--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
திரு மயூரநாதன்,செல்வாவின் பயத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு யூனிகோடிடம் செல்ல முடியாது. இது போன்ற அச்சங்கள் வெட்டிக் கற்பனையாகவும், வீண் மிரட்சியாகவும் தெரிந்து நம்மை நகைப்புக்கு உள்ளாக்கும்.கிரந்தத்தை யூனிகோடு குறியீட்டுக்குள் கொண்டு வர முயலும் அறிஞர்கள் அரும்பாடுபட்டு உழைத்து நல்ல முன்மொழிவைப் பதித்திருக்கிறார்கள். அவற்றைத் திருத்த வேண்டும் என்றால், நாமும் அதே அளவு உழைக்க வேண்டும். மக்களின் அச்சத்தை வைத்து மட்டும் எதிர்ப்புக் குரல் கொடுத்தால் அதை நுட்பக்குழு ஏற்பது கடினம்.செல்வா குறிப்பிட்ட பயமும் கருத்தறியும் கூட்டத்தில் அலசப் பட்டது. அதைப் பின்னர் பதிவு செய்கிறேன்.தற்போது ஒரு நல்ல செய்தி:சற்று முன் யூனிகோடு நுட்பக் குழுவின் தலைவி லிசா மோரிடமிருந்து வந்த மின்னஞ்சலின் படி, கிரந்தம் தொடர்பான இரு முன்மொழிவுகள் பற்றிய முடிவுகள் (இந்திய அரசின் கிரந்தம், ஷர்மாவின் நீட்சித் தமிழ்) இரண்டும் மேலும் தமிழகப் பயனர்கள் மற்றும் பன்னாட்டு மொழியறிஞர்கள் கருத்து அறிவதற்காக ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. இவை பற்றிய விவாதங்கள் குழுவில் தொடர்கின்றன. கருத்து வழங்க விரும்புபவர்கள் யூனிகோடுக்குத் தொடர்ந்து கருத்தளிக்கலாம்.
அன்புடன்,மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
2010/11/6 Mayooranathan Ratnavelupillai <rmayoor...@gmail.com>
செல்வா, உங்களுடைய பயம் தான் எனக்கும் உள்ளது. ஆனால், அண்மையில் இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த நடவடிக்கைகளையும் பின்னணிகளையும் உள்ளடக்கித் திரு மணிவண்னன் அவர்கள் தொகுத்து இங்கே இட்ட இடுகையைப் பார்க்கும்போது என்ன நடக்கிறது என்பதே புரியாமல் உள்ளது. கிரந்த எழுத்துக்களைத் தமிழில் சேர்ப்பது அல்லது கிரந்தத்தில் தமிழைச் சேர்ப்பது போன்ற விடயங்கள் ஓரிருவரோ அல்லது ஒருங்குறி அமைப்போ தீர்மானம் எடுக்கவேண்டிய விடயங்கள் அல்ல. இவ்வாறான பொது நலன் தொடர்பான விடயத்தில் தன்னிச்சையாக நடவடிக்கைகள் எடுப்பவர்களைக் கண்டிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்களது நடவடிக்கைகளைப் பாராட்டிப் பட்டம் வழங்கவேண்டும் என்று சொல்வதுபோல இருக்கிறது. தமிழைச் சீரழிப்பதற்கு இதுவரை சரியான திறமை உள்ள ஒருவர் இல்லாமல் இருந்தது போலவும் இப்போது ஒருவர் கிடைத்திருப்பதை அறிந்து அவரது திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டு செயல்பட ஆலோசனை வழங்குவது போலவும் அல்லவா தெரிகிறது. வரலாற்றில் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிராகச் செயற்பட்டவர்கள் பலரும் ஆதீதத் திறமைகள் கொண்டவர்கள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.இ. மயூரநாதன்.
2010/11/5 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
//இன்றைய நிலையில் நாம் அறிய வேண்டுவது குறிப்பிட்ட முன்மொழிவுகள் தமிழருக்கு நன்மை விளைவிக்குமா அல்லது சில அறிஞர்கள் கருதுவதுபோல் தமிழைச் சீரழிக்குமா என்பதுதான் - மயூரநாதன்.////அருமை நண்பரே. பிரச்சினையின் விளைவுகளைத் தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் யாராவது சார்பின்றி எழுதினால் நலமாக இருக்கும்.அன்புடன்சொ.வினைதீர்த்தான்.//தமிழ்மொழி சீரழிப்பெல்லாம் ஏதும் அல்ல முற்றுமாய் அழியும்.சில தமிழ்ச்சொற்களும், சில பின்னொட்டுகளும் மிஞ்சும் (இதனைதமிழை வெறுக்கும் பலர் வெளிப்படையாகவே சொல்லியும்உள்ளனர்!!).நாமறிந்த, 2500 ஆண்டுகளுக்கு மேலாகஇலக்கண இலக்கிய வளங்ககளுடன் வாழ்ந்திருந்த, மொழி முற்றுமாய் அழியும். புதிய மொழியின் தொடக்கம் 21 ஆவது நூற்றாண்டு. உலகில்அண்மையில் தோன்றிய தமிழ்க்ருதம் என்னும் மொழியாகும். தமிழை அழிக்கத் துடிக்கும் மிகச்சிறுபான்மையர் புதிய மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவார்கள் (70 மில்லியன் மக்கள் தூங்கிக்கொண்டிருக்கையிலே!). எப்படியா? தமிழாக இருந்த சேரநாடு மலையாளம் ஆகியது.மீதமுள்ள 2/3 தமிழ்நாடு மலையாளம் 2.0 ஆகும்.ஆனால் இதையெல்லாம் இப்படியெல்லாம் ஆகவிடாமல் செய்யவேண்டுவது தமிழர் கடமை. இது விளையாட்டு அல்ல.செல்வா2010/11/5 karuannam annam <karu...@gmail.com>
2010/11/5 Mayooranathan Ratnavelupillai rmayoor...@gmail.com,
ஒருங்குறியில் தமிழ், கிரந்தக் கலப்பு முயற்சிகள் தொடர்பில் தற்போது எழுந்துள்ள விவாதங்கள் பலருக்கும் தலை சுற்ற வைப்பவையாக உள்ளன. நான் இந்த விடயத்தின் நுட்பங்களை அறிந்தவன் அல்ல. ஆனாலும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். என்னைப் போன்றவர்களுக்கு இந்த விடயத்தில் தெரியவேண்டியது குறித்த முன்மொழிவுகள் தமிழின் எதிர்காலத்தை எப்படிப் பாதிக்கப் போகிறது என்பதே. நுட்பவியலாளர்கள் தொழில்நுட்பம் என்னும் திரைமறைவில் நின்றுகொண்டு தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புக்களைக் கவனியாமல் விடப்போகிறார்கள் என்பதே எனது கவலையாக உள்ளது.
இன்றைய நிலையில் நாம் அறிய வேண்டுவது குறிப்பிட்ட முன்மொழிவுகள் தமிழருக்கு நன்மை விளைவிக்குமா அல்லது சில அறிஞர்கள் கருதுவதுபோல் தமிழைச் சீரழிக்குமா என்பதுதான். முன்மொழிவு ஒரு சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையா அல்லவா என்று கண்டு பிடிக்கும் முயற்சிகள் உண்மையான பிரச்சினையைத் திசை திருப்புவதாகும். தமிழர்களின் வரலாற்றை ஆழ்ந்து நோக்கினால் மிகப் பழைய காலத்திலிருந்து மிக அண்மைக் காலம் வரை தமிழர்களில் அதிக திறமையும் அறிவும் கொண்டவர்கள் பலராலேயே நமக்கு அதிக துன்பங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் கவனத்துக்கு எடுப்பது நல்லது. எனவே தனிப்பட்டவர்களின் திறமைகளுக்கும் அறிவுக்கும் அப்பால் பிரச்சினையின் விளைவுகளை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ்விடயத்தில் தற்போதைய போக்கைப் பார்க்கும்போது வழக்கம்போலவே நாம் செய்யவேண்டியவற்றைக் கோட்டைவிட்டு விடுவோம் போல்தான் தெரிகிறது.
கிரந்தத்தில் தமிழின் சிறப்பு எழுத்துகளாகிய எ, ஒ, ற, ழ, ன என்ற 5
எழுத்துகளைச் சேருங்கள் என்று
திரு நாக.கணேசன் முயல்கிறார் என்றால் கிரந்த எழுத்தின் தூய்மையைக் காக்க
வேண்டியவர்கள்தானே கவலைப்பட வேண்டும்!
நாங்கள் எங்கள் தமிழில்- தமிழ் ஒருங்கு குறியில் - தமிழின்
ஒலிச்சிறப்பையும் தனித்தன்மையையும் கெடுக்கும் வகையில்
தமிழோடு அதன் எழுத்துக்களாகக் காட்டும் வகையில் -
கிரந்த எழுத்துகள் 5 ( ஜ,ஷ, , ஹ, க்ஷ) சேர்க்கக்கூடாது என்றோம்; ஆனால்,
அவை முன்பே தமிழ்ப் பாடப்புத்தகத்தில் கூட உள்ளன என்று வாதாடி அதனைச்
சேர்த்தார்கள்!
இப்போது-
தமிழ் எழுத்துகளோடு- மேலும் 26 எழுத்துகளைச் சேர்க்கவேண்டும் என்பதல்லவா
இரமண சர்மாவின் கோரிக்கை! இதற்கும் 1916-இல் காஞ்சி காமகோடி பீடத்தால்
வெளியைடப்பெற்ற நூலை சர்மா எடுத்துக் காட்டியுள்ளார்.இவ்வொலிகள் தமிழுடன்
முரண்படுபவை. அதனால்தான் புத்த, சமணமதத்தினராலும்
ஈட்டுரையாசிரியர்களாலும் கொண்டுவரப்பட்ட மணிப்பவழ(பிரவாள) நடை தோற்றது.
தமிழில் கிரந்த எழுத்துகளைச்சேர்த்துத் தமிழின் தனித்தன்மையைக் கெடுத்து,
மேலும் கன்னடம் மலையாளம் போல் சிதைக்க முயலும்
இக்கேட்டைத் தடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் எழுத்துகளைப் பாதுகாக்க
வேண்டும் என்னும் எங்களின் கருத்து.
அன்பிலே,
முனைவர் பா.இறையரசன்
தமிழக அரசின் யூனிகோடு தொடர்பான அறிக்கை:அன்புடன்,மணி மு. மணிவண்ணன்சென்னை, தமிழ்நாடு
! ! !
பேராசிரியர் செல்வா அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.இதே குரலில் செல்வா இரண்டாண்டுகளாகக் கருத்துரைத்துவருகிறார். ஆனால் உத்தம்ம் அமைப்புத்தான் இப்படி ஒரு பரிந்துரையை முதலில் முன்மொழிந்துள்ளது எனக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக உள்ளது. இரண்டாண்டுகளாக இந்தப் பரிந்துரை காத்திருப்பில் இருந்தபோது ,(மைய அரசின் நடவடிக்கைக் குறிப்பில் உள்ளது எனத் தெரிந்தும்) கணிஞர்கள் உறங்கிக் கொண்டிருந்தனரா என அறிய ஆவல். இப்போது கிரந்த எழுத்துத் தொகுதியில் தமிழ் எழுத்து இடம்பெறுவதை எதிர்ப்பவர்கள் தமிழில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதற்கு முன்னோடிகளாக விளங்கினார்கள் எனக் கூறப்படுவதும் வருத்தமளிக்கிறது. யூனிக்கோடு எழுத்துமுறையை எதிர்த்தவர்கள் உத்தமம் அதற்கு அறிந்தேற்பு நல்கியபோது ஏன் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதும் புதிராக உள்ளது. யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்? நட்புணர்வுடன், மறைமலை Please have a glance: --- On Sat, 11/6/10, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote: |
|
|
உத்தமம் பற்றி நண்பர் நாக. இளங்கோ கூறியவை அனைத்தும் உண்மை. மிகை
ஏதுமில்லை. அவர்கள் பெயரில் இருப்பது செயலில் இல்லை. தமிழ் ஆர்வளர்கள்
தமிழுக்குப் பணிசெய்யப் போகிறோம் என்றார்கள் .உறுப்பினர் பட்டியல்
பெறும்பாலும் மகிழ்ச்சியளிப்பதாகவே இருந்தது. ஆனால் நடந்தவை பெரும்பாலும்
தமிழுக்குத் தளர்வளிப்பதாகவே இருப்பதை அறிந்து அதிர்ந்து நிற்கின்றோம்.
இதில் மேலும் கவலை யளிப்பதென்ன வென்றால் இவையனைத்தும் தமிழ் அறிஞர்கள்,
தமிழ் ஆர்வலர்கள் அறியாவண்ணம் நடை பெற்றிருப்பதுதான்.
ஒருங்கு குறி ஆணையத்தின் செயற்பாடுகள் தொழில் நுட்பம் சார்ந்தவை. அது
பற்றி மொழியின் சொந்தக் காரர்கள் அறியத்தேவையல்லை, அதனால் பயனும்
ஏற்படாதென்று கூறுவது ஏற்புடையதாகவில்லை.இதுவரை நடந்த அனைத்துமே உத்தமம்
அறிந்தே நடந்திருக்கின்றன. நிகழ்வுகள் இவர்களின் கைமீறி நடந்திருக்கலாம்.
அப்பொழுது அதை மற்றவகள் அறியச் செய்வது இவர்கள் கடமையில்லையா?
ஒருங்கு குறி பற்றி இன்று பலர் அறியாமலிருக்கலாம். ஆனால் வருங்காலத்தில்
ஊடங்களிலும் மற்ற அச்சுப்பணிக்கும் பயன் படுத்த[ போவது ஒருங்கு குறி
முறையாகத்தானிருக்கும். அதனால் அதில் குறிவைத்து செயலிலிறங்கி
யிருக்கின்றார்கள். மக்கள் அறியாவண்ணம் செய்ய வேண்டிய ( கேடுகளை) எல்லாம்
செய்து முடித்துவிட்டால் பிறகு அவர்களை அசைக்க முடியாது இது முற்றிலும்
உண்மை. ஒருங்கு குறியில் ஒரு முறை ஒரு எழுத்துருவை சேர்த்துவிட்டால்
பிறகு அதை நீகமுடியாதென்ற விதி இருக்கின்றது.
அங்கு என்ன நடக்கிறது என்று இன்னும் குழப்பமாகவே இருக்கின்றது. ஆனால்
அண்மையில் திரு சர்மா முமொழிந்துள்ள மாற்றங்கள் “the extended tamil’
பற்றி ’தமிழ் இந்துவில்’ மிகவும்விளக்காமக இருக்கின்றது
கீழே உள்ள இணைய முகவரியில் அதைக் காணலாம்
http://www.tamilhindu.com/2010/11/extended-tamil/
அவர் முன்மொழிதலின் முகியப் பகுதி
“////இனி “விரிவாக்கப்பட்ட தமிழுக்கு” (Extended Tamil) வருவோம். மற்ற
இந்திய எழுத்துமுறைகளை போல் அல்லாது தமிழில் kha, gha, jha, dha, ba
போன்ற எழுத்துக்களுக்கு வடிவமில்லை. ஆகவே, தமிழில் சமஸ்கிருதம் உட்பட்ட
பிற இந்திய மொழிகளை மூல உச்சரிப்பு மாறாமல் அச்சிட விரும்பியவர்கள்,
தமிழ் எழுத்துக்களுடன் 2,3,4 முதலிய எழுத்துக்களை சேர்த்து க² க⁴ ஜ² த⁴
ப³ என்றவாறு தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்களை/////
அதாவது அவர் தமிழ் எழுத்துகளைத் தேவநாகிரி எழுத்துக்களாக மாற்றுவதற்கு
வழிவகுத்திருக்கின்றார். அவர் அதை செய்திருக்கும் முறைதான் இங்கு
கவனித்திற்கு உரியது. எழுத்துருவை மாற்றாமல் ஒலியைமற்றும் மாற்ற வழிகூறி
இருக்கின்றார். நேராக இனிமேல் தமிழை தேவநாகிரியில் எழுதுதென்று கூறினால்
எல்லொருக்கும் புரிந்துவிடும், அதையே மறைமுகமாக செய்துவிட்டால் பின்னால்
நாம் விழித்துகொள்ளும் பொழுது நம்மாலொன்றும் செய்ய முடியாது.
கிரந்த எழுத்துகளைத் தமிழில் புகுத்துவதை விட கொடியது இது. இதை மட்டும்
இவர்கள் செய்து முடித்துவிட்டால் இவர்கள் விருப்பம்போல் தமிழை எப்படி
வேண்டுமானாலும் எழுதலாம்., குலைக்கலாம். குதறலாம். தமிழ் மொழி அழிவை
பிறகு யாராலும் தடுக்க முடியாது. புது மொழிபிறந்து விடும்.. பழையத் தமிழ்
இறந்த மொழியாகிவிடும். மொழியை நம்மிடமிருந்து பறித்துவிட்டால் பிறகு
தமிழ் இனம் ஏது. ஈழத்தில் ஊயிரோடு அழிக்கிறார்கள் இங்கு மொழியை அழித்து
இனத்தை அழிக்க முயல்கிறார்கள் இதன் பிறகு இங்கு வழங்கப் புது மொழிக்கு
புதியப் பெயரும் இலக்கணமும் வகுக்க வேண்டியதுதான்
நான் கூறுவது சிலருக்கு மிகையாக தோன்றலாம். ஆனால் சிந்தித்துப்
பாருங்கள். அளவில்லாது பிறமொழி சொற்களைக் கலந்து அவற்றை எழுதுவதற்கும்
வழி வகுத்துவிட்டால் பின்னால் தமிழின் அழிவைத் தடுக்க முடியுமா? முன்னர்
கிரந்தம் கலந்து இதை செய்ய முனைந்தார்கள் அது முடியாமல்போகவே மறைமுகமாக
( பின் வாயல் வழியாக) நுழியை முயன்றிருக்கின்றார்கள்.
தமிழின் ஆணி வேரைப் பிடுங்க சதி செய்யப் பட்டிருக்கிறது ஆனால் இது
நடந்ததாகவே உத்தமம் காட்டிக்கொள்ளவில்லை. திடிரென்று செப்தம்பர் 30ம்
நாள் ஒரு மறுப்பு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அவ்வளவே. கடிதத்தின்
முகவரி
(http://www.infitt.org/pressrelease/
UTC_Unicode_Grantha_Letters_SMP.pdf)
அக்தோபர் இறுதியில் ஒருங்குழு இது பற்றி முடிவு செய்யவிருந்தது. செய்தி
கசிந்து கலைஞர் இதைத் தடுக்காமல் இருந்திருந்தால் சர்மாவின் முன்
மொழிவிற்கு அடிக்கல் நாட்டப் பட்டு பின்னர் கட்டமும்
எழுப்பபட்டிருக்கும். உத்தமும் வாய்மூடிக்கொண்டு இருந்திருக்கும்.
இன்னும் இன்னும் எத்தனை இது போல் நடந்திருகின்றனவோ? உத்தமம் தான்
அறியும்.
கலைஞரின் இந்த செயல் துவக்கம்தாம். இனிதான் தமிழக மெங்கும் இந்த சதி
திட்டம் வெளிப்படுத்தப் படவேண்டும். இந்த சதி தடுக்கப்படவேண்டும்.
இனியும் இது போன்ற சதிகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வகை
செய்யப் பட வேண்டும். உத்தமம் போன்ற அமைப்புகளை நம்பி மீண்டும்மோசம் போக
கூடாது.
இதில் அறியவேண்டியதுற்றொன்றும் உள்ளது. ஒஉருங்கு குறி ஆணையம் ஏதோ
தன்னிச்சையாக செயல் படு வது போல ஒரு கருத்து முன் வைக்கப்
பட்டிருக்கிறது. அது முற்றிலும் உண்மைஇல்லை. அந்த மொழி சார்ந்த ஏதாவது
தொழில் நுட்ப அமைப்பின் அறிவுறுத்துதல்பேரில் தான் செயல் படுகிறது. தமிழ்
ஒருங்கு குறியில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் இந்திய ஒருங்கு குறி தொழில்
நுட்ப குழுவின் அறிவுரை பேரிலேயே நடந்திருக்கின்றன. தமிழைப்பற்றி
மாறுதல்கள் வருமொழுது அது தமிழ் நாட்டு அரசிற்கு தெரியப் படுத்த
வேண்டும். அவ்வாறு செய்யப் படுவதாக தெரியவில்லை.
முனைந்து செயல் படவேண்டிய நேரமிது.
அன்புடன்,
பிலிப்
பிகு: உத்தமம் முழுமையும் குறை கூறவில்லை.)
> 2010/11/6 maraimalai <maraima...@yahoo.com>
>
> > பேராசிரியர் செல்வா அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.இதே குரலில் செல்வா
> > இரண்டாண்டுகளாகக் கருத்துரைத்துவருகிறார்.
> > ஆனால் உத்தம்ம் அமைப்புத்தான் இப்படி ஒரு பரிந்துரையை முதலில்
> > முன்மொழிந்துள்ளது எனக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக உள்ளது.
> > இரண்டாண்டுகளாக இந்தப் பரிந்துரை காத்திருப்பில் இருந்தபோது ,(மைய அரசின்
> > நடவடிக்கைக் குறிப்பில் உள்ளது எனத் தெரிந்தும்) கணிஞர்கள் உறங்கிக்
> > கொண்டிருந்தனரா என அறிய ஆவல்.
> > இப்போது கிரந்த எழுத்துத் தொகுதியில் தமிழ் எழுத்து இடம்பெறுவதை
> > எதிர்ப்பவர்கள் தமிழில் கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பதற்கு முன்னோடிகளாக
> > விளங்கினார்கள் எனக் கூறப்படுவதும் வருத்தமளிக்கிறது.
> > யூனிக்கோடு எழுத்துமுறையை எதிர்த்தவர்கள் உத்தமம் அதற்கு அறிந்தேற்பு
> > நல்கியபோது ஏன் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதும் புதிராக உள்ளது.
> > யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
> > நட்புணர்வுடன்,
> > மறைமலை
>
> > Please have a glance:
> > www.ilakkuvanar.org
>
> > --- On *Sat, 11/6/10, C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>* wrote:
>
> > From: C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
> > Subject: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] ஒருங்குறி கிரந்தம் பரிந்துரையில்
> > தமிழ் எழுத்துகள் பற்றிய கருத்தறியும் கூட்டம் - பின்னணி
>
> > To: tamil...@googlegroups.com
> > Cc: "tamil_ulagam" <tamil_...@googlegroups.com>
> > Date: Saturday, November 6, 2010, 10:17 PM
>
> > *//ஆனால், இதுவே இறுதியாகி விடாது. தற்போது தமிழக அரசு பெற்றுத்
> > தந்திருக்கிற இந்தக் கால இடைவெளியை *
> > *செவ்வனே பயன்படுத்தி தமிழன்பர்கள் மிகத் தெளிவான, உறுதியான முடிவுகளைக்
> > கடந்தகாலம், எதிர்காலம் என்ற இரு காலங்களையும் கருத்தில் வைத்து தமிழ் மொழிக்கு
> > அரண் செய்ய வேண்டும்.//*
> > **
> > தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது அதில் உருவாகும் பல்துறை
> > இலக்கியங்களையும் அதன் தரத்தையும், அதன்
> > பயனையும் பொருத்தது.
> > மொழியின் எழுத்துகளை மாற்ற வேண்டும் என்பது, பொன்னான
> > நேரத்தை நாம் வீணடிப்பதாகும். ஒரு காலத்தில் "எல்லா" இலக்கியமும்
> > கிரேக்கதில், பின்னர் அரபி, இலத்தீனில் இருந்தது (ஆங்கிலேயராகிய
> > ஐசக் நியூட்டன்
>
> ...
>
> read more »