Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
Group info
Members: 10
Language: Tamil
Group categories: Not categorized
More group info »
Recent pages and files
திட்ட அறிமுகம்    

 

எப்படி பங்களிப்பது?
 

 உங்கள் opml கோப்பை padhivu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

எந்த மாதிரி பதிவுகளைத் தவிர்ப்பது?

 
தமிழில் எழுதப்படும் எந்தப் பதிவையும் ஓடை வசதி வழங்கும் எந்தத் தமிழ்த் தளத்தையும் சேர்க்கலாம். பதிவுகள் பெரும்பாலும் தமிழில் எழுதப்படுவதாக இருப்பது முக்கியம். ஒன்றிரண்டு இடுகைகள் அவ்வபோது ஆங்கிலத்தில் வந்தால் பரவாயில்லை. பதிவுகளின் உள்ளடக்கத்தைப் பொறுத்து எந்தப் பதிவுகளை நீக்குவது என்பதை இப்பட்டியலைப் பயன்படுத்தப்போகும் தனிப்பயனர்கள், திரட்டிகள் நிர்வாகத்திடமே விட்டு விடுகிறோம்.


ஒரு வேளை, சில பதிவர்களுக்கு இப்படி இந்த OPMLல் இடம்பெறுவதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஒரு வரி padhivu@gmail.comக்கு எழுதிப் போட்டால் நாம் அவற்றைப் பொது வெளியீடுகளின் போது கவனம் எடுத்து நீக்கலாம்.

 

வெளியீட்டு இலக்கு

 

தற்போது 2680+ பதிவுகள் திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதம் முதல் தேதியும் புதுப்பிக்கப்பட்ட OPML கோப்புகளை பொதுவில் வெளியிடுவது.

 

பயன் என்ன?

 

1. பதிவர்கள் ஒவ்வொரு திரட்டியாகப் போய் தங்கள் பதிவைப் பதியத் தேவை இல்லை. இங்கு பதிந்தால் எல்லா திரட்டிகளும் இந்தப் பட்டியலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

 

2. திரட்டித் தளங்களுடன் பதிவர்களுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்பதால் திரட்டிகளின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு வலைப்பதியத் தேவை இல்லை. பதிவர்களின் IP முகவரி போன்ற தகவல்களும் திரட்டிகள் தளத்துக்குத் தெரிய வாய்ப்பு இல்லாததால் பதிவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும்.

 

3. இந்தக் கோப்பினைப் பயன்படுத்தி பல புதிய திரட்டிகள் வரும் என்றும் அவை தங்களுக்கிடையே நுட்ப அளவில் போட்டியிடுவதால் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் கூடுதல் வசதிகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். திரட்டிகளுக்கும் ஒவ்வொரு பதிவராகப் பார்த்துச் சேர்க்கும் வேலை மிஞ்சும். அந்த நிர்வாகப் பணி நேரத்தை அவர்கள் தங்கள் திரட்டியின் நுட்ப மேம்பாட்டுக்குச் செலவிடலாம். பதிவர்களுக்கும் திரட்டிகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதால் கருத்து ரீதியாகவோ நுட்ப ரீதியாகவோ தங்களுக்கு ஒவ்வாத பதிவுகளை எந்த வித விளக்கமும் தரத் தேவையின்றித் தாராளமாக நீக்கிக் கொள்ளலாம்.

பயன்பாட்டு உரிமம்

இந்த பொது வெளியீட்டு OPMLகள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட உரிமத்தின் கீழ் வழங்கப்படும்.

 

வாசகர்கள், தனி நபர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

 

இந்தக் கோப்பினைப் பயன்படுத்தி பொதுவில் இடுகைகளைக் காட்சிப்படுத்தும் திரட்டிகள் போன்ற தளங்களுக்குப் பின்வரும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுச் செயல்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.


1. இந்தக் கோப்பினைப் பயன்படுத்தி பொதுவில் இடுகைகளைக் காட்சிப்படுத்தும் திரட்டிகள் முழு இடுகையையும் தளத்தில் காட்டாமல் ஒரு சில வரிகள் மட்டும் காட்டி பதிவர்களின் பதிவுகளுக்கே வாசகர்களை அனுப்பி வைக்குமாறு செயல்பட வேண்டும். வலைப்பதிவு இதழ் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பதிவரின் மின்மடல் அனுமதி இல்லாமல் முழு இடுகையையும் பிரசுரிக்கக் கூடாது. 


2. எந்தக் காரணத்தினாலாவது பதிவர்கள் இத்திரட்டித் தளங்களில் தங்கள் பதிவுகள் வருவதை விரும்பாவிட்டால், அவர்கள் திரட்டிகளுக்கு எழுதிக் கேட்கும் போது அவர்கள் வேண்டுகோளை மதித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

3. இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளும் திரட்டிகள் தங்கள் தளத்தின் மூலம் தனியே பதிவர்களின் பதிவுகளைப் பதிந்து பெற்று வெளியிடுமானால் அத்தகைய பதிவுகளின் விவரங்களை இத்திட்டத்திற்குத் தர முன்வரும் வகையில் தத்தம் தள OPMLகளைப் பொதுவில் வெளியிட முன் வர வேண்டும். 

 

நடைமுறையில் இந்த நிபந்தனைகளை இறுக்கமாகச் செயல்படுத்த முடியாது என்றாலும் திரட்டிகள் இதை ஒரு தார்மீக விதியாக ஏற்றுச் செயல்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

 

இந்தத் திட்டத்தால் பயனடைவோர் யாரும் எந்த வகையிலும் நன்றி நவிலவோ அங்கீகாரம் அளிக்கவோ தேவை இல்லை :) இத்திட்டத்தின் செயற்பாடுகளில் நிறைவில்லாதோர், இதை விடச் சிறப்பாகத் தனித்துச் செயற்பட முடியும் என்று நினைப்போர் தாராளமாக இங்குள்ள opml கோப்பைப் பெற்று தங்கள் திட்டங்களைத் துவங்கலாம் :) 


பொறுப்புத் துறப்பு:


இது திட்டமிட்டு தணிக்கை செய்ய முற்படாத ஒரு பட்டியல். எனவே இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பதிவுகள், தளங்கள் தரும் உள்ளடக்கம் தரமானதாகவும் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று உறுதி அளிக்க இயலாது. இப்படியலில் தங்களுக்கு ஒவ்வாத தளங்களை நீக்கிப் பயன்படுத்த வேண்டியது பயனரின் பொறுப்பும் உரிமையும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

Version: 
Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google