தமிழ்99 விசைபலகை உற்பத்தி தொடர்பாக...

30 views
Skip to first unread message

பாரி.அரசு

unread,
Jan 14, 2008, 2:28:47 AM1/14/08
to தமிழ்99
தமிழ் கணினி - யின் வளர்ச்சி பாதை என்பது பல்வேறு தளங்களில்
எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. உள்ளுர்மயமாக்கலில் முதல் படிநிலை என்பது
கணினி தட்டச்சு ஆதரவு. சீனா, கொரியா, ஜப்பான்,ரஷ்யா போன்ற நாடுகளில்
சந்தை என்பதே இருமொழி ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம் என்கிற
அளவுக்கு இருக்கிறது, அவர்களின் தாய்மொழியில் பற்றுள்ள நிலையில்,
தமிழகத்தில் தமிழ் கணினி என்பது தன்னார்வ தொண்டு என்கிற நிலையிலேயே
நிற்கிறது.

கடந்த காலக்கட்டங்களில் விசைபலகை வடிவமைப்பதில் குழப்பமான சூழல்
என்பதால்... தேக்கம் ஏற்ப்பட்டது. ஆனால் தற்போது அரசு தமிழ்99 என்பதை
அரசாங்க உத்தரவாக நிறைவேற்றி விட்ட நிலையிலும்... சந்தையில் இருமொழி
ஆதரவில் தேக்கம்...

தமிழ்99 விசைபலகையை சந்தைப்படுத்துகிற TVS Electronics TVS CHAMP
விசைபலகையை ரூபாய்400 க்கு விற்பனை விலைக்கு கொடுக்கிறது. ஆனால் அதே TVS
CHAMP ஆங்கில விசைபலகை ரூ250க்கு கிடைக்கிறது. பல்வேறு மின்னஞ்சல்கள்,
உரையாடல்கள் மேற்க்கொண்டும் TVSE தனது நிலையை மாற்றிக்கொள்ள
தயாராகயில்லை...

தமிழகத்தை பொருத்தவரை வன்பொருள் உற்பத்தி செய்கிற HCL தமிழ்99
விசைபலகைகளை அரசு அலுவலகங்களுக்கு கொடுப்பதாக சொல்கிறது. ஆனால்
சந்தைக்கு தனது விசைபலகைகளை கொண்டு வரவில்லை. மின்னஞ்சல் அனுப்பினாலும்,
தொலைபேசியில் பேசினால் சரியான பதிலில்லை.

அடுத்ததாக CSC அதிகமான அரசு அலுவலங்களுக்கு வன்பொருள் கொடுக்கிற
நிறுவனம். இன்னொரு ஆந்திரா நிறுவனம் இவர்களுடன் பேசவே முடியவில்லை.

கடந்த 6 மாதகாலக்கட்ட போராட்டத்தில்... கடைசியாக விசைபலகைகளை
உற்பத்திச்செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்...

பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்புக்கொண்டதில் ஓரளவுக்கு தரமான
விசைபலகைகள், நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்கிற முடிவில்...

ஒரு சீன நிறுவனத்திலிருந்து கீழ்கண்ட விலை குறிப்பை பெற்றிருக்கிறேன்.

KL-RF007
US$5.4
1000PCS
Attan:Multimedia keyboard (Optional USB HUB)
"Windows keyboard,compatible with windows
NT/98/ME/2000/XP
PC/AT/PS-2 compatible
High-quality membrane key switch
Multiple language versions available
Multi-color available (Silver),(Dark blue),(Blue),(Purple),(Red)
21 Hot keys for easily a"

KL-RF008
USD7.00/pc
1000pcs
Normal WIRELESS KEYBAORD+USB
Receiver
1.104 keys + 13 hot keys
keyboard,
2,27Mhz, 1.0-1.5M operation
distance
3, USB port for
receiver
4,Multiple language versions
available
5, Use life:over 10million
times
6,High quality membrane tactile key switch

தற்பொழுது அவர்களுடைய மாதிரி விசைபலகையை இந்த வார இறுதியில் கிடைக்க
பெறுவேன்.

1000 விசைபலகைகள் தயாரிக்கலாம் என்கிற முடிவெடுத்துள்ளேன்.

PS2 Weired Keyboard - ரூ230-ரூ250
Wireless Keyboard - ரூ330-ரூ350 வரை உற்பத்தி செலவு ஆகலாம்....

இதைத் தொடர்ந்து உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்...

பாரி.அரசு

unread,
Jan 14, 2008, 2:38:26 AM1/14/08
to தமிழ்99
விசைபலகை படங்களை பார்க்க...
http://tamil99.googlegroups.com/web/weired.PNG
http://tamil99.googlegroups.com/web/wireless.PNG

Voice on Wings

unread,
Jan 14, 2008, 3:27:33 AM1/14/08
to தமிழ்99
பாரி,

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது import
duty (சுங்க வரி?) கட்ட வேண்டியிருக்கும். மேலும், உற்பத்திச் செலவை விட
விநியோகச் செலவே பொதுவாக அதிகமாக இருக்கும். உங்கள் விலைக் குறிப்பில்
தயாரிப்புச் செலவு ரூ.250 என்றால், அதை விநியோகிக்கும் போது ரூ.350க்கு
அதிகரித்து விட வாய்ப்புள்ளது (சந்தைப்படுத்தல் செலவுகள்,
விநியோகஸ்தர்களின் பங்கு, போக்குவரத்து போன்ற செலவுகளால்)
HCL / TVSE போன்ற நிறுவனங்கள் விசைப்பலகைகளை லட்சக் கணக்கில்
தயாரிப்பதால் அவர்களது தயாரிப்புச் செலவு ரூ.100 சொச்சத்திற்குள் வர
வாய்ப்புள்ளது. அதனால்தான், சந்தையில் ரூ.250க்கு அவர்களால் விற்க
முடிகிறது.

எனது வெளிப்படையான கருத்து என்னவென்றால், 'ஒட்டிகள்' ஒரு குறைந்த செலவுத்
தீர்வாக அமையும் என்பதே. தற்போது அதை விநியோகிப்பதில் முனைப்பு
காட்டினால் நாளடைவில் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. 1000
விசைப்பலகைகளுக்காக இரண்டரை லட்சம் ரூபாய் முதலீடு செய்வதெல்லாம் கொஞ்சம்
அதிகப்படியாகத் தோன்றுகிறது. சிந்தித்து முடிவெடுங்கள் :)

VoW

Ravishankar

unread,
Jan 14, 2008, 3:41:21 AM1/14/08
to tam...@googlegroups.com
அரசு,

என்னுடைய கருத்தும் VoW சொல்வதை ஒட்டியே.

முதலில் தமிழ்த் தட்டச்சு விழிப்புணர்வு உருவாக்குவோம். அதற்கு உதவியாக இந்த ஒட்டிகள் இருக்கலாம். மக்கள் தாங்களே இந்த ஒட்டிகளைத் தேடினால், எம்மைத் தொடர்பு கொண்டு கேட்டால் எந்த அளவுக்குத் தமிழில் தட்டச்சு, தமிழ்த் தட்டச்சுப் பலகைகளுக்கான சந்தைத் தேவை இருக்கிறது என்பதைக் கணிக்க இயலும். அதை அடுத்து மக்களே தங்கள் கணினிக் கடைக்காரரிடம் தமிழ் விசைப்பலகையைக் கேட்க அவர் உற்பத்தியாளர்களைத் தொடர்பு கொண்டு பெறும் நிலை வர வேண்டும். வணிகர்கள் இதைச் செய்யாவிட்டாலும் சந்தைத் தேவையைக் கணித்து முறையாக ஒரு தொழிலாக, முதலீடாகப் பெரிய அளவில் எப்படி செய்வது என்று யோசிக்க வேண்டும்.

"இது எல்லாம் நடக்கிற காரியமா" என்று தோன்றலாம்.

ஆனால், என்னுடைய முக்கியமான கவலை என்னவென்றால் இது உங்கள் கைக்காசு. தமிழுக்காக உழைப்பவர்கள், செலவழிக்க இயல்புவர்கள் விரும்புபவர்கள் மிகச் சிலரே. அவர்களுடைய காசும் இப்படி முடங்கி விடக்கூடாது. இறக்குமதிச் செலவு, வினியோகச் செலவு போக இந்த 1000 விசைப்பலகைகள் விற்கும் வரை இதில் முடங்கும் பணத்துக்கான வட்டியையும் கணக்கில் கொள்ள வேண்டும். என்னதான் நாம் தன்னார்வமாகச் செய்தாலும் உணர்ச்சிவசப்பட்டு நிதி மேலாண்மையைப் புறந்தள்ளி விடக்கூடாது. 1000 விசைப்பலகைகளை மட்டும் அடித்து விட்டு அடுத்த நகர்வுக்கு இயலாமல் முடங்கி விடக்கூடாத நிலை வந்து விடக்கூடாது. இதில் போடும் நிதி முழுமையாகவும் விரைவாகவும் மறு சுழற்சிக்கு வந்து சேருதல் அவசியம்.

ஒரு நல்ல செயலைச் செய்ய எண்ண எண்ணும் போது தடை சொல்வதாய் நினைக்க வேண்டாம். பல விசயங்களையும் நீங்கள் யோசித்திருப்பீர்கள்.
1000 என்பதோடு அல்லாமல் அதற்கு அடுத்து குறித்தும் 1000 மட்டும் அல்லாமல் இன்னும் பெரிய எண்ணிக்கையில் செய்தால் விலை குறையுமா, அதற்கான நிதித் திரட்டு இவை குறித்து யோசிக்க வேண்டும்.

அன்புடன்
ரவி

பாரி.அரசு

unread,
Jan 14, 2008, 4:10:47 AM1/14/08
to தமிழ்99
நன்றி VoW,ரவி,

நானும் பொருளாதார ரீதியாக கொஞ்சம் தயக்கத்தில் தான் இருக்கிறேன். அதே
நேரத்தில் முன்னெடுப்பை அப்படியே விட்டு விட முடியாது.
கணினி பாகங்கள் இறக்குமதிக்கு வரி கிடையாது என்று போன நிதிநிலை
அறிக்கையில் படித்ததாக ஞாபகம். விசாரிக்க வேண்டும்...

ஆர்வலர்கள் ஆளுக்கு 10 பத்துவிசைபலகைக்கு காசுக்கொடுத்தால்...அல்லது
அவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டால்...
10x250=2500/-

ஒரு 50 ஆர்வலர்கள் கிடைத்துவிட்டால் போதும்... மீதம் தாக்கு பிடித்து
விற்று விடலாம்.
சில தன்னர்வலர்கள் கூடுதல் நிதிக்கொடுத்தால்... நாம் அதை மேலும் தமிழ்
கணினி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்...
சிங்கையில் ஒரு 20 விசைப்பலகைகளை நண்பர்களுக்கு கொடுத்து நிதி
திரட்டலாம்...

இது தொடர்பாக பதிவு வெளியிடுவோம்... எத்தனை ஆர்வலர்கள் முன்
வருகிறார்கள் என்பதைக்கொண்டு...
அடுத்தக்கட்டத்திற்க்கு நகரலாம்...

நன்றி
பாரி.அரசு

Ravishankar

unread,
Jan 14, 2008, 4:53:42 AM1/14/08
to tam...@googlegroups.com
நல்லது பாரி.

நான் என் பதிவில் எழுதுகிறேன். எல்லாரும் அவரவர் பதிவுகளில் எழுதி எந்தளவுக்கு வரவேற்பு, பொறுப்பெடுக்க ஆர்வலர்கள் கிடைக்கிறார்கள் என்று பார்ப்போம். உற்பத்தி உத்தரவு கொடுக்கும் முன்னே பாதி பலகைகளுக்காவது விற்பனை உறுதி என்றால், இன்னும் தெம்பாக இருக்கும்.

என்னுடைய உறவினர் கோவையில் சிறிய அளவில் கணினி பாகங்கள் விற்கிறார். விற்பவர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் மூலமாக என்னால் விநியோகிக்க இயலும். முதலில் கொஞ்சம் அவரிடம் கொடுத்துப் பார்த்து பிறகு வரவேற்பை ஒட்டி மேலதிகமாகப் பெறலாம்.

குறைந்தது 10 பலகைகளுக்கான செலவையும் அவற்றை விற்கவும் இப்போதே என்னால் பொறுப்பெடுக்க முடியும்.

அன்புடன்
ரவி

பாரி.அரசு

unread,
Jan 14, 2008, 10:17:15 AM1/14/08
to தமிழ்99
ரவிசங்கர் - 10
சிங்கை சுதாகர் - 2
பாரி.அரசு -20

தொடர்வோம்....

கோபி (Gopi)

unread,
Jan 14, 2008, 12:58:35 PM1/14/08
to தமிழ்99
என்னாலும் 10 விசைப்பலகைகளை விநியோகிக்க/விற்க/பயன்படுத்த இயலும்..

கோபி - 10

Ravishankar

unread,
Jan 14, 2008, 1:48:16 PM1/14/08
to tam...@googlegroups.com
அரசு,

பழைய விசைப்பலகைகளுக்கு second hand market வாய்ப்பு எப்படி என்று பாருங்கள். exchange offer போல் போட்டால், தங்கள் பழைய ஆங்கில விசைப்பலகைகளை மாற்றி புதிய wireless பலகைகளுக்கு மாற மக்கள் முயலலாம்.

ரவி

மயூரேசன்

unread,
Jan 15, 2008, 1:22:35 AM1/15/08
to தமிழ்99
இது நல்ல ஐடியா ரவி!!!
நல்லபடி நடக்கட்டும்!

மயூரேசன்

On Jan 14, 11:48 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:

சிவகுமார் மா

unread,
Jan 16, 2008, 1:58:29 AM1/16/08
to tam...@googlegroups.com
On 1/14/08, பாரி.அரசு <pktPar...@gmail.com> wrote:
நானும் பொருளாதார ரீதியாக கொஞ்சம் தயக்கத்தில் தான் இருக்கிறேன். அதே
நேரத்தில் முன்னெடுப்பை அப்படியே விட்டு விட முடியாது.
கணினி பாகங்கள் இறக்குமதிக்கு வரி கிடையாது என்று போன நிதிநிலை
அறிக்கையில் படித்ததாக ஞாபகம். விசாரிக்க வேண்டும்...

ஆர்வலர்கள் ஆளுக்கு 10 பத்துவிசைபலகைக்கு காசுக்கொடுத்தால்...அல்லது
அவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டால்...
10x250=2500/-

ஒரு 50 ஆர்வலர்கள் கிடைத்துவிட்டால் போதும்... மீதம் தாக்கு பிடித்து
விற்று விடலாம்.
சில தன்னர்வலர்கள் கூடுதல் நிதிக்கொடுத்தால்... நாம் அதை மேலும் தமிழ்
கணினி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்...
சிங்கையில் ஒரு 20 விசைப்பலகைகளை நண்பர்களுக்கு கொடுத்து நிதி
திரட்டலாம்...


நண்பர்களுக்கு வணக்கம்.

தமிழ்99 விசைப்பலகைகளை தயாரித்து விற்பதில் இறங்க வேண்டுமா என்று  எனக்கும் தயக்கம் இருக்கிறது.

எங்கள் அலுவலகத்திலேயே 15 கணினிகளுக்கு தமிழ்99 விசைப்பலகைக்கு மாறுவது என்றால் ஏற்கனவே இருக்கும் விசைப்பலகைகளை அகற்றி விட்டு புதிய விசைப்பலகை வாங்குவது என்பது நடக்காத ஒன்றுதான்.

அப்படி இருக்கையில் மற்றவர்களிடம் போய் எப்படி விற்க முடியும்?

ஆரம்பத்தில், ஒட்டிகளை வினியோகிப்பது நல்ல பலனைத் தரும். தரமான, தெளிவான ஒட்டிகளை அச்சடித்து விற்பது அதிகமான விலை என்றாலும்  எளிதாக இருக்கும். 3.50 ரூபாய் என்று திட்டமிடும் ஒட்டிகளுக்கு உயர் தரத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருக்குமளவு செய்ய விற்பனை விலை 10 ரூபாய் என்று ஆனாலும், எங்கள் தனி பயன்பாட்டுக்கு 20 ஒட்டிகள் உடனடியாக நான் வாங்கிக் கொள்வேன்.

கூடவே, நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் என்று 100 செட் வரை விற்றுத் தர முடியும்.

தமிழ்99 விசைப்பலகையின் தேவையும்  ஆதரவும் அதிகரிக்கும் போது நேரடியாக அச்சடிக்கப்பட்ட விசைப்பலகைகளுக்கு தேவை உருவான பிறகு, விசைப்பலகை தயாரிப்பதில் இறங்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.

அன்புடன்,
மா சிவகுமார்


--
மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

Ravishankar

unread,
Jan 16, 2008, 2:04:55 AM1/16/08
to tam...@googlegroups.com
ஏற்கனவே கணினி வைத்திருப்பவர்கள் தமிழ்த் தட்டச்சு, தமிழ்99 கற்பதற்காக பழைய பலகையை விட்டுவிட்டுப் புதிதாக இதை வாங்குவார்கள் என்று நானும் எதிர்ப்பார்க்கவில்லை.

ஆனால், புதிதாக கணினி வாங்க நினைக்கும் நிறுவனங்கள், மக்கள், பழுதாய்ப் போன, பழைய விசைப்பலகை வைத்திருப்போர் இத்தகைய தமிழ்ப் பலகை இருந்தால் வாங்க நினைக்கலாம்.

ஆனால், பொதுவாக கணினி வாங்குவோர் விசைப்பலகை, சொடுக்கி, monitor என்று எல்லாம் சேர்த்த பொதியாக ஒரே விலைக்கு வாங்கக்கூடும் என்பதால், இதைத் தேடி வந்து வாங்குவார்களா என்பதும் தயக்கமாக இருக்கிறது.

பெரும்பாலான பலகைகளை விற்றுத் தர ஆர்வலர்கள் பொறுப்பெடுக்காவிட்டால், இதில் இறங்குவது மிகவும் யோசித்து செய்ய வேண்டிய ஒன்றே.

ரவி

பாரி.அரசு

unread,
Jan 16, 2008, 4:37:29 AM1/16/08
to தமிழ்99
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

தமிழகத்தின் சந்தை என்பது எப்போதும், அறிவு தேடல் சார்ந்ததல்ல...
பயன்படுத்துவரை கேட்டு அதன்படி தனக்கு தேவையானதை வாங்குவது.
உதாரணத்திற்க்கு ஒருவர் கணினியில் தமிழ் தட்டச்சு வேண்டுமென்றால் உடனே
அருகில் உள்ள டிடிபி சென்டருக்கு தான் சென்று கேட்பார்.

ஏற்கனவே 90களிலிருந்து சந்தையில் ஆளுமை செலுத்தும் இளங்கோ, ஷில்பி
மாதிரியான வணிக நிறுவனங்கள் தங்களுடைய விசைபலகை முறைக்கு தான் மக்களை
ஈர்ப்பார்கள். இதன் மூலம் அவர்களுடைய வணிக வாடிக்கையாளர்களை தக்க
வைத்துக்கொள்ளும் முறையை கடைப்பிடிப்பார்கள்.

தமிழ் டிடிபி மென்பொருள் சந்தையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள்
தமிழ்99 ஆதரவு கொடுத்தால்... மிக விரைவாக பரப்புரை ஆகும்.

இந்த நிறுவனங்களுடன் தொடர்புக்கொண்டு தமிழ்99 விசைப்பலகைக்கு ஆதரவு தர
வேண்டும் என்று கேட்கலாம்.





சிந்தாநதி ☆

unread,
Jan 16, 2008, 6:24:37 AM1/16/08
to tam...@googlegroups.com
இன்னொன்று  பிராண்டட் கணினிகளுக்கு இணையாக அசெம்பிள் செய்யப் பட்ட கணினிகளும் விற்பனையாகின்றன. அவர்கள் கணினி வன்பொருட்களை தனித்தனியாகவே வாங்கி இணைக்கிறார்கள்... அந்த சந்தையில் ஒரு பகுதியை ஈர்க்க முடிந்தால் பயனுள்ளதாக இருக்கும். (பிராண்டட் கணினிகளை வாங்குபவர்கள் தனியாக ஒரு விசைப்பலகையை வாங்குவது, வாங்க வைப்பது சிரமமான காரியம்.)

கணினி வன்பொருள்களை இறக்குமதி செய்து இந்த அசெம்பிளர்களுக்கு விநியோகிக்கும் நிறுவனங்களில் தொடர்பு கொண்டு தமிழ் விசைப்பலகைகளை மொத்தமாக விற்றபனை செய்ய வாய்ப்பு உண்டு. இதன்கென சரியான திட்டமிடல் அவசியம்... வலைப்பதிவர்களில் கணினி வன்பொருள் விற்பனை, சர்வீஸ் தொழில் சார்ந்தவர்கள் இதற்கு உதவ முடியும்.

2008/1/16 பாரி.அரசு <pktPar...@gmail.com>:



--
அன்புடன்

۞ சிந்தாநதி
http://valai.blogspirit.com/
☆ எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள்...!
☯ Views, News, Thoughts and Writings in Tamil.

*
தமிழ்.கணிமை.காம்
http://tamil.kanimai.com
இது திரட்டிகளின் திரட்டு, தமிழ்ச் செய்திகளின் தொகுப்பு
*
=
Reply all
Reply to author
Forward
0 new messages