களா, முட்டாள்களா?)

கிராமப் பகுதியிலுள்ள பணக்காரர்கள் மட்டும் ஏன் சிரமமெடுத்து தங்கள்

குழந்தைகளை பக்கத்தூரிலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்


>
> நாம் பேசுவது கிராம புற கல்வி மேம்பாட்டைப் பற்றி மட்டுமே
>
> அப்படி இருக்கையில் இன்றைக்கு நமது கிராமங்களின் நிலையை நோக்கும்போது கிராமபுற
> மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது ஆங்கில மொழி பாடம் மட்டுமே. கிராமபுற
> மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணமே ஆங்கில மொழி பாடத்தில்
> அவர்களால் தேர்ச்சி பெற இயலாததே ஆகும். காரணம் ஆங்கிலம் அவர்களுக்கு அன்னிய
> மொழியாக இருப்பது மட்டுமல்லாமல் அவர்களை பயமுறுத்தும் மொழியாகவம உள்ளது.
>
> அப்படிப்பட்ட மாணவர்களை அனைத்து மாணவர்களையும் பாடங்கள் அனைத்தையும் ஆங்கில
> வழியில் பயில வேண்டும் என்றால் அவர்களின் நிலை என்னவாகும் என்று சிறிது யோசிக்க
> வேண்டும்.
>
> கிராமபுற மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி அளிப்பதை விட அவர்களுக்கு
> ஆங்கிலத்தின் மீது இருக்கும் பயத்தை போக்கும் விதமாக ஆங்கில மொழி பயிற்சி
> அளிப்பதே முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

ஒத்துக்கொள்கிறேன்

அவர்கள் ஆங்கிலமொழி கற்று கொள்வதில் பயமடைவதற்குக் காரணம்

அவர்கள் பெற்றோர்கள் பெரும்பாலும் பட்டதாரிகள் அல்ல ( நகர்ப்புற
பெற்றோர்கள் மாதிரி)

பட்டதாரிகள் எல்லோரும் கிராமங்களிலிருந்து வெளியேறிவிடுகிறார்களே.


>
> நகரங்களில் உள்ள ஆங்கில வழி பள்ளிகளில் ஆங்கில சூழலை ஏற்படுத்துகின்றார்கள்.
> தவறாக பேசினாலும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்பது
> நடைமுறைப்படுத்தப்படுவதனால் மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் மீதுள்ள பயம்
> அகற்றப்படுகிறது.
>
> ஆனால் கிராமபுறங்களில் அத்தகைய ஆங்கில சூழலை ஏறப்டுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதா
> ? என நாம் யோசிக்க வேண்டும்.
>
> ஆங்கில வழியில் பயில வேண்டிய கட்டாயம்
>
> நாம் எப்போதும் நமக்காக வாழ்வதை விட நம்மை சுற்றியுள்ள நமது சமுதாயத்திற்காக
> வாழ்வதே நமது பிழைப்பாக மாறிவிட்டது. நம்மை சுற்றியுள்ள நமது சமுதாயம் நம்மை
> எந்த விதத்தில் ஏளனப்படுத்தலாம் என்று காத்திருக்கிறது. அது உறவினர்களாக
> இருக்கட்டும், நண்பர்களாக இருக்கட்டும், சுற்றி உள்ள அக்கம் பக்கத்தினர் ஆக
> இருக்கட்டும் அவர்களை சரிகட்டும் விதமாகவே நமது செயல்கள் அமைந்து விடுகின்றன.
>
> நமக்கு விருப்பம் இருந்தாலும் சமுகத்தின் போலி கவுரவம் காக்க மற்றவர்களை
> பின்பற்ற வேண்டிய அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


இல்ல சார் இது ஒன்றும் (மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்க விரும்புவது)
அசட்டு கௌரவத்திற்காக அல்ல

கடந்த 30 வருடங்களில் தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆங்கில

அறிவும் பெற்றார்களானால் தமிழ் நாட்டிலும் , வெளி மாநிலங்களிலும், வெளி

நாடுகளிலும் வேலை வாய்ப்பு பெறாலாம் என்கிற ஒரே காரணத்திற்காக

அப்பள்ளிகளுக்கு மிகுந்த செல்வு பண்ணி அனுப்புகிறார்கள்


இவ்வாறு செய்யும் பெற்றோர்கள் எல்லாம் தாங்கள் குழந்தையாய் இருந்தபொழுது

தமிழ் வழி கல்விநிலையங்களில் படித்தவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது

(காலத்தோடு மாறும் யதார்த்தவாதிகள்தான்)


>
> உதாரணத்திற்கு
>
> அரசு பள்ளிகளிலோ, அல்லது அரசு கல்லுரிகளிலோ பணியாற்றும் ஆசிரியர்கள்,
> பேராசிரியர்கள் தங்களை அரசு ஊழியர்கள் என்று பெருமைபட்டுக்கொள்வார்கள். ஆனால்
> தங்கள் பள்ளிகளிலோ தங்கள் கல்லுரிகளிலோ தங்கள் பிள்ளைகளை சேர்க்க மாட்டார்கள்.
> காரணம் சமுகத்தில் அரசு பள்ளியில் படித்தால் அவன் சமுக அந்தஸ்து குறைந்தவன்
> என்பது போல ஒரு மாயத் தோற்றம் உள்ளது. அதே போல்தான் தமிழ் வழி கல்வி
> பயிலுவதிலும் உள்ளது.
>
> நான் இந்த சமுதாயத்திற்கு எல்லாம் செவி சாய்க்க மாட்டேன் என்பது வாதத்திற்கு
> வேண்டுமானால் இருக்கலாம் நடைமுறை என்பது மாறுபட்டே இருக்கிறது.
>
> ஆகவே அன்பு நண்பர் ஆங்கில வழி கல்வியை கிராம புறங்களில் வழங்குவதை விட ஆங்கில
> மொழி மீது உள்ள பயத்தை போக்கும் விதத்தில் ஆங்கில மொழியை கற்றுத்தந்தால்
> அவர்களின் கல்வித்தரம் உயரும் மேலும் அவர்களின் உயர்கல்விக்கும் பெரிதும்
> உதவும் என்பதனை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நல்ல பாயிண்டு அளித்துள்ளீர்

ஒப்புக்கொள்கிறேன்

நான் சொல்வது ஏழை மாணவர்கள் (நகர்ப்புறத்திலுள்ள) ஆங்கில வழி கல்வி
பயலவேண்டும்

என்று ”விரும்பினால்” அவர்கள் அவ்வாறு செய்ய அரசுப்பள்ளிகளில்
வாய்ப்பளிக்க வேண்டும்

என்ற பாயிண்டை மற்றும் திரும்பி வைக்கிறேன்

ஆங்கில வழி செக்‌ஷன் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு சென்று

தமிழ் வழி செக்‌ஷனில் உள்ள மாணவர்களை கேளுங்கள்

“ஏன் தம்பி உங்க அப்பாவால் ஸ்பெஷல் ஃபி கட்டமுடிஞ்சால்

ஆங்கில வழி செக்‌ஷனில் படிக்கவிரும்புவாயா ”

எல்லோரும் ஆமாம் என்பார்கள்

Reply all
Reply to author
Forward
0 new messages